கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே 4

Akila vaikundam

Moderator
Staff member
4.


அவன் செல்லவும்.. அப்பொழுதுதான் கௌசிக்கு உரைத்தது…கல்லூரியில் அவனுடன் கோபப்படுவது போல இன்றும் நடந்து கொண்டாள்.


விக்கி இங்கு ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவன் அங்கிருக்கும் அனைவருக்கும் முன்னுதாரணமாகவும் இருக்க வேண்டியவன்…


இப்படி அனைவர் முன்னிலையிலும் அவனை சங்கடப்படுத்தும் விதமாக நடந்து கொண்டோமே என சற்று வருத்தம் கொண்டாள்…இவள் பட்டென்று எழுந்ததால் தானே தோழி சாப்பிடாமலே செல்கிறாளே என்ற ஆதங்கத்தில் அவனும் இடம் பொருளை மறந்து கையை எட்டி பிடித்தது.


கௌசியின் பிரச்சனையே இதுதான் சாதாரண விஷயங்களுக்கு கூட கோபம் வந்துவிடும்… எல்லாம் முடிந்த பிறகுதான் விளைவுகளை எண்ணி கலங்குவாள்.. இப்பொழுதும் அப்படித்தான்…ஏதோ பேசட்டும் என விட்டிருக்க வேண்டும்…சரி நடந்ததை மாற்ற முடியாது..அதனால் இனி இங்கே நின்று மற்றவர்களின் பார்வைக்கு தீனி போட வேண்டாம் என நினைத்தவள்
அங்கிருந்து நகர்ந்தாள் ‌..பாதி தூரம் சென்றவளுக்கு விக்னேஸ்வரன் விட்டுச்சென்ற உணவு டப்பாவை பார்க்கவும்…மனம் கேட்கவில்லை…


பாவம் நீண்ட நாளுக்குப் பிறகு என்னுடன் சாப்பிடுவதற்காக உணவை ஆர்டர் செய்திருக்கிறான்… தன்னுடைய சிறுபிள்ளை கோபத்தால் சாப்பிடாமல் சென்று விட்டானே என்று மனம் வருந்தவும் திரும்பி வந்தவள் உணவு டப்பாவை அவன் எடுந்து வந்த கவரில் வைத்து எடுத்தபடி அவனின் அறை நோக்கி சென்றாள்.


விக்கி என அவனது கேபினை தட்டியபடி உள்ளே செல்ல அவனது முகத்தில் நடந்ததற்கான வருத்தம் அப்பட்டமாக தெரிந்தது.


இவளைக்கண்டதும் சாரி கௌசி ஒரு நிமிஷம் ஆஃபிஸ்ங்கறதை மறந்துட்டேன்…காலேஜ் ஞாபகத்துல கையை புடிச்சிட்டேன்…என்று நிஜமான வருத்தத்தில் கூறினான்.


விக்னேஸ்வரன் பொதுவாகவே பெண்களின் அருகில் கூட நெருங்கமாட்டான்… பெண்கள் யாரேனும் அவனிடம் நெருங்கி வந்தால் கூட சற்று ஒதுங்கிக் கொள்பவன் .


அதுவும் அலுவலகத்தில் பெண்களிடத்தில் அவனுக்கென்று தனி மரியாதை எப்பொழுதுமே இருக்கும்.


யாரையும் தேவையில்லாமல் அழைத்துப் பேச மாட்டான்.
யார் அருகிலும் விளையாட்டாக கூட அமர மாட்டான் அதுவும் கௌசி விஷயத்தில் மிக எச்சரிக்கையுடனே இருப்பான்…கல்லூரி காலங்களில் அவளிடம் மிகவும் அளவுக்கு அதிகமான உரிமை எடுத்து பழகியவன் தான்.
அது எல்லாமே கல்லூரியுடன் முடிந்தது .


கௌசியின் திருமணம் முடிந்த உடனே அவள் அருகில் செல்வது அவளை தொட்டுப் பேசுவது என்று எதுவுமே இருந்ததில்லை…அதுவும் அலுவலகத்தில்…கிடையவே கிடையாது. அவள் அலுவலகம் வந்து ஓராண்டுக்கு மேல் ஆயிற்று.. இன்று தான் இப்படி நடந்துவிட்டது..


நானும் கொஞ்சம் ஓவரா ரியாக்ட் பண்ணிட்டேன் விக்கி…நிஜமாவே சாரிபா…

இல்ல…இல்ல நீ எப்படி நடந்து இருந்தாலும் நான் கொஞ்சம் அதிகமாக உரிமை எடுத்துகிட்டேன் …அதும் பொதுவான இடத்துல…உன்ன தர்மசங்கட படுத்திட்டேன்…


அப்போ நானும் தானே எல்லார் முன்னாடியும் உன்னை தர்மசங்கட படுத்துற மாதிரி, சின்ன விஷயத்துக்கு ரியாக்ட் பண்ணி உன்னை ஹர்ட் பண்ணிட்டேன்…


சரி இப்படியே மாத்தி மாத்தி சாரி கேட்டுகிட்டு இருந்தா முடிவு இல்லாமல் போய்டும்… லன்ச் டைம் முடிய போகுது…உன் டேபிளுக்கு போ…ஈவினிங் கீழ வெயிட் பண்ணு…


ம்ம்…என்றவள் தயங்கியபடி நீ சாப்பிடல…என்று கையில் இருந்த கவரை காட்டினாள்..


பசியில்லை…அதை செக்யூரிட்டி கிட்ட தந்திடு..


ஆனா இதை நீ சாப்பிடதான எடுத்துட்டு வந்தது..


ப்ளீஸ் கௌசி…சொன்னதை செய்.. அப்பா வர்ற நேரம் ஆச்சு ஏகப்பட்ட வேலை கொடுத்து இருக்காங்க நான் செய்யலைன்னா அப்புறம் கத்துவாங்க என்னால பதில் சொல்ல முடியாது…


அப்போ சரி நான் அங்கிள் கிட்ட பேசுக்கறேன்…



அப்பாட்ட என்ன பேசப்போற என்றவனின் கேள்வியில் சிறு அதிர்ச்சி எட்டிப்பார்த்தது.



நீ சாப்பிடலன்னு…



வேற வினையே வேணாம்..
சாப்பிடலன்னு தெரிஞ்சா அதுக்கு ஆயிரம் கேள்வி கேப்பாங்க என்னால பதில் சொல்ல முடியாது கவரை வச்சிட்டு போ நான் சாப்பிட்டுகிறேன்…



இல்லல்ல நீ சாப்பிடு… நான் போறேன் .


உன்னோட பாஸ் சொல்றேன்…உன் கேபினுக்கு போ.


நீ தான சொல்லி இருக்க விக்கி…ஆபீஸ் டைம் மட்டும் தான் நீ எனக்கு பாஸ் மத்த டைம் நீ என்னோட பிரண்டுன்னு சோ லஞ்ச் டைம் முடியல அதனால நான் போக முடியாது .


சரி இன்னும் பத்து நிமிஷம் தானே உட்காருவ… அதுக்கப்புறம் போய்தான ஆகனும்.



இல்ல இன்னைக்கு ஹாஃப் டே லீவு போட்டுட்டு இங்கேயே உட்கார்ந்திருப்பேன்..


உன்னை திருத்தவே முடியாது…நீ செஞ்சாலும் செய்வ‌..என்று எரிச்சலைக் காட்டியவன்…அவளது கையில் இருந்த கவரை பிடிங்கியபடி அறையில் கிடந்த மற்றொரு டேபிளின் முன்பு அமர்ந்தான்.


தண்ணீர் பாட்டிலை எடுத்து அவன் முன்பு வைத்தவள் வடாமை எடுத்து கொரித்தபடி…ஆமா விக்கி அதென்ன வேண்டுதல்…


என்ன உளர்ற என்றபடி உணவில் கவனம் செலுத்தினான்.


நீதானே டைனிங் ரூம்ல சொன்ன… இப்படி கடையில் வாங்கி சாப்பிடறதுக்கு வேண்டுதல் தான் காரணம்னு அதான் என்னனு தெரிஞ்சிக்க கேட்டேன்…


ப்பா…சான்சே இல்ல…ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும்னா விட மாட்டியே…

உதடு பிரிக்காமல் சிரிப்பளை பார்த்தவன்…முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு அது ஒன்றும் இல்லை கௌசி நீ அடிக்கடி உன் அம்மாவோட சண்டை போட்டுட்டு ஆஃபிஸ் வர்ற…அன்னைக்கெல்லாம் ஸ்பெஷலா இந்த கடையில தயிர் சாப்பாடு ஆர்டர் பண்ணி சாப்பிடுறியா அதான் எனக்கு ரொம்ப நாளாக ஒரு டவுட்டு இந்த சாப்பாடு சாப்பிடறதுக்காக தான் உன் அம்மாவோட கோவிச்சுக்கிட்டு வர்றியோன்னு‌.. அதான்
அப்படி என்ன இந்த சாப்பாட்ல இருக்குன்னு இன்னைக்கு ஆர்டர் பண்ணி சாப்பிடறேன்… பெருசா ஒன்னும் டேஸ்ட் தெரியல..


நல்ல திருப்தியா சாப்பிடுறவங்களுக்கு ஏத்துது போல சரியான அளவுகொண்ட யூஸ் அண்ட் த்ரோ பாக்ஸ்…ஸ்பூன்..அப்புறம்
…பிரஷான தயிர்ல குலைஞ்ச சாதம் போட்டு மாதுளை கேரட் எல்லாம் போட்டிருக்காங்க…உப்பு உரைப்பு சரியான அளவு…அரிசி வடாம் தந்திருக்கான்…கூடவே நல்லெண்ணெய்ல ஊறிய மாங்காய் ஊறுகாய் தந்திருக்கான்…. இதோ இந்த கொத்தவரங்காயை நல்லா வேகவைத்து எண்ணெயில பிரட்டி மிளகாய் தூள் போட்டு கொடுத்திருக்கான் …மற்றபடி பெருசா ஒன்னும் இல்லையே …என மறைமுகமாக உணவகத்தை பாராட்டியவன்…இந்த சாப்பாட்டுக்காக தான் அடிக்கடி வீட்ல சண்டை போட்டுட்டு வர்றியா…எனக்கேட்கவும் சிரித்துக் கொண்டவர்களின் முகம் நொடியில் மாறியது .


உனக்கு என் லைஃப் பாத்தா கிண்டல் ஆயிடுச்சுல்ல என்று சொல்லவும் …


அப்படி இல்ல கௌசி…நிஜமான அக்கறைல தான் கேக்கறேன்…அடிக்கடி அம்மாவோட சண்டை போடற அளவுக்கு அப்படி என்ன பிரச்சினை போகுது…என்று கேட்கவுமே கௌசிக்கு புரிந்து விட்டது நண்பன் அடுத்து என்ன கேள்வியை கேட்கப்போகிறான் என்று…

சார் டைம் ஆச்சி நான் கேபின் போறேன்…


ஏய் எதும் கேக்கல…உடனே ஓடாத…உனக்கு கம்பெனி கொடுக்கலாம்னு டைனிங் ரூம் வந்தேன்…அந்த ப்ளான் சூப்பர் ப்ளாப்… அட்லீஸ்ட் எனக்காவது கம்பெனி கொடுத்துட்டு போ…


லஞ்ச் ஹவர் முடிஞ்சது சார்…


அப்படியா…அப்போ என் லேப்டாப் எடுத்து…நான் சொல்லற வேலையை செய் என்றான்.


ம்ம் என்றபடி லேப்டாப்பை தூக்கபோனவள் அங்கு மாட்டபட்டிருந்த டிவி ஓடிக்கொண்டிருக்கும் சிசிடிவி பதிவுகளை கண்டாள்.


உடனே சார் எம்டி வந்திட்டு இருக்காங்க…நான் என் கேபினுக்கு போறேன் என டிவியை பார்த்தபடி கூறினாள்.


உடனே போகாத கௌசி… எப்படியும் அப்பா உன்னை பாத்திடுவாங்க …அவர் வர்றதை பார்த்துட்டு தான் நீ போறதா நெனச்சுக்கிட்டு என்னை கேள்வி கேட்பாங்க அதனால லேப்டாப்பை டேபிள்ல வெச்சிட்டு அப்பாவை ரிசீவ் பண்ணிக்கிட்டே போ என்றான்.


ம்ம் என்றவள் அவன் சொன்னதுபோலவே லேப்டாப்பை அதனிடத்தில் வைத்துவிட்டு திரும்பவும் ராமநாதன் உள்ளே வரவும் சரியாக இருந்தது விக்னேஸ்வரனின் ஜாடை…சற்று முதிய தோற்றம்…ஆனால் துள்ளல் நடை வயதை மறக்கடித்திருந்தது.


கௌசியை பார்த்தபடியே தான் உள்ளே வந்தார்… தானாகவே அவரின் கண்கள் கை கடிகாரத்தைப் பார்த்தது யோசனையுடன் அவளைப் பார்த்து இது லஞ்ச் ஹவர் தானே …நீ பஸ்ட் பேட்சா…இல்ல செகண்ட் பேட்சா…என் சந்தேக குரலில் கேட்டார்.



பஸ்ட் பேட்ச் தான் சார் என சற்று தயங்கிய குரலில் கூறவும்…



அப்போ இப்போதானே உன் லன்ச் டைம் முடிஞ்சிருக்கும்…என்ன சாப்பிட்டதும் நேரா இங்க வந்துட்டியா என அடுத்த கேள்வியைக் கேட்டார்.



பதில் சொல்லத் தெரியாமல் விக்கியை பார்க்க அவனோ கௌசல்யாவை தந்தையிடம் இருந்து காப்பாற்றும் பொருட்டு அப்பா நான்தான் வர சொன்னேன் ..
சின்ன வேலை இருந்தது… என்று சொல்லவும்…


கௌசியை பார்த்தவர்… வேலைய முடிச்சிட்டியா என்று கேட்டார்.



என்ன பதில் சொல்வாள்..
என்ன வேலை என்றே விக்னேஷ் சொல்லவில்லை

லேப்டாப்பை எடுக்கச் சொன்னான் ஓபன் செய்வதற்கு முன் ராமநாதன் வந்துவிட்டார் இப்பொழுது அதே இடத்தில் வைத்து விட்டு நிற்கிறாள்.


சரி நீ கேபினுக்கு போ என்று சொல்லவும் விட்டால் போதும் என ஓடி விட்டாள்.



அவள் சென்றதுமே மகனின் அருகில் அமர்ந்தவர்…என்னடா இது புது பழக்கம் எப்பவும் வீட்டுக்கு போய் சாப்பிடறது தானே வழக்கம்…இது என்ன புதுசா கடையில வாங்கி சாப்பிடறது…அதும் தயிர்சாதம் என கேட்டபடியே அங்கிருந்த ஒரு வடாமை எடுத்து கொரித்து பார்த்தார்.


சும்மாதான் ப்பா ரொம்ப நாளா கடையில தயிர் சாதம் வாங்கி சாப்பிடனும்னு ஆசை…
அதான்.


நல்லா ஆசை போ… எந்த எண்ணெயில பொரித்த வடாமோ… வாயிலேயே வைக்க முடியல இதெல்லாம் உங்க அம்மா பாத்தா அவ கண்ணுல தண்ணி வந்திடும்…சரி லன்ச்க்கு வீட்டுக்கு வரலைன்னு அம்மாகிட்ட சொல்லிட்டியா…


ஆமாபா… ஒரு பதினோரு மணி மாதிரி ஃபோன் பண்ணி சொல்லிட்டேன்.
எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்க வேண்டாம் சாப்பிடுங்கன்னு என்றவன்..


அப்பா நீங்க புதுசா அவுட்சோர்ஸ் எடுக்க மெயில் ரெடி பண்ண சொல்லிருந்தீங்கல்ல… அதை நான் ஆல் மோஸ்ட் ரெடி பண்ணிட்டேன் நீங்க ஒரு தடவை செக் பண்ணிட்டு அனுப்பினா சரியா இருக்கும் என்றபடி கை கழுவ எழுந்தான்.


லேப்டாப்பை எடுத்து பார்த்தவர்…பர்பெக்ட் விக்கி…கண்டிப்பா இந்த டீல் நமக்கு கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கு…ஒருவேளை இந்த ஆஃபர் நமக்கு கிடைக்கிற மாதிரி இருந்தா நாம இன்னொரு ஆஃபிஸ் ஓபன் பண்றது போல இருக்கும்… ஏற்கனவே சிலதை அப்பா பாத்துட்டு இருக்கேன்… இந்த டீல் ஒகே ஆனா ஆரம்பிக்கற புது ஆஃபிஸை நீ பாத்துக்கறது போல இருக்கும் மேனேஜ் பண்ணிப்பல்ல…


அதெல்லாம் பாத்துப்பேன் பா…அப்போ புது கேண்டிடேட் தேவைபடுவாங்கல்ல…வாக்இன் இன்டர்வியூ ஒன்னு அரெஞ்ச் பண்ணலாமா…டெய்லி மெகஷின்க்கு ஆட் கொடுக்க சொல்லவாப்பா…


செய் விக்கி…அப்புறம் ஹெட் ஆபீஸ்ல வேதிகா வேலையை விட்டு போறா அந்த இடத்துக்கு ரீபிளேஸ்மென்ட்டா ஒரு கேண்டிடேட் தேவைபடுது…புதுசா இன்டர்வியூ கொடுத்து எடுக்குறதுக்கு பதிலா இங்கிருந்து ஆள் எடுத்துக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் நீ என்ன நினைக்கிற…



தாராளமா செங்கப்பா யார் சூட்டபிள்னு தோணுதோ அவர்களை கூப்பிட்டுக்கோங்க… நான் இங்க புதுசா ஆள் எடுத்துக்கிறேன் .


எனக்கு கௌசல்யாவை அனுப்பி வை…என கிட்டத்தட்ட கட்டளையிட்டார்.
 
Last edited:
Top