கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே 40

Akila vaikundam

Moderator
Staff member
40.

இந்தாங்க டீ.

தேங்க் யூ உனக்கு..

குடிக்கற மூட் இல்ல..

இப்போ ஹெல்த் ஓகேவா..இல்ல ஹாஸ்பிடல் போகலாமா.

நான் நல்லாதான் இருக்கேன்.

ம்ம்..என தயங்கியன் கௌசி நேத்து நைட் ஏன் அழுத என நேரடியாக கேட்டான்.

அது …என இழுத்தவள் சாப்பிட்டது ஏதோ ஓத்துக்கலல்ல வாமிட் வேற தானாவே கண்ணுல தண்ணி வந்திடுச்சி..

இல்லல்ல நீ …நாம..என உளறி கொட்டியவன் நான் உன்னை ஹர்ட் பண்ணிட்டேனு நினைக்கறேன்,அதாவது ரொம்ப முரட்டு தனமா…அதான் நான் விலகினதுமே நீ அழுதுட்டு பாத்ரூம் உள்ள போன..ஐ நோ என உறுதிபட கூறியவன்..கூடவே சாரி நீ பார்ட்டில எதுவுமே சாப்பிடல அதையும் இன்னைக்கு கார்ல வரும் போது தான் நியாபகத்துக்கு வந்தது..இனி அது போல என்னைக்கும் நடக்காது.உன் விருப்பம் இல்லாம எப்பவும் பக்கத்துல வர மாட்டேன் என உறுதியும் கொடுத்தான்.

கௌசியின் சிரிப்பை தொலைத்த முகம் இறுகி கிடக்க அதற்கான காரணம் தெரியாமல் குழம்பி தவித்தான்.


பிளீஸ் ஏதாவது சொல்லு..

கிச்சன்ல வேலை இருக்கு மேல் வேலை செய்யறவங்க இன்னும் வரல என்றபடி நகர்ந்தாள்.

நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருக்க ஹரியின் பெற்றோர்கள் கிராமத்திலேயே சிறிது நாட்கள் தங்க போவதாக கூறிவிட்டனர்.

ஹரி இப்பொழுது தந்தை செய்து கொண்டிருந்த பிஸினஸையும் சேர்ந்து பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை..வேலைப்பளு கழுத்தை நெரித்தது..

இடையிடையே அவ்வப்போது பிஸினஸ் பார்ட்டி..ஒரு சிலதுகளுக்கு கண்டிப்பாக மனைவியை அழைத்துச்செல்ல வேண்டிய நிலை.

எதிலும் கௌசல்யா ஆர்வமுடன் கலந்து கொள்ளவில்லை என்பதையும் ஹரி உணர்ந்தான்..அதை ஓரு முறை அவளிடம் கேட்ட பொழுது

பார்ட்டிக்கு போனாலே எல்லா பக்கமும் மதுவாடை எனக்கு சுத்தமா பிடிக்கல..அதும் இல்லாம நீங்களும் ட்ரிங் பண்றீங்க.. அப்படி பட்ட நாட்கள்ல உங்களை தவிர்க்க நான் ரொம்பவே கஷ்டபடறேன்..வெளிபடையா சொல்லவும் முடியல என முகத்தில் அடித்தது போல கூறிவிட்டாள்.


அதிர்ச்சியில் சில கணங்கள் பேச மறந்தவன் பிறகு உனக்கு ட்ரிங்க் பண்ணினா பிடிக்காதா எனக்கேட்க


என் வீட்ல யாருக்கும் அந்த பழக்கம் இல்லை என்று கூறிவிட்டு நகர்ந்தாள்.


அவளின் பின்னே சென்றவன் அப்படின்னா அன்னைக்கு ஒரு நாள் நீ வாமிட் பண்ணது கூட என்னோட… என்று அத்தோடு நிறுத்திக் கொண்டவன் இல்லை எனக் கூறி விட மாட்டாளா என அவளின் முகம் பார்த்தான்.



புரிஞ்சா சரி என்று அதற்கும் கத்தரிதைத்தார் போல் பதில் உரைத்தாள்.


நொடியில் அவனின் முகம் அவமானத்தில் சிவந்தது.

அவனுக்குமே அன்றொரு நாள் அவள் தங்களின் கூடல் முடித்த பிறகு வாந்தி எடுத்ததற்கான காரணம் மதுவாடையாக இருக்குமோ என சந்தேகம் இருந்தது இன்று அவள் வாயாலே கேட்கவும் அவனை அவனுக்கு பிடிக்காமல் போயிற்று.

அதன் பிறகு மதுவை தொட மறந்தான்.

மனைவியின் மனதில் இடம்பிடிக்க பல்வேறு விதங்களில் முயற்சித்தான்.


புதுப்புது இடங்களுக்கு அழைத்துச் சென்றான் பல்வேறு பரிசு பொருட்களை வாங்கி குவித்தான் எதிலுமே அவளுக்கு ஈடுபாடு இருந்தது போலவே காட்டிக் கொள்ளவில்லை.



அவனிடம் சிரிக்கவே யோசித்தாள் ஆனால் அவன் நகர்ந்த பிறகு மொபைல் போனில் தோழிகளுடன் அரட்டை குரூப் சாட் என அவளின் வாழ்வு நன்றாக தான் போய்க் கொண்டிருந்தது.


ஹரியின் வாழ்வு தான் திக்கு திசை தெரியாமல் போய்க் கொண்டிருந்தது. என்றேனும் ஆர்வமிகுதியில் அவளை நெருங்கினால் கூட எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒத்துழைத்தாள். அதில் அவளுக்கு விருப்பமா இல்லையா என்பதை கூட அவனால் கண்டுகொள்ள முடியவில்லை..

உணர்ச்சியற்ற ஜடம் போல அவளின் செயல்பாடுகள் அவனை மேலும் மேலும் காயப்படுத்தியது.

எதையும் தெளிவாக யோசிக்க முடியவில்லை தைரியமான முடிவை எடுக்க யோசித்தான் விளைவு தொழில் மீது இருந்த கவனம் சிதறியது

முதல் முறையாக பிசினஸில் சிறு சறுக்களை சந்திந்தான்.


ஒரு பக்கம் வியாபார யுக்திகளை எப்படி கையாள்வது என தெரியாமல் குழம்பியவனுக்கு மற்றொரு பக்கம் மனைவியையும் கையாள தெரியவில்லை .


அவன் வேலை முடிந்து வரும் வேளையில் அவளது சிரிப்பொலி அவ்வளவு அழகாக கேட்கும் ஆர்வமாக இவன் மேலே சென்று பார்க்கும் பொழுது மொபைலை அணைத்து வைத்துவிட்டு மரம் போல் எழுந்து வெளியே வந்து விடுவாள்.

ஒரு நாள் அப்படி யாரிடம் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருக்கிறாள், யாருடன் சேட் செய்யும் பொழுது தானாகவே புன்னகை உதடுகளில் தவழுகிறது என்று ஆர்வத்துடன் திருட்டுத்தனமாக மொபைல் போனை எடுத்துப் பார்த்தான்.

அவள் கல்லூரி தோழர்களுடன் உரையாடும் குரூப் சாட் தான் அது.

அந்த நேரத்திலும் கூட குரூப் மெசேஜ் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது மிகவும் ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.



அவர்களின் சில உரையாடல்களை பார்த்தவனுக்கு தனக்கு மிகவும் வயதாகிப்போனது போல ஒரு எண்ணம் கூட வந்து மறைந்தது.


அதன் பிறகு கௌசி அவர்களுடன் எப்படி உரையாடுவாள் எனத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியவனுக்கு உள் சென்று படிக்க மனம் ஒப்பவில்லை.


என்ன இருந்தாலும் இது அவளுடைய மொபைல், கணவனாகவே இருந்தாலும் அவளுடைய அந்தரங்கத்தை எட்டிப் பார்ப்பது போல் இருக்கிறது என சில வினாடிகள் யோசித்தவனுக்கு அவளின் விலகலை தெரிந்து கொள்ள வேண்டும் அப்படி தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள் என்பதை அறிய வேண்டும் அதனால் இந்த ஒரு முறை இந்த தவறை தெரிந்தே செய்யலாம் என முடிவெடுத்தவன் நடுங்கும் விரல்களால் அவளின் முந்தைய உரையாடல்களை படிக்க ஆரம்பித்தான்.


மிகவும் ஜாலியாக கலகலப்பாக அரட்டை அடித்திருந்தாள் அவனது மனைவி ..முழு நேரமும் அதில் தான் குடியிருப்பதும் புரிந்தது.


ஹேய் லூசு, டேய் மாமா, சொல்லு மச்சி,என்ன டோலி,சொல்லு தல,என்ன டோலரே,என பலதரப்பட்ட வார்த்தைகளை அதிகம் பயன் படுத்தி இருந்தாள்.பாதிக்கு மேல் அவனால் புரிந்து கொள்ள கூட முடியவில்லை..அத்தனை அடைமொழி சொற்கள்.

அதை படிக்கும் பொழுது இவனுக்குமே அவர்களது வயதுக்குள் சென்றுவிட்டது போல் ஒரு பிரம்மை அந்த அளவிற்கு அவ்வளவு இயல்பாகவும் நாகரீகமாகவும் இவளது அரட்டை இருந்தது.



இவள் மட்டுமல்ல அந்த குரூப்பில் இருக்கும் அனைவருமே மிகவும் நாகரிகமாகத்தான் பதிலும் கொடுத்துக் கொண்டிருந்தனர்.


பொதுவில் பார்த்ததிலிருந்து தெரிந்து கொண்டது ஹரியிடம் மட்டும் சற்று அதிகமாக உரையாடுவது தெரிந்தது.



தனிப்பட்ட முறையில் யாருடனாவது பேசுகிறாளா என்று பார்த்த பொழுது அப்படி எதுவும் இல்லை.


ஆனால் கால் ஹிஸ்டரியில் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது ஹரிக்கு அழைத்துப் பேசிக் கொண்டிருக்கிறாள் .

தனக்கு அவள் இதுவரை ஓரு முறை கூட அழைத்து பேசாதது ஏமாற்றத்தை கொடுத்தது, கூடவே சிறு வருத்தத்தையும் கொடுத்தது.



எதனால் ஏன் என்ற கேள்வி அவன் மண்டைக்குள் மீண்டும் மீண்டும் வண்டு குடைவது போல வட்டமிட்டுக்கொண்டிருந்தது.


மொபைலை எடுத்த இடத்தில் இருந்த மாதிரியே வைத்தவன் பால்கனியில் நின்று தூர வானத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.


தலைவலிப்பது போல் இருக்கவும் கௌசி ஒரு காஃபி கிடைக்குமா என சத்தமாக கேட்டான் .
பதில் ஏதும் வரவில்லை ஆனால் அவளுக்கு கேட்டிருக்கும் அவள் வருவாளா மாட்டாளா என இப்பொழுது மனது பட்டிமன்றம் நடந்த ஆரம்பித்தது.


அது மேலும் தலைவலியை உண்டாக்க ஒரு சிகரெட்டை எடுத்து வேகமாக பற்றவைத்தவன் புகை ஆழமாக உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விட்டான்.

திடீரென பின்னால் இருந்து இருமும் சத்தம் கேட்கும் அவசரமாக திரும்பியவன் சிகரெட்டை கீழே போட்டு மிதித்து விட்டு வாயில் இருந்து வந்த புகையை கைகளால் ஆட்டியபடி சாரி சாரி..கௌசி நீ வந்ததை கவனிக்கல என்றான்.


உனக்கு இந்த பழக்கம் வேற இருக்கா என்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு கையில் இருந்த காஃபியை அவன் புறமாக நீட்டினாள்.

இல்ல கௌசி இன்னைக்கு தான் இது முதல் தடவை ரொம்ப டென்ஷனா இருந்தா ஆபீஸ்ல பண்ணுவேன்,வீட்ல இதான் முத தடவை உனக்கு ஓத்துக்காதுன்னு தெரியாது..சாரி இனி எப்பவும் இந்த கருமத்தை தொட மாட்டேன் என அவள் நம்ப வேண்டுமே என்ற தோணியில் கிட்டத்தட்ட கெஞ்சினான்.


கௌசியும் இத்தனை நாட்களில் அவனைப் பற்றி தெரிந்து வைத்திருந்த விஷயம் தான் அவன் சோசியல் ட்ரிங்க்கர் தானே தவிர மொடா குடிகாரன் கிடையாது.


அதையும் சமீப காலமாக விட்டுவிட்டான்,புகை பிடிக்கும் பழக்கம் அவனுக்கு எப்போதுமே கிடையாது. அனேகமாக மதுப்பழக்கத்தை விட்ட பிறகுதான் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கையில் எடுத்திருப்பான் என்பது தெரிந்தால் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.


காஃபி குடிக்கும் ஆசையே அற்றுபோயிற்று .



மனைவி அதற்கும் தன் மீது வருத்தம் கொள்வாளோ என் பயந்து ஒரே மூச்சாக குடித்துவிட்டு யோசிக்க ஆரம்பித்தான்.


அவள் தனிமையாக இருப்பதினால் தான் நட்பு வட்டத்துடன் அதிக அளவில் நேரத்தை செலவிட விரும்புகிறாள் என்பதை உணர்ந்தவன் மறுநாளில் இருந்து அவனாகவே ஒரு நாளைக்கு இரண்டு தடவை மூன்று தடவை என அழைத்துப் பேச ஆரம்பித்தான்.


ஒவ்வொரு முறையும் சலிப்புடனே மொபைலை அட்டென்ட் செய்பவள் ஏதாவது ஒரு சாக்குபோக்கு சொல்லிவிட்டு போனை வைத்து விடுவாள் .


அவள் மனம் எங்கிலும் ஹரியின் மீது இருந்த கோபம் அப்படியே இருந்தது.



கணவன் என்ற ஒரே காரணத்திற்காக மற்ற யாரிடமும் அவனை விட்டுக் கொடுக்காமல் சமாளித்துக் கொண்டிருக்கிறாள். மத்தபடி அவளின் வாழ்க்கையை திட்டம் போட்டு கெடுத்ததில் ஹரிக்கு முதல் இடம் என்றால் இரண்டாவது அவளுடைய அண்ணி ஜானகி.


இவனுக்காவது பாரா முகத்தை பரிசளித்து தினந்தினம் உயிர்வதை செய்து கொண்டிருக்கிறாள்‌


ஆனால் அவளின் அண்ணியை எதுவும் செய்ய முடியவில்லை காரணம் அவளை ஏதாவது சொன்னால் அவன் அண்ணன் வாழ்க்கையும் சேர்ந்துக்கெடும் அண்ணனுக்காக அண்ணியையும், தாய் தந்தைக்காக ஹரியையும் சகித்துக் கொண்டு வாழ பழகி விட்டாள்.


அவனுக்கு வேண்டும் என்பதை திட்டம் போட்டு எடுத்துக் கொண்டான்,அவனால் அவளின் உடலை மட்டுமே தான் அடைய முடியுமே தவிர மனதை என்றுமே அடைய முடியாது அந்த வகையில் கௌசி அவனிடம் வெற்றி பெற்றாள்.


கௌசியின் மனதில் இருப்பவற்றை அறிந்து கொள்ளாத ஹரி அவளின் மனதில் இடம் பிடிக்கும் வேலைகளை செய்ய ஆரம்பித்தான்.


எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் வீட்டுக்கு வந்து அவளிடம் நயமாக பேச ஆரம்பித்தான்.



அடிக்கடி வெளியில் அழைத்துச் சென்றான் ஆனால் எண்ணி வைத்தது போல பேசுவதும் செயற்கையாக சிரிப்பதும் கௌசியின் வாடிக்கையாயிற்று.


சில நேரங்களில் கௌசியே கூட ஹரியை நாடுவது உண்டு அந்த சமயத்தில் மிகவும் மன மகிழ்ந்து போவான் மனைவியின் எதிர்பார்ப்பை முற்றிலுமாகவே பூர்த்தி செய்வான். ஆனால் அவனாக கௌசியிடம் நெருங்க சற்று தயக்கம் இருந்தது அதையும் கௌசி உணர்ந்தே இருந்தாள்.


சில சமயங்களில் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் ஹரியும் கௌசியிடம் நெருங்குவான் தான் ஆனால் அவள் அவனை முழு மனதாக ஏற்கிறாளா எனக்கேட்டால் அவனிடத்தில் பதிலில்லை.


இப்படியாக அவர்களின் வாழ்வு போய்க்கொண்டிருக்க மிக முக்கியமான தொழில்முறை பார்ட்டிகள் சிலவற்றுக்கு அவளை அழைத்துச் செல்வதுண்டு அதுவும் அவளுக்கு பிடிக்கவில்லை என்பதை தெரிந்தவன் அவளை அடியோடு அழைத்துச் செல்வதை தவிர்த்தான்.


அத்தோடு இல்லாமல் அவள் தனியாக இருப்பாளே துணைக்கு கூட யாரும் இல்லையே என்று கவலைப்பட்டு இவனும் பார்ட்டிகளை தவிர்க்க ஆரம்பித்தான்.



இதனால் அவனது தொழில் மேலும் சரியத் தொடங்கியது.


முழு நேரம் வீட்டில் இருப்பது போல வேலையாட்களை கூட போட்டு பார்த்து விட்டான் ஏதாவது சாக்கு சொல்லி அவர்களை கௌசி திருப்பி அனுப்புவதை வாடிக்கையாக வைத்திருந்ததால் ஒரு கட்டத்திற்கு மேல் அதையும் கைவிட்டான்.


இந்த முறை அவனின் தொழில் வட்டாரத்தில் மிகப் பெரும்புள்ளி என கருதப்படும் ஒருவரின் மகனின் நிச்சயதார்த்தத்திற்காக நேரில் அழைத்துச் சென்றிருந்தார். கட்டாயமாக போய் ஆக வேண்டிய சூழ்நிலை கௌசியை அழைக்க அவள் பிடிவாதமாக மறுத்து விட்டாள்.



எவ்வளவோ எடுத்துக் கூறிப் பார்த்தான் தொழிலில் மிகப்பெரும் புள்ளி போகாவிட்டால் நன்றாக இருக்காது அவரின் மூலமாக நமக்கு நிறைய க்ளைன்ட் கிடைப்பார்கள் என்று எதற்குமே அசைந்து கொடுக்கவில்லை.


தொழில் முறை வட்டாரத்தில் என்னை உள்ளே இழுக்காதீர்கள் என்று முகத்தில் அடித்தது போல கூறிவிட்டாள்.


போராடிப் பார்த்தவன் முயற்சி தோல்வியுற்றதை உணர்ந்து மனதை தேற்றிக்கொண்டு கடைசியாக தனியாகவே சென்றான் .


அது ஒரு பிரபலமான ஐந்து நட்சத்திர விடுதி அங்கு தான் ஒரு ஹால் புக் செய்யப்பட்டு அவர் மகனின் நிச்சய விழா நடந்து கொண்டிருந்தது மதிய உணவு அங்கேயே எனக் கூறிவிட்டதால் மதியம் போல் தான் இவனும் அலுவலகத்தில் இருந்து நேராக அந்த இடத்திற்குச் சென்றான்.


வால்ட் பார்க்கிங்காக ஹோட்டல் பணியாளரிடம் கார் சாவியை கொடுத்து விட்டு படியேறும் வேளை மற்றொரு நண்பனை சந்தித்தான்.

ஹாய் ஹரிகிருஷ்ணன் எப்படி இருக்கீங்க என கேட்டபடி வந்தார்.


ஐயாம் குட்..நீங்க என்ன இந்த பக்கம் ஷியாம் .


கிளையண்ட் ஒருத்தரோட பையனுக்கு இன்னைக்கு என்கேஜ்மெண்ட் ..

நீங்க மிஸ்டர் பார்த்திபன் பத்தியா சொல்லிட்டு இருக்கீங்க ஷியாம் ..


யெஸ்..அவர் வீட்டு பங்ஷனே தான்.. நீங்களும் அங்க தானா வாங்க சேர்ந்தே போகலாம்..என்றவர் ஒய்ஃப் வரலையா,எனவும் கேட்க தவற வில்லை.


சங்கடமாக இல்ல அவளுக்கு கொஞ்சம் முடியல அதான்..


என்ன வீட்ல விஷேசமா என கிண்டல் குரலில் கேட்கவும்..


அய்யய்யோ அப்படிலாம் எதுவும் இல்லை ஷியாம் என வேகமாக மறுத்தான்.


கமான் மிஸ்டர் ஹரி கல்யாணம்னு நடந்தா அடுத்ததா இதான் குட் நியூஸ்.. உடனே குழந்தை கிடைக்கிறது எல்லாம் தெய்வத்தோட அருள் தெரியுமா எனக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆயிடுச்சு இப்போ தான் என் மனைவி கருத்தரித்திருக்கிறாள்.. அதான் ரெஸ்ட் எடுக்கட்டும்னு தனியா வந்தது..
இந்த பத்து வருஷத்துல நான் எத்தனை அவமானத்தை சந்திச்சிட்டேன் தெரியுமா அந்த நிலைமை உங்களுக்கு வர வேண்டாம் அதனால யாராவது என்னை மாதிரி கேட்டாங்கன்னா கூடிய சீக்கிரமேனு‌ பாஸிட்டிவா சொல்லுங்க என்றார்.


அவர் சொன்ன விஷயத்தை கேட்கவே மனதிற்கு இதமாக இருந்தது மணக்கண் முன்பு குட்டி கௌசல்யாவை கற்பனை செய்து பார்த்தவனுக்கு தன்னை அறியாமல் உடல் சிலிர்த்தது.


இருவரும் பேசிய படியே ஒரு ஹாலின் முன்பு நின்று கதவைத் திறந்து செல்ல அங்கே இளம் வயது பெண்களும் ஆண்களும் புதுப்பாடல் ஒன்றிற்கு கண்டபடி ஆடிக்கொண்டிருந்தனர்.
மதிய வெளிச்சத்தையே ராத்திரி பத்து மணி போல அறையை இருட்டாக வைத்திருந்தனர் அங்கங்கே நீயான் விளக்குகளும் சின்ன சின்ன கலர் பல்புகள் மட்டுமே விட்டு விட்டு எரிந்து கொண்டிருந்தது.
யாரின் முகமும் யாருக்கும் தெரியாது ஆனாலும் ஒரே போல கத்திக்கொண்டும், குதித்துக் கொண்டும் இருந்தனர்.

பார்க்கும் அனைவரையும் அந்த ஆட்டத்தில் ஒன்ற வைத்துவிடும் வேகம் இருந்தது அவர்களின் துள்ளல் நடனத்தில்.


அதை கண்டு முகம் சுளித்த ஹரி ஐ திங்க் நாம ஹால் மாறி வந்துட்டோம்னு நினைக்கறேன் ஷியாம்.


நினைக்கவெல்லாம் வேணாம் மிஸ்டர் ஹரி கண்டிப்பா மாறி தான் வந்துட்டோம்..இது மினிஹால் அது கூட தெரியாம என சிரிக்கவும் ஹரியும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தான்.


வாங்க ஷியாம் போகலாம் என ஹரி கதவை திறக்க போகவும் ஹரி ஒரு பத்து நிமிஷம் பாத்துட்டு போலாமே இப்போதைய பசங்க பொண்ணுங்க எல்லாம் எவ்வளவு எனர்ஜி ட்ரிக்கா இருக்காங்க என் காலத்துல இதெல்லாம் கிடையாது.



நீங்க என்னை விட கொஞ்ச வயசு சின்னவருங்கிறதால அடிக்கடி இதெல்லாம் பாத்திருப்பீங்க என கூறியபடி அவர்களின் குதுகலத்தில் அவரும் பங்கேற்றார்.


ஹரிக்கு இதெல்லாம் சுத்தமாக பிடிக்காத விஷயம்..என்ன பொண்ணுக,பசங்க இப்படி யார் என்னனு தெரியாத அளவுக்கு ஒருத்தர் மேல இன்னொருவர் மோதிகிட்டு ஆடறது.. வீட்டுக்கு அடங்காத பிள்ளைக என மனசுக்குள் திட்டிக்கொண்டான்.
நண்பரின் வயதை கணக்கில் கொண்டு வெளியே எதையும் காட்டிக்கொள்ளவில்லை.


இருந்தாலும் மனதில் சிறு நெருடல் சற்று வயதில் பெரியவர் தன்னையும் உடன் இருக்கச் சொல்கிறார் . அநாகரீகமாக இளசுகளின் ஆட்டத்திற்கு மத்தியில் சம்பந்தமே இல்லாமல் நிற்கிறோமே என்ற சங்கடத்துடனே ஓரமாக நின்று ஆடிக் கொண்டிருப்பவர்களை வேடிக்கை பார்த்தவனின் முகம் நொடியில் ஆயிரம் வாட்ஸ் மின்சாரத்தை தொட்டது போல அதிர்ந்தது.


அந்த அரை இருட்டில் சிலீவ் லெஸ் கிராப் டாப் ஹைவேஸ்ட் ஜீன்ஸ்,ஒழுங்காக வெட்டப்பட்ட கூந்தல் முகத்தை முற்றிலும் மறைக்க பெண்கள் கூட்டத்திற்கு நடுவில் குதித்துக்கொண்டிருக்கும் அந்தப் பெண் சாட்சாத் அவனது மனைவி கௌசல்யாவே தான்.


மீண்டும் ஒருமுறை கண்களை கசக்கி விட்டு அங்கிருக்கும் ஒவ்வொருவரின் முகங்களையும் மனதிற்குள் கொண்டு வர முயற்சித்தான்.


ஓரமாக விக்கி கையில் ஒரு ஜூஸ் பாட்டிலுடன் அமர்ந்திருக்க சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணம் ஆகிவிட்டது அங்கு ஆடிக் கொண்டிருப்பது தன் மனைவிதான் வேறு யாராவது தெரிந்த முகங்கள் இருக்கிறதா எனத் தேடிப் பார்க்க வேதாகவும் நிவேதாவும் நன்றாக அடையாளம் தெரிந்தனர்.


தான் பார்த்ததை நண்பர் பார்த்து விட்டால் தவறாக எண்ணி விடக்கூடாதே என பயந்தவன்..வாங்க ஷியாம் டைம் ஆச்சி ஆஃபீஸ்ல வேலை நிறையா இருக்கு என துரிதப் படுத்தினான்.

மனுஷனை ஜாலியா இருக்க விட மாட்டீங்களே ஹரி என குறைபட்டவர் மனமே இல்லாமல் அங்கிருந்து வெளியேறினார்.


ஹரியும் எதிலிருந்தோ தப்பித்தவன் போல மிக வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.



மனைவியோ அல்லது அவளது நண்பர்கள் யாராவது அவனைப் பார்த்து விட்டால் இவனுக்கும் சங்கடம் உடன் இருக்கும் நண்பர் மனைவியை பார்த்து விட்டால் அதற்கும் சங்கடம் என்னதான் செய்வான்.


ஆனால் இன்னும் அவனால் நம்பவே முடியவில்லை வீட்டில் இடுப்பே தெரியாத வண்ணம் புடவை கட்டி அவ்வளவு பாந்தமாக இருப்பவளா இங்கு அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக தலைவிரி கோலமாக ஆடிக் கொண்டிருப்பது.


அவள் ஆடிக் கொண்டிருக்கும் தோரணையும் கத்தியபடியே பாடிய விதமும் அவள் உடுத்தி இருந்த உடையும் சொல்லாமல் சொல்லியது இது எதுவுமே எனக்கு புதிதல்ல நன்கு பழக்கப்பட்டவை என்பதை.


ஹரி ஒன்றும் கட்டுப்பட்டி கிடையாது ஜானகியும் நவநாகரீக உடையை அணிபவள் தான்.



அதேபோல் கௌசல்யாவையும் திருமணத்திற்கு முன்பு ஒரு சில ஆடைகளில் பார்த்திருக்கிறான்.


ஆனால் எதையும் மாற்றும்படி கூறியது இல்லை கௌசல்யாவாக தான் திருமணம் முடிந்த பிறகு தலைய தலைய புடவை கட்டிக்கொண்டு உடல் பாகங்களை மறைத்து மறைக்காதவாரும் சுற்றிக் கொண்டிருப்பாள் .


ஒருவேளை நவநாகரீக ஆடை அணிய வேண்டும் என கேட்டிருந்தால் கூட இவன் மறுத்திருக்க மாட்டான் ஆனால் இது போன்ற பொது இடங்களில் ஆட்டம் பாட்டம் என கேட்டிருந்தால் கண்டிப்பாக மறுத்தும் இருப்பான் கூடவே கண்டித்தும் இருப்பான்.


இது போன்ற ஒரு நிகழ்ச்சிக்கு வருவதை அவனிடம் அவள் மூச்சு கூட விடவில்லை சொல்லி இருந்தாலும் இவன் அனுப்பி இருக்க போவதில்லை அது வேறு விஷயம்.



இதற்காக தான் நண்பரின் குடும்ப விழாவிற்கு வரமாட்டேன் என்று மறுத்தாளா என கடும் கோபம் எழுந்தது.
முகம் இறுக கண்கள் சிவக்க கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமலே பங்க்ஷனில் கலந்து கொண்டான் .

யாரிடமும் அவனால் ஈடுபாடோடு பேசக்கூட முடியவில்லை மதிய உணவை கூட உண்ணாமல் அங்கிருந்து உடனே கிளம்பி விட்டான்.


மனம் எங்கிடும் பயம் மனைவி இருக்கும் இடத்தின் அருகிலேதான் தான் பங்க்ஷனும் நடந்து கொண்டிருக்கிறது.



அங்கு வந்திருப்பவர்கள் முக்கால்வாசி பேருக்கு கௌசல்யாவை நன்கு தெரியும் திருமணத்திலும் பார்த்திருக்கிறார்கள் பல பார்ட்டிகளிலும் பார்த்திருக்கிறார்கள் அப்படி இருக்கும் பொழுது அவனுடன் வராமல் இப்படி தனித்து வந்தது தெரிந்தால் அவனுக்கு எவ்வளவு பெரிய அவமானம் .


இன்னுமே அவனின் ஒரு மனம் ஏற்க மறுத்தது அது கண்டிப்பாக கௌசல்யாவாக இருக்காது கௌசல்யாவை போல ஜாடையில் இருக்கும் வேறொரு பெண் .


கௌசல்யா அதுபோன்ற ஆடைகள் அணிவதும் இல்லை அதுபோல தலையை விரித்து போடுவதும் கிடையாது வீட்டிற்குச் சென்று பார்த்தால் தான்

நிம்மதி என எதிலிருந்தோ தப்பித்து ஓடுபவன் போல வீடு வந்து சேர்ந்தான்.


அவன் கண்கள் பார்த்தது உண்மை என்றும் மனம் சொன்னது பொய் என்றும் வீட்டுக்கு வந்ததும் அவனுக்கு நிரூபணம் ஆயிற்று.



கடும் கோபத்துடன் கௌசல்யாவின் வரவிற்காக காத்திருக்க ஆரம்பித்தான்.
 
Last edited:
Top