41
கௌசியின் மனதிற்குள் அப்படியொரு குதுகலம்.மிகவும் பரபரப்பாக இருந்தது.. கொஞ்சம் வேகமா போங்க அண்ணா என கால்டாக்ஸி டிரைவரை தூரிதப்படுத்தினாள்.
ம்ப்ச் இந்த போன் வேற சுவிட்ச் ஆஃப் என வாய்க்குள் முணுமுணுக்க என்ன இந்த பொண்ணு இப்படி பறக்குது என்ற ரீதியில் அதிசயமாக பார்த்த படி டிரைவர் வண்டியை ஓட்டினார்.
கௌசியின் மனமெங்கிலும் ஹரியே வியாபித்து இருந்தாலும் தற்சமயம் அவளின் மனநிலை சீக்கிரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும் இப்பொழுதே பேச வேண்டும்…அவன் முகம் காண வேண்டும் இது வரை தான் செய்த புறக்கணிப்பிற்கு மனதார மன்னிப்பு கேட்க வேண்டும்..
பலமுறை அலைபேசியில் அழைத்து பார்த்து விட்டால் அது சுவிட்ச் ஆஃப் என்றே வருகிறது.
தான் அவனுடன் செல்லாததற்கு கோபமாக இருப்பான் எனவும் தெரிந்தது.
போகாமல் இருந்ததாலே தான அவளுக்கு ஞானோதயம் கிடைத்திருக்கிறது.
புத்தருக்கு போதி மரத்தில் கீழ் ஞானம் வந்தது எந்த அளவு உண்மையோ அதேபோல் கௌசிக்கும் அந்த பார்ட்டியில் தான் ஞானோதயம் கிடைத்தது.
அவளது நெருங்கிய தோழி வேதாவிற்கு வெளிநாட்டு வேலை கிடைத்திருக்கிறது அதற்காக குடும்பம் சகிதமாக சென்ட் ஆப் பார்ட்டி வைத்திருக்கிறார்கள் அதற்காகத்தான் கௌசல்யாவும் சென்றிருந்தது. அதனால் நட்பு வட்டத்தையும் தாண்டி சில உறவு வட்டங்களும் அங்கே இருந்தது.
ஆடி முடித்து களைத்து போய் ஒரிடம் வந்து அமரும்பொழுது தான் பார்ட்டிக்கு வந்த சில பெண்கள் குழுவாக அமர்ந்து சொந்த கதை பேசிக் கொண்டிருந்தனர்.
கௌசி முதலில் ஓரமாக தான் அமர்ந்து குளிர்பானத்தை குடித்துக் கொண்டு இருந்தாள் அப்பொழுதுதான் நீ யார் பொண்ணுமா என ஒருவர் பேச்சை ஆரம்பிக்க.
புரியல ஆன்டி என்று இவள் பதில் கொடுக்க..
இல்ல வேதாகு சொந்தமா இல்ல பிரெண்டான்னு கேட்டேன்.
காலேஜ் ஃபிரண்ட் ஆன்டி
கல்யாணம் ஆகிடுச்சா.என சந்தேகமாக கேட்கவும்
சற்று நெளிந்தவள் பதில் கூறாமல் இதோ இங்கிருக்கேன் என அழைக்காத தோழி அழைத்ததாக காட்டிக்கொண்டு அங்கிருந்து நைஸாக நழுவ ஆரம்பித்தாள்.
இந்தா பொண்ணே உடனே ஓடாத அங்க யாரும் உன்னை கூப்பிடல நான் பார்த்தேன் என்றவர் பார்த்தா சின்ன பொண்ணா தெரியற,லட்சணமாவும் இருக்க அதான் தெரிஞ்ச பையனுக்கு உன் ஜாதகத்தை தரலாம்னு கேட்டது என்று கூறவும் இதற்குமேல் இவரிடம் பொய் கூறி தப்பிக்க இயலாது என நினைத்தவள் அங்கேயே அமர்ந்து இல்ல ஆன்டி எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு என் கணவர் பிஸினஸ் மேன் என சொல்லும் பொழுது தானாகவே குரலில் ஓரு பெருமையிருந்தது
கல்யாணம் தான் ஆகிடுச்சில்ல அப்போ எங்களோட வந்து கொஞ்ச நேரம் பேசிட்டு இரு என கூற
இவளும் மிடில் ஏஜ் பொண்ணுக அப்படி என்னதான் பேசிக்குவாங்க எனும் ஆர்வத்தில் அவர்களிடத்தில் போய் அமர்ந்து கொண்டாள் அப்பொழுது தான் அவர்கள் கணவர்மார்களிடம் அனுபவிக்கும் இன்னல்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
அதில் கௌசியிடம் பேசிய பெண்மணி மட்டும் சற்று வயது முதிர்ந்தவர்.மீதி அனைவரும் ஆரம்ப முப்பதுகளில் இருப்பவர்கள்.
இளசுகள் ஒரு பக்கமாக நின்று ஆடிக் கொண்டிருக்க வயது மூத்தவர்கள் ஓரமாக அமர்ந்து குடும்ப கதைகளை பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் பேசுவதை தான் உள்வாங்கிக் கொண்டு தன் கணவரை அவர்களோடு ஒப்பிட்டு பார்த்து தனக்கு எந்த மாதிரியான வாழ்க்கையும் கணவனும் கிடைத்திருக்கிறார் என்பதை உணரத் தொடங்கி இருந்தாள்.
ஒரு பெண் தன்னுடைய கணவன் சதாகாலமும் தனக்கு ஸ்பை வைத்து கண்காணிப்பதாகவும் கல்லூரி நண்பர்களுடன் பேசவே அனுமதிப்பதில்லை எல்லாமே சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார் வாழ்க்கையே வெறுக்கிறது இன்று மட்டும் வெளியே வரமுடியாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக தற்கொலை செய்திருப்பேன் என அதிர்ச்சி அளித்தார்.
மற்றொருவள் அப்படி சந்தேப்பட்டா கூட யாருமே வேணாம்னு பேசாம இருந்துக்கலாம் ஆனா என் புருஷன் தினமும் குடி,பிற பெண்களோட தொடர்பு என் முன்னாடி மத்த பொண்ணுங்க கிட்ட பேசறாரு.. இப்போலாம் வீட்டுக்கே கூட்டிட்டு வர்றாரு.. இரண்டு குழந்தைகள் பிறந்து விட்டதால எனக்கு உடல்ல நிறைய தொந்தரவுகள் இருக்கு என்னால் எங்கேயும் வேலை பார்க்க முடியாது எனக்கு அம்மா அப்பாவும் இல்லை என்ன செய்ய குழந்தைகளுக்காக பொறுத்து போறேன் இல்லனா போடானு போயிருப்பேன்.
என்று வருத்தத்தோடு முடித்தார்.
மூன்றாவது பெண்ணோ என் கணவர் என்னை எங்கேயும் கூட்டிட்டு போறதில்ல வீட்டுக்குள்ளேயே அடைச்சு வச்சிருக்கார் வேலைக்கு போகவும் அனுமதிக்கிறது இல்ல, வீட்டை சுத்தமா வச்சிக்கிறேன் எல்லா வேலையும் நான் தான் செய்றேன் ஆனாலும் என்ன ரொம்ப மட்டும் தட்டி நான் வாழறதே வேஸ்ட் என்கிற மாதிரி என்னை அடிமையா வச்சிருக்காரு, கோபம் வந்து ஒரு சில சமயம் அம்மா வீட்டுக்கு கூட போயிட்டேன் ஆனா என் அம்மா குடும்ப கவுரவம் மானம் அது இதுன்னு லெசன் எடுத்து என்னை மறுபடியும் அங்கேயே அனுப்பி வைக்கறாங்க.. புருஷனுக்கு அடங்கி போக சொல்றாங்க, என்னால சுயமா எந்த முடிவு எடுக்கவும் முடியவில்லை,புருஷனுக்கு அடங்கி இருக்கவும் முடியல எனக் குறைபட்டார்.
மற்றொரு பெண்ணோ என் வீட்டுக்காரர் எப்போ பார்த்தாலும் என் பிறந்த வீட்டை பத்தி குறை சொல்லி சொல்லியே என்னை எதிர்த்து பேசாம முடியாத அளவுக்கு அமைதியாக்கி வச்சிருக்காரு.. என்னை பார்த்ததும் பிடித்து போய் பொண்ணு கேட்டு வந்தார் என் அம்மா அப்பா கிட்ட எவ்வளவோ சொன்னேன் இந்த மாப்பிள வேணாம்னு ஆனா பிடிவாதமா பணக்காரன் கார் வச்சிருக்கான் பெரிய வீடு வச்சிருக்கான்னு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாங்க.
போன நாளிலிருந்து என் மாமியார் , நாத்தனார்,ஓரகத்தி என அத்தனை பேரும் மாயக்காரி,மயக்கிட்டா,குப்பை மேடு, கோபுரம்னு என்னை பத்தியும் என் பிறந்த வீட்டை பத்தியும் எவ்வளவு தரக்குறைவா பேச முடியுமோ அவ்வளவு தரக்குறைவா பேசிட்டு இருக்காங்க.. என் கணவர் கண்டு கொள்வதும் இல்லை அப்படியே கண்டுக்கிட்டாலும் உண்மையை தான பேசுறாங்க அதுல என்ன உனக்கு வருத்தம்னு திருப்பி கேள்வி கேட்கிறார்..வெளிய சாப்பிட கூப்பிட்டுட்டு போவாங்க எல்லாம் ஆர்டர் செய்துட்டு சாப்பிடற நேரம் நல்லா சாப்பிடு இதையெல்லாம் எங்க உன் அம்மா வீட்ல பாத்திருப்பனு கேட்டு சாப்பிடவிடாம பண்ணிடுவாரு.. ஹோட்டல்னு இல்ல, துணிக்கடை,நகைக்கடை, டூரிஸ்ட் ஸ்பார்ட் எங்க போனாலும் இதே தான் நிலை.. அப்போலாம் நான் இல்லாத வீட்டு பொண்ணுனு தெரிஞ்சி தான கட்டிகிட்டனு அந்தாளு சட்டையை புடிச்சிகிட்டு கத்தனும் போல இருக்கும்.. இதையெல்லாம் கூட தாங்கிகலாம்.. கோபம்னு வந்துட்டா போதும் கைல கிடைக்கிறதை எடுத்து அடிச்சிடுவாரு..
பொது இடத்துல அவர் எப்படி நடந்துகிட்டாலும் பொறுத்துக்கனும்..கொஞ்சம் முகத்தை சுளிச்சா கூட இடம் பொருள் ஏவல் எல்லாம் பார்க்க மாட்டார் அங்கேயே அடிச்சிருவாரு எனக்கு அவமானம் புடுங்கி திங்கும்..
ஆனா அவர் அதை பெருமையா நினைக்கிறார் என்ன செய்ய இன்னும் எனக்கு கல்யாணம் ஆகாம ரெண்டு தங்கச்சி இருக்காங்க அவங்களுக்காக இந்த நரகத்தில் நான் வாழ வேண்டி இருக்கும் இப்போ கூட பாருங்க இந்த பார்ட்டி முடித்து நல்லபடியா வீட்டுக்கு போனா தான் சந்தோஷம்.
இங்க அவருக்கு பிடிக்காதது போல யாராவது ஏதாவது சொன்னா கூட என்கிட்ட தான் அந்த கோபத்தையும் காட்டுவாரு,அடி வாங்காம வீடு போய் சேர்ந்தா போதும் அதான் இப்போதைய மனநிலை..
மனுஷன் எப்போ என்ன மூடுல இருக்காருன்னு ஜட்ஜ் பண்ண முடியாத வாழ்க்கை என சோகமாக முடித்தார்.
ஒவ்வொருவரின் கதையை கேட்கும்பொழுதும் கௌசல்யாவின் மனது சொல்லிக் கொண்டது ஐ ஆம் பிளஸ்ட்டு என்று தான்..
என்னமா பொண்ணே அப்படியே எங்க கதைல மெய் மறந்துட்ட போல…என்ன செய்ய நாங்க எல்லாம் வீட்டுக்குள்ளேயே இருக்கோம் இப்படி ஏதாவது ஓரு பார்ட்டி பங்ஷன்னு வந்தா தான் மனுஷங்களோட மனம் விட்டு பேசவே முடியுது.. மத்தவங்க கண்ணுக்கு வேணா புரளி பேசறதாகவும்,சொந்த குடும்பத்தையே மட்டம் தட்டறாதாகவும் தோணலாம்.. ஆனால் எங்க மனசுக்கு இதுதாம்மா ஆறுதல்..
சரி உன் கதை என்ன.. அதையும் சொல்லேன்..
என்று கேட்கவும் கௌசல்யாவுக்கு எதுவுமே சொல்ல தோன்றவில்லை.
இவங்கலாம் சொன்னது போல எதுவும் இல்ல..ஆனா அவர் என் கனவை உடைச்சிட்டாரு..என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டாரு..
அவர் என்னை ஒருதலையா காதலிச்சிருக்காரு..அது தெரிஞ்ச என் அண்ணியும்..இல்லல்ல அவர் தங்கை என வேதனையை மென்று முழுங்கியவள் சேர்த்து சதி செய்து அவருக்கு என்னை கல்யாணம் செஞ்சு வச்சிட்டாங்க.
நான் ரொம்ப நல்லா படிப்பேன்..பெரிய கம்பெனில வேலை செய்யனும்,கார்,வீடுனு எல்லாம் வாங்கிட்டு தான் கல்யாணம் செய்யனும்னு நினைச்சேன் எல்லாத்தையும் அவரோட சுயநலக் காதல்ல காணாம போக வச்சிட்டாரு..
என் அம்மா அப்பாவே என் மேல வச்சிருந்த நம்பிக்கையை இழந்துட்டாங்க.. நான் எதுக்குமே லாயக்கு இல்லையோன்னு என்னை நானே நம்பற அளவுக்கு கொண்டு வந்து விட்டுட்டாரு.. கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆகப்பேகுது.. இப்போ வர என்னால அவரோட இயல்பா வாழவும் முடியல அவர் செஞ்சதை மறக்கவும் முடியல மன்னிக்கவும் முடியல என கூறி முடித்தாள்.
அந்த இடத்திற்கு குண்டூசி விழுந்தால் சத்தம் கேட்கும் அளவிற்கு பெண்கள் இடத்தில் அப்படியொரு ஆழந்த அமைதி..
என்ன…ஏன் இவ்ளோ அமைதி என ஐவரையும் முகத்தையும் மாறி மாறி பார்த்து படி திகைத்துடன் அமர்ந்திருந்தாள் கௌசல்யா .
சற்று நேரத்தில் ஒன்று போல அனைவரும் சிரிக்கவும் இந்த பெண்களுக்கு என்னவாயிற்று என மீண்டும் குழம்பினாள்.
எங்க வாழ்க்கை எல்லாம் எப்படி இருக்கணும்னு நினைச்சிட்டு இருந்தோமோ அந்த வாழ்க்கை உனக்கு கிடைச்சிருக்கு ஆனா நீ அதை என்ஜாய் பண்ணாம கஷ்டபட்டுட்டு இருக்க.
உன்னை லவ் பண்ணி திட்டம் போட்டு கல்யாணம் பண்ணி இருக்காரு ஆனா நீ அது ஒரு பெரிய குறையா சொல்லிட்டு இருக்க ஒரு வருஷமா அழகா போக வேண்டிய லைஃப்பை நீ காம்ப்ளிகேட் ஆக்கியிருக்க என்றனர்.
வயதில் மூத்த பெண்மணி இவங்க நாலு பேரும் சொன்னாங்களே இதுல ஏதாவது உன் கணவர் பண்றாரா என கேட்க மனதிற்குள்ளாக யோசித்துப் பார்த்தாள்.
அவள் கணவன் இதுவரை அவளை சந்தேகப்பட்டது கிடையாது அவளுக்கு கண்காணிக்க யாரையும் வைத்தது இல்லை பிறந்த வீட்டினரை குற்றம் சொல்லியது கிடையாது அவளை மட்டம் தட்டியதும் இல்லை எல்லாம் அவள் விருப்பம்.. அவளுக்குப் பிடிக்காது என்று தெரிந்தால் உடனே அதை விட்டுவிடும் குணமும் உள்ளவன் ஆனாலும் அவள் மனதிற்குள் இருந்த குறையை வெளிப்படையாக அந்த பெண்களிடம் கூறிவிட்டாள்.
இல்லை என மறுப்பாக தலையசைக்கவும்.. சரி நான் கேட்கிற கேள்விக்கு மட்டும் உண்மையா பதில் சொல் என்றவர் ஒருவேளை அவர் உன்னை காதலிச்ச மாதிரி நீ யாராவது ஒரு பையனை காதலிச்சா என்ன பண்ணி இருப்ப எனக் கேட்டார்.
யோசிக்காமல் கல்யாணம் பண்ணி இருப்பேன்..
அவர் உனக்கு கிடைக்கவே மாட்டார்னு தெரிஞ்சா ..
அது எப்படி விட முடியும் முடிஞ்ச அளவு முயற்சி பண்ணுவேன் ஓருத்தரை மனசுல நினைச்சதுக்கு அப்புறம் எப்படி வேற ஒருத்தரை கல்யாணம் பண்ண முடியும்..
சரி உன் அண்ணனுக்கு ஒரு பொண்ணு பிடிச்சது ..ஆனா கல்யாணம் செய்யறது கஷ்டம் நீ உதவினா முடியும்…அப்போ என்ன செய்வ.
கண்டிப்பா அண்ணனுக்கு உதவுவேன்..
இதைத்தானே மா உன் கணவரும் அண்ணியும் சேர்ந்து பண்ணி இருக்காங்க இது எப்படி ஏமாத்தற ஆகும் நீ செஞ்சா அது நியாயம் அதுவே மத்தவங்க செஞ்சா அநியாயமா
என்று கேட்கவும் ஹரியின் நற்குணங்கள் ஒவ்வொன்றாக அவளின் மன கண் முன் வர ஆரம்பித்தது.
உடனேயே மூச்சடைக்க ஆரம்பித்தது..
நீ இங்க வந்தது உன் புருஷனுக்கு தெரியுமா..
இல்லையென தலையசைத்தாள்.
சொல்லாம வர்றது தப்பில்லையா அட்லீஸ்ட் உன் அம்மாகிட்டயாவது சொன்னியா.
அதற்கும் இல்லை என தலையாட்ட.
நீ வந்து போற சமயத்துல உனக்கு ஏதாவது ஆச்சுன்னா அவங்க உன்னை எங்கனு தேடுவாங்க.. அவர் மேல இருக்குற கோவத்துல அவரை காயப்படுத்தனும்னு நினைச்சி உன் வாழ்க்கையை அழித்துக் கொள்வாயோன்னு தோணுது அம்மா.
உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு.. இதான் உன் வாழ்க்கை..இதுல இருக்கற நிறைகளை மட்டும் எடுத்துக்கோ,குறைகளை தூக்கி போடு,பழசையே புடிச்சி தொங்கி கிட்டு இருக்காம எதார்த்தமான வாழ்க்கையை சந்தோஷமா வாழப்பாரு .
நீயும் சந்தோஷமா இரு அந்த பையனையும் சந்தோஷமா வச்சுக்கோமா எல்லாருக்கும் உன்னை மாதிரி ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை கிடைக்காது நீ கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட பொண்ணு அதை மறந்துடாத..
ஏதோ பெரிய புண்ணியம் பண்ணி இருக்க அதான் உனக்கு இந்த மாதிரியான ஒரு வாழ்க்கையும் கணவரும் கிடைத்திருக்காங்க.
அதை நல்ல விதமா கொண்டு போக பாரு..கைக்கு கிடைச்ச வைரத்தை குப்பையில் தூக்கி போட்டுட்டு குழாங்கல்லை வைத்து விளையாடனும்னு ஆசைப்படாத என புத்தியும் கூறினார்.
யார் சொன்னது மாதக்கணக்காக வருடக்கணக்காக ஒருவர் பின் மற்றொருவர் அழைந்து அவர்களைப் பற்றி நன்றாக புரிந்த பிறகு தான் காதல் வரும் என்று.
காதல் என்பது நொடிப் பொழுதில் வருவது .
முதல் மழை பூமியை தொடுவதற்கு முன்பே மனதிற்குள் அரும்பிவிடும்.. அப்படித்தான் நொடிப்பொழுதில் கௌசல்யாவின் மனதிற்குள் ஹரி சிம்மாசனம் மிட்டு அமர்ந்தான்.
நெருப்பு பற்றத்தான் இரு கற்கள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ள வேண்டும் காதல் தீப்பற்றிக்கொள்ள அது தேவையில்லை ஒருவரின் மனம் கனிந்தாலே போதுமானது.
அவளின் காதலை உணர்ந்த அடுத்த கனமே அவனைப் பார்க்க வேண்டுமென பேராவல் எழும்பியது.
அவனது கை வளைவிற்குள் அடங்க அவளது மொத்த உடலும் துடித்தது.
அவனது மார்பில் பூனைக்குட்டியாய் தஞ்சமடைய உள்ளம் ஏங்கியது.
கண்களில் கண்ணீர் பெருக அவனை இப்பொழுதே கண்டுவிட வேண்டும் என்று முனைப்புடன் அங்கிருந்த வேகமாக எழுந்தாள்.
இந்தப் பொண்ணு இப்படியேவா போக போற..
இல்ல ஆன்டி அவருக்கு பிடிச்சமாதிரி..என்று குதூகலத்துடன் கூடியவள் யாராவது என்னை பத்தி கேட்டா புருஷனோட செகண்ட் ஹனிமூன் போய்ட்டேன்னு சொல்லிடுங்க என்ன கண்ணடித்தபடி வேகமாக அங்கிருந்து ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்தாள்.
அவள் அணிந்திருந்த ஆடைகளை அங்கேயே கழட்டி வீசியவள் அவளின் புடவையை அணிந்து கொண்டு கையில் கட்டி இருந்த கிரிஞ்சை எடுத்து தலையில் பேண்ட்டாக மாற்றிக் கொண்டு நெற்றிப்பொட்டை சரிபார்த்தபடி யாரிடமும் எவரிடமும் கூறிக் கொள்ளாமல் ஹோட்டலின் வாசலுக்கு வந்தாள்.
அவளின் நேரம் ஒருவரை விடுவதற்காக உள்ளே வந்த கால் டாக்ஸி கிடைக்கவும் உடனே ஏறிக்கொண்டாள்.
இப்பொழுதே தீராக்காதல் நோயுடன் வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறாள் .
ஆனால் அவளுக்காக
அங்கே பூகம்பம் அல்லவா காத்துக் கொண்டிருக்கிறது.. என்ன மாதிரியான பூகம்பம் …அது அவள் போனால் தானே தெரியும் என்ன மாதிரியானது என்று.

Last edited: