கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே 42

Akila vaikundam

Moderator
Staff member
42.

இன்னும் சற்று நேரத்தில் வீடு வந்துவிடும் என்று தூரத்தை கணக்கிட்ட படி அமர்ந்திருந்தாள் கௌசல்யா.

இனி அவனுடன் வாழும் வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும் என கற்பனை செய்தாள்.

இனிமேல் அவனுடன் எல்லா பார்ட்டிகளுக்கும் செல்ல வேண்டும் சோசியல் டிங்கர் ஆக இருந்தால் இருந்துட்டு போகட்டுமே இனி கண்டுகொள்ளக் கூடாது.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கூட எனக்காக தானே விட்டான் அதை அவனாகவே விடும் அளவிற்கு இனிமேல் டென்ஷனே கொடுக்கக் கூடாது.


சமையல்காரம்மாவை இனி உதவிக்கு வைத்துவிட்டு தினமும் நாம் தான் சமைக்க வேண்டும்.

இனி முழுக்க முழுக்க இல்லத்தரசியாக இருந்து அவனுக்கு சேவை செய்வதை மட்டுமே கடமையாக இருக்க வேண்டும்.


கூடிய விரைவில் அழகாக இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும், அவனுக்கு சந்தோஷத்தை மட்டுமே கொடுக்க வேண்டுமென கணவனை நல்லுருவகப்படுத்தி பல கற்பனைகளை கண் மூடியபடி கண்டு கொண்டிருக்க அதை கலைப்பது போல அவளது அழைப்பேசி அழைத்தது.


கணவன் தான் அழைக்கிறானோ என ஆர்வத்தில் போனை எடுத்துப் பார்த்தால் அழைத்தது விக்கி..

சுரத்தையே இல்லாமல் சொல்லு விக்…

உனக்கு அறிவென்பதே கிடையாதா..என அவள் பேசும் முன்பே கத்த ஆரம்பித்தான்.

உன் கிட்ட இருந்தா எனக்கு கொஞ்சம் கடன் கொடுக்கறது என பதிலுக்கு எரிச்சலுடன் கத்தினாள்.

வாய் பேசாத நீ.. வீட்டுக்கு போறதுன்னா ஒரு வார்த்தை சொல்லிட்டு போற பழக்கம் இல்லையா.. யார்கிட்டயும் சொல்லாம அப்படி என்ன அவசரமா ஓடுறது, உன்ன காணோம்னு தேடி ரெஸ்ட் ரூம்ல உன் டிரஸ் மட்டும் தான் இருக்கிதுன்னு கேர்ள்ஸ் சொன்னதும் எவ்ளோ டென்ஷன் தெரியுமா..ஓரு நிமிஷம் உயிரே போயிடுச்சி..

அப்புறமா வேதா ரிலேட்டிவ்ஸ் சொல்லறாங்க நீ வீட்டுக்கு போயிட்டன்னு .. அப்புறம் தான் போன உயிரே திரும்பி வந்துச்சி.


உன்னை இந்த பார்ட்டிக்கு கூட்டிட்டு வந்தது நான் தானே என்னோடு தானே வந்த,அப்போ என்னோட தானே திரும்பியும் போயிருக்கனும்,இடையில ஏதாவதுன்னா நான் தானே உன் கணவருக்கு பதில் சொல்லனும் என கௌசியை பேச விடாமல் பொரிந்து தள்ளினான்.


அந்த முதிய பெண்மணி சற்று முன்பு தானே அவளுக்கு அறிவுறுத்தினார் இடைப்பட்ட நேரத்தில் ஏதாவது ஒன்று என்றால் எப்படி தெரிந்து கொள்வார்கள் என்று..இதோ இப்பொழுது விக்கியும் அதற்காகத்தானே கோபப்பட்டது இது எங்கு சென்றாலும் சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்லிவிட்டு தான் செல்ல வேண்டும் என்று அவசர முடிவொன்றை எடுத்தாள்‌பின்னோடு அந்தப் பெண்மணி சொன்ன மற்றொன்றும் நியாபகம் வந்தது.


நீ கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று.ஆம் நான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவள் தான் அதனால் தான் இது போன்ற நண்பனும் ஹரி போன்ற கணவனும் சரிசமமாக கிடைத்துள்ளார்கள்..

ஹேய் லைன்ல இருக்கியா இல்லையா என விக்கியின் குரல் கேட்ட பிறகுதான் தான் மீண்டும் கனவுலகத்திற்குள் சென்றதை நினைத்து வெட்கம் கொண்டவள் சாரி விக்கி காலைல உன் கூட கிளம்பி வரும்போது எனக்கு எதுவும் தோணல ஆனா அங்க வந்ததுக்கு அப்புறம் திடீர்னு ஹரி ஞாபகம் வந்துருச்சு அதான் கிளம்பிட்டேன்.ஆனா அவர் ஏதோ பங்க்ஷன் போறதா சொன்னியே..


ஆமா நானும் அவரோட போகனும்னு தீடிர்னு தோணிச்சி அதான் உடனே கிளம்பிட்டேன்..

பங்க்ஷன் முடிச்சிருக்காதா என சந்தேகமாக கேட்டவனிடம் .


இல்லல்ல மதியம் ஒன்லி க்ளைன்ட்க்காக வெச்ச பங்ஷன் ஈவினிங் பேமிலி ஃபங்ஷன் அவர் பர்சனலாவே இன்வைட் பண்ணி இருக்காராம்..ஏதாவது ஒன்றுக்கு கண்டிப்பா பேமிலியா வரணும்னு எப்பயும் நான் போகாதனால ஹரி மத்தியானம் போயிருக்க மாட்டார்.


அதான் இப்போ வீட்டுக்கு போய் கிளம்பிட்டு அவரையும் ஆஃபிஸ்ல இருந்து வர சொல்லிட்டு சாயங்காலம் சேர்ந்து போக போறேன் சாரிடா சொல்லாம வந்ததுக்கு.திடீர்னு அவரோட இருக்கனும்னு தோணுச்சா என்ன பண்ணறேன்னு தெரியாமலே கிளம்பிட்டேன்..இனி இப்படி பண்ண மாட்டேன் ப்ராமிஸ்.


நீ பண்ணு இல்ல பண்ணாம போ ஆனா இன்னைக்கு நான் முடிவு பண்ணிட்டேன் இனிமே உன்னை எங்கேயும் நான் கூட்டிட்டு போறதா இல்லைனு.

இன்னைக்கு நீ கொடுத்த டென்ஷன் இருக்கே ..ஹப்பா லைப் லாங் என்னால மறக்க முடியாது, உன்னை மாதிரி அறுந்த வாலுக கூடவும் சகவாசம் வச்சிக்கறது இல்லனும் முடிவு செஞ்சிருக்கேன்.

அதான் சாரி சொல்றனே விக்கி அப்புறமா அதையே ஏன் சொல்ற ஏதோ ஒரு டென்ஷனை பண்ணிட்டேன் விட்டுடுடா ப்ளீஸ் டா.சரி சரி ரொம்ப கெஞ்சாத பாக்க கேவலமா இருக்கு .அப்புறம் நான் சொல்ல வந்த விஷயத்தை உன்கிட்ட சொல்லிடுறேன் அப்பா திடீர்னு எனக்காக புது கம்பெனி ஆரம்பிச்சிருக்காரு அதை அப்பா கூட இருந்து நான் பாத்துக்க போறேன்..அதனால நான் நம்ம க்ரூப் விட்டு ரீலிவ் ஆகிட்டேன் அதனால நீ அதிகமா நம்ம குரூப்லயே குடி இருக்காத, ஊர் சுத்தாத,டேக் கேர்..

ஏய் என்ன திடீர்னு இவ்ளோ பெரிய குண்டு தூக்கி போடுற..நீயில்லாம நான் மட்டும் க்ரூப்ல இருந்து என்ன பண்ண போறேன்..ஹான்..சரி எதுக்காக தீடிர்னு உன் அப்பா கம்பெனி வச்சி தர்றாங்க என நண்பனிடம் சாட் செய்ய முடியாததை நினைத்து கேள்வி கேட்டாள்.


கேள்வி என்னமோ நல்லா தான் இருக்கு பதில் தான் எனக்கு தெரியல.. என்றவன் கேலியாக உனக்கு என்னம்மா ஒரு ஐடி கம்பெனிகாரனை கல்யாணம் பண்ணி ஹாயா லைஃப்ல செட்டில் ஆயிட்ட. ஆனா எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல…வெட்டியா சுத்திட்டு இருந்தா யார் பொண்ணு கொடுப்பா .. அதான் எம்டி வேலை காலின்னு சொன்னதும் சேர்ந்துட்டேன். உன்னை மாதிரி சூப்பரா இல்லைன்னா கூட சுமாரான பெண்ணையாவது கல்யாணம் பண்ணனும்ல.

அதுக்காக க்ரூப் விட்டு வெளிய போவியா.


க்ரூப் மட்டும் இல்ல ஃபோன் நம்பரே மாத்தப்போறேன்..

புது ப்ராஜெக்ட் க்கு நான் தான் ஹெட்..முதல் தடவையா அப்பா என்னை நம்பி கொடுக்குறாங்க சோ அதை நல்லபடியா முடிக்கணும், வாட்ஸ் அப்னு இல்ல எல்லா சோசியல் மீடியால இருந்தும் கொஞ்ச நாள் விலகி இருக்க போறேன்.இந்த ப்ராஜெக்ட்டை சக்ஸஸ் ஃபுல்லா முடிச்சு அப்பா கிட்ட நல்ல பேர் வாங்கணும் இதுதான் இப்போதைக்கு என்னோட குறிக்கோள்..புது நம்பர் வந்ததும் உனக்கு கூப்பிடறேன்.
கொஞ்சம் உன்னை மிஸ் பண்ணுவேன்…பட் பழகிடும்..நீ வீட்டுக்கு போயிட்டேன்னா ரீச்சிடுன்னு மட்டும் ஒரு மெசேஜ் பண்ணு நானும் வீட்டுக்கு கிளம்பிட்டேன் ஆஃபீஸ் வேலை நிறைய இருக்கு ஓகே கௌசி டேக் கேர் என்று இவளின் பதிலை எதிர்பார்க்காமலே அழைப்பை துண்டித்தான்.


ஏதோ ஓன்று தன்னிடம் குறைவது போல ச்சே என்ன இது இப்படி ஓரு கேவலமான ஃபீல் என தலையாட்டி விரட்டியடித்தவள் அடுத்த நொடியே அவனோட லைஃப்ல அடுத்த கட்டத்துக்காக போறான் இதுல நான் ஏன் வொர்ரி பண்ணிக்கனும் என நினைக்கவும் வீடு வரவும் சரியாக இருந்தது .


டாக்ஸிக்கான பணத்தை ஹேண்ட் பேக்கில் இருந்து சரி பார்த்து எடுத்துக் கொடுத்தவள் கேட்டை திறந்து உள்ளே வர அதிர்ச்சியில் கால்கள் உள்ளே வரத் தயங்கின காரணம் ஹரியின் கார் உள்ளே நின்று கொண்டிருந்தது.


இவர் என்ன இந்த நேரத்துல ஆபீஸ்ல இல்லாம வீட்ல இருக்காரு ஒரு வேலை நான் மனசு மாறியிருப்பேன்னு வந்திருப்பாரோ…


எது எப்படியோ நமக்கு கூப்பிடற வேலை மிச்சம்..உடனே கிளம்பி பங்ஷனுக்கு போயிட்டு வந்துடலாம் என்று வேகமாக உள் நுழைந்தாள் .


வரவேற்பு அறையில் போடப்பட்டிருந்த ஷோபாவில் கண்மூடி சாய்ந்து கிடந்தான்..மற்றொரு இருக்கையில் மொபைல் ஃபோன் கிடந்தது.. கோர்ட் ஒரு பக்கம் கிடக்க ஷு அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடந்தது.


அடர் கருப்பு நிறத்தில் பேண்ட் அணிந்திருந்தவன் பளீர் வெள்ளையில் முழுக்கை சட்டையை பாதி டக்கின் செய்தும் பாதி வெளியேவும் கிடந்தது.


கழுத்தில் கட்டியிருந்த கருப்பு டை பாதி கழட்டி அப்படியே அலங்கோலமாக கிடக்க முழுக்கை சட்டை முட்டி வரை ஏற்றப்பட்டிருந்தது.
அவனைப்பார்க்க ஏதோ பக்காசூரனை பார்ப்பது போல் இருந்தது.. முகத்தில் அப்படி ஒரு கடுமை..

கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக கூடவே இருந்து அவனை கவனித்து வந்த கௌசல்யாவால் அவனின் தோற்றத்தைக் கண்ட உடனே ஏதோ ஒன்று சரியில்லை என்பதை நொடியில் உணர்த்தாள்.. தற்சமயம் அவனை எப்படி கையாள்வது என்பதும் தெரியவில்லை.


எதையோ முழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தொண்டை குழியில் அடைத்து வைத்திருப்பதைப் போன்ற அவஸ்தையுடன் அவன் அமர்ந்திருக்கும் தோற்றம் அவளை கவலை கொள்ளச் செய்தது

என்னங்க என்றபடி அவனது நெற்றியில் கை வைக்கவும் தீப்பார்வை பார்த்தவன் அவளது கையை மெதுவாக எடுத்து விட்டபடி மேலுருந்து கீழ் வரை பார்த்தான்.

அவசரகதியில் கட்டப்பட்ட புடவை,பாப்பர்ஸ் உடைக்கையில் மேல சிதறிய கலர் ஜிகினா துகள்கள் ஆங்காங்கே தலையிலும் ப்ளவுஸ் மறைக்காத உடல்பாகங்களிலும் ஆங்காங்கே ஓட்டியிருக்க..அவனது கண்கள் கோபத்தில் கழன்றது..ஆனால் அவளது சோர்ந்த முகம் அதைக்கண்டதும் அவனது கோபம் சற்று வடிந்தது.

ம்ப்ச்…என ஆழ மூச்சை உள்ளிழுத்து விட்டவன் உள்ளப் போ அப்புறமா பேசிக்கலாம் என முடிந்த அளவு கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு வார்த்தைகளை கடித்து துப்பினான்.


அவளது நேரம் நடுவீட்டில் பாய் போட்டு அமர்ந்திருக்கும் பொழுது எப்படி அவளால் அந்த இடத்தை விட்டு நகர முடியம்.


இல்ல..நீங்க இன்னைக்கு சரியில்ல..உடம்பு சரியில்லையா எனக்கேட்டபடி நெற்றியில் கை வைக்க போக சற்றென தலையை திருப்பினான். சற்றென ஏற்பட்ட அவமானத்தை கடினப்பட்டு ஜீரணிக்க முயற்சித்தாள்.

உள்ளப்போ..

ஏதாவது பிரச்சனையா..

அப்பறமா பேசிக்கலாம் உள்ள போ..

எதா இருந்தாலும் சொல்லுங்க..சரி படுத்திக்கலாம் இப்படி இருக்காதீங்க..

யூ ப்ளடி டாமிட் உள்ளப்போனு சொல்லறேன்ல புரியாது உனக்கு.. உள்ள போய் தொலையேண்டி என்றபடி அங்கிருந்து டீப்பாயை காலால் எட்டி உதைத்தான்.

இல்லப்போக மாட்டேன்..நீங்க இவ்ளோ கோபப்பட்டு பார்த்ததில்ல..ஏதோ பிரச்சனை..எனக்கு பயமாயிருக்கு நான் மாமாக்கு ஃபோன் பண்ணறேன் என்றபடி ஹேண்ட் பேக்கில் இருக்கும் மொபைலை கையில் எடுக்க போக..அவளது கையில் இருந்த பேக்கை மொபைலோடு சேர்த்து பிடிங்கி வீச அது தூரப்போய் விழுந்தது.. மொபைல் பல பாகங்களாக சிதறியது.


அவளது இத்தனை நாள் ஆறுதல் நொடியில் உடைந்த ஆத்திரத்தில் பைத்தியம் பிடிச்சிடுச்சிடுச்சி போல எப்படியோ போய்த்தொலைங்க..என்றபடி உள்ளே செல்லப்போனாள்.

என்ன சொன்ன.

எப்படியோ போய்த்தொலைங்க.

அதுக்குமுன்ன..

அது..

சொல்லுடி.

நீங்க சொன்னது தான் சரி நாம அப்புறம் பேசிக்கலாம் என்று விலகப் போனவளே கைபிடித்து தடுத்து நிறுத்தியவன் சொல்லிட்டு போடி பைத்தியம்னு தானே சொன்ன.

இல்லங்க ஏதோ கோபத்துல..

என்ன கோபம்னு சொல்லு.

கைய விடுங்க..வலிக்குது என அவனிடம் இருந்து தன்னை விடுவிக்க போராடினாள்.

அவனது பிடி மேலும் இறுகியது.

ஆஆஆ…க..க..கைய விடுங்க..

என்ன பைத்தியம்னு சொல்ற அளவுக்கு என்ன கோபம் உனக்கு அதை சொல்லிட்டு போ..

அது..மொபைல்…

ஹான் கேட்கல என காதில் விரல் வைத்து ஆட்டியபடியே அவளது கையைப் பிடித்துக்கொண்டு அறையை சுற்றிவர ஆரம்பித்தான்.

அது மொபைல் உடைந்த ஆத்திரத்துல.. கைய விடுங்க ரொம்ப வலிக்குது ப்ளீஸ் என மற்றொரு கையால் அவனது கையை விலக்க முயற்சித்தபடி கூறினாள்.

ஹான் அப்படி சரியா சொல்லுடி என் பொண்டாட்டி.. மொபைல் உடைஞ்சா நாளைல இருந்து எப்படி கண்டவனோட மணிக்கணக்கா கடலை வறுக்க முடியும்.. புது மொபைல் வர்ற வரைக்கும் உன் பாய் பெஸ்டிகளை எல்லாம் நீ மிஸ் பண்ணுவ அதனால கோபம் வந்துடுச்சு.. நான் உனக்கு பைத்தியக்காரனாக்கிட்டேன் சரியா என அவளின் கண்களை உறுத்து பார்த்தபடி கேட்கவும் பயப்பந்து தொண்டையை வந்து அடைத்தது.

த..த..ப்பா பேசாதீங்க..

எதே நான் தப்பா பேசறேனா..நீ தப்பு தப்பா பேச வைக்கறடி..என அவளை முன் இழுந்து தள்ளி விட ஷோபாவில் காலருகே சென்று விழுந்தாள்.


பயத்தில் கை கால் வேலை செய்ய மறுத்தது மூளையோ இங்கிருந்து ஓடி விடு என கட்டளையிட அவளால்ஓரு அடி கூட நகர முடியவில்லை.ஷோபாவை பிடிமானமாக பிடித்த படி எழுந்து அதன் மீது அமர்ந்து அவனை பயப்பார்வை பார்த்தாள்.

அவள் அருகே பொறுமையாக எட்டு வைத்து வந்தவன் அவளது பயத்தை பொறுமையாக ரசித்தான்.

அவளருகே ஒரு காலை வைத்து ஊன்றியபடி அவளின் முகத்தருகே அவனது முகத்தை கொண்டு வந்தவன் எங்க போயிட்டு வர்ற எனக் கேட்டான்.அப்பொழுதுதான் கௌசல்யாவுக்கு அவனது கோபத்தின் அர்த்தமே புரிய ஆரம்பித்தது என்ன பதில் சொல்வது என தெரியாமல் அது..அது..என யோசிக்க ஆரம்பித்தாள்.


அதான் எதுன்னு..கேக்கறேன்..எங்க போயிட்டு வர்ற…என்றபடியே அவளது தலையை வருடியவன்..அவளது ஹேர் பாண்டை கழட்டி எவ்ளோ ஸ்மூத் ஆன ஹேர் என அவளது கூத்தலுக்குள் கைவிட்டு ஓவ்வொரு முடியாக பிரித்து விட்டான்.

ஸ்பா போய்ட்டு வந்தியா..இந்த ஹேர்கட் கூட இன்னைக்கு தான் பண்ணிக்க போல எனக்கேட்கவும் நிம்மதி மூச்சை விட்டவள்..

ஆமா.. ப்யூட்டி பார்லர் போயிட்டு

வர்றேன் என சமாளித்தாள்.இப்பொழுது உண்மையை சொன்னால் சரிவராது..கோபம் குறைந்த பிறகு கூறிக்கொள்ளலாம் என பார்ட்டிக்கு போன விஷயத்தை மறைத்தாள்.
 
Last edited:
Top