43
இந்த முடியை இப்படி கட்டறதுக்கு பதிலா விரித்துவிட்டு இப்படி பாதி முகத்தை மறைச்சா எவ்ளோ அழகா இருக்கும்..என செய்து பார்த்தவன் யோசனையாக ஆனா அதுக்கு புடவை மேட்ச் ஆகுதுல்ல கௌசி என கேட்க அதிர்ச்சியில் அவனை வாய் அடைத்து போய் பார்த்தாள்..நாக்கு மேலன்னத்தில் ஓட்டிக்கொள்ள எச்சில் கூட்டி முழுங்கினாள்.
சரி சொல்லு எந்த ஸ்பா போன..
நே..நே..ச்..சுரல்ஸ்..
ம்ம்..நேச்சுரல்ஸ்…நம்ம தெரு முனைல இருக்கே..அங்கேயா.
இல்ல..இது வேற..
நீயே சொல் என்பது போல பார்த்தான்.
பீளமேடு…
ம்ம்..பீ..ள..மே..டு..ஏன் அவ்ளோ தூரம்.
வேதா அங்க நல்லாயிருக்கும்னு சொன்னா..
வேதா..சொன்னா வேதா கூப்பிட்டா..வேற என்னலாம் உன் வேதா சொல்லுவா..
விட்டு விடேன் என்னை என்பது போல பார்த்தாள்.
சரி போகட்டும் லேடிஸ் மேட்டர்,அங்க ஏதாவது ஸ்பெஷல் இருக்கலாம்..அதனால அவ்ளோ தூரம் போயிருக்க..ஆனா அதை என்கிட்ட சொல்லிட்டு போறதால என்ன குறைஞ்சிட போகுது..ம்ம்..என கேட்டவன் தீடிரென அவளது வலக்கழுத்தில் ஒட்டியிருந்த ஜீகினா காகிதத்தை கையில் எடுத்து இது என்னது என்றபடி ஆங்காங்கே அவளது உடம்பில் ஒட்டி இருந்ததை கண்களால் ஆராய்ந்தபடியே கேட்டான்.
பாப்பர்..வார்த்தை தந்தியடித்தது.
இதெப்படி உன் மேல.ம்ம்..பார்ட்டிக்கு போனியா..
இல்லல்ல..போகல..
பாப்பர் பர்த்டே பார்ட்டில வெடிப்பாங்க இல்லனா ஏதாவது பொதுவான பார்ட்டில வெடிப்பாங்க..சம்பந்தமே இல்லாம பார்லர்ல வெடிச்சிருக்காங்க ஒருவேளை அந்த பிரான்ஞ்ச்சோட அனிவர்சரியா..
ம்ம்…ஆமா..ஆமா..
ம்ம் பதில் திருப்தி இல்ல நான் வேதாக்கு ஃபோன் பண்ணி கேட்டுக்கறேன் என்று அவனது போனை தேட.
வேணாம்ங்க..ப்ளீஸ்.
ஏன்..எனக்கேட்டபடியே மொபைலை ஆன் செய்ய..
ஏற்கனவே அவளுக்கு தலைவலின்னு சொல்லிட்டு தான் வீட்டுக்கு போனா இப்போ நீங்க கூப்பிட்டா டிஸ்டர்ப் ஆகும்..
ம்ம்.. அப்போ என்ன கேட்டாலும் எப்படி கேட்டாலும் உன் வாயிலிருந்து உண்மை மட்டும் வராது இல்லயா கௌசி.
****
நான் கேக்கறதுக்கு உண்மையான பதில் வேணும்…எழுந்திடு..கெட் அப்..என அவளை தூக்கி நிறுத்தினான்.கால்கள் தரையில் நிற்காமல் தள்ளாடியது..அவனது பிடிமானத்தில் கடினப்பட்டு நின்றாள்.
என் முகத்தை பார்த்து கண்ணை பாத்து சொல்லு எங்க போன..
பியூட்டி பார்லர்..
யூ பிளடி ***”என கேட்டவார்த்தையில் முடித்தவன் அவளை அறையவும் செய்திருந்தான்.
கன்னம் தீப்பற்றி எரிவது போல் இருக்க கண்கள் இரண்டும் இருட்டிக்கொண்டு வந்தது..அவன் அடித்ததை இன்னும் நம்ப முடியவில்லை . அந்த அதிர்ச்சியில் உணர்வு அற்றவளாக சோபாவில் தலைகுப்புற கிடந்தாள்.
அவள் அருகே வந்தவன் அவளின் முடியை பிடித்து தூக்கி நிறுத்தி உண்மையை சொல்லிடு இல்ல உன்னை அடிச்சே கொன்னுடுவேன்…
நான் மனுஷனா இருக்கிறதும் மிருகமா இருக்கிறதும் உன் கைலதான் இருக்கு..பொம்பளைகளை அடிக்கறவன் கோழைன்னு சொல்லறவன்..என்னை மறுபடியும் கை ஓங்க வைக்காத..என்று கூறவும்.
பார்ட்டியில் பெண்கள் பேசிக் கொண்டது ஒவ்வொன்றாக நினைவு வந்தது.. கண்களில் நீர் வழிய தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பெரும்பாடு பட்டாள்.. கண்ணை மூடி மூடி திறந்து நிதானத்திற்கு வர முயற்சித்தாள்.
எங்க போய்ட்டு வர்ற என மாற்றிக்கேட்டான்..
பார்லருக்கும் போனேன்..
வேற எங்க போன..
அது..அது.. பார்ட்டிக்கு போனேன்..வேதா யுஎஸ் போறா..அதான் சென்ட் ஆஃப் பார்ட்டி தந்தா..
***
நான் மாட்டேன்னு தான் சொன்னேன் விக்கி தான் பிடிவாதமா என்னை கூட்டிட்டு போனான்.. எல்லாரும் வர்றாங்க நீ வரலனா நல்லாயிருக்காதுன்னு.
என கேவலுக்கு நடுவே கூறி முடித்தாள்.
ஏன் என்கிட்ட சொல்லனும்னு தோணலை.. சொல்லிட்டு போக தோணல..ஹான் சொல்லு என கத்தவும்.
மொதல்ல போற ஐடியா இல்ல.. அப்புறம் சொன்னா திட்டுவீங்கன்னு…என கேவல் எழவும்.
மேடம் வசதியா மறைச்சிட்டிங்க அப்படிதானே..எவனோ ஒரு கேனையன் தானே அவன் கிட்ட சொன்னாலும் ஒன்னு தான் சொல்லவில்லை என்றாலும் ஒன்னு தான்னு.. சரிதானா என்று அவளை அருவருப்புடன் பார்த்தவன் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா இன்னைக்கு காலைல நீ என்கிட்ட சொல்லி இருந்தா கூட நான் போக வேண்டிய பார்ட்டியை கேன்சல் பண்ணிட்டு உன்னை அழைச்சிட்டு போயிருப்பேன் ஏன்னா எனக்கு போன நிமிஷம் வரைக்கும் என் சந்தோஷத்தை விட உன் சந்தோஷம் தான் ரொம்ப முக்கியம்னு நினைச்சேன்..
எல்லாத்தையும் ஒரே நிமிஷத்துல நீ அழிச்சிட்ட ..என கோபத்தில் அங்கிருந்து பிளவர் வாஷை தூக்கி உடைத்தவன் அது எப்படி டி என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு கூட உனக்கு தோணல அத்தனை பேருக்கும் நடுவுல ஆட்டக்காரி மாதிரி அரையும் குறையுமா போட்டுட்டு ஆடற..
அப்புறம் ஏண்டி என் முன்னாடி மட்டும் படி தாண்டா பத்தினி மாதிரி இழுத்து போத்திட்டு நிக்குற என்று அவளை கை பிடித்து இழுத்தவள் மேலிருந்து கீழ் வரை பார்த்துவிட்டு மீண்டும் ஷோபாவின் மீது தள்ளினான்.
என்னை ஸ்பை பண்ணறீங்களா என அதிர்ச்சியில் கேட்கவும்..
பண்ணினா தான் என்ன தப்பு..
அய்யோ அய்யோ நான் என்னலாம் கற்பனை பண்ணிட்டு வந்தேன் இப்படி என் நம்பிக்கையை உடைச்சிட்டீங்களே..
இது என்ன புது டிராமா..
நாடகம் இல்ல உண்மை.. இன்னைக்கு தான் அங்கிருந்து ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்தேன் தெரியுமா உங்களோட அந்த பங்ஷன் போகனும்னு..ஆனா நீங்க என்னை சந்தேகப்படறீங்க..ஸ்பை வைக்கறீங்க..என ஓஓஓ என அழவும்.
ஏய் வாய் மூடு ….மூடுன்னு சொல்லறேன்ல..
கண்ணை தொட…நல்லா…ம்ம்…குட்..
என்ன சொன்னே மறுபடியும் ஓரு தடவை சொல்லுடி என மீண்டும் கை ஓங்கவும்..
பயந்தவள்..முகத்தை மூடி மீண்டும் அழ ஆரம்பித்தாள்.
கைய கீழ இறக்குடி..என்னப்பாரு..சொல்லு..
என்ன சொன்ன மறுபடியும் சொல்லு..
சந்தேக படுறிங்க என்னை கண்காணிக்க ஆள் போட்டு இருக்கீங்க என்று கத்தவும் .
மீண்டும் அடிக்க பாய்ந்தவன் அப்படியே கையை இறக்கியபடி உனக்கு சந்தேகம்னா என்னனு தெரியுமா…தெரியுமாடி..
புருஷனை தவிர எல்லார்கிட்டயும் சிரிக்கிறியே ,பேசறீயே…யாரோடனு ஒரு நாள் உன் போன் எடுத்து பார்த்தேன் உன் பிரெண்ட்ஸ் கிட்ட முக்கியமா ஆம்பள பசங்க கிட்ட நல்லா பேசுற சிரிக்கிற தினமும் ஃபோன் பண்ணி பேசற அளவுக்கு நெருக்கம்..
சந்தேகப்பட்டிருந்தா அன்னைக்கே அதை காட்டி கேட்டிருக்கனும் அதுக்கு பேர் தான் சந்தேகம்..
என்ன என் மொபைல் எடுத்து பார்த்தானா என்பது போல் அதிர்ச்சியாக பார்த்தாள்.
இன்னைக்கு நான் கூப்பிட்டேன் வரல ஆனா எவனோ வந்து கூப்பிட்டதும் ஸ்டார் ஹோட்டலுக்கு கிளம்பி போயிருக்கியே அதுக்கு சந்தேகப்பட்டு இருக்கணும் .என்னை விட அவன் உனக்கு முக்கியமான கேட்டு .
இதெல்லாம் தான் சந்தேகம், இவ்வளவு நேரம் நான் உன்கிட்ட எதுக்காக பேசிட்டு இருக்கேன் என்கிற விஷயம் கூட உன்னால புரிஞ்சுக்க முடியல அப்படி இருக்கும்போது உங்கிட்ட இனி பேசி என்ன புரிய வைக்க போறேன் சொல்லு.
எல்லாம் வேஸ்ட் மொத்தமும் வேஸ்ட் .
எவனோ ஒருத்தன் உன்னை வெளிய கூட்டிட்டு போறான்,துணி வாங்கி தர்றான்,ஸ்பா பில் கட்டறான்..அப்போ உனக்கு நான் யாருடி..கேட்டா சந்தேகம்னு சொல்லற…இப்போ வரை உன் வாய்ல இருந்து உண்மை வரல..
நீ இன்னிக்கி அங்க ஆடுன ஆட்டத்தை பார்க்கும் போது நீ பார்ட்டி க்கு போறது மொத தடவைனு குழந்தை கிட்ட சொன்னா கூட நம்பாது.
அந்த பக்கம் புருஷனை ஆஃபிஸ் அனுப்பிட்டு இந்த பக்கம் ஃப்ரண்ட்ஸ்சோட கூத்தடிக்கற…இதை இப்படியே விட்டா வேலைக்கு ஆகாது…எரியறதை அணைச்சா புகை தானா அடங்கும்..என்றவன் மொபைலை எடுத்து மிஸ்டர் ராமநாதன் என பேச ஆரம்பிக்கவும் அது நண்பனின் தந்தை என்று தெரிந்தது..என்ன பண்ணறீங்க என பாய்ந்தவள் அவனது மொபைல் போனை அவனிடத்தில் இருந்து புடிங்கி காலை கட் செய்து தூக்கி வீசினாள்.
நண்பனை நம்பி இப்பொழுதுதான் அவனது தகப்பனார் தனியாக ஒரு தொழிலை தொடங்கி கொடுத்திருக்கிறார் இந்த நேரத்தில் தேவையில்லாமல் தன்னுடைய குடும்பப் பிரச்சனை அவரின் காதுக்கும் போய் விக்கிடம் சென்றடைந்தால் அவனது வேலையை சரிவர செய்ய முடியாது என்ற பதட்டத்தில் தன்னையறியாமல் தன்னிச்சையாக அவனது மொபைலை பிடிங்கி விட்டாள்.
இதுக்கு என்ன அர்த்தம் கௌசி.. அப்போ உன் மனசுல ஏதோ ஒரு தப்பு இருக்கு இல்லையா நம்ம சந்தோஷத்தை விட நம்ம குடும்ப வாழ்க்கையை விட உனக்கு அந்த பொடிப்பய முக்கியமா போய்ட்டான்..
நான் விடப்போறதில்லை.
ஊர்ல உலகத்துல இப்படி ஒரு தங்கம் இல்லன்னு ஊரெல்லாம் பெருமை பேசிட்டு திரியுறாங்களே உன் அம்மா அவங்க கிட்டயே நியாயம் கேட்கிறேன் புருஷனை விட்டுட்டு கண்டவனோட ஊர் சுத்திட்டு இருக்கா உங்க பொண்ணு இதுதான் நீங்க பெற்று வளர்த்த லட்சணமான்னு ..
இல்ல நீ மட்டும் தான் இப்படியா,இல்ல உன் அம்மாவும்..
ஹஹஹரிஇஇ…அம்மாவ பத்தி பேசாதீங்க..காதை பொத்திக்கொண்டு கத்தினாள்.
பேசினா என்ன பண்ணுவ.. உன் அப்பா கையாலாகதவன் ,உன் அண்ணனுக ஒருத்தன் சுயநலம் புடிச்சவன், இன்னொருத்தன் கஞ்சப்பய…
உன் அம்மாகாரி பணத்தாசை புடிச்சவ..அந்த வீட்ல இருந்து வந்த நீ மட்டும் எப்படி இருப்ப ஊர் சுத்த ஓருத்தன் செலவு செய்ய ஒருத்தன்..ஆசை வந்தா கூட ப***”க புருஷன்னு நான்..
ஏய்ய்ய்..என அவனது நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டவள்.. அவன் கூறிய வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் அழுகை எல்லாம் காற்றில் போக ,மரியாதை என்பது மருந்திற்கும் இல்லாமல் காளி அவதாரம் எடுத்து ஆங்காரமாக என்ன நீ பாட்டுக்கு பேசிகிட்டே போற பொறுமையா நான் கேட்டுகிட்டு இருக்கறதாலயா..
என் அம்மாப்பா பத்தி என் அண்ணன்களை பத்தி வாய்க்கு வந்ததெல்லாம் பேசுற அவங்கள பத்தி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு..
என் அண்ணன்களோட கால் தூசிக்கு நீ வர மாட்ட அவங்க எல்லாம் எந்த பெண்ணோட வாழ்க்கையையும் திட்டம் போட்டு அளிக்கவில்லை.
உன் தங்கச்சி என் அண்ணனை கட்டிக்கறேன்னு சொன்னப்போ கூட வசதியான வீட்டு பொண்ணு இந்த வீட்ல வந்து கஷ்டப்படுவாளே எனக்கு வேண்டாம்னு பெருந்தன்மையா சொன்னவர்..
நீயும் உன் தங்கச்சியும் சேர்ந்து சதித்திட்டம் பண்ணி என் வாழ்க்கையை கெடுத்த மாதிரி யோசிக்க கூட அவரால முடியாது.
எவ்வளவு நாள் தான் நானும் பிடிக்காத வாழ்க்கையை சகித்துக்கொண்டு வாழ முடியும் சொல்லு..ஆமாய்யா எனக்கு உன்னை பிடிக்கல.. பிடிக்கவும் பிடிக்காது.. இவ்ளோ நேரம் கேட்டியே உனக்கு என்னை விட அவன் தான் முக்கியமானவனான்னு …
இப்போ சொல்லறேன் நல்லா கேட்டுக்கோ எனக்கு அவன்தான் உன்னை விட முக்கியம் தான்…நீ என் புருஷன் அவன் என் ஃப்ரெண்ட் ..
எங்க போன எங்க போனான்னு நொச்சி நொச்சினு கேட்டு டார்ச்சர் பண்ணினல்ல இப்போ சொல்றேன் கேட்டுக்கோ நான் இன்னைக்கு வேதவோட சென்ட் ஆஃப் பார்ட்டிக்கு ஓரு ஸ்டார் ஹோட்டலுக்கு தான் போயிட்டு வரேன் ..
யார் கூட்டிட்டு போனா தெரியுமா உனக்கு பிடிக்காத எனக்கு பிடிச்ச விக்கி தான் கூட்டிட்டு போனான் .
அது எனக்கு தப்பா தெரியல ..பார்ட்டிக்கு போன இடத்தில் புடவை செட் ஆவலன்னு மாடல் டிரஸ் வாங்கி கொடுத்தான் ..அந்த டிரஸ்க்கு ஹேர் ஸ்டைல் செட் ஆவலன்னு ஸ்பா கூட்டிட்டு போனான்..
இதுக்கெல்லாம் அவன் தான் பில் பே பண்ணினான் ஏன்னா அவனை வித்தியாசமா பார்க்க தெரியல அவன் என் ஃப்ரெண்ட் எனக்கு செலவு பண்ண எல்லா உரிமையும் இருக்கும்னு நினைச்சேன் .
அவனோட வெளியே போறது தப்பில்லான்னு தோணுச்சு, உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு இல்ல..சொன்னா எங்க நட்பை சரியா புரிஞ்சிக்க மாட்டியோன்னு பயந்தேன்.. தினமும் அவன் கூட ஒரு தடவை ஃபோன் பண்ணி பேசுவேன்..குரூப் சாட்ல அவன் கிட்ட மட்டும் தான் பேசுவேன் ஏன்னா என் அண்ணன் தர முடியாத பாதுகாப்பை,என் அம்மாப்பாகிட்ட சொல்ல முடியாத விஷயத்தை,உன் கிட்ட கூட பேச முடியாத விஷயத்தை…அவன்ட சொல்லலாம், பேசலாம்,கேக்கலாம்..
உன்னை விட என் அம்மாப்பாவை விட அவன் எனக்கு ஸ்பெஷல் தான்.. இப்போ வர என்னை தப்பா பார்த்ததில்லை யாரையும் பார்க்க விட்டதில்லை ஒரு வார்த்தை யாரையும் பேச விட்டதில்லை.. அந்த மாதிரியான நட்பு எங்களோடது..அதை நீங்க கெடுத்திட கூடாதுன்னு தான் அவனோட பேசறதை ரகசியமா வச்சேன்.
. அவனோடு நான் பேசறதும் பழகுறதும் வெளியே போறதும் உனக்கு பிடிக்கலைன்னு தெரிஞ்சிருந்தா நீ சொல்லவே வேணாம் அவனே என்னை விட்டு விலகி போய் இருப்பான் அதை தான் நீ விரும்புற இல்ல சரி இனிமே நான் அவனோட பேசல,வெளிய போகல..
அவன் எனக்கு இன்னிக்கு செலவு பண்ணின காசு இதுக்கு முன்னாடி ரெண்டு தடவை இது மாதிரி பார்ட்டிக்கு வெளிய கூட்டிக்கொண்டு போய் இருக்கான் அதுக்கு செலவு பண்ணின காசு எல்லாத்தையும் கணக்கு போட்டு திருப்பி கொடுத்துடலாம் .
ஆனா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா இதை கொடுத்தா அவன் முழுசா உடைத்துவிடுவான் என்னை விட்டு நிரந்தரமா போயிடுவான்..
உன்னை ரொம்ப உயரத்துல வச்சிருக்கான்..அவன் தோழி ரொம்ப சந்தோஷமா இருக்கறா..நீ அவளுக்கு நிறையா ஃபீரிடம் கொடுத்திருக்க.. அவளோட எப்போ வேணாலும் யாரு வேணாலும் பேசலாம் அவ வீட்டுக்கு போகலாம் அவ வீட்டுக்காரர் நட்பை ரொம்ப மதிக்க தெரிஞ்சவர்னு நினைச்சிட்டு இருக்கான்.
இப்போ நீ அவங்க அப்பா கிட்ட பேசினாலோ இல்ல அவன் செலவு பண்ணின காசை கணக்கு போட்டு திருப்பி குடுத்தாலோ இதுவரை அவன் உன்ன பத்தி நினைச்சுட்டு இருக்குற எல்லா கற்பனை கோட்டையும் தவிடு பொடி ஆகிடும்.
தன்னோட தோழி சந்தோஷமா இல்ல நிம்மதியா இல்ல,வேதனை படறான்னு நினைச்சே அவன் காணாம போயிடுவான்.. அதான் உனக்கு வேணுமா..என் வாழ்க்கையை அழிச்ச மாதிரி என் நிம்மதியை கெடுத்த மாதிரி அவனையும் அழிக்கனும்..அதான உனக்கு வேணும்..இந்தா உன் ஃபோன்..
அவன் அப்பாகிட்ட மட்டும் இல்ல அவன் கிட்டேயும் பேசிக்கோ என்ன வேணாலும் பேசு.. என்னை உயிரோட சாகடித்த மாதிரி அவனையும் சாகடித்து விடு. ஆனா இதுக்கு அப்புறம் நான் உனக்கு அடங்கியிருப்பேன்னு மட்டும் நினைக்காதே..என முகத்தை அழுத்தி துடைத்தவள் போதுமா இப்போ உன் டவுட் கிளியர் ஆகிடுச்சா..மறுபடியும் சொல்லறேன் நல்லா கேட்டுக்கோ உன் கூட இப்போ வரை நான் சந்தோஷமா இல்ல..
அவனுக்காக,என் குடும்பத்துக்காக கஷ்டப்பட்டு சகிச்சுக்கிட்டு தான் இருந்தேன் மனசுல வச்சுக்கோ..
நீ கேட்கலாம் அப்புறம் எதுக்கு இவ்வளவு நாள் கூட இருந்தேன்னு… இவ்வளவு நாள் மட்டும் இல்ல இனிமேலும் நான் உன் கூட தான் இருப்பேன்,டிவோர்ஸ் , கோர்ட்,னு போனா என் அப்பாம்மா ரொம்ப கஷ்டப்படுவாங்க ,விக்கி கவலை படுவான் அதுக்காக தான் வலியை,கனவை,கற்பனையை,
ஏமாற்றத்தை எனக்குள்ளேயே வச்சிகிட்டு போலியா சிரிச்சி பேசி நடமாடிகிட்டு இருக்கேன் என்று மனதில் இருந்த வலி அனைத்தையும் வெளியே கொட்டி தான் அனுபவித்த வலியை அவனும் அனுபவித்தே ஆகவேண்டும் என்ற ஒரே நோக்குடன் பேசி முடித்தாள்.
கௌசி இப்படியெல்லாம் கூட பேசுவாளா..ஒரு பெண்ணால் இந்த அளவிற்கு மனதில் வன்மத்தை வைத்துக்கொண்டு இயல்பாக இருக்க முடியுமா என்ற அதிர்ச்சியில் இருந்து உடனடியாக அவனாள் மீள முடியாமல் போயிற்று.
தன்னால் கடந்த ஒரு வருடமாக கஷ்டப்படுகிறாளா என்ற குற்ற உணர்ச்சியில் இப்பொழுது இறங்கிப்போவது அவனது முறையாகிற்று
அப்போ நீ இவ்ளோ நாள் என்னோட சந்தோஷமா இல்லையா..வேதனைகளை மறைச்சிகிட்டு ஒவ்வொரு முறையும் என்னை சகிட்சிகிட்டேன்னு சொல்ல வர்றியா..என கூறி முடிக்கும் போது அவமானத்தில் முகம் கருத்து உதடுகளை பற்களால் கடித்த படி கேட்கவும்.
ஆங்காரமாக ஆமா ஒவ்வொரு முறை நீ என் பக்கத்துல வரும் போதெல்லாம் இன்னும் அஞ்சு நிமிஷம் இல்லனா பத்து நிமிஷம் தான் பொறுத்துக்கோ அவன் ஆசை,வெறி அடங்கினதும் நகர்ந்திடுவான்..போராடி உன்னை காயப்படுத்திக்காதன்னு எனக்கு நானே சொல்லிப்பேன்..மனசுக்குள்ள ஒவ்வொரு செகண்டையும் எண்ணிப்பேன்.
பொத்தென இருக்கையில் அமர்ந்தவன் நீ பொய்தான சொல்ற, போய் தான் சொல்லற..என அவனுக்கு அவனே சமாதானம் செய்து கொண்டான்.. பிறகு அவனது தூய காதலை காமத்துடன் ஒப்பிட்டால் எப்படி அவனால் எடுத்துக் கொள்ள முடியும்
உனக்கு என் மேல கோவம் ,உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டேன்னு அதான் இன்னைக்கு இப்படி பேசுற, இனி நீ எங்க வேணா போ..யார் கூட வேணாலும் பேசு தயவு செய்து மறுபடியும் நம்ம உண்மையான தாம்பத்தியத்தை கொச்சை படுத்தற மாதிரி பேசாத என்னால தாங்க முடியல என கண்ணில் திரண்ட கண்ணீரை அரும்பாடு பட்டு உள்ளே இழுத்தான்.
அப்படி தான் பேசுவேன்..நீ ஒத்துகிட்டாலும் ஓத்துக்கலனாலும் அது தான் உண்மை.. நேத்து வரைக்கும் நான் உன் கூட அப்படித்தான் வாழ்ந்துட்டு இருந்தேன்..அப்புறம் எப்படி மாத்தி பேச முடியும் என எப்படியாவது அவனை வார்த்தையில் வீழ்த்தி விட வேண்டும் என்ற குறிக்கோளுடன் பேசினாள்.
திருப்பி அவளைக் காயப்படுத்தி விடும் நோக்குடன் அப்போ பல தடவை நீ என்னை தேடி வந்தியே அதுக்கு என்னடி அர்த்தம் அதுக்கு பேரு காதல் இல்லையா..?
இல்ல அதுக்கு பேரு காதல் இல்ல எப்படி நீ வெறும் லஸ்ட்டை காதல்னு உருவகப்படுத்திருக்கியோ அது போல இது என்னோட லஸ்ட். ஏன் பொம்பளைக்கு லஸ்ட் வரக்கூடாதா அது என்ன உங்களுக்கு மட்டும் தான் சொந்தமானதா என்ன..? எங்களுக்கு வரும் போது நாங்க சொன்னா அது தேச குற்றமா..
மனதிற்குள் அவன் வைத்திருந்த காதல் மனைவி கௌசல்யா சில்லு சில்லாக உடைந்து ஒவ்வொரு பிம்பத்திலும் அவனைப் பார்த்து கைகொட்டி சிரித்தாள்.
கொஞ்சமேனும் அவளை காயப்படுத்தி விட வேண்டும் என்ற முனைப்புடன், அது எப்படி டி என்ன பிடிக்கலைன்னு சொல்ற ஒவ்வொரு முறையும் சகிச்சுக்கிட்டேன்னு சொல்ற அப்படி இருக்கும்போது ..என பேசமுடியாமல் திணறியவன்..பற்களை கடித்தபடி
உனக்கு தோணும்போது மட்டும் எப்படி.. இதே மூஞ்சி ,இதே உடம்பு,இதே என அருவருடன் மேற்கொண்டு பேசாமல் பற்களை கடித்து வார்த்தைகளை உள்ளுக்குள் விழுங்கினான்.
அவனின் கேள்வி உள்ளுக்குள் வலித்தாலும் வெளிக்காட்டாமல்.நீயா என் கிட்ட வரும் போதும் சரி நானா உன் கிட்ட வரும் போதும் சரி என் மனசுக்கு புடிச்சவனை அதாவது உன் பாஷைல சொல்லனும்னா விக்கியை கற்பனை பண்ணிப்பேன்..அப்படி அவனை நினைச்சதால தான் ஓரு வருஷமா உன்னோட இருக்க முடியுது.. என்று அவன் அடித்ததை விட ஆயிரம் மடங்கு வலியை திருப்பி கொடுத்தாள்.
ஏய்..எவ்ளோ தைரியம்டி என்கிட்டேயே இப்படி சொல்ல…என அவளை அறைந்தவன் ஆங்காரமாக அவனை முறைத்தபடி நின்றவளை பார்த்து பேசாம இங்கிருந்து போயிடு..கண்ணு முன்னாடி நிக்காத…ஒரு ஆம்பளையை ஒரு புருஷனை இதைவிட அசிங்கமா எந்த பொம்பளையும் கேவலப்படுத்தி விட முடியாது..நகர்ந்து போயிடு
இருக்கற ஆத்திரத்துல அடிச்சே கொன்னுட போறேன்..பயமாயிருக்கு, என அப்படியே தலையில் கை வைத்தபடி கண்மூடி நடந்த நிகழ்வுகளை மறக்க முயற்சித்தான்.
கடினம் தான் முயன்று தான் ஆகவேண்டும். எவ்வளவு சுலபமாக சொல்லிவிட்டாள்..ஒவ்வொரு முறையும் மற்றொருவனை நினைத்துக் கொண்டு என்னுடன் சுகித்துக்கொண்டிருந்தேன் என..எப்படி இப்படி கூற அவளால் முடிந்தது.. நான் அப்படி கூறியிருந்தாள் அவள் தாங்கியிருப்பாளா..கடவுளே.. என் நிலை எந்தவொரு ஆணுக்கும் வர வேண்டாம் என மனதிற்குள் கதறினான்.
அவன் அடித்தது,போகச்சொன்னது ,தன் குடும்பத்தை மட்டம் தட்டியது நண்பர்களை தவறாக பேசியது.அடித்தது என ஓவ்வொன்றாக நினைத்துப்பார்த்தவள் அங்கிருந்து வேகமாக வெளியேறினாள்.இனி வாழ்நாள் முழுவதுமே அவனது முகத்தில் முழிக்கக் கூடாது என்ற முடிவுடன்.
இருந்த கோபத்தில் நடந்தே தாய் வீடு வந்து சேர்ந்தாள்.
அவள் வந்த நேரம் லட்சுமி மட்டுமே இருக்க என்ன கோலம் இது என கதறி விட்டார்.. கணவருடன் சண்டை எனக்கூறவும் எப்படி அதை கையாள்வது என அந்த தாயால் உடனடியாக முடிவு எடுக்க முடியவில்லை.
பிறகு அவளை குளிக்க வைத்து சாப்பிட வைத்து என்ன என பொறுமையாக விசாரிக்க தன்னை சந்தேகப்பட்டு அடுத்த விரட்டி விட்டதாக சொல்லவும் லட்சுமிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
சற்று நேரம் கழித்து வா உன் புருஷனை என்னனு கேட்டுட்டு வரலாம் என்று அழைக்கப் போக மறுத்துவிட்டாள்.
இந்த பிரச்சனையை இதோட விட்டிடுங்கம்மா .
பெருசு பண்ணினா நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று தாயாரை மிரட்ட அவரின் வாய் கப்சிப் என் மூடிக்கொண்டது.
கௌசல்யாவிற்கும் மனம் உறுத்தியது என்ன இருந்தாலும் கணவன் தன்னை நெருங்கும் வேலையில் மற்றொருவனை நினைத்தேன் என்று கூறுவது எவ்வளவு பெரிய தவறு..நானும் மற்றொருவனை நினைந்த தாபத்தில் உன்னிடத்தில் நெருங்கினேன் என்பதெல்லாம் குடும்பப்பெண்கள் கூறும் வார்த்தைகளா ,
தான் பேசியது மன்னிக்கவும் மறக்கவும் முடியாத வார்த்தைகள் என்பது அவளுக்கும் புரிந்திருந்தது இப்பொழுது யாரை அழைத்துச் சென்று கணவனிடம் நியாயம் கேட்டாலும் இவள் சொன்ன வார்த்தைகள் வெளியே வரும், கணவனுக்
குத் தெரியாமல் வெளியே சென்றது வெளிச்சத்திற்கு வரும், பிறகு குடும்பத்தினர் முன்பு அவமானப்பட்டு தலை குனிய வேண்டிவரும் என பயந்து அந்த விஷயத்தில் அதற்குப் பிறகு பேசவே பயந்தாள்.

Last edited: