கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே 45

Akila vaikundam

Moderator
Staff member
45.


கௌசி கூறியவற்றை மெதுமெதுவாக உள்வாங்கியவனுக்கு


ஏசி காருக்குள் வேர்த்து கொட்டியது கௌசி குடுத்த அதிர்ச்சியில் வாகனத்தை எப்பவோ ஓரமாக நிறுத்திவிட்டான்...தலையில் கை வைத்து சாய்ந்து அமர்ந்தவனின் கண்களில் இருந்து கடகடவென கண்ணீர் வடிந்தபடி இருந்தது.



அவனால் இன்னுமே நம்ப முடியவில்லை அவனுடைய கௌசல்யாவா இவ்வளவு பேசினாள்.



கோபமாகவே இருந்தாலும் கூட கணவரிடத்தில் அப்படி ஒரு வார்த்தையை கூறலாமா..


கற்பனை என்றாலும் அந்த இடத்தில் எப்படி நண்பனை வைத்து பார்க்க முடிந்தது .


ச்சீ இவளும் ஓரு பெண்ணா..இவளுடனா இத்தனை காலம் நட்பு பாராட்டி கொண்டிருந்தேன் என்று சில விநாடிகளேனும் அவளை மனதிற்குள் வெறுத்தான்..



அடுத்த நொடியே இவள் தோழி அந்த சூழலின் தாக்கத்தில் வாய்க்கு வந்ததை உளறி விட்டாள்.. தவறுதான் மன்னிக்கவே முடியாத மாபெரும் தவறு. அதற்காக அவளை எப்படி வெறுக்க முடியும்.. அவளை நானே புரிந்து கொள்ளாவிட்டால் வேறு யார் புரிந்து கொள்வது .



அன்று கோபத்தில் பேசியதற்காக தானே இத்தனை ஆண்டுகள் குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருக்கிறாள். தன்னிடமும் வெளிப்படையாக கூற முடியாமல் மற்றவர்களிடமும் சொல்ல முடியாமல் அவள் தவிக்கும் தவிப்பு தெரிந்து கொண்டு நானும் அவளை வதைக்கக் கூடாது..என மனதிற்குள் மீண்டும் மீண்டும் கூற அவனை அவனே திடப்படுத்தினான்.



சாரி டா அன்னைக்கு நான் அந்த வார்த்தையை சொன்னதுக்கு.. அன்னைக்கு அப்படியொரு கோபம் ஆங்காரம் ,அவரை எப்படியாவது காயப்படுத்திடனும்,வேதனைபடுத்திடனும்,அவமானத்துல மறுபடியும் தலைநிமிர்ந்து என்னை பார்த்து எந்த கேள்வியும் கேட்கக் கூடாதுன்னு ஒரு வெறி..



அதுக்காக இன்னைக்கு வரைக்கும் நான் மனசுக்குள்ள கஷ்டப்பட்டு இருக்கேன் உன்னோட சகஜமா பழக முடியல..முகம் பார்த்து பேச முடியல,குற்ற உணர்ச்சி கொல்லுது..



அவர் முகத்தை நேருக்கு நேர் கூட இப்போவரை பாக்க முடியல.எங்க பாத்தாலும் பயந்து ஓடறேன். அன்னைக்கு பேசினெதெல்லாம் இன்னைக்கு நினைச்சி பார்த்தா உடம்பு கூசுது அருவருப்பா இருக்கு.

என்னை மன்னிச்சிடு விக்கி.



நீ எதுக்கு கௌசல்யா என்கிட்ட மன்னிப்பு கேக்குற ..மன்னிப்பு கேட்க வேண்டியது நான் தான்.


உனக்கு திருமணமான உடனே நான் விலகி இருக்கணும் ,அப்படி இல்லையா நீ என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கன்னு தெரிஞ்சுக் முயற்சி பண்ணிருக்கணும்,நீ என்னோட எப்பவும் போல பேசினதால உனக்கு எந்த பிரச்சனையுமே இல்லனு நினைச்சேன். என் சுயநலத்துக்காக எப்பவும் போல உன் கிட்ட பேசிட்டு இருந்திருக்கேன்.





நீ உன் கணவருக்கு தெரியாம தான் என்னோட பேசினனு சத்தியமா தெரியாது..தெரிஞ்சிருந்தா அந்த தப்பை உன்னை செய்ய விட்டிருக்க மாட்டேன்.

நீ என்கிட்ட ஆரம்பத்திலேயே சொல்லி இருந்திருக்கணும் கௌசி தப்பு பண்ணிட்ட..இது தெரியாம நான் வேற உன்னை வெளிய கூட்டிட்டு போய்…ஐய்யோ என்றபடி தலையை பிடித்துக்கொண்டான்.



விக்கி என அவனை தொடப்போக .. ப்ளீஸ் கௌசி டோன்ட்…என்று வேதனையோடு சொன்னவன் நீ அன்னைக்கு என்னோட வரலன்னா உனக்கும் அவருக்கு பிரச்சனை வந்திருக்காதுல்ல..அப்போ உன் அம்மா நினைக்கறது போல மிஸ்டர் ஹரி சொல்லறது போல நான் தான் உன் வாழ்க்கையை கெடுத்துட்டேன்..சாரி கௌசி என புலம்ப ஆரம்பித்தான்.


இல்ல விக்கி நான் அன்னைக்கு வெளிய போகாம இருந்திருந்தா கூட இது நடந்திருக்கும்..இது விதி அதுக்காக உன்னை நீ ப்ளேம் பண்ணிக்காத.


இல்ல நீ என்ன சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியாது..என்னால நம்ம நட்பால உன் வாழ்க்கையில இவ்ளோ பிரச்சினை போயிட்டு இருக்கும் போது மறுபடியும் ஏன் கௌசி என்கிட்டயே வேலைக்கு வந்து..இதால மீண்டும் உன் வாழ்க்கையை கெடுக்கும்னு தெரியாது.


தெரியும் விக்கி..


அப்புறம் ஏன்..நீ இங்க வேலைக்கு வந்த..ஆரம்பத்துல சொல்லியிருந்தா வேற வேலை அரேஞ்ச் பண்ணிருப்பேன்ல…


ம்ப்ச்..சொல்ல தோணலை விக்கி.எனக்கு இனி அவரோட சேர்ந்து வாழற ஆசை இல்லை அப்புறமா எதுக்கு அதை சொல்லனும்.. அதுமில்லாம கூப்பிட்டது நீ அப்புறம் நான் எப்படி வர மாட்டேன்னு சொல்லுவேன்.


உன் கணவரை விட நான் உனக்கு ஸ்பெஷலா.


ம்ம்..


ஏன்..


ஏன்னா நீ என் நண்பன்..படிக்கற காலத்துல என்னை பாதுகாத்தவன்..நட்புக்கான முழு இலக்கணம்.


இருக்கையில் பின் பக்கமாக சாய்ந்து அமர்ந்தவன் கௌசி கால் டாக்ஸில வீட்டுக்கு போறீயா ப்ளீஸ்.


விக்கி நீ ரொம்ப டிஸ்டர்ப்பா இருக்க நீயுமே கார் ஓட்ட வேணாம்.

இரு என்றபடி அவனது டிரைவருக்கு அழைத்தாள்.


அண்ணா எங்க இருக்கீங்க.


இப்போ தான் மா ஹோட்டல்ல இருந்தே கிளம்பறேன்..


தேங்க் காட் அண்ணா..அப்படியே ஹைவேஸ் வாங்கண்ணா..என வைத்தவள் அவர் வரும் வரை ஏன் காருக்குள் அமர வேண்டும் என நினைத்து கதவை திறந்து கீழே இறங்கினாள்.



விக்கி எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான் ஆனால் கண்களை திறக்கவே இல்லை மனதில் பெரிய சூறாவளி அடித்துக் கொண்டிருந்தது.



கௌசியில் வாழ்க்கையை இந்த கோணத்தில் என்றுமே யோசித்தது கூட கிடையாது.

சரி செய்து விடக்கூடிய பிரச்சனை என்றுதான் நினைத்திருந்தான் ஆனால் கௌசி பேசிய வார்த்தைகளின் வீரியம் நினைக்க நினைக்க அவனுக்குள் சுனாமி அலையாய் பிரவாகம் எடுத்தது.


என்னதான் கோபம் என்றாலும் ஒரு பெண் இந்த அளவிற்கா இறங்கி போய் பேசுவாள்.. அவளை அவளே அல்லவா இறக்கி கொண்டாள்..அவள் நடத்தையை கேள்விக்குறி ஆக்கியிருக்கிறாள்..அதை அவனால் மன்னிக்கவே முடியவில்லை தோழியாய் போய்விட்டால் இல்லை என்றால் உன் வாழ்க்கையில் என்னை சம்பந்தப்படுத்த உனக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேட்டிருப்பான்.


உடல் முழுவதும் நெருப்பு போல தகித்தது.



ஆனாலும் மனதில் சிறு குளிர்ச்சியும் இருந்தது.


அவள் குடும்பத்தில் அத்தனை பிரச்சனைகள் இருந்தும் கூட தான் வேலைக்கு அழைத்தவுடன் வந்திருக்கிறாள் தன் கணவனுக்கு பிடிக்காது என்று தெரிந்தும் கூட எனக்காக தெரிந்தே செய்திருக்கிறாள் அந்த நட்பை நினைக்க நினைக்க அவனுக்கு பெருமிதம் உண்டாயிற்று.


யாருக்காகவும் எதற்காகவும் தன்னை விடாமல் பிடித்திருக்கு அவளது நேசம் அவனை நெகிழவைத்தது.



ஏன்னா நீ என நண்பன்…என்று அவள் சற்றுமுன் கூறியது மீண்டும் அவனது காதுகளில் ஒலித்தது.



அவள் எத்தனை பெரிய தவறு செய்திருந்தாலும் இந்த ஒரு வார்த்தைக்காக அவளை மன்னிக்கலாம் அவள் பேசியவற்றை மறக்கலாம் எல்லாம் நடந்து முடிந்து விட்டது அடுத்த அவள் வாழ்க்கையை எப்படி சரி செய்வது? தெரிந்தே தெரியாமலோ அவளது வாழ்க்கைக்குள் நான் சென்றிருக்கிறேன் அவளுடைய பிரிவிற்கு நான் காரணமாக இருக்கிறேன் கணவனின் கடும் கோபத்திற்கு நான் வித்திட்டு இருக்கிறேன்..அதனால் அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பும் என்னுடையது என மனதிற்குள் முடிவெடுத்தபடி கௌசல்யாவை திரும்பிப் பார்த்தான்.


வெளியே நிற்கும் கௌசிகோ மனம் இறுகி கிடந்தது கணவனின் வெறுப்பை சம்பாதித்து விட்டாள்..


இப்பொழுதே நண்பனின் வெறுப்பையும் வாங்கிக் கொண்டாள்..இதற்காக தான் இத்தனை நாட்கள் அவனிடத்தில் கூறாமல் இருந்தது.

என்று இருந்தாலும் நண்பன் இதை தெரிந்து கொண்டு தான் ஆக வேண்டும் என்றோ தெரிய வேண்டியது இன்று தெரிந்து விட்டது அவ்வளவே ..



இனி என்னை போன்று கேவலமாக பேசும் பெண்ணிற்காக அவனது வாழ்க்கை பற்றிய கனவை தள்ளிப் போட்டுக் கொண்டிருக்க மாட்டான் என்று சற்று ஆறுதலும் அடைந்திருந்தாள் எப்படியோ நண்பனின் வாழ்க்கை நன்றாக இருந்தால் அதுவே போதும் என்ற மனநிலை மட்டுமே எப்பொழுதும் இருக்கும்.



கௌசி..உள்ள வா என அழைக்கவும்.


என்னாச்சு விக்கி..


எங்காவது வெளிய போகலாம்னு சொன்னல்ல..கோவில் போகலாமா..


ம்ம்..ஆனா டிரைவர் அண்ணா..


நான் சொல்லிக்கறேன்.. மதியம் சாப்டியா எனக்கேட்டதுமோ அதுவரை இறுகிக் கிடந்த மனநிலையில் இருந்தவள் குலுக்கி அழ ஆரம்பித்து விட்டாள்.



ம்ப்..எதுக்காக அழற..



ஒன்றுமில்லை என்பது போல தலையசைக்க.


விடு எல்லாத்தையும் சரி பண்ணிக்கலாம்..என்றவனின் மனமானது பண்ணிடுவேன் என்றது.


வெளிய போறோம்ல அம்மாகிட்ட சொல்லலையா..


நாக்கை கடித்தவள்..சாரி இதோ என மொபைல் எடுக்கவும்.. பழக்கத்தை மாத்திக்கோ கௌசி நீ குழந்தையில்ல என்றபடி வாகனத்தை திருப்பி மருதமலையை நோக்கி விட்டான்.


அடிவாரத்தில் வாகனத்தை பார்க் செய்தவன் நடந்து போகலாமா எனக்கேட்கவும் மலையை ஒரு முறை பார்த்து விட்டு மறுப்பு சொல்லவில்லை.


பெரியதாக இருவரும் எதுவும் பேசிக்கொள்ள வில்லை அவன் வேகமாக படிகளில் ஏற இவள் சற்று பின் தங்கி சென்றாள்.


ஆனாலும் அவ்வப்போது அவளை திரும்பி பார்த்துக்கொண்டான்..சில நேரம் அவள் வரும் வரை காத்திருந்தான்..யாராவது இடிப்பது போல வரும் பொழுது கேடயமாக அவளின் முன்நின்றான்.. இப்படி அவனின் அக்கறை தானே அவளது பிரச்சனைக்கு மூல காரணம் என்பதையும் உணர்ந்திருந்ததால் என்ன செய்வது என்றும் யோசிக்க தொடங்கியிருந்தான்.



கோவில் வரவும் தரிசன டிக்கெட்டை அவளது கையில் கொடுத்து நீ உள்ள போய்ட்டு வா.. நான் தியான மண்டபத்தில் இருக்கிறேன் என அவள் பதிலை கேட்காமல் சென்றான்.



சிறிது நேரத்தில் தரிசனத்தை முடித்துவிட்டு கையில் பிரசாதத்துடன் அவனைத் தேடி வந்தவள் நெற்றியில் விபதியை வைத்து விட்டு அருகிலேயே அமர்ந்தாள்.


சாமிகிட்ட என்ன வேண்டிகிட்ட..


அடுத்த முறை விக்கி அவன் குடும்பமா உன்னை பாக்க வரனும்னு..


அவனிடத்தில் கனத்த மௌனம்.

ஏதாவது பேசுவான் என அவனது முகத்தை பார்க்க அங்கே விளையாடும் குழந்தைகளையும் அமர்ந்து கதை பேசும் குடும்பங்களையும் வேடிக்கை பார்த்தபடி இருந்தான்.


விக்கி என மெல்ல பேச்சை ஆரம்பித்தாள்


ம்ம்..குரல் மட்டுமே பார்வை அமர்ந்திருக்கும் குடும்பத்தின் மீது.





இப்போ உன் கல்யாணத்தை பத்தி நீ என்ன முடிவு எடுத்திருக்க நான் ஆன்ட்டி கிட்ட பேசட்டுமா.


டைம் ஆகிடுச்சி கிளம்பலாம்..நடக்க தொடங்கினான்.


என் பிரச்சினையை சொன்னா நீ ஒத்துக்கிறேன்னு சொன்ன இப்போ பிடி கொடுக்க மாட்டேங்குற.


பிரச்சனையை சொன்ன ஒத்துக்கிறேன்னு சொல்லல உன் பிரச்சினையை தீர்த்து வச்சிட்டு ஓத்துக்கறேன்னு சொன்னதா நியாபகம்.



அதான் தீர்க்க முடியாதுன்னு தெரிஞ்சிடுச்சே.


கௌசியின் புறம் திரும்பியவன் எதையும் நாம டிசைட் பண்ண முடியாது..என கோவிலை சுட்டி காட்டி கூறியவன் வெயிட் பண்ணு பஸ்ல போறதுக்கு டிக்கெட் வாங்கிட்டு வரேன்.


விக்….


திரும்பி நின்று உதட்டில் கைவைத்து ஷ்ஷ்..பேசாதே என்பது போல ஜாடை செய்து விட்டு டிக்கெட் கியூவில் நின்றான்.


கௌசிக்கு அவனது உதாசீனம் கோபத்தை கிளறி அடித்தது.. முகத்தை கடுகடுவென வைத்தபடி போடா எத்தனை நாளைக்கு இப்படி ஓடறன்னு நானும் பார்க்கிறேன் என்றபடி முகத்தை திருப்பிக்கொண்டாள்.



டிக்கெட்டுடன் திரும்பி வந்தவன் அவள் நின்று தோரணையைக் கண்டு சிரித்து விட்டான் பாவமாகவும் இருந்தது. கோவிலுக்கு வரும் பொழுது இருந்த மனநிலை முற்றிலும் மாறிவிட்டபடியால் மனது இலகுவாக இருந்தது.


ம்கூம்..என செருமியவன் அவள் கவனிப்பதை உணர்ந்து பஸ் வந்தாச்சி..


அவனை திரும்பி பாராமல் பஸ் ஏறி முன் இருக்கையில் அமர்ந்தவள் அவன் அமர நகர்ந்து இடம் விட அவன் சிரித்தபடியே பின் இருக்கையில் சென்று அமர்ந்தான்.


அதன் பிறகு இருவருமே பேசிக் கொள்ளவில்லை வீட்டிற்கு செல்லும் வழியில் விக்கி என்னை ஆபீஸ்ல விட்டிடு ..இன்னும் டைம் ஆகல நான் என்னோட டூவீலர் எடுத்துட்டு வீட்டுக்கு போய்கிறேன் என்று சொல்லவும் பதில் சொல்லாமல் அவள் வீடு இருக்கும் திசையை நோக்கி வாகனத்தை திருப்பினான்.



என்ன பண்ணற நீ வீட்டுக்கு வந்தா தேவையில்லாம மறுபடியும் பிரச்சினை..ஏற்கனவே அம்மாக்கு உன்னை பிடிக்காது ..நீ வீட்டுக்கு வந்தா..என்றபடி சட்டென நாக்கை கடித்து பேச்சை நிறுத்தினாள்.




திரும்பி அவளைப் பார்த்தவன் சொல்லு உன் அம்மாவுக்கு என்னை பிடிக்காது தெரிஞ்சுகிட்டே இன்னைக்கு என்னோட கோவிலுக்கு வந்திருக்க இப்போ என்னை பாத்தா ஏதாவது சொல்லுவாங்க.. உனக்கு கஷ்டமா இருக்கும் சண்டை போடுவ..வேற.


பிளீஸ் டா எதுக்கு தேவையில்லாத இஸ்யூ..


அதை நான் பாத்துக்குறேன் பிடிக்காது என்பதற்காக அப்படியே ஒதுங்கி போக முடியுமா ஏன் பிடிக்கவில்லை எதுக்கு பிடிக்கவில்லை என்கிற காரணத்தை தெரிஞ்சுக்கணும் என்றபடி வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தியவன்



அவளின் பக்க கார்க்கதவை திறந்து விட்டபடி..ம்ம் இறங்கு.



தயங்கிப்படியே இறங்கியவள் .நீ பார்த்து போ என கூறியபடி கதவை திறந்து வீட்டிற்குள் நுழைந்தாள் பின்னாலே வந்தவன் ஆன்டியை கூப்பிடு கொஞ்சம் பேசனும்.


இப்போ எதுக்கு ஏற்கனவே அம்மா கோபத்துல இருப்பாங்க..உன் கூட கோவில் வந்ததுக்கு.. ப்ளீஸ் கிளம்பு இனியொரு நாள் பேசிக்கோ.


ஆன்ட்டி..எங்கிருக்கீங்க..என்றபடியே எழ..


யார் அது எனக்கேட்டபடி லட்சுமி பின்கட்டில் இருந்து உள்ளே வர..



அய்யோ.. அம்மா.. நான் போறேன்.. நல்லா திட்டு வாங்கிட்டு வீட்டுக்கு போ என்று கூறியபடி அவளின் அறைக்கு ஓடினாள்.


விக்கியை கண்டதும் கோபமாக கௌசி..கௌசி எனக்கத்த.



எதுக்காக ஆன்ட்டி அவளை கூப்பிடுறீங்க அவளே உங்களுக்கு பயந்துதான் ரூமுக்குள்ள ஓடறா..


எதுக்காம்..என்ன பண்ணிடுவேன் அவளை..பண்ணறதெல்லாம் பண்ணிட்டு ஓடி போய் ஓளிஞ்சிகிட்டா சரியா போச்சா..வெளிய வா கௌசி.


என்ன பண்ணினா அவ..என்னோட கோவிலுக்கு வந்ததை தப்புனு சொல்லறீங்களா..



சரின்னு சொல்ல வர்றியா அவளுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வயசுல குழந்தை இருக்கா அதை நியாபகம் வச்சிக்கோ.. இப்படி உன் பின்னாடி சுத்தினா அவ வாழ்க்கை எப்படி சரியாகும்..பழசை விட்டு தள்ளு புதுசா எவனாவது வந்து கட்டிப்பானா..



கோவில் போறது அவ்ளோ பெரிய தப்பா ஆன்ட்டி.



உன் கூட வர்றது தப்பு தான்.


அப்போ யார் கூட போனா தப்பில்லை..

அங்கிள்,ராகவன் அண்ணா,கேசவன் அண்ணா எப்படியோ அப்படித்தான் ஆன்ட்டி நண்பன் என்கிற உறவும் அதை இது வரை நானும் மீறினது இல்ல அவளும் மீறினது இல்ல.. இனியும் அப்படி ஆகாது.


****


உங்களுக்கு நீங்க பெத்த பொண்ணு கௌசல்யாவை பத்தியே முழுசா தெரியல அப்படி இருக்கும்போது எங்களோட நட்பை பத்தி எப்படி ஆன்ட்டி தெரியும்.


பொண்ணுக உடல் அளவுல மெச்சூர் ஆகிட்டாளே கல்யாணத்துக்கு தயார்னு நீங்களா நினைச்சிக்கறீங்க..அவ மனரீதியா கல்யாணத்துக்கு தயாரான்னு பாக்குறது இல்ல.



வீட்ல இருக்குற ஆம்பளைக வேணும்னா அதை கவனிக்க தவறலாம் ஆனால் ஒரு அம்மா நீங்க அதை கவனிச்சி இருக்கணும் .



உங்களுக்கு தெரியும் உங்க பொண்ணு கல்யாணத்துக்கு தயாரா இல்லையான்னு பணக்காரன் ஓருத்தன் வந்ததும் எதைப்பற்றியும் யோசிக்காமல் கல்யாணம் பண்ணி கொடுத்துட்டீங்க.அதோட விளைவு எதுல வந்து நிக்கிது பாத்தீங்களா..


எப்படி பேசணும்னு சொல்லி கொடுக்கல யார்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு சொல்லி கொடுக்கல ..தேவையே இல்லாம கண்டிச்சிங்க தேவையே இல்லாம திட்டுனீங்க..அதனால அவ முடிவை கூட அவளால சுயமா எடுக்க முடியல.


கல்யாணம்ங்கற பேர்ல அவ கனவை உடைச்சீங்க அதால இன்னைக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது நீங்களோ இந்த வீட்டு ஆம்பளைங்களோ இல்லை.




இரண்டே பேர் தான் ஒன்னு கௌசல்யா இனியொன்னு ஹரி கிருஷ்ணன் .



ஒரு மெச்சூர்டு இல்லாத பொண்ண கல்யாணம் பண்ணி கொடுத்தது உங்க தப்புனா அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டது அவர் பண்ணின தப்பு.



இப்ப கூட பாருங்க உங்க முன்னாடி நின்னு பேச பயப்படுறா.என்னோட வந்தா உங்களுக்கு பிடிக்காதுன்னு தெரியுது ஆனாலும் வர்றா..ஏன்னா அவ மனசுல இருக்கற குழந்தை தனம்.



சின்ன வயசுல நீங்க எல்லாம் சொல்லிக் கொடுப்பீங்க அந்த வீட்டு குழந்தையோட சேராத அந்த குழந்தை வீட்ல சரியில்லன்னு ஆனாலும் சரின்னு தலையாட்டிட்டு நாங்க அந்த குழந்தையோடு தான் போய் விளையாடுவோம் எங்களுக்கு நல்லது கெட்டது தெரியாது வளர வளர நாங்களா தான் புரிஞ்சுப்போம் இது நல்லது இது கெட்டதுன்னு அந்த நல்லது கெட்டதை கூட புரிஞ்சுக்கிற அளவுக்கு கௌசல்யா இன்னும் வளரல அதான் உண்மை.


அவளுக்கு போய் கல்யாணம் பண்ணி வச்சா எப்படி..அவளோட அந்த குழந்தைத்தனம் அவ கிட்டயே தான் இருக்கு..



அவ ஒரு குழந்தைக்கு அம்மாங்கறது எல்லாம் வெளிப்பார்வைக்கு தான் மனசுக்குள்ள அவ இன்னும் ஒரு குழந்தை தான்.



ஒரு குடும்ப தலைவிக்கு உண்டான மெச்சூர் இன்னும் அவளுக்கு வரல..அதை தெரிஞ்சி கிட்டும் அவளுக்கு நீங்க இரண்டாவது கல்யாணத்துக்கு ரெடி பண்ணிட்டு இருக்கீங்க முதல்ல பொண்ணு மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுட்டு அதுக்கப்புறம் அவளுக்கு எது சரி தப்புங்கிறத முடிவெடுங்க.




முடியலையா அவளோட முடிவை அவகிட்டயே கொடுத்துடுங்க அதை விட்டுட்டு மத்தவங்க மேல கோவத்த காமிச்சு நீங்க பண்ணின தப்பை மறைக்க பாக்காதீங்க.


இப்பவும் சொல்லறேன் கௌசியை அவ போக்குல விட்டீங்கன்னா அவளே கொஞ்ச நாள்ல தனக்கு எது சரி தப்புங்கற முடிவை தெளிவா எடுப்பா அதை விட்டுட்டு மறுபடியும் அவளை கல்யாணம் குடும்ப வாழ்க்கைனு கட்டாயப்படுத்து அவளுக்குள் இருக்கிற குழந்தைத்தனத்தை சாகடிக்கிறதோட இல்லாம அவளையும் நடைபிணமா மாத்திடாதீங்க..அவ பழைய வாழ்க்கைல அப்படியான வாழ்க்கையை தான் வாழ்ந்துட்டு வந்திருக்கா..



அப்புறம் இன்னொரு விஷயத்தை சொல்லிடறேன் ஆன்ட்டி இனிமே என்னால என்னிக்கும் கௌசிக்கு எந்த பிரச்சினையும் வராது அவளோட பாதையில் இருந்து நான் விலகிட்டேன்.

இவ்வளவு நாள் என்னால தான் அவ வாழ்க்கை போச்சுன்னு நீங்க நினைச்சீங்கன்னா அதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்.

அவ வாழ்க்கையில என்ன நடந்ததுன்னு ஆராய்ச்சி பண்ணாம இனிமே அவளுக்கு எது நல்லதுங்கறதை யோசிச்சு முடிவெடுங்க.




எந்த காரணத்தை கொண்டும் அவ அந்தரங்கத்தை பற்றி கேட்காதீங்க.. நீங்க எல்லாரும் கேட்டா எப்படி சொல்லறதுன்னு தான் பயந்து உங்க எல்லார்கிட்ட இருந்தும் ஒதுங்கி போயிட்டு இருக்கா..அந்த பயத்துல தான் தேவையில்லாம கோபபடறது,சண்டை போடறது,கத்தறது, சாப்பிடாம கோவிச்சிகிட்டு போறதுன்னு இருக்கா..


வெளியே சொல்ற மாதிரி இருந்தா அவளே சொல்லி இருப்பாளே ஏன் இத்தனை நாள் யார்கிட்டயும் சொல்லாம இருக்கா சோ அதுக்கு மதிப்பு குடுங்க.



தெரிஞ்சோ தெரியாமலோ என்னை அறியாம அவ குடும்ப வாழ்க்கைக்குள்ள போயிட்டேன். தெரியாம நான் செய்த தப்பை எப்படி இருந்தாலும் சரி படுத்திருவேன் ஆனா நீங்க என்ன பண்ண போறீங்க.




கௌசி உங்களுக்கு மட்டும் இல்ல எனக்கும் தேவதை பெண் அந்த தேவதை மத்தவங்களுக்கு ஆசீர்வாதம் மட்டும் தான் வழங்கணுமே தவிர கண்ணீர் சிந்தக்கூடாது என்பதில் நான் உறுதியா இருக்கேன் நீங்களும் அப்படியே இருப்பீங்கன்னு நம்புறேன்.



ஓகே ஆன்ட்டி நான் போறேன் இனிமே உங்கள பார்ப்பேனான்னு எனக்கு தெரியாது.



இனிமேல் திருமதி கௌசல்யா ஹரிகிருஷ்ணனோட வாழ்க்கைக்குள்ள இந்த விக்னேஸ்வரன் என்னைக்கும் கிடையாது நீங்க பயமில்லாமல் இருக்கலாம்.



நீங்க அனுமதி குடுத்தா கௌசியை கடைசியா ஒரு முறை பாத்துட்டு போவேன் என்று சொல்லவும் வழி விட்டு நகர்ந்தார்.



கதவை தட்டியவன் கௌசி வெளிய வா..


தாயார் திட்ட போகிறார் என பயந்த படியே தலையை மட்டும் எட்டிப் பார்த்தவள் விக்கி இருக்கவும் தயங்கியபடியே வெளியே வர அவளின் கைப்பிடித்து தாயாரின் அருகில் நிறுத்தியவன் கௌசி ஆன்ட்டி கிட்ட நான் பேசியிருக்கேன் இனிமே உன்னை திட்ட மாட்டாங்க..நீ உன் கோபம் விளையாட்டுத்தனம் எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சிட்டு ஒழுங்கா வேலை பார்க்கணும்.



நீ ஆசைப்பட்ட மாதிரி கார் வீடு எல்லாமே உனக்கு சாத்தியப்படும்.


எங்க போனாலும் யார்கிட்ட பேசினாலும் மறக்காம அம்மாகிட்ட சொல்லணும் இல்ல வீட்ல வேற யார்கிட்டயாவது சொல்லணும் சொல்லாம போற அந்த கெட்ட பழக்கம் இனிமே உனக்கு வேணாம் என்றவன் சற்று உணர்ச்சி வசப்பட்டு அவளின் உச்சந் தலையில் கை வைத்து அழுக்கியவன்..வேகமாக அங்கிருந்து கிளம்பினான்.



கண்ணில் இருந்து பொங்கிய கண்ணீரை யாருக்கும் தெரியாத படி துடைத்துக்கொண்டே செல்ல.. என்னாச்சு இவனுக்கு என்னென்னமோ உளறிட்டு போறான் என்றபடி கௌசல்யா வாய்க்குள் முணுமுணுக்க.. இந்தப் பிள்ளையையா இத்தனை நாள் நம்ம மனசுக்குள்ள திட்டிக்கிட்டு இருந்தோம் என்ற குற்ற உணர்ச்சியில் வாயடைத்து போய் நின்றார் லட்சுமி.
 
Last edited:
Top