47.
சோ உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா..ரைட் என எதிரில் இருப்பவனை எரிச்சலுடன் பார்த்தபடி கேட்டான்.
விக்கி ஆழமாக பார்த்தானே தவிர பதில் கூற வில்லை.
சரி அதான் எல்லாம் தெரிஞ்சிட்டல்ல பிறகெதுக்கு இங்க வந்த.என்னை கடுப்படிக்கவா.
****
ஓஓஓ மறந்துட்டேன்...அவ எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டா நான் டிவோர்ஸ் தர்றதா சொல்லியிருந்தேன்ல..அதை நியாபகப் படுத்த வந்தியா.இந்த ஹரி வார்த்தை தவற மாட்டான் பேப்பர்ஸ் ரெடி பண்ணு கையெழுத்து போட்டு தர்றேன் என உணர்ச்சியற்ற குரல் வெளிவந்தது.
நான் அதுக்காக மட்டும் வரலை.
பிறகு எதுக்காக.ஓஓ ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறீங்களா,அதுக்காக அழைக்க வந்நிருக்க, நான் ரெண்டு பேருக்கும் அட்சதை தூவி ஆசிர்வாதம் பண்ணனுமா என கொடுரமாக கேட்டான்.
பல்லை கடித்து கோபத்தை கட்டுபடுத்திய விக்கி.. என்னை காயப்படுத்துறதா நெனச்சு உங்களோட இயல்பை நீங்க இழந்து கிட்டு இருக்கீங்க மிஸ்டர் ஹரிகிருஷ்ணன்.
அப்போ இருந்து இப்போ வரை உன்னோட சுத்திகிட்டு இருக்கறதுக்கு வேற என்ன அர்த்தம்…என்று எப்படியேனும் காயப்படுத்தி விட முனைந்தான்.
நல்ல நண்பர்கள்னு அர்த்தம்.
மண்ணாங்கட்டி.. எனக்கு வேலையிருக்கு கிளம்பு.
எதுக்காக என் முகத்தை இப்படி பாக்கற எனக்கு எரிச்சல் ஆகுது.. ப்ளீஸ் கெட் அவுட்..
***
டேய் உனக்கு என்னடா வேணும்.
உங்க நிம்மதி..கௌசியோட சந்தோஷம் ரெண்டுமே நீங்க நினைச்சா தரமுடியும்.
ஹா..என அலட்சியமாக என் நிம்மதி அதை நீ பறிச்சி பல நாள் ஆகிடுச்சி கௌசியோட சந்தோஷம் அதுவும் நீ தான்.
அப்போ ரெண்டையும் நான் திருப்பு தர்றதா சொன்னா..
நீ பிச்சைபோடற இடத்திலும் இல்ல அதை வாங்கற இடத்தில் நானும் இல்ல.
என் நிம்மதி அவ சந்தோஷம் எப்பவும் எங்களோடது.. யாரும் யாசகம் தரவேண்டியது இல்லை.
அப்போ கௌசி இனிமே சந்தோஷமா இருப்பா அப்படின்னு சொல்ல வர்றீங்க
ஹேய் உன் பிரச்சனை என்ன.. என் குடும்பத்துக்குள்ள என்ன நடந்தது என்று ரொம்ப நல்லா தெரியும் அப்படி இருந்தும் எப்படி உன்னால எதுவுமே நடக்காத மாதிரி பேச முடியுது.என் பிரச்சனையோட
ஆரம்பப் புள்ளியும் நீதான் மையப்புள்ளியும் நீதான் முற்று புள்ளையும் நீதான்..
இல்ல ஆரம்ப புள்ளி மட்டும் தான் என்னையறியாமல் நான் வச்சது மையப்புள்ளி முற்றுப்புள்ளி நீங்களா வச்சுக்கிட்டது.
நான் வச்ச புள்ளியை அழிக்கதான் முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன் நீங்க வெச்ச புள்ளையை அழிக்கறது உங்க கைல தான்.
என்னடா உன் பிரச்சனை என்பது போல ஹரி விக்கியை பார்த்து வைத்தான்.
நீங்க ரொம்ப நல்லவர் அண்ணா..நேர்மையானவரும் கூட.
வாட் . அண்ணா..?என வித்யாசமாக பார்த்தான்.
யெஸ்.. அண்ணா . எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் இந்த வார்த்தையை நான் உங்களை பாத்து முத தடவையே சொல்லிருந்தேன்னா உங்களுக்கு எதுவுமே தப்பா தெரிஞ்சி இருக்காதுன்னு நினைக்கிறேன்.
தப்பு என்னோடது தான் ..உங்க கல்யாணம் சமயத்துல அவ கூட மட்டுமே பேசிட்டு டான்ஸ் பண்ணிட்டு ஜாலியா இருந்துட்டு போயிட்டோம் உங்ககிட்ட நாங்க பேசி இருக்கணும் உங்களுக்கு எங்களை புரிய வைத்து இருக்கணும் அப்போ காலேஜ் முடிச்ச டைம் இல்லையா அதான் பக்குவம் இல்லை.
உங்களோட நான் இணக்கமாக பழகி இருந்தேன்னா கௌசியோட பேசினது உங்களுக்கு விகல்பமாக தெரிந்திருக்காது.
அப்படியே தெரிந்திருந்தாலும் நீங்க வெளிப்படையா என்கிட்ட சொல்லியிருப்பீங்க..அந்த தயக்கத்துக்கு காரணம் என் சுயநலம்.கௌசி நட்பு மட்டும் போதும் வேற எதுவும் வேணாம்னு விட்டது.அதோட விளைவு நட்புக்குள்ள குடும்பத்துக்குள்ள விரிசல்.
அப்புறம் உங்க நேர்மை..அது என்னை வியக்க வச்சிடுச்சி..
****
நான் சொல்லறதை நீங்க நம்பவில்லையா? ஒரு சின்ன உதாரணம் சொல்றேன் அன்னைக்கு நாம ரெண்டு பேருமே மாத்தி மாத்தி சேலஞ்ச் பண்ணிக்கிட்டோம்.
கௌசி என்கிட்ட பர்சனல் சொல்லிட்டா டிவோர்ஸ் கொடுக்கறதா ஒத்துக்கிட்டீங்க அதே சமயம் சொல்லலைன்னா நீங்க சொல்றபடி நான் கேட்கணும்னு.
அவளும் சொன்னா..அப்படி பார்த்தா யெஸ் நான் ஜெயிச்சிட்டேன். ஆனா நான் சொன்ன நாளிலேயோ, நீங்க குடுத்த காலக்கெடுக்குள்ளயோ அவ சொல்லல..அப்படி பார்த்தா நான் தோத்துட்டேன்..ஆனா நீங்க உங்க தோல்வியை தயக்கம் இல்லாம ஓத்துக்கறீங்க. இதை விட ஒரு நல்ல மனிதரை என் தோழி கிட்ட இருந்து பிரிக்க நான் முயற்சி செய்வேனா சொல்லுங்க.
நான் இங்க வர்ற வரும்போது உண்மையிலேயே கௌசிக்கு டிவோர்ஸ் வாங்கி கொடுக்கிற ஐடியால தான் வந்தேன். ஆனா உங்களோட நேர்மை என ஸ்தம்பிக்க வச்சிடுச்சி .
அவளை ஹாண்டில் பண்றதுக்கு சரியான ஆள் நீங்க தான் அண்ணா சோ அவளுக்கு டிவோர்ஸ் தர வேண்டாம். நான் நம்மளோட பந்தயத்தில் தோற்று போயிட்டேன் நீங்க சொல்றபடி நீங்க எதிர்பார்த்தபடி நீங்க ஆசைப்பட்டபடி நான் செய்யப் போறேன்.
போறதுக்கு முன்னாடி ஒன்னே ஒன்னு மட்டும் உரிமையா சொல்லிட்டு போறேன்.. கௌசிக்கு எது சரின்னு உங்க மனசுக்கு படுதோ அதை நீங்க செய்ங்க ஆனா அவளை கஷ்டப்படுத்தாம காயப்படுத்தாமல்.
அடுத்ததா உங்க தனிப்பட்ட வாழ்க்கை பற்றி இப்போ பேசுறது தப்புதான் ஆனாலும் அண்ணனு சொல்லிட்டேன் அந்த உரிமைல ஒரு தம்பியா அண்ணனுக்கு சில விஷயங்களை சொல்றது தப்பு இல்லன்னு நினைக்கிறேன்.
உங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே மனசுக்குள்ள ஓரு தாழ்வு மனப்பான்மை இருக்கு. பயம் இருக்கு அதான் உங்களை இப்படி எல்லாம் யோசிக்க வைக்குது.
உண்மையான காதலுக்கு வயசு ஒரு தடை இல்லை உங்களுக்கும் கௌசல்யாக்கும் பெருசா வயசு வித்தியாசம் கிடையாது முதல்ல அதை நீங்க நம்புங்க அதை நம்ப ஆரம்பிச்சீங்கனாலே தானாவே உங்களுக்கு கௌசல்யா கிட்ட இருக்கற தயக்கம் குறைந்து இயல்பா பேச ஆரம்பச்சிடுவீங்க.
இடைவெளி குறையும் போது ஃப்ரீயா அவளோட பழகுவீங்க. அடுத்தது எப்பவுமே அவளுக்கு நம்மளை பிடிக்கலையோங்கற எண்ணத்தை விடுங்க..
நீங்க எந்த தப்பும் பண்ணல. உண்மையா ஒரு பொண்ண பாத்தீங்க புடிச்சது காதலிச்சீங்க அவளை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு என்ன பண்ணனுமோ அதை செஞ்சு கல்யாணம் பண்ணிட்டீங்க அவ்வளவுதான் அவ்வளவே தான்.
அதை கௌசிக்கு புரிய வைக்க தவறிவிட்டீங்க திருமணமான உடனேயே நீங்க எல்லாத்தையும் வெளிப்படையா அவ கிட்ட சொல்லி இருக்கணும் அப்படி சொல்லி இருந்தீங்கன்னா அவளுக்கா தெரிய வரும்போது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்காது திடீர்னு அந்த விஷயம் அவளுக்கு தெரியும் போது அந்த அதிர்ச்சியில் என்ன பண்றதுன்னு அவளுக்கு தெரியல அவளை ஒரு வட்டத்துக்குள்ள குறுக்கிக்கிட்டா அது நாளடைவில் உங்களுக்குள் ஒரு விரிசலை உருவாக்கிடுச்சு.
நீங்களும் அவ மனசை புரிஞ்சிக்காம விட்டுட்டீங்க.ஏன் விலகறான்னு காரணம் தேடியிருந்தா அந்த மோசமான நாளும் வந்திருக்காது.. பிரிவும் வந்திருக்காது.
அவ என்ன காரணத்துக்காக உங்களைத் தவிர்த்து என்னோட அதிகமா பேசினாங்கிற விஷயம் எனக்கு தெரியாது. அதேசமயம் உங்களுக்கு தெரியாம என்னோட வந்தாங்கிற விஷயம் அவளே சொன்ன பிறகுதான் எனக்கே தெரியும்.
அன்னைக்கு நடந்த ஒரு விஷயம் சாதாரணமானது உங்களுக்கு தெரிந்திருக்கும் தெரிந்தாலும் பெருசா கண்டுக்க மாட்டீங்க என்கிற சிறுபிள்ளைத்தனமா மனநிலைல தான் அவளை வெளியே கூட்டிட்டு போனது.
அந்த இடத்துக்கு நீங்களே வருவீங்கன்னு எதிர்பாக்கல..
நீங்க கௌசியை அந்த இடத்துல பார்த்ததும் அவளுக்கு தெரியல..தெரிஞ்சிருந்தா அன்னைக்கு அப்படி ஒரு கசப்பான நிகழ்வு நடந்திருக்காது.
உங்களுக்கு தெரியாத ஒரு விஷயம் கண்டிப்பா கௌசி சொல்லி இருக்க மாட்டா.. இனிமேலும் சொல்ல மாட்டா.
அவன் பேசுவதை லட்ஜையில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தவன் என்ன என்பது போல பார்த்தான்.
ஹரியை பொருத்தவரைக்கும் அவன் பார்வையில் என்றுமே விக்கி சிறு பையன் தான் ஏதோ ஒன்றை சொல்ல வருகிறான் அப்படி என்னதான் சொல்லுவானோ சொல்லிவிட்டு போகட்டும் என்ற மனநீதிகள் தான் கேட்டுக் கொண்டிருந்தான் கடைசியாக அவன் சொன்னதும் ஆர்வமுடன் கவனித்தான்.
அந்த நாள் தான் முதமுதலா உங்க மேல இருக்கற காதலை அவ உணர்ந்தா..மனசு முழுக்க காதலை மட்டுமே வச்சிகிட்டு உங்களை பார்க்க ஓடி வந்தா..அந்த நிமிஷம் அவ மனசு முழுக்க நீங்க மட்டும் தான் இருந்தீங்க..எங்களையெல்லாம் மறந்துட்டு சொல்லிக்காம சந்தோஷமா வந்தா..அவ்ளோ காதல்.. ம்ப்ச்.
அவ ஒரு குழந்தை .அதை நான் உங்களுக்கு சொல்லி புரிய வைக்கணும்னு அவசியம் இல்ல..உங்களுக்கே தெரியும் அந்த குழந்தைக்கு எப்படி ஹேண்டில் பண்ணனும்னு இனியாவது கத்துக்கோங்க..முடியலையா அவளை அவ போக்குல விட்டிடுங்க.என்றவன் சில நேரம் மௌனமாக ஹரியை பார்த்தான்.
பிறகு சாரி அண்ணா உங்க வாழ்க்கையில நடந்த எல்லா குழப்பத்திற்கும் நான் தான் மூதல் மூல காரணமாக இருந்திருக்கேன் அதுக்காக என்ன மன்னிச்சிடுங்க எதையும் நான் தெரிஞ்சு செய்யல எல்லாமே என்னை மீறி தானா நடந்த செயல் .
இவ்வளவு நேரம் நான் பேசுறதை பொறுமையா கேட்டு இருக்கீங்க அதுக்காக பெரிய நன்றி..நீங்க பெரியவங்க நான் சரியா பேசினேனேனா இல்லையான்னு கூட தெரியல.
ஒருவேளை தவறா பேசி உங்களை காயப்படுத்தி இருந்தா மனதார மன்னிப்பு கேட்டுக்கறேன்…மன்னித்துவிடுங்கள் இனிமே உங்களுக்கும் கௌசிக்கும் நடுவுல நான் வரமாட்டேன்.
ஒருவேளை அவ மனசு மாறி வந்தா பழசு எதையும் சொல்லி காட்டாமல் இதே பெருந்தன்மையோட அவளை ஏத்துக்கோங்க.
ஒருவேளை அவ வர தயங்கினா உங்க ஈகோவை தூக்கி போட்டுட்டு அவளை கூப்பிட்டுட்டு வாங்க .
இது ரெண்டுமே சரியா வரும்னு தோணலையா..
அப்படியே விட்டிடுங்க..யாரும் யாரையும் காயப்படுத்தாம சந்தோஷமா அவங்கவங்க பாதையில போங்க, தனியா வாழ்க்கையே அமைச்சுக்கோங்க சந்தோஷமா இருங்க ஆனா ஒரு விஷயத்தை மறந்துடாதீங்க உங்க ரெண்டு பேருக்கு ஒரு பொண்ணு இருக்கா உங்க ரெண்டு பேரோட சுயநலத்தால அந்த குழந்தையோட வாழ்க்கை பாதிக்க கூடாது..என பேசி முடித்தவன் ஆழ மூச்சை இழுத்து விட்டபடி
தேங்க்ஸ் பார் எவ்ரிதிங் அண்ணா. டேக் கேர் என்றபடி வேகமாக நடந்தான்.
அவன் பேசியது, அறிவுரை கூறியது எதுவுமே கருத்தில் இல்லை..கௌசி காதலோடு அவனை காண ஒடிவந்திருக்கிறாள்..அது மட்டுமே மீண்டும் மீண்டும் நியாபகத்துக்கு வந்தது.
அன்றைய நாளை கசப்புடன் நினைவுகூர்ந்தான்..அய்யோ அய்யோ நான் என்னலாம் கற்பனை பண்ணிக்கிட்டு வந்தேன் இப்படி என் நம்பிக்கையை உடைச்சிட்டீங்களே என்று கௌசல்யா கதறியது நியாபகம் வந்தது.
ம்ப் என்று தலையை குலுக்கியவன் நினையாதே மனமே நினையாதே அதை மறந்து தொலை என்று மனதை ஒரு நிலைப் படுத்த முயன்றான்.
பிறகு முடிவெடுத்தவனாக தங்கையை அழைத்தான்.
பொதுவான நல விசாரிப்புகளுக்கு பிறகு அங்க உன் நாத்தனார் என்ன சொல்லறா எனக்கேட்டான்.
உன் பொண்டாட்டி தானே எல்லார் நிம்மதியும் கேடுத்துட்டு அவ ரொம்ப சந்தோஷமா சுத்திகிட்டு இருக்கா..பாவம் அத்தையும் மாமாவும் இப்போலாம் சரியா தூங்கறதும் இல்ல சாப்பிடறதும் இல்ல..பாக்கவே பாவமா இருக்கா.. என்றவள் தயங்கியபடியே அண்ணா ஒன்னு சொன்னா கோவிச்சிக்க மாட்டியே..
சொல்லு ஜானு.
தப்பா எடுத்துக்காத என்னடா தங்கச்சியே இப்படி சொல்றாளேன்னு சங்கடபடாத ..நான் உன் நல்லதுக்காக தான் சொல்றேன்.
எதா இருந்தாலும் வெளிப்படையா சொல்லு ஜானு எல்லாத்தையும் ஏத்துக்கிற பக்குவம் இப்போ எனக்கு வந்துருச்சு.
அது வந்து அண்ணா என இழுத்தவள் மிகவும் தயங்கியபடியே நீ பேசாம கௌசல்யாக்கு டிவோர்ஸ் குடுத்துட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோ..
நானே நல்ல பொண்ணா பாக்குறேன். என்னைப் பற்றி கவலைப்படாத உண்மையிலேயே என் கணவர் என்னை நேசிச்சா அவர் தங்கையோட வாழ்க்கை போகுதுன்னு என் வாழ்க்கையை கேள்விக்குறியாக்க மாட்டார் இதால என்னோட குடும்பத்துக்குள்ள பிரச்சனை வராதுன்னு நம்புறேன் அப்படியே வந்தாலும் அதை நான் பேஸ் பண்ணிக்கறேன்.
உன் குணத்துக்கு எப்பவும் அவ செட் ஆக மாட்டா அண்ணா .அவளுக்கு உன் கூட சேர்ந்து வாழணும்னு ஒரு பர்சன்டேஜ் கூட ஆசை கிடையாது அப்படி இருக்கும்போது எதுக்காக அண்ணா உன் வாழ்க்கையை நீ தொலைச்சிக்கற..
சில சமயம் உன் மேல இருக்குற கோவத்தை அனு மேல காட்டறா.. நானும் அத்தையும் இல்லனா அந்த குழந்தை ரொம்ப பாவம் தெரியுமா. அவனாள இங்க இருக்குற எல்லாருக்குமே தேவையில்லாத மன உளைச்சல்.
முதல்ல இவ குணம் தெரியாம என் மாமியார் மேல கோபபட்டேன்..அவங்களை திட்டினா இவ சண்டைக்கு வருவா அது மூலமா புத்தி சொல்லலாம்னு காத்திருந்தேன்.
ஆனா இப்போ அவ மாமியார் கிட்ட கத்தறதை பாக்கும் போது நாமளும் ஏன் அவங்களை பேசனும்னு விட்டுட்டேன்.
அவங்களை பாக்கவே பாவமா இருக்கு தனியா இருக்கும்போதெல்லாம் அழுதுகிட்டே இருக்காங்க. இதால கேசவன் ரொம்ப அப்செட் ஆகுறாரு அந்த சமயத்துல அவர் கிட்ட பேசுவும் நெருங்கவும் எனக்கு ரொம்ப பயமா இருக்கு அண்ணா,கௌசி வாழ்க்கைக்கு ஒரு தெளிவு கிடைச்சா இங்க எல்லாமே சரியாயிடும் ப்ளீஸ் அண்ணா..கன்சிடர் பண்ணு..
தங்கையின் பேச்சில் இருந்த சுயநலம் ஹரியை புன்னகைக்க வைத்தது.
எதிர்முனையில் மெல்லிய சிரிப்பொலி கேட்கவும்..எதுக்கு அண்ணா சிரிக்கிற .
ஒரு தங்கையா எனக்கு நீ நல்லது சொல்ற ஆனா ஒரு நாத்தனாரா உன் கணவரோட தங்கைக்கு நீ சொல்றது சரியா. நான் டிவோர்ஸ் கொடுத்தா அவ உடனே மறுகல்யாணம் பண்ணிப்பாளா.? ஒருவேளை கொஞ்ச நாள்ல அவ மனசு மாறி கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு வச்சுக்கலாம் வரப்போறவன் என் பொண்ணை அவனோட பொண்ணா பார்த்துப்பானா.?அவளை நல்லபடியா வளர்த்துவானா.
இல்ல நான் டிவோர்ஸ் கொடுத்தா நீங்க எல்லாரும் சேர்ந்து அனுவை என்கிட்ட கொடுத்துடுவிங்களா,அதுக்கு கௌசி ஓத்துப்பாளா.. இத்தனை விஷயங்கள் இதுக்குள்ள இருக்கும் போது எப்படி எடுத்தோம் கவுத்தோம்னு டிவோர்ஸ் கொடுக்க முடியும்..யோசிக்கனும் ஜானு..நிறையா யோசிக்கனும்.
கல்யாணமும் சரி பிரிவும் சரி எதுவும் சுலபம் கிடையாது அவளை காத்திருந்து கல்யாணம் பண்ணி இருக்கேன் அப்படி இருக்கும்போது ஒரே நிமிஷத்துல எப்படி விட முடியும் நான் எடுக்குற எல்லா முடிவும் கௌசல்யாவை மட்டும் பாதிக்காது .அனுவையும் சேர்த்து பாதிக்கும் இவ்வளவு நாள் எப்படியோ இனிமே நான் எடுக்க போற முடிவு ரொம்ப சரியானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
நீ இனிமே இந்த அண்ணன பத்தி கவலைப்படவதை விட்டுவிட்டு உன் குடும்பத்தை மட்டும் பாரு உன் நாத்தனார் பத்தின கவலையும் அவ பொண்ணை பற்றிய கவலையும் நான் பாத்துக்குறேன்.
ஹரியின் வெட்டித்தறித்த பேச்சில் அதிர்ந்த ஜானு அண்ணா என கன்கலங்க கூப்பிடவும்
மனசுல தோணினதை சொன்னேன் ஜானு உன்னை காயப்படுத்த சொல்லல..எனிவே நீ சொன்னதை உன் ஆங்கிள்ல இருந்தும் யோசிச்சி பாக்குறேன் இப்போ வைக்கிறேன் என்றபடி வைத்து விட்டான்.
தான் சொல்ல வந்த விஷயத்தை அண்ணன் தவறாக புரிந்து கொண்டு விட்டானே என்று கவலையில் ஜானு அசையாமல் மொபைல் போனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
அதன் பிறகான நாட்கள் மிக மெதுவாக செல்ல ஆரம்பித்தது முதல் நாள் கௌசியிடம் பேசிய பிறகு விக்கியை அவளால் பார்க்கவே முடியவில்லை.
பணிபுரியும் பெண் தோழிகளிடம் விசாரித்தாள்..அலுவலகத்தில் விசாரித்தாள்..அவன் எங்கு சென்றிருக்கிறான் என்ற தகவல்களை பெறவே முடியவில்லை.
வாரம் மாதம் ஆயிற்று அவனது அலைபேசிக்கு அழைத்தால் சுவிட்ச் ஆஃப் என வந்தது.
இவள் அனுப்பும் வாட்ஸ்அப் மெசேஜ்கள் அனைத்துமே அங்கு சேராமலே கிடந்தது கி
ட்டத்தட்ட கௌசிக்கு பைத்தியம் பிடிக்கும் நிலை
கடைசியாக ராமநாதனின் கேட்டு விடலாம் என முடிவு செய்து தயங்கியபடி அவரின் முன்பு சென்றாள்.

Last edited: