கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே 49

Akila vaikundam

Moderator
Staff member
49.

மடியில் உறங்கும் மகளை அணைத்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தவள் கதவு தட்டும் ஒலி கேட்டு திடுக்கிட்டு கண்விழித்தாள்.

சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா எனக்கேட்டபடி ஹரி நின்றிருந்தான்.

கையில் லேப் டாப் பேக்குடன் ஃபுல் பார்மல் உடையில் இருந்தவனின் தோற்றம் அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டான்‌என்பதை பறைசாற்றியது.

சாரி..கண் அசந்துட்டேன் என மகளை அணைத்தவாறே எழ இருந்த கௌசியை பரவால்ல உட்காரு என்றவன் யோசனையாக ஏன் அம்முவை கைல வச்சிருக்க பெட்ல படுக்க வைக்கலாம்ல..

அவளுக்கு இன்னும் இங்க செட் ஆவல நைட்டெல்லாம் தூங்கல இப்போ தான் தூங்கறா பெட்ல போட்டு முழிச்சிட்டா மறுபடியும் அவளை சமாளிக்க முடியாது.

ஏன்..ஏன் செட் ஆவல வந்து ஓரு மாசம் ஆகிடுச்சில்ல..

அவ குழந்தை அதும் என் அம்மா கூடவே இருந்தா தீடிர்னு இடம் மாறினா அவ எப்படி ஏத்துப்பா கொஞ்ச நாள் போனா மறந்திடுவா..

உன்னை மாதிரியா எனக்கேட்டவன் அவளின் முகமாறுதலை கவனித்துவிட்டு நான் கேட்டது இப்போ நீ அட்ஜெஸ்ட் பண்ணிட்டு இருக்கியே அது போலவான்னு என திருத்தினான்.

பதில் சொல்லத் தெரியாமல் திருதிருக்க விழிக்க நல்ல வேலையாக அவளின் மகள் சிறு அசைவை காட்டி காப்பாற்றி விட்டாள்.

தூக்கி நெஞ்சோடு அணைத்த படி தட்டிக்கொடுத்தவள் நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்க வில்லை விரும்பி தான் இருக்கேன்.. எப்படி உங்களை நம்பவைக்கறது என மென் குரலில் கேட்டாலும் உறுதியான குரலில் அவனைப் பார்த்து கேட்டான்.


பதில் தெரியாது என்பது போல தோள்களை குலுக்கி கொண்டவன் நான் ஆபீஸ் போயிட்டு வரேன் சரோஜாம்மா சமைச்சு வச்சுட்டாங்க மேல் வேலைக்கு இன்னும் ஆள் கிடைக்கல எப்படியும் ஒரு வாரத்துல கிடைச்சிடுவாங்க..நீ டோர் லாக் பண்ணிட்டு ரெஸ்ட் எடு.. அப்புறம் என்று தயங்கியவன் இனி அனு தூங்காம தொந்தரவு குடுத்தா தாராளமா என்னை எழுப்பலாம் நீ மட்டும் சிரமப் படனும்னு எந்த கட்டாயமும் இல்ல..அவ எனக்கும் பொண்ணு தான் என்றபடி வெளியேறினான்.


திரும்பிச் சென்றவனின் முதுகை சலனமின்றி பார்த்தவள் பெருமூச்சை விட்டபடி மகளை பெட்டில் படுக்க வைத்து அவளும் படுத்தபடி அணைத்துக் கொண்டாள். கண்களில் இருந்து மெல்லிய கண்ணீர் கோடு தலையணையை நனைக்க ஆரம்பித்தது.


இரவு முழுவதும் மகள் தூங்கவே இல்லை அவளின் பாட்டியை கேட்டு அழுது கொண்டே இருந்தாள்.


கணவன் பக்கத்து அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார் குழந்தையை சமாதானப்படுத்த வழி தெரியாமல் முதுகில் ஒரு அடி போட்டு மிரட்டி தான் தூங்க வைத்தது.கேவியபடியே தூங்கும் மகளின் முதுகை மெதுவாக நீவி விட்டவள்.. ஏன் குட்டிமா இந்த பாவி வயித்துல வந்து பிறந்து இவ்வளவு கஷ்டம் அனுபவிக்கிற ..யாருடைய அன்புமே உனக்கு முழுசா கிடைக்காத மாதிரி இந்த அம்மா உன்னை கொடுமை படுத்துக்கிட்டு இருக்கேன்..என மனதிற்குள் கலங்கினாள்.

பாவம் குழந்தை என்ன செய்யும் இத்தனை வயது வந்த நம்மாளே ஒரு சிலரை சட்டென்று விட முடியவில்லை இத்தனை வருடம் கைக்குள் வைத்து வளர்த்த பாட்டியை ஒரே நாளில் மறந்துவிடு என்று சொன்னால் குழந்தையால் எப்படி மறக்க முடியும்.


விக்கியின் கடிதம் அவளது கைக்கு வந்தவுடன் பயத்துடன் தான் அதைப் பிரித்து படித்தாள்..


அதை படிக்கும் வரை இருந்த உறுதி படித்த பின்பு காணாமல் போயிட்டு.


அதில் இருந்த ஒவ்வொரு வார்த்தைகளும் அந்த அளவிற்கு அழுத்தமாக இருந்தது.
இதற்கு மேலும் தன்னுடைய சுயநலத்திற்காக இங்கே இருப்பது சரியில்லை என்று நினைத்தவள்.
உடனடியாக குழந்தையை தூக்கிக்கொண்டு கிளம்பி விட்டாள்.


தலையணைக்கடியில் இருந்த கடிதத்தை மீண்டும் ஒரு முறை எடுத்துப் படிக்கத் தொடங்கினாள்..எப்படி முதல் முறை படிக்கும் பொழுது கண்ணீர் சிந்தினாளோ அதே அளவிற்கான வலி இப்பொழுதும் இருந்தது.


அன்பு கௌசிக்கு நண்பன் எழுதிக்கொள்வது.. இந்த கடிதத்தை நீ படிக்கிறாய் என்றால் நான் ரொம்ப தூரத்தில் இருக்கேன் என்று அர்த்தம்.


என்னை தொடர்பு கொள்ளவே முடியாத இடத்தில் இருக்கிறேன் என்று அர்த்தம்.

கண்டிப்பா எனக்கு தேடி இருப்பாய் ,மிஸ் பண்ணி இருப்பாய்,எனக்கும் அதேதான் ஆனால் சில விஷயங்களை காலப்போக்கில் நாம ஏத்துக்கிட்டு தான் ஆகணும் .அது போல தான் நம்முடைய பிரிவும்.


இந்த பிரிவு தற்காலிகமானதா இல்ல நிரந்தரமானதாக என்று எனக்கு தெரியாது ஆனால் காலம் நாம் பிரிந்து இருப்பதை விரும்புகிறது..அதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டேன்.
நீயும் அதை முழுமனதாக ஏற்றுக்கொள்.

சில வருடங்களுக்கு முன்னால நான் பார்த்த ஒரு பதினேழு வயசு பொண்ணு என் வாழ்க்கையோட ஒரு அங்கம் ஆவான்னு அப்போ எனக்கு தெரியல. அவ என்னை சிரிக்க வச்சா எப்பவுமே என்ன சந்தோஷமா வச்சுக்க முயற்சி செஞ்சா அப்போ எல்லாம் கடவுள் எனக்காக அனுப்பி வச்ச தேவதைனு நினைத்து சந்தோஷப்படுவேன்.


ஆனா அந்த தேவதையோட வாழ்க்கையை நான் தான் அழிக்கப் போறேன்னு யாராவது சொல்லி இருந்தாங்கன்னா அவ வாழ்க்கைக்குள்ள நானும் போயிருக்க மாட்டேன் .


அவளையும் என் வாழ்க்கைக்குள்ள விட்டிருக்க மாட்டேன் இந்த உலகத்திலேயே தாய்ப்பாலுக்கு அடுத்தபடியா பரிசுத்தமானது நம்மளோட நட்புன்னு நான் ரொம்ப கர்வப்பட்டுகிட்டு இருந்தேன் அதெல்லாம் பொய்யின்னு காலம் வலிக்க வலிக்க பாடம் கற்றுக் கொடுத்திருச்சு.

இன்னைக்கு தாய்ப்பாலிலேயே விஷம் கலக்க ஆரம்பிச்சிருச்சு..அப்படி இருக்கும் போது நம்மளோட நட்பும் தூய்மையா இருக்குனு எப்படி நம்ப முடியும்.

நீ அதிர்ச்சி அடையாதே .
நம்ம நட்புக்குள்ள எப்போ கலப்படம் வந்தது என்று குழம்பாத.


உன்னோடது உண்மையான நட்பாய் இருந்திருந்தால் உன் கணவருக்கு என்னை பிடிக்கலைன்னு தெரிந்த உடனே என்கிட்ட சொல்லி இருந்திருப்பாய் ..எப்போ மறைத்தாயோ அப்பொழுதே முதல் கறை படிந்து விட்டது.


என் தோழி மட்டும் போதும் அவளின் சரிப்பாதியான கணவன் எனக்கு தேவையில்லை என்று எப்பொழுது அவரை ஒதுக்கி வைத்துவிட்டு உன்னிடம் மட்டும் நட்பு பாராட்டினேனோ அப்பொழுதே என்னுடைய நட்பிலும் கறை படிந்து விட்டது.


நம்முடைய சுயநல நட்பால் ஒரு மனிதனின் தொழில் சாம்ராஜ்யம் அழிந்தது அவனின் உடல் நலம் கேட்டது.. சமூகத்தில் அந்தஸ்து கௌரவம் நிம்மதி என அத்தனையும் இழக்க வைத்தது .
ஒரு மனிதனை உயிருடன் சாகடிக்கும் நட்பு நமக்கு தேவைதானா.?.


நம்முடைய நட்பால் ஒரு மனிதன் அறியலாம்..அவனது குடும்பமே அழிந்துகொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட நட்பு எனக்கு தேவையில்லை கௌசல்யா அதனால்தான் மனதை கல்லாக்கிக் கொண்டு உன்னுடைய நட்பை வெட்டிக் கொண்டு செல்கிறேன்.


உண்மையிலேயே நீ என் தோழியாக இருந்தால் அந்த மனிதனை மீண்டும் மீட்டுக் கொண்டுவா. அவனை சமூகத்தில் தலை நிமிரச் செய்..அவனது நிம்மதியையும் சந்தோஷத்தையும் திருப்பிக் கொடு ஏனென்றால் அதை அழித்தது ,அதை பறித்தது நாம் தான்.


எவருடைய சந்தோஷத்தையும் நிம்மதியும் பறிக்கும் அதிகாரம் நமக்கு கிடையாது நாம் இருவரும் சேர்ந்து அந்தக் கொடூரத்தை செய்துள்ளோம் சிறிதளவு மனசாட்சியுடன் நடந்து அந்தப் பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடிக்கொள்ள முயற்சிப்போம் .


தெளிந்த நீரோடையாக இருந்த அவரது மனதில் கல்லைக் கொண்டு எரிந்து சலனப்பட செய்தது நாம் மட்டுமே .


அதை சந்தேகம் என்ற அடைமொழியோடு அழைத்ததும் நாம்தான்.


இதில் அந்த மனிதனின் தவறு எனது பார்வையில் ஒன்றுமே இல்லை.


அவருடைய அன்பு பறிபோய் விடுமோ. தன்னுடைய உடமையை‌ அடுத்தவர்கள் களவாடி விடுவார்களோ என்ற பயத்தில் மட்டுமே உன்னிடம் அத்துமீறி இருக்கலாம், இல்லையென்றால் உன்னை காயப்படுத்தி இருக்கலாம், எதுவாக இருப்பினும் அந்தக் கல்லை எறிந்ததும் நாம்தான்.


சலனப்படுத்தியதும் நாம்தான் மறந்து விடாதே. இதற்கான பிராயச்சித்தமாக நான் உன்னை விட்டு வெகு தூரம் விலகிச் செல்கிறேன். நீ என்ன செய்யப் போகிறாய்.


நம் நட்பால் அழிந்த அந்த மனிதனுக்கு நீ என்ன செய்யப் போகிறாய் .


பூமி மிக அழகானது அதன் மேல இருக்கும் வானம் அதைவிட அழகானது..அதன் நடுவே போலியாக பல உருவங்களை உருவகப்படுத்தும் மேகங்கள் போலத்தான் நம்முடைய நட்பு.
அதற்கென நிரந்தர உருவம் கிடையாது.இருப்பிடம் கிடையாது.


எப்படி வானமும் பூமியும் நிரந்தரமோ அதேபோலத்தான்‌ நம்முடைய கலாச்சாரமும் சுய கட்டுப்பாடும் நிரந்தரமாக இருக்க வேண்டும்.


கலைந்து போகும் மேகத்திற்காக அதை மீறுவது மரபாகாது இந்த மேகத்திற்காக நீ வாழும் பூமியை வெறுத்து ஒதக்கி விடாதே அந்தரத்தில் பறந்தாலும் கூட பாதம் ஊன்ற பூமி வேண்டும் புரிந்து புத்திசாலித்தனமாக நடந்து கொள்வாய் என நம்புகிறேன்.


கலைந்து போகும் மேகத்திற்காக உன்னுடைய வாழ்க்கையை பணயம் வைக்காதே நான் உன்னை விட்டு விலகிச் செல்கிறேன்.. வெண்மேகமாக காற்றோடு காற்றாக கலைந்து‌ மோகிறேன் நீயும் எனை விட்டுவிடு வெண் மேகமே..

இதை படித்த பிறகு பைத்தியம் போல சில நிமிடங்கள் அமர்ந்திருந்தாள்.


வீட்டில் யாரும் இல்லை அனு மட்டும் தூங்கிக்கொண்டிருந்தாள்.அவளுக்குள்
பலவிதமான உணர்ச்சிப் போராட்டங்கள் நடந்தது.


கடிதத்தை மீண்டும் மீண்டும் பலமுறை படித்தாள் ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது விக்கி அவளை விட்டுவிட்டு நிரந்தரமாக போய்விட்டான்.


அதற்கு அவன் அவர்களது நட்பை தான் சுட்டிக்காட்டி உள்ளான் தன்னுடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னை விட்டு விலகிச் சென்றிருப்பதாக சொல்லியிருக்கிறான்.


இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும் மீண்டும் என் வாழ்க்கை தேடி போக வேண்டுமா. இதற்கு அதுதானே அர்த்தம்.


ஒருவேளை நான் மறுபடியும் என்னுடைய பிடிவாதத்தால் இங்கேயே இருந்து விட்டால் விக்கி தாய் தந்தையே பிரித்து சென்றதற்கான அர்த்தம் இல்லாமல் போய்விடும் தனக்காக இப்படி ஒரு கடிதம் எழுதியது பயனற்றதாகிவிடும்.


என்னை விட்டு சென்று விட்டால் நான் நன்றாக இருப்பேன் என்று நீயாக கற்பனை செய்து விட்டாய் அல்லவா, அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்.


பிடித்திருக்கிறதோ இல்லையோ இனிமேல் சாகும் வரை அந்த மனிதனை விட்டு நான் விலக மாட்டேன்.


நீ கேட்டுக் கொண்டது போல அந்த மனிதனை மீண்டும் இந்த சமூகத்தில் ஒரு அந்தஸ்துள்ள மனிதனாக மாற்றிக் காட்டுகிறேன்.


என்றாவது என்னை பற்றி நீ கேள்விப்படும் பொழுது அவள் கணவனுடன் சேர்ந்து சந்தோஷமாக வாழ்கிறாள் என்ற செய்தி உன் செவிப்பறையை‌ எட்டட்டும்.

உனது நட்பின் அளவை நீ காட்டி விட்டாய் எனது நட்பின் அளவை‌ நான் இனி காட்டுகிறேன்..

நீ என்னை விட்டுச் செல்ல வேண்டாம் நானே உன்னிடத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன். என கண்ணீருடன் பேசியவள் அந்த கடிதத்தின் மீது மென்மையாக முத்தம் கொடுத்தாள்.


பிறகு எதைப்பற்றியும் கவலைப்படாமல் அனுவை தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.சரியாக அந்த நேரம்
நிஷாந்த்தை கையில் பிடித்தபடி கோவிலில் இருந்து வந்த லட்சுமி இவளைப்பார்த்து எங்க கிளம்பிட்ட கௌசி..

ஆமா மூஞ்செல்லாம் ஏன் ஒரு மாதிரி இருக்கு இன்னும் அந்த பையனை நினைச்சு அழுது கிட்டிருக்கியா... நீ அடி வாங்க போற பாரு என்று பேசியப்படியே வீட்டிற்குள் செல்ல வாசலில் இருந்தபடியே இனிமே யாரும் என்னோட கண்ணீரை பார்த்து சகிச்சுக்கிட்டு இருக்க வேண்டாம் நான் போறேன் என்றாள்.


ஆமா போறேன் போறேன்னு பெருசா எங்க போயிட போற தெருமுனையில் இருக்கிற கோவில் வரைக்கும் போயிட்டு திரும்பி வர போற..என்னவோ புருஷன் வீட்டுக்கு போற மாதிரி என்று வாய்க்கு முணுமுணுக்க.

நான் புருஷன் வீட்டுக்கு தான் போறேன் யாரும் என்னை தேடி வர வேணாம் நானும் இனிமே இங்க வர மாட்டேன் செத்தாலும் சரி என்று கூறியபடி விடு விடுவென ரோட்டில் இறங்கி நடந்து ஆரம்பித்து விட்டாள்.


இந்தப் பொண்ணுக்கு அடிக்கடி பைத்தியம் பிடிச்சிடும் போல.. என் உயிரை எடுக்கறதுக்காகவே பொண்ணா பொறந்து தினம் தினம் என்னை சாவடிக்கிறா என்ற படியே வாசலுக்கு வேகமாக வந்த லட்சுமி தெருவை எட்டிப் பார்க்க கௌசி ஆட்டோவில் ஏறி போய்க்கொண்டிருந்தாள்.


கையில் அனு மட்டுமே..பணம் கூட எடுத்துக் கொள்ளவில்லை லட்சுமிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை உள்ளங்கையை எடுத்து நெத்தியில அடித்துக் கொண்டபடி எல்லாம் என் தலையெடுத்து இந்த ஒத்த பிள்ளைய பெத்துட்டு நான் படுற பாடு இருக்கே என்றபடி கேசவனை அழைக்க மொபைல் போனை நோக்கி ஓடினார்.


எப்போதும் வீட்டிற்கு தாமதமாக வரும் ஹரிக்கு அன்று வேலையில் கவனம் செல்லவே இல்லை ..மனம் மதுவை நாடுயது.


பார் சென்றால் அளவாக குடிக்க வேண்டும் இதுவே வீடாக இருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் குடுக்கலாம் என முடிவெடுத்தபடி வீட்டுக்கு வந்து ஹாலில் கடைபரப்பி விட்டான்.


கொறிப்பதற்கு தின்பண்டம் குடிப்பதற்கு மதுபானம் கலப்பதற்கு சோடா எலுமிச்சை என எல்லாம் செட் செய்துவிட்டு கோப்பையில் மதுவை‌ ஊற்றி வாய் அருகே கொண்டு செல்லும் பொழுது காலிங் பெல் ஓசை விடாமல் அடித்தது .


யாரது என்று எரிச்சல் பட்டப்படி கதவை திறந்தால் தோளில் உறங்கும் மகளுடன் மிகவும் சோர்ந்து போய் பரிதாபமாக வாசலில் கௌசல்யா நின்று கொண்டிருந்தாள்.

அவளை அந்த நேரத்தில் பார்த்ததும் மனம் பதறிவிட்டது.

என்னாச்சி இந்த நேரத்துல என உறங்கும் மகளையே ஆசையுடன் பார்த்த படி கேட்டான்.
அவன் நினைத்தது கௌசி தன்மீது இருக்கும் வெறுப்பின் காரணமாக மகளை தன்னிடம் விட்டு விட்டு செல்வதற்காக வந்திருக்கிறாள் என்று.


அது..நாங்க…நான் வந்துட்டேன்.

ஹான்..அப்படின்னா.என அவளை ஆழமாக பார்த்தவன் அவள் கூறியதை உள்வாங்கிக் கொண்டு..

நிஜமாவா என்பது போல் தலையசைக்க அவளும் ஆமாம் என் தலைகுனியவும் எதுவுமே பேசாமல் கதவை நன்றாகப் திறந்து வழி விட்டான் உள்ள போ என.


அவள் ஒரு வினாடி தயங்கி நிற்க.

என்ன ?.

ஆட்டோ .

ஓஓ நான் அனுப்பிட்டு வரேன்.

உள்ளே வந்தவள் ஹாலில் இருந்தவற்றை பார்த்ததும் முகம் சுளித்தாள்.
ஆனால் அடுத்த நொடியே இது அவனது வீடு அவனது விருப்பம் நம் விருப்பம் இங்கே முக்கியமற்றது என முகத்தை உடனே இயல்பாக்கினாள்.

ஆனால் ஹரி கவனித்து விட்டான்..வேகமாக டீப்பாயில் இருந்தவற்றையெல்லாம் எடுத்துச் சென்று ஓரம் கட்டிபவன் சாரி நீ வருவேன்னு தெரியாது..முத முதலா என் மகள் வீட்டுக்கு வந்திருக்கா இந்த கருமத்தையா அவ பார்க்க வேணாம் என உணர்ச்சியற்ற குரலில் கூறினான்..


பரவால்ல..உங்க விருப்பம் எனக்காக எதையும் மாத்திக்க வேணாம்.


குழந்தை ரொம்ப நேரமா கையில வச்சிருக்கியே எனக்கிட்ட தர்றியா என்று கேட்கவும் .


ம்ம் ‌.ஆனா முழிச்சுக்கிட்டா ரொம்ப அடம் பண்ணுவா .

ம்கூம் பண்ணமாட்டா நீ வேணா பாரேன் என மகளைப் பார்த்து சந்தோஷத்தில் அவனின் கோபம் வெறுப்பு எல்லாத்தையும் ஒரு ஓரமாக மூட்டை கட்டி வைத்துவிட்டு சந்தோஷமாக அவளிடத்தில் உரையாடினான்.


அவளுக்குத்தான் இயல்பாக பேச முடியவில்லை எப்படி கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கு பக்கமாக பிரிவை சந்தித்தாயிற்று எதுவுமே நடக்காதது போல இவன் பேசிக் கொண்டிருக்கிறானே என்று ஆச்சரியமாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவனுக்கு அப்படியெல்லாம் எந்த ன தயக்கமும் இருந்ததாகவே தெரியவில்லை இயல்பாக அவளருகில் வந்து குழந்தையின் முதுகில் கைவைத்து அனு…குட்டிமா எங்க வந்திருக்கீங்கனு பாருங்க என அவளது நெற்றியில் முத்தமிட்டபடி செல்லம் கொஞ்சவும் சிணுங்கியப்படியே கண்விழித்தவள் தந்தையை கண்டதும் அப்பா என கழுத்தோடு வாரிக் கொண்டது .


கௌசிக்கோ அதிர்ச்சி அவனுக்கோ பேரானந்தம் குட்டிமா நீங்க அப்பாகிட்ட வந்துட்டீங்க. இனிமே நான் தயங்கி தயங்கி உன்னை கொஞ்ச வேணாம்..மறைஞ்சி மறைஞ்சி உன்னை பார்க்க வேண்டாம் நாம இனிமே ஒரே வீட்ல இருக்க போறோம் என்று குழந்தையை தூக்கி மொத்த மழை பொழிய ஆரம்பித்தான் பதிலுக்கு அவனது செல்ல மகளும் ப்பா.. ப்பா என் முகம் கொள்ளா சிரிப்புடன் அவனுக்கு பதில் முத்தம் கொடுத்தது.


எப்படி இவ்வளவு நெருக்கம்..இது இன்று ஓரே நாளில் வரமுடியாதே.?என மனதிற்குள்ளாக கேட்டுக்கொண்டாள்.


அவளின் மனதை படித்தார் போல உன் அம்மா அடிக்கடி கோவிலுக்கு அழைச்சிட்டு வருவாங்க இல்லையா அப்போ அம்முவை பாக்கணும்னு தோணினா நானும் கோயிலுக்கு போயிடுவேன்..



இவன் கோவிலுக்கு செல்வதாக சொன்னது முதல் அதிர்ச்சியினால் இரண்டாவது அதிர்ச்சி தாயார் இன்னும் இவனுடன் பேச்சுவார்த்தையில் இருக்கிறார் என்பது.

இப்பொழுது அதை புரிந்து கொண்டது போல என்னை பார்க்க உன் அம்மா எப்போவும் கோவிலுக்கு வர மாட்டாங்க சாதாரணமாவே வாரம் ரெண்டு முறை கோவிலுக்கு வருவாங்க அது தெரிஞ்சதனால அந்த சமயத்தில் அம்முவை பாக்க நானும் போவேன்.

இடையில் எனக்கு பாக்கணும்னு தோணினா ஜானு கூட்டிட்டு வருவா.

அதுவும் இப்போ கொஞ்ச நாளா உன் அம்மா நான் இருக்கிற திசை பக்கமே வர்றதில்லை என் பொண்ணையும் காட்டுவதில்லை ஜானு

இருக்கிறததால தான் அப்பா பொண்ணு உறவு ஏதோ ஓரளவுக்கு ஒட்டிக்கிட்டு இருக்கு இல்லையா அம்மு என மகளின் மூக்கோடு மூக்கு வைத்து செல்லம் கொஞ்சியபடியே தகவல் தெரிவித்தான்.
 
Last edited:
Top