கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே-5

Akila vaikundam

Moderator
Staff member
5.

ப்பா ‌…கௌசிக்கு பதிலா நம்ம கோமதியை கூப்பிட்டுக்கோங்க…அவங்க வேதிகாவோட இடத்தை ஃபில் பண்ணுவாங்க…


கோமதி ஓகே…பட் அவ இங்க இருந்தா…மத்த ஸ்டேஃப்ஸ் கொஞ்சம் பயந்து வேலை செய்வாங்க…


ம்ம்…அப்போ அருண்,ரவி,ரித்திகா…


ம்கூம்…என்பது போல் தலையசைத்தவர்..
கௌசி வர்றதால உனக்கென்ன பிரச்சனை…


இல்லப்பா…அவ வீட்ல இருந்து ஹெட் ஆஃபிஸ் ரொம்ப தூரம்…
‌அவளுக்கு பஸ் டிராவல் செட் ஆவாது… டூ வீலரும் பெரிசா ஓட்ட மாட்டா…இந்த ஆஃபிஸ் பக்கம்.. அதனால இப்போ டூவீலர் ஒகே…அவ்ளோ தூரம் டிராபிக்ல வர்றதுன்னா .

கஷ்டம்…


இதெல்லாம் நீ ஏன் சொல்ற…ஆஃபிஸ் மாத்திவிடு…பழகிப்பா…


ப்பா கொஞ்சம் யோசிங்கப்பா…அவளுக்கு பிடிக்கலனா வேலைக்கு வரமாட்டா…அதுவும் இல்லாம அவளோட அண்ணன் கேசவன் நான் இங்க இருக்கேன்ங்கற ஒரே காரணத்துக்காக தான் அவளை அனுப்பி வைக்கிறாங்க இல்லனா வேலைக்கு அனுப்ப மாட்டாங்க…என்றான்.


சற்று கோபமான ராமநாதன் …சந்தோஷம் அவனோட அருமை தங்கச்சியை வீட்டோட வச்சிக்க சொல்லு…அவ நம்ம ஆஃபிஸ் வரலனா வேற ஆள் கிடைக்க மாட்டாங்களா என்ன…இது என்ன அவளோட வீடா …அவ சௌரியம் பார்த்து வேலை செய்ய…
இது ஆஃபீஸ் …எப்போ வேலைக்கு வரணும்னு வெளிய கிளம்பியாச்சோ அப்பவே எல்லாத்தையும் சகிச்சிக்க பழகிக்கனும்…இல்லேன்னா பேசாம வீட்டில் உட்கார்ந்துகனும்…நீ என்ன செய்வேனு தெரியாது… கௌசல்யாவை ஆபீஸ் மாத்திவிடு… அப்படி இல்லையா நீ புதுசா ஆரம்பிக்கிற ஆபிஸ் வேலைகளை கவனிச்சிக்கோ…நான் என் வேலையோட சேர்ந்து இந்த ஆஃபிஸையும் பார்த்துக் கொள்கிறேன் என்று அவர் எழுந்தார்.


இன் டைரக்ட்டா நானும் கௌசியும் ஒரே ஆபீஸ்ல வேலை செய்யக் கூடாதுன்னு சொல்ல வரீங்க ..
அதை நேரா சொல்லுங்கப்பா என்றவன்…நீங்க வேதிகாவோட ரீப்ளேஸ்மெண்ட்க்கு இன்டர்வியூ வச்சி ஆள் எடுத்துக்கோங்க இந்த ஆபீஸ்ல இருந்து யாரும் அங்க வரமாட்டாங்க… முக்கியமா கௌசல்யா…என்றவன்…தந்தையின் முகமாறுதலை கவனித்து விட்டு அவரை சமாதானப் படுத்தும் விதமாக



நீங்க கௌசியை மாத்தியே ஆகணும்னு முடிவெடுத்துட்டா என்னால மறுத்து பேச முடியாது…அதனால கொஞ்சம் டைம் கொடுங்க… அவகிட்ட பேசிட்டு அதுக்கப்புறமா ஆஃபிஸை எக்ஸ்சேஞ்ச் பண்ணறேன் …




அதுவுமில்லாம நாமளா அவசரப்பட்டு ஒரு முடிவு எடுத்துட்டு கௌசி , வேதிகா ரெண்டு பேரும் ஓரே சமயத்துல வேலையை விட்டுட்டு போனா நம்மளால சட்டுனு ரெண்டு கேண்டிடேட் செலக்ட் பண்ணி டிரைனிங் குடுக்க முடியாது…
கௌசி ரொம்ப பர்பெக்ட் ஒர்க்கர் அதை நீங்களும் நானும் மறுக்க முடியாது…யோசிச்சிக்கோங்க பா…ரெண்டாவது மத்த பொண்ணுங்க மாதிரி குடும்ப கஷ்டத்திற்காக வேலையால ஏற்படற இன்னல்களை சகிச்சிட்டு போற பக்குவமும் அவளுக்கு இல்ல…



ம்ம்.நீ சொல்லறதும் சரிதான்…ஒரே சமயத்துல ரெண்டு பேர் வேலையை விட்டு போனா இழப்பு நமக்குதான்…
அதுவும் கௌசிக்கு எதையும் சகிச்சிகிட்டு பொருத்துபோக தெரியாது தான்… அது இருந்திருந்தா தான் புருஷனோட குடும்பம் நடத்தி இருப்பாளே.. அவளை நம்பி ஹெட் ஆஃபிஸ்ல‌ உக்காரவும் வைக்க முடியாது…புருஷன் வீட்டில் இருந்து ஓடி வந்தது போல சொல்லாம கொள்ளாம ஆஃபீஸ விட்டும் போயிட்டானா…உடனே வேற ஆளுக்கு நான் எங்க போவேன் என சற்று நக்கல் தோணியில் கூறிமுடிக்கும் முன்பே ப்பா…என கத்தியபடி விக்கி எழுந்து நின்றான்… கைகள் நடுங்க..உதடுகள் துடிக்க…இயல்புக்கு மாறாகவே உணர்ச்சி வசப்பட்டிருந்தான்…


ப்பா ப்ளீஸ்…நீங்க இது போல பேசி உங்களோட தரத்தை இறக்கிக்காதீங்க… அவ ஒன்னும் நமக்கு அடிமையும் இல்லை…நம்ம வீட்டு பொண்ணு இல்ல…
அதனால அவளை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யாதீங்க..
அவ இன்னொருத்தரோட மனைவி,மகள்,தங்கை, ரெண்டு வயசு பொண்ணோட அம்மா…எல்லாத்தையும் விட என்னோட தோழி,என்ற வார்த்தையை மட்டும் அழுத்திச்சொன்னவன் யாரையும் ‌ நம்ம கிட்ட வேலை செய்யறாங்கன்னு ஏளனப்படுத்தாதீங்க…அதும் என் முன்னாடி…என்று கூறியவன் தந்தையின் முகத்தை பார்க்க பிடிக்காதது போல் திருப்பிக் கொண்டான்.


நல்லா இருக்கு விக்கி…ரொம்ப நல்லாயிருக்கு…நீ செய்யறது,பேசறது எல்லாத்தையும் பார்க்க,பார்க்க பெத்த மனசு பூரித்து போகுது…கேவலம் ஒரு பொம்பளைக்காக என் முகத்தைப் பார்த்து பேசவே தயங்குற நீ… இன்னைக்கு முன்னாடி நின்று குரல் உயர்த்திப் பேசற…



தினம் தினம் உன் அம்மா முகத்தைப் பார்த்துகிட்டு மதியம் சாப்பிடறவன் இன்னிக்கி கடையில் வாங்கி ஆஃபிஸ் ரூம்ல சாப்பிடற… எல்லாமே நீ அவளுக்காக தானே செஞ்சிட்டு இருக்க…செய்…இன்னும் எவ்வளவு நாளைக்கு இதெல்லாம் பண்ணுவேன்னு நானும் பார்க்க தான் போறேன்…


ஒன்னு மட்டும் நல்லா கேட்டுக்கோ அந்த பொண்ணால இன்னைக்கு உனக்கும் எனக்கும் வந்தது சின்ன கருத்து வேறுபாடு தான்…இதால காயப்பட்டது நானா இருக்கறதால அதை தாங்கிகிட்டேன்… இதே இடத்துல நீயா இருந்தா உன்னால தாங்க முடியாது… இன்னிக்கு அவளால உன்னோட இயல்பை மட்டும் தான் தொலைச்சிருக்க..இப்படியே விட்டா
இன்னும் கொஞ்ச நாள்ல உன் நிம்மதியே தொலையும்… என்றவரிடம்.


அவளுக்காக நிம்மதி மட்டும் இல்ல…என் சுயமே அழிஞ்சாலும் நான் கவலை பட மாட்டேன் என தந்தையுன் முகத்தை பார்த்து கூறவும்…


நீ எதை இழந்து வந்தாலும் உனக்காக உன் அம்மாவோட மடியும் ..உன் அப்பாவோட தோளும் எப்பவும் காத்துட்டு இருக்கும் ஆல் த பெஸ்ட்…என்றவர்…நல்ல ஒரு ஸ்டேப்ஃஸ்ஸா ஹெட் ஆஃபிஸ்க்கு‌ போடு…அப்படியே புது ஆஃபிஸ் வேலையை ‌முடிச்சிட்டு சொல்லு என்றவர் வேகமாக வெளியேறினார்…


செல்லும்பொழுது கம்பியூட்டர் முன் அமர்ந்து மும்மரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்த கௌசியை வினாடிக்கும் குறைவான நேரம் முறைத்தபடி அவளைக் கடந்து சென்றார்.



மற்ற தொழிலாளர்கள் அனைவருமே அவருக்காக எழுந்து நிற்க கௌசி அவர் செல்வது கூட தெரியாத அளவிற்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.


விக்கியும் அவனது அறையில் இருந்த கண்ணாடி தடுப்பிற்கு அந்தப் புறமாக நின்று கௌசியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.


நேரம் பார்க்க மணி இரண்டு கடந்திருந்தது ஆறு மணி போல் தான் இவர்கள் பார்ட்டிக்கு செல்ல வேண்டும்.. நேரம் இன்னும் நிறைய இருக்கிறது அதற்குள் பெண்டிங் வைத்த வேலைகளை முடிப்பதற்காக விக்னேஸ்வரனும் அவனது லேப்டாப்பை உயிர்பித்தான்.


மணி ஐந்தை தொடவும் பணியாளர்கள் ஒவ்வொருவராக நேரத்தை பார்த்தபடி அவர்களது கணினியை அனைத்து விட்டு எழ ஆரம்பித்தார்கள்…அலுவலக பெல்லும் ஒலிக்க வேலையை முடிக்காதவர்கள் வேகமாக மற்றவர்களிடம் உதவி கேட்டு முடிக்க ஆரம்பித்தார்கள்.


கௌசி நேரத்தைப் பார்த்துவிட்டு வேகமாக எழுந்தாள்.. சரியாக இன்னும் அரை மணி நேரத்தில் பார்ட்டியில் இருக்க வேண்டும் ஏற்கனவே இவர்கள் அங்கே தாமதமாக தான் செல்லப் போகிறார்கள்…


பார்ட்டி நடக்கும் நேரம் ஐந்து மணியிலிருந்து எட்டு மணி வரை என்று சொல்லியிருக்கிறார்கள் இவர்களால் அந்த நேரத்திற்கு வர முடியாது என்று கூறியதால் முடிந்த அளவு சீக்கிரமாக வாருங்கள் அதன் பிறகு ஒரு மணி நேரத்திற்கு மேல் எல்லாரும் ஒன்றாக இருக்கலாம் என‌ சகநண்பர்கள் கூறியிருக்கிறார்கள்…
அதனால் உடனே கீழே சென்றால் தான் சரியாக இருக்கும்…ஏற்கனவே விக்கி பத்து நிமிடங்கள் முன்பாகவே சென்றதை கௌசல்யா கவனித்து விட்டாள்.



அதன் தனக்காக கீழே காத்துக் கொண்டிருப்பான் என்பதும் தெரியும்…பாக்கி வேலைகளை நாளை பார்த்துகொள்ளலாம் என்று நினைத்தவள் கணினியை‌ அணைத்து விட்டு வேகமாக லிஃப்டில் நுழைந்து அண்டர்கிரவுண்ட் பொத்தானை அழுத்தினாள்.


அண்டர்கிரவுண்ட்டில் இருந்த கார் பார்க்கிங்கில் விக்கியை காணாமல் அங்குமிங்கும் தேட…. கௌசி நான் இங்க இருக்கேன் என்று டூவீலர் பார்க்கிங்கில் நின்ற படி குரல் கொடுத்தான்.

டைம் ஆச்சி…நீ ஹாயா இங்க நிக்கற எனக்கேட்டபடியே அவனிடம் சென்றாள்.


நான் எப்பவோ ரெடி நீ தான் லேட்…என்றவன் அவளை மேலும் கீழும் பார்த்து விட்டு…கௌசி நாம பழைய ப்ரண்ட்ஸ் பாக்க போறோம்…இப்படி டல்லா போனா எப்படி…போய் ஆஃபிஸ் வாஷ்ரூம்ல ப்ரஸ்அப் பண்ணிட்டு வா…


லேட் ஆயிடும் விக்கி…ஏற்கனவே என்னால தான் லேட்டுன்னு சொல்லிட்ட…அதனால இதே போதும் வா கிளம்பலாம்…


ம்கூம்…இவ்ளோ டல்லா இருக்கற உன்னை நான் கூட்டிட்டு போக மாட்டேன்..
பத்து நிமிஷம் டைம் எடுத்துக்கோ…தப்பில்லை…அதுக்காக இப்படி வேலை செஞ்ச கலைப்போட அவங்களை சந்திக்க வேணாம்…கொஞ்சம் வேகமா வண்டி ஓட்டி டைமை நான் மேனேஜ் செய்யறேன்…என அவளை மீண்டும் அழுவலகத்திற்கே திருப்பி அனுப்பி வைத்தான்.


அவன் சொன்னது போல அதிக நேரம் எடுத்துக் கொள்ளாத கௌசி சில நிமிடத்தில் மீண்டும் அண்டர் கிரவுண்ட் வந்தாள்.


புடவையை அழகாக மடிப்பெடுத்து கட்டியிருந்தவள்… தலையில் போட்டிருந்த பின்னலை கலைத்து தளர்வாக லப்பர்பாண்ட் போட்டிருந்தாள்…முகத்தில் சிறிய அளவில் ஓப்பனையும் வெளியே தெரியாத அளவிற்கு லிப்ஸ்டிக் போட்டிருந்தாள்…விக்கி இப்போ ஓகே தான…எனக்கேட்கவும்…திருப்தி இல்லை என்பது போல தலையசைத்தவன் நெத்தியில பொட்டெங்க என்று கேட்டான்.


ச்சோ…மறந்துட்டேன் என்றவள் தோள் பையினை திறந்து அதிலிருந்த ஸ்டிக்கர் பொட்டை எடுத்து நெற்றியில் வைத்தபடியே இப்போ ஓகே வா என்றாள்.


ம்கூம் என்பது போல மறுப்பாக தலையசைத்தான்…


இப்போ என்னாச்சி…


குங்குமம் வச்சிக்கல…என்று சொல்லவும் அவளது முகம் சற்று கோபத்தை பிரதிபலித்தது.


வகிட்டில குங்குமம் வச்சி என்னை அடையாளப்படுத்திக்க என் கல்யாண வாழ்க்கை அவ்ளோ சிறப்பா இல்ல விக்கி…


அப்போ வேணுமுன்னு தான் குங்குமம் வச்சிக்கல என குரலில் அவளை குற்றம் சாட்டியவன்…இங்க பாரு கௌசி உன்னோட பர்சனல்ல ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம் ஆனா அதை எல்லாத்தையும் அடுத்தவங்க கிட்ட வெளிச்சம் போட்டு காட்டனும்ங்கற அவசியம் கிடையாது .



ஏற்கனவே கல்யாணம் ஆனது போல எந்த ஓரு அடையாளத்தையும் நீ வெளிய காமிச்சிக்கறது இல்ல…அது உன் விருப்பம்…அதுல நான் தலையிடல..
இது ஆஃபிஸ் இங்க உன்னோட தனிப்பட்ட விஷயம் யாருக்கும் தேவையிருக்காது..



ஆனா இப்போ நாம சந்திக்க போறது நம்மளோட பிரண்ட்ஸை…அவங்க எல்லாருக்குமே உனக்கு கல்யாணம் ஆன விஷயம் தெரியும்…ஒரு குழந்தை இருக்கறதும் தெரியும்…அப்படி இருக்கும் போது நீ இப்படி வந்தா உன்னை பத்தி என்ன நினைப்பாங்க…ஏற்கனவே நம்மளோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் என்கிட்ட ஜாடை மாடையா உன்னை பத்தி விசாரிக்கறாங்க…அந்த பக்கம் அவங்களா ஏதேதோ பேசிக்கவும் செய்யறாங்க…எல்லாமே என் காதுக்கு வரும்…நான் கண்டுக்கறது இல்ல…அதனால அவங்க முன்னாடி இப்படி போய் நின்னு கிசுகிசுவாக பேசிட்டு இருக்குற விஷயத்தை நேரடியா முகத்துக்கு நேரா கேக்க வைச்சிடாத…அப்புறம் இந்த கெட் டூ கெதர் பார்ட்டியே உனக்கு அசௌகரியம் ஆகிடும்…

அப்புறம் பின்னாளில் உன் கணவரோட சேர்ந்து வாழும் போது இந்த மாதிரியான விஷயங்கள் உனக்கு மேலும் சங்கடத்தை கொடுக்கும்… ப்ளீஸ் ஒழுங்கா குங்குமம் எடுத்து வைச்சிக்கோ…நம்மளோட பிரச்சினை நம்மளோட இருந்தா போதும் அதை அடுத்தவங்களுக்கு மறைமுகமா சொல்லவேண்டிய அவசியம் இல்லை…


பிரண்ட்ஸ் பேசுறாங்கன்னியோ…. அவங்க என் தனிப்பட்ட வாழ்க்கையை பத்தி விசாரிப்பாங்கன்னு பயந்து எனக்கு விருப்பம் இல்லாத விஷயத்தை செய்ய சொல்றியா…


இங்கே பார் கௌசி ஆர்க்யூ பண்ற நேரமும் இடமும் இது கிடையாது… உன்னோட பெஸ்ட் பிரெண்ட் நான் சொல்லறதை இப்போதைக்கு செய்…மீதியை அப்புறமா பேசிக்கலாம் என வெட்டு தறித்தார் போல பேசியவனிடம் மேற்கொண்டு வாதாட விரும்பாமல் தோள் பையில் இருந்து சிறியரக கோவில் பிரசாத கவரை திறந்து அதிலிருந்த குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்தாள்.


ஆனால் இம்முறை விக்கியின் முகத்தை பார்க்க வில்லை..
அவனின் மீது அவ்வளவு கோபம்…அனுமதி இல்லாமலே அவளின் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக உரிமை எடுத்துக்கொள்வதாக எண்ணினாள்.
 
Last edited:
Top