கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே 52

Akila vaikundam

Moderator
Staff member
52

காலையில் எழுந்ததுமே மீண்டும் அவன் முன்பு வந்து நின்றாள்.

கலைந்த கூந்தலும் நழுங்கிய புடவையும் அவனைப் பித்தம் கொள்ள வைத்தது.

டேய் பைத்தியக்காரா அவ உன்னை நாலு வருஷத்துக்கு முன்னாடி கேவலமா பேசிட்டு போனவடா வெக்கமே இல்லாம மறுபடியும் அவளை ரசிக்கற என்று ஒரு மனது அவனை இடித்துரைக்க.


மற்றொரு மனமோ அது நாலு வருஷத்துக்கு முன்னாடி அதை எல்லாம் மறந்துட்டு இப்போ அவளே திரும்பி வந்துட்டா அதனால ரசிக்கலாம் அதும் இல்லாம அவ யாரோ ஒன்னும் இல்ல என் பொண்டாட்டி… நான் ரசிக்காம வேற யார் ரசிப்பா என்று மற்றொரு மனம் வரிந்து கட்டிக்கொண்டு சண்டையிட்டது.

என்ன என கண்களால் கேள்விகேட்டவன் பார்வையை தாழ்த்திக் கொண்டு அனு தூங்கறாளா..

ம்ம் வழக்கம் போல நைட் அம்மாவை கேட்டு அழுகை இப்போ தான் தூங்கறா..

நீயும் தூங்க வேண்டியது தானே..

நீங்க ஆஃபிஸ் போய்ட்டா நைட் தான பாக்க முடியும் அதான்.

முக்கியமா பேசனும்னா மோபைல்ல கூப்பிட்டு பேசலாம் நைட் வரைக்கும் காத்திருக்க வேண்டாம் என்று சொன்னவன் சற்றென்று யோசனையாக ஆமா உன் கிட்ட ஃபோன் இருக்குல்ல.

அவளின் உணர்ச்சியற்ற முகம் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லியது

ம்ப்ச் எப்படி மறந்தேன் சாயங்காலம் கிளம்பி இரு நான் உன்னை கூட்டிட்டு போய் உனக்கு பிடிச்ச மாதிரி மொபைல் வாங்கி தரேன்.

அதெல்லாம் வேணாம் அதான் வீட்ல லேண்ட்லைன் இருக்கே அவசரம்னா அதுல இருந்து பேசிப்பேன்.


வீட்ல இருக்கும்போது சரி வெளியே எங்காவது போனா எப்படி காண்டாக்ட் பண்ணுவ.


நான் எதுக்கு வெளியே போக போறேன் இந்த வீட்டுக்கு வரும்போதே காலம் பூரா வீட்டுக்குள்ளேயே இருக்கணும் என்கிற முடிவோடு தான் வந்தேன் அதனால எனக்கு தேவைப்படாது.


என்ன பேசுற.. நீ வேலைக்கு போயிட்டு இருந்த பொண்ணு அதுவும் ஒரு பெரிய கம்பெனில முக்கியமான பொறுப்பில் இருந்தவ இப்படி வெறுத்துப் போய் பேசக்கூடாது. கொஞ்ச நாள் வீட்ல இருந்து ரெஸ்ட் எடுக்கட்டும்னு தான் உன்கிட்ட எதுவும் கேட்கல.

உனக்கு வேலைக்கு போகணும்னு தோணுனா தாராளமா ராமநாதன் கம்பெனிக்கே போகலாம் அப்படியும் இல்லையா என்னோட வந்து நம்ம ஆபிஸை பார்க்கலாம் எனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை.

சரி இப்போ பிரச்சனைக்கு வருவோம் அணு இப்படி டெய்லி அழுதுட்டு தூங்காம இருந்தா அவ ஹெல்த் பாதிக்காதா ,கூடவே உன்னோட ஹெல்த்தும்.


பேசாம கொஞ்ச நாள் அவளை‌ உங்க அம்மா வீட்டுல விடு அப்படி இல்லன்னா உங்க அம்மாவை இங்க கூப்பிட்டு வச்சுக்கோ ரெண்டும் இல்லனா நீ கொஞ்ச நாள் அங்கேயும் இங்கேயும் மாறி மாறி இருந்துக்கோ.

ம்ம்..என பெருமூச்சு விட்டவள் பதில் கூறாமல் திரும்பிச் செல்ல.


என்ன நீ நான் பேசிகிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு பதில் சொல்லாம திரும்பிப் போற என்னமோ கேட்கணும்னு வந்து நின்ன அதை விட்டுட்டு பேச்சு வேற எங்கையோ போயிடுச்சு என்ன கேட்க வந்தியோ கேட்டுட்டு போ.


நம்ம ரூம்மை ஏன் அப்படி போட்டிருக்கீங்க.

நம்ம ரூமா என நெற்றியை சுளித்து குழம்பியவன் புரியவும் மனம் குதூகலித்தது.

மாடிக்கு போனியா..

சுத்தம் செய்யலாம்னு போனேன்.
அவ்ளோ குப்பை காலே வைக்க முடியல கீழ வந்துட்டேன்.

சுத்தம் பண்ண போனியா..ஏன் ..?மனம் எதையோ எதிர்பாத்தது.

பகல் டைம்ல வேலை இல்ல..கீழ எல்லா ரூம்மும் சுத்தம் பண்ணியாச்சு இனி மாடி ரூம் மட்டும் தான் பாக்கி அதான் சுத்தம் பண்ணலாம்னு.

வேற எதுக்காகவும் இல்லையா..

ம்ம் இல்ல..

அந்த ரூம் எதையுமே உனக்கு நியாபக படுத்தலையா.

ம்கூம் என தலையாட்டியவள்..யோசனையாக ஹான் கட்டர்ன்ஸ் ஃபுல்லா நூலாம் பாசி ,ஷோபா, பெட் எல்லாமே மொத்தமா மாத்தனும்.

இதான் தோணிச்சா..

ம்ம்..

குட்..என பாராட்டியவன்.உன் ரூம்ல உன் சைஸ்க்கு பெரிய கண்ணாடி இருக்கும் அதுல ஒருமுறை உன்னை பாத்துட்டு இனி என் முன்னாடி வா என சொல்லவும் புரியாவிட்டாலும் சம்மதம் என்பது போல தலையசைத்தாள்.

மீண்டும் பார்வையை தாழ்த்திக் கொண்டவன் காலையிலேயே டெம்ட்‌ பண்ணிகிட்டு.. இவளுக்கு எதும் தோணலைனா இருக்கறவனுக்கும் எதுவும் தோணாதா..அறிவுகெட்டவ என வாய்க்குள் திட்டியபடி அவளை கடந்து சென்றான்.

என்னாச்சி இன்னைக்கு நம்மளை பாத்து பேசாம தரைய பாத்து பேசிட்டு திட்டிட்டு வேற போறாங்க என நினைத்தவள் தன்னை குனிந்து பார்க்க.. மாராப்பு விலகி அப்பட்டமாக அவளின் அங்கங்களை வெளிக்காட்ட புடவையோ அபாயகரமாக இறங்கி அவளது வளைவுகளை வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டிருந்தது.
அச்சச்சோ இந்த கோலத்திலேயா இவர் முன்னாடி இவ்ளோ நேரம் நின்னேன் என்னை பத்தி என்ன நினைச்சிருப்பாங்க என வேகமாக அறைக்குள் சென்றாள்.


கார் சாவியை எடுக்க உள்ளே வந்தவன் கௌசியின் சினுங்கலை கேட்டு அவளின் அறையை எட்டிப்பார்க்க கண்ணாடியில் பார்த்து தன்னை அவசர அவசரமாக சரி செய்து விட்டு தலையில் அடித்துக் கொண்டு லஜ்ஜையுடன் சிரிப்பதை நிதானமாக ரசித்து விட்டு வெளியேறினான்.

மனதிற்குள் நெடுநாளைக்கு பிறகு ஏதோ ஓரு நிம்மதி.. மனைவி தன் உணர்வுகளை உணர தொடங்கிவிட்டாள் என்பதின் வெளிப்பாடது.

அன்றைய மாலை சீக்கிரமாக வீட்டுக்கு வந்தவன் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தவளிடம்.. சீக்கிரமா கிளம்பு வெளியே போகனும்.

எங்கே என்பது போல பார்த்து வைக்க..

பார்வைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை இப்படியே முட்டை கண்ணை வச்சி பார்த்து பார்த்து மனுஷனை கொல்லுவா என மனதில் தான் நினைக்க முடிந்தது வெளியில் சொல்லவில்லை..

கனிவான குரலில் நீதான நேத்து நைட்டு என்னவோ வாங்கணும்னு சொல்லிட்டு இருந்த.


ஆமா ஆனா அதுக்கு நான் ஏன் வரனும் லிஸ்ட் தர்றேன் நீங்க வாங்கிட்டு வந்துருங்க.

உனக்கு என்ன வேணும்னு எனக்கு எப்படி தெரியும் உன் டேஸ்ட் என்னன்னு தெரிஞ்சிருந்தா என்றவன் அத்தோடு நிறுத்திக் கொண்டான்.. மீதியை நீயே பூர்த்தி செய்து கொள் என்பது போல.


அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்துவிட்டு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க நான் கிளம்பிடறேன் என மெல்லிய குரலில் கூறிவிட்டு குழந்தையை அவனது கையில் திணித்துவிட்டு சென்றுவிட்டாள் அதில் சற்று கோபம் வெளிப்பட்டதோ.. அதையும் அவனது மனம் வெகுவாக ரசித்தது.

வாங்க போகலாம் என்று சில நிமிடங்களில் வெளியே வந்தாள்.அணிந்திருந்த புடவை திருப்தி நகைகள் எப்பொழுதும் அவள் அதிகம் அணிவதில்லை அதுவும் ஒகே..ஆனால் நெற்றியில் கூர்ந்து பார்த்தால் மட்டுமே தெரியக்கூடிய அளவில் சிறு ஸ்டிக்கர் பொட்டு மட்டுமே..மனது உடனே ஏமாற்றம் அடைந்தது. அவளிடத்தில் என்னை எதிர்பார்க்கிறது என்று சொல்லத் தெரியவில்லை ஆனாலும் அவனின் முகமாற்றத்தை உணர்ந்தவள் அதுவும் அவன் நெற்றியை மட்டும் ஆராய அனிச்சை செயலாக விரல் கொண்டு நெற்றியை தொட்டுப் பார்த்தவள் கேள்வியாக அவனைப் பார்க்கவும் புரிந்தவன் போல கொஞ்சம் பெரிய பொட்டு வைக்கலாமே உன் முகத்துக்கு செட் ஆவல.

ஓஓஓ என்றவள் மறுப்பு தெரிவிக்காமல் அறைக்குள் சென்று கையில் இரண்டு, ஸ்டிக்கர் பொட்டு பாக்கெட்டுகளை எடுத்து வந்து அப்போ இதுல எது எனக்கு செட் ஆகும் நீங்களே சொல்லுங்க என்று நீட்டவும்.. இரண்டுமே புள்ளி வைக்கும் அளவு மட்டுமே இருந்தது திருப்தியின்மையை அவன் முகம் நொடியில் காட்ட அவள் முகம் வாடியது.

ம்ம் என்ன யோசித்தவன் அவளின் அறைக்குள் சென்று ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்பு பார்க்க குங்குமத்தை தவிர மீதி எல்லாமே அடுக்கி வைத்திருந்தாள்.

மீண்டும் அவனது மனம் ஏமாற்றம் கொண்டது பிறகு தனக்குள்ளாகவே சிரித்துக் கொண்டவன் இப்போ தாண்டா வந்திருக்கா அவ குங்குமம் வைக்கனும்னா நீ தானே வாங்கி தரணும்.. அதை விட்டுட்டு ஏன் கண்டதையும் போட்டு குழப்பிக்கற.

இங்க இல்லனா என்ன பூஜை அறையில் இருக்கும் தானே என நினைத்து அங்கு சென்றேன்.


பூஜை அறைக்குள் செல்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் கையில் குங்குமத்தை கண்டதும் முகம் வேதனையில் சுருங்கியது.

கவனித்தவன் தயங்கியபடியே எனக்கு தெரியும் இந்த குங்குமம் வச்சு உன்னோட திருமணத்தை அடையாளப்படுத்தற அளவுக்கு நம்மளோட வாழ்க்கை சக்ஸஸ் ஃபுல்லானது இல்ல.. ஆனாலும் என்னோட வெளிய வரும் போது இதை வச்சிகிட்டா எனக்கு நிறைவா இருக்கும்.
கட்டாயம் கிடையாது உனக்கு விருப்பம் இருந்தா மட்டும் தான் இல்லனா வேண்டாம் என்று கூறவும் .


மௌனமாக தலையை குனிந்தவள்.
நீங்களே வச்சிவிடுங்க என்றாள்.

ஹான் இனியொரு முறை சொல்லு என்று சந்தோஷத்துடன் கேட்கவும் கன்னங்கள் இரண்டும் செவ்வானமாக சிவங்க அடித்து வீழ்த்தும் பார்வையுடன் அவனின் கண்களை இமைக்காது பார்த்து விட்டு குனிந்து கொண்டாள்.

உடம்பில் உள்ள ஒட்டுமொத்த ரத்தமும் தலைக்கு ஏறியது போல தலை கிறுகிறுத்தது..
ஊஃப்ப்ப்..என வாய் வழியாக காற்றை வேகமாக வெளியேற்றியவன். அவளது நெற்றிக்கு வலித்து விடுமோ என்பது போல மிக மெதுவாக பொட்டுக்கு கீழேயும் நெற்றி வகிட்டிலும் குங்குமத்தை வைத்துவிட்டு திருப்தியை காண்பித்தான்.


போகலாமா என கேட்கும் பொழுது அவனையும் அறியாமல் பழைய காதல் அவனுள் எட்டிப் பார்த்தது.

அவள் வீட்டுக்கு கேட்ட பொருட்கள் அனைத்தும் வாங்கிக் கொடுத்தவன் அவள் கேட்காத பலவற்றையும் வாங்கி குவித்தான் புடவை நகை என எதையும் விடவில்லை.கௌசிக்கு தான் மிகவும் தர்மசங்கடம் வேண்டாம் எனவும் கூற முடியவில்லை.விரும்பி எதையும் வாங்க முடியவில்லை.

உணவை வெளியில் பார்த்துக்கொண்டு
வீட்டிற்கு வரும் பொழுது பத்தை தாண்டி விட்டது.அனு நன்கு உறக்கத்தில் இருந்தாள்.

காரின் கதவை திறந்துவிட்டவன் குழந்தையை இயல்பாக அவளது மடியில் இருந்து தூக்கும் போது அவனது கைவிரல்கள் அவளின் மென்மையான தேகம் தொட்டுச்செல்ல இவள் தான் துடித்துப்போனாள்.

அதுவரை இருந்த மனநிலை மாறி உணர்ச்சியின் பிடியில் சிக்கித் தவித்தாள்.

அவனுக்கும் அதே நிலை பெண்ணவள் இயல்பாக உரசி விட்டு சென்றுவிடுகிறாள் ஆணின் நிலையை அவன் வெளிப்படையாக கூறினால் தானே அவளுக்குப் புரியும்.

ஒவ்வொரு முறை சீலை நுனி அவனை தீண்டும் போதெல்லாம் நெஞ்சுக்குள் தீப்பற்றிக் கொண்டது காதல் காட்டிற்குள் நெய் வார்ப்பது போல அவளின் பேச்சும் சிரிப்பும் தொடுகையும் அவனை நிலை தடுமாறச் செய்தது.

இழுத்து அணைத்து அவளின் இதழை கொய்து விட ஆசை எலும்பு நொறுக்கும் அளவிற்கு அவளை இறுக்கிப் பிடிக்க ஆசை.. கட்டில் யுத்தத்தில் யார் முதலில் தோற்பது என போட்டியிட ஆசை..ஆசை மட்டுமே செயல் படுத்த தைரியம் இல்லை.

இன்றைய நிலையில் அவளிடம் நெருங்கிப் பார்க்கலாமா என்று சிறு சபலம் எட்டிப் பார்த்தது ஆனால் அவள் கூறியது நினைவிற்கு வர அவன் மனதை சற்றென மாற்றிக் கொண்டான்.
குழந்தையை அவளின் அறையில் படுக்கவைத்தவன் திரும்பிப் பாராமல் அவனது அறைக்குள் நுழைந்து விட்டான்.


அழகிய கனவை கண்டு கொண்டிருக்கும் நிலையில் யாராவது தட்டி எழுப்பினால் எப்படி இருக்கும் அப்படித்தான் இருந்தது அவனின் திடீர் மாற்றம் கௌசல்யாவிற்கு எப்படி அவனை நெருங்க வேண்டும் என்று புரியவில்லை.


ஏதோ ஒன்றை இழந்தது போன்ற மனநிலையில் அறைக்குள் சென்றவள். அப்படியே படுக்கையில் விழுந்தாள் எவ்வளவு நேரம் என தெரியாது தூங்கினாளா இல்லையா என்றும் தெரியவில்லை கண்களை மூடியபடி கிடந்தது மட்டும்தான் ஞாபகத்துக்கு வந்தது.


அனுவின் சினுங்கல் மெல்ல கேட்கவும் தூங்கு பாப்பா என்றபடி தட்டிக் கொடுக்க ஆரம்பித்தாள்.

பாட்டிகிட்ட போகனும் என மேலும் சினுங்க இருந்த மனநிலையில்..


பேசாம தூங்க மாட்டியா எப்போ பார்த்தாலும் பாட்டி பாட்டி தான் ..
அதான் நான் இருக்கேன்ல்ல பிறகெதுக்கு பாட்டி. என்று குரலை உயர்த்தவும் அவளின் சினுங்கல் அழுகையாக மாறியது.


எவ்வளவு சமாதானப்படுத்தியும் கேடகவேயில்லை..விட்டையே அதிரவைக்கும் அழுகை பக்கத்து அறையில் உறங்கும் ஹரிக்கு கேட்காமல் இருக்குமா என்ன..?


அனு அழ ஆரம்பிக்கும் பொழுது எழுந்து விட்டவன் சிறிது நேரத்தில் அழுகை நின்று விடும் உறங்கி விடுவாள் என கண்மூடி கிடந்தான் ஆனால் அவளின் அழுகை நின்ற பாடு இல்லை கூடவே கௌசல்யாவின் சத்தம் வேறு என்னதான் நடந்து கொண்டிருக்கின்றது அந்த அறையில் ஏன் குழந்தை இப்படி அழுகிறாள் என்று முதல் முறையாக இரவு நேரத்தில் அவளது அறைக்குள் சென்றான்.

அப்படியே அப்பனை மாதிரி எல்லாம் நினைச்சதும் நடந்திடனும் இல்ல அழுதாவது காரியத்தை சாதிக்கனும் உன் அப்பன் கிட்ட ஏமாந்த மாதிரி உன்கிட்ட ஏமாற மாட்டேன் பேசாம தூங்கறியா இல்லையா...என திட்டியபடி அனுவின் முதுகில் ஒரு அடியை போட அவள் வீல் என்று கத்த சரியாக ஹரியும் வந்துவிட்டான் அவள் பேசியதையும் கேட்டு விட்டான்.


முகம் கோபத்தில் கழன்றது..பற்களை கடித்துக்கொண்டு அவளை முறைத்தவன் அடுத்த நொடி குழந்தையை தூக்கியிருந்தான்.

அவ எப்பவும் இப்படித்தான் ராத்திரி ஆனா கத்துவா கொஞ்ச நேரத்துல அழுதுட்டு தூங்கிடுவா குடுத்துட்டு போங்க நான் பாத்துக்குறேன் என்று சொல்லவும் உறுத்து பார்த்தவன் இனிமே அவன் என் ரூம்ல தூங்கட்டும் நான் பாத்துக்குறேன் என்று மட்டும் கூறியபடி குழந்தையை தூக்கிக்கொண்டு அவனது அறையை நோக்கிச் சென்றான்.


பின்னாலே சென்றவள் இல்லைங்க உங்க தூக்கம் டிஸ்டர்ப் ஆகும்..நீங்க காலைல ஆஃபிஸ் போகனும்ல..

அது என் பிரச்சனை நீ போய் நிம்மதியா தூங்கு என்று அறைக்குள் சென்றவன் குழந்தையை படுக்கையில் போட்டுவிட்டு தயங்கியபடி வாசலில் நின்ற மனைவியிடம் வந்து அப்பனை மாதிரி பொண்ணு இல்லாம வேற யார் மாதிரி இருக்கனும்னு எதிர்பாக்கற.. அப்புறம் எப்பவும் நானும் உன்னை ஏமாத்தல நீயும் ஏமாறல..மனசுல வச்சிக்கோ.. உன்னை பிடிச்சிருக்குன்னு கேட்டேன் உன் வீட்ல கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க அவ்வளவுதான் இனிமே இது போல சில்லியான வார்த்தைகளை பயன்படுத்தாதே..என் பொண்ணு மேல கை வைக்கறது இதான் கடைசி தடவையா இருக்கனும் இல்ல சாப்பிட கூட என நிறுத்தி விட்டு அவளது கையை பார்த்து விட்டு கதவை அடித்து சாத்தினான்.

அவன் பேச ஆரம்பிக்கும் பொழுதே குழந்தையிடம் பேசியதை கேட்டு விட்டான் எனப் புரிந்து விட்டது.

பயத்தில் அவளின் உடல் ஜில்லிட ஆரம்பித்தது இப்பொழுது அவன் கூறிய வார்த்தைகளும் பார்த்த பார்வையும் மேலும் நடுங்கச் செய்தது அடுத்து என்ன செய்வது தனக்கு இருந்த ஒரே ஆதரவான குழந்தையை

தானே கொண்டு வந்து அவன் கையில் ஒப்படைத்த மாதிரி ஆகிவிட்டதுதே என்ற அதிர்ச்சியில் அங்கே எவ்வளவு நேரம் நின்றாள் என்றே தெரியவில்லை.
 
Last edited:
Top