53
ஷோபாவில் கால்களை குறுக்கி அமர்ந்தபடியே உறங்கும் மனைவியை பார்த்ததுமே அன்றைய காலைப்பொழுது ஹரிக்கு இனிக்கவில்லை.
இரவில் சற்று அதிகபடியாக நடந்துகொண்டதாக தோன்றியது.
அவள் தானே அப்படி நடந்துகொள்ள தூண்டியது.பேசியதை கூட மன்னித்து விடலாம் குழந்தையை அடித்ததை எப்படி நியாயப்படுத்ந முடியும்.
பிறந்ததிலிருந்து பாட்டியிடம் வளர்ந்த குழந்தையை தீடிரென மனந்து விடு என்று சொன்னால் தான் அதற்கு புரியுமா.இவளிடம் சற்று கடுமையை கடைபிடித்தால் மட்டுமே இனி குடும்ப வண்டியை ஓட்ட முடியும்..என நினைத்தவன் கௌசி எழுந்திரு என எழுப்பினான்.
குரலில் சிறிது கூட கனிவு இல்லை கடுமை மட்டுமே.
கௌசி என குரல் உயர்த்தவும் திடுக்கிட்டு எழுந்தவள் அவனை மலங்க மலங்க பார்த்தாள்.
சரோஜாம்மா வர்ற நேரம் உள்ள போய் படு..அனு என்ரூம்ல தூங்கறா..அவளை டிஸ்டர்ப் பண்ண வேணாம்.கொசுறாக தகவல் தெரிவித்தான்.
இனி எங்கே தூங்குவது.. குளித்து முடித்து மீண்டும் வெளியே வரும் போது அனு தந்தையின் அருகே அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தாள்.
இவளும் பேசாமல் அவர்களிடத்தில் அமர அனுவை தூக்கியபடி எழுந்தான்.முகத்தில் அடித்தது போல் இருக்க நான் எப்பவும் போல தான் திட்டினேன்.நான் மட்டும் இல்ல என் அம்மா,அண்ணி இவங்களாம் கூட இப்படித்தான் திட்டுவாங்க..நீங்க வேணா அண்ணி கிட்ட கேட்டுபாருங்க.. என அப்பாவியாக சொல்லவும்.
என் அம்மாவே கூட ஒரு தடவை அப்படியே அவன் அப்பா மாதிரின்னு பெருமையா சொல்லிருக்காங்க.இங்க நீ என்னை அப்படி சொல்லல் சிறுமை படுத்தி சொன்ன அது பரவால்ல விட்டிடலாம் ஆனா நீ ராத்திரி நேரத்துல குழந்தையை அடிக்கற.அதை ஏத்துக்க முடியாது.கௌசி இப்போ சொல்லறது தான் நல்லா கேட்டுக்கோ பழசை தூக்கி போட்டுட்டு உன்னால இருக்க முடியும்னா இரு இல்லையா நீ கிளம்பிக்கோ எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல.நீ எப்போ திரும்பி வந்தியோ அப்பவே நான் எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டேன் புதுசா தான் உன்னை பாக்கறேன் புதுசா தான் பேசறேன்.ஆனா நீ அப்படி இல்லனு நினைக்கும் போது வலிக்குது.என்றபடி மகளை தூக்கிக்கொண்டு வெளியேறினான்.
அவளை எங்கே கூட்டிட்டு போறீங்க.
என் கூட ஆஃபிஸ்க்கு.
தனியா நான் என்ன செய்யறது.
அப்போ நீயும் என் கூட வா.
விளையாடாதீங்க முதல்ல குழந்தையை குடுங்க என அவனிடத்தில் இருந்து வாங்க கை நீட்டினாள்.
என்ன பிரச்சினை உனக்கு என குழந்தையை அவளுக்கு கொடுக்காமல் கேட்டான்.
ஆஃபீஸ்க்கு எல்லாம் தூக்கிட்டு போக அனுமதிக்க முடியாது. அது வேலை செய்யற இடம் சில்ட்ரன்ஸ் பார்க் இல்ல ஞாபகம் வச்சுக்கோங்க.
சரி நகரு..
இவ்ளோ சொல்லறேன் கேட்க மாட்டீங்களா.
நான் ஆஃபீஸ் கூட்டிட்டு போறேன்னு சொல்லலையே..
வேற எங்கே என்பது போல பார்க்க.
அவ பாட்டி வீட்டுக்கு.
ஏங்க என்னை இப்படி காலைல படுத்தி எடுக்குறீங்க பாட்டி வீட்டுக்கு கூட்டிட்டு போக எனக்கு வழி தெரியாதா இல்ல நான் கொண்டு போய் விட மாட்டேனா.. புரிஞ்சுக்கோங்க அவ எங்கேயும் போக வேண்டாம் என்னோட இருக்கட்டும் நான் வீட்டில் சும்மா தானே இருக்கேன்..என வழியை மறித்து நின்றாள்.
இப்போ உன் பிரச்சனை தான் என்ன..?அவ பிறந்ததுல இருந்து அவங்க தான் பாத்துட்டு இருக்காங்க திடீர்னு இங்க கொண்டு வந்து அடைச்சு வச்சுகிட்டு அவங்களை பார்க்க கூடாதுன்னு சொன்னா குழந்தை எப்படி ஏத்துப்பா..வழி விடு.
அம்மாக்கு எப்போவும் நான் பாரம்.நிஷாந்த் மேல காட்டற பாசத்துல பாதி கூட இவ மேல காட்ட மாட்டாங்க..உங்க தங்கை அதான் என் அண்ணி அப்பப்போ என்னை சீண்டிவிடுவாங்க என் அம்மா எதுவுமே கேட்டதில்லை..அவங்களையே திட்டினாலும் திருப்பி பேச மாட்டாங்க..ஏன்னு கேட்டா உனக்காகன்னு என் பக்கமே அதையும் திருப்பி விடுவாங்க இது பரவால்ல எத்தனையோ முறை வாங்க நாம தனியா போகலாம் நான் உங்களை பாத்துக்கறேன்னு சொல்லிருக்கேன்..அந்த வீட்டை விட்டு இன்ச் கூட நகர்ந்தது இல்லை.. அப்படி பட்ட சுயநலவாதி பாட்டியை என் பொண்ணு பார்க்க வேணாம்.
உண்மையிலேயே உன்னை பார்க்கும்போது எனக்கு ரொம்ப பிரமிப்பா இருக்குது எப்படி உன்னால இவ்வளவு சுயநலமா யோசிக்க முடிஞ்சுது உனக்கு ஒரு பிரச்சனைனு வரும் போது அவங்க தான் இத்தனை நாள் இருந்தாங்கி இப்போ தேவையில்லை என்று ஆனதும் ரொம்ப ஈஸியா தூக்கி வீசிட்ட இட்ஸ் நாட் பேர் கௌசல்யா.
நீங்க என்ன வேணாலும் சொல்லுங்க.அனு இனி அங்க போக கூடாது.
நீ திருந்தற ஜென்மம் இல்லனு புரிஞ்சி போச்சி உன்கூட தர்க்கம் பண்ண முடியாது. என் தங்கையும் உன் அம்மாவும் ஏன் அப்படி நடந்து கொண்டார்கள் என்பதை கொஞ்சம் ஆராய்ந்து பார்த்திருந்தால் இப்படி லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்க மாட்ட.அவங்க ரெண்டு பேரோட மோட்டிவேஷனும் நீ என்னோட சேர்ந்து வாழவேண்டும் என்பது தான் .
இப்போ நாம சேர்ந்து வாழ ஆரம்பிச்சாச்சு இனி குழந்தை அங்க போயிட்டு வரும்போது அவங்களுக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கும் அது ஏன் உனக்கு புரியல.
எனக்கு எல்லாமே புரியுதுங்க வீண் பிடிவாதம் பிடிக்கிறேன்னு நீங்க நினைத்தாலும் பரவால்ல ஆனா ஒரு விஷயத்தை ஒத்துக்கோங்க.
என் அம்மா ரெண்டு குழந்தைகளோட ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க இப்போ நிஷாந்த் ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சிட்டான் கொஞ்சம் அப்பாடான்னு இருக்கறாங்க இந்த சமயத்துல அனு மறுபடியும் அவங்க கிட்ட போய் மேலும் மேலும் தொல்லை பண்ண வேண்டாம் .
அப்போவும் சரி இப்போவும் சரி என் அம்மாக்கு தொல்லை கொடுக்க கூடாதுன்னு நினைக்கறேன் அதுக்காக தான் வேணாம்னு சொல்லறேன்.. ஓரு விஷயம் மட்டும் சொல்லிடறேன் நீங்க ஒத்துக்கலனாலும் நான் சொல்லித்தான் தீரனும் அவங்க என்னைக்குமே என் பொண்ணை பாசமா தூக்கி வச்சதே கிடையாது. பரிதாபப்பட்டு தான் தூக்கி வச்சுக்கிட்டாங்க பாசத்துக்கும் பரிதாபத்துக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்ல.
அப்போ கடைசி வரைக்கும் நம்ம குழந்தைக்கு தாத்தா பாட்டியோட பாசம் வேணாம்னு சொல்ல வர்ற அப்படித்தானே கௌசல்யா என்று எரிச்சலை மறைத்தபடி கேட்கவும் .
நான் எப்போ வேணாம்னு சொன்னேன் அவளுக்கு தாத்தா பாட்டியோட பாசம் வேண்டும்னு நினைச்சா உங்க அம்மா அப்பாவை கூட்டிட்டு போங்க அவங்க கிட்ட அந்த பாசத்தை உணரட்டும்.
என் அம்மா வேணான்னு தான் சொல்றேன்.
எதுக்கு உனக்கு அவங்க மேல இவ்வளவு வெறுப்பு.
வெறுப்பெல்லாம் இல்லைங்க..
அங்க இருந்த வரைக்கும் நான் இருக்கிறது தான் அவர்களுக்கு சுமைனு நினைச்சாங்க..உங்களோட சேர்ந்துட்டா அவங்களை விட்டுப் போன எல்லா நிம்மதியும் ஒரே நாளில் கிடைத்துவிடும்னு சொல்லுவாங்க ..
என் நட்பை புறிஞ்சிக்கல என் உணர்ச்சிகளை புரிஞ்சுக்கல கடைசில அவனும் போய் நானும் வழியில்லாம உங்ககிட்ட வந்து.. இப்ப கூட பொண்ணு சந்தோஷமா இருக்காளான்னு யோசிக்க மாட்டாங்க புருஷனோட இருக்கறா அதை தான் எல்லார் கிட்டேயும் பெருமையா சொல்லிட்டு இருப்பாங்க என்று இவள் பாட்டுக்கு பேசிக்கொண்டே போக இவளை எதைக்கொண்டு அடிக்கலாம் என்பது போல் பார்த்து வைத்தான்.
நீங்க கிளம்புங்க என குழந்தையை வாங்கிக்கொள்ள..
இடத்தை விட்டு நகராமல் அவளை ஆழ்ந்து பார்த்தவன்.. இன்னும் உன் நண்பனை மறக்க முடியல இல்லையா..அவன் போனதால என்னை தேடி வந்திருக்க…நம் கடந்த காலத்தை எல்லாம் மறந்துட்டு எனக்காக என்னை தேடி வரவில்லை ..
உன் அம்மாவை கஷ்டப்படுத்தணும் என் தங்கச்சி கிட்ட இருந்து தப்பிச்சுக்கணும் அதுக்காக தான் வந்திருக்க இல்லையா.சேர்ந்து வாழணும் என்கிற எண்ணம் துளி கூட உனக்கு இல்லை புரியுது.
இதான் என் வாழ்க்கைனு ஓற்றை வார்த்தையில் புரிய வச்சிட்ட.. இனியும் சண்டை போட்டு உன்னை அனுப்பி நீ திரும்பி வந்து, நான் உன்னை கூப்பிட்டு, இந்த மாதிரி எதுவும் வேண்டாம் நாம இப்படியே இருக்கலாம் கடைசி வரைக்கும் ..நம்ம குழந்தைக்காக.. ஒரே வீட்டில் கணவன் மனைவி இல்லனா கூட அவளுக்கு ஒரு நல்ல அம்மா அப்பா இருக்கலாம்.
இனி குழந்தையை அடிக்காதே அவளுக்கு புரியற மாதிரி பாட்டியை மறக்க வை.என காருக்குள் ஏறி.
வாசலில் ஆட்டோ ஒன்று வந்து நின்றது.
யார் என இருவருமே பார்க்க
அம்மாடி கௌசி என்றபடி லட்சுமி ஆட்டோவில் இருந்து இறங்கினார்.
வாய்க்குள் வந்த சிரிப்பை அரும்பாடு பட்டு அடக்கினான் ஹரி..இப்பொழுது என்ன செய்யப் போகிறாய் என்பது போல் கௌசியை வேறு பார்த்து வைத்தான்.
கௌசியோ முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க தாயரை எப்படி வரவேற்பது என்பது போல் முகத்தை அஷ்ட கோணலாக வைத்திருந்தாள்.
கேட்டை திறந்து வேகமாக வந்தவர் அதன்பிறகு சற்று தயங்கி நிற்க ஹரிதான் காரில் இருந்து வேகமாக இறங்கி வாங்கத்தை பெண்ணையும் பேத்தியும் மறந்துட்டீங்க போல..
அவர் ஹரி பேசியதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை கௌசியின் கையில் இருந்த பேத்தியை தான் பார்த்தபடி வந்தார்.
பேத்தியும் பாட்டியை பார்த்ததும் கௌசியின் கையில் இருந்து இறங்கி வேகமாக பாட்டியிடம் ஓடியது.
செல்லக்குட்டி வாங்க ..வாங்க இந்த ஆயாகிட்ட என அள்ளிக்கொள்ள அனுவும் குதூகலத்துடன் அவரின் இடுப்பில் ஏறி உட்கார்ந்து கொண்டாள்..அதன்பிறகு இரண்டு பேரும் தனி உலகத்திற்குள் சென்று விட்டனர்.
பாரு இந்த பாசத்தையா சுயநலம் பரிதாப பாசம் எனா குற்றம் சுமத்தினாய் என்பது போல் மனைவியை பார்த்து வைத்தவன் இப்பொழுது என்ன பேசினாலும் மாமியாரின் காதில் விழவே விழாது என புரிந்து கொண்டு சரி நான் ஆபீஸ் கிளம்பறேன் என்றான்.
மாப்பிள்ளை என தயங்கிப்பட்டி லட்சுமி அழைக்கவும்.
சொல்லுங்க அத்தை..
நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதனால தான் இவ்வளவு காலையிலேயே கிளம்பி வந்தது என்று பீடிகையுடன் ஆரம்பிக்க.
எதுவாக இருந்தாலும் சொல்லுங்க.
ஒரு பத்து நிமிஷம் தான் என்று மேலும் தயங்கினார்.
எதுவா இருந்தாலும் சொல்லுங்க ஒரு மணி நேரம் ஆனாலும் இருந்து கேட்டுட்டுட்டே போறேன்.. அவனது மனதிற்கு தோன்றியது ஏதாவது அவசரப் பணத் தேவையாக இருக்குமோ என்று. பொதுவான தேவை என்றால் ஜானுவே கேட்டு இருப்பாளே.?
எதற்காக மாமியாரை அனுப்பி வைத்திருக்கிறாள் என்று யோசனையும் வந்தது. ஒருவேளை இவருக்கு என்று ஏதாவது தனிப்பட்ட பணத்தேவை இருக்குமோ .மகன்கள் செலவிற்கு பணம் கொடுக்க வில்லையா..? என்ற கவலையும் அவனது மனதிற்குள் வந்தது.
ஆனால் அவர் கூறிய தேவை அவனை உணர்வு பிடியில் ஆழ்த்தியது.
உங்களுக்கு எங்க மேல நிறைய கோபம் இருக்கலாம் ஆனா அதுக்காக என் பொண்ணையும், பேத்தியையும் வீட்டுக்கு அனுப்பாம எங்களை கஷ்டப்படுத்தாதீங்க மாப்பிள்ளை. அனு பிறந்ததிலிருந்து நான் தான் பாத்துட்டு இருக்கேன்..அவ இங்க வந்து ஒரு மாசத்துக்கு மேல் ஆச்சு. என் கண்ணுக்குள்ளே நிக்கிறா. கௌசி உங்க அனுமதியில்லாம இனி வரமாட்டா.. என்னையும் வர வேணாம்னு சொல்லிட்டா.குட்டியை பாக்காம தினம் தினம் ராத்திரில நான் தூங்காம படும் பாடு எனக்கு மட்டும் தான் தெரியும்.
இப்போ வேற நிஷாந்த் ஸ்கூல் போக ஆரம்பிச்சுட்டான் பகல் நேரத்தில் எனக்கு பைத்தியம் பிடிக்கறது போல இருக்கு..
முன்னெல்லாம் எனக்கு அவ்வளவு கவலையும் கஷ்டமும் இருந்தது அதையெல்லாம் போக்கிக்க ரெண்டு குழந்தைகளும் கைக்குள்ள இருந்தாங்க இப்போ ஒன்னை நீங்க கூட்டிட்டு வந்து என் கண்ணுல காட்டாம வச்சுக்கிட்டீங்க.
இன்னொன்னு ஸ்கூல் போக ஆரம்பிச்சிடுச்சு .சாயங்காலம் வந்தா டியூஷன் ஹோம் ஒர்க்னு உட்கார்ந்து கொள்கிறான்.
வயசான காலத்துல இந்ந கிழவி எங்க மாப்ளை போவேன் பெரிய மனசு பண்ணி அப்பப்போ கௌசல்யாவையும் குழந்தையும் வீட்டுக்கு அனுப்பி வைங்க அப்படி இல்லனாலும் நான் வந்து பார்த்து விட்டு போக அனுமதி கொடுங்க இந்த கையை உங்க காலா நெனச்சு கெஞ்சி கேட்டுக்குறேன் என்று படி அவனின் கைப்பிடிக்க வர பதறிவிட்டான்.
கௌசியின் மேல் அப்படி ஒரு கோபம் வந்தது இவள் செய்து வைத்திருக்கும் வேலைக்கு மாமியார் தன்னை குற்றம் சுமத்துகிறார் என்பதும் புரிந்தது.
என்ன செய்வது மனைவியை விட்டா கொடுக்க முடியும் அதனால் பாருங்க அத்தை இதை எல்லாம் நீங்கள் கேட்கவே வேணாம் இது உங்க வீடு எப்போ வேணாலும் வரலாம் இவங்களை பார்த்துட்டு போலாம். இங்கேயே கூட தங்கிக்கலாம் எனக்கு எந்த விதமான ஆட்சேபனையும் கிடையாது.
அதே மாதிரி கௌசல்யாவையும் அனுவையும் நானும் அடிக்கடி அனுப்பி வைக்கிறேன் இனிமே என்கிட்ட இந்த மாதிரி பேசாதீங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்றவன்.
கௌசியின் அருகில் வந்து அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக அவங்களை சந்தோஷமா அனுப்பி வைக்கற. ஏதாவது பேசி காயப்படுத்தி அனுப்பினன்னு மட்டும் தெரிஞ்சது அப்புறம் நிரந்தரமா நீ அங்க தான் இருப்ப..நல்லா கேட்டுக்கோ நீ மட்டும் தான் என் பொண்ணு மேல உன் நிழல் கூட படாத மாதிரி செஞ்சிடுவேன்.
பொதுவாக இருவரையும் பார்த்து ஆபீஸ் சென்று வருகிறேன் என்று தலையசைத்து விட்டு மகளை தூக்கி முத்தமிட்டபடி மாமியாரின் கையில் கொடுத்து விட்டு சென்றான்.
கொஞ்ச நேரத்தில் கௌசிக்கும் இயல்பான குணம் தலைதூக்க தாயாரிடம் சகஜமாக பேச ஆரம்பித்து விட்டாள். லட்சுமிக்கு அதை எல்லாம் கண்டு கொள்ளவே நேரம் இல்லை பேத்தியின் பொம்மைகளை நடுஹாலில் கடை பரப்பி குழந்தையுடன் குழந்தையாக விளையாட ஆரம்பித்து விட்டார். நிஷாந்த் வீட்டுக்கு வரும் நேரம் பார்த்து தான் கிளம்பினார்.
இரவு சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்தவன் கௌசியின் தாயாரை பற்றி விசாரித்தான்.
எப்பொழுது சென்றார் சாப்பிட என்ன கொடுத்தாய் என கேட்டுத்தெரிந்து கொண்டு அவளுக்கும் பெற்றவர்களிடம் இப்படி நடந்து கொள்ளாதே என பொதுவான அறிவுரையை வழங்கிவிட்டு இரவு உணவை முடித்துக் கொண்டு குழந்தையை தூக்கிக்கொண்டு அவனது அறைக்குள் சென்று விட்டான்.
அதன் பிறகு தான் கௌசிக்கு உரைத்தது நேற்று நடந்த எதையும் கணவன் மறக்கவில்லை என்று சரி எப்படி இருந்தாலும் நடு ராத்திரியில் மகள் எழுந்து கத்தும் கத்தில் தானாகவே கொண்டு வந்து தன்னிடம் ஒப்படைத்து விடுவான் என்ற நம்பிக்கையில் உறங்கச்சென்றாள்.
ஆனால் அவள் நினைத்தபடி உறக்கம் ஒன்றும் அவ்வளவு சுலபமாக வரவில்லை எதையோ இழந்துவிட்டதை போன்ற எண்ணம்.
கணவனும் குழந்தையும் நிம்மதியாக இருக்க தான் மட்டும் தனித்து விடப்பட்டது போன்றதொரு உணர்வு.
காலையில் தாயார் சகஜமாக பேசிவிட்டு செல்ல தன்னிடம் தான் ஏதோ பிரச்சினை இருக்கிறதோ என்று யோசிக்க தொடங்கியிருந்தாள்.
சுற்றி இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்கள் தான் தனக்கு தான் மனரீதியாக பிரச்சனை போல அதனால் தான் சின்ன விஷயத்தை எல்லாம் பெரிது பார்க்கிறேன் என சுயஅலசலில் புரண்டு படுத்தவள் அவளது ஈகோவை இரண்டாம் முறையாக விட்டுக் கொடுத்தாள்.
நன்கு உறங்கிக் கொண்டிருந்தவனுக்கு கதவை தட்டும் ஓலி எங்கோ கேட்பது போல இருக்க தூக்கம் கலைந்தது.
கதவை திறந்தால் அவனது மனைவிதான் பரிதாபகரமாக நின்று கொண்டிருந்தாள்.
தூக்கம் வரல அனுவை தூக்கிக்கவா.
அவ தூங்கிட்டு இருக்கா தூக்கினா உறக்கம் கலையும் வேணும்னா நீ இங்க படுத்துக்கலாம்.
அப்போ நீங்க என் ரூமுக்கு போறீங்களா.
எனக்கு நல்லா தான் தூக்கம் வருது நான் எதுக்காக உன் ரூம் போகணும் என்றபடி மகளின் அருகே படுத்துக் கொண்டான்.
சற்று நேரம் குழம்பியவள் மீண்டும் அவன் அருகில் வந்து என்னங்க என மெல்ல அழைக்க தூக்கம் வருது.. டிஸ்டர்ப் பண்ணாத.
நானும் தூங்கனும்ல..
வேணாம்னு சொல்லலையே..தாராளமா அந்த பக்கம் படுத்து தூங்கு நான் உன்னை கடிச்சி சாப்பிட மாட்டேன்.
அதும் நீ பேசின பேச்சுக்கு மானமுள்ள மனுஷன் இனிமே உன் பக்கத்துல வருவான்..?என கண் மூடியப்படியே கேள்விகேட்க .
அதன் பிறகு எங்கே பேச ..சற்று நேரம் வாசலுக்கும் அறைக்கும் மாறி மாறி நடந்தவள் பிறகு முடிவெடுத்தவளாக கட்டிலின் மறுபுறம் சென்று படுத்துக் கொண்டாள்.
மறுநாள் விடியற்காலை மகள் தந்தைக்கு முன்புறம் மாறியிருக்க அவனது அருகில் கௌசி கை போட்டபடி நல்ல உறக்கம்.
முதலில் விழித்தது ஹரிதான் குழந்தையின் கை என மெதுவாக அதை தூக்க வித்யாசத்தை உணர்ந்தவனுக்கு காலையிலேயே குளிர் ஜூரம் கண்டது.உறக்கத்தில் மகள் இந்த பக்கம் வந்திருக்க மகள் என நினைத்து கௌசி கை போட்டிருப்பது புரிந்தது.
அவனுக்கு மிக அருகில் கௌசியின் முகம் நல்ல உறக்கம் போல நாசி மெல்லிய மூச்சுக்காற்றை நிதானமாக வெளியிட்டது..கன்னத்தில் கத்தைமுடி விழுந்திருக்க கருமேகம் மறைத்த நிலவாக ஜொலித்தாள்.. ஆரஞ்சு சுளை இதழ்கள் ஈரப்பதத்தை இழந்திருக்க அவனது இதழ் அதை கொடுத்துவிட தவித்தது.இனியும் தாமதித்தால் வரம்பு மீறிவிடுவாய் என உள்மனம் எச்சரிக்கை மணி எழுப்ப சத்தமில்லாமல் எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
கௌசி அவன் கிளம்பும் வரை எழவேயில்லை.. இப்பொழுது அவன் இருந்த இடத்தில் மகள் இருந்தாள்.
மகளுக்கு மென்மையாக முத்தம் வைத்தவன் அவளின் கத்தை கூந்தலை காதோரம் ஒதுக்கி விட்டான்.பளிங்கி கன்னங்கள் முத்தம் வைக்க தூண்ட அவனையும் மீறி அதில் இதழை பதித்து விட்டான்.
அவனின் சுவாசமா அல்லது இதழொற்றலா எதுவோ ஒன்று அவளை அசௌகரியப் படுத்த கண் விழித்தாள்.
அவனின் முகம் அவளது முகத்திற்கு அருகே பார்க்கவும் பயந்து என்ன என்பது போல பார்க்கவும்.
இல்ல அது…முடி..கன்னம்.. சாஃப்ட் என ஏதேதோ உளறிவிட்டு வேகமாக வெளியேறினான்.
ஏதோ தோன்ற கன்னத்தில் உள்ளங்கை வைத்து பார்க்க அதில் ஈரத்தின் அடையாளம்.. எதுவுமே புரியாவிட்டாலும் மனது ஏனோ காற்றில் பறந்தது.
அதன்பிறகான நாட்களில் ஒரே அறையில் தங்கும் காரணத்தால் சிறு சிறு அளவில் பேச்சுக்களும் சிரிப்புகளும் பரிமாறப்பட்டது.
அவர்களின் செல்ல மகள் இருவரின் உறவு பாலத்தை இணைக்கும் ரோடாக இருந்தால்.
முதலில் தெரியாமல் அவன் பக்கத்தில் அவளோ அல்லது அவள் பக்கத்தில் இவனோ சென்றால் ஏதோ செய்யக்கூடாத குற்றத்தை செய்தது போல இருவருமே பதறி விடுவார்கள்.
இப்பொழுது எல்லாம் அப்படி இல்லை அது சாதாரண நிகழ்வாகிவிட்டது பாதி நாட்கள் கௌசல்யா அவனது புஜத்தில் தான் கண்விழிப்பது.
பிற நாட்களில் அவளது இடையை கட்டிய படி அவன் உறங்கிக் கொண்டிருப்பான்.
இருவருக்குமே அது தெரிந்தாலும் கூட பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள் எதார்த்தமாக கடந்து விடுவார்கள்.
அவர்களுக்குள் இருந்த தயக்கங்கள் ஒவ்வொன்றாக உடைபட இருவருமே ஒருவரை மற்றொருவர் தேடும் அளவிற்கு முன்னேறி இருந்தனர்.
தங்களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது ஹரியின் விருப்பம் யார் முன்னே ஒரு அடி எடுத்து வைப்பது அதுதான் அவர்களுக்குள் நடக்கும் மறைமுகப் போட்டி.
ஒரு விஷயத்தைப் பற்றி சிந்தித்துக்கொண்டே இருந்தால் தானாகவே இயற்கை அதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்கும் அதுதான் ஹரிக்கும் கௌசல்யாவுக்கும் நடந்தது.
வழக்கம் போல அனுவை உறங்க வைத்துவிட்டு வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தவளுக்கு அவர்களின் பழைய படுக்கை அறைக்குள் செல்லவும் தானாகவே உணர்ச்சி பொங்கியெழ ஆரம்பித்தது.
கூடிக்கழத்த இரவுகளை நினைத்து கண்ணீருடன் அங்கேயே படுத்து விட்டாள் கீழே குழந்தை எழுந்து அழுது கொண்டிருக்க அந்த நேரம் முக்கியமான ஃபைல் ஒன்று எடுப்பதற்காக அலுவலகத்தில் இருந்து வந்த ஹரியும் குழந்தையை தூக்கியபடி கௌசியை தேடிச் செல்ல.
அவளோ பசலை நோய் கண்டவளைப் போல தலைவனை நினைத்து உருகி படுக்கை அறையில் சுருண்டு கிடந்தாள்.
கௌசி என அவன் அழைத்தது தான் தாமதம் ஏற்கனவே உணர்ச்சிப் பிடியில் இருந்தவள் அவனின் கனிவு குரல் கேட்டதும் எதைப் பற்றியும் சிந்திக்காமல் அவன் நெஞ்சினில் தஞ்சமடைந்தாள்.
கையில் குழந்தையை வைத்துக்கொண்டு அவளை சமாளிப்பது அவனுக்கு பெரும் பாடு ஆகிவிட்டது.
அவனை இறுக்கமாக கட்டிப்பிடித்தவள் மேலும் மேலும் அவன் மார்போடு ஒன்றினாள்.
என்ன ஆச்சு.. என்னாச்சு என பற்றிக்கொண்டு கேட்டான்.
எதற்குமே பதில் சொல்லவில்லை முகத்தை அப்படியும் இப்படியும் தேய்த்து சட்டை முழுவதிலும் கண்ணீர் கறைகளை உண்டாக்கினாள்.
அழுகை என்றால் அப்படியோரு அழுகை அவனால் அவளின் கண்ணீரை நிறுத்தவே முடியவில்லை குழந்தையை பெட்டில் விட்டவன் அவளது முதுகை மெல்ல வருடி அழகையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிதான்.நெற்றியில் மென்முத்தமிட்டபடி கெஞ்சி கேட்டுப்பார்த்தான்.தலையை தடவி விட்டான் . எதற்குமே அவளது உணர்வுகள் கட்டுப்படவில்லை மேலும் மேலும் அதிகரித்ததே தவிர சிறிதும் குறையவில்லை கேவலும் விம்மலுமாக மாறி மாறி அவனது நெஞ்சை விட்டு அகல மறுத்தவளின் முகத்தை இருகைகள் கொண்டு ஏந்தியவன் சற்றும் தாமதிக்காமல் சிறைபிடித்தான்.
அதிர்ச்சியில் கண்களை விரித்தது ஒரு நொடி மட்டுமே அடுத்த நொடு அவனுக்கு முழு ஓத்துழைப்பை கொடுக்க ஆரம்பித்தாள்.
அவன் போதும் என முடித்து வைக்க இவளோ இதுதான் ஆரம்பம் என தொடங்கி வைத்தாள்..எவ்வளவு நேரம் மாறி மாறி முத்த யுத்தத்தில் தங்களை தொலைத்தார்கள் எனத்தெரியாது. கட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த அனு எதையோ போட்டு உடைக்க அப்பொழுதுதான் இருவருமே சுய உணர்வுக்கு வந்து விலகினர்.
தயக்கம் பாதி வெக்கம் பாதி போட்டி போட கௌசி தலையை குனிந்தபடி சாரி.. என்று அங்கிருந்து நகர்ந்தாள்.
அவளின் கைகளைப் பிடித்து நிறுத்தியவன் எதுக்கு சாரி என சரசமாக கேட்டான்.
அது உங்க சட்டையை கறை பண்ணிட்டேன் என வெட்கப்பட்டுக் கொண்டே உதட்டைக் கடித்தபடி அவள் கூற..
இதழ்களையே பார்த்துக் கொண்டிருந்தவன் அப்போ உன்னை கிஸ் பண்ணினது நானும் சாரி கேட்கணுமா என்றான்.
அவள் ஹான் என்பது போல் நிமிர்ந்து பார்க்க அப்போ டபுள் சாரி என்றபடி அவளது பற்களில் சிக்கிக் கொண்டிருந்த இதழ்கள் மீண்டும் அவனது இதழ்களுக்கு இரையாகின.
அதன் பிறகு சற்று நேரத்தில் இருவருமே ஆசுவாசமடைந்தார்கள்.
உணர்ச்சி குவியிலாக இருவரின் உடல்களும் தகித்துக் கொண்டிருக்க அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்று அணைக்கும் முன் சில விஷயங்களை பேசி தீர்த்து விடலாம் என முடிவெடுத்தனர் .
முதலில் யார் பேச்சை ஆரம்பிப்பது என தயங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இருவருமே ஒன்று போல சாரி என ஆரம்பித்தனர்.
சரி நீ சொல்லு என்பது போல் ஹரியும் நீங்கள் சொல்லுங்கள் என்பது போல கௌசல்யாவும் ஒருசேர அமைதி காத்தனர் பிறகு இருவரும் ஆரம்பிக்க சிரித்துவிட்டு லேடிஸ் ஃபஸ்ட் என்று அவன் சொல்லவும் என்னை மன்னிச்சிடுங்க என முதல் அடி எடுத்து வைத்தாள்.
பிறகு அன்று பேசியதற்காக இன்றுவரை வருந்துவதாக அவனிடம் உரைத்தவள் சத்தியமா உங்களை காயப்படுத்தனும் என்கிற எண்ணத்துக்காக தான் அப்படி பேசினேன்..மத்தபடி நான் யாரையும் நினைத்தது இல்லை என கதறி விட்டாள்.
உங்களைப் பிடிக்காமல் தான் திருமணம் செஞ்சிகிட்டேன் .இது தான் வாழ்க்கை இவர் தான் என் கணவர்னு எல்லா வகையிலும் மனசை தயார்படுத்திக்கிட்டு தான் உங்களோட வாழ ஆரம்பிச்சேன்.
ஆனா நீங்க திட்டம் போட்டு என் வாழ்க்கையை பாழாக்கிட்டதா தவறாக புரிந்து கொண்டேன் அப்பவும் சரி எப்பவும் சரி தொடுகை வேணும்னா எனக்கு பிடிக்காம இருந்திருக்கலாம். என்னைக்குமே அருவருப்பாவோ முகம் சுளிக்கிற மாதிரியும் இல்ல ஏன்னா ஒவ்வொரு முறையும் அதில் நான் உங்களோட காதலை மட்டுமே பார்த்தேன்.
அது மட்டும் இல்லாம சில சமயங்கள் நானே கூட உங்களை தேடி இருக்கேன் அந்த சமயத்துல உங்களை தேடினதுக்கான காரணம் முழுக்க முழுக்க என்னோட காதல் தான் என்பதை பின்னாளில் தனிமை எனக்கு உணர்த்தியது..நான் சொன்னது போல அது லஸ்ட் இல்ல.. நீங்க எனக்கு புரிய வச்ச காதலை நான் உங்களுக்கு புரிய வைக்க முயற்சி செஞ்சேன் ஆனா அன்னைக்கு நடந்த வாக்குவாதத்துல என்ன பேசறேன்னு புரியாம
என் கேவியவள் அதற்கு மேல் பேச முடியாமல் அவனது நெஞ்சில் சாய்ந்து கண்ணீர் விட்டாள்.
அப்படி பேசினதுக்கு என்னை மன்னிச்சிடுங்க என்று ஜெபம் போல அந்த ஒற்றை வார்த்தையை மட்டுமே மீண்டும் மீண்டும் கூறத் தொடங்கினாள்.
ரிலாக்ஸ் கௌசி..காம் டௌன்..காம் டௌன் என அவளது முதுகை தட்டிக் கொடுத்தவன் நானும் அன்றைக்கு உன்னை அவ்ளோ கொச்சைப்படுத்தி இருக்கக் கூடாது. என் கண்மணி காதலோடு என்னை தேடுடதை புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு முட்டாளா நான் நீ என்னை தேடி வந்த நாட்கள் ரொம்ப கம்மி ஆனால் என் மேல் இருக்கிற ஒட்டுமொத்த காதலையும் அந்த ஓரு நாள் இரவில் புரிய வைப்பியே.. இதில் நான் தான் மிகவும் தவறிழைத்து விட்டேன்.
எனது காதலி உனக்கு புரிய வைக்கவே இல்லை..உனக்கு விருப்பமா இல்லையான்னு தெரியாமலே ஒவ்வொரு முறையும் உன்னை கட்டாயப்படுத்தி இருக்கேன்.
அதை நினைக்கும் போது இப்போ நினைச்சா கூட என்மீது எனக்கு அவ்வளவு ஆத்திரம் வரும்.
நீ என்னை அதற்காக மனதார மன்னிக்கனும் என்றவன் அவளை பெட்டில் அமர வைத்து விட்டு தரையில் மண்டியிட்டு அவளது முழங்காலை பிடித்துக் கொண்டான்.
ஐயோ என்ன பண்றீங்க முதல்ல எந்திரிங்க ப்ளீஸ் காலை எல்லாம் பிடிச்சிட்டு முதல்ல எந்திரிச்சு..
ம்கூம் மன்னிச்சேன்னு சொல்லு அப்போ தான் எழுந்திருப்பேன் மனைவிக்காலை பிடிச்சவன் எவனும் தோத்துப்போனதா சரித்திரமே இல்லை.
சரி மன்னிச்சிட்டேன் எழுந்திருங்க அப்போ நானும் உங்க கால்ல விழனுமே
வேணாம்.. வேணாம் வீட்டுக்கு ஒரு அடிமை இருந்தா போதும் ரெண்டு பேரும் அடிமையானா குடும்பம் தாங்காதுப்பா என கேலியாக கூறியவன்.. இனி உன் சம்மதம் இல்லாமல் உன்னுடைய நுனி விரல் கூட நான் தொட மாட்டேன் என்றான்.
பெரிய வார்த்தைகளை மிக சுலபமா பேசறீங்க ..அது உங்க பெருந்தன்மையை காட்டுது..
என்கிட்ட தான் எல்லா தப்பும் நீங்க சராசரியா ஒரு கணவனா ஒரு மனிதனா தான் நடந்துக்கிட்டீங்க நான் தான் சரியில்ல…அது என் வயசா இல்ல வெளியுலக அனுபவமின்மையான்னு தெரியல ஏதோ ஒன்னு உங்ககிட்ட இருந்து என்னை தள்ளி வைத்து விட்டது.
இதுல என்ன கொடுமைனா என்னோட தவறுகளை எல்லாம் ரியலைஸ் பண்ணிட்டு உங்க கிட்ட வரும்போது தான் நமக்குள்ள சண்டை வந்தது.
நீங்க பேச நான் பேச கடைசியில அது முடிவில்லாத சண்டையா மாறிடுச்சி . மாத்தி மாத்தி காயப்படுத்திக்கனும்னு நினைச்சோமே தவிர அதுல காயப்பட்டு வலியும் வேதனையும் அனுபவிக்க போறதும் நாம் தான் என்பதை புரிஞ்சுக்கவே இல்ல.
ஒருத்தராவது அமைதியா இருந்து அந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வரணும்னு நினைக்கல இதால நம்மளுடைய நாலு வருஷம் வாழ்க்கை தொலைஞ்சு போச்சு என்றவள்.
சரி இந்த ரூமை ஏன் இப்படி போட்டு இருக்கீங்க என அடுத்த நிமிடமே கரார் மனைவியாக கேள்வி எழுப்பினாள்.
அது ஒன்னும் இல்ல பொண்டாட்டி நீ என்னைக்கு என்னை விட்டுட்டு போனியோ அதுக்கு அப்புறம் இந்த ரூம்குள்ள வரவே பிடிக்கல .
வந்தாலே உன்னை கட்டாயப்படுத்தினேன் என்கிற எண்ணமே என் மனசுக்குள்ள மறுபடியும் வரும்.
அது எனக்குள் ஒரு பெரிய குற்ற உணர்ச்சியை உருவாக்குச்சு அதான் இந்த பக்கம் எட்டியே பாக்கல.
உண்மைய சொல்லு இந்த ரூம்குள்ள தினம் நீ அழ தானே செய்தாய் என்று கேட்கவும்.
ஒஒ.. அப்படியா அப்போ நான் உங்களை தேடி வந்த போதெல்லாம் நீங்க அழுதுட்டு இருந்தீங்களா சார்? என திருப்பி கேள்வி கேட்டவள்.
அடுத்த நொடியே கண்களில் பெருகும் காதலை கட்டுப்படுத்தாமல் அப்படியெல்லாம் இல்லைங்க இந்த ரூம் எப்பவுமே எனக்கு ஸ்பெஷல் இங்க உங்களோட காதலை மட்டும் தான் உணர்ந்திருக்கேன் .
அப்படியே என் காதலை உங்களுக்கு திருப்பிக் கொடுத்து இருக்கேன். எல்லாத்தையும் விட இந்த நாலு வருஷமா நான் உயிர் வாழ காரணமா இருந்த அனு உருவான இடம்.
அப்படிப்பட்ட இடத்தை கால்வைக்க முடியாத அளவுக்கு பண்ணி வச்சிருக்கீங்க.
முதல் முறையா சுத்தம் செய்ய இந்த ரூம்குள்ள வந்தப்போ எனக்கு எவ்வளவு கோபம் தெரியுமா அன்னைக்கு மட்டும் நீங்க என் முன்னாடி இருந்திருந்தீங்க என்று இரு கையையும் அவனது கழுத்தை
நெரிப்பது போல கொண்டு சென்றவள் அவனையும் சாய்த்து இவளும் அவன் மீது விழுந்தாள்.
குழந்தை பக்கத்து அறையில் சமத்தாக விளையாடிக் கொண்டிருக்க இவர்களோ அவர்களது அறையில் நான்காண்டு கால பிரிவை சமன் செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

Last edited: