55
தன் முன் பவ்யமாக அமர்ந்திருக்கும் ஹரியை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் விக்கியின் தாயார் .
இந்தப் பையனா கௌசல்யாவை அவ்வளவு அடித்து கொடுமைப்படுத்தினது, இதெல்லாம் உண்மையா இல்ல விக்கி மத்தவங்க சொல்றதை கேட்டுட்டு நம்ம கிட்ட சொன்னதா அவன் சொன்னதுக்கும் நேர்ல பார்க்குறதுக்கும் இந்த பையன் கிட்ட எவ்வளவு வித்தியாசம் இருக்கு என்று தான் ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.
அவராக பேச ஆரம்பிக்கட்டும் என்பது போல ஹரி அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
சில நிமிடம் கண் மூடி யோசித்தவர் பிறகு ஹரியை பார்த்து நான் உன்கிட்ட சில விஷயங்களை பேசணும்.. இல்லல்ல நீ எனக்கு ஒரு உதவி செய்யணும்.
நானா நான் என்னம்மா உங்களுக்கு உதவி செய்யப் போறேன்.
நீ மட்டும் தான் பா பண்ண முடியும் நீ கண்டிப்பா எனக்கு இதை பண்ணித்தான் ஆகணும் என்று கூறவும் அவனுக்கு புரிந்து போயிட்டு ஓஓ இந்த அம்மா கௌசி பற்றி தான் ஏதோ ஒரு விஷயத்தை பேச வந்திருக்கிறார் உதவியாக கேட்பதும் கௌசல்யாவை தான். என்ன மாதிரியான உதவி என்று அவர் வாயிலிருந்து வரட்டும் என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.
என்னப்பா உதவி கேட்டு வந்து இருக்கேன் பேச்சுக்கு கூட செய்யறேன்னு சொல்லாம மௌனமா இருந்தா எப்படி .
அம்மா நீங்க என்ன மாதிரியான உதவி கேட்க போறீங்கன்னு தெரியாம எப்படி அம்மா வாக்கு கொடுக்க முடியும் என்னால் செய்ய முடியும்னா கண்டிப்பா அதை செய்வேன் நீங்க எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொல்லுங்க என்னால முடிஞ்சதை நான் செய்றேன் என்று பொத்தாம் பொதுவாக வாக்குறுதி கொடுத்தான்.
சரிப்பா என்னோட உதவியை நான் கடைசியில கேக்கறேன் அதுக்கு முன்னாடி நான் சில விஷயங்களை சொல்றேன். என்னை பற்றிய விஷயங்கள் தான் பொறுமையா கேக்குறியா என்றவர் பேச்சை மேலும் தொடர்ந்தார்.
ஹரி என் பிள்ளைனு தெரியும் ஆனால் அவன் மட்டும்தான் என் பிள்ளைன்னு நீ இவ்வளவு நாள் நினைச்சிட்டு இருந்திருப்பாய் இல்லையா என்று கேட்கவும் ஆமாம் என்பது போல் தலையசைத்தான்.
ஹரிக்கு ஒன்பது வயதா இருக்கும்பொழுது நான் இரண்டாவது முறையா கருவுற்றேன் பா ரொம்ப ஆரோக்கியமா நல்ல எடையோட எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.. பையன் பெயர் மாதிரியே பொண்ணு பேரும் வரணும்னு விக்னேஸ்வரின்னு பேரு வச்சம்பா.. ரொம்ப அழகா இருப்பா.. துறுதுறுன்னு வீடு ஃபுல்லா அவளோட கொலுசு சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும்.
எங்க வீட்டுக்குள்ள எந்த சண்டையும் இருக்காது சந்தோஷம் மட்டும்தான் குடிகொண்டிருக்கும்.. பேசிகிட்டே இருப்பா கேள்வி மேல கேள்வி கிட்டே இருப்பா அவ்வளவு அறிவு அந்த குழந்தைக்கு அவன்னா ஹரிக்கு உயிர். கீழ இறக்கியே விட மாட்டான் எங்கனாலும் கூடவே கூட்டிட்டு போயிடுவான்.
ரெண்டு பேருமே ஒரே ஸ்கூல் தான் போனாங்க ஹரி பத்தாவது படிக்கும்போது அவன் தங்கச்சி ஒண்ணாம் கிளாஸ் அவளை சீக்கிரமா விட்டுடுவாங்க இவன் பத்தாங்கிளாஸ் என்கிறதால ஸ்பெஷல் கிளாஸ் அது இதுன்னு இருக்கும் இந்த குட்டி பொண்ணு வீட்டுக்கு வரமாட்டா அண்ணன் கூட தான் வருவேன்னு ஆறு மணி ஆனாலும் அங்கேயே காத்துக் கிடப்பா..அவ அண்ணன் மேல அத்தனை பாசம்.
அப்படித்தான் ஒரு நாள் திடீர்னு ஊர்ல ஏதோ ஒரு கலவரம்.. ஸ்கூல்ல இருந்த பிள்ளைகள் எல்லாம் சீக்கிரமா வீட்டுக்கு விட்டுட்டாங்க...
விக்கியோட அப்பா பிசினஸ் விஷயமா வெளிநாட்டு எங்கேயோ போயிட்டாரு.. கலவரம்னு கேள்விபட்டதும் பிள்ளைகளை நினைத்து என் மனசெல்லாம் பதற ஆரம்பிச்சிருச்சு
தகவல் தெரிஞ்ச உடனே நான் டிரைவரை கூப்பிட்டு கிட்டு காரை எடுத்துட்டு போயிட்டேன் முதல் வேலையா பாப்பாவை கூப்பிட்டு கார்ல உட்கார வைத்துவிட்டு இவனுக்காக காத்திருந்தோம்.
ஸ்கூலுக்குள்ள எந்த வண்டியும் விடலை பிள்ளைகளை மட்டும் தான் வெளியே விட்ருக்காங்க.. முதல்ல சின்ன கிளாஸ் பிள்ளைகளை எல்லாம் விட்டுட்டு கடைசியா தான் பெரிய கிளாஸ் பிள்ளைகளை விட்டாங்க .
ஒரே டிராபிக் மக்கள் எல்லாம் பதறி அடிச்சு இங்கேயும் அங்கேயும் ஓடிட்டு இருக்காங்க நான் திக்கு திக்குன்னு காருக்குள்ளே பொண்ணோட உட்கார்ந்துட்டு இருந்தேன் .
பையன் வந்தா உடனே கிளம்பிடனும்னு அவனும் பதட்டமாக வெளியே வந்தான் எங்களை பார்த்ததுமே அவனுக்குள்ள அப்படி ஒரு சந்தோஷம் நான் கையை அசைத்து வான்னு கூப்பிட்டிட்டு இருக்கும்போதே என் பொண்ணு கொஞ்சமும் யோசிக்காம கதவை தொறந்துட்டு அவங்க அண்ணனை பார்த்து ஓட ஆரம்பிச்சிட்டா .
அவளை பார்த்துட்டு பின்னாடி நான் ஓட ரெண்டு பேருமே ஒரு பெரிய ஆக்சிடென்ட்ல மாட்டிக்கிட்டோம் .
என் பொண்ணு அந்த இடத்தில் எங்க கண்ணு முன்னாடியே தூக்கி வீசபட்டா.அவ கீழ விழறதை மட்டும் தான் நான் பாத்தேன்..அப்புறமா அவளை நான் போட்டோல தான் பாத்தது.
ஏசி ஓடும் சத்தம் தவிர வேறு எதுவுமே கேட்கவில்லை..ஹரி இதை எதிர்பார்க்கவில்லை ராமநாதன் குடும்பத்தை பற்றி என்றுமே வாய் திறந்ததில்லை.மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டவர் என்றோ,மகளை சாலை விபத்தில் பறிகொடுத்து விட்டேன் என்றோ வெளியில் காட்டிக்கொண்டதே கிடையாது.அழுத்தக்கார மனிதர்.
தன் கண்ணு முன்னாடியே அவனோட தங்கச்சி இரத்த வெள்ளத்தில் கீழ விழுந்தா.. கதறிட்டு போய் தங்கையை தூக்கி மடியில வச்சிருக்கான் ..அவ அவன் கையை கெட்டியா பிடிச்சுக்கிட்டு அண்ணா என்கிற ஒரு வார்த்தையோட அவன் மடியிலேயே உயிர் போயிடுச்சு
அவங்க அப்பா ஊர்ல இல்ல பதினைந்து வயசு பையன் என்ன பண்ணுவான் அந்த வயசுல அவன் பார்த்ததும் பண்ணினது எல்லாம் மிகப்பெரிய விஷயம் எனக்கு இடுப்புல அடிபட்டதால அங்கிருந்து ஒரு இன்ச் கூட நகர முடியல கண்ணீருடன் பார்க்க தான் முடிஞ்சுதே தவிர வேற எதுவும் செய்ய முடியல.
அப்போகூட அவனால தங்கை மறைந்ததை ஏத்துக்க முடியல உயிர் இருக்கிறதா தான் நம்பினான் அங்கிருக்கிறவங்களோட உதவியோட என் கார் டிரைவர் எங்க ரெண்டு பேரையுமே ஹாஸ்பிடல் சேர்த்தாங்க.
பொண்ணோட உயிர் ரொம்ப நேரத்துக்கு முன்னாடியே போயிடுச்சுன்னு டாக்டர் கையை விரிச்சிட்டாங்க நான் அவசர சிகிச்சை பிரிவில சேர்க்கப்பட்டேன்.
எனக்கு முதுகெலும்புல அடிபட்டதால ரொம்ப வலியை அனுபவிச்சேன் சர்ஜரி பண்ணினா நடக்க முடியும்னு ஆபரேஷன் பண்ணினாங்க ஆனால் அது தவறா இல்லை என்னோட தலைவிதியானு தெரியாது என்னால் சுத்தமா நடக்க முடியாம போயிடுச்சு.
என் பொண்ண பறிகொடுத்த சோகத்திலிருந்து என்னால் வெளிவர முடியவில்லை.. எந்த ஒரு குழந்தைக்குமே ஒரு துன்பம் வருதுன்னா அது தாய் தகப்பனை மீறி தான் வரும் ஆனால் அந்த இடத்தில் தாய் நான் இருந்தும் கூட என் பிள்ளையை விட்டுட்டேனே என்கிற குற்ற உணர்ச்சியில் என்னால எதிலுமே கவனம் செலுத்த முடியல.
அப்படி இருக்கும் பொழுது எப்படி என்னோட உடல்நலத்தை பற்றிய கவலை இருக்கும் சிகிச்சைக்கு கொஞ்சம் கூட நான் ஒத்துழைக்கல அதுவும் ஒரு காரணம் நான் நடக்க முடியுமா போனதுக்கு.
பதினைந்து வயது பையன் அப்பா வர வரைக்கும் ரொம்பவே போராடினான்.
எனக்கு ஹாஸ்பிடல்ல இருக்கும் போது என்ன தோணுச்சுன்னா என் உயிரை பறிச்சிட்டு என் பொண்ணோட உயிரை கொடுத்திருக்கலாம் இரக்கம் இல்லாத கடவுள் அப்படியும் செய்யலன்னா என் பொண்ணோட சேர்த்து என் உயிரையும் எடுத்து இருக்கலாம் எதற்காக என் உயிரை விட்டுட்டு போனாருன்னு அவரை சபிச்சேன்.
எல்லாம் என் பையனோட துடிப்பை பார்க்கற வரைக்கும் தான்..அதுக்கப்புறம் தான் யோசிச்சேன்..பொண்ணு போய்ட்டானு நானும் கூடவே போய்ட்டா இந்த பையனை யார் பாத்துக்குவா.. அவனும் என் பிள்ளை தானே அம்மா என்கிற ஜீவனுக்கு உயிர் இருந்தாலே போதுமே அதை பார்த்தே அந்த குழந்தை வளர்ந்திடும்..இல்லாம போயிட்டா அதோட எதிர்காலம் என்னாகறது.
அவனுக்காக நான் உயிர் வாழலாம்னு முடிவெடுத்தேன் அவங்க அப்பா வந்தாங்க வெளிநாட்டுக்கெல்லாம் கூட்டிட்டு போய் எனக்கு சிகிச்சை கொடுத்தாங்க நானும் முழு ஒத்துழைப்பை கொடுத்தேன் .
அந்த ஓராண்டு கால வாழ்க்கை எங்களோட போராட்ட காலம்னு சொல்லுவேன் ..
என் பையன் ஸ்கூல் போகல அந்த வருஷம் பெயில் ஆயிட்டான்..அவனுக்கு அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை..என்னை பாத்துக்கனும் அதான் அவனோட ஓரே குறிக்கோள்.
என் கூடவே இருந்தான் என்னோட தேவைகள் எல்லாத்தையும் அவன் தான் செஞ்சான்
பதினைந்து வயசு பையன் என்ன எல்லாம் பார்க்க கூடாதோ அதை எல்லாமே பார்த்தான்.. ஒரு தாய்க்கு மகள் செய்யற பணிவிடைகளை மகன் இடத்தில் இருந்து அவன் செஞ்சான்.
எத்தனை வைத்தியங்கள் பார்த்தும் மகன் பணிவிடை செய்தும் கூட என்னோட ஒரு பக்கம் கை கால் போனதை தடுக்க முடியல வீல் சேர் தான் என்னோட வாழ்க்கைனு ஆயிடுச்சு அவன் அப்பாவோ அவனோ அதுக்காக ஒரு நாள் கூட கவலைப்பட்டது இல்ல.
அம்மா நீ எங்களோட துணையா இருக்க அது போதும் அதை மட்டும் தான் சொல்லுவான் அதன் பிறகு போராடி மறுபடியும் அவனை ஸ்கூல் போக வச்சேன் பிளஸ் டூ முடித்துவிட்டு இன்ஜினியரிங் மெடிக்கல்னு போனா வெளியூர் போக வேண்டி வரும் என்ன பார்த்துக்க முடியாது என்பதற்காகவே சாதாரண டிகிரி எடுத்தான்.
வீட்டுக்கு பக்கத்திலேயே இருந்த சுமாரான காலேஜ்ல சேர்ந்தான்.
எனக்குன்னு தனியா ரெண்டு கவர்னஸ் போட்டிருந்தும் கூட என்னோட தேவைகளை அவன் கையால செஞ்சா தான் அவனுக்கு திருப்தி
தினமும் காலையில அவனோட கையால எனக்கு சாப்பாடு ஊட்டி விட்டுட்டு தான் காலேஜ் போவோன்.
முதல் நாளே கௌசல்யாவை பார்த்து இருக்கான் பார்த்தவுடனே அந்த மொட்டுக்கண்ணும்,சதுர முகமும் அவனுக்கு விக்னேஷ்வரியை ஞாபகப்படுத்தி இருக்கு.
அவளோட பேச்சு துருதுறுப்பு எல்லாமே அவனை ரொம்ப ஈர்த்திருக்கு.. அவனுக்கே தெரியாம அவ மேல ஒரு சகோதர பாசு உருவாக்கிடுச்சு அதனால்தான் அவ மேல அவனுக்கு அவ்வளவு அக்கறை பாசம்.
கௌசியுமே அவனை பாத்து விலகி போகாம ரொம்ப நாள் பழகின பொண்ணு மாதிரி அவன் கிட்ட பழகி இருக்கா ரெண்டு பேருக்கும் ஏதோ ஒன்னு புடிச்சு போனதில்ல ரொம்ப நட்பா பழக ஆரம்பிச்சிட்டாங்க.
வீட்டுக்கு ரெண்டு மூணு தடவை கூட்டிட்டு வந்திருக்கான் கௌசியும் அவ வீட்டுக்கு ஒரு தடவை போல கூட்டிட்டு போயிருக்கா..
நான் கூட ரொம்ப நாளா என் பையன் அந்த பொண்ணை லவ் பண்றான் கல்யாணம் பண்ணிக்க போறான்னு. அந்த அளவுக்கு வீட்டில் அவளை பற்றி பேசிக்கிட்டே இருப்பான்.
ஒருநாள் நான் கேட்டதுக்கு அப்படி ஒரு கோபம் அம்மா அவ என்னோட தோழி
என் விக்னேஷ்வரி அவளை போய் கல்யாணம் பண்ணப்போறியான்னு கேக்குறீங்க இப்படி யோசிக்கறதே தப்பும்மா இனிமேல் இப்படி என்கிட்ட பேசாதீங்கன்னு ரொம்ப வருத்தப்பட்டான் அதுக்கு அப்புறம் தான் அவன் கௌசி மேல வச்சிருந்த அன்பையே நான் புரிஞ்சுக்க ஆரம்பிச்சேன் .
அவங்க வீட்லயும் இதே மாதிரி விக்கியை கௌசி லவ் பண்றதா தான் நினைச்சிருக்காங்க ஒரு தடவை அவ அண்ணன் கூட கேட்டு இருக்காங்க.
அந்த பையனை பிடிச்சிருந்தா சொல்லு கல்யாணம் பண்ணி வைக்கறோம் வேணாம்னு சொல்ல எந்த காரணமும் இல்ல ரொம்ப நல்லபையனா இருக்கான்னு.
என்கிட்ட என் பையன் என்ன சொன்னானோ அதையேதான் கௌசியும் அவ வீட்ல சொல்லி இருக்கா அந்த அளவுக்கு அவங்க நட்பு விரசம் இல்லாதது.
திருமணத்திற்குப் பிறகு கௌசி உன்னோட இல்லங்குற விஷயம் தெரிஞ்சப்போ ரொம்பவே அதிர்ச்சி அடைஞ்சோம்.. அந்த சமயத்துல அவனால தான் பிரச்சனை என்பது எங்களுக்கு தெரியல. தெரிந்திருந்தால் கண்டிப்பா என் கணவர் விக்கி இருக்கிற ஆஃபிஸ்க்கு கௌசியை வரவழைத்து இருக்க மாட்டாங்க.
உங்களோட குடும்ப பிரச்சனைக்குள்ள நான் எதுக்காக வரணும்னு தான் தலையிட வில்லையே தவிர என் பையனாலதான் பிரச்சனைனு தெரிஞ்சு இருந்தா இன்னைக்கு வந்து பேசுற மாதிரி அன்னைக்கே உன்கிட்ட வந்து பேசி இருப்பேன்.
எங்களோட பிரிவுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்னு தானே கேட்கிறாய்.
காரணம் இருக்கு கௌசியோட திருமண வாழ்க்கை சரியான மட்டும்தான் நான் திருமணம் செய்துகொள்வேன்னு என்னோட பையன் சொல்லிட்டான் எந்த பொண்ணை பார்த்தாலுமே முதல்ல பிடி கொடுக்கல பின்னாடி விசாரிக்கும் பொழுது தான் இந்த விஷயம் தெரிஞ்சது அப்படி இருந்தும் கூட அவன் திருமணத்திற்கு சம்மதிச்சு கல்யாணம் வரைக்கும் கொண்டு போயிட்டோம் ஆனால் திடீர்னு அந்த கல்யாணத்தை வேணாம்னு சொல்லிட்டான்.
அப்போதான் அவனுக்கே தெரிஞ்சிருக்கு கௌசியோட பிரிவுக்கு காரணம் அவன்தான்னு.. பிறகு எப்படி திருமணத்திற்கு ஒத்துக் கொள்வான்.
என்னன்னு தெரியல கௌசி திருமணத்துக்கு பிறகு என்னால அவ்ளோ கஷ்டபட்டிருக்கா அம்மான்னு.. விக்கி சொல்லி ரொம்பவே வேதனை பட்டான்.
எங்க தப்பு நடந்ததுன்னு தெரியலை அதை சரி செய்யாமல் என்னைக்குமே நான் திருமணம் செஞ்சுக்க மாட்டேன்னு சொன்னான்.
அப்புறம் பார்த்தா திடீர்னு ஒரு நாள் நான் உங்களை விட்டுட்டு ரொம்ப தூரம் போறேன் என்ன தேடாதீங்க ஆனா நான் அடிக்கடி உங்களை தொடர்பு கொள்வேன்னுட்டு விட்டுட்டு போனவன் தான் பா பதினெட்டு மாசம் ஆச்சு எங்க இருக்கான் என்ன பண்றான்.
எதுவுமே தெரியாது அவங்க அப்பாக்கு பிசினஸ்ல ஏதாவது பிரச்சனை வரும்போது என்கிட்ட சொல்லுவாரு..
நான் அவன்கிட்ட அதை சொல்லுவேன்..உடனே லைவ்ல வருவான் அதை சரி செஞ்சு கொடுப்பானே தவிர எங்க இருக்கிற விஷயத்தை சொன்னதே இல்ல.எங்களையும் தேடக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டான்.
இப்போ நாலு நாளைக்கு முன்னாடி திடீர்னு அவன் கிட்ட இருந்து ஒரு ஃபோன் ..அம்மா நான் திருமணம் செஞ்சுக்க போறேன்.. ஆனா இந்த திருமணம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்காதுன்னு நினைக்கிறேன் ஆனா எனக்கு மன நிறைவை கொடுக்கும் அப்படின்னு சொன்னான் .
எங்க வச்சு கல்யாணம்.. பொண்ணு யாருன்னு விசாரிச்சு பார்த்தேன் எதையும் சொல்லல.. திருமணம் முடிந்த பிறகு சொல்றேன் இப்போ உங்களோட ஆசிர்வாதத்தை மட்டும் எனக்கு அனுப்பி வைங்கன்னு சொல்லிட்டான்.. கொஞ்சம் யோசிச்சு பாருப்பா ஒரே ஒரு பையன் அவனோட கல்யாணத்தை பெத்தவங்க கண்குளிர பாக்கணும்னு எவ்வளவு ஆசை இருக்கும் அதை கூட என் பையன் எங்களுக்கு கொடுக்கல..
காரணம் இங்க வந்தா மறுபடியும் கௌசியோட வாழ்க்கையில பிரச்சனை வந்துடும்னு பயப்படறான் போல.
ஆனா ஒன்னு மட்டும் உறுதியா சொல்லுவேன் கௌசல்யா சந்தோஷமா இருக்கிற விஷயம் அவனுக்கு தெரிஞ்சிருக்கு அதனாலதான் இப்போ கல்யாணம் பண்ற முடிவுக்கு வந்திருக்கான்.
எல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவன் இப்போ அவன் எங்க இருக்கிறான்னு தெரிஞ்சிக்க வந்து இருக்கீங்களாமா உங்களுக்கே சொல்லாத விஷயத்தை எப்படி எங்ககிட்ட சொல்லுவான் என்று கேட்கவும்.
கண்டிப்பா நீயும் கௌசல்யாவும் முயற்சி செஞ்சா சொல்ல முடியும். அவன் ஊரை விட்டுப் போகும்பொழுது கௌசல்யாவுக்கு ஒரு கடிதம் கொடுத்திருந்தான்.அவ தேடி வரும்போது இந்த கடிதத்தை குடுங்கன்னு.
அவளும் அதே மாதிரி கொஞ்ச நாளிலேயே அவனைக் கேட்டு வந்தா அந்த கடிதத்தை வாசித்த பிறகு தான் உன்னோட வந்து சேர்ந்தா.. அவனுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கு கௌசல்யா அவனை தேடுவா.. கடிதத்தை படிச்ச பிறகு கண்டிப்பா உன்னோட சேருவான்னு.
இப்போ நீங்க சந்தோஷமா இருக்கிற வரைக்கும் அவனுக்கு தெரிஞ்சிருக்குனா இங்க இருக்கிற யாரோ அவனுக்கு உதவுறாங்கன்னு அர்த்தம் .
யாரு என்னனு தேடி போக வயசான காலத்துல எங்களுக்கு மனசிலேயும் உடம்புலயும் தெம்பு இல்ல ஆனா கௌசல்யா நினைச்சா யார் அவனுக்கு உதவுறாங்க என்கிற விஷயத்தை கண்டிப்பா சொல்லிடுவா .
எனக்கு இந்த உதவியை நீ பண்ணனும் அவனோட கல்யாணத்தை நான் கண்குளிர பாக்கணும்.
தெய்வத்துக்கிட்ட மடிப்பிச்சை கேட்கிற மாதிரி உன் கிட்ட கேட்கிறேன் பா எனக்கு இதை நீ செஞ்சு கொடுப்பா.
அம்மா நீங்க கௌசல்யாவை சந்தேகப்படுறீங்களா எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அவளுக்கு அவன் இருக்கிற இடம் தெரியாது இதை அடிச்சு சொல்லுவேன்..அவ அவனை சுத்தமா மறந்துட்டா.
விரக்தியாக புன்னகைத்தவர்.. கௌசல்யாவுக்கு தெரியாதுன்னு சொல்லு ஏத்துக்கிறேன் மறந்துட்டான்னு சொல்லாத அது அவளால முடியாதுப்பா..
அவங்க ரெண்டு பேரோட நட்பை புரிஞ்சிகிட்ணது அவ்ளோ தான் இந்த ஜென்மம் மட்டும் இல்ல எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவங்களோட நட்பை ஒருத்தர் மாத்தி ஒருத்தரால மறக்கவே முடியாது .
அவன் சொன்னதுக்காக உன்னோட சேர்ந்து இருக்கா இப்போ சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கா அப்படி இருக்கும்பொழுது எப்படி அவனை மறப்பா இந்த சந்தோஷத்துக்கு காரணமானவனை தெய்வமாக நினைத்து தினமும் பூஜை அறையில் வைத்து கும்பிட்டுக்கிட்டு இருப்பா நீ கவனிச்சு பாரு புரியும்.
ம்ம் தினமும் மனமுருகி வேண்டுமா..
அப்படிப்பட்ட பொண்ணு அவனோட கல்யாணத்து பாக்க வேண்டாமா.. நீங்க எல்லாம் கூட இருந்தும் கூட அவனுக்காக பிரார்த்தனை பண்றான்னா எந்த அளவுக்கு அவன் மீது பாசம் வைத்திருப்பா.. நான் மட்டும் என் பையன் கல்யாணத்தை பார்க்க கூடாது கௌசல்யாவும் சேர்ந்து பார்க்கணும் நீ உதவனும்.
கல்யாணம் என்னைக்குன்னு சொன்னான் ..
அடுத்த வாரம் .
சரி வாங்க உங்களை நான் கீழ விட்டுடுறேன் என்றபடி அவரை வீல்சேரில் அழைத்துச் சென்றார்.
அதன் பிறகு படிக்கு வரும்போது கைகளில் தாங்கிக் கொண்டவன் அவர் தயங்கி சங்கோஜப் பட உங்க பையன் தூக்கும்பொழுது நீங்க இப்படித்தான் ரியாக்ட் பண்ணுவீங்களா எனக்கேற்றபடி அவரை கைகளில் தாங்கி கொண்டு போய் காரில் விட்டான்.மிஸ்டர் ராமநாதன் எப்படி இருக்காங்க..
விக்கி போன பிறகு ரொம்பவே மனசு உடைந்து போயிட்டாரு.. பிஸினஸ் எல்லாம் இப்போ ஆர்வமா பாக்கறது இல்ல..
புரியுது அம்மா இந்த உலகத்திலேயே மிகக் கொடியது புத்திர சோகம்..அவரோட இந்த நிலைமைக்கு நானும் காரணம்னு நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு.
சம்பந்தப்பட்ட நாங்க இப்போ சந்தோஷமா இருக்கோம் சம்பந்தமே இல்லாத நீங்கெல்லாம் என்னால கஷ்டப்பட்டு இருக்கீங்க .
உங்க கணவர் கிட்ட மனதார மன்னிப்பு கேட்டேனு சொல்லுங்க அவர் கிட்ட கொஞ்ச நாளைக்கு முன்னாடி கௌசி விக்கியோட நட்பு பத்தி முகம் சுளிக்கிற அளவுக்கு பேசிட்டேன். அவர் காயப்படுவார்னு தெரிஞ்சு தான் வேணும்னு அப்படி பேசினேன் அதால ஆரம்பிச்ச பிரச்சனைகள் தான் உங்க பையனை உங்களை விட்டு ஓட வச்சது.
நான் செஞ்ச தவறை நானே சரி செய்றேன்னு சொல்லுங்க கொஞ்சம் அவகாசம் மட்டும் கொடுங்க.
உங்களுக்கு நான் சத்தியம் செஞ்சு தரேன் கண்டிப்பா உங்களோட மகனின் திருமணத்தை நீங்களும் கௌசல்யாவும் பாப்பீங்க நீங்க போய்ட்டு வாங்க என அனுப்பி வைத்தான்.
அதன் பிறகு கௌசியிடம் பல பீடிகைகள் போட்டு மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்.
ஏனென்றால் இப்பொழுதுதான் வாழ்க்கை இருவருக்குமே எந்த பிரச்சனையும் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
பழையபடி இவன் விக்கியை பற்றி கேட்டு அவள் சந்தேகப்படுகிறானா என்பது போல் மீண்டும் ஆரம்பித்து விட்டால் சமாளிக்க முடியாது அதுவும் இப்பொழுது
கர்ப்பிணி வேறு எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு தான் பேச ஆரம்பித்தான்.
சுற்றி வளைத்து எப்படியோ விஷயத்தைப் பிடித்தவன் விக்கி கொடுத்த கடிதத்தில் எங்காவது செல்கிறேன் என்பது போல குறிப்பு இருந்ததா என கேட்டான்.
அவனைப் பற்றி கேட்கவுமே கௌசல்யா கண்கலங்கி விட்டாள்.
அந்த விஷரத்தை முறைத்ததற்காக என்னை மன்னிச்சிடுங்க நான் உங்ககிட்ட வந்ததுக்கு காரணம் வேணும்னா விக்கியா இருந்திருக்கலாம் ஆனால் வாழ்ந்தது இப்போ வாழ்ந்துட்டு இருக்கிறது எல்லாமே முழுக்க முழுக்க நம்மளோட காதல் தான் என்று சொன்னாள்.
அது எனக்கே தெரியும் கௌசி நீ எனக்கு சொல்லணும்னு அவசியமே இல்லை இப்போ என்ன பிரச்சனைனா விக்கியை தேடி அவங்க அம்மா என்கிட்ட வந்திருக்காங்க.. அவனை தேடி அவங்க கைல ஒப்படைக்கற பொறுப்பை என்கிட்ட குடுத்து இருக்காங்க.
விக்கிக்கு திருமணம் என்பதை மறைத்து விட்டான் சொன்னால் தன்னை அழைக்காமல் திருமணம் செய்கிறானா என்று கௌசல்யா கவலைப்படுவாள்.
முதலில் அவனை கண்டுபிடித்து விட்டு திருமணத்தைப் பற்றி கூறலாம் ஒருவேளை தாமதமாக கண்டுபிடிக்க நேர்ந்தால் திருமணம் கூட முடிந்திருக்கும் அதனால் இப்போதைக்கு அவனைத் தேடும் பொறுப்பை மட்டும் எடுப்போம் அதன் பிறகு திருமணத்தை பற்றி சொல்லிக் கொள்ளலாம் என விட்டு விட்டான்.
என்ன ..?விக்கி எங்க இருக்கிறான்னு அவங்க அம்மாவுக்கே தெரியலையா ..நம்பற மாதிரி இல்லையே..எப்படி இவ்வளவு நாள் ஆன்ட்டிமோட தொடர்பில்லாம இருப்பான்.
தொடர்பு இல்லாமன்னு சொல்ல முடியாது..அடிக்கடி பேசிட்டு இருக்கான் பிசினஸ்க்கு ஹெல்ப் பண்றான் ஆனா எங்க இருக்கிறான் என்கிற விஷயத்தை சொல்லல அதே மாதிரி இவங்களையும் தேடக்கூடாதுன்னு ஸ்டிரிட்டா சொல்லிட்டான் போல அதனால இவங்களும் முயற்சி எடுக்கல.
விக்கி பயங்கரமான அம்மா பையன்ங்க அவனோட ஸ்கூல் டேஸ்ல இருந்து ஆன்ட்டிக்கு நடக்க முடியாது..அவன் போற வரைக்கும் கூட ஆன்ட்டியை அவன் தான் கேரிங்கா பார்த்துட்டு இருந்தான் அப்படி இருக்கும்போது எப்படி?.அவன் அவங்களை விட்டுட்டு போனதை இப்போ வரை என்னால நம்ப முடியல என கவலையாக கூறவும் .
எல்லாம் விதி கௌசி..இப்போ அதை பத்தி பேசி பிரயோஜனம் இல்லை இப்போ எங்க இருக்கிறான் அதுதான் பிரச்சினை.. யாரோ அவனுக்கு உதவுறாங்க கண்டிப்பா பிசினஸ் சர்க்கிள்ல கிடையாது என்றவன் சரி உங்க காலேஜ்ல விக்கியோட யாரெல்லாம் ரொம்ப க்ளோஸ்.
அவனுக்கு அப்படி கிளோஸ் பிரண்ட் எல்லாம் யாரும் இல்லைங்க எல்லாரோடையும் ஒரே மாதிரி தான் பழகுவான் கொஞ்சம் க்ளோஸ்னா நான் ஒருத்தி தான் என்று சொல்லவும்.
சரி யாரோட அதிகமா சண்டை போடுவான் என்று கேட்கவும் .
புரியலைங்க..எதுக்காக அதை கேட்கறீங்க.
கௌசி பொதுவா ஒரு மனிதனை இரண்டு விதமான ஆட்கள் ரொம்ப மிஸ் பண்ணுவாங்க ஒன்னு அதிகமா பாசம் வைத்து இருப்பவர்கள் ..இனி ஒன்னு அதிகமா அவனோட சண்டை போட்டவங்க அவனுக்கு க்ளோசா யாரும் இல்லன்னு சொல்ற அப்போ சண்டை போட்டவன் கண்டிப்பா மிஸ் பண்ணுவான் அவன் அவனோட தொடர்பில் இருக்க வாய்ப்பிருக்கு அதனால தான் கேட்கிறேன் நல்லா யோசிச்சு பொறுமையா பதில் சொல்லு.
சண்டைன்னா..ஹான் ரவின்னு ஒரு பையனோட அடிக்கடி சண்டை போடுவான் .
அவன் கூட இங்க தான் ஒரு ஐடி கம்பெனி வைத்து நடத்திட்டு இருக்கான்.
அவங்களுக்குள்ள எதுக்காக சண்டை வரும்..விக்கி சண்டை போடற பையன் இல்லையே அதனால கேட்கறேன்.
ரெஜினான்னு ஒரு பொண்ணு இருந்தா ரொம்ப அழகா இருப்பா. என்னோட செட்டு தான் அந்த பொண்ணு கிட்ட ரவி பேசணும்னு ரொம்ப முயற்சி பண்ணுவான் ஆனா அந்த பொண்ணு எப்பவுமே விக்கி கிட்ட தான் பேசுவா ஐ திங்க் விக்கி அந்த பொண்ணை லவ் பண்ணாங்கன்னு கூட நினைக்கிறேன்.வெளிய காமிச்சிகிட்டது இல்ல.. ஆனா அந்த பொண்ணு யூஜி முடிஞ்சு உடனே போயிட்டா ஏதோ பிரச்சனை.. என்னன்னு எனக்கு தெரியல..
கொஞ்ச நாள் முன்ன காலேஜ்ல கெட் டூ கெதர் பார்ட்டி வச்சப்போ ரெஜினா வர்றான்னு தான் விக்கி ஆர்வமா கிளம்பினது..பட் என்னால அது ஸ்பாயில் ஆகிடுச்சி.
அப்போ அந்த பொண்ணுக்கும் விக்கியை பத்தின விஷயங்கள் தெரிஞ்சுக்கலாம் இல்லையா.
சான்ஸ் இல்லைங்க அந்த பொண்ணு எங்க இருக்குன்னு விக்கிக்கே தெரியாது..அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னாங்க அந்த பார்ட்டிக்கே அவ ஹஸ்பண்டோட தான் வர்றதா கேள்விப்பட்டேன்.
வாட்ஸ்அப் குரூப்பில் கூட அந்த பொண்ணு இருந்ததில்லை.
அப்போ நமக்கு இருக்கற ஒரே ஸ்கோப் ரவி மட்டும் தான் இல்லையா..அவன் அட்ரஸ் உனக்கு தெரியுமா..
தெரியாதுங்க .. வேதாகிட்ட கேட்டா தெரியும் ஏன்னா வேதாவும் ரவியும் ரொம்ப க்ளோஸ் என்றவள்.
ஆனா வேதா நம்பர் இல்லையே என கைவிரிக்கவும்.
பிரச்சனை இல்லை அவ என்னோட பிரெண்ட் ஆபீஸ்ல தானே வொர்க் பண்ணிட்டு இருந்தா அவன் மூலமா தான் யூஎஸ்-ம் போனா சோ அவன்கிட்ட கேட்டா கிடைக்கும் என்றவன் அடுத்த வினாடியே நண்பனை அழைத்தான் .
வேதாவின் அட்ரஸை வாங்கி அங்கிருந்து அவளது தாய் வீட்டிற்கு சென்று வேதாவின் போன் நம்பரை வாங்கி பேசி விட்டான்.
கௌசல்யா சொன்னது போல் வேதாகவும் ரவியும் நட்பில் தான் இருந்தனர்.
வேதா திருமணமாகி வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட ரவி இங்கே அவனது உறவு பெண்ணை திருமணம் செய்து சந்தோஷமாக இரு
ப்பதாக கூறினாள்.
ரவியின் நம்பரை வாங்கிக் கொண்டு அவனிடம் உடனடியாக பேச வேண்டும் என அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிவிட்டு அவனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தான் ஹரிகிருஷ்ணன்.

Last edited: