கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே 56

Akila vaikundam

Moderator
Staff member
56.

ஹரியை நெடு நாள் பழகியதை போல வரவேற்றவன் முதலில் எனக்கு எதுவுமே தெரியாது நான் யாரோடவும் தொடர்பில் இருந்ததில்லை என மழுப்பினான்.


கண் சிமிட்டாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஹரி நீங்க தெரியாதுன்னு சொன்னாலும் நான் உங்களை விடப்போறது இல்ல ஏன்னா உங்களுக்கு அவன் எங்க இருக்கிறான் என்கிற விஷயம் நல்லாவே தெரியும்.


உங்களோட நம்பர எனக்கு எப்படி கிடைத்ததுன்னு நினைக்கிறீங்க வேதா மூலமா ..அவ என்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டா.. உங்களை பத்தி விசாரிக்கும் பொழுதே நீ இப்போ விக்கியோட தொடர்பில் இருக்கிறாயா என்றுதான் அவகிட்ட முத முதல்ல கேட்டது.


அதுக்கு நான் தொடர்பில் இல்ல ஆனால் ரவி விக்கியோட அடிக்கடி பேசறான். ஒரு தடவை என்கிட்ட பேசும்போது இதை சொன்னாங்கங்கிற விஷயத்தை சொன்னதுக்கு அப்புறம் தான் உங்க நம்பர் கண்டிப்பா எனக்கு வேணும்னு கேட்டு வாங்கினது.
நான் உங்களை சந்திக்கிற வரைக்கும் வேதா‌ உங்களோட பேசக் கூடாதுங்கிறதையும் சொன்னேன்

விக்கியோட அம்மா அப்பாவோட உடல் நலம் தொழில் சார்ந்த பிரச்சினைகள் எங்களோட வாழ்க்கை இதை எல்லாத்தையும் நீங்கதான் விக்கிக்கு அப்டேட் பண்றீங்க என்கிற விஷயம் எனக்கு நல்லாவே தெரியுது ப்ளீஸ் அவன் எங்க இருக்கான் அவனுக்கு எப்போ கல்யாணம் யாரை கல்யாணம் பண்ணிக்க போறான் இதை மட்டும் சொல்லிடுங்க உங்களை வேற எதுக்காகவும் நான் தொல்லை பண்ண போறது இல்ல .


அவனோட அம்மாவுக்கு நான் வாக்கு கொடுத்து இருக்கேன் நீங்க உங்க நண்பனுக்கு உதவி பண்றதா நெனச்சு அந்த தாய்க்கு துரோகம் பண்ணிடாதீங்க அவனுக்காக அவனோட அம்மா அப்பா மட்டும் தவிச்சிகிட்டு இருக்கல என்னோட மனைவி கௌசல்யாவுமே அவனை பத்தி தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா காத்துட்டு இருக்கா ப்ளீஸ் அந்த ரெண்டு பெண்களை ஏமாத்திடாதீங்க ஆண்கள் நாம எல்லாத்தையும் ஜஸ்ட் லைக் தட்னு கடந்து போயிடுவோம் ஆனா பெண்கள் பாவம் அவங்க மனசுக்குள்ளேயே வச்சு மருகுவாங்க ஏற்கனவே ஒரு பெண் நோயாளியா இருக்காங்க இன்னொரு பெண்ணையும் அதே மாதிரி மாத்திடாதீங்க என்று சொல்லவும் புரிந்தது என்பது போல் தலையாட்டியவன். இருக்கும் இடத்தை கூறினான்.


கல்யாணம் எங்க..யாரை என்று கேட்டதற்கு..

இது வேணாமே.

அதான் ஏன்..இதை சொல்லற உரிமை எனக்கில்லனு நினைக்கறேன்..

நண்பண்னு சொல்லறீங்க பட்..?

யெஸ் நாங்க நண்பர்கள் தான் ஆனா எந்த அளவிற்கு என்று சொல்ல தெரியல.. நாங்க ரெண்டு பேருமே காலேஜ் டைம்ல பயங்கரமா சண்டை போட்டுப்போம் எங்களோட அஞ்சு வருஷத்துல நாங்க சண்டை போடாத நாள்ன்னு பார்த்தா எதுவுமே இருக்காது.

அதற்கு காரணம் இரண்டு பெண்கள் ஒன்று கௌசல்யா இனி ஒன்னும் ரெஜினா இந்த ரெண்டு பெண்களுமே அவனை விட்டு விலகி போகனும்று நினைப்பேன் பட் ஹீ இஸ் லக்கி..இப்போ வரை ரெண்டு பேரும் அவனோட தான் இருக்காங்க.

கௌசி ஓகே..ரெஜினாக்கு திருமணம் ஆகிட்டதா மனைவி சொன்னாளே..இப்போ டச்ல இல்லனு சொன்னதா நியாபகம்.

பட் அந்த ரெஜினாவை தான் விக்கி கல்யாணம் பண்ணிக்க போறான்.


வாட் என அதிர்ந்து போய் எழுந்தான். விக்கியின் தாயாரிடம் அவன் கூறியது நினைவிற்கு வந்தது இந்த திருமணம் உங்களுக்கு சந்தோஷமா இருக்காது ஆனா எனக்கு நிறைவா‌ இருக்கும்.


அப்படி என்றால் குடும்பமாக இருக்கும் பெண்ணை அதிலிருந்து பிரித்து வந்து திருமணம் செய்து கொள்கிறானா அந்த அளவிற்கு கேடு கெட்டவன் கிடையாது.இதை எப்படி கௌசியிடம் கூறுவது.


அவனின் பெற்றோர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் எது எப்படியாக இருந்தாலும் பெற்றவர்களிடம் மகன் இருக்கும் இடத்தை சொல்வது தான் ஊர்ஜிதம்.

இன்னும் இரண்டு நாளில் திருமணம். ரவி இடத்தை கூறியதுமே விக்கியின் தாய் தந்தையை அனுப்பி வைத்துவிட்டான்.


இப்பொழுது கௌசியிடம் கூற வேண்டும்.. நண்பன் செய்யப் போகும் காரியத்தை கேட்டால் தாங்குவாளா!
உடைந்து விட மாட்டாளா..? எது எப்படி இருந்தாலும் சரி நிகழ்விடத்திற்கு அவளை அழைத்துச் செல்வது என முடிவெடுத்து இதோ கிளம்பி விட்டான்.


கௌசி சீக்கிரமா பேக் பண்ணு பிளைட்டுக்கு டைம் ஆயிருச்சு.


எங்கங்க போறோம் எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்க அனுவை வேற கொண்டு போய் அம்மா வீட்ல விட சொல்லிட்டீங்க எனக்கு வேற டயர்டா இருக்கு..

அதான் சொன்னேனே கோவான்னு ..


கோவா தெரியுது எதுக்காக அங்க போறோம்.


புருஷன் பொண்டாட்டி ஜோடியா எதுக்கு எதுக்கு போவாங்க என்ன சில்மிஷமாக கண்ணடித்தபடி கேட்க .


எப்போ பார்த்தாலும் உங்களுக்கு கிண்டல் தான் என்றவள் சந்தேகமாக ஒருவேளை விக்கி அங்கேயா இருக்கான் என கேட்கவும்.

சர்ப்ரைஸ் என கண்களை சிமிட்டுனான்..

கணவனை ஆசையாக கட்டிக் கொண்டவள் இதை ஃபர்ஸ்ட்டே சொல்லி இருக்கலாம்ல‌‌ என குறைப்பட்டு கொண்டு நண்பனை காணப்போகும் கனவுகளோடு விமானம் ஏறினாள்.

பயணம் முழுவதும் விக்கியைப் பற்றிய கேள்விகளை தான் கேட்டுக் கொண்டிருந்தாள்.


ஏங்க ரவிக்கும் விக்கிக்கும் சுத்தமா ஆகாது எப்படி அவங்க திடீர்னு பேட்ச் அப் ஆனாங்க ..சரி அதை விடுங்க விக்கி யாரை கல்யாணம் பண்ணிக்க போறானாம்.. ஏதாவது போட்டோ காமிச்சனா அந்த ரவி..பொண்ணு அழகா இருக்காளா..? ஏன் திடீர்னு யார்கிட்டயும் சொல்லாம கல்யாணம் பண்ணிக்கறான்..யாரைப் பற்றியும் கவலைப்படாம
இவ்வளவு நாள் கோவால என்ன பண்ணினானாம் .. என்று வளவளவெள கேள்வி மேல் கேள்வியாய் கேட்டுக்கொண்டே வந்தாள்.


திரும்பி அவளை பார்த்தவன் அங்க போனா எல்லாம் தெரிந்திட போகுது எதுக்கு இவ்வளவு கேள்வி? என கேட்கவும் வாயை மூடி கொண்டாள்.


ரெஜினா வீல் சேரில் அமர்ந்திருக்க அவளது மடியில் செல்லமகள் சமர்த்தாக அமர்ந்திருந்தது.
அருகே விக்னேஷ்வரன் கம்பீரமாக நின்று கொண்டிருந்தான் ஆளே மாறிவிட்டான். உடல் எடை கூடி எலும்புகள் முறுக்கேறி கட்டுமஸ்தாக இருந்தான் நிறம் கூட சற்று ஏறி இருந்தது போல தோன்றியது.

அடுத்ததாக தாய் தந்தையுடன் குரூப் போட்டோ எடுத்தவன் கௌசியை கண்களாலேயே அருகில் வாவென அழைத்தான் கண்களில் கண்ணீருடன் கணவனைப் பார்க்க போ என அனுப்பி வைத்தான்.விக்கியுடன் தனியாக புகைப்படம் எடுக்க ஆட்சேபிக்க வில்லை ஹரியின் கண்களுமே கலங்கியிருந்தது.


நேற்றைய நிகழ்வை மீண்டும் ஒருமுறை நினைவு கூர்ந்தாள்.


விமானம் விட்டு இறங்கும் வரையும் பரபரப்போடு தான் இருந்தாள்.ஏர்போர்ட்டிலேயே இவர்களின் பெயர்களை எழுதிய பதாகையுடன் ஓருவர் காத்திருக்கவும் விக்கியின் ஏற்பாடு என புரிந்து போயிற்று.

நாம வர்றதுக்கு தெரியுமா என்று கணவனிடம் கேட்கவும் .


ரவி சொல்லி இருப்பான் என்று முடித்துக் கொண்டான் இன்னுமே அவனது மனதில் ரெஜினாவை பற்றிய குழப்பங்கள் இருந்தது நேரில் சென்று பார்த்தல் மட்டுமே தீரும்.

கார் கடற்கரையைத் தாண்டி ஒதுக்குப்புறமான இடத்திற்குச் சென்றது பண்ணை வீடுகள் மட்டுமே நிரம்பியிருந்தது.


பெரும் பணக்காரர்கள் விடுமுறை நாளை கழிப்பதற்காகவே கட்டப்பட்டது என்று சொல்லாமல் சொல்லியது.. மதுபான கடைகள் நிரம்பி வழிய கேளிக்கைகள் ஓரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.


விக்கிக்கு ட்ரிங்க்ஸ் பண்றவங்களை கண்டாலே பிடிக்காது அவன் எப்படி இந்த மாதிரி இடத்துல இருக்கான் ஆச்சரியமாக கேட்டாள்.

கௌசி நானும் உன்னை மாதிரி தான் வந்துட்டு இருக்கேன் என்கிட்ட இவ்ளோ கேள்வி கேட்டா எனக்கு எப்படி தெரியும் அவனா சொன்னா தான் தெரியும் பொறுமையா இரு.


கார் இப்பொழுது ஒரு பண்ணை வீட்டுக்குள் செல்ல திருமணத்திற்கான ஏற்பாடுகள் வெகு மும்பரமாக நடந்து கொண்டிருந்தது அந்தப் பண்ணை வீட்டின் முன்புறமும் ஒரு மதுபான கடை இருக்க சற்று முகத்தை சுளித்தபடியே தான் உள்ளே சென்றாள்.


ஒரு பெரியவர் வந்து அவர்களை வரவேற்று ஓரு அறையில் தங்கச்சொல்லி பணிந்தார்.


எல்லாமே குழப்பமாக இருந்தது.இது போன்ற இடத்தில் விக்கி எப்படி..என பல கேள்விகள் மனதிற்குள்.
ஆனாலும் அவளின் உடல் உபாதைகள் மேற்கொண்டு சிந்திக்கவிடவில்லை எங்காவது கால்நீட்டி படுத்தால் தேவையில்லை என்று தோன்ற உடனே
கணவரிடம் கூறிவிட்டு படுத்து விட்டாள்.

எவ்வளவு நேரம் அறைக்குள் முடங்கி கிடப்பது சற்று நேரம் வெளியே சுற்றி விட்டு வரலாம் என வீட்டை விட்டு வெளியே வர தூரத்தில் ராமநாதனும் அவரது மனைவியும் பந்தல் போடும் பணிகளை மேற்பாடுகளை இட்டுக் கொண்டிருந்தனர்.


இவனைப் பார்த்ததுமே இவனை நோக்கி வர நானே வருகிறேன் என்பது போல ஜாடை செய்தபடி அங்கே சென்றான்.

பிரயாணம் எல்லாம் சௌகரியமாய் இருந்ததா ..கௌசி எங்கே என கேட்டார்.

கௌசி ரெஸ்ட் எடுக்கறா..விக்கி எங்கே..?

அவனை நாங்க நேத்து பார்த்தது.. அதுக்கப்புறம் எங்கே போனான்னு தெரியலைபா என்றார் தாயார்.

ம்ம் என்றவனும் திருமண வேலைகளில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டான்.

சற்று நேரத்தில் சொகுசு கார் ஒன்று உள்ளே வர அதிலிருந்து வேகமாக இறங்கி வந்தான் விக்கி நேராக தாயிடம் சென்று ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டவன் தந்தையைக் கட்டி அணைத்துவிட்டு ஹரியைப் பார்த்து தயங்கியபடி நின்றான்.


ஹரிக்கும் அதே தயக்கம் தான் நெடுநாள் அவர்களுக்குள் இருக்கும் பனிப்போர் வேறு அவர்களை நெருங்க விடாமல் தடுத்தது.

விக்கியின் தாயார் தான் இருவரின் தயக்கத்தையும் பார்த்து இன்னைக்கு நாங்க உன்னோட இருக்கோம்னா அதுக்கு காரணம் இந்த தம்பி தான் என்று அவர்களின் மௌன போரை முடிவுக்கு கொண்டு வர முனைந்தார்.


அடுத்த நொடி விக்கியோ வேகமாக ஹரியை கட்டி அணைத்துக் கொண்டவன் தேங்க்ஸ் அண்ணா தேங்க்ஸ் ஃபார் எவ்ரி திங்க் நீங்க என் அம்மா அப்பாவை மட்டும் என்கிட்ட கொண்டு வந்து சேர்க்கல.

என் நட்பையும் கொண்டு வந்து இருக்கீங்க இதுக்கு நான் உங்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் ஈடாகாது அது மட்டும் கிடையாது நீங்க என் தோழியை தேவதை மாதிரி பார்த்துக்கிறீங்க அவ இப்போ சந்தோஷமா இருக்கா அதுக்கு முழுக்க முழுக்க நீங்க மட்டும் தான் காரணம்..
சொல்லுங்க நான் என்ன செய்யணும் எனக் கேட்கவும்.


கல்யாணம் பண்ணிக்கோ.. அதுக்கு அப்புறமா எங்களோட தமிழ்நாட்டுக்கு வந்திடு இந்த கோவா லைப் ஸ்டைல் உனக்கு வேணாம் இதை உன் அம்மா அப்பா கௌசி யாருமே விரும்பல.


கண்டிப்பா அண்ணா இந்த திருமணம் முடிந்த பிறகு உங்களுக்காக நான் இதை செய்வேன்.


சரி எதுக்கு இந்த ஒன்றரை வருஷமா கண்ணாமூச்சி விளையாட்டு கௌசி என்கிட்ட வந்த பிறகாவது நீ உன் அம்மா அப்பாவை மட்டுமாவது பார்த்து இருக்கலாமே.


அண்ணா இதுக்கு என்கிட்ட பதில் இல்ல.. உங்க கிட்ட பேசின பிறகு என்னோட அப்பா கிட்டேயும் பேசினேன் அந்த சமயத்துல நான் ரொம்ப குழப்பமா இருந்தேன்.. கையில கொஞ்சமா காசு இருந்தது எங்க போகணும்னு தெரியல ஏர்போர்ட் போனேன் அந்த சமயத்துல எந்த மாநிலத்துக்கு டிக்கெட் கிடைக்குதோ அந்த ஸ்டேட் போறது தான் முடிவு பண்ணி இருந்தேன் எனக்கு டெல்லி ப்ளைட்க்கு டிக்கெட் கிடைச்சது கிளம்பிட்டேன்.


பிளைட்ல என்னோட பக்கத்து சீட் என்னோட காலேஜ்ல படிச்ச பிரண்டோடது அவன் என்னை பார்த்து ரொம்ப சந்தோஷமானான்.
அப்போதைக்கு எனக்கு தங்கறதுக்கு இடம் இல்ல வேலை இல்லை வீட்ல கோவிச்சுக்கிட்டு வந்துட்டேனு பொதுவா சொன்னேன்.


அதனால என்ன என் கூட தங்கிக்கோ நான் உனக்கு ஒரு வேலை வாங்கி தரேன்னு உடனே அரேஞ்ச் பண்ணினான்.


ஆறு மாசம் நல்லா போச்சு கைல கொஞ்சம் காசு சேர்த்து.. அம்மாவோட பேசுறது அப்பாக்கு பிசினஸ்ல சப்போர்ட் பண்றது இப்படி ஸ்மூத்தா போகும்போது ரவி மறுபடியும் என் வாழ்க்கைக்குள்ள வந்தான்..பிளைட்ல நான் பார்த்த நண்பணும் ரவியும் காமன் ஃப்ரெண்ட்ஸ்.. என்ன அவனின் ஓராண்டு கால கதையை சொல்ல சொல்லவே ஹரிக்கு தாங்க முடியாத அளவிற்கு வேதனை உண்டாயிற்று.


அவனை கட்டிப்பிடித்து கண்ணீர் விட ஆரம்பித்து விட்டான்..என்ன மாதிரியான மனுஷன் டா நீ உன்ன போய் கேவலமா நினைச்சேனடா ..உன் கால்ல கூட விழுந்து மன்னிப்பு கேட்கலாம் அதுக்கு உனக்கு தகுதி இருக்கு ஆனா மன்னிப்பு கேட்கிற அளவுக்கு கூட எனக்கு தகுதி இல்லை என்று உணர்ச்சி பொங்க கூறவும் அண்ணா ப்ளீஸ் இப்படி பேசாதீங்க.


உண்மையிலேயே உங்களுக்கு என் மேல கோபம் எதுவுமே இல்லனா ஒரே ஒரு முறை கௌசியை பார்க்க அனுமதிக்கணும் அவளை பாக்கணும் எப்பவுமே சோகமான மோனிலியா ஓவியம் போல இருக்கும் அவ தாய்மை பூரிப்பில் எப்படி இருக்குனு பாக்கனும்.. ப்ளீஸ் அண்ணா.


போடா அந்த ரூம்ல தான் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கா போ போய் உன் தோழியை பாரு.. இந்த ஒன்றரை வருஷ கதையை பேசு நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் என்றபடி சென்றான்.

திக் திக் என்று இதயம் துடிக்கும் சத்தம் அவனுக்கே கேட்க கௌசி தங்கி இருந்த அறையை நோக்கி வேகமாக ஓடியவன் கதவருகே வரவும் தயங்கி நின்றான். பிறகு விரலை மடக்கி கதவைத் தட்ட உள்ளிருந்து எந்த ஒரு சத்தத்தையும் காணோம்.மெதுவாக கதவை திறக்க கோவில் சிற்பம் ஒன்று சயன நிலையில் அமர்ந்திருப்பதைப் போல தலை சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.


அவளை தலையில் இருந்து பாதம் வரை கண்ணீருடன் அளவெடுத்தான். தாய்மை பொங்கிய அவளின் முகம் தூக்கத்திலும் பூரிப்புடன் காணப்பட்டது.

காற்றில் புடவை விலக அவளின் மணிவயிறு மெல்ல வெளியே தெரிந்தது. கால்கள் குறுக்கியப்படி இருக்க அசோகரிகமாக உறங்கிக் கொண்டிருப்பது அவனுக்கே புரிந்தது புது இடம் என்ற முன்னெச்சரிக்கை. பெண்களுக்கே உரித்தானது.. மனதிற்குள் அதையும் ரசித்தவன்
அருகே சென்று கால்களை நேராக வைத்து, காற்றில் விலகும் புடவையை சரி செய்து விட்டு போர்வையால் கழுத்து வரை மூடிவிட்டு ஒரு சேரை இழுத்துப் போட்டு அருகே அமர்ந்து விட்டான்.

தூர தேசம் சென்று வந்த களைப்பு அவனுக்குள்..அமர்ந்த வாறே அவனும் கண்ணயர்ந்தான்.


கௌசி பயண களைப்பு எல்லாம் தீர்ந்து கண் விழித்தாள் .
எதிரில் தலை சாய்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் நண்பனை கண்டு ஏதோ கனவு என நினைத்து இயல்பாக எழுத அமர்ந்தவளுக்கு தன் மீது இருக்கும் போர்வை உறுத்தியது .


போர்த்திகிட்டெல்லாம் படுக்கலையே அப்படியே உக்காந்த மாதிரிதானே தூங்கினோம் அப்படின்னா இது என்று நண்பனை கண் சிமிட்டாமல் பார்க்க.

அவள் எழுந்து சத்தத்தில் அவனுமே கண் விழித்து விட்டான் இருவர் கண்களும் ஒருசேர கண்ணீரை சிந்தியது .


பேச்சு வரவில்லை திடீரென மூச்சு விட சிரமப்பட்டவள் கட்டிலில் இருந்து இறங்கி வேகமாக வாசலுக்கு வந்தாள் .

ஆனால் அறையின் வெளியே செல்ல முடியவில்லை தலை கிறுகிறுத்தது..அழுகை பொங்கி வந்தது கட்டுப்படுத்தவும் முடியவில்லை.. ஒன்றரை ஆண்டு காலம் தன்னை தவிக்க விட்டவன் இன்று தன் முன்னே அமர்ந்திருக்கிறான் ஆனால் பேசுவதற்கு ஒரு வார்த்தை கூட வரவில்லை.


அவனுக்கும் அதே நிலைதான் ஆண்மகன் அழக்கூடாது என்ற கட்டுப்பாடெல்லாம் இல்லை கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து வர அதை துடைக்க கூட தோன்றாமல் கௌசியை தட்டி முழிக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏன்டா.. ஏன்..ஏன்.. அந்த ஒரு வார்த்தையை தவிர அவளால் வேறு வார்த்தையை பேச முடியவில்லை அப்படியே கால் மடித்து தரையில் அமர்ந்தவள் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு ஓவென குலுக்கி குலுக்கி அழ ஆரம்பித்துவிட்டாள்.


வெளியே சத்தம் கேட்டு மூவருமே ஒரு வினாடி திடுக்கிட்டனர் பிறகு ஹ

ரிதான் அவங்க பேசட்டும் நாம அவங்களை தொல்லை செய்ய வேண்டாம் என்று அவர்களின் அழுகை சத்தம் கூட கேட்க முடியாத இடத்திற்கு நகர்ந்து சென்றனர்.
 
Last edited:
Top