கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே 58

Akila vaikundam

Moderator
Staff member
58

உனக்கு ரெஜினாவை பிடிக்கும்னு தெரியும் இந்த அளவிற்குன்னு எனக்கு தெரியாது விக்கி.

ம்ம்..யார்கிட்டயும் வெளிக்காட்டிகிட்டது கிடையாது. நீ எப்படி எனக்கு ஸ்பெஷலோ அதே மாதிரி அவளும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.

அவளை நீ லவ் பண்ணினியா என்ன என்று கேட்கவும்.

விரக்தியாக சிரித்தவன் முதல் முதலா உன்னை பார்த்தபோ என்னை விட்டு போன என் தங்கை நியாபகத்துக்கு வந்தா..ஆனா அவளை பார்த்தப்போ எனக்காகவே பிறந்து வந்தவள் போன தோணினா அது காதல்னா யெஸ் நான் அவளை லவ் பண்ணினேன்.

என்ன உனக்கு தங்கை இருந்தாளா என்று கேட்கவும் ஆமா அவளோட மரணத்தின் போது தான் என்னோட அம்மாக்கு இதுபோல ஆச்சு அதனால யார்கிட்டயும் அதைபத்தி பேசினது இல்ல. என்னை சுத்தி இருக்கிறவங்க எப்பவுமே என்னோட சந்தோஷமான பக்கங்களை மட்டும் தான் பாக்கணும் வருத்தமான பக்கங்களை பார்க்கறதை நான் விரும்பல அதான் நெருங்கிய தோழியா இருந்தும் கூட உன்கிட்ட இருந்து மறைச்சேன் .


ஒருவேளை ஆரம்பத்திலேயே சொல்லி இருந்திருக்கணும் சொல்லி இருந்தால் நீ எப்படியும் ஹரி அண்ணா கிட்ட சொல்லி இருப்பாய் .. உன் வாழ்க்கையில் நடந்த பிரச்சனைகளும் நடக்காமல் இருந்திருக்கும் எல்லாமே என்னோட முட்டாள் தனம் தான்.

அவனுக்கு ஒரு தங்கை இருந்தது, அவள் மறைந்ததையும் நினைத்து சில வினாடிகள் மனம் வருந்தி மௌனம் காத்தாள் பிறகு சூழ்நிலையை இயல்பார்க்கும் பொருட்டு விடு விக்கி நடந்து போனது பற்றி எதுக்காக பேசிட்டு இருக்கணும் நீ உன் காதலை பத்தி சொல்லு.. கூடவே அம்மாஞ்சி மாதிரி சுத்திக்கிட்டு இருந்த என் பிரண்ட் ஒரு பொண்ணை மனசுக்குள்ள காதலிச்சு இருக்கான் இது கூட தெரியாமல் நானும் பிரெண்டுனு சொல்லி சுத்திக்கிட்டு இருக்கேன் என்று சிரிக்க முயன்று தோற்றுப் போய் கேட்டாள்.


உனக்கு ஃபர்ஸ்ட் டைம் ஞாபகம் இருக்கா? நீ நான் ரெஜினா மூனு பேருமே ஒரே நாள்ல தான் சந்திச்சுக்கிட்டோம் அவளை எனக்கு அவ்ளோ புடிச்சது ..என்னவோ ரொம்ப நாள் பழகின மாதிரி..என் கண்ணுக்கு அவ மட்டும் தான் பேரழகியாவும் தெரிஞ்சா.


அவளுக்கும் அதே அளவு என்னை பிடிச்சது என்ன பிரச்சனைனா நான் ரெஜினாவை நேசிச்ச மாதிரியே ரவியும் அவளை நேசிச்சான்.

ஓஓ இதுக்காக தான் நீங்க ரெண்டு பேரும் அடிக்கடி காலேஜ்ல சண்டை போட்டீங்களா என கௌசல்யா கேட்கவும் .

அது மட்டும் தான் காரணம் எங்களுக்குள்ள யார் ரெஜினாவை காதலிக்கறது என்கிற போட்டியே நடந்தது.


ஆனா ரெஜினா யாரை விரும்புறாங்கறது தெரியல..பொதுவா ரெஜினா எல்லார்கிட்டயும் ஒரே போல பழகற டைப்..என்கிட்ட‌ மட்டும் கொஞ்சம் க்ளோசா பேசுவா.. ரவியை நல்லாவே அவாய்ட் பண்ணுவா சோ அதை காரணமாக வைத்து தான் என்கிட்ட சண்டை போடுவான்.


எனக்கு தெரியும் ரவி ரெஜினாவை லவ் பண்ணினது.. ரெஜினா மனசுல என்ன இருக்குன்னு தெரியாததால நான் அவகிட்ட சொன்னதில்ல..அவ்வளவு ஏன் என் காதலையே அவகிட்ட சொன்னதில்லை.

எங்க ரெண்டு பேரோட புரிதலை பார்த்து பொறாமை பட்ட ரவி ரெஜினா அப்பாகிட்ட அவளையும் என்னையும் பத்தி தப்பு தப்பா சொல்லி வச்சிட்டான்.

அவரும் பயந்து போய் ரெஜியோட யூஜி முடியவும் மேல படிக்க விடாம கூட்டிட்டு போய்ட்டாரு இதனால எனக்கு ரவி மேல கோபம்..பிஜி முடியற வரைக்கும் அவனோட சண்டை போட்டுகிட்டே இருந்தேன்.. எதுக்காக சண்டை போடறோம் அப்படிங்கறது யாருக்குமே தெரியாது சம்பந்தப்பட்ட எங்க ரெண்டு பேரையும் தவிர.


ரவி என்னதான் சண்டை போட்டாலும் அவன் மனசுக்குள்ள ரெஜி போனதற்கான வருத்தம் ரொம்பவே இருந்தது.. அநியாயமா நல்லா படிச்ச பொண்ணோட லைஃபை கெடுத்து விட்டோமேன்னு அவன் மனசுக்குள்ளேயே குற்ற உணர்ச்சியில் குமஞ்சுகிட்டு இருந்திருக்கான் ..அதோட வெளிப்பாடு தான் அப்பப்போ என்னை பார்க்கும் பொழுது வம்பு சண்டைக்கு இழுத்தது.

உனக்கே தெரியும் ரெஜினா வேற மதத்தை சார்ந்த பொண்ணு அவள் மதத்தில் இருந்து ஒரு பெண் கல்லூரி வரை படிக்க வர்றா அப்படின்னா அது பெரிய விஷயம்.

அதுவும் ரெஜி ரொம்ப நல்லா படிக்கிற பொண்ணு அவளுக்கு நிறைய கனவுகள் இருந்தது அவளோட படிப்புக்காக தான் நானும் அவளிடம் காதலை சொல்லாம இருந்தது படித்து முடித்த பிறகு காதலை சொல்லி திருமணம் செஞ்சுக்கலாம்னு இருந்தேன் பட் ரவியோட ஆத்திரத்துல எல்லாம் ஸ்பாயில் ஆகிடுச்சி.

நான் தேடி போயிருக்கலாம் என் அம்மாவோட ஹெல்த் என்னை பெருசா யோசிக்க விடல.
சரி என் குடுப்பினை அவ்ளோதான்னு நினைச்சி அம்மா காலேஜ் அதோட முடிச்சிகிட்டேன்.

காலேஜ் முடிச்சு எனக்குன்னு தனியா வேலை தொடங்கின பிறகு ரெஜினாவை பற்றி விசாரிக்கும் போது அவளுக்கு திருமணம் ஏற்பாடு நடக்கிற விஷயத்தை கேள்விப்பட்டேன்.

ரெஜி என்கிட்ட அவ காதலை சொன்னதில்லை அப்படி இருக்கும் போது ஏன் தேவையில்லாம பிரச்சனை பண்ணனும்னு அப்படியே ஒதுங்கிட்டேன்.


ஆனா ரவி அவளை தீவிரமாக காதலித்தான் அல்லவா அதனால அவளோட ஒவ்வொரு விஷயத்தையும் நுனி விரல்ல அப்டேட்டா வெச்சிருந்தான்.

அவகிட்ட மன்னிப்பு கேட்கிறதுக்காகவே அரேஞ்ச் பண்ணின பார்ட்டி தான் அந்த கெட் டூ கெதர் பார்ட்டி அதோட ஆர்கனைசர் ரவிதான்.
ஆனா ரெஜி அங்க வந்தது என்னை பார்க்க மட்டுமே அன்னைக்கு நம்மளால அங்க போக முடியல.


அவ கணவர் கிட்ட கூட என்னை அவளோட க்ரஷ் என்று சொல்லி வைத்திருக்கிறாள்..அவருக்கும் கூட என்ன பாக்கணும்னு ஆர்வம் இருந்ததாம் பட் நான் மிஸ் பண்ணிட்டேன்.


அதன்பிறகு உன் குடும்ப பிரச்சனை எனக்கு தெரிய வந்துச்சு உனக்கு ஏதாவது நல்லது செய்யணும் என்பதற்காக இங்கிருந்து டெல்லி போயிட்டேன்.

பிளைட்ல நம்ம கூட படிச்ச ஷாம் பார்த்தேன் என்னோட சர்டிபிகேட் எல்லாமே மெயில்ல சேவ் பண்ணி வச்சதால அதை வச்சு எனக்கு ஒரு வேலை அரேஞ்ச் பண்ணினான்.

சிக்ஸ் மன்த் ரொம்ப நல்லா போச்சு. ஆனா என்னால அங்க கண்டினியூ பண்ண முடியல அம்மா ஹெல்த் பத்தின கவலை.., நீ எப்படி இருக்கறன்னு தெரியல..உன் லைஃப் பத்தி தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமா இருந்தேன் ..அம்மா கிட்ட கூட அடிக்கடி பேசிப்பன் அப்பாவுக்கு ஆன்லைன்ல ஹெல்ப் பண்ணினேன்,உன்னை பத்தி யார் கிட்ட விசாரிக்க பைத்தியம் பிடிக்கிற நிலை..

அந்த சமயம் மறுபடியும் ரவி என் லைஃப்க்குள்ள வந்தான்.
ஷாம் ,ரவி ரெண்டு பேரும் க்ளோஸ் இல்லையா அவனோட ஒருமுறை லைவா பேசிக்கிட்டு இருக்கும்போது பின்னாடி நான் தெரியவும் என் கிட்டயும் பேசணும்னு விருப்பப்பட்டான்.

அவன் மேல இருந்த கோபம் அப்படியே இருந்ததால நான் பேச மறுத்துட்டேன் ஆனா அவன் விடல உடனே ஷாம் கிட்ட இருந்து நம்பர் வாங்கிட்டு எனக்கே கூப்பிட்டான்.


கடவுள் யாரையும் சம்பந்தமில்லாமல் நம்ம வாழ்க்கைக்குள்ள வர விட மாட்டார் என்பதற்கு ரவி சிறந்து எடுத்துக்காட்டு.

முதல் இரண்டு தடவை அவனோட அழைப்பை கட் பண்ணி விட்டேன் மூணாவது முறையும் அவன் கூப்பிடவும் கட் பண்ண மனசு இல்லாம என்னன்னு வேண்டா வெறுப்பா தான் கேட்டேன்.

ஆனா அவன் எடுத்ததுமே என்கிட்ட சாரி கேட்டான் ரெஜி படிப்பு ஸ்பாயில் ஆனதுக்கு ரொம்பவே வருத்தப்பட்டான் அது மட்டும் இல்லாம கெட் டூ கெதர்ல ரெஜி என்னை தேடினதாகவும் எனக்காக ரொம்ப நேரம் காத்து இருந்ததையும் சொன்னான்.


எல்லாமே காலம் கடந்த தகவல்கள்னு சொன்னேன் .

இல்ல உன்னை ஒருமுறையாவது பாக்கனும்னு அவ ஆசைபடறா அவளோட கோவா அட்ரஸ் குடுத்துட்டு போனா இப்பவும் அங்க தான் இருக்கானு கூடுதல் தகவல் சொன்னான்.

எதுக்குன்னு எனக்கு தெரிஞ்சாலும் ரவி வாயால அதை தெரிஞ்சுக்க ஆசைப்பட்டு ஏதாவது ஸ்பெசிபிக் காரணம் சொன்னாளா.

விக்கி ரொம்ப ஸ்மார்ட்டா ஆக்ட் பண்ணாத அவ மனசுல என்ன இருந்ததுன்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் அவளுக்கு இப்போ கல்யாண ஆயிடுச்சு..கணவனோட சந்தோஷமா இருக்கா இப்போ ஒரு குழந்தை கூட இருக்கு..சோ நாம பழைய விஷயங்களை பேச வேண்டாம்.

இப்போதைய லைஃப் நல்லா போகுதுன்னு உன்கிட்ட தெரியப்படுத்தனும்னு ஆசைப்படறா நீ விருப்பப்பட்டா கோவா போய் அவளை ஒரு முறை பாரு.. அவளோட கணவர் ரொம்ப நல்ல டைப் கண்டிப்பா தவறா நினைக்க வாய்ப்பு இல்லை


ஒகே ரவி அட்ரஸ் அண்ட் போன் நம்பர் தா ஃபீரி டைம்ல பாக்க முயற்சி செய்யறேன்..அப்புறம் என்று‌இழுத்தவன் தயங்கி தயங்கி கௌசல்யா பற்றி விசாரித்தான்.

நீ என்னடா கௌசல்யா பத்தி என்கிட்ட விசாரிக்கற..நான் தான் உன் கிட்ட அவளை பற்றி விசாரிக்கணும்.

இல்ல ரவி சின்ன பிரச்சனை அதனால நான் அவகிட்ட சொல்லிக்காம டெல்லி வந்துட்டேன் இப்போ நான் எங்க இருக்கேன்னு அவளுக்கு தெரியாது ஆனா அவ எப்படி இருக்கா என்கிற விஷயம் எனக்கு தெரியணும் ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமா.


என்னடா ஹெல்ப் பண்ண முடியுமான்னு ரெக்வெஸ்ட் பண்ணிட்டு இருக்க என்ன பண்ணனும்னு சொல்லுடா என உரிமையாக அதட்டினான்.


அதன் பிறகு இரண்டே நாளில் கௌசல்யாவை பற்றிய அத்தனை விஷயங்களையும் அவனிடம் கொண்டு வந்து சேர்த்தான்.

அவள் மிகவும் சந்தோஷமாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு விட்டாள் என்பதை ரவி சொல்வதை வைத்து புரிந்து கொண்டான்.


இனி தனக்கு டெல்லியில் வேலை இல்லை சொந்த ஊருக்கே திரும்பிவிடலாம் அதற்கு முன்பாக ரெஜினாவை மட்டும் ஒரு முறை சந்தித்து விட்டுச் செல்லலாம் என அவன் கோவா வந்தான்.


ஒரு நாள் முழுவதும் அலைந்து ரெஜினாவின் விலாசத்தை கண்டுபிடித்து வீடு சென்ற பொழுது அங்கே ஒருவருக்கு இறுதி சடங்கு நடந்து கொண்டிருந்தது.


யார் என விசாரிக்கும் போது தான் அது ரெஜியின் கணவன் என்று தெரிந்தது உலகமே காலை விட்டு நழுவிச்செல்வது போன்றதொரு அதிர்ச்சி அவனால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே முடியவில்லை.


எப்படி இது நடந்தது என விசாரிக்கும் பொழுது ரெஜியின் கணவன் ஒரு மதுபான விடுதியை நடத்துபவர்..மதுவிற்கு அடிமையும் கூட.
அவரது விடுதியில் தினமுமே ஏதாவது ஒரு பார்ட்டி நடந்து கொண்டே இருக்குமாம் சில நேரங்களில் தனியாக கலந்து கொள்வார் பல நேரங்களில் ரெஜினாவை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வார் அப்படித்தான் அன்றும் நடந்திருக்கிறது.

குழந்தையை வீட்டில் விட்டு விட்டு கணவனும் மனைவியும் இரவு நேர பாட்டிக்கு சென்று விட்டு வரும்பொழுது எதிர்பாராத விதமாக விபத்து நடக்க அதில் ரெஜினா படுக்காயங்களுடன் மருத்துவமனையில் அவள் கணவனோ இறுதி ஊர்வலத்தில்.

அடித்து பிடித்து மருத்துவமனையின் விலாசத்தை அறிந்துகொண்டு அவன் அங்கே செல்லும் பொழுது கணவன் இறந்துவிட்ட செய்தி கூட தெரியாமல் கோமாவில் படுத்து இருந்தாள் ரெஜினா.


அவளின் துணைக்கு கூட யாருமே இல்லை அவளுக்கு ஏற்கனவே தாயார் கிடையாது என்பது தெரியும் உடன்பிறப்புகளும் யாரும் கிடையாது. அவளுக்கு உறவு என்று சொல்லிக்கொள்ள தந்தை மட்டுமே.


அதுவும் இப்படியான செய்தி கேட்ட பிறகு தான் அவரும் அவசர அவசரமாக ஊரிலிருந்து இங்கே வந்திருக்கிறார்.


இவர் வரவுமே குழந்தையை அவரின் கையில் திணித்துவிட்டு கணவரின் குடும்பத்தார் பிள்ளையின் இறுதிச்சடங்கை‌ முடித்து விட்டனர்.

விக்கியை பார்த்ததுமே அவருக்கு மிகவும் குற்ற உணர்ச்சியாக போய்விட்டது.


மகள் அவனை பிடிக்கும் என்று மட்டும் தானே சொன்னான் அதற்கே அவளின்‌ படிப்பை கெடுத்து அடித்து சித்ரவதை செய்து பணக்காரன் என ஒருவனுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்.


அந்தக் குடும்பமும் ரெஜினாவை ஏற்றுக் கொண்டது அவரின் தந்தையை ஏற்றுக் கொள்ளவில்லை.பிச்சைகாரன் என எள்ளி நகையாடியது..அதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம் இப்பொழுது மகன் இறக்கவும் உங்கள் மகளின் ராசியால் தான் எங்களுடைய மகன் இவ்வளவு சீக்கிரமாக இறந்துவிட்டான்.. உங்கள் பெண்ணையும் அவள் பெற்ற பிள்ளையையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் இனி உங்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மொத்தமாக கை கழுவி விட்டார்களே என்ன மாதிரியான மனிதர்கள் .

பெண் விரும்பிய படிப்பையும் கொடுக்க முடியவில்லை.. அவள் விரும்பிய வாழ்க்கையையும் கொடுக்க முடியாத பாவியாகி விட்டேன் என விக்கியை பார்த்து கதறினார்.


அதன் பிறகு அவளின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் விக்கியே ஏற்றுக்கொண்டான் கணவன் வீட்டில் இருந்து எந்த உதவியும் வேண்டாம் என மறுத்து விடச் சொல்லி விட்டான்.

ஆனாலும் ரெஜியின் கணவன் மிகவும் நாணயமானவன் அவனின் குடும்ப உறுப்பினர்களின் சுயரூபம் தெரிந்ததாலோ என்னவோ அவளுக்காகவும் மகளின் எதிர்காலத்திற்காகவும் ஒரு மதுபான விடுதியையும் பண்ணை வீட்டையும் ரகசியமாக வாங்கி வைத்து விட்டு சென்றிருக்கிறார்.

அவளது மாமியாரின் குடும்பத்திலிருந்து வருபவற்றை வேண்டாம் என்று மறுக்கலாம் கணவன் விட்டுச் சென்றதை எப்படி வேண்டாம் என கூற முடியும் என ரெஜியின் தந்தை கேள்வி எழுப்பினார்.


அவரின் மகளான நேகாவிற்காக விட்டுச் சென்ற சொத்துக்கள் ..அது அவளின் உரிமை ..இதை வேண்டாம் என்று கூறக்கூடாது அதனால் மதுபான விடுதியை நான் பார்த்துக் கொள்கிறேன் ஓரளவுக்கு எனக்கு அதில் அனுபவம் இருக்கிறது.

இப்போதைக்கு ரெஜினா விபத்தில் இருந்து மீண்டு வர வேண்டும்.. சொத்துக்கள் வேண்டுமா வே

ண்டாமா என்பதை நேகா பதினெட்டு வயது பூர்த்தியான பிறகு முடிவு செய்து கொள்ளட்டும் என முடித்துக் கொண்டார்.
 
Last edited:
Top