கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே-6

Akila vaikundam

Moderator
Staff member
6



கோபமா…என அவளின் பாராமுகத்தை பார்த்து கேட்டவனிடம்.



ம்ச்ப் விடு…அப்புறம் பேசிக்கலாம் என்றாள்.



ம்ம்…உன்னை ஹர்ட் பண்ணறதுக்காக குங்குமம் வச்சிக்க சொல்லல…மத்தவங்க என் காது பட உன்னை எதும் பேசிட கூடாதுங்கற அக்கறைல சொன்னேன்.



விடுன்னு சொன்னேன்… கிளம்பலாம்.



ம்ம் என்றவன் அருகில் இருந்த யமஹா RX-100ல் ஏறி அமர்ந்தான்.



அது அவனது சமீபத்திய இருசக்கர வாகனம்…யாரிடம் ‌எல்லாமோ சொல்லி வைத்து மிக அதிக விலை கொடுத்து வாங்கியதும் கூட…



அதை அதிகமாக எங்குமே எடுத்து வர மாட்டான்…பொக்கிஷம் போல பாதுகாப்பான்…சில முறை கௌசியே விக்னேஷ்சை கேலி செய்வாள்.



மார்க்கெட்டிற்கு புதிதாக எத்தனையோ விதமான வாகனங்கள் வந்து இருக்கிறது அது பார்ப்பதற்கு ஸ்டைலாகவும் மிகவும் அழகாகவும் இருக்கிறது அதையெல்லாம் விட்டுவிட்டு ஏன் இந்த தாத்தா காலத்து வண்டியை செகண்ட் ஹாண்ட்டாக வாங்கி இப்படி பொக்கிஷம் போல பாதுகாக்கிறாய் என்று.



அதற்கு அவன் இடத்திலிருந்து பதிலே வராது…அப்படிப்பட்ட வாகனத்தை இன்று எடுத்து வந்திருக்கிறான் என்றால் என்ன காரணமாக இருக்கும் என யோசித்தவள் புருவத்தை சுருக்கி கார் என்னாச்சு என கேட்டாள்.

கார்ல போனா டிராபிக்ல மாட்டிபோம் அப்புறம் அங்க போக இன்னும் லேட் ஆயிடும்… டூவீலர்னா இந்த டைம் சீக்கிரமா போக வசதியா இருக்கும்.



அது மட்டும் தான் காரணமா என சந்தேகமாக கேட்கவும்…வினாடிக்கும் குறைவான நேரத்தில் வெட்கப்பட்டு சிரித்தவன் நொடியில் முகத்தை மாற்றிக்கொண்டு விரைப்பாக…வேற என்ன காரணமா இருக்கும்னு நினைக்கற.



முதல்ல வண்டியை எடு… அங்க போறதுக்குள்ள காரணத்தை நான் கண்டு பிடிக்கறேன் என்று வாய்க்குள் முனுமுனுத்தபடி ஏறி அமர்ந்தாள்.



அவள் சரியாக அமர்ந்திருக்கிறாளா என ஒரு தடவைக்கு இரு தடவையாக கேட்டுக் கொண்டவன் மிக மெதுவாக வாகனத்தை இயக்கினான்.



வாகனத்தை கெட்டியாகப் பிடித்தபடி அமர்ந்திருந்த கௌசி அவனின் மெதுவான வேகத்தை கவனித்துவிட்டு கிண்டலாக கேட்டாள் .



இவ்ளோ வேகமா வரத்தான் கார் வேணாம்னு சொன்னியா…இந்த வேகத்துல போனா பார்ட்டி முடிஞ்ச பிறகு தான் போவோம்னு நினைக்கறேன்…நீ ஒன்னு செய் விக்கி…பைக்கை ஓரமா பார்க் பண்ணு நாம ரெண்டு பேரும் சேர்ந்து நடந்து போகலாம்…அது சீக்கிரமா அங்க போக உதவும் என்றாள்.



கிண்டலா செய்யற…பாவம் வண்டில உக்கார தெரியாம உக்காந்திருக்க..



வேகமா போனா பயந்து கீழ விழுந்துடுவன்னு பார்த்தா வாய் பேசுறியா என்றவன் சட்டென்று கியர் மாற்றி வேகமெடுத்தான்.



எதிர்பாராத வேகத்தில் நிலைகுலைந்தவள் பயந்து பிடிமானத்திற்காக அவனது பின்பக்க சட்டையை இழுத்து பிடித்தாள்.



அவளின் பயத்தை உணர்ந்தவன் உடனடியாகவே வேகத்தை சமநிலைக்குக் கொண்டு வந்துபடியே… அந்த பயம் இருக்கட்டும் என்றான்.





கொழுப்பாடா உனக்கு என்று பிடித்திருந்த அவனின் சட்டையை விடுவித்தவள் அந்த கை கொண்டு அவனது தோளில் பட்டு பட்டென்று அடித்தாள்.

அனாயசமாக வாகனத்தை ஓட்டிய படியே அவளது கையை தட்டிவிட்டவன் கௌசி ஆடாம உக்காரு…ஹைவேஸ் வந்தாச்சி…என எச்சரிக்கை செய்தான்.



ம்ம்…என்று வாகனத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு சுற்றிலும் வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.



தீடிரென நியாபகம் வந்தது போல..விக்கி என அழைக்க.



அருகில் விடாது ஹாரன் சத்தம் கேட்டுக் கொண்டே வர இவள் கூப்பிட்டது அவனது காதுகளில் விழவில்லை.



விக்கி என சற்று உறக்க கத்தியபடி அவனது தோளில் தட்டினாள்.



வாகனம் ஒட்டுவதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தவன் அவள் தட்டி அழைக்கவும் என்னாயிற்றோ என பயந்து சட்டென சடன் பிரேக்கை அழுத்தவும் சைடாக அவனின் முதுகில் மோதினாள்.



ஏய் என்னாச்சி என இவள் பயந்து கேட்க.



நீ தானே எதுக்கோ கூப்பிட்ட என்னாச்சின்னு என்னை கேக்கற…என்றான்.



அதற்குள் பின்னால் வந்த கார் விடாது ஹாரன் சத்தத்தை ஒலிக்க ச்சோ இந்த கார்காரன் வேற என்றவன் திரும்பி கார்காரனை முறைத்தபடியே வாகனத்தை இயக்கினான்.



எந்த சத்தத்திலும் கவனம் கொள்ளாத கௌசி மீண்டும் அவனின் மீது மோதாதவாறு இருக்கையில் தள்ளி அமர்ந்து வாகனத்தை இருபக்கமும் கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.



வாகனம் சீரான வேகத்தில் செல்ல ஆரம்பிக்கவும் மெதுவாக தலையை இடப்புறமாக திருப்பிய விக்கி எதுக்காக அப்பவே கூப்பிட்ட என கேட்டான்.



உடனே அவள் ஏதோ நினைச்சேன் மறந்துட்டேன் நீ ரோடு பாத்து வண்டி ஓட்டு என்றாள்.



பொய் சொல்லாத உடனே விஷயத்தை மறக்கற ஆள் எல்லாம் இல்லை …என்ன விஷயம் சொல்லு…என்றவன்.



அவளிடம் இருந்து பதில் வராததும் அதான் வாய் வரைக்கும் வந்துருச்சுல்ல…அப்புறம் என்ன… வெளிப்படையாக கேட்டுட்டு என்றான்.



உடனே சிறு புன்னகை சிந்தியவள்…இனி விஷயத்தை கேக்காத வரை விடமாட்டியே என்றுவிட்டு…சில வினாடிகள் கழித்து… அது ஒன்னும் இல்ல இந்த வண்டியை அதிகமா யார் கண்ணுலேயும் காட்ட மாட்ட.



அதிசயமா இன்னைக்கு எடுத்திருக்க…அதுமில்லாம என்னை யெல்லாம் உக்கார வெச்சிருக்க அதான் ஏன்னு தெரிஞ்சிக்க ஆர்வம்..நீஜமாவே டிராபிக் மட்டும் தான் காரணமா…இல்ல வேற ஏதாவது ஸ்பெஷல் காரணம் என இழுத்தாள்.



ரொம்ப கற்பனை பண்ணாதே டிராபிக் தான் காரணம் பார்த்தல்ல…எவ்ளோ டிராஃபிக்ன்னு…டூவீலருக்கே நீச்சல் அடிச்சு போக வேண்டி இருக்கு இதுல கார் வந்தா… ஒரு கிலோ மீட்டர் கூட தாண்டி இருக்க மாட்டோம்.



அப்படியா நம்பிட்டேன்…என கேலியாக சொன்னாள்.



நிஜம் கௌசி… ட்ராபிக் ஒரு காரணம். இனி ஒன்னு உனக்கே தெரியும்…அது எனக்கு டூவீலர் ஓட்ட ரொம்ப பிடிக்கும்.



அதுவும் இந்த வண்டினா எனக்கு ரொம்ப ஸ்பெஷல் …ஞாபகம் இருக்கா…ரவி கிட்ட மட்டும் தான் இந்த மாடல் இருந்தது…அவன் எவ்ளோ பந்தா பண்ணுவான்…அதான் செகண்ட் ஹேண்டா இருந்தாலும் பரவால்லன்னு கேட்ட காசு குடுத்து வாங்கிட்டேன்…இன்னைக்கு பாரு ரவியை ஒரு வழி பண்ணறேன்…



ம்ம்…புரிஞ்சி போச்சி… ரவின்னு சொன்னதும் தான் ஞாபகம் வருது…இது அந்த ரெஜிக்கும் ரொம்ப பிடிக்கும்ல்ல…அதான வாங்கின என கேலி செய்தாள்.



ஏய்…என்றவன் சில வினாடிகள் கழித்து ம்ம்… ரெஜிக்கும் இந்த ப்ராண்ட் ரொம்ப பிடிக்கும்…நம்மளோட காலேஜ் லாஸ்ட் டே தான் இதை என்கிட்ட சொன்னா.



எனக்கு ரொம்ப நாளாவே ஒரு ஆசை விக்கி…இந்த பிராண்ட்ல வர்ற இந்த மாடல் பைக் ஓட்டனும்னு…ஆனா என் அப்பா இதுக்கெல்லாம் அனுமதி கொடுக்க மாட்டாரு.

சரி காலேஜ்ல யாராவது இந்த மாடல் பைக் வைச்சிருந்தா அவங்க கிட்ட கேட்கலாம்னு நினைச்சேன் ஆனா கடைசி வரை இந்த மாடலை யாருமே வாங்கல..



ரவி கிட்ட மட்டும்தான் இருந்துச்சு ஆனா ரவி கிட்ட பைக் ஓட்ட கத்துக்க பிடிக்கல ஒருவேளை உன்கிட்ட இருந்திருந்தா கண்டிப்பா உன்கிட்ட கத்துட்டு இருந்திருப்பேன்.



அட்லீஸ்ட் ஓட்ட முடியலனா கூட உன்னோடு ஒரு நாள் ஒரு லாங் டிரைவ் வந்திருப்பேன்னு…சொல்லும் போது ரொம்பவே நான் கஷ்டபட்டேன்.



அவ என்கிட்ட கடைசி நாள்ல சொன்ன விஷயத்தை கொஞ்சம் முன்னாடி சொல்லியிருந்தா அவளுக்கு நான் பைக் ஓட்ட சொல்லி தந்திருப்பேன்…அது மட்டும் இல்ல இந்த பைக்கை புதுசா வாங்கி பிரசெண்ட் பண்ணியிருப்பேன்…ம்ச்ப்..மிஸ் ஆயிடுச்சு என சற்று கவலை தேய்ந்த குரலில் கூறினான்.



ஓஹோ அதான் ஐயா செகண்ட் ஹேண்ட்டா இருந்தாலும் பரவால்லன்னு இந்த பைக்கை வாங்கினீங்களா… ஏன் சார் உங்க வசதிக்கு நீங்க புதுசாவே வாங்கி இருக்கலாமே.



ம்ம்… வாங்கி இருக்கலாம் தான்…ஆனா இந்த மாடலை இப்போ ஸ்டாப் பண்ணிட்டாங்க என்ன செய்யறது சொல்லு.

என்று அவளைப் போலவே ஏற்ற இறக்கமாக பேசி முடித்தான்.



ம்ம்…அப்போ நீ ஆசைப்பட்ட பைக்பை வாங்கிட்டேன்னு ரெஜினா கிட்ட காமிக்கத்தான் தான் எடுத்துட்டு வந்திருக்கேனு சொல்லு.



ஆமா என சிறிதும் தயக்கமின்றி கூறினான்…பிறகு அவ இன்னைக்கு பார்ட்டிக்கு வர்றா அதனாலதான் இந்த பைக்கை ஸ்பெஷலா தூக்கிட்டு வந்தேன்.



என்னடா இவ்ளோ ஓபனா சொல்ற அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு தெரியும்ல.



அதனால என்ன …?கல்யாணம் ஆனா வண்டி ஓட்ட கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா…இன்னைக்கு அவ ஆசைபட்டது போல இந்த வண்டில ஒரு ரவுண்டாவது அவளை ஓட்ட வைப்பேன்.



அவ ஹஸ்பண்ட் வந்திருந்தா என்ன செய்வ.

ஒண்ணும் செய்யமாட்டேன் அவ ஹஸ்பண்ட் கிட்ட நேரா போயி அவளோட ஆசைகளை சொல்லுவேன் அவர் புரிஞ்சிப்பாரு…அதோட இல்லாம அவர் பர்மிஷனோட என் பின்னாடி உட்கார வச்சு லாங் டிரைவ் போக முடியலனா கூட ஒரு தெருவாவது கூட்டிட்டு போவேன்.



தைரியம் தான் உனக்கு…அவ ஆசைப்பட்டாங்கறதுக்காக கிடைக்காத மாடல் பைக்கை வாங்கிகிட்டு இன்னைக்கு அவளை பாக்க போறியே அவளை உனக்கு அந்த அளவுக்கு பிடிக்குமா.



ம்ம்.



லவ் பண்ணுனியா.



ம்ச்ப்…புடிக்கும்…அவ்ளோ தான்.க்ரஷ்னு வைச்சிக்கோயேன்.



பார்த்தியா பெஸ்ட் பிரெண்ட் என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல நீ அழுத்தகாரன் தான்.



உன் அளவுக்கு இல்ல கௌசி.



உடனே இப்படி சொல்லிடுவ…என்று பொய்யாக கோபப்பட்டு முகத்தை திருப்பிய அதே நேரம். சாலையில் சிக்னல் போடவும் சரியாக இருந்தது.



சுதாரித்த விக்கி அவசரமாக சடன் பிரேக் போட முதல் தடவை போலவே இந்த முறையும் சைடாக அவனது முதுகில் மோதுவது போல் சென்றவள் கடைசி நிமிடத்தில் கம்பியை பிடித்து சமன்படுத்தி கொண்டாள்.



பிறகு சற்று கோபத்துடன் அவனது தோளில் அடித்தாள்.



எதுக்கு இப்படி அடிக்கடி ப்ரேக் போடுவ…அடுத்த முறைபோட்ட அப்படியே இறங்கி போய்டுவேன் பாத்துக்கோ என சண்டையிட்டாள்.



லூஸூ மாதிரி பண்ணாத வேணும்னு யாராவது பிரேக் போடுவாங்களா ஃபர்ஸ்ட் டைம் நீதான் என்னோட தோளை தட்டி கூப்பிட்ட… அதனால பயந்து பிரேக் போட்டேன்.



இந்த முறை ரோட்டை கிராஸ் பண்றதுக்கு முன்னாடி சிக்னல் போட்டுட்டான் நான் பிரேக் போடாம இருந்தா கிராஸ் பண்ணின வண்டி மேல போய் மோதி இருப்பேன் என்று இவனும் வாதாடினான்.

இவர்கள் பேச்சுக்கு இடையூறு செய்வது போல் பின்னாலிருந்த வாகனத்தில் இருந்து விடாது ஹாரன் சத்தம் ஒலித்துக்கொண்டே இருந்தது.



ச்சே கார் வேற அப்போதிலிருந்து விடாம ஹார்ன் அடிச்சுக்கிட்டே இருக்காங்க என்று சலித்தவள் திரும்பி காரை பார்த்து முறைக்க…உள்ளிருந்த இளைஞன் ஓட்டுனர் இருக்கையில் இருந்து தலையை வெளிப்பக்கமாக நீட்டினான்…



மாநிறத்தில் அளவான மிசையும் கூர் நாசியும் கொண்டிருந்தவன்…காற்றிக்கு கலைந்த கேசத்தை அசால்டாக ஓதிக்கி விட்டபடி இருவரையும் அர்த்ததுடன் பார்த்தான்…முகம் பாறைபோல இறுகி கிடக்க உதட்டில் துளிகூட புன்னகையில்லை.



அவனைப் பார்த்த உடனேயே நெருப்பில் கால் வைத்தது போல துள்ளிக் குதித்தபடி வாகனத்தை விட்டு இறங்கியிருந்தாள் கௌசல்யா.



நொடியில் உடல் முழுவதுமே வேர்த்துக் கொட்ட உதடுகள் தந்தியடிக்க கை கால்கள் நடுங்க தொடங்கியிருந்தது.



பேசிக் கொண்டிருந்தவள் திடீரென இறங்கவும் ஏன் என்ன ஆச்சு திடீர்னு வண்டியை விட்டு இறங்கிட்ட… சிக்னல் மாறப்போகுது வண்டியில ஏறி உட்காரு…இனி ப்ரேக் போடல என்று சொல்லியபடி திரும்பிப் பார்க்க.



கௌசியின் தவிப்பைக் கண்டு…ஏய் என் இப்படி நடுங்கற என்று கேட்டபடியே அவள் பார்வை இருந்த பக்கமாக பார்வையை திரும்பினான்.



யார் இது…என யோசித்தவனுக்கு நொடியிலேயே யார் என அடையாளமும் தெரிந்தது…உடனே தோழியிடம்.



கௌசி அது உன் ஹஸ்பண்ட் தானே.

எனக்கேட்கவும் ஆமாம் என்பது போல ஹரியை பார்த்த படியே தலையசைத்தாள்.



உடனே அவனும் வாகனத்தை விட்டு இறங்கி கௌசியையும் கார்கார இளைஞனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்.



நல்ல வாட்டசாட்டமான உடல்வாகை கொண்டிருந்த ஹரிபிரசாத்தின் பார்வை மட்டும் வேட்டைக்கு தயாராகும் புலியின் கூர்பார்வையை கொண்டிருந்தது…அதை பார்த்தால் சாதாரணமாகவே எல்லோருக்கும் கிலி பிறப்பது நிச்சயம்…கௌசி நடுங்குவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை…விட்டால் அந்த இடத்திலேயே அழுதுவிடுவாள் அந்த மனநிலையில் தான் இருந்தாள்.



இப்பொழுது சிக்னல் மாற பின்னிருந்த வண்டிகள் அனைத்துமே வழிவிடச் சொல்லி ஒன்றுபோல ஹாரன் ஒலிக்க….

விக்கி அவசரமாக வாகனத்தை ஓரம் கட்டியவன் கௌசியையும் அங்கிருந்து நகர்த்தினான்.



வாகனங்கள் அனைத்தும் அவர்களை கடந்துசெல்ல ஹரியும் ஹாரனை ஓலிக்க விட்ட படி அவர்களின் வாகனத்தை கடந்து சென்றான்.



கௌசிக்கு நன்றாகவே புரிந்து விட்டது முதலில் இருந்தே அந்த வாகனம் தான் ஹாரனை ஓலிக்கவிட்ட படி வந்தது.



அப்படி என்றால் ஹரிதான் ஹைவேஸ்ல் இருந்து பாலோ செய்து கொண்டிருக்கிறான்…கடவுளே ஏற்கனவே இருக்கும் பிரச்சனை போதாதென்று இது வேறா என மனதளவில் நொந்து கொண்டாள்.

 
Last edited:
Top