கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே 60 இறுதி அத்தியாயம்

Akila vaikundam

Moderator
Staff member
60


ரெஜியின் தந்தை மகளை பிரிய மனமில்லாமல் நின்று கொண்டிருந்தார்.


தைரியமா இருங்க மாமா..ரெஜியை பத்தின கவலை உங்களுக்கு இனி வேண்டாம்.விருப்பட்டா இங்க இருங்க இல்ல பொறுப்பான யார்கிட்டவாவது ஒப்படைச்சிட்டு அங்க வந்திடுங்க தயக்கம் வேணாம்.சரி நாங்க கிளம்பறோம் என்று சொன்னவுடன் அவனின் கைகளை பிடித்துக்கொண்டு கண்ணீர் விட்டார்.


மாப்பிள்ளை உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு எனக்கு தெரியல இந்த காலத்துல சொந்த கணவனாவே இருந்தா கூட மனைவிக்கு இப்படி ஒரு சூழ்நிலை வந்தா விட்டுட்டு போயிடுவான் ஆனா நீங்க என் பொண்ணுக்கு துணையாகவும் ஆறுதலாகவும் இருந்ததோட மட்டும் இல்லாம இப்போ திருமணமும் செஞ்சுக்கிட்டு உங்க வாழ்க்கையோட சரிபாதி ஆக்கியிருக்கீங்க இதுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போறேன்னு தெரியல என்றார்.


மாமா ஏன் பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க.. பாருங்க ரெஜினா உங்கள பார்த்து கண் கலங்குற சந்தோஷமா ஊருக்கு அனுப்பி வைங்க மாமா.


அதன்பிறகு ரெஜியின் அத்யாவசிய தேவைகள் அனைத்தும் அவனாகவே மாறிவிட்டான்.


முதலில் தயங்கியபடி செய்தவன் இப்பொழுது உரிமையாக செய்கிறான்.

அவளுக்குள் இருந்த தயக்கங்கள் உடைய முழு மனதோடு அவனுக்கு ஒத்துழைத்தாள்.


இப்பொழுதெல்லாம் சரியாக மருத்துவமனை சிகிச்சைக்கு சென்று விடுவது அவர்கள் சொல்வதை எல்லாம் பொறுமையாக கேட்டுக் கொள்வது மாத்திரை மருந்துகளை சரியான நேரத்திற்கு உட்கொள்வது என சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுத்தாள்.


அவளின் இப்போதைய மனநிலை கூடிய விரைவில் தன் உடல்நலம் சரியாகி அவனுடன் இல்வாழ்க்கை சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதுதான்.


மகனைப் பார்த்து ராமநாதனும் இப்பொழுது மனைவியை மிக நன்றாக பார்த்துக் கொள்கிறார் நேகா சமத்துப் பெண்ணாய் தாத்தாவுடனும் தந்தையுடனும் ஒட்டிக் கொள்கிறாள்.


மருத்துவமனை செல்லும் நாட்களில் மட்டும் குழந்தையை கொண்டு வந்து கௌசியின் கையில் ஒப்படைத்து விடுவார்கள் அவளும் மிகப் பொறுப்பாக பார்த்துக் கொள்வாள்.


கௌசிக்கு இப்பொழுது நிறை மாதம் அதனால் இந்த ஒரு மாதமாக லட்சுமியை உடன் வைத்திருக்கிறாள். அனைவருமே அவளின் பிரசவத்திற்காக தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.



ரெஜியை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளில் விக்கி மும்பரமாக செய்து கொண்டிருக்கிறான்.


நேகாவை கௌசியிடம் தான் ஒப்படைத்து செல்வது என்ற முடிவுடன் இருப்பதால் அவளின் பிரசவம் வரை காத்துக் கொண்டிருக்கிறான்.


ஜானு இப்பொழுது வேலையை விட்டு நின்று விட்டாள் அவள் தான் அனு, நிஷாந்த் ,புதிதாக பிறந்த குட்டி மகன் என மூவரையும் வைத்து சமாளித்துக் கொண்டிருக்கிறாள் .



இங்கே கௌசிக்கும் ஆண் குழந்தை பிறந்தது அவள் உடல் நலம் தேறி வீட்டிற்கு வரவும் தயங்கியபடியே தான் விக்கி அவளிடம் கேட்டது .



ரெஜிக்கு யூஎஸ்ல ட்ரீட்மென்ட் பார்க்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம் அங்க எல்லாம் செட் ஆகுற வரைக்கும் நேகாவை கூட வச்சு பார்த்துக்க முடியுமா என்று கேட்கவும்.



கோபத்தில் பொங்கி விட்டாள் கௌசி உரிமையா கொண்டு வந்து குழந்தையை விட்டுட்டு போகாம பர்மிஷன் கேட்டுட்டு இருக்கியா முதல்ல குழந்தையை கொடுத்துட்டு போ நான் பாத்துக்குறேன் என்றாள்.



அவனுக்கு தான் தயக்கம் பச்சை உடம்புக்காரி…தாய்பால் கொடுப்பவள் எப்படி சமாளிப்பாள்..ஆனாலும் அவளின் உதவி தேவை. ரெஜிக்கு தாயோ உடன் பிறந்த சகோதரிகளோ கிடையாது அவனது தாயாரும் குழந்தையை பராமரிக்கும் அளவிற்கு உடல் தகுதி உடையவர் கிடையாது என்ன செய்வது இங்கே என்றால் கௌசி மற்றும் லட்சுமி இருவரும் சேர்ந்து பார்த்துக்கொள்வார்கள் ஜானுவிடம் கொடுக்கலாம் தான் ஏற்கனவே மூன்று குழந்தைகளை வைத்து அள்ளாடிக் கொண்டிருக்கிறாள்.. நான்காவதாக நேகாவையும் கொடுத்தால் பாவம் அவள் தவித்து விடுவார். அறிமுகம் இல்லாத இடத்திலும் விட்டுச் செல்ல பயமாய்க்கா இருக்கிறது.


இல்லை ஏற்கனவே உன் கிட்ட கைக்குழந்தை இருக்கு அதுதான் யோசிக்க வேண்டி இருக்கு.


அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் என்று குழந்தையை வாங்கிக் கொண்டு அவர்களை விமானம் ஏற்றி வைத்தாள்.


ஆயிற்று முழுதாக ஆறு மாதங்கள். இடையில் ஒருநாள் கௌசிக்கு அழைத்து ரெஜியை ஆபரேஷன் தியேட்டர் கூட்டிட்டு போயிருக்காங்க என்று பதட்டத்துடன் கூறினான்.



மறுபடி தொடர்புக்கு வரவே இல்லை மறுநாளே சந்தோஷமாக குரல் கமர ஆப்ரேஷன் சக்சஸ் ஆனால் எழுந்து நடமாட ஆறு மாதம் வரைக்கும் ஆகும்னு சொல்லி இருக்காங்க என்றான்.



இதோ அடுத்த மாதம் ரெஜியை அழைத்துக் கொண்டு வரப்போகிறான் ஆனாலும் இடை இடையே இரண்டு முறை வந்து சென்று விட்டான்.



தினமும் மகளுடன் வீடியோ காலில் பேசி விடுவான் பேசி முடித்த பிறகு கொஞ்ச நேரம் வரை நேகா தாயையும் தந்தையையும் பார்க்க வேண்டும் என அடம் செய்வாள் அவளை சமாளிப்பது பெரும் பாடாகி விடும். ஹரிதான் பல நேரங்களில் அவளை வெளியே அழைத்து சென்று சமாதானப்படுத்தி கூட்டி வருவான்.



கௌசிக்கு கொஞ்சம் எல்லாம் அல்ல நிறையவே சிரமம் தான் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு நேகாவையும் சமாளிப்பது என்பது.. ஆனாலும் நண்பனுக்காக முழு மனதுடன் அதை செய்தால். ஏதோ ஜானு இருப்பதனால் அனுவின் தொல்லை இல்லை.



எட்டு மாதங்கள் முடிந்து விட்டது இதோ நாளை வருகிறார்கள் அனைவருமே விடிய காலை நான்கு மணிக்கு அவர்களை வரவேற்பதற்காக விமான நிலையம் சென்று விட்டார்கள்.


ரெஜினாவின் தந்தையும் கூட வந்துவிட்டார் .


அனைவரும் ரெஜினா வீல் சேரில் வருவாளா இல்லை நடந்தபடியே வருவாளா என திக் திக் இதயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.



எல்லோருடைய எதிர்பார்ப்பையும் பொய்யாக்காமல் ரெஜினா மிக மெதுவாக கணவனின் கைகளைப் பிடித்தபடி நடந்து வந்தாள்.


புதிதாக யார் பார்த்தாலும் அவளது நடையில் வித்தியாசம் தெரியாது இந்த பெண் மிகவும் மெதுவாக நடக்கிறது என்று தான் நினைப்பார்கள்.





அவர்களை பார்த்ததுமே கௌசி ஆனந்த கண்ணீரில் ஓடிச் சென்று ரெஜினாவை கட்டி அணைத்தாள் . தேங்க்ஸ் ரெஜி தேங்க்யூ சோ மச் என்று மீண்டும் மீண்டும் அதே கூறினார் அவள் எதற்காக நன்றி கூறுகிறார் என்று ரெஜினாவிற்கும் தெரியும்.மென் புன்னகை சிந்தினாள்.



ஹரியும் விக்கியை கட்டிப்பிடித்து நீ ஜெயிச்சுட்டடா.. சாதிச்சிட்ட..என பெருமை பொங்க கட்டியணைத்தான்.



சரி நீங்க எல்லாம் வந்து இருக்கீங்க குழந்தைங்க என்று கேட்டான்.



எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்க வீட்டுக்கு வந்து பாத்துக்கோங்க.



சரிதான்.. நீங்க தூங்கிட்டு அவங்களை லட்சுமி அம்மாவோட அனுப்பி இருக்கலாம்ல்ல என கேலி பேசிய விக்கி மனைவியின் உடல் நலத்திலும் கவனம் கொண்டு அவளை கைவளைவிலேயே வைத்திருந்தான்.



சரி சரி டைம் ஆயிடுச்சு எவ்வளவு நேரம் ஏர்போர்ட்லயே நின்னு பேசிட்டு இருக்கறது எல்லாரும் வீட்டுக்கு போகலாம் என் பையன் வேற அழ ஆரம்பிச்சா அம்மாவால சமாளிக்க முடியாது என கௌசல்யா சொல்லவும்.



சரி சரி என்றபடி அனைவருமே கார் நிறுத்தும் இடத்திற்கு வந்தனர் கௌசல்யா மட்டும் அவ்வப்போது ரெஜியின் காதில் கிசுகிசுவென ஏதாவது கேட்டுக் கொண்டே வந்திருந்தாள்.



அவளது நடையில் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா என்பதையும் கூர்ந்து கவனித்தாள்.



ரெஜி அந்தப் பக்கம் சென்ற பிறகு ஹரி கௌசியை பிடித்து இழுத்து என்ன பண்ணிக்கிட்டு இருக்க நீ என்ன அவகிட்ட அப்படி குசுகுசுன்னு பேசிட்டு இருக்க .



மூணு ஆம்பளைக்கு நாங்க இருக்கோம் உங்க ரெண்டு பேருக்கு மட்டும் என்ன ரகசியம் என கேட்கவும்.



அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க அவளுக்கு ஹெல்த் எல்லாம் ஓகே ஆயிடுச்சா மறுபடியும் அவளால ஒரு குழந்தைக்கு தாயாக முடியுமா இதை பத்தி தான் கேட்டுட்டு இருந்தேன்.

அதை விக்கி முன்னாடி கேட்க முடியாதுல்ல என்று சொல்லவும் .



நான் என்னமோ உன்ன ஒன்னும் தெரியாது லூசுன்னு நினைச்சுட்டு இருக்கேன் நீ ரொம்ப விவரமா தாண்டி இருக்க சரி சரி வா கார்ல ஏறலாம் என்றான் .


பின்புறம் எறப்போன ரெஜினாவை தடுத்த கௌசி நீ முன்னாடி உட்கார்ந்துகோயேன் விக்கிகிட்ட கொஞ்சம் பேசனும்.


கௌசல்யா என்று ஹரி பல்லை கடிக்கவும்.



நீங்க சும்மா இருங்க உங்களுக்கு ஒன்னும் தெரியாது அவங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் அவங்களுக்கு மத்த வேலைகள் நிறைய இருக்கும் அதுக்கப்புறம் எப்போ நான் அவனை பார்த்து பேசறதாம்‌



இனிமே எனக்கு எல்லாம் டைம் ஒதுக்குவானோ என்னவோ குடும்பஸ்தன் வேற ஆயிட்டான் என்றவள் விக்கியை பார்த்து அப்படித்தானே என கேட்கவும் அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அசட்டு சிரிப்பொன்று சிரித்தான்.


இதுக தேராது ரெஜினா நீ வந்து அண்ணன்கிட்ட உர்காரு.



பின்னால் ஏறிய உடனே கௌசி விக்கியிடம் சொல்லுடா இந்த எட்டு மாசம் எப்படி யுஎஸ் ல போச்சுன்னு.ஓரு நாள் விடாம எல்லாத்தையும் சொல்லு.


சரி உனக்கு இந்த எட்டு மாசம் எப்படி போச்சு குட்டி பையன் என்னென்ன சேட்டை எல்லாம் பண்ணினான்,நேகா உன்னை எப்படியெல்லாம் படுத்தினா எல்லாத்தையும் நீயும் சொல்லற.



ஓகே டன் ஃபர்ஸ்ட் நீ சொல்லு என்று கதை கேட்கும் ஆர்வத்துடன் அவனைப் பார்க்க அவனும் இங்கிருந்து ப்ளைட்ல ஏறினோமா டேக் ஆப் ஆச்சா ரெஜி பயந்துபோய் என கையை கெட்டியா புடிச்சிகிட்டா..பஸ்ட் டச் ..அய்யா சும்மா வானத்துல பறந்தேன் என கதை பேச ஆரம்பிக்க.



முன்புறமாக அமர்ந்திருந்த ரெஜினாவும் ஹரியும் அவர்களைப் பார்த்து சிரித்துனர்.


ஹரி அவர்களின் நட்பை பார்த்து நெகிழ்ந்த படியே இவங்களோடது தனி உலகம்மா..அந்த உலகத்துக்குள்ள நாம போகணும்னு ஆசைப்படக்கூடாது ஆனா அதை பாத்து ரசிக்கலாம் அவங்க நட்பை மட்டும் தப்பா என்னைக்கும் புரிஞ்சிக்காத என்று சொல்லவும்.



அண்ணா அவங்க ரெண்டு பேரையும் காலேஜ் டேஸ்லேயே பாத்துட்டேன் கொஞ்சம் பொறாமை தான் ஆனாலும் அவங்க கொடுத்து வச்சவங்க அவங்க அப்படியே இருக்கட்டும் அண்ணா நாம எதுக்கு அவங்க உலகத்துக்குள்ள போகணும் என்று கூறியபடி ரோட்டை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.



பின்னால் நண்பர்களின் சிரிப்பு சத்தம் சாலையை அதிர் செய்தது.



கார் ஹைவேஸ்-ல் வேகமாகச் செல்ல கலைந்திருந்த மேகங்கள் எல்லாமே ஒன்று கூடி அவர்களை வாழ்த்துவது போல பூ மழை தூவியது.


விட்டுவிடு வெண்மேகமே என்று அவன் விலக்கிச் சென்றாலும் கூட அப்படி எல்லாம் விட்டு விட முடியாது என காலம் அவர்களின் நட்பை சேர்த்து வைத்தது.


நன்றி.

வணக்கம்.

அகிலா வைகுண்டம் ❤️
 
Top