கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே-9

Akila vaikundam

Moderator
Staff member
9.

கௌசியின் வீட்டில் நிலமை இப்படி இருக்க…அதற்கு காரணமான இரு ஆண்களுமே காலையிலேயே சந்தித்துக் கொண்டனர்.


வழக்கத்திற்கு மாறாக அதிகாலையிலேயே எழுந்த விக்னேஷ்வரன் எழும் பொழுதே மனதின் நிம்மதியின்றி தவித்தான்.


அவனுடைய தவிப்பு குறைய வேண்டுமானால் ஹரிபிரசாத்தை சந்தித்தாக வேண்டும்.


கௌசியின் வாழ்க்கையில் என்ன நடந்தது,நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.அப்பொழுது தான் அவனால் இனி நிம்மதியாக உறங்க முடியும்…பலவித சிந்தனைகளுக்கு நடுவே நேரத்தை நெட்டி தள்ளியவன் கலை மணி ஒன்பதை தொடவும் காரை எடுத்துக்கொண்டு ஹரியின் அலுவலகம் விரைந்தான்.காலை அலுவலகம் திறக்கவுமே சென்று விட்டான்.



அங்கே அவனுக்கு மரியாதை துளி அளவு கூட கிடைக்கவில்லை..


ஹரியின் அலுவலகம் நகரத்தின் மையப்பகுதியில் புகழ் பெற்ற கோபுர அமைப்பு கொண்ட வளாகத்தில் இருந்தது..


அங்கே அவனுக்கென்றே பிரத்யேகமாக கட்டப்பட்ட கடைசி தளத்தை முற்றிலும் வாடகைக்கு எடுத்து அதில் நிறுவனம் நடத்தி வந்தான்…



லிஃப்ட் விட்டு இறங்கியதுமே எதிர்புறமாக அவனது அலுவலகம்..கதவை திறந்தவுடன் சிறிய அளவில் வரவேற்பறை நான்கு பேர் மட்டும் அமரக்கூடியது போல ஒரு ஷோபா அதன் முன் புறம் கண்ணாடியால் ஆன டிப்பாய் அதன் மேல் பல விதமான பிஸினஸ் மேஃகஸீன்..


அந்த அறையில் திரும்பும் பக்கமெல்லாம் கலைப்பொருட்களால் அலங்கரித்து வைத்திருந்தான்.


பக்கவாட்டில் தொழில் முறை பேச்சு வார்த்தைகள் நடத்துவது போல மினி ஹால், ஓய்வு அறை என சில வசதிகளை செய்திருந்தான்.



விக்கி உள்ளே வரும் பொழுது வரவேற்பு பெண் மீனா மட்டுமே இருந்தாள்..சினேக புன்னகையில் அவனை எதிர் கொண்டவளிடம்..


மிஸ்டர் ஹரிபிரசாத்தை பாக்கனும்..என்று நேரடியாக விஷயத்தை கூறினான்.


அப்பாயின்மென்ட் இருக்கா சார்..


நோ மேம்…என்று தலையசைக்கவும்.


ஓஓ…சார் அப்பாயின்மென்ட் இல்லனா பார்க்க மாட்டாங்களே சார்.. ஒன்னு பண்றீங்களா உங்க நேம் போன் நம்பர் குடுத்துட்டு போங்க நான் சார் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கிட்டு உங்களுக்கு கால் பண்றேன் அப்புறம் வந்து பாருங்க..


இல்லங்க நான் கண்டிப்பா இன்னைக்கு பாத்தே ஆகனும் வேணும்னா வெயிட் பண்ணறேன்..


ம்ம்…என இழுத்தவள்.. சரி என்ன காரணத்துக்காக பார்க்கனும்னு சொல்லுங்க சார் வந்ததும் அப்பாயின்மென்ட் வாங்கி தரேன் என்றவளிடம்.


பர்சனல் என்றதுமே மேற்கொண்டு துருவி கேக்காத மீனா… உங்க நேம் அண்டு ஃபோன் நம்பர் ப்ளீஸ் சார்… என்றதும் அவனது விசிட்டிங் கார்ட்டை எடுத்து கையில் கொடுத்தான்.



அதை மேலோட்டமாக பார்த்து விட்டு வெயிட் பண்ணுங்க… சார் வந்ததும் உள்ள அனுப்பறேன் என்றாள்.


சரி என தலையசைத்து விட்டு சற்று நேரம் ஷோபாவில் அமர்ந்தான் பிறகு அங்கிருந்தே ஹரியின் அலுவலகத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் விக்கி…அவர்களின் அலுவலகம் அளவிற்கு பெரியதாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு இதுவும் பெரிய அலுவலகம் தான்.


விக்கியின் தந்தை செய்யும் அவுட் சோர்ஸ் வேலையைத்தான் இவனும் செய்து கொண்டிருக்கிறான்.. இவர்கள் அளவிற்கு கோடிகளில் பணம் புரளா விட்டாலும் கண்டிப்பாக பல லட்சங்களில் லாபம் கொழிக்கிறது என்பதை அந்த அலுவலகத்தின் உட்புற தோட்டத்தை வைத்து கணிக்க முடிந்தது.


குறைந்தது பதினைந்து பேர் வரைக்குமாவது அந்த அலுவலகத்தில் பணிபுரிவார்கள்.


அவனுக்கு என்று தனிப்பட்ட முறையில் ஒரு பணிப்பெண் மற்றும் வருபவர்களை உபசரிக்க ஒரு பெண் என்று இரு பெண்களை மட்டுமே வேலைக்கு வைத்திருந்தான்.


மீதி இருப்பவர்கள் அனைவருமே ஆண்கள் தான்…கட்டிடத்தின் உள் அழகை ரசித்தவன் மனதிற்குள் ஹரியை மனமாற பாராட்டினான்.


ரசனைக்காரன் தான்…கண்ணுக்கு குளிச்சியான பெயிண்டிங்… அலங்கார பொருட்கள் இதை பாத்துகிட்டே நாளை போக்க வச்சிடுவான் போல என ஹரியை கேலியும் செய்து கொண்டான்.


பிறகு டிப்பாயில் கிடந்த மேகஸினை கையில் எடுத்து நேரத்தை கடத்த ஆரம்பித்தான்…சிறிது நேரம் கழித்து கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு மணி பத்தாச்சி இன்னும் ஆஃபிஸ்க்கு வொர்க்கர்ஸ் யாரும் வரலையா என அலுவலகத்தை கண்களால் அளந்த படி கேட்டான்.



இனி தான் வருவாங்க என்று முடித்துக்கொண்டாள்.


இனிதான் வருவாங்கன்னா அப்போ எப்போ வொர்க் ஸ்டார்ட் பண்ணுவாங்க என்று கேட்டு முடிக்கும் முன்னே.


உங்களுக்கு என்ன சார் வேணும்…எதுக்கு தேவையில்லாத கேள்வி எல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க.. சாரை தான பாக்க வந்தீங்க…வெயிட் பண்ணுங்க…என்று சிறு எரிச்சலை முகத்தில் காண்பிக்கவும் வாய் திறக்கவில்லை .



அடுத்த அரை மணி நேரத்திற்குள்ளாக பணி செய்பவர்கள் ஒவ்வொருவராக வந்து அமர்ந்து மிக மெதுவாக வேலையை தொடங்க பத்தரை மணி வாக்கில் மற்றொரு இளம் பெண் கிட்டத்தட்ட அலுவலகத்திற்குள் ஓடி வந்தாள்.


வந்தவள் மீனாவிடம் சார் வந்தாச்சா எனக்கு கேட்கவும் .


இன்னும் வரல சபரீனா.



அப்பாடா தப்பிச்சேன் என்ற படி உள்ளே ஓடினாள்.



சற்று நேரத்திற்கெல்லாம்
ஹரி வரவும்.. அலுவலகம் சுறுசுறுப்படைவது போல தோன்றியது.
மீனா வேகமாக எழுந்து நிற்க.


விக்கியும் ஹரியைக்கண்டு எழுந்து நிற்க கண்டு கொள்ளாமல் கம்பீரமாக கடந்து சென்றான்.


மீனா அதை கவனித்தும் கவனிக்காதது போல அவளது பணியைச் செய்ய…சுத்தம்.. நல்ல காலத்திலேயே இந்த பொண்ணு நம்மளை மதிக்கல இப்போ வேற முதலாளியும் கண்டுக்காம போறாரு இன்னைக்கு நான் அவரை பார்த்த மாதிரி தான் என்று மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டான்.


சிறிது நேரத்தில் அங்கு வந்த சபரீனா மீனாவின் டேபிளருகே சென்று கடைக்கண்ணால் விக்னேஸ்வரனை கவனித்து விட்டு…சன்னக் குரலில் ஏய் யார் இது…செம ஹேண்ட்சம்…எதுக்காக ரொம்ப நேரமா வெயிட் பண்றாரு என கிசுகிசுத்தாள்.



சாரை பார்க்க வெயிட் பண்ணறாங்க இந்தா அவரோட விசிட்டிங் கார்டு…என்று சபரீனாவின்‌ கையில் திணிக்கவும்.


வாங்கிப் பார்த்தவள்..அதில் விக்கியின் பெயரும் ஃபோன் நம்பர் மட்டுமே இருக்க யாரோ ஒருவன்…தனிப்பட்ட முறையில் வேலைக்காக சிபாரிசுடன் வந்திருக்கிறான் என நினைத்துக் கொண்டு ஹரியின் அறையை நோக்கி சென்றாள்.


உள்ளே அவளது எஜமானரோ தன் முன் மாட்டப்பட்டிருந்த பெரிய ரக தொலைக்காட்சி பெட்டியில் சிசிடிவி கேமராவின் உதவியோடு விக்கியை தான் கோபமாக பார்த்துக்கொண்டிருந்தான்.


வெளியே நின்ற சபரீனா அறைக் கதவை மெதுவாக தட்டி அனுமதி பெற்று உள் நுழைந்தவள் தொலைக்காட்சியில் தெரியும் விக்கியை கடைக்கண்களால் பார்த்துக் கொண்டு சில கோப்புகளை ஹரியின் டேபிள் மீது வைத்து விட்டு கடைசியாக விக்கியின் கார்ட்டை அதன் மீது வைத்தாள்.



என்ன என்பது போல விசிட்டிங் கார்டை பார்த்தவனிடம் ரொம்ப நேரமா வெயிட் பண்றாங்க சார் உங்கள பாக்கணும்னு …அநேகமா ஜாப் ஆஃப்பருக்காக வந்து இருப்பாங்கன்னு நினைக்கிறேன் என்று கூறவும் விசிட்டிங் கார்டை தொட்டு கூட பாக்காதவன் எனக்கு ரொம்ப
வேலை இருக்கு பாக்க முடியாதுன்னு அனுப்பி வை என்றான்.


ஓகே சார் என்றபடி விக்கிடம் அதைக் கூற..


நான் கண்டிப்பா பாத்தே ஆகனும்..எவ்ளோ நேரம்னாலும் காத்திருக்கேன்..இங்கனாலும் ஒகே வெளிய என்றாலும் ஓகே என்றான்.


சார் அவர்ட்ட அப்படியெல்லாம் சொல்ல முடியாது..இனி நான் அவர்ட்ட போனா என் வேலையே போயிடும் என்று சற்று பயந்த படி கூறவும்.


பர்ஸ்சில் இருந்த மற்றொரு விசிட்டிங் கார்டை எடுத்து அவளது கைகளில் கொடுத்தவன்.. இது என்னோட ஆஃபிஸ் விசிட்டிங் கார்டு.. ஒருவேளை இங்க உங்களுக்கு வேலை போயிடுச்சுன்னா எப்போ வேணாலும் இந்த கார்ட்டை காண்பிச்சி எங்களோட ஆஃபிஸ் எதுல வேணாலாம் சேர்ந்துக்கலாம்..டைரக்ட் அப்பாயின்மென்ட்..நோ இன்டெர்வியூவ்..ஓகே..இப்போ போய் அவர்கிட்ட சொல்லுங்க என்று அனுப்பி வைத்தான்.


விசிட்டிங் கார்ட்டை பார்த்து கண்களை விரித்த சபரீனா..பயந்தபடியே விக்கியை திரும்பித் திரும்பிப் பார்த்தபடி ஹரியின் அறையை நோக்கிச் செல்ல.


அங்கு நடத்தவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த மீனாவோ இப்பொழுது விக்கியை சற்று பயத்துடன் பார்த்து எழுந்து நின்றாள்.


அவளின் நடுக்கத்தைக் கண்டவன் வாய்க்குள்ளாக சிரித்தபடி உட்காருங்கள் என்பது போல் ஜடை செய்துவிட்டு அவனும் சோபாவில் சாய்ந்து அமர்ந்தான்.


ஹரியின் அறைக்குள் சபரீனா மீண்டும் அனுமதி பெற்று உள்ளே செல்ல இப்போ என்ன..?
என கண்களால் கேள்வி கேட்டு கோபப் பார்வை பார்த்தான்.


எச்சிலைக் கொட்டி முழுங்கியவர் நீங்க பார்க்கலன்னா இங்கிருந்து போக மாட்டேங்குறாரு அவருக்கு இன்னைக்கு கண்டிப்பாக உங்க அப்பாயின்மென்ட் வேணும்ம்…


மீட்டிங் இங்க இருந்தாலும் பரவால்ல வெளியேவா இருந்தாலும் பரவால்லன்னு ரொம்ப உறுதியாக பேசறாரு… ஏதோ ரொம்ப முக்கியமான விஷயம் போல என்று கடைசி வார்த்தையை ஒவ்வொரு எழுத்தாக கூறி முடிக்கும் பொழுது ஹரிக்குமே நன்றாக புரிந்து விட்டது.



இனி அவனை சந்திக்க முடியாது என்று கூறினால் நேரடியாக அறைக்குள்ளே வருவான்.


கோபத்தில் கைகலப்பு ஏதும் ஏற்பட்டு விட்டால் அலுவலகத்தில் தேவையில்லாத சலசலப்பு உண்டாகும்.


அது மட்டுமின்றி அவன் யார்..என வேலை செய்பவர்கள் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டால் தேவையில்லாமல் கௌசல்யாவின் பெயரும் அடிபட ஆரம்பிக்கும் என்று யோசித்தவன்.


சரி அரை மணிநேரம் கழிச்சி உள்ள அனுப்பி வை…அதும் ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் மட்டும் தான்…போ என வெளியே அனுப்பினான்.


நேராக விக்கியிடம் வந்து சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.


ஆனால் அரைமணி நேரம் என கூறிவிட்டு கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக விக்கியை வரவேற்பறையில் காக்க வைத்த ஹரி சாவகாசமாக தனது பணிப்பெண் சபரீனாவை அழைத்து தனது பிரத்தியேக அறைக்கு அனுப்பி வைக்குமாறு பணிந்தான்.


உடனே அவளும் விக்கியை அழைத்துச் செல்ல அவனும் நேராக அலுவலக அறைக்குள் சென்றான் .


தடுத்து நிறுத்திய சபரீனா சார் அவர் உங்களை இங்க வச்சு மீட் பண்றதா சொல்லல அவரோட பர்சனல் ரூமுக்கு தான் உங்களை வர சொன்னாங்க என கூறினாள்.


ஆச்சரியமாக பணிப்பெண்ணை நோக்கியவன் அவரோட பர்சனல் ரூம் எந்தப் பக்கம் என வினவினான்.


உங்களோட லெப்ட் சைடுல செகண்ட் டோர் சார் …வாங்க நானே கூட்டிட்டு போறேன் என்று சொல்லவும்.


நோ ப்ராப்ளம்…நானே பாத்துக்கிறேன் தேங்க்ஸ் எனக் கூறிவிட்டு நேராக சபரீனா சொன்ன அறை கதவின் வாயிலை தட்டவும்..எஸ் கம்மின் என்ற ஹரியின் குரல் கணீரென வந்தது.


கதவை திறந்து உள்ளே நுழைந்ததுமே அதிர்ச்சி அடைந்தான்…


அது ஹரிக்காகவே தயார் செய்யப்பட்டிருந்த சிறிய ரக சொகுசு அறை…மூலையில் ஓய்வெடுக்க தலையணைகளுடன் கூடிய கௌவுச்சி, தொலைக்காட்சி, மினி பிரிட்ஜ்,ஏஸி,இருவர் மட்டும் அமரும் வகையில் உயர் ரக ஷோபா,இடது பக்கம் ஒருவர் அமரும் வகையில் ஒரு ஷோபா நடுவில் சிறிய அளவிளான டீப்பாய்…


அதன் மீது காலி மதுக்கோப்பையும் பாதிஅளவு குறைந்த உயர் ரக மதுபாட்டிலும், அதன் அருகில் குளிர்பானமும் கொறிப்பதற்கு இலகுவாக சில நொறுக்கு தீனிகளும் வைக்கப்பட்டிருக்க எப்படி
அலுவலக நேரத்தில் சிறிது கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் குடிக்கிறான் என வாயடைத்து நின்றான்.


இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக ஹரியின் தோற்றம் மேலும் விக்கியை கோபப்படுத்தியது.


உள்ளே வரும்பொழுது அவனுடைய ஆடைகள் மிக நேர்த்தியாக இருந்தது… கரு நீல கலர் பேண்ட் முழுக்கை வெள்ளை சட்டை அணிந்து கம்பீரமாக வந்தவனின்.


தற்போதைய தோற்றமும் படு கேவலமாக இருந்தது முழுக்கை சட்டையை முட்டிவரை மடித்து விட்டிருந்தவன்.


சட்டையின் முதல் நான்கு பட்டன்களை கழட்டி விட்டு காலரை பின்னோக்கி இழுத்து விட்டிருந்தான்.


சட்டையின் உள்ளே ரோமங்கள் நிறைந்த அவனது வெற்றுடல் பாதி தெரிந்தும் தெரியாதது போல் தோற்றம்…கால்களை விரிந்து அமர்ந்திருந்த அவனது தோற்றம் விக்னேஷின் முகத்தை சுளிக்க வைத்தது.


என்ன..? என்னை பாக்கணும்னு சொல்லிட்டு பேசாம என்னையே பாத்துட்டு இருக்க.


எதா இருந்தாலும் சீக்கிரம் சொல்லிட்டு கிளம்பு உனக்கு அஞ்சு நிமிஷம் தான் டைம் அதுக்கப்புறம் என் ஸ்டேஃப்ஸ் வந்து உன்ன கழுத்த புடிச்சு வெளியே தள்ளிடுவாங்க உன் டைம் ஸ்டார்ட் ஆயிடுச்சு சொல்லு என்ற படி பாட்டிலை திறந்து மீண்டும் அவனது கோப்பையை நிறைக்க அதிர்ச்சி குறையாமல் தோழியின் கணவனை பார்த்தவனுக்கு நொடியில் கண் கலங்கியது.


என்ன…? பேசறதுக்கு ஒன்னும் இல்லன்னா தயவு செஞ்சு வெளியே போ..

எனக்கு நிறையா வேலை இருக்கு என்று சொல்லியபடி கோப்பையை கையில் எடுத்தான்.
 
Last edited:
Top