கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே16

Akila vaikundam

Moderator
Staff member
16.


சாலையில் தன்னைக் கடந்து செல்லும் வாகனங்களுக்கு வழி விட்டபடி அழுகையுடன் வேகமாக நடந்து கொண்டிருந்தாள் கௌசல்யா.


அப்பொழுது மார்கெட்டிற்கு புதிதாக வந்திறங்கிய கார் ஒன்று ஹாரனை கொடுத்தபடி அவள் பக்கமாக ஊர்ந்து வர அதற்கு வழிவிட்டு நின்றாள்.


ஆனால் அந்த வாகனமோ அவளைக் கடந்து செல்லாமல் அவள் அருகில் நின்றது.


நின்றதோடு இல்லாமல் கார் கதவின் கண்ணாடிகளை கீழே இறக்கி விட்டது.


இவள் யார் என எட்டிப் பார்க்கும் முன்பே கதவை திறந்தபடி அவளது நண்பனான விக்னேஸ்வரன் இறங்கினான்.


என்ன கௌசி நடந்து போய்ட்டு இருக்க..


இது உன் கார் கிடையாதே…யாரோடது.


அப்பா புதுசா வாங்கி இருக்காங்க போல… அதைவிடு நீ ஏன் இப்படி நடந்து போயிட்டு இருக்க .. ஆஃபீஸ் தானே போற என்று கேட்கவும்.


அவனது முகம் பார்த்து பேசாதவள் ஆம் என்பது போல் தலையசைத்தாள்.

சரி கார்ல ஏறு நானும் ஆஃபிஸ் தான் போறேன்.


இல்ல விக்கி நான் நடந்தே வரேன்…இன்னும் கொஞ்ச தூரம் தான என்று சொல்லும் பொழுதே அவளது குரவின் மாற்றத்தை கண்டு கொண்டான்…தொண்டை கமற பதில் கொடுக்கிறாள்.


விக்கி நல்ல உயரம் கௌசல்யா எப்பொழுதுமே அவனின் தோளின் அளவு மட்டுமே இருப்பாள்.


அலுவலகத்தில் பேசும் பொழுது விக்கி முடிந்த அளவு அமர்ந்திருப்பான் கௌசல்யா நின்று கொண்டு பேசுவாள் இல்லையென்றால் அவளின் உயரத்திற்கு ஏற்றவாறு அவனும் குனிந்தபடி பேசுவான்.


இன்று விக்கி பேசும் பொழுது கௌசியின் உச்சந்தலையை தான் பார்த்தானே தவிர முகத்தை பார்க்க முடியவில்லை.


அழறயா கௌசி…எனக் கேட்கவும் இல்லை என்று தலையசைக்கும் பொழுதே கண்ணகளில் இருந்த கண்ணீர் கீழே தெரித்தது.


அதைக் கண்டு பதறியவன் சரி முதல்ல கார்ல ஏறு என்றான்.


இல்ல விக்கி என்றவளின் குரல் தொண்டை அடைப்புக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் வெளி வர…


கார்ல ஏறு… என்று பற்களைக் கடித்த படி கதவை திறந்து விட எதுவும் பேசாமல் ஏறிக்கொண்டாள்.


உடனே அந்த இடத்தை விட்டு சற்று தூரம் வேகமாக காரை ஒட்டிச் சென்றவன் அதிக போக்குவரத்து இல்லாத சாலையாக பார்த்து வாகனத்தை நிறுத்தினான்.


ஏன் நிறுத்திட்ட என பார்வையால் கேட்டபடி அவனை பார்க்க .. விக்கியும் அவளது முகத்தை தான் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான.


உதட்டோரத்தில் சிறிதளவு துளித்திருந்த ரத்தம் அவனுக்கு எதையோ கூற..அடி வாங்கிய கன்னங்கள் இரண்டும் கன்றிப் போயிருக்க கண்கள் அதிகளவு கண்ணீரை சிந்திய காரணத்தால் சிவந்து பாதி அளவு சுறுங்கியிருக்க..முக்கு கோவை பழமாக பழுத்திருந்தது.


நடுங்கும் அவனது கை கொண்டு துளிர்ந்த ரத்தத்தை விரலால் தொட்டுப் பார்த்து .. இது என்ன..? என அவளிடம் காட்டினான்.


****


கன்னம் ஏன் இப்படியிருக்கு..


****


யாரோ உன்னை அடிச்சிருக்காங்க…யாருன்னு சொல்லு…அடிச்ச கையை உடைச்சி உன்கிட்ட கொண்டு வந்து தர்றேன்.


***


உன்ன தான் கேட்கிறேன் கௌசி.. யார் உன்னை இப்படி செஞ்சது…


****

கௌசி சொல்ல போறியா இல்ல உன் வீட்டுக்கு வண்டியை திருப்பவா.. எனக்கேட்டவன் வாகனத்தை திருப்பவும்..


இல்ல வேணாம்.. ஆபீஸ் போகலாம் என்றபடி காரின் முன்புறமாக இருந்த யூ டிஷ்யூவை எடுத்து கண்கள், மூக்கு ,உதடுகளை துடைத்தவள்..



அவர் காலைல வீட்டுக்கு வந்தாரு.. என் அண்ணனுக்கும் அவருக்கும் நடந்த வாக்குவதத்துல என் மேல கை நீட்டிட்டாரு.


இது என்ன அநியாயம்? உன் அண்ணனோட சண்டை போட்டா அவரை தான அடிச்சிருக்கனும்..

உன்னை வந்து ஏன் அடிச்சாராம்..


நீ அடி வாங்கும் போது உன் அம்மா என்ன பண்ணிட்டு இருந்தாங்க.. என்று கேட்கவும் அடக்கி வைத்திருந்த அழுகை மெல்ல எட்டிப் பார்க்க.


வேடிக்கை பார்த்துட்டு இருந்தாங்க.. வேற என்ன பண்ண முடியும் என்றாள்.


கௌசி ஒரு விஷயம் சொல்லு உன் வீட்டில் என்னதான் நடந்துகிட்டு இருக்கு… எதுக்காக இந்த அளவு சண்டை போடறீங்க…
அடிக்கடி ஏன் இப்படி அழுதுகிட்டு வர்ற… ம்ப்ச் உன் அழுகை என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது.


***


ப்ளீஸ் சொல்லு என்னால ஏதாவது பண்ண முடியாம்னா செய்வேன்ல.


இல்ல விக்கி என் பிரச்சனையை யாராலும் சரி படுத்த முடியாது…நீ தெரிஞ்சுக்கிட்டாலும் உனக்கு கஷ்டம் தான் மிஞ்சுமே தவிர பெருசா எதுவும் இருக்காது.


சரி உன் ஒட்டு மொத்த வாழ்க்கையை பத்தி தெரிய வேணாம்.. இன்னைக்கு என்ன பிரச்சனை…கன்னம் ரெண்டும் கன்றியிருக்கு…
உதடு கிழிஞ்சு ரத்தம் வர்ற அளவுக்கு அடிச்சிருக்கான்…அப்படி என்ன பண்ணிட்ட..


நான் எதுவும் பண்ணல அவரோட கையலாகாத தனத்தை என்கிட்ட காமிச்சுட்டு போயிட்டாரு..


புரியறது போல சொல்லு..


நேத்து வேற நீ ஆபீஸ் வரலையா எனக்கும் பயங்கர தலைவலி.. ஆஃப் டே லீவ் போட்டுட்டு வீட்டுக்கு போயிட்டேன்.. போன கொஞ்ச நேரத்திலேயே எனக்கு அம்மாவுக்கும் வழக்கம் போல சண்டை.


உனக்கு தான் தெரியுமே… யார் பேச்சை ஆரம்பித்தாலும் முடிக்கும் போது …நான் என் புருஷன் கூட சேர்ந்து வாழணும்ன்னு தானே நிறுத்துவாங்க அப்படித்தான் நேத்தும் இருந்தது.


வழக்கம்போல நானும் அழுதுகிட்டே படுத்து தூங்கிட்டேன் முழிக்கும்போது வீட்டுக்குள்ள ஒரே சத்தம் என்றவள் நேற்றிருந்து காலை முடியும் வரை நடந்த அத்தனை விஷயங்களையும் கூறி முடித்தாள்.


பொறுமையாக கேட்டுக் கொண்டவனுக்கு கோபமே அடங்கவில்லை.


எவ்வளவு தைரியம் இருந்தால் அவனுடைய தங்கையை அடித்ததற்காக இவளை போட்டு அடித்து இருப்பான்.


இவன் கோபப்பட வேண்டும் என்றால் கேசவனின் மீது தானே கோபம் கொள்ள வேண்டும்.

அவரை விட்டுவிட்டு இவளை அடிக்கும் உரிமையை அவனுக்கு யார் கொடுத்தது.


கேசவனும் லட்சுமியும் கேட்டதற்கு குடும்ப பிரச்சினை என்றான் அல்லவா..?


நான் போய் கேட்கிறேன்…என்னிடம் கூறட்டும் கணவன் மனைவி பிரச்சனை என்று…அப்பொழுது இருக்கிறது அவனுக்கு…கணவன் மனைவி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று பாடத்தை கற்பித்து விட்டு வரலாம்…
என நினைத்தவன் ‌


வாகனத்தை
வேகமாக இயக்கினான்.


அலுவலக வாசலில் கௌசல்யாவை இறக்கி விட்டவன் நீ மேல போ எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அதை முடிச்சிட்டு வரேன் என்று சொல்லவும்.


சரி என தலையை அசைத்தபடி அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.


அங்கிருந்து வேகமாக ஹரியின் அலுவலகத்திற்கு காரை செலுத்தியவன் வாகனத்தை ரோட்டிலேயே பார்க் செய்துவிட்டு வேகமாக படியின் வழியாக சென்றான்.


ஹரியும் சற்று முன்பு தான் அலுவலகம் வந்திருந்தான். முதல் நாள் சபரீனா கூறியது போல அவசர அவசரமாக இருவரும் வேலையை பார்த்துக் கொண்டிருக்க யாருடைய அனுமதியையும் பெறாமல் ஹரிபிரசாத்தின் அறைக்குள் நுழைந்தான் விக்னேஸ்வரன்.


டேபிளின் முன்பு அமர்ந்திருந்த ஹரிபிரசாத் மிகத் தீவிரமாக கோப்புகளை சரி பார்த்துக் கொண்டிருக்க அவனுக்கு அருகில் நின்று உதவி கொண்டிருந்தாள் சபரீனா.


கதவை வேகமாக திறந்த படி விக்னேஸ்வரன் உள்ளே செல்லவும் யாரது என்பது போல இருவருமே சற்று கோபமாக எட்டிப் பார்த்தனர்.


உள் நுழைந்த விக்னேஸ்வரன் சபரீனாவைக் கண்டதும் நான் வெளிய வர்ற வரைக்கும் நீங்க வெளியே வெயிட் பண்ணுங்க யாரையும் உள்ள அனுப்பாதீங்க என்றான்.


உடனே அவள் ஹரிபிரசாத்தை திரும்பி பார்க்க அவனும் வெளியே செல் என்பது போல தலையசைக்கவும் வேகமாக வெளியே சென்று விட்டாள்.


அவள் சென்ற அடுத்த கனமே
இந்தப் பக்கம் இருந்தபடியே ஹரிபிரசாத்தின் சட்டையை கைநீட்டி எட்டிப் பிடித்து தூக்கியவன் சற்றும் யோசிக்காமல் ஹரியின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டிருந்தான்.


விக்கியின் திடீர் தாக்குதலால் ஹரி நிலை குழைந்தது என்னமோ சில வினாடிகள் தான்.. உடனடியாகவே சூதாரித்து கொண்டவன் அடுத்த தாக்குதலுக்காக கை தூக்கியவனின் கைகளை கெட்டியாக பிடித்து தடுத்தவன்.. அசால்ட்டாக சட்டையில் இருந்த மற்றொரு கையையும் தட்டி விட்டான்…


பிறகு உன் பிரண்டுக்கு நியாயம் கேட்பதற்காக வருவன்னு தெரியும் ஆனா சூடு ஆறுவதற்கு முன்னயே வருவேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல எதிர்பார்த்து இருந்தா இந்த குத்தை வாங்கியிருக்க மாட்டேன்..என்றபடி விக்கியின் கையை நன்றாக முறிக்கியபடி டேபிளை சுத்தி வந்து உட்கார்ந்தான்.


ஹரியின் கைக்குள் விக்கியின் கை சிக்கியிருக்க எவ்வளவு முயன்றும் அவனது உடும்பு பிடியில் இருந்து எடுக்க முடியவில்லை… அத்தனை பலம் எதிராளியிடம் இருந்தது .
அதை கண்டு விக்கி மிரண்டு விட்டான்.


இத்தனை பலம் கொண்ட கையாலா காலையில் கௌசியை அடித்தான் என்று தோணவும் இன்னுமே கோபம் வந்தது‌.


அந்தக் கோபத்தை உடனடியாக ஹரியிடம் காட்டினான் விக்கி.. முழு பலத்தையும் திரட்டி ஹரியிடம் மாட்டியிருந்த கையை வெளியே எடுத்தான்.


ஹரி சூதாரித்து விக்கியை பிடிப்பதற்குள் இவன் முந்திக்கொண்டு அவனது இரு கைகளையும் பிடித்து முறுக்க ஆரம்பித்தான்.


இங்க பாரு விக்னேஷ் இது என்னோட ஆபீஸ்.
இங்க சண்டை போடறதை நான் விரும்பல…அதனால தான் என் கோபத்தை கட்டுக்குள்ள வச்சிருக்கேன்…இதே மனநிலைல நான் எவ்ளோ நேரம் இருப்பேன்னு எனக்கே தெரியாது என்ற கூறிய படியே விக்கியின் கைகளை ஹரியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தான்.



இரு ஆண்களுமே நன்கு வளர்ந்த வாட்டசாட்டமானவர்கள் இருவரின் பலமும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை.. கண்டிப்பாக சண்டை போட ஆரம்பித்தால் நீளுமே தவிர தீர்வு இருக்காது என்பதை இருவருக்குமே உணர்ந்தனர்.


ஒரே நேரத்தில் இருவரும் அவர்களின் பலத்தை கை விட ஹரியை முறைத்த விக்கி..அவனது கைகளை உதறியபடியே…ராட்சசன் மாதிரி பலம் வச்சிருக்க…ஆனா இந்த பலத்தை கேவலம் ஒரு பொம்பள கிட்ட காமிச்சிருக்க பாரு அத நினைக்கும் போது வெக்கமா இருக்கு.



ம்ம்.. நான் அடிச்சதை மட்டும் சொன்னாளா இல்ல அங்க உக்காந்து கிட்டு என் தங்கச்சி வாழ்க்கைல விளையாடிகிட்டு இருக்காளே அதையும் சொன்னாளா.


எல்லாத்தையும் சொன்னா…அவ பேசறதை ஒரு ரெண்டு நிமிஷம் காது குடுத்து கேட்டிருந்தா யாரோட வாழ்க்கையை யார் கெடுக்கறாங்கன்னு புரியும்.


ஓஓ அப்போ வாழ்க்கை கெடறது வரைக்கும் சொல்லிருக்கா…அது மட்டும் தானா…இல்ல



ம்ம்…எல்லாமும் தான்…?


.
ம்ம்…எல்லாமும்….எ..ல்..லா..மு..ம். என்று அழுத்திச் சொல்லவும் தவறான அர்த்தம் வருவதை உணர்ந்த விக்கி கோபமாக.


ஏய்ய்….ச்சீ ..நீ எல்லாம் என்ன மனுஷன்.. பாவம் கௌசல்யா எவ்வளவு நல்ல பொண்ணு தெரியுமா… காலேஜ் படிக்கும் போது பட்டாம்பூச்சி மாதிரி இருப்பா…இன்னைக்கி அந்த பட்டாம்பூச்சியோட ரெக்கைய உடைச்சு புழு மாதிரி துடிக்க வச்சிட்டு இருக்க..
அவ என்ன பாவம் செஞ்சா..
எனக்கு தெரிஞ்சு வரை உன்ன கல்யாணம் பண்ணினதை தவிர..வேற எதுவும் செய்யல…




அவளுக்கு எதுக்காக இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கற..உனக்கு தான் அவளை பிடிக்கலல்ல…அவளும் தானே உன் கூட சேர்ந்து வாழ்வதை பற்றி யோசிக்கக்கூட மாட்டேங்கறா…



பேசாம டிவோர்ஸ் கொடுத்துட்டு உன் வாழ்க்கையை நீ பார்க்கலாம்ல…எதுக்கு இப்படி அவளை நகர விடாம ஒரே இடத்தில் தேக்கி வைக்கிற..தனியா வாழ வேண்டிய வயசா அவளுக்கு…என்றதுமே.


டேய் உன் நார வாயை வச்சுகிட்டு அவதூதி பாடறதை முதல்ல நிறுத்து..முதல்ல அவளை பிடிக்கலன்னு உனக்கு யாருடா சொன்னது..


அப்புறம் என்ன சொன்ன…நல்லவ…
யாரு அவ நல்லவளா… பட்டாம்பூச்சி மாதிரி இருந்தாளா…இன்னைக்கு புழு மாதிரி துடிக்கறாளா ?.


உண்மைய சொல்லனுனா அவளோட சதி வலையில மாட்டிக்கிட்டு புழுவா துடிக்கிறது நான் தான்..அவளை மறக்கவும் முடியாம பக்கத்துல வச்சிக்கவும் முடியாம தினம் தினம் வேதனைல துடிக்கறேன்.


ஒரு ஆணா, ஒரு கணவனா, ஒரு தகப்பனா ,எனக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சந்தோஷம் எதையுமே அவ எனக்கு கொடுக்கல..


என் வாழ்க்கைக்குள்ள புயல் மாதிரி வந்து அப்படியே என் வாழ்க்கையை அஸ்தமச்சிட்டு போயிட்டா..


அவளுக்கும் அவ குடும்பத்துக்கும் பணக்காரன் ஒருத்தன் மாப்பிள்ளையா வேணும்.. இளிச்சவாயனா நான் கிடைச்சேன்… அப்புறம் என்கிட்ட இருந்து எதுவும் தேராதுன்னு தெரிந்தால கிளம்பி போயிட்டா.


அவளால என் பிஸினஸ் பாதிக்கிது…லாபத்துல ஓடினது இன்னைக்கு நஷ்டத்தோட தொடக்கத்துக்கு வந்திருக்கு..என்னை மரியாதையா பாத்தவனுங்க எல்லாரும் கேலி பண்ணறானுங்க..
ஒவ்வொருத்தனையும் என் காது படவே பேசுவானுங்க…இவன் பொண்டாட்டி ஓடிப் போயிட்டா…எவனோ ஒருத்தன் கூட சேர்ந்து சுத்திகிட்டு இருக்கான்னு…


இவனுக்கு பிசினஸ் மட்டும் இல்ல.. பொண்டாட்டியும் சரியா பாத்துக்க தெரியலன்னு.. முகத்துக்கு நேரா பேசும் போது செத்து செத்து பொழைக்கறேன்…இன்னைக்கு கூட பெரிய லாஸ்…யாரால அவளால மட்டும் தான்…



நான் பரம்பரை பணக்காரன் ஆனா இன்னைக்கு பரம்பரை சொத்து எல்லாத்தையும் எனக்காக விட்டுட்டு என் அம்மா அப்பா ஜானுவோட அம்மா அப்பா வாழ்ந்த வீட்டுல இருக்குறாங்க.


என்னோட சித்தியும் சித்தப்பாவும் ஆரம்பத்திலிருந்து எங்க பரம்பரை வீட்டுல தான் இருந்தாங்க…சித்தப்பாவால என் அப்பா மாதிரி சொத்து சேர்த்த தெரியல..


ஆனா அதுக்கு பதிலா அவங்க பையனை ஒழுக்கமா வளர்த்தினாங்க.. என்னை மாதிரி காதல் கன்றாவின்னு எதுலேயும் மாட்டிக்காம படிச்சான்… வேலையை தேடிகிட்டு பெத்தவங்களையும் கூட கூட்டிட்டு போய்ட்டான் .


ஆனா என் அம்மா அப்பா சொத்து நிறைய சேர்த்தினாங்க… பையனை ஒழுங்கா வளர்த்தல .


பொண்ணு எது பேய் எதுன்னு தெரியாம அழகுல மயங்கி ஒருத்தி கால்ல விழுந்துட்டேன் .


அதுக்கப்புறம் எனக்கு பிடிச்சது கேடு.
என்னைக்கு அவளை கல்யாணம் பண்ணினேனோ அன்னைல இருந்து அடுத்தடுத்து பிசினஸ் லாஸ்.


அப்பா சம்பாதிச்ச சொத்து எல்லாத்தையும் வித்து பிசினஸ்க்குள்ள போட்டு மேலும் மேலும் நஷ்டப்படுத்தி கடைசில இதை மட்டும் வச்சிருக்கேன்.


பெத்தவர்களை கூட வச்சுக்க முடியாத ஒரு நிலைமை.. அவளை நினைக்கும் போதெல்லாம் நான் நானா இருக்கறது இல்ல …மிருகமா மாறிடறேன். எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன் என்னை நானே காயப்படுத்திக்கிறேன்.


இதையெல்லாம் அவங்க பாத்தா தாங்க மாட்டாங்க அதனால தான் கிராமத்து வீட்டுக்கு அனுப்பிட்டேன்..என்று தன்னிலை மறந்து பேசிக்கொண்டிருந்த ஹரியிடம்.


சபாஷ் ..
பண்பு இல்லனாலும் படிச்சவனு நினைச்சேன் இப்போ தான் தெரியுது நீ மூடநம்பிக்கையில உருண்டு புரள்றவன்னு..


உன் பிசினஸ் லாஸ்க்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்.. உனக்கு சரியானதை தேர்ந்தெடுத்து முதலீடு பண்ண தெரியல .


அதுக்காக ஏன் அவளை அதிர்ஷ்டம் இல்லாதவ போல பேசற.. அவ எவ்வளவு பெரிய அதிர்ஷ்டகாரி தெரியுமா…


புதுசா ஒரு டீல் சைன் பண்ணனும்னா அவ முகத்தை பார்த்துட்டு தான் போவேன் அந்த அளவுக்கு எனக்கு லக்கி சார்ம்…என்ற விக்கியில்.



சிரித்தபடியே நீ சின்ன பையன் என்பதை ப்ரூப் பண்ணிட்டப்பா…கிளம்பு உனக்கு சொல்லி எல்லாம் புரிய வைக்க முடியாது.


எக்ஸ்க்யூஸ் மீ என்று கோபம் கொண்டவனிடம்.


நான் என் குடும்ப வாழ்க்கையை பத்தி பேசிட்டு இருந்தேன் நீ மூடநம்பிக்கையோட சம்பந்தப்படுத்தி பேசுற உனக்கு எப்படி என்னால புரிய வைக்க முடியும்..


என்னைக்கு அவளை கல்யாணம் செஞ்சேனோ அன்னைக்கு இருந்து அவளோட பாராமுகம் என்னை பிஸினஸ்சை பாக்க விடல…


அவளோட அமைதி என்னை தடுமாற வச்சது ‌..அவ மனசுக்குள்ள என்ன இருக்குன்னு தேடித் தேடி என் பிசினஸ் மொத்தத்தையும் விட்டுட்டேன்.


இன்னைக்கு வரைக்கும் ஒரு புருஷனா என்னை மதிக்கிறது இல்லை.. ஒரு வகையில எங்க ரெண்டு பேருக்குள்ளேயும் இவ்வளவு பெரிய விரிசல் உருவானதற்கு காரணம் நீதான் என்று விக்கியின் நெஞ்சில் ஒற்றை விரலை வைத்து சுட்டிக்காட்டினான்.


இது என்ன புது கதை இவ்வளவு நேரம் கௌசல்யா மட்டும் குறை சொன்ன இப்போ என்னை இழுத்து விடற..



ம்கூம்…உன்னை இழுத்து எல்லாம் விடல நீயும் ஒரு காரணம்..கௌசல்யாவை இல்லைன்னு சொல்ல சொல்லு பாக்கலாம் ..



சொல்ல மாட்டா…அவளுக்கு இந்த உலகத்தில் எல்லாரையும் விட நீ முக்கியம் …உன் சந்தோஷம் முக்கியம்.
அவ என்னை விட்டுட்டு போனதுக்கான முதல் காரணம் நீதான் அது தெரியுமா உனக்கு.


எப்படி என் குடும்ப வாழ்க்கைக்கும் பிஸினஸ்க்கும் சம்மந்தம் இருக்குதோ…அதே போல கௌசியோட பாராமுகத்திற்கும்,இன்னைக்கு என்னை பிரிஞ்சு இருப்பதற்கும் நீயும் ஒரு காரணம்…


போ…போய் உன் அருமை தோழிகிட்ட கேளு… உங்களோட பிரிவுக்கு நானும் ஓரு காரணமான்னு… வாய தொறந்து கேளு…


கண்டிப்பா ஆமான்னு சொல்லவே மாட்டா…அப்படி சொல்லிட்டா நீ வருத்தப்படுவல்ல…


அதனால அவ மனசுல இருக்குறதை என்னைக்கும் சொல்லவே மாட்டா…



இன்னைக்கு நான் ஏன் அவ மேல இவ்வளவு கோபமா இருக்கறேன்னு கேளு.. அதுக்கான உண்மையான காரணத்தையும் உன்கிட்ட சொல்ல மாட்டா..என்ற ஹரியிடம்.


ஒருவேளை அவ மனசுல என்ன இருக்கிறது என்பதை நான் தெரிஞ்சுகிட்டேன்னா… உங்க ரெண்டு பேரோட பிரிவுக்கும் நான் காரணம் இல்லை என்று நிரூபிச்சிட்டேன்னா நீங்க என்ன செய்வீங்க..



அப்படியே நீ தெரிஞ்சுகிட்டனா.. அவளுக்கு எந்த வகையிலும் பொருத்தம் இல்லாத மட்டமான புருஷன்னு நான் ஒத்துக்குறேன்.



ம்ம்..இது செல்லாது…


வேற என்ன எதிர்பாக்கற..


அவ மனசுல என்ன இருந்தது ‌.. எதனால உங்ககிட்ட பாராமுகமா நடந்துக்கிட்டாங்கிற விஷயத்தை கேட்டுட்டு வந்து சொல்லறேன்…அதோட உங்களோட பிரிவுக்கு ஒரு பர்சன்டேஜ் கூட நான் காரணம் இல்லன்னு நிரூபிக்கிறேன் உங்க வாயாலயே அதை சொல்லவும் வைக்கிறேன்..


முடியாத காரியம் விக்கி சேலஞ்ச் பண்ணி தோத்து போகாத..


இந்த விக்கி என்றைக்குமே முன் வைத்த காலை பின் வைக்க மாட்டான்..தோல்வியை சந்திக்கவும் மாட்டான்..நான் இதெல்லாம் செஞ்சுட்டேனா நீங்க எனக்கு என்ன தருவீங்க அதை சொல்லுங்க.


என்ன வேணும்..


நிரந்தரமா கௌசியை விட்டு நீங்க பிரியணும்.. அது மட்டும் கிடையாது. அவளுக்கு உடனே டிவோர்ஸ் கொடுக்கணும்… என்னைக்குமே உங்க நிழல் கூட அவ பக்கத்துல படாத தூரம் நீங்க போயிடும்.


ஓகே டன் இதை உன்னால பண்ண முடியலன்னா நீ எனக்கு என்ன தருவ ..


என்ன வேணும் சொல்லுங்க..


இப்போ சொல்ல மாட்டேன்.. உன் தோல்வியை ஒத்துக்கிட்டு என் முன்னாடி வந்து மன்னிச்சிருங்கன்னு சொல்லுவல்ல அப்போ எனக்கு என்ன வேணும்னு சொல்றேன்..இப்போ கிளம்பு..


ம்ம்…போறேன் ரெண்டு நாள்ல கௌசி ஏன் அப்படி நடந்துகிட்டான்னு தெரிஞ்சுகிட்டு உங்க கிட்ட வரேன்..


ரெண்டு நாள் இல்ல ரெண்டு வாரம் வேணாலும் எடுத்துக்கோ ஆனா நீ என்கிட்ட சேலஞ்ச் பண்ண மாதிரி உன்னால ஜெயிக்க முடியாது..


எங்களோட இல்லற வாழ்க்கை விரிசலுக்கு காரணம் நீ தான்…இப்போதைய எங்க சண்டைக்கும் நீ மட்டும் தான் காரணம் போய்ட்டு தோல்வியோட திரும்பி வா…



உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி. உடனே டிவோர்ஸ் பேப்பர் ரெடி பண்ணுங்க…என்ற படி அங்கிருந்து கிளம்பினான் விக்னேஸ்வரன்.
 
Last edited:
Top