கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகம் 31

Akila vaikundam

Moderator
Staff member
31.

எல்லாரிடமும் எரிந்து விழுந்தாள்.அவளின் அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு அழுது தீர்த்தாள்..விக்கிக்கு ஃபோன் செய்து புலம்பித் தீர்த்தாள்.

யாருடைய சமாதானமும் அவளிடத்தில் எடுபடவில்லை.

அவளைப் பார்த்து பயம் கொண்ட ஜானு ஹரிக்கு அழைத்து பேசினாள்.

டேய் அண்ணா அவ பாவம்டா விட்டிடு.. ரொம்ப அழுது கறையறா அண்ணா.

நீ தானே சொன்ன ஜானு அவளுக்கு நிறையா ஆசைகள் லட்சியம் கனவு எல்லாம் இருக்கு.. இதிலிருந்து அவளை வெளிக்கொண்டு வந்து உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கறது எல்லாம் பெரிய மிஷன் ரொம்ப நாள் ஆகும் போலன்னு.

அதான் அவளோட ஆசை கனவு லட்சியத்துக்கு எல்லாம் என்ன மூல காரணமா இருக்கு அவளோட அதிகப்படியான தன்னம்பிக்கை அந்த தன்னம்பிக்கையை தான் இன்னைக்கு நான் உடைச்சிருக்கேன் அவளை அவளே ஒரு யூஸ்லேஸ்னு நம்ப வைக்கனும் .

நாம ஆசைபடறது எல்லாம் நமக்கு கிடைக்காது சாத்தியமில்லைங்கற பிம்பத்தை உருவாக்கனும் அப்போ தானே ஈஸியா கல்யாணத்துக்கு சம்மதிப்பா.

சரிதான் அண்ணா அவ நம்பிக்கையை மட்டும் உடைச்சா மட்டும் பத்தாதுன்னு தோணுது ‌


அதுவும் தெரியும் உன் மாமியாரோட நம்பிக்கையையும் மச்சானோட நம்பிக்கையும் உடைக்கணும்.


அது முடியும்னு தோணுதா..?


ஹரிபிரசாத் லைஃப்ல முடியாததுன்னு எதும் இல்ல..நீ இதிலெல்லாம் தலையிடாம உன் ஹெல்த்தை மட்டும் கவனிச்சிக்கோ.


ம்ம்..

சரி உன் அண்ணி என்ன பண்ணறா.

காலைல ரூம் உள்ள போனவ இப்போ வரை வெளில வரல..சாப்ட கூட இல்லை கொஞ்சம் பாவமாவும் இருக்கு.ஆனா பாவம் பாத்தா நாம நினைச்சது நடக்காதே அதனால கண்டுக்காம இருக்கேன்.


முதல்ல அவளை சாப்ட வை .. எல்லாம் சரியாகும்னு சமாதானம் செய்.
என்றவன்.யோசனையில் ஆழ்ந்தான் அடுத்த என்ன செய்வது என.


பிறகு மனதிற்குள்ளாகவே எல்லாம் கொஞ்ச நாள் தான்.. கௌசி அப்புறம் நீ என்கிட்ட வந்திடுவ எல்லாம் சரியாயிடும் என அவள் அருகில் இருப்பதாக எண்ணி சமாதானம் செய்தான்.
தன்னுடைய மொபைலை எடுந்து யாரிடமோ பேசினான் பிறகு தனக்குள்ளாகவே சிரித்துக் கொண்டான்.

சற்று நேரத்திற்கு எல்லாம் கௌசியின் தோழியிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது.


ஹாய் கௌசி..


சொல்லு வேதா எப்படி இருக்க.

சூப்பரா இருக்கேன் ஏன் உன் வாய்ஸ் டல்லா இருக்கு.


கொஞ்சம் தலைவலி‌ .சரி உன் வேலை எப்படி போகுது..

சூப்பரா போகுது.
உனக்கொரு குட் நியூஸ் சொல்ல தான் கூப்பிட்டேன்.

குட் நீயூஸ் ஆ..சரி சொல்லு கேட்போம்.

கௌசி நான் இன்டன்ஷிப் பண்ற ஆபீஸ்ல ரெண்டு மூணு வேக்கன்சி இருக்கு நீ டிரை பண்ணறியா.

கேம்பஸ்ல ரீஜெக்ட் பண்ணிட்டாங்களே அப்புறம் எப்படி டிரை செய்யறது.

இது கேம்பஸ்ல வந்தது இல்ல..அது வெளியூர்னு என்வீட்ல விடல
இது என் அண்ணன் மூலமா வந்தது.
இன்னைக்கு ஈவினிங் ஆறு மணிக்கு ஜூம் மீட் மூலமா இன்டர்வியூ இருக்கு நான் லிங்க் ஷேர் பண்றேன் மறக்காம அட்டென்ட் பண்ணு ஆல் த பெஸ்ட் என்று கூறியபடி வைத்தாள்.

கௌசியின் மனதில் சிறு நம்பிக்கை பிறந்தது.


தன்னை குனிந்து பார்த்தவள் இந்த கோலத்தில் இன்டர்வியூ அட்டென்ட் செய்ய முடியாது என புரிந்து கொண்டு வேக வேகமாக குளித்து தன்னை தயார் செய்த படி காத்திருக்க ஆரம்பித்தாள்.


சரியாக மணி ஆறு மணியை நெருங்கும் வேலையில் ஊரில் இருக்கும் அனைத்து கோவில்களுக்கும் வேண்டுதல் வைத்தபடி லேப்டாப்பை ஆன் செய்து லிங்க்கின் உள்ளே புகுந்தாள்.


பரஸ்பர அறிமுகத்திற்கு பின் பெரிதாக எந்த ஒரு கேள்வியையும் கேட்கப்படாமலே நாளை பதில் சொல்கிறோம் என கூறினர்.

மறுநாளே கால்ஆஃபர் லெட்டர் மெயிலில் வந்தது.நல்லதொரு சம்பளத்தில் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தாள்.கௌசிக்கு தலைகால் புரியாத அளவிற்கு சந்தோஷம்.

தாயிடம் சந்தோஷமாக கூறியவள் அண்ணியிடமும் கூறத் தவறவில்லை.
யாரால் இந்த வேலை கிடைத்தது என்பது ஜானுவிற்கு தெரியாத விஷயமில்லை.

ம்மா இந்த விஷயத்தை விக்கிகிட்ட சொல்லிட்டு அப்படியே அவனுக்கு டிரீட் வச்சிட்டு வரேன் என்றபடி குதூகலமாக வெளியே கிளம்பினாள்.

கேட்டுக்கொண்டிருந்த ஜானுவின் முகம் விருப்பமின்மையை வெளிப்படுத்தியது.

சற்று நேரம் வரை அமைதி காத்தவள் ஹரியை அழைத்தாள்.

ஹலோ அண்ணா..

சொல்லு ஜானு இன்னைக்கு உன் அண்ணி எப்படியிருக்கா.

உன் புண்ணியத்துல செம ஹேப்பி..அதை செலிபிரேட் பண்ண ப்ரண்ட்ஸ் கூட வெளிய போயாச்சி.

ஃப்ரண்ட்ஸ் கூட இல்ல..விக்கியோட பாலக்காடு ரோட்ல லாங்டிரைவ் போறா.

உனக்கெப்படி தெரியும்..


என் முன்னாடி தான் போய்ட்டு இருக்கா.. கொஞ்ச நேரம் முன்ன தான் ரோட்டுக்கடைல டீ குடிச்சாங்க இப்போ ரொம்ப வேகமா போயிட்டு இருக்காங்க.

உன் நாத்தனாரா மட்டும் இருந்தா என்னமோ பண்ணிட்டு போகட்டும்னு விட்டிடலாம். ஆனா கௌசி என்னோட எதிர்கால மனைவி அதனால நானும் பாதுகாப்புக்கு போயிட்டு இருக்கேன்.


உனக்கு கஷ்டமா இல்லையா அண்ணா அவ அந்த பையனோட கொஞ்சம் அதிகமா உரிமை எடுத்து பழகுவா. நானும் நேரடியா சொல்லிட்டேன் அத்தை மூலமாவும் பேசி பாத்துட்டேன் அளவா வச்சிக்க சொல்லி..துளி கூட கேட்கமாட்டேங்கறா..அந்த பையன் விஷயத்தை எடுத்தாலே பத்திரகாளி ஆயிடுவா யாரையும் வாய் திறக்க விடமாட்டா எதுக்கு பிரச்சனைனு நான் விட்டுட்டேன்..ஆனா நீ கல்யாணத்துக்கு அப்புறம் சரி செய்துக்கோ.அவன் விஷயத்தை ஓதிக்கிட்டு பாத்தா ரொம்ப
நல்ல பொண்ணு அண்ணா.


என்ன ஜானு எதுக்காக இப்படி நீண்டதொரு விளக்கம். நீ பயப்படுற மாதிரி எல்லாம் எதுவும் நடக்காது. அவ நல்ல பொண்ணுன்னு தெரியறதுனால தான் அவளை கல்யாணம் பண்றதுக்காக இந்த அளவுக்கு கீழ இறங்கி வேலை பாத்துட்டு இருக்கேன்.


அப்புறம் விக்கி பத்தி நான் நல்லா விசாரிச்சிட்டேன் காலேஜ் பர்ஸ்ட் டேஸ்ல இருந்து ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்.


ரெண்டு மூணு தடவை அந்த பையன் வீட்டுக்கு கூட போயிட்டு வந்திருக்கறா.. அவன் கொஞ்சம் அதிகப்பிரசங்கி கௌசியை நல்லா பாத்துக்கறதா நெனச்சு ரொம்ப உரிமை எடுத்துப்பான். மத்தபடி பையன பத்தி எந்த பிரச்சனையும் இல்லை.


அவன் அப்பா எனக்கு தெரிஞ்சவர்தான் என்னோட பிசினஸ் ஃப்ரண்ட் சோ அவன் மூலமா இவளுக்கு எந்த பிரச்சினையும் வர மாதிரி தெரியல.. கல்யாணத்துக்கு பிறகு கௌசிகிட்ட சொன்னா புருஞ்சிப்பா..என்றவன் சற்று யோசனையாக ஜானு இன்னைக்கு கௌசி வீட்டுக்கு வந்த பிறகு இந்த மாதிரி தனியா லாங் டிரைவ் டூவீலர்ல போற வேலை எல்லாம் வேணாங்கறதை தெளிவா சொல்லிடு . எப்பவும் ஒரே போல இருக்காது.. எனக்கு அவ சேஃப்டி ரொம்ப முக்கியம்.


அப்புறம் இந்த நாலு மாசம் அவளோட இன்டெர்ன்ஷிப் முடிக்கிறதுக்குள்ள எங்களோட கல்யாண டேட் பிக்ஸ் பண்ற மாதிரி உன் மாமியார் கிட்டயும் வீட்டுக்காரர் கிட்டயும் பேசிடு.
நமக்கு டைம் இல்ல.


ஜனாக்கு இன்னும் பதினைந்து நாள்ல கல்யாணம் உனக்கு அடுத்த மாசம் டெலிவரி டேட் அதுக்கப்புறம் ஒரு ரெண்டு மாசத்துல உன் அம்மா அமெரிக்கா கிளம்பி போயிடுவாங்க அதுக்குள்ள என் கல்யாணத்தை முடிக்கணும் என் சைட்ல இருந்து இனி கௌசிக்கு பிரஸர் மட்டும் தான் இருக்கும்.


எப்படா இன்டர்ன்ஷிப்பை முடிச்சுட்டு வீட்ல உட்காரலாம் வேலையும் வேணாம் ஒன்னும் வேணாம் என்கிற அளவுக்கு இந்த நாலு மாசத்துல நான் அவளை பாடா படுத்தப் போறேன்.


நீ உன்னுடைய வேலையை சரியா செய் என்றவன் மொபைலை வைத்துவிட்டு கௌசியையும் விக்கியையும் முறைத்துக்கொண்டிருந்தான்.


இப்பொழுது கௌசி வண்டி ஓட்ட பின்னால் அமர்ந்து அவளுக்கு சொல்லிக் கொடுத்த படி விக்கி சென்று கொண்டிருந்தான்.


அந்தக் காட்சியை காண சகிக்காத ஹரி அவனுடைய காரை அப்படியே யூடர்ன் செய்து எதிர்பக்கமாக பயணிக்கத்தொடங்கினான்.


அவனின் கோபத்தின் அளவை காரின் வேகம் கூறியது தனது உள்ளங்கையை எடுத்து ஸ்டீரிங்கில் ஓங்கி குத்தியபடி ஆக்சிலேட்டரை வேகமாக மிதித்தான்.


விக்கியுடன் சென்றதற்கான தண்டனையை மறுநாளே அலுவலகத்தில் அனுபவித்தாள் கௌசி.


முதல் நாள் மிகவும் சந்தோஷத்துடன் அலுவலகத்திற்கு சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.


அவளது உயர் அதிகாரி வந்து வாழ்த்தி விட்டு சென்றார் .


அதன் பிறகு மாலை ஆறு மணி வரை அவளுக்கு எந்த ஒரு வேலையும் கொடுக்கப்படவில்லை இரண்டு வேலை காபி ஜூஸ் சாப்பாடு இப்படி அனைத்தும் வந்தது ஆனால் இடத்தை விட்டு அசையவே விடவில்லை.


எந்த ஒரு வேலையும் இல்லாமல் காலை முதல் மாலை வரை ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது என்பது எந்த மாதிரியான மனநிலையை கொடுக்கும் என்பதை கௌசிடம் கேட்டுக் கொள்ளலாம் அந்த அளவிற்கு வெறுத்துப் போய் உட்க்கார்ந்து இருந்தாள்.


அவளுடைய தோழி வேதாவோ கேபினை விட்டு வெளியே தலை காட்டவே இல்லை.


முதல் நாளே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாள்.


காலையிலிருந்து மதியம் வரை என்ன வேலை கொடுப்பார்கள் எந்த மாதிரியான வேலை கொடுப்பார்கள் என்று காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு
நேரம் செல்லச்செல்ல வீட்டிற்கு சென்றாள் பரவாயில்லை என தோண்றியது.


நாளையும் இதே போல் அமர வைத்தால் என்ன செய்வது என்ற பயமும் வந்தது.


கலக்கத்துடனே வீடு வந்து சேர்ந்தவள் முதல் நாள் வேலை எப்படி என்று கேட்ட தாயிடமும் அண்ணனிடமும் காதில் ரத்தம் வரும் அளவிற்கு புலம்பி தீர்த்து விட்டாள்.


முதல்முறையாக லட்சுமிக்கும் கேசவனுக்கும் அவளின் மீது இருந்த நம்பிக்கை சற்று ஆட்டம் கண்டது.


அவள் சென்ற பிறகு லட்சுமி வருத்தத்துடன் கேசவனிடம் என்னடா முதல் நாளே இப்படி புலம்பிட்டு போறா இவ எப்படிடா ஆறு மாசம் குப்பை கொட்ட போறா.


அம்மா ஆறு மாசம் என்கிறது டுரேஷன் மட்டும் தான் முழுசா நாலு மாசம் இன்டென்ஷிப்பை போனாலே கோர்ஸ் கம்ப்ளீட்டர்ட் சர்டிபிகேட் வாங்கிடுவா ஆனா இவ புலம்பிட்டு போறதை பாத்தா நாலு மாசமே போக மாட்டா போல என்னமா பண்றது என்று அவனும் பதிலுக்கு கவலை கொண்டாள்.


விடு கேசவா அவ போற வரைக்கும் போகட்டும் படிச்சி முடிஞ்சாலும் சரி முடிக்கலனாலும் சரி ஜானகிக்கு டெலிவரி முடிஞ்ச உடனே இவளுக்கு ஒரு நல்ல பையனை பார்த்து கல்யாணத்தை பண்ணலாம் .


வரவர உன் தங்கச்சி போக்கே சரியில்ல அந்த விக்கி கூட ரொம்ப சுத்திக்கிட்டு இருக்கா சொன்னாலும் கேக்குறது இல்ல நேத்து கூட வண்டியில எங்கேயோ தூரமா போயிருக்கா.

நம்ம ஜானுவோட ஃபிரண்ட் யாரோ பாத்துட்டு போன் பண்ணி சொல்லியிருக்காங்க ..


ஜானு என்கிட்ட சொல்லி ரொம்ப வருத்தப்பட்டா கல்யாணம் ஆக வேண்டிய புள்ளை இப்படி கண்டவனோட டூவீலர்ல போறது நல்லாவா இருக்குன்னு கேட்கறா எனக்கு தான் பதில் சொல்ல முடியல.


அம்மா பல தடவை சொல்லிட்டேன் விக்கி அந்த மாதிரி பையன் இல்லைன்னு. அவங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸ் மா தயவு செஞ்சு ஜானகி சொன்னா அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கன்னு அவங்க நட்பை கொச்சைப்படுத்தாதீங்க.


நம்ம பிள்ளைகளை நாமளே நம்பலன்னா வேற யாருமா நம்புவாங்க.


டேய் நம்பலன்னு யாருடா சொன்னது இப்படி சுத்த வேணான்னு சொல்லச் சொன்னேன் என்றவர் சரி ஜானகிக்கு எப்போ வளையல் போடுறாங்களாம் ஏதாவது சொன்னாளா.


ஏன்மா இதை நீங்களே நேரடியா ஜானகி கிட்ட கேட்கலாம் இல்ல என்கிட்ட கேட்டு நான் உங்களுக்கு சொல்லனுமா.


இல்லடா அவங்க அண்ணன் கல்யாணம் இன்னும் பதினைந்து நாள்ல இருக்கு ரெண்டாவது இது பொண்ணு வீட்ல செய்யற முறை நாம போய் கேட்டு அவங்க செய்யறது நல்லா இருக்காது அவங்க செய்யலன்னா நாம செய்யலாம்ல அதான் கேட்டேன்.


அப்போ இன்னைக்கு ஜானகி கிட்ட பேசிட்டு நான் உங்களுக்கு நாளைக்கு சொல்றேன் மா எப்படியும் அவ அண்ணன் கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் வைப்பாங்க.


சரி அவங்க பண்ணல என்கிற மாதிரி இரு

ந்தா ஜனா கல்யாணம் முடிஞ்ச ஒரு வாரத்திலேயே ஒரு நல்ல முகூர்த்த நாள் வருது அன்னைக்கு நாம வளைகாப்பு பண்ணிடலாம் ஜானகி கிட்ட தெளிவா பேசிடு என்றபடி சென்றார்.
 
Last edited:
Top