கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகம் 33

Akila vaikundam

Moderator
Staff member
33.



லட்சுமியின் மனதில் உறவினர் பற்ற வைத்து நெருப்பு கொழுந்து விட்டு எறிய தொடங்கி இருந்தது.



அதன் பிறகு ஒவ்வொரு முறையும் கௌசல்யாவையும் ஹரிபிரசாத்தையும் மனக்கண்ணில் ஜோடியாக நிற்க வைத்து அழகு பார்த்தார்.


அன்றே மருமகள் தாயார் வீட்டுக்கு செல்லும் முன்பாக உன் அண்ணனுக்கு எதுவும் வரன் பாக்கலையா என வாய்விட்டு கேட்டுவிட்டார் ஆச்சரியமாக மாமியாரை பார்த்தவள் இன்னும் அண்ணனுக்கு பிடிச்ச மாதிரி வரன் எதுவும் வரலை குழந்தை பிறக்கட்டும் அதுக்கப்புறம் இது பத்தி பேசலாம் என்று பட்டும் படாமல் கூறிவிட்டு சென்றுவிட்டாள்.


உள்ளுக்குள் ஜானுவிற்கு கொண்டாட்டம் தான் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.


மாமியாரிடம் இருந்து இந்த ஒரு வார்த்தையை வாங்க அவள் எத்தனை தியாகங்களை செய்திருக்கிறாள் அவள் நினைத்திருந்தால் பாதி நாட்கள் பெற்றவர்களின் வீட்டில் சுபபோகமாக வாழ்ந்திருக்கலாம்.


ஓரு வழியாக மாரியாரை வழிக்கு கொண்டு வந்தாயிற்று இனி கணவன் மட்டுமே மாமியார் எப்படியும் இது பற்றி கணவரிடம் பேசுவார் என்பது அவளுக்கு நிச்சயமாக தெரியும்.


குழந்தை பிறக்கும் முன்பே இருவரும் ஏதாவது ஒரு முடிவை எடுத்துக் கொண்டு தன்னிடம் வருவார்கள் அப்பொழுது மீதியை பார்த்துக் கொள்ளலாம் என அவளின் பிறந்த வீடு சென்றாள்.



அவள் எதிர்பார்த்தது போலவே அன்று இரவே கேசவனிடம் லட்சுமி பேச ஆரம்பித்தார் .


கேசவா நம்ம கௌசி பத்தி என்ன முடிவு எடுத்திருக்க .


கௌசி பத்தி என்னம்மா முடிவெடுக்கனும் படிச்சிட்டு இருக்கா இன்னும் நாலு மாசம் இருக்கு அவ படிப்பு முடிய .


என்னடா அன்னைக்கி என்னமோ நாலு மாசம்னு சொன்னே இன்னைக்கு மறுபடியும் நாலு மாசம் சொல்லற.




ஐயோ அம்மா இன்டன்ஷிப் முடியறதுக்கு தான் நாலு மாசம் இருக்கு அவ காலேஜ் படிப்பு முடிய ஆறு மாசம் இருக்குன்னு அன்னைக்கே சொன்னேன் இப்போ என்ன பிரச்சனை இதால.



இல்லடா திடீர்னு மறுபடியும் நாலு மாசம்னு சொல்லிட்டியா அதான் பக்குனு ஆயிடுச்சு.


சலிப்புடன்.. என்ன விஷயம் அத சொல்லுங்க..



தினம் தினம் ஆஃபிஸ் போயிட்டு வந்து புலம்புறாடா அவ புலம்பலை கேக்குற திராணி எனக்கு இல்ல.




புரியுதும்மா என்கிட்டயும் ரெண்டு மூணு தடவை வந்து புலம்பிட்டா டார்ச்சர் பண்றாங்க போல நான் வந்து பேசி பார்க்கட்டுமான்னு கேட்டேன் அதுக்கும் பயப்படறா.


படிக்கிற காலத்துல பெருசா வேலை இருக்காதுன்னு சொன்ன ..அப்படி இருந்தும் இந்த புலம்பு புலம்பறா இவ எப்படிடா படிப்பு முடிச்சுட்டு தொடர்ந்து வேலைக்கு போகப் போறா.


ம்ம் எனக்கும் அதான் ஒன்னும் புரியல இப்படி புலம்பிட்டு இருந்தா எப்படி வேலைக்கு அனுப்புவது.


அதான் கேசவா சொல்றேன் இவ நாலு மாசம் போய் முடிச்ச உடனேவே ஒரு கல்யாணத்தை பண்ணிட்டா என்ன அதுக்கப்புறம் சர்டிபிகேட் வாங்கறது தானே அத அவ புருஷன் வீட்டில் இருந்து கூட போய் வாங்கிக்கலாம் இல்ல.



அது பிரச்சனை இல்லம்மா ஆனா இவ கல்யாணத்துக்கு ஒத்துக்கணுமே வேலை,வீடு,காருன்னு அது பெரிய கனவு எல்லாம் வச்சிருக்காளே எப்படி ஓத்துப்பா.


கேசவா நீ தான கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்ன இவ இப்படி தினம் தினம் வந்து வேலையை பத்தி குறை பேசிட்டு இருந்தா எப்படி நம்மளால தைரியமாக வேலைக்கு அனுப்ப முடியும் இல்ல அவளும் தான் எப்படி ஒரு இடத்தில் வேலை செய்ய முடியும்.





பேசாம அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடலாம் டா நம்ம ஜானுவோட அண்ணனுக்கு கூட வரன் பாத்துட்டு இருக்காங்க .. அந்தப் பையனுக்கு ஏன் நம்ம கௌசி ஜாதகத்தை குடுக்க கூடாது..?



அம்மா விளையாடுறிங்களா ஆசை படலாம் பேராசைப்படக்கூடாது அவங்க உயரம் என்ன நம்ம தகுதி என்ன இதெல்லாம் சரி வராது தப்பு தவறி கூட இந்த மாதிரி ஜானுகிட்ட கேட்டு வச்சிடாதீங்க.



என்னடா தகுதி உயரம் ஏன் ஜானு நம்ம வீட்ல வந்து இருக்கலையா அப்படி நம்ம பொண்ணு அவங்க வீட்ல போய் இருக்க போறா இங்க பாரு கேசவா அந்த பையன் பக்கத்துல நம்ம கௌசி நின்னா அப்படி ஒரு பொருத்தமா இருக்கு அம்மா கூட ரொம்ப பிரியமா புடவை நகைனு குடுத்துட்டு போனாங்க.


அம்மா அதெல்லாம் அவங்க வீட்டு பங்க்ஷன் நாம முக்கியமான உறவுக்காரங்க..கௌசிகிட்ட அதிகமா நகைகள் இல்ல..அதனால நம்ம வீட்டை இறக்கி காட்ட கூடாதுன்னு கூட அப்படி தந்திருக்கலாம்..


இல்ல கேசவா அந்த மாதிரி எல்லாம் இல்ல அவங்க உண்மையிலேயே பிரியமா தான் குடுத்தாங்க திருப்பி கூட வாங்க மாட்டேன்னு சொன்னாங்க நம்ம கௌசி தான் அடம் பிடித்து அவங்க கைல திருப்பிக் கொடுத்தா.



நான் கூட சம்மந்தி அம்மா கிட்ட ஜாடை மாடையா விசாரிச்சு பார்த்தேன் அவங்க சைட் பையனுக்கு பொண்ணை பிடிச்சா போதுமாம் மத்தபடி வசதியோ இல்ல வரதட்சணையோ தேவையில்லனு சொன்னாங்க உங்க சைடு ஏதாவது பொண்ணுக்கு இருந்தாலும் ஜாதகத்தை கொடுங்கன்னு வெளிப்படையவே இன்னைக்கு என்கிட்ட கேட்டாங்க.



அது மட்டும் பத்தாதுன்னு இன்னைக்கு நம்ம சொந்தக்காரங்க கூட நீ ஏன் கௌசிக்கு அந்த பையனை கேட்க கூடாதுன்னு

கேட்டிருக்காங்க.



இங்க பாரு கேசவா நீ என்ன தடுத்தாலும் ஜானுக்கு குழந்தை பிறந்தது நான் பேச தான் போறேன் உனக்கு பிடிக்கலன்னா நீ வாயை மூடிட்டு இரு .



ஒன்னு மட்டும் நிச்சயம் அந்த பையனுக்கு மட்டும் கௌசியை கல்யாணம் பண்ணி வச்சிட்டா அவளை பத்தி நாம என்னைக்குமே கவலை பட வேண்டாம்.



உங்களுக்கு பைத்தியம் தான் புடிச்சிருக்கு வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.. இப்போ இருக்கற பொண்ணுங்க எல்லாம் அவங்கள விட ஒரு வயசு ரெண்டு வயசு அதிகமா இருக்குற பையனை தான் கல்யாணம் பண்ண விரும்பறாங்க இவருக்கு எப்படியும் குறைந்தது அஞ்சு இல்ல ஆறு வயசு கூட இருக்கும் கௌசியை கேட்காம நீங்களா எதுவும் முடிவு எடுத்து அவ வாழ்க்கையில விளையாடிடாதீங்க அவ்ளோ தான் சொல்லுவேன்.



டேய் எனக்கும் உங்கப்பாக்கும் எட்டு வயசு வித்தியாசம் நாங்க நல்லா தான வாழ்ந்துட்டு இருக்கோம் அப்புறம் கௌசிக்கு இந்த கல்யாணத்துல விருப்பம்னா உனக்கு எந்த பிரச்சினையும் இல்லையே.



அவளுக்கு விருப்பம்னா எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை ஆனா அவளுக்கு விரும்பாததை செய்ய ஒரு அண்ணனா நான் விடமாட்டேன் ஞாபகம் வச்சுக்கோங்க அப்புறம் ஜானுகிட்ட பேசும்போது எந்த இடத்திலும் என் பெயரை இழுத்து விடாதிங்க எனக்கு இந்த கல்யாணத்துல ஒரு பர்சன்டேஜ் கூட விருப்பம் இல்ல புரியுதா என்றபடி சென்று விட்டான்.



சரியாக இரண்டு வாரங்கள் கழித்து ஜானகிக்கு அழகிய ஆண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது.


இது குடும்பங்களுமே அந்த சந்தோஷத்தை கொண்டாடி தீர்த்தனர்.



கௌசிக்கு மிகவும் சந்தோஷம் பெரிய அண்ணனின் குழந்தைகளை

அதிக அளவில் கொஞ்சுவதற்கான வாய்ப்பு அவளுக்கு கிடைக்கவில்லை.



அண்ணிதான் இங்கு வரவே இல்லையே இரு குழந்தைகள் இருந்தாலும் கூட பங்க்ஷனில் பார்த்துக் கொள்வதோடு சரி மற்றபடி வீட்டிற்கு செல்வதோ அவர்களை இங்கு அழைத்து வருவதோ கிடையாது.



இந்த குழந்தை அப்படி இல்லையே ஜானு இங்கே தான் இருக்கிறாள் அதனாலேயே அந்த குழந்தையின் மீது பாசம் தானாகவே வந்தது .



மருத்துவமனையிலும் ஜானகிக்கு உதவியாக இருந்தாள். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன் ஹரியின் வீட்டிற்கு தான் சென்றது.



அங்கேயும் ஜானகி வம்படியாக கௌசியை அழைத்துச் சென்று விட்டாள்.




ஓரளவுக்கு நடமாட ஆரம்பிக்கும் வரையுமே கௌசியை நகர விட வில்லை.


ஹரி கௌசியை பார்ப்பதற்காகவே முடிந்த அளவு அவனுடைய அலுவலக வேலைகளை எல்லாவற்றையும் வீட்டிலேயே வைத்து செய்யும்படி பார்த்துக் கொண்டான்.




அவ்வப்போது அவளிடம் வம்பு வளர்க்கவும் தவறவில்லை அவனுக்கு சுவாரசியமாக இருக்கும் விஷயங்கள் எல்லாமே கௌசிக்கு அசௌகரியத்தை கொடுத்தது.


ஹரியை கண்டாலே சுத்தமாக பிடிக்கவில்லை அண்ணியின் அண்ணன் என்ற ஒரே ஒரு உறவு முறை மட்டும் இல்லை என்றால் கண்டிப்பாக அவனிடத்தில் கடினமாக நடந்து கொள்ளவும் அவள் தயங்க மாட்டாள் .


அவன் மீது கொண்ட கோபம் வெறுப்பை யாருமே புரிந்து கொள்ளாதது தான் அவளின் சோதனை காலம்.



இதை அறியாத லட்சுமி குழந்தையை பார்க்க வரும் பொழுது ஜாடை மாடையாக ஜானகியிடம் அண்ணனுக்கு ஏதாவது பெண் அமைந்துள்ளதா என கேட்டு வைக்க ஜானு அப்படி எதுவும் இல்ல ஏன் அத்தை கேக்குறீங்க என்று கேட்கவும்.




இல்ல எனக்கு ஒரு சின்ன ஆசை..நீ தப்பா எடுத்துக்காத..பேராசை பண்றேன்னு நினைக்காத..என பீடிகை போட்டவர் சற்று தயக்கத்துடன்


உன் பெரியம்மா கிட்ட பேசும்போது வசதி வாய்ப்பு எல்லாம் பெருசா வேணாம் பொண்ணு பார்க்க லட்சணமா இருக்கனும் பையனுக்கு பிடிச்சா போதும்னு சொன்னாங்க.




கௌசி கிட்ட உங்க அண்ணன் பேசுறதை பார்க்கும்போது பிடிச்சிருக்குற மாதிரி தான் தோணுது.. ஆனா அது மட்டும் கல்யாணம் பண்ண போதாதுல்ல..



நீ தங்கச்சி தான இஷ்டமான்னு கேட்டு பாரேன்.. சரின்னா கௌசியோட ஜாதகத்தை தறேன். ஒருவேளை அவங்களுக்கு விருப்பம் இல்லன்னா இதை உனக்குள்ளேயே வச்சிக்கோ நான் கேட்ட விஷயத்தை பெருசு பண்ணி குடும்பத்துக்குள்ள எந்த சங்கடத்தையும் கொண்டு வந்துவிடாதே என்றதுமே ஜானகியால் நம்பவே முடியவில்லை.



அய்யோ அத்தை உங்களுக்கு இதுல விருப்பம்னா நான் எதுக்காக உங்களை இழுத்து விட போறேன் நானா கேட்கிற மாதிரி கேட்கிறேன் என் நாத்தனாரை ஹரி அண்ணனை கட்டி வைக்கிறீங்களான்னு அப்புறம் எப்படி உங்க பேரு இதுல வரும் ஆனா இதுக்கு உங்க பையன் ஒத்துக்கிட்டாரா.



கேசவனுக்கு விருப்பம் இல்ல ஜானு இப்போ கூட இது பத்தி கேக்க கூடாதுன்னு தான் அனுப்பி வச்சான்.. நான் தான் ஒரு ஆசைல கேட்டுட்டேன் நீ தப்பா எடுத்துக்கலையே.


ச்சே ச்சே இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு நம்ம கௌசி போல பொண்ணை கல்யாணம் பண்ண என் அண்ணன் குடுத்து வச்சிருக்கனும்.. நீங்க மனசை போட்டு குழப்பிக்காமல் போயிட்டு வாங்க அத்தை நான் உங்க பையன் கிட்ட பேசிக்கறேன்.




அப்படியே பெரியம்மா கிட்டேயும் பேசி ஒரு நல்ல முடிவை உங்களுக்கு சொல்றேன்.. கண்டிப்பா நல்ல முடிவா தான் இருக்கும் தைரியமா போங்க என்று நம்பிக்கை கொடுத்தவள் சற்று நேரத்திலேயே கணவருக்கு அழைத்தாள்.



என்னங்க அத்தை ஹரி அண்ணாக்கு கௌசியை கல்யாணம் பண்ணி வைக்கலாமானு கேட்கறாங்க.. நான் பெரியம்மா வீட்ல பேசட்டுமா என கேட்கவும் கேசவனுக்கு அய்யோ இந்த அம்மாவை வச்சிட்டு என்ன செய்யறது என்று தான் தோன்றியது.



இது சரியா வராது ஜானு விட்டிடலாம்.. அம்மாகிட்ட நான் பேசி புரிய வைக்கறேன்.


ஏங்க அப்படி சொல்லறீங்க..


உன் அண்ணன் குடும்பத்துக்கு நம்ம எல்லாரையும் ரொம்ப பிடிக்கும் அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை ஆனால் கௌசியை அவங்க குடும்பத்துக்குள்ள விடற அளவுக்கு பிடிக்கும்னு எனக்குத்தோணலை.


எதை வச்சி அப்படி சொல்லறீங்க என சற்று குரல் உயர்த்தினாள்.



இங்க பாரு ஜானு நடைமுறைன்னு ஒன்னு இருக்குல்ல.. ஒரு பொண்ணு இருந்தா பையன் வீட்ல இருக்கறவங்க தான் எங்க பையனுக்கு உங்க பொண்ணை குடுக்கிறீர்களான்னு கேட்டு வருவாங்க ஆனா இங்க அம்மா தானே கேட்கறாங்க ..



உண்மையிலேயே கௌசியை புடிச்சிருந்தா உங்க அண்ணன் வீட்டிலிருந்துல்ல முதல்ல கேட்டிருக்கணும் அதிலிருந்தே


தெரியலையா அவங்களுக்கு அதுல விருப்பம் இல்லன்னு என நியாயத்தை எடுத்துரைக்கவும்.


அப்போ என் பெரியம்மா கௌசியை பொண்ணு கேட்டா குடுத்திடுவீங்களா.?




முதல்ல கேட்கட்டும் அதுக்கப்புறம் முடிவெடுக்கலாம் என்றபடி வைத்தான்.



உடனடியாகவே அண்ணனை அழைத்தவள் மாமியார் மற்றும் கணவன் பேசியவற்றை அச்சு பிசங்காமல் கூறினாள்.



உடனே ஹரியும் இவ்வளவுதானா பிரச்சனை உடனே அம்மாவை விட்டு பொண்ணு கேட்டுட்டா போச்சு.




உன் புருஷன் கிட்ட சொல்லி நல்ல முகூர்த்தம் பார்க்க சொல்லு மண்டபம் மிச்ச வேலைகள் எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன் என்று கூறியபடி வைத்தவனுக்கு தோன்றவே இல்லை கௌசியின் சம்மதம் மிக முக்கியம்..அவளுக்கு தன்னை பிடித்திருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை.
 
Last edited:
Top