34
என்ன நடந்தது என்று இன்னுமே கௌசிக்கு புரியவில்லை.
திருமண பேச்சி எழுந்த ஒரு மாதத்தில் இதோ ஹரியின் அறையில் மணப்பெண் அலங்காரத்தில் அமர்ந்திருக்கிறாள்.
குனிந்து தனது புடவையின் மீது கிடந்த தாலியை கையில் எடுத்துப்பார்த்தாள்.
இன்னும் நம்பவே முடியவில்லை.
இப்பொழுது திருமணம் வேண்டாம் என எவ்வளவோ தாயிடம் கூறிப்பார்த்தாள்.
லட்சுமி அழுதே காரியத்தை சாதித்துவிட்டார்.
அண்ணணிடம் முறையிட்டதுக்கு அம்மு கொஞ்சம் யோசித்து பாரு எவ்ளோ பெரிய சம்மந்தம் அவங்களே இறங்கி வந்து உன்னை பெண் கேட்கும் போது எப்படி வேணாம்னு சொல்ல முடியும், ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோ நாங்க உன் நல்லதுக்கு தான் பண்ணுவோம். என்று வாயை அடைத்து விட்டான்.
ஜானுவோ எனக்கு இதுல துளிகூட சம்மந்தம் கிடையாது பெரியவங்க ஏற்பாடு நான் தலையிடமுடியாது என கழன்று கொண்டாள்.
கடைசியாக தந்தையிடம் சென்று அழுது பார்த்தாள்.
கௌசிமா நீ படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு போகணும்னு ஆசைப்பட்டது சரி தான் ஆனா ஒரு நாலு மாசமே உன்னால வேலையை சரியா செய்ய முடியல.
எத்தனை நாள் எங்க கிட்ட புலம்பிருக்கற .
எத்தனை லீவு போட்டுட்ட சொல்லு. படிக்கிற காலத்துலயே உன்னால ஒரு நாலு மாசம் படிப்பா கூட அதை செய்ய முடியலைங்கும் போது நீ எப்படி தொடர்ந்து வேலைக்கு போவ.
நீ ஓவ்வொரு பக்கமும் மூணு மாசம் நாலு மாசம்னு வேலைக்கு போய் உன்னோட எதிர்காலத்தை வீணாக்கறதுக்கு இப்போ அம்மா எடுத்த முடிவு சரின்னு எனக்கு தோணுது.
உனக்கு ஒரு விஷயம் தெரியுமா மாப்பிள்ளை வீட்டிலிருந்து உன்னை பெண் கேட்கல உன் அம்மாவுக்கு ரொம்ப ஆசை அந்த பையனை கட்டிக் கொடுக்கணும்னு.
லட்சுமி எது செஞ்சாலும் உன் நல்லதுக்கு தான் செய்வா நல்ல பொண்ணா கல்யாணம் பண்ணிக்கோ நீ ஒன்னு சின்ன பொண்ணு இல்ல..இந்த கல்யாணத்தை முடிச்சிட்டா அப்பாவுக்கும் கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும் எங்களுக்கும் பெரிய பாரத்தை இறக்கி வச்ச நிம்மதி கிடைக்கும் புரிஞ்சுக்கோடா என்று சொல்லவும் தன் வீட்டில் இருந்து தனக்கு எந்த ஒரு சப்போர்ட்டும் கிடைக்காது என புரிந்து கொண்டவள் நேரடியாக ஹரியிடம் பேசி தீர்மானித்தாள்.
ஹரியை சந்திக்க அவனது அலுவலக விலாசத்தை தெரிந்து கொண்டு அங்கு சென்றால் ஏமாற்றமே மிஞ்சியது.
அவன் ஊரில் இல்லை என தெரியவும் கௌசியின் மனதில் சிறு நம்பிக்கை பிறந்தது நடக்கும் திருமண விஷயம் கண்டிப்பாக ஹரிக்கு தெரியாது என நம்பினாள்.
எப்படியாவது அவனிடம் ஒருமுறை பேசி விட்டால் திருமணத்தை நிறுத்தி விடலாம் என உறுதி கொண்டாள்.
அதன் பிறகு ரிசெப்ஷனில் அவளுடைய நம்பரை கொடுத்துவிட்டு தான் வந்து சென்றதை ஹரியிடம் மறக்காமல் கூற வேண்டும் என்று கூறிய பின் தான் சற்று நிம்மதி பிறந்தது.
அதன் பிறகு தான் அந்த அலுவலகத்தையும் அது கட்டப்பட்டு இருக்கும் விதத்தையும் ஆச்சரியமாக பார்த்தாள்.
இன்டன்ஷிப் முடிஞ்சபிறகு பேசாம இங்க வேலைக்கு வந்திட வேண்டியது தான் சொந்தக்கார பொண்ணுனு அந்த ஆஃபீஸ் மாதிரி இங்க நம்மளை டார்ச்சர் பண்ண மாட்டாங்க வேலையும் நிறையா கொடுக்க மாட்டாங்க என நினைத்தபடியே வீடு வந்தாள்
அவள் வந்த சில மணி நேரங்களிலேயே ஹரி அழைத்திருந்தான் எதுக்காக நீ ஆஃபீஸ் வந்த என எரிந்து விழுந்தான்.
அவள் அலுவலகம் வந்ததை துளியும் விரும்பமில்லை என்பதை காட்டியது அந்த துவணி.
திருமணம் முடிந்த பிறகு முதலாளியாக அவளை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது அவனுடைய எண்ணம் அதற்கு முன்பாகவே கௌசி அங்கே சென்று அவளை அறிமுகப்படுத்தி விட்டு வந்திருக்கிறாள் அந்த கோபம் தான் வார்த்தைகளாக வெளிவந்திருந்தது.
உங்களை பாக்கறதுக்காக வந்தேன் என்று சொல்லும் பொழுதே அவள் குரல் கமற ஆரம்பித்தது
சரி வந்த என்ன சொல்லி அறிமுகப்படுத்தின உன் பேரை சொன்னா பத்தாதா அதை விட்டுட்டு அவருக்காக பாத்த பொண்ணு எங்க கல்யாணத்தை பத்தி பேசணும்னு சொல்லி வெச்சிருக்க படிச்சிருக்க தானே மூளையை யூஸ் பண்ண மாட்டியா.
உங்கள பாக்க வந்தப்போ அவங்க பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க அதான் அப்படி சொன்னா பார்க்க விடுவாங்கன்னு சொன்னேன் அதுமில்லாம நான் அப்படி சொல்லிட்டு வந்ததால தானே உடனே நீங்க என்னை கூப்பிட்டு இருக்கீங்க என்று சொல்லும் பொழுதே வார்த்தைகள் தொண்டையை விட்டு வர மறுத்தன.
இவனிடம் எல்லாம் பேச்சு வாங்க வேண்டியிருக்கிறதே என.
சரி என்னை பாக்கறதுன்னா எனக்கு கூப்பிட்டிருக்க வேண்டியது தானே.நானே வந்திருப்பேனே என்று அவளை சமாதானம் படுத்தும் பொருட்டு கூறினான்
உங்க நம்பர் தெரியாது என்று சொன்ன பிறகு தான் ஹரிக்கு இது வரை அவளிடம் தன்னுடைய எண்ணை குடுக்காதது ஞாபகம் வந்தது.
சரி ஜானு கிட்ட வாங்கிக்க வேண்டியது தானே.
நான் அவங்க கிட்ட நம்பர் கேட்டா எதுக்கு என்னனு கேப்பாங்க இல்ல அப்போ உங்ககிட்ட பேசுற விஷயத்தை சொல்லணும் நான் யாருக்கும் தெரியாம பேசணும்னு நெனச்சேன்.
லுக் கௌசி எனக்கும் ஜானுக்கும் நடுவுல எந்த ஒரு ரகசியமும் கிடையாது..இப்போ மட்டும் இல்ல எப்பவுமே அதை என்னைக்கும் மறக்காத.. இன்னும் கொஞ்ச நேரத்துல அவ என்கிட்ட பேசினா இப்போ நாம பேசிகிட்டதை சொன்னாலும் சொல்லிடுவேன் அதே மாதிரி தான் அவகிட்ட நீ ஏதாவது பேசினாலும் அவளும் என்கிட்ட சொல்லிடுவா அதனால ஜானு விஷயத்துல இந்த மாதிரி நடந்துக்க வேண்டாம் என்றவன் .
சரி கிளம்பி இரு டென்ட் மினிட்ஸ்ல பிக்கப் பண்ணிக்கறேன்.
ஹான் என பதறியவள். நான் வீட்ல யாருக்கும் தெரியாம உங்க கிட்ட பேசணும்னு சொன்னேன்.
சரி ஃபோன்லேயே சொல்லு எனக்கு நிறையா வேலையிருக்கு.
நேர்ல தான் சொல்லனும்.
கௌசி என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற என்ன பண்ணலாம் நீயே சொல்லு.
அம்மா கிட்ட ஏதாவது பொய் சொல்லிட்டு தெரு முனைக்கு வந்துடுறேன் நீங்க வந்து என்னை பிக்கப் பண்ணிக்கறீங்களா ப்ளீஸ். இந்த ஒரு தடவை மட்டும் அதுக்கு அப்புறம் இனிமே நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன் ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ் என்று கூறும் போதே ஹரி மொபைல் போனை அணைத்து விட்டான்.
சரியான திமிர் பிடித்தவன் போல என மனதுக்குள் திட்டிக் கொண்டவள்..அய்யய்யோ ஃபோனை வச்சிட்டான்னா..கிளம்பிட்டானு அர்த்தம் நான் தெருமுனைக்கு போறதுக்குள்ள வந்துட்டா அதுக்கும் திட்டுவானே ..அம்மா ஹரியோட காபி ஷாப் வரைக்கும் போயிட்டு வரேன் என்று கத்தியபடியே வெளியே வேகமாக ஓடினாள்.
கௌசி நினைத்தது போல் தான் அவள் தெருமுனையை தொடும்பொழுது ஹரி ரெடியாக காத்துக் கொண்டிருந்தான் அவனுடைய வீட்டிற்கும் கௌசியின் வீட்டிற்கும் அதிக தூரம் கிடையாது என்பது தெரிந்த விஷயமே.
அவள் பக்க கார் கதவை திறந்து விட்டவன் ரசனையாக அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான்.
அவனின் பார்வை கூச்சத்தை ஏற்படுத்த சங்கோஜத்துடனே காருக்குள் அமர்ந்தவள் நான் எதுக்காக உங்கள பாக்கணும்னு சொன்னேன்னா என் ஆரம்பிக்கவும்.
அதான் வெளிய போறதுன்னு முடிவாயிடுச்சில்ல ஏதாவது சாப்பிட்டுகிட்டே பேசலாம் அதுக்குள்ள என்ன அவசரம் என புன்னகையுடன் கேட்கவும் பதில் சொல்லாமல் வாயை மூடிக்கொண்டாள்.
உயர்தர ரெஸ்டாரண்ட்க்கு அழைத்துச் சென்றவன் அவளுக்கு எதிரே அமர்ந்தபடி என்ன பிடிக்கும் என பொறுமையாக கேட்டு அதை எல்லாம் ஆர்டர் செய்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
நான் உங்ககிட்ட..
கைநீட்டி இடைமறித்தவன் ஆர்டர் பண்ணினதெல்லாம் வரட்டும் சாப்பிடலாம் அதுக்கு அப்புறமா பேசலாம் என்று சொல்லவும் பற்களை இறுக்க கடித்துக் கொண்டு தலையை குனிந்தவள் போனை நோண்ட ஆரம்பித்தாள்.
எதிரில் ஒருவன் அமர்ந்திருப்பதையே மறந்தவள் சிரித்தபடியே வாட்ஸ் அப்பில் சேட் செய்ய ஆரம்பித்தாள் திடீரென ரெஸ்டாரண்டின் பெயர் தெரிவது போல செல்பி எடுக்கவும் பொறுமையை இழுத்துப் பிடித்தபடி பார்த்துக் கொண்டிருந்த ஹரி கோபமாக எழுந்து அவளருகில் வந்து என்ன பண்ற எனக் கேட்டான்.
சிரித்தப்படியே பார்த்தா தெரியல செல்பி எடுக்கறேன்..ஃபிரண்டுக்கு போஸ்ட் பண்ணனும்.
எங்க இருக்கன்னு கேட்டான் வெளியில இருக்கறேன்னு சொன்னா நம்ப மாட்டேங்குறான் அதான் செல்பி எடுத்து போடுறேன் எப்படி என கேட்டுப்படியே மீண்டும் அவள் செல்பி எடுக்க போஸ் கொடுக்கவும் கையில் இருந்த போனை பிடிங்கியவன் யார் என பார்க்க அதில் விக்கி என இருந்தது.
யார் இது என கேட்கவும்.
என்ன பழக்கம் இது அன்னைக்கு இப்படித்தான் போனை புடிங்கிட்டு போனீங்க இன்னைக்கு போனை புடுங்குறீங்க முதல்ல போனை குடுங்க என கீச்சிக்குரலில் கத்தினாள்.
கத்தாத கேக்குறதுக்கு பதில் சொல்லு.
யாரா இருந்தா உங்களுக்கு என்ன போனை குடுங்க..
யாருன்னு கேட்டேன் என்றவன் பற்களை கடித்த படி அவளது கைகளை அழுத்த பற்றினான் .
கை வலி எடுக்கவும் சுற்றிலும் பார்த்தவள் கையை விடுங்க எல்லாரும் நம்மளையே பாக்கறாங்க.
இவன் யாருன்னு கேட்டேன்.
விக்கி..என் காலேஜ் ஃப்ரெண்ட்.
விக்கினா..பேர் மாதிரியே ஆளும் அறைகுறை தானா.. முழுப்பெயர் என்ன..?
எதுக்கு அதெல்லாம் கேக்குறீங்க முதல்ல கை விடுங்க வலிக்குது எனக் கையை அவனிடமிருந்து விடுவிக்க போராடினாள்.
பதில் சொல் அப்பொழுது தான் விடுவேன் என்பதைப் போல அவள் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்க்க வாய் தானாகவே
கூறத்தொடங்கியது.
முழுப்பெயர் விக்னேஸ்வரன் அவங்க அப்பா இண்டஸ்ட்ரிஸ்ட் ராமநாதன்னா எல்லாருக்கும் தெரியும்.
இந்த விவரம் எனக்கும் தெரியும் இவன் உனக்கு யாரு ஜஸ்ட் பிரண்ட் தானா இல்ல அதுக்கு மேல.
அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல பெஸ்ட் ஃப்ரெண்ட் என்றவுடன் கைகளை விட்டவன் உணவுப் பதார்த்தங்கள் வரவும் அதைப் பெற்றுக் கொண்டு அவளின் முன்பு வைத்து எதுவுமே தெரியாது போல சாப்பிடு ஆறிடுச்சுனா நல்லா இருக்காது என்றபடி அவனுடைய உணவுகளை சாப்பிட ஆரம்பித்தான்.
என்ன மாதிரியான மனிதன் என்று தான் கௌசி அவனை பார்த்தாள்.
சாப்பிடு என கிட்டத்தட்ட மிரட்டும் தோணியில் கூறவும் சாப்பிடாவிட்டால் விடமாட்டான் என தெரிந்து கொண்டு வேக வேகமாக சாப்பிட ஆரம்பித்தாள்.
அதன் பிறகு அவளுக்கு ஐஸ்கிரீமும் தனக்கு ஒரு காபியும் வர வைத்து குடித்து முடித்தவன் அவள் ஐஸ்கிரீமை சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமை காத்தான்.
சரி சொல்லு..
அது…அது வந்து..
அதான் வந்தாச்சுல்ல சீக்கிரம் சொல்லு என் மூடை ஸ்பாயில் பண்ணிட்ட மறுபடியும் எனக்கு கோவம் வர்றதுக்கு முன்னாடி உன் விஷயத்தை சொல்லி முடித்துவிடு இல்லையா நான் பாட்டுக்கு கிளம்பி போய்க்கிட்டே இருப்பேன் என கட் அண்ட் டைட்டாக பேசுவும் வேறு வழியில்லாமல்.
எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தி விடுங்களேன்.
ஏன் ஏதாவது காதல் கீதல்..
அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல
அப்படினா இந்த கல்யாணம் நடக்கறதை யாராலேயும் தடுக்க முடியாது.
ப்ளீஸ் உங்களை தான் நம்பியிருக்கேன்.
லுக் கௌசி இந்த கல்யாணம் நானா கேட்டது இல்ல உங்க அம்மாவா தேடி வந்து கேட்டது..அதனால நீ பேச வேண்டியது உன் அம்மாகிட்ட என்கிட்ட இல்ல.
அம்மா மட்டும் இல்ல வீட்ல யாருமே என்னை புரிஞ்சிக்கல..
அது என் தப்பு கிடையாது.
ப்ளீஸ் இதான் நீ பேச வந்ததுன்னா நாம கிளம்பலாம் என்றவன் பில் பணத்தை எடுத்து வைத்தான்.
ப்ளீஸ் சார் எனக்குனு நிறையா கனவு இருக்கு.
அதையெல்லாம் கல்யாணம் முடிஞ்சதும் நிறைவேத்திக்கோ என்றபடி அவன் பாட்டிற்கு எழுந்து நடக்க ஆரம்பித்தான்.
கண்களில் கண்ணீருடன் நான் இன்னும் படிப்பை கூட முடிக்கல.
கோர்ஸ் கம்பிளீட்டட் சர்டிபிகேட் வாங்கி தர வேண்டியது என் பொறுப்பு.
மேல படிக்கனும்.
தாராளமா கல்யாணம் முடிஞ்ச பிறகு எவ்ளோ வேணாலும் படிக்கலாம்.
பெரிய கம்பெனியில வேலைக்கு சேரனும்.
பெரிய கம்பெனிக்கு முதலாளியாவே ஆக்கறேன் அதுல வேலை செய் இப்போ கார்ல உக்காரு என்ற படி அழைத்து வந்தவன் அவள் வீட்டருகே இறக்கி விடும் போது தான் மொபைல் போனை கையில் கொடுத்தான்.
கிளம்பும் போது.நீ என்ன கேட்டாலும் உனக்காக செய்ய காத்திருக்கேன்..எனக்காக செய்ய வேண்டியது ரெண்டு விஷயம் தான் ஒன்னு என் கிட்ட பேசும் போது மொபைல் யூஸ் பண்ணாத..ரெண்டாவது அந்த விக்கியை பிடிக்கல அவனை நட்பை கட் பண்ணு.என்று கூறிவிட்டு சென்றவன் தான் இடையில் அவளை எந்த வகையிலும் தொல்லை செய்யவேயில்லை.
திருமணத்திற்காக வாங்க வேண்டிய ஆடை அணிகலன்கள் எல்லாமுமே லட்சுமியின் விருப்பத்திற்கு விட்டு விட்டான்.
அவளுடைய படிப்பு முடியும் வரை காத்திருந்தவன்..அடுத்து வந்த வாரத்திலேயே திருமணத்தை சிம்பிளாகவும் வரவேற்பு நிகழ்ச்சியைஆரம்பரமாகவும் நடத்தி முடித்தான்.
எங்கேயும் யாரும் லட்சுமியின் குடும்பத்தை கேள்வி கேட்காவண்ணம் பார்த்துக்கொண்டதோடு மட்டுமல்லாது அவர்களையும் ஆடை அணிகலன்களுடன் வலம் வர வைத்தான்.
கௌசிக்கு மனமெல்லாம் ரணம்.அவளின் பேச்சு எங்கேயும் எடுபடவில்லை..அழுது கரைந்து உண்ணாவிரதம் இருந்து எதற்கும் பலன் இல்லாமல் இதோ ஹரியின் மனைவியாக முதலிரவுக்கு தயாராகி அவனுக்காக காத்துக்கொண்டிருக்கிறாள்.

Last edited: