51
என்ன பண்ணிடுவேன் நான் உன்னை அதுவும் நீ அப்படி பேசின பிறகு என்று மனதில் இருந்த வன்மத்தை சற்றும் யோசிக்காமல் வெளியில் கக்கினான்.
நொடியில் அவளின் கண்கள் குளம் கட்டியது..வந்தது தவறோ என்றும் தோன்றியது.
சாரி நான்..என அவளின் நியாயத்தை கூற வர.. கைநீட்டி தடுத்தவன் மறுபடியும் பேசி நம்மளை நாமளே காயப்படுத்திக்க வேண்டாம் இப்போ சாப்பிடலாம் வா.
அனு..
உள்ள தூங்கறா..
பதில் பேசாமல் பின் தொடர்ந்தாள்..ஏன் சாப்பிடல குரலில் அவ்வளவு கடுமை.
நீங்க சாப்பிடல.. எப்படி நான் சாப்பிடறது..மெல்ல முணுமுணுத்தாள்.
இனி எப்பவும் எனக்காக காத்திருக்க வேணாம்.. நான் இப்போல்லாம் அதிகமாக வீட்டில் சாப்பிடுவதில்லை ராத்திரியும் ரொம்ப லேட்டா தான் வருவேன் நீ வெயிட் பண்ணாம சாப்பிட்டுவிட்டு தூங்கலாம்.
நீ என் முன்னாடி சாப்பிட சங்கோஜப் படுவாய் என்று தான் நான் உள்ளே போனது அதுக்கு அர்த்தம் நான் சாப்பிடற வரைக்கும் நீ காத்திருக்கணும் என்கிறது கிடையாது புரியுதா என்று அவளின் முகத்தைப் பார்த்துக் கூறியவன்.
அவனுக்கானதை எடுத்து வைத்துக் கொண்டு இப்போ நீ இங்க இருக்க ஆனா சாப்பிட எனக்கு எந்தவிதமான சங்கோஜமும் கிடையாது நான் எப்பவும் போல சாதாரணமா சாப்பிடுவேன் அதே மாதிரி உனக்கும் எந்த சங்கோஜமும் இல்லனா இப்படி உட்கார்ந்து சாப்பிடலாம் நான் எதுவும் நினைக்க மாட்டேன் என்றவனின் குரலில் குற்றச்சாட்டு மட்டும் அல்ல அன்பும் வெளிப்பட்டது.
தனக்கானதை எடுத்து வைத்து உண்ட பிறகு தான் அடுத்த கேள்வி பூதாகரமாக எழுந்தது.
அதன் பிறகு இருவருக்கும் எந்த பேச்சும் இல்லை சற்று நேரம் அவன் டிவி பார்க்க இவள் ஒரு மூலையில் அமர்ந்த படி அவனையும் டிவியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.
தான் பார்க்கும் நிகழ்ச்சி அவளுக்கு பிடிக்கவில்லை என்பது போல அடுத்தடுத்து சேனல்களை அவன் மாற்ற அவளிடத்தில் பெரிதாக எந்த ஒரு ஆர்வமும் பிரதிபலிக்கவில்லை.
அதன் பிறகு தான் புரிந்தது அவள் வேறு எதற்கோ தயங்குகிறாள் ஒருவேளை தனியாக டிவி பார்க்க விரும்புகிறாள் போல என நினைத்தவன் டிமோட்டை டீப்பாயின் மீது வைத்துவிட்டு உனக்கு பிடிச்சதை பாரு நான் தூங்க போறேன் அன்கம்ஃபர்டபிள்ளா இருக்காத ஃப்ரீயா இரு.எனக்கூறியபடி எழப்போக அவளும் கூடவே எழுந்தாள்.
என்ன..என்றான்.
தூக்கம் வருது.
நெற்றியை நீவி விட்டவன் தலையை தூக்கி மேலே பார்த்தவன் சரி வராது என்பது போல் தலையசைத்து விட்டு பிறகு ஹாலில் இருந்தபடியே மற்ற படுக்கை அறைகளை பார்த்துவிட்டு அந்த ரூம் தான் இப்போ நான் உபயோகப் படுத்தறது என்றான்.
தொண்டைக் குழி ஏறி இறங்க பயப்பந்து நெஞ்சையடைக்க எச்சில் கூட்டி விழுங்கியபடி படுக்கையறைக்குள் கால் வைக்க தயங்கினாள்.
அப்படி எல்லாம் எனக்கு எதுவுமே இல்லை என்பது போல ஹரி நேராக படுக்கையறைக்குள் சென்றவன் சில வினாடிகள் உறங்கும் மகளை ரசித்துவிட்டு அவனது நெற்றியில் மென்முத்தமிட்டபடி இந்த ரூமை எடுத்துக்கோ.. நான் பக்கத்து ரூம்ல தான் இருப்பேன் எதா இருந்தாலும் கூப்பிடு என்று சென்று விட.
இழுத்து வைத்த மூச்சை ஆசுவாசமாக வெளியேற்றினாள்.. அப்பாடா என்ற நிம்மதி வேறு. நொடியில் கலங்கடித்து விட்டானே என்று மனதிற்குள் அவனுக்கு திட்டு வேறு.
அதோ இதோ என்று எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஒரு மாத காலத்தை ஓட்டி விட்டாள்.
கணவன் மனைவி என்ற உறவையும் தாண்டி அவர்களுக்குள் ஒரு நட்பு உருவாகியிருந்தது.
காலையில் அலுவலகம் கிளம்பிய உடனே அவளிடம் மறக்காமல் சொல்லிவிட்டு செல்பவன் முடிந்து வந்தவுடன் குழந்தைகள் நீண்ட நேரம் விளையாடுவான் அப்பொழுது கௌசல்யா மிகவும் தனிமையை உணர்வாள்.
மகள் தூங்கிய பிறகு கௌசியின் அறையிவ் படுக்க வைத்து விட்டு சென்று விடுவான்.
லட்சுமி மட்டுமல்ல மற்ற யாரையுமே வீட்டிற்கு வரவேண்டாம் என்று கௌசல்யா கூறிவிட்டதால் யாருமே வரவில்லை ஆனாலும் ஜானு மட்டும் உரிமையாக என் அண்ணன் வீட்டிற்கு நான் வருவேன் என்பது போல ஒரு முறை வந்தாள்.
இருவரும் தனித்தனி படுக்கை அறையில் தங்குகிறார்கள் எனத் தெரிந்ததும் அண்ணனிடம் சென்று ஒரே அழுகை .
இதற்கு கௌசல்யாவை நீ திருப்பி அனுப்பியிருக்கலாம்.
பைத்தியம் மாதிரி உளறாத.. கிட்டத்தட்ட நாலு வருஷ பிரிவு எங்களுக்குள்ள இருக்கு அந்த நாலு வருஷத்தை ஃபுல் ஃபீல் பண்ண இன்னும் ரொம்ப நாள் தேவை .
நிறைய வலிகளை கடக்கனும் அதன்பிறகு தான் மீதியெல்லாம். பொண்டாட்டி பிள்ளையை விரட்டி விட்டுட்டான் என்கிற கெட்ட பெயரில் இருந்து என்னை காப்பாத்தி இருக்கா அது ஒன்னு போதும் எனக்கு.நீ இதை வேற யார்கிட்டேயும் உளறி வைக்காத..உன் கணவன் உட்பட புரியுதா.
தங்கையுடன் ஹாலில் பேசிக் கொண்டிருந்தது அறைக்குள் இருந்த கௌசல்யாவிற்கு தெளிவாக கேட்டது.
முதல் முறையாக அவளுக்குமே மனதில் சிறு சுணக்கம் ஏற்பட்டது.. அப்படி என்றால் மற்றவர்களுக்காக தான் என்னை அவனது வீட்டில் வைத்திருக்கிறானா..?
மற்றவர்களுக்காக என்றால் நான் வராமல் இருக்கும் பொழுதே என்னை அழைத்து இருக்க வேண்டுமே ஏன் அப்படி செய்யவில்லை.
அவருடைய ஈகோ அதற்கு இடம் கொடுக்கவில்லை போல. நானாக வந்து அவரின் பெயரை காப்பாற்றி இருக்கிறேனாம். இதே வாய் தானே அவரின் பெயரை நான் தான் கெடுத்தது என்று கூறிக் கொண்டிருந்தார்.
ஏன் இப்படி முன்னுக்குப் பின்முரணாக பேசுகிறார் எப்படி அவர் மனதில் இருப்பதை தெரிந்து கொள்வது கடமைக்காக வைத்திருக்கிறாரா இல்லை கட்டாயத்திற்காக வைத்திருக்கிறாரா இரண்டில் எந்த காரணமாக இருந்தாலும் இதைவிட அவமானம் ஒரு பெண்ணிற்கு வேறு எதுவும் இருக்க முடியாது மீண்டும் தாய்வீடு சொல்ல முடியாது இவனுடனும் ஒட்டி உறவாட முடியவில்லை என்னடா வாழ்க்கை என சலித்துக் கொண்டாள்.
அன்று முதல் இதோ இன்று வரை சொர்வுறும் நேரங்களில் விக்கியின் கடிதத்தை எடுத்து படித்துக் கொள்கிறாள்.
தீடிரென கடிதத்தின் மீதும் வெறுப்பு வந்தது. நீ மட்டும் என் கைக்கு கிடைக்காமல் இருந்தா இதுமாதிரியான சூழ்நிலைக்கு நான் வந்திருக்க மாட்டேன் என்று அந்த கடிதத்தை சுக்கு நூறாக கிழித்து வீசினாள்.
கௌசிக்கு வீட்டில் ஹரியால் எந்த தொல்லையும் இல்லை பகல் நேரங்களில் வீட்டில் இருக்கும் வேலை உள் இழுத்துக் கொள்ளும் இரவு வேலையில் ஹரி சிறிதளவு கூட அவளைக் கண்டு கொள்ள மாட்டான்.அவளுக்கு வேண்டியது எல்லாம் தேவைக்கு அதிகமாகவே கிடைக்கிறது.. தாய் வீட்டில் இருந்து குழந்தையை மட்டும் தானே எடுத்துக் கொண்டு வந்தாள். மறுநாள் காலையில் அனுவிற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் அறை வாசலில் காத்துக் கொண்டிருந்தது.. எப்பொழுது சென்று எப்படி வாங்கினான் என இன்று வரை தெரியாது..மிக முக்கியமான பொருட்களை லட்சுமி கொடுத்து விட்டு சென்றார்.
சில நேரங்களில் அவளை உதாசீனப்படுத்துவது போல் தோன்றினாலும் கௌசல்யாவும் கண்டு கொள்வதில்லை ஆனால் அனுவை தான் சமாளிக்க முடியவில்லை.
இரவில் தூங்கிவிட்டால் பிரச்சனை இல்லை இடையில் முழித்து விட்டால் பாட்டியை கேட்டு அழ ஆரம்பித்து விடுவாள் அந்த மாதிரியான சமயங்களில் மிகவும் திணறி விடுவாள்.
இன்றும் அதே போல் இரவெல்லாம் படுத்தி எடுத்துவிட்டு இப்பொழுது நிம்மதியாக உறங்குகிறாள்.
கௌசி தான் எதைஎதையோ நினைத்தபடி உறக்கத்தை தொலைத்து விட்டாள்.
முன்பாவது நண்பன் ஒருவன் இருந்தான் அவனிடத்தில் எல்லாவற்றையும் கூற முடியாவிட்டாலும் ஒரு சிலதை கூறி ஆறுதல் தேடிக் கொள்வாள்.
அப்படியும் இல்லையா தாயின் முகமே ஆறுதலாக இருக்கும்,சில நேரங்களில் அண்ணனிடம் கூட மனம் விட்டுப் பேசியிருக்கிறாள்..இப்பொழுது அவளுடன் யாரும் இல்லை கணவனைத் தவிர .
தீடிரென அனாதை ஆகிவிட்டது போல ஒர் உணர்வு. அதிலிருந்து வெளிவர முடியவில்லை .தனிமை கொல்லாமல் கொன்றது..அனு மட்டும் இல்லை என்றால் பைத்தியம் பிடித்திருக்கும்.
இனியும் இப்படி சோம்பி படுத்திருப்பது சரியல்ல என உணர்த்தவள் அறையை விட்டு வெளியே வந்தாள்.
சரோஜாம்மா வழக்கம் போல உணவை சமைத்துவிட்டு கிளம்பிவிட்டார் என்ன இருக்கிறது என பார்த்து பசியை போக்கிக் கொண்டவள் முதல்முறையாக மாடியில் அவர்கள் வாழ்ந்த அறையை சுத்தம் செய்ய சென்றாள்.
இங்கு வந்ததிலிருந்து வீட்டை சுத்தம் செய்வது தான் அவளின் முதல் வேலையாக இருக்கிறது.
சமையல்கார அம்மாவை மட்டும் வைத்துவிட்டு மீதி அனைவரையும் வேலையை விட்டு நிறுத்தி விட்டான் போல .
அதனால் வீடே குப்பை மேடாக கிடந்தது சமையல்கட்டை தவிர.
எல்லா அறைகளிலும் எல்லா பொருட்களும் உடைந்து கிடந்தது போதாகுறைக்கு அங்கங்கே மது பாட்டில்கள் வேறு சிதறி கிடக்க அதை சரிசெய்வது மட்டுமே அவளின் வேலை.
அலங்கோலமாக கிடந்த கீழ் அறைகளை ஓரளவு ஒழுங்குபடுத்தியாயிற்று..இதுவரை ஹரி இருக்கும் அறைக்குள் மட்டும் செல்லவில்லை..ஏதோ ஓர் தயக்கம்..கூட்டி பெருக்குவது கூட அவனே தான் செய்கிறான் அப்பொழுதும் கூட இவள் நான் செய்கிறேன் என்று சொல்லமாட்டாள்.வேடிக்கை மட்டுமே பார்ப்பது.
அவனுக்கும் ஆசை இருக்கும் போல ஒருமுறை சுத்தம் செய்யும் பொழுது இந்த அறை மட்டும் என்ன பாவம் செய்தது என்று தெரியவில்லை இங்கு மட்டும் தேவியின் கிருபை கிடைக்கவில்வை என கிண்டலாக கூற கௌசிக்கு குப்பென்று வேர்த்தது அப்படியே அவளது அறைக்குள் ஓடி வந்து விட்டாள்.
இப்பொழுது கீழே இருக்கும் அத்தனை அறைகளும் அவளுக்கு திருப்தி ஏற்படுவதை போல மாற்றிவிட்டாள் இனி மாடியில் இருப்பதை மாற்ற வேண்டும் தயங்கியபடியே தான் மேலே சென்றாள்.
மாடியில் சொற்ப அறைகள் மட்டும் தான் இருக்கும் எல்லா அறைகளுக்கும் தனித்தனியாக பால்கனி வைத்திருப்பார்கள் அதிலிருந்து மொட்டை மாடிக்கு செல்வது போலவும் வழி இருக்கும். உடற்பயிற்சி செய்வது புத்தகங்கள் படிப்பது என அதற்கும் தனித்தனியாக அறைகள் இருந்தது முதலில் படுக்கை அறைகளை சுத்தம் செய்யலாம் என ஜானுவின் அறைக்குள் சென்றாள்.
ஆங்காங்கே தூசி படிந்திருந்ததே தவிர மத்தபடி அறையை பெரிதாக மாற்றி அமைக்க வேண்டிய வேலை ஒன்றும் இல்லை .
ஒரு மணி நேரத்தில் அந்த வேலையை முடித்துவிட்டு கீழே வந்து அணுவை எழுப்பி குளிப்பாட்டி சாதம் ஊட்டி விட்டு அவளை தூக்கிக்கொண்டே அவர்கள் வாழ்ந்து அறையை எட்டிப் பார்த்தாள்.
அப்படியே அதிர்ச்சியில் உறைந்து விட்டாள் கடைசியாக அவள் கழட்டி போட்ட ஆடைகள் வரை அங்கேயே அப்படியே கிடந்தது ரூம் முழுவதும் குப்பையும் தூசி மட்டுமே. பால்கனி கதவு மூடப்படவே இல்லை ஜன்னல் திரை சீலைகள் நூலாம் பாசி பிடித்து கிடைக்க ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாக விளங்கியது.
ஆம் அவள் அவனை பிரிந்து சென்ற நாளிலிருந்து இந்த அறைக்குள் அவன் வரவே இல்லை அதைத்தான் அந்த அறையும் படம் போட்டு விளக்கிக் கொண்டிருக்கிறது.
மனதில் சொல்ல முடியாத வலி அவர்கள் கூடி கழித்த அறை. கணவன் காதலோடு தன்னை கொஞ்சிக் குலாவி மகிழ்ந்த கட்டில் இப்பொழுது குப்பையின் மறு உருவமாய்.
மகள் மணி வயிற்றில் உதிக்க காரணமாக இருந்த அவர்களின் பள்ளியறை இன்று மகளுக்கு ஏதாவது அலர்ஜி வந்து விடுமோ என்று பயப்படும் அளவிற்கு இருந்தது.
கண்டிப்பாக ஒரே நாளில் சுத்தம் செய்வது என்பது இயலாத காரியம் அதேபோல தனி ஒருத்தியாலும் சுத்தம் செய்ய முடியாது என்பதையும் புரிந்து கொண்டாள்.
நாளை சரோஜா அம்மாவிடம் சொல்லி இரண்டு பேரை உதவிக்கு வர வைத்து தான் இந்த அறையை சுத்தம் செய்ய வேண்டும்.
திரை சிலைகளை மாற்ற வேண்டும்,கட்டிலை தவிர அனைத்தையும் மாற்ற வேண்டும் என்று மனதிற்குள் ஒவ்வொன்றாக கணக்குப் போட்டபடி கீழே வந்தாள்.
அன்றைய பொழுது இனிதே அவளுக்கு கழிந்தது இரவு கணவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.
மனதிற்குள் சிறிதேனும் வேர் விட்டிருந்த நேச விதை மெதுமெதுவாக அவளுக்கே தெரியாமல் துளிரவும் ஆரம்பித்திருந்தது .
இரவு அதிசயமாக அவனுக்காக காத்திருக்க சிறு புருவம் உயர்த்தளுடன் கடந்து விட்டான்.
வழக்கத்தை விட சற்று நேரம் கழித்து தான் வெளியே வந்தது அப்பொழுதும் கூட அவனது மனையாள் காத்திருக்க ஏதாவது சொல்லனுமா என்ன.? என்று நேரடியாகவே பேச்சை ஆரம்பித்தான்.
தலை குனிந்து விரல்களில் இருந்த நகப்பூச்சை சுரண்டி எடுக்கவும்.. அது நல்லா தான் இருக்கு எதுக்காக அதை ரிமூவ் பண்ணனும்னு முயற்சி பண்ற எனக்கு கேட்கவும்.
புரியாமல் அவனது முகத்தைப் பார்த்தாள்.
இல்ல நெயில் பாலிஷ் ரொம்ப அழகா போட்டிருக்க பிடிக்கலன்னா ரிமூவர் போட்டு எடுத்துக்கலாம் எதுக்காக கஷ்டப்படறேன்னு கேட்டேன்.
அவளது தயக்கத்தை போக்கி இயல்பாக முயற்சி செய்தது நன்றாகவே உணர்ந்து கொள்ள முடிந்தது.
இனியும் பேசத்தயங்கினால் மேலும் ஏதாவது கிண்டல் செய்வான் என உணர்ந்தவள் சற்று புன்னகைக்க முயற்சி அது தோல்வியுற்று உதடு கடித்து அதை மறைக்க முயன்று அனைத்தையும் விழி அகழாமல் பார்த்து ரசித்தான்.
உதட்டை ஈரப்படுத்திக் கொண்டு அவள் பேச ஆரம்பிக்க அவனுடைய கவனம் உதட்டை தவிர வேறு எங்கேயும் போகவில்லை அது வேறு அவளை தர்ம சங்கடப்படுத்த இப்படி பார்த்தா நான் எப்படி பேசுறது என்று பள்ளி செல்லும் பெண் முதல் முறையாக காதல் கடிதத்தை பெற்றது போல தவித்துப் போனாள்.
சிறு நகைப்புடன் அந்தப் பக்கம் திருப்பி அவனுடைய முகத்தை இயல்பாக மாற்றியவன்..சரி சீக்கிரமா சொல்லு டைமாச்சு நான் ஒரு மீட்டிங் அட்டென்ட் பண்ணனும் என்று கூறவும் வீட்டுக்கு சில திங்ஸ் வாங்கனும் லிஸ்ட் தரவா என்று கேட்கவும் அவனது முகத்தில் அப்பட்டமாக ஏமாற்றம் தெரிந்தது.
இதுக்கா இவ்ளோ நேரம் காத்திருந்த என கேட்கவும் ஆமாம் என்பது போல் தலையசைக்க.
வீட்டுக்கு திங்க்ஸ் வாங்குவதற்கு தான் பன்னிரெண்டு மணி வரைக்கும் காத்திருந்தியா என்று கேட்க மீண்டும் ஆமாம் என்பது போல பார்க்கவும்..
உஃப்ப்…என மூச்சை வாய் வழியாக விட்டு கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டவன் தலைமுடியை நன்றாக கோதிக்கொண்டான் பிறகு.
போ..போய் தூங்கு..
ரொம்ப காஸ்ட்லியாலாம் வேணாம்..மீடியமா இருந்தா போதும் ரொம்பலாம் செலவாகாது. நான் அப்படி தான் பட்ஜெட் போட்டிருக்கேன் என்று மேலும் அவனது பொறுமையை சோதித்தாள்.
அம்மா தாயே பாரின் காரனோட காண்டக்ட் சரியா ஓரு மணிக்கு மீட்டிங் அதை அட்டென்ட் பண்ணலன்னு வைய்யேன் பல கோடி ரூபாய் லாஸ் ஆயிடும்.
அதனால உங்களோட உங்களோட மீடியம் பட்ஜெட்டை நாளைக்கு காலையில இந்த சட்டசபையில் தாக்கல் பண்றீங்களா..
இந்த அவை பரிசீலனை பண்ணாம அதை உடனே ஏற்றுக்கொள்ளும் என உணர்ச்சி குவியலாக இருந்தவன் பற்களை கடித்த படி சொல்லவும்.
சரி என்பது போல தலையசைத்தபடி சென்றாள் .
உள்ளங்கையால் நெற்றியில் அடித்துக்கொண்டவன் எல்லாம் என் தலையெழுத்து உன்னை மறுபடியும் வீட்டுக்குள்ள விட்டேன்ல அதான் என்னை இந்த பாடு படுத்தற .
ஒரு நிமிஷத்துல என்னை ஆகாயத்துக்கு தூக்கிட்டு போய் அங்க இருந்து செகண்ட்ல கீழ தள்ளிட்டியே என் பொண்டாட்டி என ஏமாற்றத்தை மறைத்தபடி புலம்பியவனின் மனது தீடிரென அவள் உதடு க
டித்ததையும்,நாக்கால் உதட்டை ஈரப்படுத்தியதையும் நினைவு கூர்ந்தது.
அதில் லயித்தவன் தன்னையும் அறியாமல் அவனது உதட்டையும் ஈரப்படுத்திக் கொண்டான்.

Last edited: