கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகம் 54

Akila vaikundam

Moderator
Staff member
54

கௌசி ஆஃபிஸ்க்கு டைம் ஆச்சி.. ஹரியின் குரல் கேட்கவும் இதோ வந்துட்டேன்ங்க என பூஜையறையில் தீபம் ஏற்றியபடி குரல் கொடுத்தாள்.தழைய தழைய பச்சை நிற கிரேப் சில்க் கட்டியிருந்தவள்

நெற்றியில் அரக்கு நிற பெரிய ஸ்டிக்கர் பொட்டு அதன் கீழே சந்தனத்தின் மீது குங்குமம் வைத்திருக்க வகிட்டிலும் நீளமாக குங்குமம்,தலையில் குளித்ததற்கு அடையாளமாக துண்டு சுற்றப்பட்டிருந்தது.

வேகமாக தீபம் ஏற்றியவள் அவரை அனுப்பிட்டு வந்திடறேன் என அவளின் இஷ்ட தெய்வத்திடம் கூறிவிட்டு வேகமாக வெளியே வந்தாள்.

அவளை நிறைவாக பார்த்தபடியே பாத்து கௌசி.. டாக்டர் என்ன சொல்லி இருக்காங்க நீ வேகமா நடக்க கூடாதுன்னு சொன்னாங்களா இல்லையா என்று கேட்கவும் புன்னகையுடன் தானாகவே அவளின் கை அடிவையிற்றை தொட்டுப் பார்த்தது .

ஆமாம் இப்பொழுது கௌசிக்கு நான்கு மாதம் ஆகிறது அவரது மணி வயிற்றில் குட்டி ஹரிகிருஷ்ணன் உருவாகி.

அப்படி என்ன தினமும் பூஜை ரூம்ல வேண்டுதல் சொன்னா நாங்களும் உனக்காக சேர்த்து வேண்டுவோம் இல்லை என்று கிண்டலாக கேட்க.


அவனருகே வந்தவள் சாரிப்பா அது பர்சனல்..


எனக்கு தெரியாத பர்சனல் என்ன என அவளை மேலிருந்து கீழாக பார்க்க.


ம்ம்.. எப்பவும் சென்சார் பேச்சிதானா..கிளம்புங்க மோதல்ல எங்க அவ என மகளைத்தேட ம்மா நான் அப்போவே ஸ்கூலுக்கு ரெடி நீங்க தான் லேட் என குற்றம் சாற்றினாள்.



சரிடி மாமியாரே என்றவள்.. லேட் பண்ணினது நீங்க ஆனா பழியை தூக்கி என் மேல போடறா பாருங்க உங்க பொண்ணு என..காதலுடன் கணவனையே பார்க்க அவளை அருகே இழுத்தவன் இப்போ நான் ஆபீஸ் போகவா வேண்டாமா இப்படி காலைல பார்த்து வச்சா எப்படி நான் ஆபீஸ்ல வேலை பாக்கறது என்று பற்களை கடித்தபடி அவளுக்கு மட்டும் கேட்கும் படியாக கேட்டான்.

இப்படித்தான் என்றவள் எதிர்பாராத விதமாக அவனது உதட்டில் எம்பி அழுத்தாமல் முத்தமிட்டவள் அவன் பிடிப்பதற்குள் ஓடி விட்டாள்.

அவளின் பின்னே ஒடப்போனவனை மகளின் கோபக்குரல் நிறுத்தியது.

ப்பா ஸ்கூல் டைம் ஆச்சி..

இதோ வந்துட்டேன்.. என்றவன் கௌசியை எட்டிப் பார்க்க அறைக்குள் நின்று அவனைப் பார்த்து வெவ்வே என்று புன்னகைத்தபடி கூறவும் இருடி வர்றேன் என்றபடி வேகமாக அவள் கதவை சாத்தும் இவனும் அறைக்குள் சென்றான்.


வெளியே வரும்பொழுது உதட்டை துடைத்துக்கொண்டே மீசையை சரி செய்தபடி ஹரி கிருஷ்ணன் வர அறைக்குள் பொய்கோபத்துடன் கண்ணாடியில் முன்பு உதட்டை இழுத்துப் பிடித்து பார்த்துக் கொண்டிருந்தாள் கௌசல்யா.


நாட்கள்தான் எவ்வளவு வேகமாக செல்கிறது. விக்கியின் கடிதத்தை படித்துவிட்டு இங்கே வந்து முழுதாக பதினெட்டு மாதங்கள் முடிந்து விட்டது.


ஜானுக்கு இரண்டாவதும் ஆண் குழந்தை பிறந்து ஓரு மாதம் ஆகிறது.


அனுவும் நிஷாந்த் படிக்கும் பள்ளியில் தான் படிக்கிறான் காலையில் ஹரி பள்ளியில் விட்டுவிடுவான்.

சாயங்காலம் இவள் போய் அழைத்துக் கொள்வாள் அப்பொழுது தாயாரும் நிஷாந்தை அழைக்க வருவார். இருவருமே வெகு நேரம் குடும்ப கதைகளை பேசிக்கொள்கிறார்கள்.


வாரம் ஒருமுறை குடும்பத்துடன் தாய் வீட்டிற்கு கிளம்பி விடுவாள் இடையில் தினமும் பள்ளியிலும் தாயாரை பார்த்து விடுவாள்.
இப்பொழுது எல்லாம் ஜானுக்கும் இவளுக்கும் எந்த சண்டையும் இருப்பதில்லை சொல்லப்போனால் கிட்டத்தட்ட தோழி போல ஆகி விட்டனர் அவள் கருவுற்றிருக்கும் பொழுது இவள் சமையல் தான் தினமும் அவளுக்கு. மாமியார் சமையல் வாய்க்கு பிடிக்கவில்லை என்று சொன்னதால் தினமும் செய்து கணவனிடம் கொடுத்து விடுவாள்.


ஜானவிற்கும் இவளுக்கும் அடிப்படையில் இருந்த பிரச்சனை என்னவென்றால் ஹரியுடன் இவள் சேர்ந்து வாழாததுதான் அண்ணனுடன் எப்பொழுது இவள் சேர்ந்து வாழ ஆரம்பித்துவிட்டாளோ அப்பொழுதே ஜானுவின் கோபமும் கௌசியின் மீது இருந்து துடைத்து எடுக்கப்பட்டது.


ஜானு இப்பொழுது மாமியாரையும் மிக மரியாதையாக நடத்துகிறாள்..அவரை எந்த வேலையையும் செய்ய விடுவதில்லை வீட்டு வேலைக்கு இரு ஆட்களை போட்டு விட்டாள் மாமியாரின் வேலை நிஷாந்தை கவனித்துக் கொள்வது மட்டுமே இப்பொழுது இரண்டாவது பேரனையும் பார்த்துக் கொள்வது மட்டுமே.


அத்தோடு இல்லாமல் அவ்வப்போது மூத்த மகனின் வீட்டிற்கும் லட்சுமியை அனுப்பி வைக்கிறாள். அவர்களையும் வரவைக்கிறாள்.
இவளும் அங்கே சென்று பார்த்துக் கொள்கிறாள்.


கௌசியும் அப்படித்தான் இரு அண்ணன்களையும் சம அளவில் பார்க்கிறாள்.. என்ன ஜானு மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல்..பெரிய அண்ணி கூட இப்பொழுது இவர்களுடன் ஒட்ட ஆரம்பித்து விட்டார் மாதம் ஒரு முறை மாமியாரையும் மாமனாரையும் போய் பார்த்து விடுவாள் தினமும் ஒரு முறை அலைபேசியில் கூப்பிட்டு நலம் விசாரித்து விடுவாள்.


எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது ஹரியும் கௌசல்யாவும் பழைய கதைகளை விளையாட்டாய் கூட நினைத்துப் பார்ப்பதில்லை.

இவர்களா சண்டை போட்டு பிரிந்திருந்தார்கள்.. பார்க்கும் நேரமெல்லாம் அடித்துக் கொண்டார்கள் என சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள்.. அந்த அளவிற்கு அன்னியோன்யமாகவும் ஆதர்ஷ்ய தம்பதிகளாக மாறிவிட்டனர்.

ஹரி விட்டதையெல்லாம் பிடித்துக் கொண்டிருக்கிறான் எந்த அளவு தொழிலில் நஷ்டம் அடைந்தானோ அதைவிட பல மடங்கு லாபம் ஏற்படுத்தி பல கிளைகள் தொடங்கி விட்டான்.


பல இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்துக் கொண்டிருக்கிறான்.


எந்த தாய் தந்தை அவனை நினைத்து வருந்தி கொண்டிருந்தனரோ அதே தாய் தந்தை இன்று நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு ஆண் ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பதற்கு சிறந்த உதாரணம் ஹரி தான். கௌசியால் தொலைத்த
நிம்மதி, தொழில் முன்னேற்றம் மரியாதை அனைத்தும் இப்பொழுது கௌசியாலே பல மடங்கு திரும்பி கிடைத்துக் கொண்டிருக்கிறது.

அவனுக்கு மன நிறைவான வாழ்க்கையை‌ மட்டுமே கொடுத்துக்கொண்டிருக்கிறாள். அவன் எழும் முன் எழுந்து அவனுக்கு கைப்பட சமைத்து கொடுக்கிறாள்.இரவு வேளையில் அவனது ஒட்டுமொத்த டென்ஷனை குறைக்கும் ஓரே நிவாரணம் அவள் மட்டுமே.. கணவனின் சந்தோஷம் மட்டுமே இப்பொழுது அவளின் முக்கிய கடமை.. அவனை சந்தோஷப்படுத்தி அவளும் சந்தோஷமாக வாழ்கிறாள்.


ஆனாலும் அவளின் மனதிற்குள் நண்பனை பற்றிய கவலை ஒரு ஓரத்தில் இருந்து கொண்டே இருக்கிறது அவன் எங்கே இருக்கிறான் எப்படி இருக்கிறான் என்ன செய்து கொண்டிருக்கிறான் யாரிடம் கேட்டால் அவனைப் பற்றிய தகவல்களை சேகரிக்க முடியும் என தினம் தினம் தேடிக் கொண்டே தான் இருக்கிறாள்.


மீண்டும் கணவனிடம் அவனைப் பற்றி பேசி குடும்ப நிம்மதிக்கு கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை ராமநாதன் அவளிடம் கடினமாக பேசியதால் அவரிடமும் கேட்க பிடிக்கவில்லை. தாயார் ஏற்கனவே ஒருமுறை கூறிவிட்டார் அவனைப் பற்றிய செய்தி எதுவுமே எனக்கு தெரியாது என்று. இனி அவரிடம் கேட்டுப் பிரயோஜனம் கிடையாது.


ஆனால் ஒருவரிடம் தினமும் கேட்கிறாள் அவனுக்காக வேண்டுகிறாள் அது வேறு யாரும் இல்லை அவள் வீட்டு பூஜை அறையில் குடி கொண்டிருக்கும் அவளது இஷ்ட தெய்வம் தான் அது.


அவளுடைய வாழ்க்கை என்று சிறப்பாக ஆரம்பித்ததோ அன்றே அவளுடைய நண்பனை மனது தேட ஆரம்பித்து விட்டது.

நான் இப்படி ஒரு வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகத்தானே உன் தாய் தந்தை தொழில் பிறந்து வளர்ந்த இடம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு எங்கோ ஓடி சென்றான் இன்று நான் நன்றாக இருக்கிறேன் அதை உனக்கு தெரியப்படுத்த வேண்டும் எப்படி என தெரியவில்லை அதற்கு உதவி செய் கடவாளே.

அவன் எங்கே இருந்தாலும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என அவனுக்காக ஒரு துளி கண்ணீருடன் தினம் தினம் தீபம் ஏற்றுகிறாள்.


மற்றொன்றையும் உறுதியாக நம்புகிறாள் உண்மையான அன்பு எங்கே இருந்தாலும் கண்டிப்பாக தேடிவரும் சில காலம் வேண்டுமானால் பிரித்து வைத்திருக்க முடியும் ஆனால் நிரந்தரமாக பிரித்து வைக்க முடியாது என் நட்பு உண்மையானது என் நண்பன் உண்மையானவன் இயற்கைக்கு சக்தி இருந்தால் அதுவே என் நண்பனை என்னிடத்தில் கொண்டு வந்து சேர்க்கும் இதை தினம் தினம் அவள் மனதிற்குள் கூறிக் கொள்வாள்.


ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் கூட இன்னும் இயற்கைக்கு இரக்கம் வரவில்லை அவன் நண்பன் எங்கே இருக்கிறான் என்ற சிறு துப்பை கூட அவளிடத்தில் கொண்டு வந்து சேர்க்கவில்லை.

அவனை நினைக்கும் போது எல்லாம் மனம் கனத்துப் போகிறது வயிற்றில் கைகளை வைத்து இந்தக் குழந்தை பூமியை பார்க்கும் பொழுது அதை முதலில் ஏந்தற கை உன்னோடதா இருக்கணும் விக்கி.. இப்போ எனக்கு கிடைக்கிற அதீத காதல் நான் வாழற இந்த வாழ்க்கை நீ போட்ட பிச்சை நான் கேட்காமலே என் வாழ்க்கைக்கு நல்வழி காட்டிட்டு போன.. இப்போ உன்னை கெஞ்சி கேட்டுக்குறேன் என்னை ஒரே ஒருமுறை வந்து பார்த்துட்டு போடா ப்ளீஸ் என மானசீகமாக மனதிற்குள் இருந்து அவனை கூப்பிட்டாள்.


அவளின் எண்ண அலைகள், இயற்கையின் சக்தி ,தெய்வத்தின் அனுக்கிரகம், இது மூன்றும் ஒன்று சேரும்பொழுது எப்படி நண்பனை அவளிடம் வந்து சேர்க்காமல் போகும் அதற்கான நாளும் வந்தது.


ஹரிக்கு எப்பொழுதுமே விக்கி வேப்பங்காய் தான். அவனைப் பொறுத்த வரைக்கும் அவர்களின் வாழ்க்கைக்குள் அவன் வராமல் இருந்திருந்தால் தேவையில்லாத சண்டை சச்சரவுகளும் வந்திருக்காது..நான்கு வருட பிரிவும் வந்திருக்காது.. இன்று எவ்வளவு அழகாக ஒவ்வொரு நாட்களும் நகர்ந்து கொண்டிருக்கிறது இதே போல் நகர வேண்டிய நாட்களை அவனின் அதிகப்பிரசங்கித்தனத்தால் நரகம் போல் கடக்க வேண்டியிருந்தது.


அந்தக் கோபம் எப்பொழுதுமே அவனது மனதிற்குள் இருந்து கொண்டே தான் இருந்தது கௌசல்யா அவனைப் பற்றி பேசாததால் ஹரியும் அந்த கோபத்தை வெளிக்கொண்டு வரவில்லை.


ஏன் தேவையில்லாமல் அவனைப் பற்றி பேசி தங்களுக்குள் பிரச்சினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கௌசல்யா நினைக்க அதையேதான் அவனும் நினைத்து மௌனம் காத்துக் கொண்டிருந்தான்.


ராமநாதன் வேறு‌ கௌசியை திட்டியது ஹரியின் மனதிற்குள் அப்படியே இருக்க இப்பொழுது விக்கியை வெறுக்கும் அதே அளவு ராமநாதனையும் வெறுக்க ஆரம்பித்து விட்டான் என்ன இருந்தாலும் அவனைப் பெற்றவர் தானே என்ற எண்ணம் தான் மேலோங்கியது.


ஆனால் காலம் யாரையும் சந்திக்க விடாமல் விட்டு வைக்காது. நாம் வெறுத்து ஒதுக்கி வைத்தாலும் கூட சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களை எதிரில் பார்க்க நேரிடும்.

அப்பொழுது நம்முடைய கோபத்தை இழுத்து பிடிக்காமல் அவர்களுடன் நட்பு பாராட்டியே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படும் அப்படி பட்ட சூழ்நிலைக்கு ஹரியும் தள்ளப்பட்டான்


சபரீனா அவசர அவசரமாக கொட்டேஷன்களை சரி பார்த்துக்கொண்டிருந்தாள்.

அப்பொழுது ஒருவர் வந்து அவளது கையில் ஒரு விசிட்டிங் கார்டு திணிக்க ஆர்வம் இல்லாமல் பார்த்தவள் அடுத்த நொடியே பரபரப்புடன் ஆபீஸ் ஜன்னல் வழியே பார்த்தாள் .


வெள்ளை நிறத்தில் பென்ஸ் கார் ஒன்று நிற்க உடனே வெயிட் பண்ணுங்க என்ற படி நேராக ஹரியின் அறைக்குள் சென்றாள்.


கொட்டேஷன் ரெடி ஆயிடுச்சா குட் என்றபடி கை நீட்ட விசிட்டிங் கார்டை அவனது கையில் கொடுத்தாள்.


அன்றொரு நாள் விக்கி கொடுத்த அதே கார்ட்..என்ன இது என கேட்டபடி அதை குப்பையில் வீசினான்.


சார் மிஸ்டர் விக்னேஷ்வரனோட அம்மா உங்களை பாக்க வந்திருக்காங்க..ஏதோ முக்கியமான விஷயமாம் கீழ கார்ல வெயிட் பண்ணறாங்க..

விக்கியின்‌மீது இருந்த கோபத்தில் அவனது தாயாரையும் புறம் தள்ளினான்.ஒரு காலத்தில் மகன் அடித்த கூத்து பத்தாதா.. இப்பொழுது தாய் வேறா..இப்போதுதான் அவன் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக போய்க்கொண்டிருக்கிறது இதில் இந்த அம்மா என்ன மாதிரியான கல்லை எரிய வந்து இருக்கிறாரோ என உள்ளுக்குள் பயப்படவும் அதுவே பதட்டமாகி வார்த்தைகளாக வெளியேற்றினான்.


வாட்..அவங்களை நான் போய் பாக்கனுமா.. ஓஹோ அவங்க பணத்திமிரை என்கிட்ட காட்டறாங்களாமா..எவ்ளோ நேரம் காத்திருப்பாங்களோ அவ்ளோ நேரம் காத்திருந்திட்டு போகட்டும்.


அதில்லை சார் உங்களை பார்த்தே ஆகனும்னு சொல்லறாங்க எவ்ளோ நேரம் ஆனாலும் வெயிட் பண்ணறாங்களாம்.


தாராளமா ரோட்ல தானே..

சார்…

சபரீனா நீ என்னோட ஸ்டேஃப் மறக்க வேண்டாம்.

ஓகே சார் என அவனை வெறுப்புடன் பார்த்தபடி நகரவும்..

வெயிட்..அந்த லூசு பயலுக்காக இல்லனாலும் மிஸ்டர் ராமநாதனுக்கு மரியாதை தரனும் வரச்சொல்லு.
பட் தெளிவா சொல்லிடு அவங்களை வந்து பாத்துட்டு போக சொல்லு. மிஸ்டர் ராமநாதனோட மனைவி அதனால காரை விட்டு கீழ இறங்க மாட்டேன் மத்தவங்கதான் என்னை வந்து பாக்கணும்னு‌ சொன்னா அப்படியே வெயிட் பண்ணிட்டு போக சொல்லு ஹரி கிருஷ்ணன் ஒரு காலத்துல பிசினஸ்ல வேணா தோத்துருக்கலாம் எப்பவும் சுயமரியாதையை இழக்கல காட் இட். என்று சொல்லவும் பற்களை கடித்தவள் அற்பப்பதறை போல் அவனை பார்த்துவிட்டு வேகமாக சென்றாள்.


சற்று நேரத்திற்கெல்லாம் ஏதேதோ சத்தம் கேட்ட வண்ணம் இருந்தது என்ன வென்று பார்க்க வெளியே வந்தவன் படியோரத்தின் அருகே அவன் கண்ட காட்சியை பார்த்து
அதிர்ச்சியின் அப்படியே உறைந்து நின்றான்.


சபரீனாவும் மற்றொரு பெண்ணும் சேர்த்து கிட்டத்தட்ட ஒரு மத்திய வயது பெண்மணியை வீல் சேரில் அமர வைக்க போராடிக் கொண்டிருந்தனர்.


அவர் சற்று பூசினார் போல உடம்பு என்பதால் பூஞ்சை உடம்பான சபரீனாவும் பணிப் பெண்ணும் சிரமப்பட்டு‌ மத்திய வயது பெண்மணியை கீழே விழாதவாறு பிடித்திருந்தனர்.


அப்பெண்மணி நிற்கவும் முடியாமல் அமரவும் முடியாமல் விட்டு விடுவார்களோ என்ற பயத்தில் கண்களை இருக்க மூடிய படி நின்று கொண்டிருந்தார் வேகமாக அவர்கள் இடத்தில் சென்றவன் வீல்சேரை சரியாக பிடித்து பெண்மணியை அமர வைத்துவிட்டு யார் இவர் என்பது போல சபரீனாவை பார்த்தான்.

மிஸ்டர் ராமநாதன் வொய்ஃப்.

என்ன..? என் அதிர்ச்சியடைந்தவன் அப்பொழுதுதான் அவரை நன்றாக பார்த்தான்.அவருக்கு ஒரு பக்க கை கால் விளங்கவில்லை பக்க வாதம் போல.

சொல்றதுக்கு என்ன என சபரீனாவை பார்த்து பற்களை கடித்தபடி வார்த்தைகளை கடித்து துப்பினான்.

சாரி சார் நான் சொல்ல வந்தேன் நீங்க என்ன பேச விடல என்றாள் .


அவளுக்கு அவனின் மீது அவ்வளவு கோபம் டிரைவர் வந்தபோது தெளிவாக கூறி விட்டார்.


அந்த அம்மாவால் நடக்க முடியாது என்று.

வீல் சேரில் அழைத்து வாருங்கள் என்று தான் முதலில் சபரீனா கூறியது .


ஆனால் அன்று அவர்களின் போதாத காலம் லிஃப்ட் ஆப்பரேட்டர்கள்‌ சர்வீஸ் செய்து கொண்டிருக்க அது வேலை செய்யவில்லை.

அவரின் உடல்நிலைக்கு படியில் ஏறி வருவது சிரமம் அதனால் தான் ஹரியை வந்து பார்க்கும்படி பணிந்தது.


ஆனால் அவனோ பிள்ளை மீது இருந்த கோபத்தில் வந்து பார்க்க முடியாது வேண்டுமானால் அவரை வரச்சொல் எனக்கூறி அத்தாயாரை பழிவாங்கி விட்டான்.

வேறு வழியில்லாமல் சபரீனாவும் சார் இன்னைக்கு ரொம்ப பிசியா இருக்காங்க கீழ வந்து பேசுற அளவுக்கு அவருக்கு நேரம் இல்லை இன்னும் ரெண்டு நாள்ல லிஃப்ட் சர்வீஸ் முடிஞ்சதும் நீங்க வந்து பார்த்துக்கறீங்களா என கேட்கவும்


பேச வேண்டிய விஷயம் ரொம்ப முக்கியம் அம்மா அதனால நானே படியில் ஏறி வருகிறேன் என பெண்களை ஒருபக்கம் பிடித்துக்கொள்ள சொல்லி விட்டு நன்றாக இருக்கும் ஒற்றை காலை வைத்துக்கொண்டே. ஏறி விட்டார்.

ஆனால் இப்பொழுது வீல் சேரில் உட்கார வைக்க முடியவில்லை அதற்கு தான் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அவரை அமர வைத்தவன் அங்கேயே கால் மடித்து அமர்ந்து அவரின் கால்களை பிடித்துக்கொண்டான் அம்மா என்ன மன்னிச்சிடுங்க நான் இந்த அளவுக்கு கருணை இல்லாதவனாக போவேன்னு என்னைக்குமே நினைச்சு பாக்கல உங்க உடல்நிலை இவ்வளவு மோசமா இருக்கும்போது நீங்க மேல வந்திருக்க வேண்டாம்.நான் வந்திருக்கனும் என் அகம்பாவம் என்னை விடல மன்னிச்சிடுங்க என மனதார கேட்டான்.

எதுக்குப்பா பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்ற என்றபடி அவனின் தலையை தடவி விட்டவர் எனக்கு நீயும் ஒரு பையன் தானே பிள்ளைக தெரியாம தப்பு செய்வதற்கெல்லாம் தாய் கோபப்பட்ட முடியுமா என்று பேச அந்த லூசு பயலோட தாயாரா இவர்.. இப்படி பக்குவப்பட்ட பெண்மணிக்கு பிறந்தவனா அந்த அரைவேக்காடு என்றுதான் ஹரி நினைத்தான்.

என்னப்பா அப்படி பாக்குற என சிரித்தபடியே அவர் கேட்கவும் தலையை உலுக்கிக் கொண்டவன் ஒன்னும் இல்லையம்மா வேற எதோ நெனச்சிக்கிட்டிருந்தேன் சரி சொல்லுங்கம்மா என்ன விஷயம்.


உள்ள போய் பேசலாமா ப்பா இல்ல வெளிய எங்காவது போய் பேசுறதுனாலும் சரி என கேட்டார் .

சாரி ம்மா நாம உள்ளேயே போய் பேசலாம் பர்சனல் ரூம் இருக்கு ‌டிஸ்டபன்ஸ் இருக்காது என்

றவன் சபரீனாவை பார்த்து அம்மா வெளியே போற வரைக்கும் யாரையும் உள்ள விடாத எனக் கூறியபடி அவரின் வீல் சேரை தள்ளியபடி கூட்டிச் சென்றான்.
 
Last edited:
Top