கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விழிகளில் ஒரு வானவில் -1

Praveena Thangaraj

Moderator
Staff member
விழிகளில் ஒரு வானவில்...

👉''முதல் முதலாய்... ஒரு மெல்லிய...'' நாவலின் தொடர்ச்சி ''விழிகளில் ஒரு வானவில்...'' என்ற மற்றொரு நாவலின் மூலம் அதனை தொடர்கின்றேன்.

விழிகளில் ஒரு வானவில்

💕1

இந்த காதல் இருக்கே நமக்குள்ள வந்துட்டா என்ன பண்றது எது பண்ணறது ஒன்னுமே தெரியாது. கிட்டத்தட்ட பைத்தியம் பிடிக்காத குறை தான். என்னடா ஸ்ரீராமுக்கு லவ்வானு ஆச்சரியம் வேண்டாம். ஏன்னா நான் லவ் பண்ற விஷயம் என் பெஸ்ட் பிரெண்ட்ஸ் அஸ்வின் பவித்ராவுக்கே தெரியாது. அதுக்கு காரணம் இருக்கு.

அவங்களுக்கு மட்டுமில்லை நான் விரும்பறது என் காதலிக்கே தெரியாது. ஆனா அவள் என்னை விட என்னை அதிகமா தாறுமாறா காதலிக்கறா.... என்னால தான் அவளை அக்ஸப்ட் பண்ண முடியலை.

நீங்க யோசிக்கறது தெரியுது. கேட்க ஆளு இல்லை தனி ஆளு காதலை அக்ஸப்ட் பண்ணிட திருமண வாழ்வில் கால் பதிக்க வேண்டியது தானேனு. ஆனா நிறைய தயக்கம் இருக்கு.

காதல் வந்தா எல்லாம் தலைகீழே தான். உங்களுக்கும் வந்தா தான் தெரியும்.

ஓகே ஓகே என்னை பற்றி விட அஸ்வின்-பவித்ரா பற்றி கேட்கறது காதுல விழுது. அவங்க மேரேஜ் முடிஞ்சு ஹனி மூன்ல இருக்காங்க. ஆமா நிச்சயம் முடிஞ்சு ரெண்டு மாதம் பிறகு மேரேஜ் ஆகிடுச்சு.

நான் தான் அஸ்வினுக்கு செயின் மாட்டி அவனை மேடைக்கு கூட்டிட்டு வந்ததே. நந்தன் அங்கிள் சாரி சாரி அப்படி கூப்பிட்டா கோவிச்சுப்பார். அப்பானு கூப்பிட சொல்லிருக்காங்க கயலம்மா. எனக்கு அஸ்வின் ரிஸப்ஷன்ல கயல் அம்மா தான் டிரஸ் எடுத்து கொண்டு வந்து கொடுத்தாங்க. வருணுக்கும் எனக்கும் ஒரே கோட் சூட். எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. அது கூட சரி அஸ்வின் எடுத்து கொடுத்த மாதிரி என்று இருந்தேன். மார்னிங் மேரேஜ்ல நந்தன் அப்பா செயின் கொடுத்து அஸ்வினுக்கு மாட்டி கைபிடிச்சு கூட்டிட்டு வர சொன்னதும் தயங்கி அஸ்வினை பார்க்க அஸ்வினுக்கு என்னை மாதிரியே திகைப்பு தான்.



பவித்ராவுக்கு அண்ணா என்றால் செய்யணும் என்றதும் இது பவித்ரா வேலையா என்று இருந்தோம். பட் பவித்ராவுக்கே ஆச்சரியம் தான். அப்பறம் தான் கயல் அம்மா சொன்னாங்க. பவித்ரா இக்கட்டுல இருந்து காப்பாற்றி இருக்க எனக்கு நீயும் மகன் மாதிரி என்றதும் சந்தோஷப்பட்டேன். அதை விட நந்தன் அப்பா கயல் அம்மா என்னை அப்படி கூப்பிட சொன்னதும் ரொம்ப ஹாப்பியா இருந்துச்சு.

அப்போ தான் அங்க விளையாடிட்டு இருந்த குட்டி பாப்பா ஒன்னு என் மேல ஐஸ் கிரீம் தட்டி விட்டுடுச்சு சரி கிளீன் பண்ணலாமே என்று பாத்ரூம் போய் வாஷ் பண்ணிட்டு வந்து பார்த்தா என் மொபைல் பக்கத்துல ஒரு கலர் பேப்பர் அதுல 'உங்களுக்கு வேஷ்டி சட்டை அழகா இருக்குங்க' என்று எழுதி இருந்தது. யாருடா இது என்று வெளியே வந்து பார்த்தா யாருமே இல்லை. இது மணமகன் அறை இங்க என்னை தவிர மாப்பிள்ளை அஸ்வின் அப்பறம் அஸ்வின் அண்ணா ஆகாஷ், நான், பவித்ரா தம்பி வருண், பவித்ராகிட்ட வம்பு செய்த ரகு என்று எல்லோரும் வேஷ்டி சட்டை தான் அணிந்திருக்கும்.

அதனால யாருக்கு இது போல் எழுதியதுனு குழப்பம். இதில் ஆகாஷ் கல்யாணமானவர். அஸ்வின் மாப்பிள்ளை அதனால கண்டிப்பா இல்லை, வருண் சின்ன பையன், ரகு கேரக்டருக்கு பொண்ணுங்க திரும்பி பார்க்க மாட்டாங்க. பின்ன யாருக்கு? சரி யார் தான் எழுதி இருப்பா அதுவும் தெரியலை. எனக்கு கொஞ்சம் குழப்பம். அதுக்கு பிறகு அதை சீரியசாக எடுத்துக்கலை. எனக்கு தான் பவித்ராவோட அண்ணன் என்ற பொறுப்பு கொடுத்தாச்சு அதனால் நிறைய வேலை இருந்துச்சு.

எல்லாம் செம ஹாப்பியா போச்சு. கேலி கிண்டல் என்று. ரகு தான் அப்போ கூட உற் என்று இருந்தான். இந்த ரகுவை எப்படி அஸ்வின் சும்மா விட்டான்? எனக்கு பிடிக்கலை அஸ்வின்கிட்டயே கேட்டதுக்கு 'அவனால தானே பவித்ரா சென்னை வந்தா அதனால ரகு மேல கோவம் இல்லை என்று சொல்றான்.

எனக்கு அப்படியிருக்க முடியலை என் பிரெண்ட் இப்ப தங்கையா மாறிய பவித்ராவிடம் ரகு மிஸ்பிஹேவ் பண்ணியது. அடுத்த நாள் விருந்து அன்னிக்கு சுட சுட சிக்கன் கிரேவியை பரிமாறும் பொழுது அவன் மேல ரெண்டு கரண்டி ஊத்திட்டேன். யாருமே வருந்தலை அஸ்வின் பார்வையாலே ஏன் டா இப்போ திருப்தியா? என்றான். பவித்ராவுக்கு சிரிப்பா இருந்துச்சு. ரகுவுக்கு நானும் பவித்ராவும் ரொம்ப கிளோஸ் பிரென்ட் என்றதும் நான் வேண்டுமின்னா சூடான குழம்பை ஊற்றியது புரிஞ்சு போச்சு அதுக்கு பிறகு அவன் தலை கூட என் பக்கம் எட்டி பார்க்கலை. எனக்கும் அஸ்வின் பவித்ராவுக்கு அடக்கமுடியாத சிரிப்பு.

அஸ்வகன்‌பவி மேரேஜிக்கு சஞ்சனா, ரம்யா எல்லோரும் வந்தாங்க. என்கிட்ட ரம்யா தனியா பேசணும் என்று கூட்டிட்டு போனா... அவள் என்கிட்ட பேசும் போதே பவித்ரா அஸ்வின் என்னை பார்த்துட்டாங்க அவங்க என்கிட்ட வரும்பொழுது ரம்யா கிளம்பிட்டா...

கல்யாணம் முடிஞ்சு அதுக்கு பிறகு ஒரு வாரம் எல்லோரும் பவித்ரா வீட்ல தான் இருந்தோம். கிராமத்துலயிருந்து விட்டுட்டு போக முடியலை. அங்கிருந்த வரை செம சந்தோஷம் தெரியுமா. வருண் என்னை 'அண்ணா... அண்ணா...' என்று கூப்பிட்டு பேசும் பொழுது அவ்ளோ சந்தோஷம் வரும்.

எனக்கு பிடிச்ச மாதிரி லைப் இருந்துச்சு. நந்தன் அப்பா கயல் அம்மா வருண் தம்பி என்று எனக்கு நிஜமா இப்படி வாழனும்னு பேராசை. அங்கிருந்த வரை அதனை அனுபவிச்சேன். ஏன் இப்போ கூட ஹாப்பி தான்.

அவள் என்னை விரும்பறதை நினைச்சாலும் சந்தோஷமா இருக்கு ஆனா அதே சமயம் வலியையும் தருது. இந்த சந்தோஷம் வலி இரண்டையும் கொஞ்ச நாள் பார்த்தேன் முடியலை அதனால தான் தப்பிக்க யோசிச்சு இப்போ கிளம்பிட்டேன்.

எனக்கும் அஸ்வினுக்கு செம் ஏஜ் அதனால மேரேஜ்ல கூட சில பேர் எனக்கு திருமணம் ஆகிடுச்சா என்று கேட்டாங்களாம். ஆகலை என்றதும் நந்தன் அப்பாகிட்ட சில பேர் மாப்பிள்ளை கேட்டாங்களாம். என்னால் யாரையும் முடியவே முடியாது என்று சொல்லிட்டேன்.

ஜாப்ல இன்னும் பேர் எடுக்கணும் அப்படி இப்படி சமாளிச்சுட்டேன்.

அப்பவே ஓகே சொல்லிருந்தா இந்த சஞ்சலம் வந்திருக்காது. இப்ப மனசுல அவதான்னு முடிவே பண்ணிட்டேன். என்னால அவளுக்கு பதில் சொல்ல முடியலை. அவளுக்கு மேரேஜ் ஆனதும் வேண்டுமென்றால் பார்க்கலாம். ஆனா அதுக்கும் காலம் நேரம் நிறைய இருக்கு. அதுவரை கூட இங்க இருக்க என்னால் முடியலை. அவளால‌ எனக்கு மூச்சு முட்டுது.

எனக்கு ஆல்ரெடி உறவு என்று இருக்கறது நிஷாந்தினி. என் அக்கா மட்டும் தான். நிஷாந்தினி அக்கா சித்திக் மாமா ரெண்டு பேரும் இந்தியா வந்தே மூணு வருஷம் ஆகுது. போத் ஆர் டாக்டர்ஸ் எப்பவும் பிஸி. நான் தான் எப்பவும் ஆறு மாசத்துக்கு ஒரு முறை போயிட்டு ஒன் வீக் அங்க இருப்பேன். ஆனா இப்போ 3மந்த்ஸ் இருக்க போறேன்.



என் லவ், என் அஸ்வின்-பவித்ரா, என் வீடு, என் ஆபிஸ்... என் சென்னை என்று விட்டுட்டு கொஞ்ச நாள்... பாருங்களேன் அஸ்வினையும் முந்தி அவள் தான் முதலில் இருக்கா...?! என்‌நட்பை விட அவ முக்கியமானவளா வந்துட்டா?

‌ அதுக்காவது நான் கொஞ்ச நாள் இங்கிருந்து கிளம்பறது தான் சரி, அப்பொழுதாவது அவள் என்னை மறக்க செய்வாள்...?

எப்படி எனக்கு அஸ்வின் பவித்ரா மேரேஜ் அப்போ கயல் நந்தன் ஷாக்கிங் சர்ப்பிரஸா அப்பா அம்மா என்று கூப்பிட சொன்னது, அப்பறம் அந்த கலர் பேப்பர், ரம்யா விஷயம், ரகுகிட்ட நடந்துகிட்டு விதம் எப்படியோ?! அதே மாதிரி தான் அவங்க மேரேஜ் முடிஞ்சு ரெண்டு மாதம் கழிச்சு நடந்த இன்ஸிடன்ட்... அஸ்வின்பவித்ரா திருமணம் முடிஞ்சு போட்ட முதல் சண்ட.... அதே போல அஸ்வின் மனதின் வெளிப்பாடு.... அதுக்கு பிறகு இந்த காதல்.

அது என்ன சண்டையா...? இருங்க சொல்றேன். அன்னிக்கு என்வீட்டுக்கு அஸ்வின்-பவித்ரா வந்தாங்க. கொஞ்சம் போல பாப்கார்ன் பொரிச்சு சமோசா சூடு படுத்திட்டு இருந்தேன். அந்த நேரம் பார்த்து ரம்யா போன் பண்ணினா... அஸ்வின் தான் பெயரை பார்த்ததும் எடுத்தான்.

''ஹலோ...''

''ஹலோ ராம்... நீங்க என்ன முடிவு எடுத்து இருக்கீங்க? நீங்க சொல்ற பதிலில் தான் மேரேஜ் பற்றி வீட்ல பேசணும். ஹலோ...?'' ரம்யா பேசினா.

அதுக்கு அஸ்வின் ''நான் அஸ்வின் ரம்யா... ராம் கிச்சனில் இருக்கான். என்ன கல்யாண விஷயம்?' என்று கேட்டான்.

''ஓஹ் சாரி அஸ்வின். நான் அப்பறம் பேசறேன். நான் போன் செய்ததா சொல்லிடுங்க'' என்று ரம்யா கட் செய்து விட்டாள். இத மட்டும் கேட்டு அஸ்வின் கொடுத்தான் பாருங்க ஒரு ரியாக்ஷன் அப்பாடி முடில...

'ராம் ரம்யா உன்னை காதலிக்கறாளா?'னு கேட்டான்.

நான் 'ரம்யா போன் செய்தாளா?'' என்றேன்.

''நான் கேட்பதற்கு பதில் சொல்லு ராம்' அஸ்வின் கோபமானான்.

நான் சும்மாயில்லாம 'அவ பவித்ரா பிரென்ட் தானே. பவிகிட்டே கேட்க வேண்டிய கேள்வி' முடிச்சேன்.

அவனோ 'டேய் நான் கேட்டதுக்கு நீ சுத்தி வளைக்கற' அப்படின்னு ஆரம்பிச்சான்.‌

'என்ன சொல்லட்டும்... எனக்கு தெரியாது' அப்படினு சொன்னது தான்.

அவன் 'ராம் நீ அவளை விரும்ப கூடாது' என்றான். எனக்கு அப்போ செம கோவமா இருந்துச்சு. ஆனா எதுவும் பேசலை என் கோவம் முகத்தில் தெரிஞ்சுடுச்சு அவனுக்கு.

'உனக்கு என்ன அஸ்வின் அவன் ரம்யாவை விரும்பினா?'' என்ற பவித்ரா பேசியதை கேட்டு என் மேல இருந்த கோவத்தை அவள் மேல காட்டினான்.

'நீ பேசாத... நான் அவன்கிட்ட கேட்டுட்டு இருக்கேன்'

''ஹலோ லைசென்ஸ் இருக்கு நான் உங்கிட்ட கேட்க அதிகாரம் இருக்கு'' என்று விளையாடினா.

அவன் 'ஷட் அப் பவித்ரா. விளையாடற நேரமில்லை சொல்லு ராம்' என்னை உலுக்கிட்டான்.

'அஸ்வின் உனக்கு என்னை பற்றி தெரியும் பின்ன எதுக்கு இந்த கேள்வி?'‌நான் பேச 'இப்பவும் சுற்றி வளைக்கர' திமிரிணான்.

''டேய்... சரி சொல்றேன். ரம்யா காதலிக்கறா. ஆனா என்...'' சொல்லி முடிக்கலை

''நிறுத்து டா. ராம் எனக்கு ரம்யாவை பிடிக்கலை தயவு செய்து...' இஷ்டத்துக்கு பேசினான்.

'ஹலோ அஸ்வின் என்னாச்சு உனக்கு ஏன் இப்படி பேசற? அவன் இஷ்டம் காதலில் தலையிட நீ யாரு''என்று பவித்ரா கேட்டு முடிக்க அஸ்வின் கை ஓங்கிட்டான்.

திரும்ப பவித்ரா கண்களை இறுக மூட உடனே கைகளை தாழ்த்திக் கொண்டான்.

எனக்கு அப்போ தான் புரிஞ்சது அஸ்வின் விளையாட்டுக்கு கேட்கலை ஏதோ சொல்ல வருகின்றான் என்று.

பவித்ரா கண்களை திறக்க அஸ்வின் தலையை பிடித்து அமர்ந்ததும் பவித்ரா அப்படியே வெளியேறி விட்டாள். அஸ்வின் என்ன நினைத்தானோ அவனும் பவித்ராவை சமாதானம் படுத்த சென்று விட்டான். எனக்கு தான் குழப்பம் இப்போ நான் என்ன செய்ய என்று. அடுத்த நாள் பவித்ரா அஸ்வின் வந்து பேசு
ற வரை எனக்கு உறுத்தல் தான். சாரி மீதி டைம் ஆச்சு பிளைட் ஏறி உட்கார்ந்த பிறகு ரிலாக்ஸா சொல்றேன்.


-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
 
Top