கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விழிகளில் ஒரு வானவில்-12

Praveena Thangaraj

Moderator
Staff member
அத்தியாயம்-12

இருவரும் நீண்ட நேரம் பேசினார்கள். கிளம்பும் பொழுது...

''அஸ்வின் ரொம்ப தேங்க்ஸ் டா''

''எதுக்கு? சித்திக் அடிச்சதுக்கா?''

''ஹ்ம் அதுக்கும் தான். அப்பறம் நிஷா இங்க வரவழைச்சத்துக்கும். இந்த ப்ரெண்ட்ஷிப் எப்பவும் இழக்க மாட்டேன் டா... எதுக்காகவும்'' என்றான் தன்யாவை மனதில் வைத்து கொண்டு.

''எதுக்காகவும் என்றால்...'' என்றதும் ராம் மீண்டும் அதிர்ந்தான். என் வாய் எனக்கு சனி.

''சரி அதை விடு. ஆபிஸ் லீவு சொல்லிட்டு போனியா? பவித்ராகிட்ட பெங்களூர் போறதா சொன்னேன் என்று சொன்ன. என்கிட்ட தஞ்சாவூர் என்று சொல்லிட்டு கிளம்பி இருக்க''

''ஏன் டா என் ஆபிஸ் எங்க எங்க பிரென்ச் இருக்கு என்று உனக்கு தெரியும் அதனால உங்கிட்ட அதே பொய் சொல்ல முடியுமா?'' என்றதும் இருவரும் சிரிக்க மணியை பார்த்தான். அச்சோ மணி பன்னிரெண்டே கால் ராம் நான் கிளம்பறேன் என்றதும் ராம் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை. இங்கிருந்தால் தனுவை பற்றி ஏதேனும் தானாக சொல்ல வாய்ப்பு உண்டு என அஸ்வினை வழி அனுப்பி வைத்தான்.

அஸ்வின் பைக்கில் வேகமாக வந்தவன். சப்தமில்லாமல் கதவை திறந்து உடை மாற்றி நேரத்தை பார்க்க மணி பன்னிரெண்டு முப்பதை காட்டியது.

பவித்ராவுக்கு போன் செய்யலாமா என யோசித்து மெசஜ் ஒன்றை தட்டிவிட உடனடியாக ரிப்ளை வர கால் செய்தான்.

''ஏய் பச்சரிசி தூங்கலையா டி?'' என்றான்.

''இல்லை டா நீ இன்னிக்கு வீட்டுக்கு வந்துவிட்ட என்று சுவாதி சொன்னா... அதனோட நீ பெங்களூர் போகலை என்றும் ஆஸ்திரேலியா போனதும் சொன்னா...''

''அப்பாடி இந்த பொண்ணுங்க இருக்கீங்களே... உலக மகா கிரிமினல்... வீட்லயே ஸ்பையா?'' என்றான் உடை மற்றியபடி.

''டேய் வீட்ல போன் செய்தா வீட்டு நடப்பு கூட பேசிக்க கூடாதா? சரி அதை விடு நிஷா அக்கா மாமா கூட்டிட்டு வந்த என்று சொன்னாங்க எப்படி இருகாங்க'' என்றதும் ஒரு வார கதையா சொன்னான். எல்லாம் கேட்டுவிட்டு நிஷா அக்கா பாவம் டா. டேய் இருந்தாலும் நீ உன்னை விட வயசுல பெரியவரை அடிப்பியா?'' என்றாள்.

''செய்யற வேலை சில்லறை தனமா இருந்தா அடிக்கலாம்'' என்றான்.

''உன்னை... இதே நெகடிவ் மாதிரி ஆகியிருந்தா என்ன பண்ணியிருப்ப''

''அதெல்லாம் ஆகாது. என் கால்குலேஷன் சரியா இருக்கும்'' என்றான்.

''நீ இருக்கியே நினைச்சதை நடத்திடனும்னு அலையுற... நிஷா அக்கா எப்படி இருக்காங்க'' என்று நிஷாவை பற்றி கேட்டாள்.

''கொஞ்சம் வருத்தப்படறா''

''நான் வேணுமென்றால் அங்க வரவா?'' என்றால் அவசரமாக

''எனக்கு டபுள் ஓகே. வா'' என்றதும்

''போ டா அத்தையும் அம்மாவும் விட மாட்டாங்க. இந்த வருண் வேற கத்துவான். வர வர அவன் பேச்சில் அதிகாரம் பறக்குது''

''ஹ்ம்..'' என சிரிக்க,

''சிரிக்காதடா..எல்லாம் உன்னால தான். மூச்சுக்கு முந்நூறு தடவை உன்னை பற்றியே பேசி உன்னை மாதிரியே மாறிட்டு வருகின்றான். கேட்டா நீ தான் ரோல் மாடலாம்'' என்று தம்பி பற்றி பேசினாள்.

''கொஞ்சம் நம்மள பற்றி பேசறியா? நைட் ஒன்றை ஆகுது இப்ப போய்...'' என்றதும்,

''அச்சு நீ பாப்பா பிறந்த பிறகு என்கூட இதே லவ்வோட இருப்பியா டா'' என்று எல்லா பெண்களை போல கேட்டு தொலைத்தாள்.

''அதுல என்ன சந்தேகம் என் பச்சரிசிக்கு...''

''சரி இப்ப சொல்லு நமக்கு குழந்தை பிறந்த பிறகு உனக்கு என்னை ரொம்ப பிடிக்குமா? இல்லை நம்ம குழந்தையா?''

சிறிது நேரம் யோசித்தவன் ''நீ தான் டி. குழந்தை வளர்ந்து அவங்க லைஃப் பார்ப்பாங்க. எப்பவும் உனக்கு நான் எனக்கு நீ'' என்றான்.

''அத சொல்ல ஏன் இப்படி யோசிச்ச...?''

''ஏய் பொண்டாட்டி உனக்கு என்ன ஆச்சு... வந்து கன்னத்தை கடிச்சிடவா...?'' என்றதும்

''அய்யோ வேண்டாம் நான் தூங்க போறேன்''

''இவ்ளோ நேரம் பேசிட்டு உடனே தூக்கமா?''

''குழந்தை உதைக்குது டா அதனால தூக்கம் வரலை. இப்போ தான் கண் சொருகுது. அதனால தூங்கறேன் அச்சு''

''சரி போய் தூங்கு குட் நைட்'' என சொல்லிட அவளும் உறங்க சென்றாள் இடையில் இருவருமே அவர் அவரின் போன் ஸ்கிரின் சேவரில் இருந்த புகைப்படத்தை கண்டு அஸ்வின் ஐ... மிஸ் யூ டி... என்றும் பவித்ரா லவ் யூ அஸ்வின் என்றும் உளறியபடி உறங்கினார்கள்.

அங்கு ராமோ அஸ்வின் செய்த செயலால் அவனின் நட்பு மட்டும் வேண்டும் தனு வேண்டாம் என்ற முடிவு எடுத்தான். அவனுக்கு புரியவில்லை நாம் ஒன்றை வேண்டாம் என்ற முடிவில் தான் அதனை மிக அதிகம் நேசிப்போம் என்பதை....

விடியல் எல்லோருக்கும் பொதுவாக விடிய... நிஷாவுக்கு மட்டும் இனி தன் வாழ்வு விடியவே செய்யாது என்ற வலியுடன் காபி கலந்தாள்.

''நிஷா காபி'' என்ற சித்திக் குரலை அலட்சியப்படுத்தி நேராக அவளின் அறைக்குள் சென்றாள்.

தான் செய்த தவறுக்கு இது தேவை தான் என உணர்ந்த சித்திக் அவனாகவே காபி கலந்து குடித்தான்.

நிஷாவே உப்புமா செய்து சாப்பிட்டு முடித்தாள். இம்முறை சித்திக் சேர்த்தே செய்து வைத்தாள். ஆனால் பரிமாறவில்லை. அக்கணம் ராம் வந்தான்.

''சாப்பிடறியா ராம். வைக்கவா?'' என்றாள்.

''என்ன செய்த?'' என்றான் ஆர்வமாக.

''உப்புமா''

''உப்பு...மா வா.... ஹ்ம் சாண்ட்விச்சுக்கு இது பரவாயில்லை'' என சாப்பிட்டான்.

''நிஷா வெளிய போய் காய்கறி வாங்கிட்டு வேற ஏதாவது ஷாப்பிங் வர்றியா?''

''இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் டா. வெளிய போக மனசு வரலை'' என்றதும் ராம் வற்புறுத்தவில்லை.

''சரி அங்க நம்ம வீட்ல வேலை செய்யற ஆன்ட்டி இங்க வருவாங்க காய்கறி கூட அவங்களே வாங்கிட்டு வந்துடுவாங்க'' வேற எது என்றாலும் அவங்ககிட்ட சொல்லு எல்லாம் வாங்கி வந்து தந்திடுவாங்க'' என்றதும் சரி என கூறவும் சென்றான்.

இப்படியாக நான்கு நாள் போனது.

''ராம் அன்னிக்கு ஒரு பொண்ணு வந்தாளே யாரு டா?'' என்று தன்யா பற்றி கேட்டாள் நிஷா.

''த... தன்யா. அஸ்வின் தங்கை. பவித்ரா இப்போ இங்க இல்லை. ஊரில் இருக்கா. அதனால அன்னிக்கு அஸ்வின் தங்கை வந்தா'' என்றான் தடுமற்றதுடன்.

''அவளை மறுபடியும் வர சொல்ல முடியுமா? எனக்கு தனியா இருக்க கஷ்டமா இருக்கு கொஞ்ச நேரம் பேசிட்டு இருப்பேன்.''

''அஸ்வின்கிட்ட கேட்கறேன்'' என்றதும் ராமிற்கு தனு நிஷாவிற்கு ஆறுதலாக பேசுவாளா? தனு ரொம்ப சின்ன பொண்ணு. தனு முதலில் இங்க வருவாளா? என யோசித்தாலும் அஸ்வினிடம் உடனே நிஷா விசாரித்ததை சொன்னான்.

அஸ்வின் வீட்டில் சாப்பிடும் பொழுது தனு அஸ்வின் அருகே அமர, தனுவை பார்த்தான். சாப்பிட்டு கொண்டே,

''தனு நிஷா உன்னை பார்க்க விருப்பப்படறா... அவளுக்கு பேச்சு துணைக்கு கொஞ்ச நேரம் போயி பேசிட்டு வறியா?''

''அண்ணா எனக்கு அவங்களை இதுக்கு முன்ன யாருன்னே தெரியாது. நானா எப்படி அண்ணா போய் பேச?'' என்று மறுத்தாள்.

''பவித்ரா இருந்தா அவளை போக சொல்லிருப்பேன் தனு. பட் இப்ப உன்னை விட்டா நிஷாவுக்கு யாருமே இங்க தெரியாது. காலேஜ் முடிஞ்சு வர்ற வழி தானே ஒரு இரண்டு மூணு முறை மட்டுமாவது போய் பேச ட்ரை பண்ணு. அவளுக்கு இருக்கற வருத்தம் கொஞ்சம் போகும்'' என்றான்.

அண்ணன் முதல் முறையாக கெஞ்சி கேட்கின்றான். அதுவும் ராமின் அக்கா வீட்டுக்கு தானே என்ற எண்ணத்தில் ''சரி அண்ணா போறேன்'' என்றாள்.

''தேங்க்ஸ் தனு'' என சொல்லிவிட்டு ''அம்மா நீங்க கூட ஒருமுறை பார்த்து பேசி வாங்க''

''டேய் இங்க விகாஷ்கு கொஞ்சம் அடிக்கடி உடம்பு சரியில்லை. சுவாதியும் இன்னும் நல்லா குழந்தையை பார்த்துக்க தெரிஞ்ச பிறகு போறேன் டா. அவளுக்கும் முதலில் தனு வேண்டுமென்றால் பழக போகட்டும்'' என்றதும் சரி என தலை அசைத்தான்.

காலையிலே இன்று அம்மாவிடம் சொல்லி விட்டாள். இன்று ராமின் அக்கா வீட்டுக்கு செல்வதாக... இதற்கு முன் பேசியது கூட இல்லை எப்படி அவர்களின் வீட்டில் நுழைய என்ற தயக்கத்தோடு சென்றாள்.

காலிங் பெல் அழுத்திவிட்டு காத்திருந்தாள். நிஷா தான் கதவை திறந்தாள்.

''தன்யா விஸ்வநாதன்...?'' என சொல்லி ''வாங்க உள்ள வாங்க'' என வரவேற்றாள்.

''சாரி அன்னிக்கு நீங்க இருந்தும் எதுவும் பேச முடியலை...''

''பரவாயில்லை.... இந்தாங்க'' என ஸ்வீட் பாக்ஸ் எடுத்து நீட்டினாள்.

''என்ன இது....?'' என்றால் நிஷா.

''இல்லை முதல் முறை இப்படி வீட்டுக்கு வரும் பொழுது வெறும் கையோட போக கூடாதுல... அம்மாவும், பவித்ரா அண்ணியும் சொல்லுவாங்க''

''பவித்ரா எப்படி இருக்கா? எனக்கு அவளையும் பார்க்க ஆசையா இருக்கு எப்போ வருவா'' என்று பேச்சு ஆரம்பித்தது.

''இன்னும் கொஞ்ச நாளில். அண்ணி வந்துடுவாங்க.''

''அவளோட வீடியோ காலில் தான் பார்த்து பழகி இருக்கேன். இன்ரஸ்டிங்கேரக்டர்'' என்றதும் தனு மென்னகை புரிந்தாள்.

''காபி ஆர் டீ?''

''எதுவும் வேண்டாம்...'' என தனு சொன்னவள் எப்படி அழைக்க என தடுமாறினாள்

''இந்தா ஹாட் சாக்லேட்ஸ்...'' என குளிர் சாதன பெட்டிலிருந்து எடுத்து தந்தாள்.

''நீங்க என்ன பண்றிங்க?''

''அய்யோ நான் உங்களை விட சின்னவ தானே வா போ என்றே கூப்பிடுங்க'' என்றதும்

''சரி அப்போ நீயும் என்னை அக்கா என்றே கூப்பிடு" என்றதும் சரி என தலை ஆட்ட, அப்பொழுது சித்திக் வந்து எட்டி பார்த்துவிட்டு சென்றான்.

தனு இயல்பாக சித்திக்கை பார்த்து நிஷாவையும் பார்க்க தனுவிற்கு அஸ்வின் எதையும் சொல்லவில்லை என புரிந்தது.

''என்ன படிக்கற?''

''Bsc செகண்ட் இயர் வந்து இருக்கேன்'' என்றதும்,

''ஓஹ்'' இருவரும் பேச பொழுது கழிந்தன. பின்னர் தனுவே ''ரொம்ப நேரம் ஆகிடுச்சு நான் கிளம்பறேன் அக்கா'' என்றதும் சரி என வழி அனுப்பினாள்.

''அடிக்கடி வந்துட்டு போ தனு'' என்றதற்கு

''செவ்வாய் வியாழன் எப்பவும் கொஞ்சம் பிரீ சோ அப்போ வேண்டுமென்றால் காலேஜ் முடிஞ்சு வந்து போறேன் அக்கா'' என்றதும் நிஷாவுக்கு திருப்தியாக போனது.

வீட்டிற்கு வந்து அஸ்வினிடம் சொன்னாள். அவன் ஓகே என்று தலையசைக்க அறைக்கு சென்றாள். நிஷாவுக்கு தேவை நேரத்தை கடத்த சில நல்ல உள்ளங்கள் என்றதும் தனு போவது நல்லது என நினைத்தான்.

நிஷாந்தினி உடனே ராமிற்கு போன் செய்து தனு வந்து சென்றதை சொல்ல ராமிற்கு இனம் புரியாத மகிழ்வு உண்டானது. மேலும் அவள் செவ்வாய் வியாழன் காலேஜ் முடிந்து வருவதாக சொல்லியதால் தானும் நிஷாந்தினி வீட்டுக்கு அப்பொழுது செல்ல வேண்டும் என முடிவு எடுத்தான். அந்த வினாடி அவனுக்கு தனு தன் காதலி என்பது மட்டுமே தோன்றியது.

அடுத்த முறை வந்த பொழுது முன்னை விட இயல்பாக பேசி மகிழ்ந்தார்கள். ராம் தனு வருவாள் என்பதை மறந்து அலுவலக பணியில் மூழ்கினான். இரவு நிஷா போனில் தனு வந்ததை சொன்ன பிறகு தான் 'சே எப்படி மறந்தேன்' என தவித்தான். நாளை மறுநாளில் இதை மறக்க கூடாது என ரீமைண்டர் செட் செய்தான்.

தனு காலேஜ் முடிந்து வந்து நிஷாந்தினியோடு பேசியபடி இருக்க அழைப்பு மணி அடித்தது. நிஷா தனுவிற்காக வெங்காய பக்கோடா செய்ய முயன்றாள்.

''தனு யாருனு பார்றேன்'' என்றதும் யோசிக்காமல், கதவை திறக்க அங்கே வேர்வை சொட்ட சொட்ட ஸ்ரீராம் நின்று இருந்தான்.

''வழிவிடு'' என்றதும் நகர்ந்தவள் அப்படியே கிளம்பலாமா என தவித்தாள்.

''என்ன அக்கா வாசனை எல்லாம் வருது. என்ன சமைக்கிற?'' என செய்து வைத்த பக்கோடாவை எடுத்து உண்டு ''செம டேஸ்ட் நிஷா எப்படி இது.. உனக்கு தான் ஸ்னாக்ஸ் எல்லாம் செய்ய தெரியாதே'' என்றான்.

''டேய் அது தனு செய்தது டா. நான் இனி தான் ட்ரை பண்ண போறேன்'' என்றதும் ராம் பார்வை தனுவை பார்க்க, சங்கடமாக நெளிந்தாள் தனு.

''அக்கா நான் கிளம்பறேன் நேரம் ஆகற மாதிரி இருக்கு'' என்றதும் ராம் முறைத்தான்.

இப்ப எதுக்கு இவன் முறைக்கறான் என குழம்பியவளின் மனதில் நிஷாவை அவனும் அக்கா என்பதோ இவளும் அக்கா என்பதையோ மறந்துவிட்டாள்.

''தனு நான் செய்தது பார்த்துட்டு டேஸ்ட் பண்ணி அதுக்கு பிறகு போ ப்ளீஸ்'' என சொல்லிட தனுவிற்கு வேறு வழியின்றி போனது.

சித்திக்கிற்கு தனு எடுத்து வந்து கொடுத்து 'இந்தாங்க அண்ணா' என்றதும் தனுவின் மேல் அவனுக்கு தங்கை உணர்வே மேலோங்கியது. அவள் அஸ்வின் தங்கை என்ற எண்ணம் அப்பொழுது தலை தூக்கவில்லை. நிஷாந்தினி மனம் மாற உதவும் பெண்ணாக தனுவை எண்ணினான்.

நிஷா போகும் பொழுது ஒரு பாக்ஸ் எடுத்து அதில் செய்ததை அனுப்பி வைத்தாள்.

தனு இப்பொழுது எல்லாம் தனது வீட்டில் செய்யும் பலகாரம் எடுத்துக்கொண்டு சனி கிழமை கூட சென்று நிஷாவை பார்த்து வருவாள்.

அஸ்வின் நிஷாவிடம் போனில் மட்டுமே விசாரித்து கொண்டான். சித்திக் என்னதான் இருந்தாலும் வயதில் பெரியவர் அதனால் அவன் அடித்தது அவனை பார்க்கும் பொழுது எல்லாம் என்ன தோன்றலாம் என அஸ்வினே போக விரும்பாமல் இருந்தான்.
தனு எதுக்கு இந்தியா வந்திங்க என்ன ஆச்சு என்று தோண்டி துருவும் கேள்வி கேட்காமல் இருப்பதால் தனு மீது மதிப்பும் மரியாதையும் நிஷாந்தினிக்கு வந்தது.

ராமிற்கு தூரத்தில் அமர்ந்து தனுவை ரசித்து மனதில் அவளின் பிம்பத்தை நிறைத்து கொண்டு இரவில் அவளோடு கற்பனையில் பேசி கொண்டு திரிந்தான். இப்படியே போனது தான் மிச்சம்.

அன்று சனி கிழமை தனு எப்பொழுதும் போல சென்றாள். ஆனால் கையில் அண்ணன் மகன் விகாஷை தூக்கி கொண்டு சென்றாள்.

கதவை திறந்து தனுவை கண்டதும் அவள் கையில் இருக்கும் விகாஷை கண்டு வேகமாக கையை கொண்டு சென்றாள் நிஷாந்தினி.

விகாஷும் பொக்கைவாய் எச்சி ஒழுக தாவினான்.

''தனு யாரோட குழந்தை.... உங்க பெரிய அண்ணா குழந்தையா?" என்றதும்

''ஆமா ஆகாஷ் அண்ணா குழந்தை''

''குழந்தை பேரு என்ன?''

''விகாஷ்'' என்றதும் குழந்தை சிரிக்க வாவ் ''செம அழகு. இந்த குழந்தை பிக் தானே ராம் எனக்கு சென்ட் பண்ணினான் நினைக்கறேன். சோ ஸ்வீட்..'' என பின்னர் கேள்வி எல்லாம் குழந்தை பற்றியே இருந்தன.

குழந்தை அழுததும் தான் தனு 'சே பிஸ்கட் பாக்கெட் வாங்க மறந்துட்டேன்' என்றதும் உள்ளிருந்து சித்திக் வந்து அவனாகவே வெளியே சென்று பிஸ்கட் வாங்கி வந்தான். நிஷா உடனே அதனை சுடுநீரில் கரைத்து விகாஷுக்கு புகட்டினாள்.

''சுவாதி அண்ணி அம்மா கடைக்கு போனாங்க. குழந்தைக்கு வெயில் அலைச்சல் வேண்டாம் என்று என்கிட்ட கொடுத்து வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. இப்போ உங்களுக்கு சிரமம்'' என்றாள் தன்யா.

''ஓஹ் பரவயில்லை எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு'' என்றதும் சித்திக் நிஷா முகத்தை ரசித்தான். ஒரு நொடி நிஷா வாய் தானாக ''சித்... குழந்தை...'' என்ற சொல்லிவிட்டு வாயை மூடிக்கொண்டாள். சித்திற்கு அதுவே ஆனந்தமாக போனது.

விகாஷ் தனு கிளம்பும் பொழுது நிஷாந்தினி தயக்கத்தோடு ''தனு அடிக்கடி விகாஷ் இங்க கூட்டிட்டு வர்றியா?'' என்றதும் தனுவிற்கு என்ன பதில் எப்படி சொல்ல என்று அறியாது சரியென சொல்லிவிட்டாள்.

- தொடரும்

_praveena thangaraj
 
Top