கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விழிகளில் ஒரு வானவில் -13

Praveena Thangaraj

Moderator
Staff member
அத்தியாயம் -13

நிஷாந்தினி வீட்டில் அஸ்வினின் அண்ணன் மகன் விகாஷ் வருகை தினமும் ஒன்றானது. தினமும் வாக் செய்யும் பொழுது தனு நிஷாந்தினி வீட்டுக்கு அழைத்து வர விகாஸ் சித்திக்-நிஷா இருவருக்கும் ஓட்டுதல் ஆனான்.
சித்திக் மனதில் குழந்தை இருக்கும் வீட்டில் மகிழ்ச்சி பன்மடங்கு ஆகும் என்பது எவ்வளவு உண்மை என என்ன தோன்றியது. விகாஷ் வருவதால் சித்திக்கே சில விளையாட்டு பொருட்களை வாங்கி வந்து குவித்தான். அதில் நிஷாந்தினி மனம் கொஞ்சம் அசைந்தது.

சித்திக் மேல் முழு கோவமும் போகவில்லை என்றாலும் கொஞ்சம் இதமான சூழல் தந்தது.

விகாஷிற்கு தடுப்பூசி போட்டதால் இரு தினம் வராமல் போக நிஷாந்தினி முகம் வாடுவதை கண்டு சித்திக் வருந்தினான். நிஷாந்தினி மகிழ என்ன செய்ய என யோசிக்க அவனுக்கு அந்த ஐடியா உருவானது.

''நிஷா இப்படி விகாஷ் விளையாட்டு பொருட்களை வச்சி விளையாடிட்டு இருக்கறதுக்கு அவனை போய் பார்த்தா என்ன?'' என்றதும் முதலில் சித்திக் பேச்சினை கேட்டு கடுப்பாக இருந்தவள் அவனின் யோசனையில் அவளையும் அறியாது,

''அப்போ நாம போய் பார்க்கலாமா?'' என்றாள்.

''ஹ்ம்'' என்றான் சித்திக்.

''நிஜமா?" அங்க அஸ்வின் இருப்பானே என்று சித்திக் தவிர்க்க யோசிப்பான் என கேட்டாள். ''போய் ரெடி ஆகு தனு வீட்டுக்கு போகலாம்'' என்றதும் பீரோவில் உருட்ட ஆரம்பித்தாள்.

''என்ன இன்னும் ரெடி ஆகலையா?'' என்றதற்கு

''எல்லாம் ஜீன் டாப் மாதிரி தான் இருக்கு'' என்றாள்.

''உன் தம்பி கொடுத்த சுடிதார்?''

''அதுவும் வேண்டாம் மரியாதையா இருக்காது...''

''அப்போ சேலை கட்டு''

''சேலை.... என்கிட்ட என்று மீண்டும் ஆராய... எல்லாம் ப்ளவுஸ் இறுக்கி இருந்தன. கடைசியாக ராம் கொண்டு வந்த சேலையை அவள் பிரித்து கூட பார்க்காமல் இருந்தது நினைவு வர அதனை எடுத்தாள். வேகமாக சேலை உடுத்தி வந்து நின்றாள்.

சித்திக் ''வாவ் இஸ் திஸ் நிஷா... ஐ காண்ட் பிளிவ். யூ லுக்கிங் ப்ரிட்டி'' என்றதும் நிஷா வெட்கப்பட்டு கொண்டாள்.

அதே கணம் 'சே அடிக்கடி சேலை சுடிதார் எல்லாம் ராம் சொன்ன மாதிரி உடுத்தி இருக்கனும். தவறு என்மேலேயும் தான். மனைவி அழகானவளா இருந்தா போதாது. அதை கணவரோடு ரசனைக்கு ஏற்றது போல நடக்கணும் என நிஷா உணர்ந்தாள்.

பழங்கள் ஸ்வீட் குக்கீஸ் என்று வாங்கி குவித்து தன்யா வீட்டை அடைந்தார்கள். ஏற்கனவே தனு அட்ரஸ் சொல்லி இருந்தமையால் வர எளிதாக போனது.

சுவாதி தான் கதவை திறந்தாள்.

''விகாஷ் வீடு? என்று நிஷாந்தினி கேட்க சுவாதி மென்புன்னகை சிந்தி "வாங்க விகாஷ் வீடு தான்'' என்று வரவேற்றாள்.

''ஏய் தனு இங்க வா'' என்று சுவாதி குரல் கொடுக்க,

''இந்தாங்க என்று நிஷா பழங்களை கொடுத்துவிட்டு ''விகாஷ் எப்படி இருக்கான்? தடுப்பூசி போட்டாச்சா? வலிச்சதா?'' என்று கேட்க ராதை கிட்சேன் தலை திருப்பி "வாங்க வாங்க." என வரவேற்று உபசரித்தனர். ஆகாஷ் மேலிருந்து கீழே இறங்கினான்.

''விகாஷை தேடி வந்து இருக்காங்க'' என்று சொல்லி "தனு உன்னை தேடி வரலை'' என்று தனுவை கலாய்க்க ஆரம்பித்தாள்.

''அப்படி எல்லாம் இல்லை எல்லாரையும் பார்க்கணும் என்று இருந்தோம் இப்ப தான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனதும் வந்தோம்'' என்றதும் அவளின் மனம் இப்பொழுது ஒரு பக்குவம் அடைந்த நிலை என்றதால் ராதை அவளிடம் ''உட்காருங்க இதோ சாப்பிட எடுத்து வர்றேன்'' என ஆப்பிள் அரிந்து எடுத்து வர, அதற்குள் விஸ்வநாதன் சித்திக்கிடம் சில பேச்சு வார்த்தை துவங்கி இருந்தார்.

நிஷாந்தினி எப்பொழுதும் போல விகாஷ் தூக்கி ''என் செல்ல குட்டி ஊசி போட்டாங்களா? வலிச்சுதா? மம்மம் சாப்பிட்டீங்களா?" என கேள்வி கேட்டு கொஞ்ச நேரம் கழிந்தது. தனு வீட்டை கொஞ்ச நேரம் கழித்து சுற்றி காட்டினாள். விகாஷ் அப்பொழுதும் நிஷாந்தினி கையிலே இருந்தான்.

கொஞ்ச நேரம் கழித்து ஆகாஷ் சித்திக் பேச்சு சுவாரசியமாக போனது. மருத்துவமனை பற்றிய செய்தி சில சொல்லி ஆச்சரியமூட்டினான்.

அதே நேரம் அஸ்வின் உள்ளே நுழைந்தான். அஸ்வினுக்கே ஆச்சரியம் தான். இவ்வளவு விரைவில் நிஷாந்தினி கொஞ்சம் மாறி இங்கே வந்தது. அவன் பவித்ரா வந்த பிறகே நிஷா வருவாள் என்று நினைத்திருந்தான்.

சித்திக் அஸ்வின் இருவரும் ஒருவருக்கொருவர் அமைதியாக இருந்தார்கள்.

இவ்வளவு நேரம் இது விகாஷ் வீடு தனு வீடு எனயெண்ணி இருக்க அஸ்வின் வந்து தோரணையோடு ஹாலில் சோபாவில் அமர்ந்தை சித்திக் விரும்பவில்லை. அடி கொடுத்தவனை விட வாங்கியவனுக்கு அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியுமா?

நிஷாந்தினி வந்த பிறகு ''ஹாய் அஸ்வின் எப்படி சர்பிரைஸ்?''‌‌என்றாள்.

''ஹ்ம்ம் மச் பெட்டர் ராம்கிட்ட சொல்லிட்டு வந்தியா?''

''இல்லை சடன பிளான். பவித்ரா எப்போ வருவா டா'' என்றாள் அவள்.

''இன்னும் 5 டேஸ் என்றதும் எல்லோரும் 'கொல்'லென சிரிக்க அஸ்வினுக்கு அதன் பின்னரே அவன் நாட்களை எண்ணுவதை கிண்டல் செய்கின்றார்கள் என தோன்றியது.

''ஹலோ எதுக்கு சிரிப்பு... என் காதல் மனைவியின் வரவை நான் எதிர்ப்பார்க்கறேன். இதுல என்ன தப்பு'' என்று‌ வாயடைத்தான்

நிஷாந்தினி சித்திக் இருவரையும் ராதை சாப்பிடாமல் அனுப்ப மறுத்துவிட்டார்கள். அதனால் சாப்பிட்டு பின்னரே சென்றார்கள்.

சித்திக் நிஷாந்தினி சென்ற பிறகு வீட்டில் கொஞ்ச நேரம் அவர்களை பற்றிய பேச்சால் அஸ்வின் மனம் நிறைவானது. உடனே ஸ்ரீராமுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னான். அவனுக்கு நம்ப முடியவில்லை. ஆச்சரியமாக இருந்தது.

ஒரு காபி ஷாப்பில் மீட் செய்து பேசினார்கள்.

''சித்திக் எப்படி உன் வீட்டுக்கு வந்தான். நீ அடிச்சிருக்க'' என ஆச்சரியப்பட்டான்.

''அவன் எங்க என் வீட்டுக்கு வந்தான் அவன் விகாஷ் வீட்டுக்கு வந்து போயிருக்கான்'' என்றதை அஸ்வின் சொல்ல ராமிற்கு புரிந்தது.

''நிஷாந்தினி மனசு கொஞ்சம் ரிலைஸ்ஸாகி இருக்கு ராம்''

''ஹ்ம் ஆமா நானும் கவனிச்சேன்'' என்றான் ராம்.

இடையில் பில் வர இருவருமே பர்ஸ் எடுத்தார்கள். அப்பறம் அஸ்வின் எடுத்து கொடுத்ததும் ராம் மீண்டும் வைக்க போக, அஸ்வினுக்கு பால் காய்ச்சிய அன்று ஸ்ரீராம் பர்ஸ் பிடுங்கியது நினைவு வந்தது.

''ராம் உன் பர்ஸ் கொடு'' என்றான். ராம் உடனே கொடுக்க, அதனை ஆராய்ந்து பார்த்தான்.
ஒன்னுமில்லை அப்பறம் ஏன் அன்னிக்கு அப்படி பர்ஸை பிடுங்கினான் என்று அஸ்வின் சிந்திக்க, ராமோ 'நல்ல வேளை அடுத்த நாளே தனு போட்டோவ எடுத்து பீரோவில் வைத்தது நல்லதா போச்சு இல்லை... இன்னிக்கே அஸ்வின் நட்பை நான் இழந்து இருப்பேன்' என மனதினுள் நினைத்தான்.

''என்ன டா ஆராயற?''

''இல்லை நீ பால் காய்ச்சிய அன்று பர்ஸ் தர யோசிச்சியா? அதனால ஒரு சின்ன....''

''சந்தேகமா டா'' என்றே நீரை எடுத்து குடித்தான்

''நீ யாரையாவது லவ் பண்றியா ராம்?'' என்றதும் புரை ஏறியது அவனுக்கு,

''ஏன் டா?'' என்றான்

''இல்லை நீ ஆஸ்திரேலியா போய் வந்த பிறகும் ஒரு தெளிவு இல்லாமல் இருக்க, ஏதோ தப்பு செய்துவிட்டு முழிக்கற சின்ன பையன் மாதிரி'' என் சரியாக யூகித்தான்.

''எனக்கு கல்யாணம் எல்லாம் பண்ற ஐடியா இப்போ இல்லை. உன் கற்பனைக்கு எல்லாம் நான் யாரையும்... காதலிக்க முடியாது. எனக்கு ஜாப் பார்க்கவே நேரமில்லை'' என்றவனின் மனசாட்சி அவனிடம் 'டேய் தினமும் தனு காலேஜ் அருகே நின்று அவள் வந்துவிட்டாளென்று பார்த்துவிட்டு தானே செல்கிறாய். சில நேரம் சனி கிழமை இருக்கும் மீட்டிங் கூட கேன்சல் செய்து விட்டு நிஷா வீட்டுக்கு செல்வது தனுவை பார்க்க தானே? பிறகு நேரமே இல்லை என்று பொய் சொல்கிறாய்.' என வாதிட்டது.

''நிஜமா மறைக்கலை என்றால் சரி டா. '' என்ற சொல்ல இம்முறை ராமிற்கு குற்ற உணர்வு தலைதூக்க முகத்தை குனிந்து ''ஹ்ம்'' என்றான்.

அஸ்வினுக்கு அந்த நிலை சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது. ஆனால் ஸ்ரீராமிடம் மேலும் கேள்வி கேட்க மனமின்றி விட்டுவிட்டான்.

---

இப்படியாக நாட்கள் செல்ல, அன்று காலேஜ் முடித்து விகாஷை அழைத்து கொண்டு நிஷாந்தினி வீட்டுக்கு சென்றவளை கதவு திறந்து வரவேற்றது ஸ்ரீராம் தான். ராமிற்கு மனம் மெங்கும் மகிழ்ச்சி பொங்க விகாஷினை போட்டோ எடுத்தான்.

தரையில் விகாஷினை சேர்த்து செல்பீ எடுக்க, தனு எல்லா போட்டோவிலும் ராமின் பின்னால் இல்லாமல் இல்லை. அது அவளுக்கே தெரியாது. ராம் அவளிருப்பதற்காகவே எடுத்தான் என்பதே உண்மை.

தனுவிற்கு ராமின் மீதான காதல் குறையவே இல்லை. அவனுடன் பேசினால் மட்டுமா காதல்? அவனின் அருகாமையில் இருப்பதுகூட போதும் தானே?! மீண்டும் காதல் அது இது என்று பேச போக முன் மாதிரி எங்கயாவது சொல்லாமல் கிளம்பி விடுவானோ? என அஞ்சி அமைதி காத்தாள். ஆனால் அவன் மீது கொஞ்சம் கோவமும் இருந்தது. 'இந்த மூஞ்சிக்கு இங்க இருக்கற பொண்ணு வேணாமா? பிரஞ்சுக்காரி வேண்டுமா? என்று அர்ச்சித்து பின்னர் 'சே சே ராம் எப்பொழுதும் ஸ்ரீராம் மட்டுமே அவன் பெயருக்கு ஏற்றார் போல' என அவளுக்கே அவள் கூறிக்கொண்டாள்.

அன்றும் வழக்கம் போல ஒரு மாலை பொழுதில் நிஷாந்தினி வீட்டு கதவை தட்ட, ராம் திறந்தான்.

''ராம் யாருடா தனுவா?'' என்றதற்கு, தனுவை பார்த்தபடி ''ஹ்ம்ம் ஆமா நிஷா'' என்று சொல்லிவிட்டு பார்க்க தனு பின்னால் அஸ்வின் வந்து நின்றான்.

''அஸ்வின்.'' என்று தன் உலகத்தில் இருந்து கலைந்து ''வா டா'' என்றான்.

''நிஷா என்ன பண்றா
?''

''சமைக்கறேன் என்ற பேர்ல.... ஏதோ செய்யறா'' என்ற ராமின் பேச்சில் நிஷா முறைத்துக்கொண்டு வர, அஸ்வின் சிரிப்பை அடக்கிட முயன்றான்.

''டேய் உங்க ரெண்டு பேருக்கும் டோஸ்டர் தான் சாப்பிட கொடுப்பேன்'' என்றதும் ராம் அஸ்வின் இருவரும் கோரஸாக,

''ஐயோ அக்கா வேண்டாம்'' என்றதும் வேடிக்கை பார்த்தா தனு சிரித்தே விட்டாள். அதன் பிறகே அஸ்வின் ராம் இருவருமே நிஷாவை அக்கா என்று சொன்னது உறுத்தியது. ஏன் தான் கூட தான் அப்படி கூப்பிட்டு கொண்டு இருக்கின்றோம் என்று தோன்ற அதன் பின் நிஷாவை அக்கா என்று அழைக்க தனுவிற்கு பிடிக்கவில்லை.

'இந்த அஸ்வின் அண்ணா மட்டும் சட்டமா பவித்ராவை பேர் சொல்லி கூப்பிடாதே அண்ணி சொல்லு என்றார். இப்போ என்னால அப்படி சொல்ல முடியலையே... இப்போ என்ன செய்ய என்று இருக்கும் கொஞ்ச மூளையை வைத்து யோசித்தாள்.

எஸ் ஐடியா கிடைச்சது என்றே அஸ்வினிடம் வந்து ''அண்ணா பவித்ரா அண்ணியும் நிஷா அக்... அக்காவை அக்கா என்று கூப்பிடறாங்க.... நீங்களும் நிஷா அக்காவை அக்கா என்று தானே கூப்பிடறீங்க'' என்றே சொல்லியதும்

''அஸ்வின் அச்சச்சோ முறை மாறுமோ? நோ வே நிஷா இனி நீ எனக்கு அண்ணி ஓகே வா... ஏற்கனவே சுவாதிய வேற அண்ணி என்று கூப்பிடறேன் சரி போன போகட்டும் உன்னையும் அப்படியே கூப்பிடறேன்'' என்று சலித்தான்.‌

‌நிஷாவோ, ''டேய் நீ என்னை பாதி நேரம் பேர் சொல்லி தான்டா கூப்பிடற, எப்பாவது தான் அக்கா இப்போ அண்ணியா? ஏதோ மரியாதை வருதே கூப்பிடு கூப்பிடு'' என்று எல்லோருக்கும் அவள் செய்த வடை சட்னி எடுத்து வைத்தாள்.

''அப்படினா நானும் அண்ணா மாதிரி அண்ணி என்று கூப்பிடவா?'' என்று தனு கொஞ்சம் பயத்தோடும் தவிப்போடும் கேட்டாள்,

''அப்படியே கூப்பிடு எனக்கு நிஷானு கூப்பிட்டாலும் ஹாப்பி தான்'' என்று நிஷா சிரிக்க, அப்படியே தனு பார்வை கொஞ்ச நேரம் கழித்து மெல்ல ராமின் பக்கம் செல்ல அவனோ முறைப்பான் என்றே நினைக்க கூலாக வடை எடுத்து ருசித்துக் கொண்டு இருந்தான்.

அவனின் உதட்டில் சிறு புன்னகை உதிர்த்து மறைந்ததோ என்று எண்ணாமல் இல்லை ஆனால் முறைப்பு இல்லாதது அவளுக்கு நிம்மதியை தந்தது.

ராமிற்கும் தன்யா நிஷாவை அக்கா என்று கூப்பிடுவதை மாற்ற தான் நினைத்தான். அதனால் அவனுக்கு முறைப்பு வரவில்லை. ஆனால் தனுவின் பேச்சு சாமர்த்தியம் கண்டே அந்த இளகுறுநகை.

''ராம் இது சித்திக்கோடா ஒர்க் சர்டிபிகேட் எல்லாம் இருக்கு. உனக்கு எப்போ அவன் மீது முழு நம்பிக்கை வந்துடுச்சோ அப்ப கொடு'' என்று கொடுக்க வாங்கினான் ராம். ராமின் செல் அருகே இருக்க, அஸ்வின் எடுத்தவன் ராம் எதிரிலே அதில் உள்ள போட்டோ அனைத்தும் பார்த்தான்.

ராமோ இயல்பாக இருந்தான்.

தனியாக எந்த பெண்ணின் புகைப்படமும் இல்லை. எல்லாம் குரூப் போட்டோ. அதுவும் பெரும்பாலும் அஸ்வின் மேரேஜ் ஆகாஷ் மேரேஜ் புகைப்படங்களே... சில புகைப்படம் விகாஷ் கூட எடுத்தது. எல்லாம் பார்த்தவன் அப்படியே ராமை கூர்ந்து பார்த்து அவனிடமே அந்த செல்லை நகர்த்தினான்.

ராமிற்கு ஒரு புறம் பயம் என்றால் மறுபுறம் சிரிப்பு... அஸ்வின் செய்கையில்.

அஸ்வினோ மனதில் எந்த நொடியிலும் முகத்தில் மாற்றம் வர கூடாது என்றிருப்பான் போலயே என்றே ராமை கவனித்தான். அவனும் அதற்கு ஏற்றார் போலவே இருந்தான்.

இவ்விருவரின் எண்ணமும் இருவருக்கும் தெரியும் இருந்தும் கேட்டு தெரியாத பதிலை வைத்து என்ன செய்ய?

பவித்ரா கால் செய்தாள்.

'''அச்சு ஏன் டா இன்னிக்கு மெசேஜ் எதுயும் பண்ணலை?''

''கொஞ்சம் வேலை டி...''

''எனக்கு மெசேஜ் பண்றதை விடவா?''

''பச்சரிசி உனக்கு வாய் அதிகமா போகுது. இங்க என் பக்கத்துல வந்த பிறகு இப்படி எல்லாம் கேள்வி கேளு அப்பறம் இருக்கு அந்த உதட்டுக்கு''

''அச்சு எனக்கு ரொம்ப பயமா இருக்கு டா''

''இன்னும் மூன்று நாள் அதுக்கு பிறகு நீ என் பக்கத்துல இருப்ப. அப்பறம் பயம் வருமா?''

''உன்னோட இருக்கும் பொழுது எதுக்கு பயம் வரும் நீ தான் என்னை செக்கியூர்டா பார்த்துப்ப அப்பறம் என்ன''

''பவித்ரா எனக்கு நம்மளோட உயிர் எப்படி இருக்கும் என்று பார்க்க ஆவலா இருக்கு''

''எனக்கும் தான்''

''அஸ்வின் உனக்கு பையன் பிடிக்குமா? பொண்ணு பிடிக்குமா?''

''எனக்கு இரண்டு குழந்தையும் பிடிக்கும். எனக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு கண்டிப்பா வேணும். அதனால் இப்போ என்ன குழந்தை பிறந்தாலும் அதுக்கு பிறகு இன்னோரு குழந்தையும் கண்டிப்பா வேணும்'' என்றதும்

''அப்போ பையன் பொண்ணு வரும் வரை வெயிட் பண்ணுவியா?''

''கண்டிப்பா. உன்னை ஒரு வழி பண்ணாம விடறதாயில்லை. உனக்கு ஓகே தானே'' என்றான் ரகசியமாக.

''ஹ்ம்ம் எனக்கு என் அஸ்வின் நினைச்சது நடக்கணும்'' என்றதும் அஸ்வின் அங்கே சிரிக்க இங்கே பவித்ரா புன்னகைத்தாள்.

''சரி சாப்பிட்டியா?''

''இல்லை டா இனிமே தான்'' என்றாள்.

''டைம்க்கு சாப்பிட சொன்னேன் நீ என்னடானா இப்படி லேட்டா சாப்பிடற?''

''ஐயோ இந்த மங்கை பாட்டி டைய்லி அத்தை மாதிரி எதையாவது சாப்பிட வைக்கறாங்க அதுவே வயிறு நிரம்பிடுது''

''சரி போய் சாப்பிடு அப்பறம் பேசலாம்'' என்றதும் பவித்ரா சரி என்று வைத்து விட்டு சென்றாள்.

பவித்ரா சாப்பிட போக அவளுக்காக பாட்டி பர்வதம் உட்பட எல்லோரும் காத்திருந்தார்கள்.

''என்னம்மா மாப்பிள்ளைகிட்ட பேசிட்டு இருந்தியா?'' என்ற நந்தன் கேள்வியில்,

''சாரிப்பா லேட்டா?''

''நீ லேட் பண்ணியதும் மாப்பிள்ளை என்று தோன்றுச்சு அதான் எப்படியும் நீ சாப்பிடலை என்றால் அவர் போனை வைக்க சொல்லிடுவார் என்றே நினைத்தேன்'' என்றதும் புன்னகைக்க, தந்தையாக நிம்மதி அடைத்தார் நந்தன்.

-தொடரும்
பிரவீணா தங்கராஜ்
 
Top