கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விழிகளில் ஒரு வானவில்-16

Praveena Thangaraj

Moderator
Staff member

அத்தியாயம்-16


இன்று காலையிலே வீட்டை இரெண்டாகி விட்டான் அஸ்வின். பவித்ரா வர போகின்றாள் என்ற ஒரே காரணத்தில் இன்று ஞாயிறு என்றும் கூட பார்க்காமல் எழுந்து வேகமாக பணி முடித்து காத்திருந்தான். பவித்ராவுக்கு இது பிடிக்கும் இந்தபழங்கள் வாங்கியாச்சா? இந்த காய்கறி அவளுக்கு பிடிக்காது என வீட்டை தலை கீழாக புரட்டினான்.

விஸ்வநாதன் ராதை கூட ''டேய் ரொம்ப பண்ணின நாங்களே உன்னை தனி குடுத்தனம் வச்சிடுவோம்'' என்றதும் அஸ்வின் முறைக்க ராதை சிரித்தபடி வேலையை தொடர்ந்தார்.

எப்பொழுதும் போல ஆகாஷ் ஞாயிறு என்றதால் விகாஷினை முழுவதுமாக கவனிக்க துவங்கினான். ஆம் வீட்டில் இருக்கும் அந்த ஒரு நாளில் விகாஷினை பார்த்து கொள்வது ஆகாஷின் பொறுப்பு. சில நேரம் சுவாதி ஆகாஷ் இருவருமே சேர்ந்து என்ற விதிமுறை இருந்தது. அது ஆகாஷிற்கு மிகவும் பிடித்திருந்தது.

விகாஷினை தூக்கி கொஞ்சி கொண்டேயிருப்பது அவனுக்கு அலுக்குமா? தனுவும் அஸ்வின் அளவுக்கு உற்சாகமாக இருந்தாள்.

ராம் காதலை சுவாசிப்பதால்...

வந்ததும் வராததுமாக பவித்ராவின் அருகே இருந்த வருண் குறைப்பட்டான். ''மாமா இந்த அக்கா ரொம்ப ஓவரா பண்றா. எப்ப பாரு இங்க எப்ப வருவோம் என்ற மாதிரியே இருக்கா. என் கூட கொஞ்சம் நாள் இருக்க சொன்னா பிகு பண்ணிக்கறா'' என்றதும் அஸ்வின் மனதினுள் 'டேய் விட்டா நானே உங்க அக்காவை தூக்கிட்டு வந்திருப்பேன்' என நினைத்தான்.

''வருண் என்ன இது... வர வர வாய் அதிகம் டா'' என கயல் அதட்டினார்.

''போங்க நீங்களும் தானே அக்கா குழந்தை பிறக்கற வரை இருக்க கூடாதா என்று கேட்டிங்க'' என்றதும்

''வருண் முதலில் பயணம் களைப்பா இருப்ப உள்ள வா'' என்றான் அஸ்வின்.

அடுத்த நொடி வருண் ''வர்றேன் மாமா'' என ஓடினான்.அவனை அனுப்பி வைத்து அஸ்வின் நின்று நிதானமாக பவித்ராவை ஹாலில் உட்கார வைத்தான். பார்வையாலே ''போதுமா வந்துட்டேன்'' என்றாள் பவித்ரா. அவனோ குறுஞ்சிரிப்பில் ''ஹ்ம்'' என்றான்.

விஸ்வநாதன் நந்தன் பேச்சில் கலந்தார்கள்.

ஈஸ்வரமூர்த்தி-மங்கை நெடுந்தொலைவு வர முடியாது குழந்தை பிறந்த பிறகு வருவதாக மனமின்றி சொன்னார்கள். அவர்களின் உடல் அதிக தூர பயணத்திற்கு ஒத்துழைக்கவில்ல.

கயல் விகாஷினை கண்டு தூக்கி கொஞ்சி மகிழந்த படி சுவாதி, ராதையிடம் பேச்சில் கலக்க, தனுவோ ராமிற்கு மெசேஜ் மூலமாக பவித்ரா வந்துவிட்டதை சொன்னாள். அவனுக்கு அதற்கு முன்னே அஸ்வின் சொல்லி இருந்தான். பவித்ராவும் இந்த மணிக்குள் வருவதாக சொல்லி விட்டாள்.

நேரங்கள் கடக்க சிரிப்பும் மகிழ்வும் பொங்க இருந்தன. ''உள்ள வரலாமா?'' என்ற ராமின் குரலில் தனு நிமிர்ந்து பார்த்தாள்.

''ராம் எப்படி இருக்க? டேய் கொஞ்சம் குண்டாகிட்டியா? நிஷா அக்கா சமையலில்...'' என்றதும்

''ஹே பவித்ரா அவ சமையலில் நான் ஒல்லியா தான் இருப்பேன். பட் இப்ப பரவாயில்லை. நீ எப்படி இருக்க? ஒழுங்கா சாப்பிடறியா? இல்லையா?'' என்றான் உற்சாகமாக.

''பார்த்தா தெரியலையா நான் குண்டாகி இருக்கறது''

''சே கொஞ்சம் பூசின மாதிரி இருக்க அவ்ளோ தான்''

''டேய் நிஷா அக்கா மாமா கூட்டிட்டு வரலாம்ல?''

''ஹ்ம்ம் முதலில் நான் வரக்கூடாதுனு இருந்தேன். அப்பா அம்மா வீட்டுக்கு வரவே இல்லை...'' என்றே குறைபட்டான்.

''இன்னிக்கு கண்டிப்பா வருவோம் ஸ்ரீராம்'' என்றார் கயல்.

''நிஜமா?'' என புருவம் தூக்கி கேட்க ''நிஜமா ராம்'' என நந்தன் பதிலுரைத்தார்.

அங்கு தன்யா என்ற ஒருத்தி இருப்பதையே மறந்து ராம் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தான்.

தன்யாவிற்கு தான் ஏமாற்றம். எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறியபடி இருந்தபொழுது தனு ராமின் அருகே வந்து வைக்க ராம் கஷ்டப்பட்டு அவளிடம் மெல்லிய குரலில், ''தன்யா தள்ளியே இரு ப்ளீஸ்'' என்றதும் கோவத்துடன் அடுத்த அந்த பக்கமே அவள் அவன் அருகே வரவில்லை.

சாப்பிட்டு முடித்து எல்லோருக்கும் ஐஸ் கிரீம் வாங்கலாமா? என்ற ஆகாஷ் கேள்வியில்,

''ஹ்ம்...எனக்கு ஸ்டாபெர்ரி பிளேவர்'' என்று தன்யா கத்த, அதே நேரத்தில் வருண் ''மாமா இங்க யாரு சின்ன குழந்தைங்க இருக்காங்க'' என்ற வருணின் கேள்வியில் ராமும் அஸ்வினும் ஒரு சேர தன்யாவை பார்க்க, ராமோ சிறிதாக சிரித்திட அசடு வழிந்தாள்.

உடனே வருணிடம் ''ஹலோ எப்ப வேண்டுமென்றாலும் யார் என்றாலும் ஐஸ் கிரீம் சாப்பிடலாம் இதுக்கு குழந்தைகளா இருக்கணும் என்ற அவசியம் இல்லை''

''அதெல்லாம் எனக்கு தெரியாது. பெரியவங்க சாப்பிட விரும்ப மாட்டாங்க'' என்றான் அவன் பெரியவனாக.

ராமோ ''டேய் போன வருஷம் பவித்ரா கல்யாணத்துல எனக்கு இரண்டு ஐஸ் கிரீம் வேண்டும் என்று பிடிவாதம் பிடிச்சவன் தானே நீ'' என்றான்.

''அண்ணா அது சின்ன பையனா இருந்தப்ப'' என்றதும் அஸ்வின்

''டேய் ஒன் இயர்ல நீயும் வளர்ந்துவிட்டாயா என்ன?' என்றான்.

அப்பொழுது தான் பவித்ரா தனுவின் அறையில் இருந்த பூங்கொத்தினை கண்டு, ''வாவ் சூப்பரா இருக்கு யார் வாங்கியது'' என்றதும் தனு திக்கி திணறி கூறினாள்.

''யாரோட அக்கா தனு'' என்றாள் பவித்ரா. ஏன் என்றால் தனுவின் தோழிகள் பெரும்பாலும் பவித்ராவுக்கு தெரியும்.

''அது... அது உங்களுக்கு தெரியாது அண்ணி. இப்ப தான் நியூ பிரென்ட்'' என்றாள். ராமிற்கு சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. போன் ஒன்றை எடுத்து நொண்டி ஏதோ பெரிய ஜோக் வந்ததாக அதை படித்து சிரிப்பதாக பாவ்லா காட்டினான். ''பவித்ரா கொஞ்சம் இங்க வா'' என அஸ்வின் கூப்பிட பவித்ரா எழுந்தாள். தனுவிற்கு விட்டால் போதும் என்று ஆகிவிட்டது.

பவித்ராவை கூப்பிட்டவன் அடுத்த நொடி எழுவதற்குள் எங்கே சென்றான் என்றதும் ராதையே அஸ்வின் ரூமுக்கு போயிட்டான் என்ற தகவலை தர மாடிக்கு ஏறினாள். கதவை திறந்து உள்ளே செல்ல அவனோ பால்கனியில் இருந்தான்.

''என்ன அஸ்வின் கூப்பிட்டுட்டு இங்க வந்துட்ட?''

''அறிவு இருக்கா... நீயா வருவ என்று இருந்தேன் நீ என்னடா என்றால் அங்கயே உட்கார்ந்துட்ட'' என்று அணைக்க வர அவளின் மேடிட்ட வாயிறு அவனை தடுத்தது. உடனே பவித்ரா சிரிக்க,

''சிரிக்காத... திரும்பு'' என்று பின்பக்கம் கட்டி கொண்டவன். '''நான் உன்னை எவ்ளோ மிஸ் பண்னினேன் என்று தெரியுமா?'' என்றான் காதலோடு.

''டேய் எனக்கு தெரியும் இப்ப தான் வந்துட்டேனே. கீழே எல்லோரும் இருக்காங்க இப்படி நீயும் நானும் தனியா வந்துட்டா சிரிக்க மாட்டாங்க''

''மாட்டாங்க'' என்றான் அஸ்வின். '

'அவங்களுக்கு புரியும்'' என்றே கழுத்தில் மூக்கை தேய்த்தான்.

''நீ வர்றியா இல்லையா'' என்றதும் ''வர்றேன் என்னை நல்லா இம்சை பண்ணு'' என்றே முனுமுனுத்து வந்தான் அவளின் கையை பற்றியபடி... ராமோ வீட்டில் இருந்து வருணை அழைத்துக் கொண்டு கிளம்பினான். அஸ்வின் அப்பா அம்மாவை அப்பறம் வர்றாங்களாம் நான் வருணை கூப்பிட்டுக்கொண்டு போறேன் டா'' என்றே கிளம்பினான்.

சற்று நேரத்தில் தனு அவனுக்கு தொடர்ச்சியாக மெசேஜ் செய்ய ராமோ, ''வீட்ல இருக்கறவங்க கிட்ட பேசு எனக்கு மெசேஜ் பண்ணதா தன்யா ஓகே'' என்று அனுப்பிட தனுவிற்கு கோவம் வந்தாலும் சரி என்றேபட்டது.

ராமின் சொல்லுக்கு இணங்கி வருண் நந்தன்-கயல் மூவருமே ராமின் வீட்டில் இரு தினம் தங்கி சென்றார்கள். ராமிற்கு அது மிக பெரிய சந்தோஷம் கொடுத்தது என்பதே உண்மை. அவனுக்கு அந்த வீடு அப்பொழுது தான் முழுமை அடைந்ததாக தோன்றியது. நிஷா வீட்டுக்கும் அழைத்து சென்றான். ஆனால் குறிப்பிட்ட நேரம் கழித்து திரும்பி வந்தார்கள்.

வருணை தனது தம்பியாகவே என்ன துவங்கினான். ஒவ்வொரு முறையும் அவனுக்கு ஏதேனும் பரிசு கொடுக்காமல் இருக்க மாட்டான். தஞ்சை சென்றாலும் சரி வருண் இங்கே வந்தாலும் சரி ராம் வருணுக்கு பரிசு தருவான்.

நாட்கள் மிக அழகாக மாறியது ராமிற்கு... வருண் எல்லோரும் சென்ற பிறகும் அவனுக்கு பொழுதுகள் இனிமையாக போனது. புதிதாக ஆரம்பித்த ப்ராஜெக்ட் வேலையிலும் நேரம் கொஞ்சம் பற்றாமல் இருந்தாலும் தனுவிடம் இருந்து வரும் குறுஞ்செய்திக்கு பதில் அனுப்பாமல் இருக்க மாட்டான்.

ராமிற்கு அஸ்வினை தவிர்த்து கடவுள் கொடுத்த முதல் வரம் தன்யா அவளின் செயலிற்கு என்றுமே பதில் அனுப்பிவிடுவான். அனுப்ப கொஞ்சம் கடினமாக இருந்தால் சொல்லிடுவான். எப்பொழுதும் பதில் வந்திடும் என்பதாலேயே தனு அதற்காக அடிக்கடி அனுப்பி அவனை தொல்லை செய்வதும் இல்லை.

மாதம் ஒரு முறை மட்டும் தனுவோடு வெளியே செல்வது என்ற முடிவு எடுத்தான். அதுவும் படிப்பில் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் தனு என்ற நிபந்தனையோடு....

இதில் நிஷாந்தினி வீட்டிற்கு செல்லும் பொழுது பார்த்துக்கொள்வது சேர்த்தி இல்லை.

நடுவில் ரம்யா ரோஷன் திருமண நிச்சயதார்தம் நடைபெற்றது. அதில் பவித்ரா-அஸ்வின் ஸ்ரீராம் கலந்து கொண்டார்கள். சஞ்சு அவளது கணவன் தனது ஒரு வயது மகனோடு வந்து சென்றார்கள் .

அன்று பவித்ரா அஸ்வின் இருவரும் படம் பார்க்க செல்லலாம் என்று தியேட்டருக்கு வந்தார்கள். அஸ்வின் டிக்கெட் ஆன்லைனில் புக் செய்தமையால் நேரம் கொஞ்சம் கிடைக்க தியேட்டரில் வெளியே இருக்கும் இருக்கையில் பவித்ரா அஸ்வின் அமர்ந்து இருந்தார்கள்.

''அஸ்வின் எனக்கு ஒரு மாதிரி இருக்கு டா...''

''ஏய் லேபர் பையின்னா? ஹாஸ்பிடல் போகலாமா?''

''இல்லை டா அது மாதிரி தெரிலை. மயக்கமா இருக்கு...''

''ஜூஸ் குடிக்கரியா?''

''ஹ்ம்'' ''இங்கயே இரு இதோ வந்துடறேன்'' என்றே அவளை பார்த்துக் கொண்டே ப்ரெஷ் ஜூஸ் வாங்கினான்.

அதனை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க வாங்கி பருகினாள்.

'இப்ப ஓகே வா?''

''அஸ்வின் நாம வீட்டுக்கு போகலாமா?''என்றே தயக்கத்துடன் கேட்க,

''நீ கேட்கலை என்றாலும் வீட்டுக்கு தான் போகிறோம். நீ வீட்ல கொஞ்சம் ரெஸ்ட் எடு. வா போகலாம்.. கார் வர நடக்க முடியுமா? இல்லை தூக்கிக்கவா?'' என்றான்.

''அஸ்வின் இது வீடு இல்லை. நான் நடந்தே வருவேன்'' என பவித்ரா உரைத்தாள்.

பிரவீணா தங்கராஜ்
 
Top