கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விழிகளில் ஒரு வானவில்-17

Praveena Thangaraj

Moderator
Staff member
அத்தியாயம் -17

வீட்டுக்கு சென்றதும் எல்லோரும் படம் போகவில்லை என்றே கேட்க, பவித்ரா கால் வலி என்றதும் போய் முதலில் ரெஸ்ட் எடு'' என்றே ராதை சொல்லிட, பவித்ரா அஸ்வின் இருவருமே அறைக்கு சென்றார்கள்.

கதவை திறந்து உள்ளே வரும் பொழுது ஒரு காலின் நகம் மற்ற காலினை இடித்து பவித்ரா சிறிது ஆஹ் என முனங்கினாள்.

''என்னாச்சு... '' என அஸ்வின் வந்தான்.

''நகம் குத்திடுச்சு''

''நகம்மா? காலை காட்டு'' என கட்டில் படுத்தவள் காலினை பார்த்தான்

''ஏய் லூசு நகம் இவ்ளோ வளர்ந்திருக்கு.. வெட்டி இருக்கலாம்ல..''

''இல்லைங்க குனிச்சு வெட்ட போனா வயிறு இடிக்குது அதனால வெட்டலை.''

''அறிவு கொழுந்து என்கிட்ட சொல்ல வேண்டியது தானே.'' என நெய்ல்கட்டர் எடுத்து அவளின் கால் விரலின் நகத்தினை வெட்டினான்.

''என்னங்க வேண்டாங்க... நீங்க காலை பிடிக்கிறது எனக்கு ஒரு மாதிரி கஷ்டமாயிருக்கு''

''வாயை மூடு... இதுல என்ன கஷ்டம். என் மனைவிக்கு நான் நகம் கட் பண்ணி விடறேன். எனக்கு இதுல ஒன்னும் கவுரவம் எல்லாம் இல்லை. எனக்கு பிடிக்குது. கண்ணை மூடி தூங்கு.'' என்றதும் பவித்ராவுக்கு சொல்ல இயலாத சந்தோஷம் மனதில் நிறைந்தது.

''அஸ்வின்.''

''எதுவும் பேசாதே... தூங்கு. என்கிட்ட நகம் வெட்டி விட கூட உனக்கு கேட்க தோணலை... நான் உன்மேல கோவமா இருக்கேன்'' என்றான்.

''அஸ்வினுக்கு என்மேல கோவமா சான்ஸ்ஸே இல்லை?'' என்றாள்.

''நிஜமாவே கோவம் தான்'' என அஸ்வின் முகம் இறுகியது

''அப்படியா... இப்ப பார்க்கலாம்" என்று அவன் கன்னம் நெற்றி இதழ் பதித்தாள்.

''பச்சரிசி... கன்னத்துல கொடுக்க கூடாது டி'' என்றவன் இதழை நெருங்கி கோவத்தினை மறந்தான்.

இப்படியாக இவர்கள் காதல் புரிதலில் திளைக்க, சித்திக் மருத்துவனையில் மருத்துவம் பார்க்க சரியென்றே கிளம்பினான். வெளிநாட்டில் இருந்து வந்து இங்கு பணிபுரிவதால் அவனுக்கு நற்பெயரே கிடைத்தது.

நிஷா அவளாகவே பணி வேண்டாம் என மறுத்துவிட்டாள். கொஞ்ச காலம் எல்லாம் போகட்டும் என்று நினைத்தாள். நடுவில் பவித்ராவை பார்க்க இருவருமே வந்தார்கள்.

ராமிற்கு மனம் நிறைந்தவள் தினமும் செல்லும் வழியில் அவளுக்கு தெரியாமல் இருந்து பார்த்துவிட்டு செல்வான்.

இதை ஒரு நாள் தனு கவனிக்கவே செய்தாள்.

''மறைந்து இருந்து நீங்க மட்டும் பார்க்கலாம் நான் மட்டும் உங்களை பார்க்க கூடாதா?'' என சிணுங்கினாள்.

''சரி நாம பார்த்துக்கலாம். நானே உன்னை ட்ராப் பண்ணவா?'' என்ற கோரிக்கையை வைத்தான் ராம்.

முதலில் யோசனை செய்தவள் பின்னர் சரியென ஒப்புக் கொண்டாள்.

அதன் பின் ஸ்ரீராம் தினமும் அவளை ட்ராப் செய்துவிட்டே கிளம்ப செய்தான்.

தன்யாவிற்கு இரண்டாம் வருடத்தின் முதல் செமஸ்டர் வர இருந்தது. அதனால் அதிகம் போன் உபயோகப்படுத்த கூடாது என்ற ராமின் கட்டளையில் அப்படியே பின் பற்றினாள் தனு.

அஸ்வின் ராமின் காதலில் நுழைவதே கிடையாது. நட்பில் மட்டும் எப்பொழுதும் போல இருப்பான்.

அன்று தனுவிற்கு காலையிலே டெஸ்ட் என்று இருக்க லேட்டா வேறு ஆகியதை எண்ணி வருத்தத்துடன் இருக்க,

''ஏய் தனு சாப்பிடாம போற..?'' என்ற ராதையின் கேள்வியில்

''அம்மா இன்னிக்கு முதல் ஹவர் டெஸ்ட்ம்மா. ஏற்கனவே லேட். சாப்பிட்டு கிளம்பின அவ்ளோ தான்'' என செருப்பை மாட்டினாள்.

''கொஞ்சமா சாப்பிடு டி'' என ராதை நிறுந்தினார்.

''அய்யோ அம்மா விடேன்'' என கிளம்பினாள்.

''தனு அம்மா சொல்லறாங்கல சாப்பிட்டு போ'' என்ற அஸ்வின் குரலில் அப்படியே அமர்ந்தாள்.

''கை அலம்பிட்டியா?''

''இ... இல்லை ணா..'' என தனு முழித்து கை அலம்பி அமர்ந்தாள்.

''சாப்பிடு'' என அவனுக்கு வைத்த முட்டை தோசை ஒன்றை அவளின் தட்டில் வைத்து அவன் மற்றொரு தோசையை எடுத்து சாப்பிட்டு கொண்டே,

''ரொம்ப லேட்டா ஆனா நான் இன்னிக்கு ட்ராப் பண்ணிடுறேன்'' என்றதும் தனுவிற்கு தலையை மட்டும் ஆட்டி வேகமாக சாப்பிட துவங்கினான்.

இன்று ராம் ஊரில் இல்லை எப்பொழுதும் போல அவன் ட்ராப் செய்வான் என தனு மறந்து உறங்கியது. ஆனால் ராம் ஊரில் இல்லை அடுத்த நாள் மாலை தான் வருவான் என்ற நினைவு வர அவசரமாக கிளம்பினாள்.

அஸ்வின் அவனாகவே அழைத்து செல்வதால் தனு எப்பொழுதும் போல செல்லலாம் என்ற நிம்மதி பரவியது. ஆனாலும் சாப்பிட பிடிக்கலைன்னா கூட இந்த அண்ணா மிரட்டி சாப்பிடவைக்கறான் என அர்ச்சித்தாள்.

அவளுக்கு தெரிந்த வரை ஆகாஷ் அண்ணா தனக்கு எது என்றாலும் சரி உன் இஷ்டம் என சொல்பவன். இந்த அஸ்வின் அண்ணா உனக்கு இது வேண்டாம் அது வேண்டாம். அங்க நிற்காதே.. இங்க போகாதே... என்றே சொல்பவன். அதையும் கட்டளையுடன் சொல்பவன். வீட்டில் அப்பா முதல் கொண்டு அவனின் பேச்சுக்கு மதிப்பு என்பதால் தனு முதலில் இருந்தே அஸ்வின் என்றாலே பயம் தான். தனு... என்ற அதட்டலில் அவன் எது சொன்னாலும் அதிர்ந்து விடுவாள்.

எல்லோருக்கும் வீட்டில் செல்லம் என்றாலும் இவனுக்கு மட்டும் சொல்வதை கேட்கணும் என்ற ரீதியில் தனு மனதிலே அஸ்வினுக்கு அர்ச்சனை நடக்கும். இப்பொழுது கூட அவள் ஒரு தோசையில் எழுந்து விடுவாள் என்ற நோக்கில் தான் அவளுக்கு முட்டை தோசையை எடுத்து வைத்தான். அஸ்வின் தனக்கு நல்லது செய்தாலும் அதிலும் அவளுக்கு கடுப்பு வரும். தனு காலேஜ் ட்ராப் செய்து விட்டு அவன் பாட்டிற்கு செல்ல தனுவும் வகுப்பிற்கு சென்றாள்.

அஸ்வின் தனு இருவரையும் ஒருவன் பார்த்து யோசித்து நின்றான்.

''என்ன அண்ணா யோசிக்கற?''

''டேய் அவன் அஸ்வின்... அந்த பொண்ணு யாரு டா?''

''செகண்ட் இயர் தான்.. பேரு தன்யா விஸ்வநாதன். கூட வந்தவன் அவன் அண்ணன்''

''டேய் நீ அந்த பொண்ணை விரும்புற?'' என்றதும் அந்த மற்றொருவன் விழித்து கொஞ்சம் நிதானமாக,

'போ அண்ணா. அவன் அவன் அண்ணா இருக்கற பொண்ணுங்களையே சைட் அடிக்க மாட்டாங்க இதுல அந்த பொண்ணுக்கு லவ்வர் வேற இருக்கான். இரண்டு பேர்கிட்டயும் அடி வாங்க சொல்றியா? இவனை பார்த்தாலே தெரியலை வம்பு வச்சிக்கிட்டு முகத்தை பெத்துடுவானு'' என்றதும் இவனின் அண்ணனோ தீவீரமாக முகத்தை தேய்த்து கொண்டான். ஏற்கனவே அஸ்வினிடம் வாங்கிய அனுபவம் கண்ணில் நிழல் ஆடியது.

''டேய் என் தம்பியா இருந்து பண்ணுவியா மாட்டியா?''

''போனா இன்னோருத்தன் இருக்கான் அந்த பொண்ணு லவ்வர். அப்பறம் எப்படி லவ் பண்ண?'' சிறிது யோசித்தவன்

''டேய் அவனும் இவளுக்கு அண்ணன் தான் அவனும் எனக்கு தெரியும் ஆகாஷ்.''

''இல்லை... இருக்கவே இருக்காது அவன் காரில் கொண்டு வந்து விடுவான். அவன் அந்த பொண்ணுக்கு அண்ணனா இருக்கவே முடியாது அவன் பார்வை அப்படி..''

''இருக்காது டா. அஸ்வினுக்கு மேல ஒரு அண்ணன் உண்டு''

''நீ வேணுமின்றால் அவனை பாரு அவனை பார்த்துட்டு சொல்லு'' என்றதும் ''சரி நீ உன் கிளாஸ்க்கு போ நானும் விசாரிக்கறேன்'' என கிளம்பினான்.

அடுத்த நாளில் ஸ்ரீராமே தனுவை அழைத்து வந்து காலேஜில் விட தன்யா இறங்கினாள்.

''இன்னும் எத்தனை டெஸ்ட்?'' என்று கேட்டபடி ராம் பேசினான்.

''ரெண்டு'' என தன்யா கூறினாள்.

''முடியற வரை நோ மெசேஜ் நோ கால் ஓகே'' என்றதும் தனு சரியென்றே தலை அசைக்க, ராம் கிளம்பினான்.

தூரத்தில் இருந்து அந்த இருவரும் கவனித்தனர்.

''பார்த்தியா இது அண்ணனா?''

''இல்லை டா இவன் இல்லை. இவன்.. ஸ்ரீராம்... ஆனா இவன் இப்படி... எனக்கு ஒரே குழப்பமா இருக்கு... ஆனா அந்த பொண்ணு கூட பேச ட்ரை பண்ணு. அஸ்வினுக்கு பதில் அடி கொடுக்கணும் கொடுத்தே ஆகணும்'' என சூளுரைக்க சரியென்றே கிளம்பினான்.

---

காலையிலே பவித்ராவுக்கு சோர்வு தாக்கிட... முடிந்த அளவு அஸ்வினுக்கு அதனை வெளிக்காட்டாமல் அவனுக்கு தேவையானதை எடுத்து வைத்தபடி இருந்தாள்.

கொஞ்சம் கருகும் வாடை வர அஸ்வின் திரும்பி பார்க்க பவித்ரா கையில் ஐயர்ன் பெட்டியினை அப்படியே வைத்து விட்டு தள்ளாடி கொண்டு இருப்பதை பார்த்தவன்.

''ஏய் பவி.'' என்றவாறு அவளை தாங்கியவன் பிடித்து அமர வைத்து ஐயர்ன்பாக்ஸ் சுவிட்சை ஆப் செய்தான்.

''என்னாச்சு மயக்கமா வருதா? சாப்பிட ஏதாவது எடுத்துக்கிட்டு வரவா இல்லை ஜூஸ்?'' என அவளின் நெற்றி வியர்வையை துடைத்தான்.

''அ...அச்சு வலிக்குது டா?'' என்றாள்.

''ஹாஸ்பிடல்...'' என்றதும் பவித்ரா தலையை அசைத்து 'ஆம்; என்று கூற நொடியில் டீஷிர்ட் ஒன்றை அணிந்து அவளை தூக்கி கொண்டு கீழே இறங்கினான்.

''அஸ்வின் என்ன பண்ற.?'' என்ற ஆகாஷ் கேள்விக்கு

''ஹாஸ்பிடலுக்கு போன் செய்.. டாக்டரிடம் ரெடியா இருக்க சொல்லு அம்மா பவித்ராவுக்கு வலிக்குதாம்'' என அஸ்வின் துடித்தான்

அடுத்த நொடி வீட்டில் எல்லோருமே கிளம்பினார்கள். ஆகாஷ்-சுவாதி அவளின் குழந்தைக்கு தேவையானதை சாப்பிட கொடுத்து பின்னரே அழைத்து வர சொல்லிட, மற்ற யாவரும் கிளம்பினார்கள்.

அஸ்வின் காரினை வேகம் கூட்டி சென்றான். அந்த நேரத்திலும் இடையில் பவித்ரா நிலையை கண்டு துவண்டான்.

அஸ்வின் போனை எடுத்து ''அப்பா ராமுக்கு கால் செய்து வர சொல்லிடுங்க.. அப்பறம் அத்தை மாமாவுக்கும் சொல்லுங்க'' என்றதும் அவர் அந்த பணியினை செய்தார்.

ஹாஸ்பிடல் வந்ததும் ராமும் அதே நேரத்தில் இருக்க, பவித்ராவை அழைத்து சென்று போனார்கள். அஸ்வின் அவளுடனே செல்ல முடியாமல் திகைத்து நின்றான். அந்த கதவினையே பார்த்தவன் அங்கிருந்த சேரில் அப்படியே அமர்ந்து தலை கவிழ்ந்தான். பவித்ரா சத்தம் அதிகம் வெளியே கேட்கவில்லை. இருந்து அஸ்வினின் உள்ளத்திற்கு தெரியும் அவளின் சிறு சப்தமும் அறிந்து அப்படியே எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தான்.

ராமிற்கு இப்பொழுது எந்த வித பேச்சும் அஸ்வினுக்கு காதில் கூட எட்டாது என்று அமைதியாக அவனின் கைகளை பற்றினான்.

ஒரு அரை மணி நேர போராட்டத்திற்கு மேலாக குழந்தை அழுகுரல் கேட்க, அதே சமயத்தில் பவித்ராவின் நிலை எண்ணி தன்னை கட்டுப்படுத்தி கொள்ளாது அவன் தானாக கண்கள் கலங்க செய்தான். குழந்தை குரல் கேட்டு நிமிர கண்களில் இருந்து இரு சொட்டு நீர் துளிகள் விழுந்தன.

அஸ்வின் முதல் முதலாக அழுகிறான். அவனுக்கு அழ கூட தெரியும் என்பதை ராம் அன்று தான் உணர்ந்தான்.

வெளியே வந்த டாக்டரிடம், ''நான் உள்ளே போய் பார்க்கலாமா?'' என்ற அஸ்வின் கேள்வியில் முதலில் தயங்கியவர் ''சரி டூ மினிட்ஸ் நீங்களே அப்பறம் வெளிய வந்துடனும்'' என்றதும் அடுத்த நொடி உள்ளே நுழைந்தான்.

அங்கே பவித்ரா அசதியில் இருக்க நெருங்கி வந்தான். அவளின் கைகளை பிடிக்க மெல்ல இமை திறந்த பவித்ரா... கைகளை அந்த பக்கம் ஸ்க்ரீன் இருக்கும் திசையில் காட்டி குழந்தை அங்கு உள்ளது என்று அசைவில் சொல்ல அஸ்வினோ தலையை இடம் வலமாக ஆட்டி அவளின் நெற்றியில் இதழ் பதித்தான். 'எனக்கு முதலில் நீ' என்ற உணர்வை அவளுக்கு கொடுத்தான். பவித்ரா மெல்ல புன்னகைக்க,

''குழந்தை செம.. அ..'' என்று செவிலியர்கள் பேச்சு அப்படியே நிற்க அஸ்வின் அவர்களை கண்டு ஆர்வமாக கையில் இருக்கும் குழந்தையை பார்க்க, ''சார் நாங்களே கூட்டிட்டு வருவோம் நீங்க வெளிய இருங்க... டாக்டர் மேடம் பார்த்தா எங்களை திட்டுவாங்க'' என்றதும்

''டோன்ட் ஓர்ரி டாக்டர் பெர்மிஸ்ஸின் கொடுத்தாங்க'' என்றான். நர்ஸ் அந்த குழந்தையை இருவருக்கும் காட்டி பார்க்க செய்திட, நிறைவுடன் பவித்ராவிடம் கண் அசைப்பில் விடை பெற்று வெளியேறினான். குழந்தையை ராதை வாங்கி கொஞ்ச அதன் பின்னர் விஸ்வநாதன் தனு ராம் எல்லோரும் சூழ்ந்தார்கள்.

''அஸ்வின் ஏஞ்சல் பிறந்து இருக்கா டா'' என்று ராம் பூரித்தான்.

''அம்மா... ரோஜா பூ மாதிரி இருக்கா'' என தன்யா கூறினாள்.

''டேய் சுவாதி கிளம்பும் பொழுது சொன்னா... அஸ்வின் லேபர் ரூமுக்கு போய் இருந்தாலும் ஆச்சரியம் இல்லை என்று நீ அப்படியே போயிருக்க''

''நான் சொன்னேன்ல...'' என்று சுவாதி ஆகாஷிடன் சொல்லிவிட்டு ''அஸ்வின் வாழ்த்துகள்டா...'' என்றதும்

ராதை விஸ்வநாதன் அப்படியே இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்து கொண்டார்கள்.

எல்லாவற்றுக்கும் ஒரு புன்னகை மட்டுமே உதிர்த்து கொண்டான் அஸ்வின்.

குழந்தையை கொஞ்ச நேரம் தூக்கி கொஞ்சி முடித்து இருக்க தனி அறைக்கு மாற்றப்பட்டார்கள். குழந்தையும் தாயும் உறங்க எல்லோரும் வெளியே இருந்தார்கள்.

''அஸ்வின் ஏன் டா அழுத... நீ அழுது நான் இதுவரை பார்த்ததே இல்லை... ஏன் கலங்கி நின்றது கூட நான் பார்த்தது இல்லை.. பிறகு ஏன் டா?'' என்று ராம் கேட்டான்.

''வார்த்தையால் மட்டும் விவரிக்க முடியாதுடா... லைப்ல வரும்பொழுது புரியும்'' என்று சொல்ல, ராமிற்கு எதுவானாலும் இன்று அஸ்வின் நிலை வேறு தான் என்பதை உணர்ந்தான்.

மாலையிலே பவித்ரா குடும்பத்தினர் எல்லோரும் வந்தார்கள். ஒருவர் மாற்றி ஒருவராக சென்று பார்த்தார்கள். பாட்டி-தாத்தா முதல் வருண் வரை சென்று பார்த்து மகிழ அன்றைய நாள் எப்படி ஓடியது என்றே அறியாமல் போனது. அடுத்த நாள் காலையில் சுவாதி குடும்பத்தார் வந்து பார்த்து செல்ல மாலையில் நிஷாந்தினி சித்திக் வந்து பார்த்தார்கள்.

நிஷாந்தினி கையில் சுவாதி குழந்தை கொடுத்து மடியில் வைத்திட, சித்திக் விகாஷினை தூக்கியபடி இருந்தனர்.

அஸ்வின் போனில் அலுவலகத்தில் சொல்லி லீவ் சொல்லிட, அடுத்து சித்திக்கை பார்த்ததும் அவனுக்கு விமான நண்பன் நகுலன் நினைவு வந்தது. அதனால் நகுலனிற்கு போன் செய்தான்.

''ஹாய் நகுலன்...''

''ஹாய் அஸ்வின் என்ன... எப்படி இருக்கீங்க?'' என்று உரையாடல் ஆரம்பமானது.

''பைன். நகுலன் எனக்கு பொண்ணு பிறந்திருக்கா நேற்று கால் பண்ணி இருந்தேன் லைன் கிடைக்கலை உங்களுக்கு''

''வாவ் குட் நியூஸ்... கங்கிராட்ஸ் அஸ்வின். சாரி அஸ்வின் கொஞ்சம் பிசி. ஓய்ப் எப்படி இருக்காங்க..'' என்றார் நகுலன்.

''யா குட். உங்க இளவரசன் எப்படி இருக்கார்'' என்றான் அஸ்வின்.

''கொஞ்ச நஞ்ச சேட்டை இல்லை... டெய்லி நைட் மணி 1 இல்லை 2 வரை தூங்க விடறதே இல்லை... பாவம் வொய்ஃப் மிருதுளா நீங்களும் கொஞ்ச நாளில் இதே தான் சொல்லுவீங்க பாருங்க'' என்றான் நகுலன்.

''அனுபவமா நகுல்'' என்று அஸ்வின் சிரித்தான்.

''எஸ்...''

''ஓகே நகுல் வேலை நேரத்துல கால் பண்ணிட்டேன்'' என்று முடித்தான்.

''ஏய் அஸ்வின் நீ எப்பவேண்டுமென்றாலும் கள் பண்ணலாம்'' என்றார் நகுலன்.

''ஓகே நகுல் நான் அப்பறம் கால் பண்றேன் பை''

''பை'' என வைத்தவன் ''நைஸ் மேன்'' என்று இருவருமே சொல்லி கொண்டார்கள்.

அஸ்வினுக்கு பொழுதுகள் போவதே தெரியவில்லை. அவனுக்கு உலகத்தை கையில் கொடுத்ததை போல இருந்தது. அவனின் இளவரசி கொஞ்சி கொண்டே இருப்பதே தனக்கு போதும். உணவு உறக்கம் என்று உண்டா என்று கேட்பது போல இருந்தான்.

-to be continue

பிரவீணா தங்கராஜ்
 
Top