கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விழிகளில் ஒரு வானவில் -19

Praveena Thangaraj

Moderator
Staff member
அத்தியாயம்-19

என்றுமில்லாத சோர்வு மற்றும் மயக்கம் தாக்க நிஷாந்தினி அப்படியே அமர்ந்தாள். நிஷாவை காணாமல் ஹால், கிட்சேன் என்று சித்திக் தேடி களைத்தான். அவளோ பாத்ரூமில் அப்படியே அமைதியாக அமர்ந்து இருப்பதை கண்டு பயந்தான்.

''நிஷா என்ன ஆச்சு?'' என்று தட்டி எழுப்ப நிஷா உணர்வற்று இருப்பதை கண்டான்.

அவளை தூக்கி கட்டிலில் படுக்க வைத்து முகத்தில் நீரை தெளித்தான். மெல்ல கண்களை திறந்து பேச முடியாமல் தவிக்க, சித்திக் அவளின் கையை பிடித்து பல்ஸ் பார்த்தான்.
முதலில் திகைத்தவன் அவளை மேலும் நெருங்கி அமர்ந்து அவளின் கேசத்தை ஒதுக்கி குழம்பினான்.

அவனை அவனே நிதானம் செய்து கொண்டு, வேகமாக எலுமிச்சை ஜூஸ் ஒன்றை எடுத்து வந்து கொடுத்தான்.

அவள் பருகி முடித்து கொஞ்சம் நிமிர்ந்து பேச துவங்கினாள்.

''என்னனு தெரிலை சித்திக் ஒரே சோர்வா இருக்கு. மயங்கிட்டேன்.'' என்று சொல்லியவளிடம் 'நீ ப்ரக்னென்டா' என்று கேட்க தயங்கினான்.

அப்படி இல்லை என்றால் நிஷா வாடுவாள் என்று ''எப்போ பீரியட் ஆச்சு?'' என்று மாற்றி கேட்டான்.

''ஹ்ம்ம் அது அது." என யோசித்தாள்.

இங்கே வரும் முன்னரே மாதவிடாய் வரவில்லை. அவளுக்கு ஏதோ புரிய துவங்கியது.

''சித்திக் அப்போ இது. இந்த மயக்கம்... எல்லாம்'' என நிறுத்தினாள்‌

''நாம எதுக்கும் ஒரு டெஸ்ட் எடுப்போம் நிஷா அதுக்கு பிறகு பேசுவோம்'' என மெடிக்கல் ஷாப் சென்று ப்ரக்னன்ட் கிட் வாங்கி வந்து கொடுத்தான்.

கொஞ்ச நேரத்திலே நிஷா கண்ணீரோடு சித்திக் முன் வந்து நின்றாள்.

''நிஷா எதுக்கு அழுவுற. விடு நமக்கு கண்டிப்பா குழந்தை பிறக்கும் அழாதே. நீ வீக்கா இருக்க போல நான் தான் பல்ஸ் பார்த்து தவறா. சரி விடு'' என தேற்றினான்.

நிஷாவோ மெல்ல மெல்ல புன்னகைத்து அவனின் கைகளை வயிற்றில் வைத்து ''இருக்கு இங்க ஒரு உயிர் வளருது. எனக்கு நாம இங்க வருகின்ற நாளுக்கு முன்னே கரு உருவாகியிருக்கு. நமக்குள் நடந்த மனஸ்தாபத்தில் நான் நாட்களை எண்ணி பார்க்கலை. இப்போ இது நான்கு மாச கருவாக இருக்கும்னு நினைக்கறேன்'' என்றதும் இம்முறை சித்திக் கண்ணீரை சிந்தினான்.

எவ்வளவு நேரமோ பின்னரே நினைவு வந்தவனாக சித்திக் ''நிஷா இனி நீ ஒரு வேலையும் செய்யக்கூடாது. நல்லா சாப்பிடணும் ஜூஸ் நிறைய குடிக்கணும் முடிஞ்ச அளவு பெட் ரெஸ்ட் எடு'' என்று அடுக்கினான்.

''சித்...''

''நிஷா... சொன்ன கேளு... இப்ப மட்டும் ஏதாவது என்றால் என்னால தாங்க முடியாது. புரியுதா'' என்றதற்கு நிஷா தலையை அசைத்தாள்.

சித்திக் ராமிற்கு போன் செய்தான். ராம் எடுக்க மறுத்திட நிஷா போனில் இருந்து மீண்டும் ராமிற்கு போன் செய்தான்.

''சொல்லு நிஷா'' என்றான் அசட்டையாக.

''ராம் நான் சித்திக்.. உங்க அக்கா.'' என்று சித்திக் ஆரம்பித்தான்.

''இங்க பாரு உங்கிட்ட பேச பிடிக்கலை. எதுவானாலும் நிஷாகிட்ட சொல்லு எனக்கு சொல்லிடுவா'' என்று கறாராக கூறினான் ராம்.

சித்திக்கோ ''நிஷா மயக்கம் போட்டுட்டா.. அவளுக்கு.'' என்று கூற வரும் முன் இடைப்புகுந்தான் ராம்.

''அவளுக்கு என்னாச்சு அவளை என்ன பண்ண?'' என்று கத்தினான்.

''ராம் சொல்றதை முதலில் கவனி. உங்க அக்கா கன்சீவ்வா இருக்கா இப்போ தான் உறுதி செய்தோம்'' என்றான் சித்திக்.

''என்ன? நிஷாகிட்ட கொடு'' என்று அக்காவிடம் பேச ஆசைக்கொண்டான் ராம்.

''அவள் இப்போ கொஞ்சம் சோர்வா இருக்கா... பேச முடியுமா நிஷா?'' என மனைவியிடம் கேட்க,

''அவனை வீட்டுக்கு வர சொல்லுங்க'' என்ற சோர்வான குரல் கேட்டது.

''கேட்டுச்சா...'' என்றான் சித்திக்.

''நான் வர்றேன்'' என்று போனை வைத்தான் ஸ்ரீராம்.

கொஞ்ச நேரத்தில் அஸ்வின் ராம் இருவருமே வந்தார்கள். முதலில் சித்திக் அஸ்வின் வந்து நிற்பதை கண்டு ஒதுக்கி போனான்.

''வாழ்த்துகள் நிஷா... இல்லை இல்லை நிஷா அண்ணி எப்படி இருக்க?'' என்றான் அஸ்வின்.

ஸ்ரீராமோ நிஷாந்தினியை பார்த்தவன் பேச்சே எழாமல் இருந்தான். அவளின் கையை பிடித்து கண்ணீரை சிந்தினான்.

''நீ இனி ஒரு வேலையும் செய்யாதே... ஒழுங்கா சாப்பிடு... எதுக்கோ இன்னிக்கே டாக்டர்கிட்ட காட்டு'' என்று ஆனந்தப்பட்டான்.

''டேய் நாங்க இரண்டு பேருமே டாக்டர் தான் டா'' என்ற நிஷா பேச்சில் சித்திக்கை முறைத்து, ''எனக்கு அதெல்லாம் தெரியாது. நீ எதுக்கோ ஒரு லேடி டாக்டர்கிட்ட போய் செக்அப் செய்துக்கோ டேப்லெட் அவங்க சொல்ற மாதிரி எடுத்துக்கோ. மற்றவங்க சொல்றதை கேட்காதே'' என்று முடிக்க நிஷாவுக்கு சித்திக்கை ராம் நம்ப மறுக்கிறான் என புரிந்தது.

''சரிடா சித்திக் கூட அதைப்பற்றி சொன்னார்'' என முடித்தாள். சித்திக் ராமிடம் ''உங்க அக்காவுக்கு நீயே ஒரு நல்ல லேடி டாக்டர் சொல்லு அங்க நானே கூப்பிட்டு போறேன்'' என்றான்.

ராமும் அஸ்வினும் பார்த்து கொண்டனர்.
ராம் நாளைக்கு சொல்றேன் என்றான். கிளம்பும் முன் ஆயிரம் அட்வைஸ் செய்தே கிளம்பினான்.

நிஷா சித்திக்கிடம் ''சாரி சித்திக். ராம் இன்னும் உங்க மேல கோவத்தில் இருக்கான்'' என்று கூறினாள்.

''பரவாயில்லை நீ என்னை மன்னிச்சுட்டு என்மேல கோவமில்லாம இருக்கயில்லை எனக்கு அது போதும். எப்படிப்பட்ட வலியை தந்தேன். இனி சத்தியமா எந்த தப்பும் செய்யமாட்டேன்'' என அணைத்தான்.

வழியில் ராமின் கோவத்தை கண்டு அஸ்வின் ''ராம் இனி நீ சித்திக்கிற்கு கொஞ்சம் மரியாதையை கொடுடா'' என்றான். ராம் அவனை முறைத்து பார்த்து ரோட்டில் கண் பதிக்க, அஸ்வின் தொடர்ந்தான்.

''சித்திக் உன் மரியாதையை இனி எதிர்பார்க்க மாட்டான் ஆனாலும் நிஷாக்காக சித்திக்கு நீ மரியாதை தரணும்'' என்றான்.

''முயற்சி செய்யறேன்'' என்றான் ராம்.

அஸ்வின் பவித்ராவிடம் இதை தெரிவித்தான்.

''இப்ப தான் ராம் போனில் பேசினான் அஸ்வின்'' என்றாள்.

''சொல்லிட்டானா? பவித்ரா... ஏஞ்சல் என்ன செய்யறா? ''

''ம்ம் சமைக்கறா?''

''ஒய்.'' என்றான் கிண்டலாக.

''பின்ன என்னடா? பிறந்த குழந்தை என்ன செய்யும் நல்லா தூங்கறா'' நடுவில் நடுவில் அழுவுறா... எப்ப பாரு சுச்சா கக்கா போறா ''

''அப்போ அவள் தூங்கும் பொழுது எனக்கு மெசேஜ் பண்ணலை நீ.

நீ வர வர எனக்கு போன் கூட பண்ண மாற்ற. இங்க உன்னையே நினைச்சிட்டு ஒருத்தன் இருக்கான் என்ற நினைப்பே இல்லை'' என்றான் காதல் சண்டையிடம் விதமாக.

''டேய் உன் ஏஞ்சல் தான் எப்பவும் சிணுங்கற... நான் போன் எடுக்கறது எப்படி தான் உன் மகளுக்கு தெரியுமோ.. உடனே வீல்ல்லு அழுதுடறா.. அப்பறம் அவளை அழ விட்டு உன்கூட பேச முடியுமா?'' என்ற பொழுது வருண் அவ்வறைக்கு வந்து கம்ப்யூட்டரில் ஆன் செய்தான்.

''சரி என்ன பெயர் வைக்க சொல்லு....''

''இருக்கற நேரத்தில் எனக்கு யோசிக்க முடியலை அச்சு நீயே சொல்லு நான் தேர்வு செய்யறேன்''

''ஓகே நாளைக்கு யோசிக்கிறேன் லவ் யூ'' என்றான்.

''ஹ்ம்'' என்றாள் பவித்ரா

''என்ன ஹ்ம் எனக்கு நீ சொல்லவே இல்லை தரவும் இல்லை'' என்றான் முத்தம் சத்தம் பெறாத கவலையில்.

''மெசேஜ் பண்றேன்'' என்றாள் பவித்ரா.

''பக்கத்துல யாராவது இருக்காங்களா'' என்று யூகித்தவனாய் கேட்டான்.

''ஹ்ம்''

''சரி பை'' என வைத்தான். என்ன பெயர் வைக்க?' எனயோசித்தான். போனில் ஸ்ரீராமிடம் கேட்க அவனோ கிண்டலாக ''ருத்ரா சுமித்ரா மித்ரா நேத்ரா.'' என்று சொல்லி கொண்டே போனான்.

''டேய் டேய் நிறுத்து எதுக்கு இப்படி பவித்ரா பேர்ல் ரைமிங்கா வருவதை எல்லாம் சொல்ற?" என்று அஸ்வின் கேட்டான்.‌

''இல்லை டா ஆகாஷ் பையனுக்கு விகாஷ் மாதிரி, பவித்ரா பொண்ணுக்கு இப்படி வைப்பிங்களோனு நினைச்சு ரைமிங்கா சொன்னேன்'' என சிரித்தான்.

''இரு இரு ஆகாஷ்-சுவாதிகிட்ட சொல்றேன். இப்படியா கிண்டல் பண்ணுவ.''‌ என்றான்.

''டேய் அஸ்வின், ஏதோ இப்ப தான் என்கிட்ட ஆகாஷ்-சுவாதி நல்லா பேசி பழகறாங்க. ஏன்டா உனக்கு இந்த வில்லத்தனம்... பெரிய மச்சான் என் காதலுக்கு வில்லனா கிளம்பவா?'' என பேசி கொண்டு நேரத்தை போக்கினார்கள். இடையில் தனு கால் செய்ய,

''அஸ்வின் செகண்ட் கால் வருதுடா. நான் அப்பறம் பேசட்டுமா?'' என்றதும் அஸ்வின் யார் என்ன என்று கேளாது 'ஓகே' என வைத்து விட்டான்.

போனில் தன்யாவிடம் நிஷாவின் தாய்மை செய்தியை சொல்லி மகிழ்ச்சியை பகிர்ந்தான் ராம்.

அடுத்த நாள் சந்திக்க நேரத்தை கூறி துண்டித்தாள்.

அடுத்த நாளும் விடிந்திட, ராமை காண வந்தாள்.

ஒரு வழியாக தனு மெல்ல மெல்ல தயங்கி ராமிடம் அந்த பரிசை கொடுத்தாள்.

''ஏய் என்ன பரிசு இது?'' என புருவம் உயர்த்தி கேட்டான்.

''பிரிச்சு பாருங்க...''

வேகமாக அதே சமயத்தில் கவர் கொஞ்சம் கூட கசங்காமல் பிரித்தவனின் பார்வையில் ஒரு சிறிய பெட்டி தென்பட்டது. அதில் வெள்ளி பிரேஸ்லட் கண்டான்.

''வாவ் செமயா இருக்கு தன்யா'' என்று அணிந்திட ஆர்வமானான்.

''பொய் சொல்லாதிங்க உங்க ரேஞ்சுக்கு இது ரொம்ப கம்மி. ஆனா என் சேவிங்ஸ்ல என்ன வாங்க என்று யோசிச்சு இதை வாங்கினேன்'' என கொஞ்சம் வருத்தத்துடன் சொன்னாள்.

''பரிசு எவ்ளோ பணம் கொடுத்து வாங்கி இருக்கோம் என்று பார்த்து வருவது இல்லை தன்யா. அது என்ன அர்த்தம் கொண்டு வாங்கி யார் கொடுக்கறாங்க என்றதுல இருக்கு. எனக்கு நீ கொடுப்பதே ஹாப்பி தெரியுமா? சரி ஏன் இவ்ளோ நாள் லேட்?'' என அந்த பிரேஸ்லெட்டை வருடினான்.

''முதலில் என்ன வாங்க என்று முழிச்சேன். எனக்கு ஒன்னும் தோணலை... அப்பறம் அஸ்வின் அண்ணா ஆகாஷ் அண்ணாவுக்கு தங்க பிரேஸ்லெட் வாங்கியதை யோசிச்சேன் அதான் அட்லீஸ்ட் உங்களுக்கு நான் என் சேவிங்க்ஸ்ல வெள்ளியில் வாங்கலாம் என்று யோசிச்சேன்'' என்று முடிக்க ராமிற்கு அந்த பிரெஸ்லட் பார்த்தவன் தன்யாவை பார்த்து ''நீயே போட்டு விடு'' என்றான்.

கையில் இருந்த புத்தகத்தினை காரின் சீட்டில் வைத்துவிட்டு அவனுக்கு அணிவித்தாள். அவள் போட்டுவிடும் பொழுது ராமிற்கு அஸ்வின் வேலைக்கு சென்று பின்னர் வந்த தனது பிறந்த நாளுக்கு அஸ்வின் பிரேஸ்லட் வாங்கி அணிவித்தது நினைவு வந்தது.

''இது என்ன ரிங் புதுசா இருக்கு?'' என்றாள் தன்யா. ஸ்ரீராம் சிரித்துக் கொண்டே,

''என் பிரென்ட் அஸ்வின் கொடுத்தது'' என்றே சொல்ல தன்யா ஒழுங்கு காட்டி கொண்டாள்.

ராமிற்கு சிரிப்பு மட்டுமே வந்தது. இந்த ரிங் தன்யா புகைப்படத்தின் அருகே வைத்துவிட்டு கண்டுபிடி என அஸ்வின் சென்ற நாளும் அதன் பின் ஹாலில் எல்லா இடத்தில தேடி களைத்து தனு புகைப்படத்தை எடுக்க அதன் பின்னாடி இந்த ரிங் இருந்ததை எண்ணி இன்றும் புன்னகைத்துக் கொண்டான்.

நேரம் போக கல்லூரி வர இறங்கி கொண்டாள். ராமிடம் பை கூறி அவன் புறப்பட்டான்.

கொஞ்ச நாளாக தனது சீனியர் ஒருவனின் பேச்சில் அவனை தவிர்க்க நினைத்து தனு வேகமாக நகர்ந்தாள். அவனின் பேச்சை ராம் கேட்க நேர்ந்தால் பிரச்சனை வந்துவிடும் என நினைத்தாள்.

''ஹாய் என்ன தனு சீனியரை பார்த்தும் பார்க்காம போற?'' என்ற குரலில் எரிச்சலாகி,

''சீனியர் என்றால் டெய்லி விஷ் பண்ணனுமா? அதுவும் இல்லாம நான் செகண்ட் இயர் ஸ்டுடென்ட். இப்ப நானும் சீனியர் தான்'' என கடுகடுக்க பேசினாள்.

''ஓகே ஓகே நீயும் சீனியர் தான். ஆமா அது யாரு? உன்னை டெய்லி ட்ராப் பண்றவன்'' என்று கேட்டான்.

''இங்க பாரு அவன் இவன் என்று பேசின... பல்லை உடைச்சுடுவேன். எனக்கு தான் நீ பேச வருவதே பிடிக்கலை என்று சொல்லிட்டேனே. பின்ன எதுக்கு திரும்ப திரும்ப வந்து பேசி இம்ஸை பண்ற'' என்றாள் தன்யா.

''நீ யாருனு சொல்லலை என்றால் அவன் என்று தான் சொல்வேன். யாரு அவன்?'' என திரும்ப கேட்க தனு பல்லை கடித்தாள்.

''அதை நான் சொல்றேன் டா'' என்ற ராமின் குரலை கேட்டு திரும்பினாள் தன்யா.

''புக்கை கார் சீட்டிலே வச்சிட்டு வந்துட்ட'' என்று புத்தகத்தை அவளிடம் கொடுக்க அவனின் கண்கள் கொஞ்சம் சினத்தோடு இருப்பதை அறிந்து தனு மெல்ல பயந்தே வாங்கினாள்.

''ஹலோ என்னடா போட்டு எல்லாம் பேசறிங்க.. இது காலேஜ் இங்க சக மாணவமாணவியர்கள் பேசிக்கொள்வது சகஜம். தனு என் பிரென்ட், ஏன் என் லவ்வர் கூட'' என்றதும் ராமின் கைகள் அவனின் முகத்திற்கு வந்து சென்றன.

அடுத்த நொடி தன்யாவோ ''அய்யோ என்ன பண்றிங்க நீங்க.? இது காலேஜ்... அவன் ப்ரெண்ட்ஸ் வந்துடுவாங்க... என்றதும் ''வர சொல்லு அவனுங்களும் வாங்கி கட்டிக்கட்டும்'' என சொல்ல அவனின் குரலில் வித்தியாசத்தை உணர்ந்து, மிரண்டு அப்படியே நின்றாள்.

ராம் போனில் யாருடனோ தீவிரமாக பேசினான். ''சே சே காலேஜ் குள்ள அந்த வண்டி வர வேண்டாம் நானே அவனை கூட்டிட்டு வர்றேன்'' என வைத்துவிட்டு அவனை பார்த்து ''ஏறு'' என்றான்.

எச்சினை விழுங்க கூட சக்தி இல்லாமல் நாவறண்ட தன்யாவும் ஏறினாள். கூடவே அவனும். நேராக ஒரு போலீஸ் ஸ்டேஷன் அருகே நின்றது.

அங்கிருந்து போலீஸ் உடை அணிந்து வந்த கார்த்திக்,

''என்னடா அப்படியே வா கூட்டிட்டு வருவ? முதலில் கையை கழுவு பாரு ரத்தமா இருக்கு'' என்றதும் அங்கிருந்த குழாயில் கழுவினான்.

தனது கைகளை மடக்கி நீரை உதற, அஸ்வின் வந்து சேர்ந்தான். தன்யாவிற்கு இதயக்கூடு வெளியே விழுந்துவிடும் அளவு அதிர்ச்சி. 'போச்சு அஸ்வின் அண்ணா என்னை ராமோடும் சேர்த்து பார்த்தால் அவளோ தான்' என்றெண்ணி முடிக்க, அதற்குள் அஸ்வின் அடிவாங்கிய பையனின் முன் நின்றான்.

''ஐயோ அடிக்காதிங்க என் அண்ணன் சொல்லி தான் இப்படி செய்தேன். எனக்கு உங்க தங்கச்சி மேல வேற எந்தவித எண்ணமும் இல்லை'' என முடிக்க ராமும் அஸ்வினும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

''யாருடா உங்க அண்ணன்? என்றான் அஸ்வின்.

''அது அது உங்க காலேஜ்ல முன்னாடி இருந்த காலேஜ் சேர்மன் பிரதாப்'' என்றதும் அஸ்வின் "பிரதாப்புக்கு போனை போட்டு வர சொல்லு" என சொல்ல அவனும் செய்தான். கால் மணி நேரத்தில் வந்து சேர்ந்தவன் அஸ்வின் ராமை கண்டும் தனது தம்பி நிலையும் கண்டான்.

''அஸ்வின் உனக்கு எப்ப பாரு யாரையாவது அடிக்கற வேலை... இப்ப என் தம்பியை அடிச்சிருக்க? என்ன நினைச்சுகிட்டு இருக்க?'' என்றதும் அவனை கார்த்திக் முன் அடித்து துவைத்தான்.

''அஸ்வின் கூல்... என்கிட்ட சொல்லிட்டு நீயே அடிச்சா என்ன அர்த்தம்''

''கார்த்திக் உனக்கு தெரியாது. காலேஜ்ல இவன் சேர்மன் என்பதால் இவன் அப்பா எதுக்கோ காலேஜ் மூட சொன்னப்ப பிரின்சிபால் எக்ஸாம் வைச்சிகிட்டு எப்படி லீவு விட என்றதற்கு மிரட்டினான். அப்போ என் கிளாஸ் மாணவர்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து சேர்மன் என்று கூட பார்க்காம திட்டினோம். அதுல இவன் சொல்றதையே காதுல வங்கலை. அதனால ஒரு அரை விட்டேன். அதை அப்படியே நினைவு வச்சிக்கிட்டு என் தங்கைகிட்டா வாலாட்ட வந்து இருக்காங்க'' என்று துள்ளினான்.

''எல்லாம் எழுதி காம்ப்ளண்ட் கொடுத்தாச்சே நான் கவனிக்கிறேன் டா'' என்று கார்த்திக் தடுத்தான்.

''இல்லை டா இவனுங்களுக்கு என் கவனிப்பு தேவை. அப்போ தான் என் பேச்சுக்கு திரும்ப வரமாட்டாங்க'' என அஸ்வின் சொல்ல ராமோ ''டேய் ரொம்ப நேரமா தன்யா இங்க இருக்க வேண்டாம்... கார்த்திக் பார்த்துப்பார்.... நீ கிளம்பு உன்னை யாரு இங்க வர சொன்னது'' என்று நண்பனிடம் பாய்ந்தான்.

''சாரி ராம் அஸ்வின் தங்கை என்று நீ சொன்னதும் நான் தான் அவனுக்கு கால் செய்து சொல்லிட்டேன்'' என் கார்த்திக் சொன்னார்.

''அவனை பற்றி தெரிஞ்சும் கால் பண்ணி இருக்கிங்க கார்த்திக். ஓகே அஸ்வின் கிளம்பு''

''திஸ் இஸ் லாஸ்ட் திரும்ப என் விஷயத்துல வந்த மவனே '' என்றதும் பிரதாப் மற்றும் அவனின் தம்பி இருவரும் ஒன்றாக அமைதி காத்தனர்.

தன்யாவை காலேஜ் சென்று இறக்கி விட்டு, ''நிஷா வீட்டுக்கு வா உங்கிட்ட ஈவினிங் பேசணும்'' என்றான் ராம்.

தனுவிற்கு முதல் வகுப்பு போனதும் அதற்கு அவளின் வகுப்பு ஆசிரியர் திட்டி தீர்தததும் கூட கவலையாக தோன்றவில்லை. அஸ்வின் அண்ணா என்ன நினைப்பர். வீட்டுக்கு சென்றால் என்ன கேட்பார் என்ற உதறல் வந்தது.

ராம் வேறு முகத்தை உற்றென்
று வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
அவருக்கு என்ன சொல்வது. அவர் எதுக்கு என் மேல கோவமா இருக்கார்... போச்சு இன்னிக்கு என் லவ் எல்லோருக்கும் தெரிஞ்சுடும்... என்ன நடக்குமோ? என்றே கவலையோடு மாலை வரை ஓட்டினாள்.

பிரவீணா தங்கராஜ்
 
Top