கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விழிகளில் ஒரு வானவில் -2

Praveena Thangaraj

Moderator
Staff member
அத்தியாயம்-2

தனது இருக்கையில் சாய்ந்து அமர்ந்து விமானம் கிளம்பிய நொடிக்கு பிறகு மெல்ல இமை திறந்தான் ஶ்ரீராம்.

'எங்க விட்டேன் ஆஹ், அடுத்த நாள் திரும்ப அஸ்வின்-பவித்ரா வந்தாங்க அஸ்வின் தான் அமைதியா வந்து சோபாவில் உட்கார்ந்துட்டான். பவித்ரா தான் பேசினா.

''சொல்லு டா என்ன விஷயம்?''-பவித்ரா

''என்ன சொல்லணும்?''-ராம்

''நேற்று மாதிரி ஆரம்பிக்காதே''-பவி

''ஏன் புருஷனும் பொண்டாட்டியும் காலையிலே வந்து கேள்வி கேட்கறீங்க?'' என்று திரும்பிக் கொண்டேன்

''ராம்... என் முகத்தை பார்த்து பேசு'' என்று தோழி பவித்ரா முகத்தை அவள் பக்கம் திரும்பினாள்.

''நீ உன் பிரென்ட்கிட்ட கேட்டு இருக்கலாமே'' என்று ராம் சலித்தான்.

''அவளை விட நான் உரிமையா கேட்கற இடம் நீ தான். நீ தான் முதலில் சொல்லணும் அதுக்கு பிறகு நான் அவளிடம் கேட்டுக்கறேன்'' என்றாள் பவித்ரா.

எனக்கு அப்போ தான் புரிஞ்சுது பவித்ரா ரம்யாகிட்ட பேசலை என்று, நான் ஒரு மடையன் அவளா ரம்யாகிட்ட பேசி உண்மை தெரிஞ்சு இருக்கும் என்று விட்டுவிட்டேன். நானாவது ரம்யாகிட்ட சொல்லி சொல்லிடடுட்டுமா என்று ஒரு வார்த்தை கேட்டு இருக்கணும். ஓகே இது ஒன்னும் பரம ரகசியம் இல்லை நானே சொல்ல தானே இருந்தேன் இந்த அஸ்வின் தான் நேற்றே சொல்ல விடலை.

''இப்போ சொல்ல போறியா இல்லையா?'' என்று என் அமைதியில் பவித்ரா காளிதேவி ஆனாள்.

''ஹலோ மிஸ்ஸஸ் அஸ்வின் நான் நேற்றே சொல்ல தான் வந்தேன் நீங்க ரெண்டு பேரும் தான் கிளம்பிடீங்க''

''டேய் இப்போ சொல்லு'' என்று அழும் நிலைக்கு சென்றாள்.

''ரம்யா காதலிக்கறா... நீங்க நினைக்கற மாதிரி என்னை இல்லை. அவளோட மாமா பையனை'' என்று போட்டு உடைத்தேன்.

''அவள் அப்போ உனக்கு எதுக்கு போன் செய்யணும்? எங்க கல்யாணம் முடிஞ்ச அன்றும் அவளிடம் தனியா பேசின''

''கடவுளே... பதில் சொல்றேன். டேய் அஸ்வின் உன் முகம் ஏன் டா இப்படி இருக்கு சகிக்கலை. என்ன ஆச்சு?'' என்று கேட்டேன்.‌ எனக்கு என் பிரெண்ட் முகமே கடுகடுனு‌ இருக்க பிடிக்கலை.

''டேய் என்னை கோவபடுத்தாதே... அவள் என்னை சைட் அடிச்சுட்டு உன்னை எப்படி. காதலிக்கறா? எனக்கு பிடிக்கலே.'' என்றான் அஸ்வின்.

''அடப்பாவி அதான் ரிசன்னா?'' என்று விழுந்து விழுந்து சிரித்தேன்.

''ராம்...''

''ஓகே ஓகே கூல் சொல்லிடறேன். எங்க அக்கவுண்டர் ரகு அங்கிள் உங்க கல்யாணத்துக்கு வந்தார் தெரியுமா? அங்க வைத்து ரம்யா அவரை பார்த்து இருப்பா போல ரகு அங்கிள் கொஞ்சம் சீக்கரம் கிளம்பிட்டார். ரம்யா அதன் பிறகு என்னிடம் பேச வந்தா... அவரோட பெரிய பையன் பெங்களூர் போய் செட்டில் ஆகறதால சின்ன பையனுக்கு கல்யாணம் பண்ண இருப்பார் போல, அந்த ரோஷன் என் ஆபிஸ்ல ரகு சார் பொசிஷனுக்கு அப்பளை பண்ணி இருக்கான். அது அவருக்கே தெரியாது நானா அவனை செலக்ட் பண்ணி ஜாப் கொடுத்ததும் வீட்ல சொல்லிட்டு ரம்யாவை மேரேஜ் பண்றதையும் சொல்லலாம் என்று இருந்தான் போல. ரம்யா ரகு அங்கிள் என்னோட ஆபிஸ்ல வேலை செய்யறது தெரிஞ்சு அவளா வந்து என்னிடம் விஷயம் சொல்லி அவனோட நேம் செலக்ட்டா? அன்செலக்ட்டா? என்று தெரிஞ்சுக்க இருந்தா. நான் மூணு பேரை தேர்ந்து எடுத்து இருக்கேன் நேம் ஞாபகம் இல்லை என்றேன். அவளும் அப்பறம் பார்த்து சொல்ல சொல்லி கிளம்பிட்டா.

அதன் பிறகு மூன்று நேம் பார்த்து மீண்டும் சரி பார்த்தேன் ரகு அங்கிள் பையன் அதில் ஒருத்தனா இருந்தான். ரம்யா அதன் பிறகு இப்போ ரெண்டு வாரமா கல்யாணம் பற்றி வீட்ல பேசறாங்க. நீங்க சொல்லிட்டிங்கனா அவர் எங்க வீட்ல பேச சொல்லி மற்ற கல்யாண வரனை தடை செய்துடலாம் என்று நேற்று கேட்டா. அதுக்குள்ள நீங்க ரெண்டு பேரும் என்ன என்னவோ முடிவு செய்துட்டிங்க'' என்று முடித்தேன்.

''சாரி ராம். அவள் என்னை எப்பவும் சும்மா தான் சைட் அடிப்பா... ஜஸ்ட் வேடிக்கைக்கு தான் எனக்கு அதுவும் புரிந்தது. நீ விரும்பறியோ என்றதும் அவளை தங்கையா பார்க்க முடியலை... எனக்குள்ள எரிச்சல் தான் ஏன் அவள் என்னிடம் அப்படி சும்மா விளையாடாம இருந்து இருக்கலாம் என்ற கடுப்பு''

''டேய் அஸ்வின் பவித்ரா பிரெண்ட்ல சஞ்சு எப்படி உனக்கு தங்கையோ எனக்கு ரம்யா தங்கை போதுமா டா'' அப்படி சொன்னதும் தெளிவானான்.

''ரம்யா ரொம்ப நல்ல பொண்ணு டா. பட் கிண்டல் குறும்பு ஜாஸ்தி. சரி ரகு அங்கிள் பையன் எப்படி?''

''குட் தான். இருந்தாலும் அஸ்வின் நீ தடுமாறிட்டா ஏன் டா?'' என்று தோளை இடிக்க,

''இல்லை டா நீ ஒரு வேளை ரம்யாவை விரும்பி இருந்து அவள் எப்பொழுதும் போல என்னை கிண்டல் பண்ண போக அப்போ நமக்குள்ள பிரச்சனை வந்திடுமோ என்று நினைச்சேன் பயம் வந்திடுச்சு. எனக்கு உன் நட்பு எப்பவும் இதே மாதிரி வேண்டும். யாராலையும் அது உடையக்கூடாது'' என்றதும் அஸ்வின் மனநிலை புரிந்தது.

''ஏன் டா அதுக்கு பவித்ராவை கை ஒங்கிட்ட?'' என்று வேதனைப்பட்டேன்.

''அதுக்கு தான் மாஞ்சு மாஞ்சு அவளிடம் மன்னிப்பு கேட்டுட்டேன். நீ வேற ஏன் டா திரும்ப நியாபகம் படுத்தற'' என்றதும் நான் சிரிக்க, அஸ்வின் ''சிரிக்காதே டா என் நிலைமை... லவ் பண்ணும் பொழுது வர்ற சண்டை ஜாலியா இருக்கு. அதே கல்யாணம் முடிஞ்சு வர்ற சண்டை இருக்கே அது மட்டும் சட்டுனு முடிவுக்கு வர்ற மாட்டுது''

''முதல் சண்டைக்கே இப்படியா?'' என்ற ராமின் பார்வை அஸ்வின் பவித்ரா இருவரையும் தொட, பவித்ரா புன்னகையில் அந்த சண்டை நேற்றே முடிவுக்கு வந்தது போல தோன்றியது.

அஸ்வின் கோவப்பட்ட நிகழ்வு இப்போ நடந்த மாதிரி இருக்கு ஆனா அதைவிட பெரிய நிகழ்வா அவள் எனக்கு தந்துட்டா.

எப்படியோ அதுக்கு பிறகு நான் அஸ்வின்-பவித்ரா பிறகு ரம்யா, ரம்யா உட்பி ரோஷன் எல்லோரும் ஒரு காபி ஷாப்பில் மீட் பண்ணோம்.

''ராம் ரோஷனுக்கு நீங்க யாருனு தெரியாது உங்க ஆபிஸ்ல தான் ஜாப் அப்பளை பண்ணிருக்கறாருனும் தெரியாது. அவரை பொறுத்தவரை நீங்க எல்லோரும் பவித்ரா பிரெண்ட் மட்டும் தான்." ரம்யா சொன்னா.

''வாவ் ரம்யா. இன்னிக்கே அவரை இன்டெர்வியூ பண்ணிட வேண்டியது தான்'' என்றான் ராம்

''ராம்.. எதுனாலும் என்னிடம் தனியா சொல்லுங்க அவருக்கு வருத்தம் தந்திடாதிங்க ப்ளீஸ்'' என்றாள் ரம்யா.

''மேடம் நான் இங்க ஒருத்தி இருக்கேன்'' பவித்ரா கோவப்பட்டாள்.

''சாரி பவி உங்கிட்ட முதலிலே சொல்லி இருப்பேன். காலேஜ்ல அப்பறம் கிண்டல் பண்ணுவிங்க என்று தான் சொல்லலை. எப்படியும் கல்யாணத்துக்கு தேதி குறிச்சுட்டு உங்கிட்ட தான் முதலில் சொல்லணும் இருந்தேன்''

''ஏன் கல்யாணம் முடிஞ்ச பிறகு சொல்லி இருக்கலாம் இல்லை'' என்று பவித்ரா கிண்டல் புரிந்தாள்.

''பவித்ரா அவர் வருகின்ற நேரம் கோவப்படாத ப்ளீஸ்... ஹலோ ஹண்ட்சம் கொஞ்சம் பவிகிட்ட எனக்காக சொல்லலாம் இல்லை அப்படியே பொண்டாட்டியை பேச விட்டு அமைதியா இருக்கிங்க'' என்று அஸ்வினை வம்பிழுத்தாள் ரம்யா.

''ஏய் முதலில் இந்த ஹாண்ட்சம் சொல்றதை விடு'' என்றான் அஸ்வின் கோவத்தோடு.

இம்முறை ராம் பவித்ரா சிரித்திட, ரம்யா குழம்பி திரு திருவென முழிக்க, அதே நேரம் ரோஷன் வந்து நின்றான்.

''ஹாய் ரம்யா லேட்டா... சாரி என்ன முழிக்கற'' என்றான் ரோஷன்.

''அது.... அது ஒன்னுமில்லை என்று அஸ்வினை பார்த்து முறைத்தவள்,

''என்ன சொல்லறார் உன் ஹாண்ட்சம்...'' என்றே ரோஷன் கேட்க, இந்த முறை ரம்யா தவிர எல்லோரும் முகத்தில் வியப்பு.

''அப்படி ஹாண்ட்ஸம்னு கூப்பிட கூடாதாம் ரோஷன். சாருக்கு கல்யாணம் ஆகிடுச்சு இல்லை அதனால இருக்கும்'' என்றதும் வெயிட்டர் வர எல்லோருக்கும் காபி ஆர்டர் செய்துவிட்டு நிமிர்ந்தார்கள்.

''அஸ்வின் சாரி அவள் இப்படி தான் விளையாடுவா. நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதிங்க... பவித்ரா உங்க கல்யாணத்துக்கு வர முடியலை சாரி எனக்கு இன்டெர்வியூ இருந்துச்சு'' என்றான்‌ இலகுவாய்.

''இட்ஸ் ஓகே''

''இவங்க அஸ்வின் பவித்ரா தெரியுது. இவர்...?'' என்றே ராமை கேட்டான்.

''சாரி ரோஷன் இந்த ஹாண்ட்சம் பேசியதில் மறந்துட்டேன். ஹி இஸ் ராம். பவித்ரா பிரெண்ட் அண்ட் ஹாண்ட்சம் பிரெண்ட் ஆல்சோ''

''ஓஹ் நைஸ்...'' என்று எல்லோரிடமும் கைகுலுக்க, பொதுவான பேச்சில் கழிந்தன.

கடைசியாக விடை பெறும் நேரம் ரம்யாவிடம் "மண்டேல இருந்து ஜாப் வரவேண்டும் சோ இந்த நாட்களில் ஊர் சுற்றிக்கொள்ளுங்க ரம்யா. ஆபிஸ் போனதும் லெட்டர் அனுப்புறேன். வீட்ல போய் சொல்லிடு. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்'' என்று சொல்லிட்டேன்.

எல்லாம் சுமூகமாக போச்சு. அவ தான் அவளால தான்." என்றவன் முகம் காதலில் தவித்தது
.

-tobe continue
Praveena Thangaraj
 
Top