கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விழிகளில் ஒரு வானவில் -22

Praveena Thangaraj

Moderator
Staff member
அத்தியாயம்-22

இரண்டு நாட்களாய் ஆகாஷ் தன்னோடு ஏதோ பேச வந்து திரும்புவது நன்றாகவே புரிந்தது அஸ்வினுக்கு அவனாக கேட்கவில்லை. அதே போல தந்தை விஸ்வநாதனும் தன்னிடம் ஏதோ கூற வந்து பார்வையை திரும்புவதாக பட குழம்பி போனான். வீட்டில் ஏதோ பிரச்னையா? அப்படி என்றால் அது என்னவாக இருக்கும் என அஸ்வின் யோசித்தான்.

ஒன்றும் புரியவில்லை... சரி எப்படியும் தனக்கு தெரியவராமல் இருக்காது என்று அதனை விடுத்தான். சுவாதி தான் ஆகாஷிடம் ''என்னங்க சொல்லிட்டீங்களா?'' என்றாள்.

''எப்படி சொல்றது சுவாதி?''

''சொல்லாமலே இருக்க முடியாதே... தனு உங்க தங்கை தானே உங்களுக்கு சொல்ல எல்லா உரிமையும் இருக்கு. முதலில் அத்தை மாமாகிட்ட சொல்லுங்க...'' என்றாள்.

'நான் அஸ்வின்கிட்ட சொல்லட்டா அவனே அப்பா அம்மாவுக்கு ஈஸியா சொல்லிடுவான்'' என்றான்.

''ஏங்க ஒன்று கூட உங்களுக்கு சொல்ல தெரியாதா?'' சுவாதி சற்று கோவமானாள்.

''அதுக்கு இல்லை நான் சொல்லி மறுத்துட்டா ஆனா அஸ்வின் சொன்னா கண்டிப்பா மறுக்க முடியாத மாதிரி பேசிடுவான். ஜக ஜாலா கேடி''

''ஏன் உங்களுக்கு அப்படி எடுத்து பேசி புரிய வைக்க தெரியாதா? எங்க அப்பா உங்ககிட்ட தானே கேட்டாங்க'' என்று எரிந்து விழுந்தாள்.

''போ சுவாதி... தனுவுக்கு பிடிக்கலை என்றால் அப்பறம் எனக்கு கஷ்டமா இருக்கும்''

''அவளுக்கும் பிடிக்கும் ஆகாஷ்''

''அப்படினு சொல்ற அப்போ பேசலாமா?''

''ஐயோ ஐயோ இத தானே பல முறை சொல்றேன்'' என அவனின் கையை பிடித்து ஹாலிற்கு அழைத்து வந்தாள்.

''மாமா இவர் ஏதோ பேசணுமாம்'' என சுவாதி எடுத்துக்கொடுத்து நகர, அவளை பார்த்துக் கொண்டே ''அப்பா மாமாவோட தம்பி... பையன் B.E முடிச்சு இருக்கான். அவனுக்கு பொண்ணு பார்க்கறாங்க..''

''அப்படியா? யாரு அந்த விக்ரம்மா..?''

''ஆமாப்பா ஆமாம் அவரே தான். அன்னிக்கு விகாஷ் பிறந்த நாளுக்கு தன்யாவை பார்த்து விட்டு மாமாவோட தம்பி மாமாகிட்ட பொண்ணு கேட்டாராம்....'' விஸ்வநாதன் இம்முறை அஸ்வினை பார்க்க அவனோ எனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்பது போல கேட்டுக்கொண்டு இருந்தான்.

''மேல சொல்லு'' என்றார் விஸ்வநாதன். ''அதான் அப்பா தன்யா...''

''அவ தான் இன்னும் படிப்பு முடிக்கலையே'' என்றார் தந்தையாக.

''சொன்னேன்ப்பா அவங்க சும்மா பொண்ணு பார்த்துவிட்டு என்கேஜ்மென்ட் மட்டும் வச்சிக்கலாம் என்று சொல்றாங்க'' விஸ்வநாதன் ராதையை பார்க்க ராதை முகம் பூவாக மலர்ந்தது.

''எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இருக்க கூடாதுடா யோசிக்கிறேன்'' என நகர்ந்தார்.

சுவாதியிடம் ராதை விக்ரம் பற்றி மேலும் விவரம் கேட்டு பேசிக்கொண்டு இருப்பது அஸ்வின் காதுகளில் நன்றாகவே விழுந்தது. ஆகாஷுக்கும் விஸ்வநாதனுக்கு அஸ்வின் எதுவும் பேசாமல் இருப்பது அவனின் பதில் அறியாமல் இருந்தார்கள்.

தன்யா தோட்டத்தில் விகாஷ் மூன்று சக்கர சைக்கிள் ஒட்டி இருப்பதை கண்டு கொண்டு அவனுக்கு பாதுகாப்பாய் இருந்தாள். அதனால் அவள் இப்பேச்சை கேட்க வாய்ப்பு இல்லாமல் போனது.

பவித்ரா யோசனையோடு முகம் கொஞ்சம் கவலையோடு அஸ்வினை கண்டாள். நேத்ராவை படுக்க வைத்தபடி பவித்ராவே அஸ்வினிடம் கேட்டாள். ''ஏன் அஸ்வின் நீ கீழே எதுவும் பேசலையே ஏன்?''

''எதை பற்றி?'' என்றான்.

''தனுவுக்கு சுவாதி விட்டில் இருந்து பெண் கேட்டது''

''அதுக்கு என்ன?''

''ஒன்னும் இல்லை நீ உன் கருத்து எதுவும் சொல்லலை. சுவாதி கூட அஸ்வினுக்கு இதில் விருப்பம் இல்லையா என்று என்னிடம் கேட்டாள்''

''கல்யாணம் செய்ய போறது தனு அவளிடம் கேட்கணும் என்னிடம் எதுக்கு விருப்பம்?'' என்றான் விட்டெறியாக.

''போடா இன்னிக்கு நீ என்னன்னே தெரியலை ஒரு மாதிரி பேசற... எனக்கு தனுவிற்கு ராமை கல்யாணம் செய்து வைக்கலாம் என்று தோணுச்சு ஆனா...'' என அஸ்வினை பார்க்க அவனோ அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

''டேய் டேய் கோவப்படாதே.... நான் நினச்சேன் ஆனா ராம் வேற யாரையோ விரும்பற மாதிரி தோணுது''

''என்ன?'' என்றான் அஸ்வின் அதிர்ச்சியோடு இவளுக்கு தெரியுமா? என்று விழிக்க, ''ஹ்ம்ம் அவனுக்கு லாஸ்ட் டைம் பிறந்த நாளுக்கு போன் செய்தேன் அப்போ உன்கூட இல்லை ஆபிஸ்ல இருக்கேன் என்று சொன்னான். ஆனா போனில் இடையில் வேற என்ன வேண்டும் மேடம் என்று வெய்ட்டர் குரல் கேட்டுச்சு... கொஞ்ச நேரத்திலே இரண்டா சார் என்ற கேள்வியோடு போச்சு நீயே சொல்லு ஆபிஸ்ல வருகின்ற பதிலா இது அவன் பிறந்த நாளுக்கு ஒர்க் இருக்கு என்று யாரோ ஒருத்திகூட லஞ்ச் சாப்பிட போய் இருக்கான். அப்போ அது லவ் தானே?'' அஸ்வின் இங்கும் அங்கும் நடந்து ''அதுக்கு என்ன?'' ''உனக்கு தெரிஞ்சா என்கிட்ட சொல்லி இருப்ப.. இல்லை அவனே என்கிட்ட சொல்லிடுவான். அவன் இதுவரை எதுவும் சொல்லலை.... ஆனா ஒரு பொண்ணு லவ் பண்றான் அதனால தனுவை கல்யாணம் பண்ண கேட்க முடியாது'' என்றாள் வருத்தமாய்.

''இப்போ அதுக்கு என்ன?''

''ஏன் டா உனக்கு ராம் மேல கோவம் இல்லையா அவன் யாரையோ லவ் பண்றான் மாதிரி இருக்கு என்று சொல்றேன் எதுவும் பேச மாற்ற?''

''எதுக்கு ஏற்கனவே ரம்யா பற்றி சும்மா கேட்டதுக்கு நீயும் அவனும் என்னை முறைச்சு ஒரு சண்டையே போட்டு முடிச்ச... அது அது அவங்க அவங்க இஷ்டம் நீ தூங்கு'' என கட்டிலில் கண் மூடி படுத்திட, பவித்ராவுக்கு உலகம் ஏதாவது நின்றுடுச்சா இவன் இப்படி இருக்க மாட்டானே?! என்றே நடுவில் படுத்திருந்த நேத்ராவை தாண்டி எட்டி பார்த்தாள்.

''ஏய் தூங்கு டி. அப்பறம் உன்னை தூங்க விட மாட்டேன்'' என்றதும் மீண்டும் அவளின் இடத்தில் படுத்து கண்களை முடியவள் நிஜமாவே இவன் ஒரு ரியாக்ஷன் கூட கொடுக்கலை...?! எப்படி இவன் ஆஹ் உஹு என்று குதிச்சு ராமுக்கு கால் செய்து யாருடா என்று விசாரிப்பான் என்று பார்த்தா கண்டுக்கவே இல்லை... தனுவுக்கு மாப்பிள்ளை பார்க்கறாங்க அதுக்கும் ஒரு ரியாக்சன் தரலை... இவனுக்கு என்ன அச்சு? ஒரு வேளை ஒர்க் டென்ஷன்ல இப்போ தூங்கறானா? என புரண்டு புரண்டு படுத்து ஒரு வழியாக உறங்கினாள்.

அஸ்வின் மெல்ல குறுநகை புரிந்துக் கொண்டான். ஏற்கனவே ராம் அவனிடம் ''பவித்ரா போனில் பேசும் பொழுது வெய்ட்டர் வேற பேசினார் டா எப்படியும் அவ மிஸ்ஸஸ் அஸ்வினா மாறி உங்கிட்ட என்னைக்காவது கேட்பா என்று சொல்லி இருந்தான். இவள் அதே போல இப்பொழுது சொல்கின்றாள். இந்த பச்சரிசி இப்ப எல்லாம் நோட் பன்றாளே... என்று அவனுக்கு மீண்டும் சிரிப்பு தான் தோன்றியது.

அடுத்த நாள் காலையில் எப்பொழுதும் போல அவர் அவர் பணியில் சென்றார்கள். ராமின் அலுவலகத்துக்கு சென்ற பின் அவன் அலுவலக போனில் ''சார் உங்களை பார்க்க ஒருத்தர் வந்து இருக்கார்... வர சொல்லவா?'' என்றே கேட்க, யார் என்று சிசிடிவி கேமராவில் பார்த்தவன் ''உடனே வர சொல்லுங்க'' என்று சொல்லி வைத்தான்.

இவர் எங்க இங்க? என ராம் குழம்பி போனான். இருந்தும் அவரை வரவேற்க தயாராகினான்.

கதவை திறந்து உள்ளே நுழைந்த விஸ்வநாதன் ராமை காண அவனோ எழுந்து நின்று ''வாங்க அங்கிள்... உட்காருங்க'' என வரவேற்றான்.

''உன் ஆபிஸ் ரொம்ப நல்லா இருக்கு'' என புகழ்ந்தான்.

''தேங்க்ஸ் அங்கிள்'' என்றவன் மனதினுள் எதுக்கு வந்து இருப்பார் தெரிலயே.... என்ற கேள்வி ஓடிக் கொண்டே இருந்தன.

''ஹ்ம்ம் எதுக்கு வந்தேன் என்று யோசிக்கறியா ஸ்ரீராம்''

''சே சே அப்படி இல்லை அங்கிள். நீங்க எப்ப வேண்டுமானாலும் வரலாம் உங்களுக்கு அந்த உரிமை இருக்கு...காபி?''

''யா சூர்...'' என்றதும் போனில் சொல்லிட விஸ்வநாதனோ மேலும் ''விஷயம் இல்லாமல் வரமாட்டேன் என்று உனக்கும் தெரியும்... உனக்கு ஏதாவது முக்கியமான வேலை இருக்கா அப்படின்னா நான் அப்பறம் கூட பேசுறேன். நீ ப்ரீயா என்று கேட்காம வந்துட்டேன்'' என்றார். அவர் இந்தளவு பெரிய கம்பெனியை எண்ணவில்லை. சாதாரணமாக இருக்கும் என்று எண்ணினார்.

''அதெல்லாம் ப்ரீ அங்கிள் சொல்லுங்க' என கேட்க, ''போன புதன் அன்று ஒரு ஹோட்டல் போனேன்'' என ஹோட்டல் பெயர் கூறி ராமை நோக்கி பார்க்க, ராமிற்கு எல்லாம் புரிந்தது.

தன்யாவோடு அன்று பிறந்த நாளுக்கு சென்ற ஹோட்டல் மறக்க முடியுமா? மென்று முழுங்கி நிற்க ''காபி சார்'' என குரல் கேட்டு ராமே எடுத்து விஸ்வநாதன் முன் வைத்தான்.

காபி கப் எடுத்து ஒரு மிடறு குடித்து ''அஸ்வினுக்கு தெரியுமா?'' என்றார்.

ராமிற்கு என்ன செய்வது என்றே புரியாத நிலை ஆனால் விஸ்வநாதன் காதலுக்கு எதிரி இல்லை என்று முன்னவே அறிந்த காரணத்தால்....

கொஞ்சம் திடத்துடன் மவுனத்தை கலைத்து ''தெரியும் அங்கிள்'' என்றான்.

''தெரியுமா.........?'' என விஸ்வநாதன் அதிர்ச்சி அடைந்தார். அப்படினா நேற்று எவ்வளவு கூலாக இருந்து இருக்கான். தான் அவனுக்கு தெரியாது என்றல்லவா இருவரின் நட்பில் பிரிவு வருவதற்கு இடம் கொடுக்காமல் தனியாக ராமை சந்திக்க வந்தால்.. அவனுக்கு தெரியுமா? என யோசித்தவர் ''அவனை இப்பவே வர சொல்லு'' என்றார் விஸ்வநாதன்.

வேறு வழியின்றி அஸ்வினுக்கு கால் செய்தான். ''சொல்லு டா என்ன காலையில் கால்?''

''அஸ்வின் நீ என் ஆபிஸ்க்கு வாடா...''

''டேய் இப்போ தான் ஆபிஸ் உள்ள வந்து மானிட்டர் ஆன் பண்ணி இருக்கேன் ஈவினிங் வர்றேன்''

''இல்லை இப்போ உங்கிட்ட பேசணும் நீ உடனே வா'' என்றதும் அஸ்வின் இவன் இப்படி வேலை நேரத்தில் அழைப்பவன் இல்லை என்ற காரணத்தால் ''சரி வர்றேன்'' என போனை துண்டித்தான்.

அரை மணி நேரம் போனது. விஸ்வநாதன் எதுவும் பேசவில்லை.... ராமிற்கு தான் மனம் படபடத்தது. நடுவில் ரோஷன் வந்து சில கையெழுத்து வாங்கி ஒரு ப்ராஜெக்ட் பற்றி பேசிவிட்டு சென்றான், சிடிடிவியில் அஸ்வின் யாரின் குறுக்கிடும் இல்லாமல் நேராக வருவது விஸ்வநாதன் பார்த்தார்.

ரோஷன் முறுவலித்து பேசி கொண்டு போனதும் அஸ்வின் இங்கு இருப்பவர்களுக்கு தெரிந்த நபர் என்றே அறிந்து கொண்டார். ''என்ன டா எதுக்கு காலையிலே தலை போற அவசரம்'' என கதவை திறந்தவன் கேட்டுக்கொண்டே அமர்ந்து இருந்தவரை கண்டு அங்கிருந்த சேரில் அமர்ந்தான்.

''நீங்க எங்க இங்க?'' என்றான் அஸ்வின் மிக சாதாரணமாக, ''உனக்கு தெரிஞ்சு இருக்குமே.. என்னை இங்க பார்த்ததும் புரிஞ்சு இருக்குமே அப்பறம் இந்த கேள்வி கேட்கற?'' என்றார் உனக்கு நான் அப்பா என்னும் விதமாக.

''ஏன் உங்க ஆபிஸ் இங்க பக்கத்துல மாற்றிடாங்களா என்ன?''

''அப்படியே உங்க தாத்தா மாதிரி பேச்சை மாற்றாதே... எல்லாம் தெரிஞ்சும் அவரும் இப்படி தான் பேசறதுக்கு தூண்டில் போடுவார்'' ராமையும் தந்தையும் பார்த்து, ''இப்போ என்ன முடிவு எடுத்து இருக்கீங்க?''

''என்னடா இப்ப வந்து இந்த கேள்வி கேட்கற? நேற்று ஆகாஷ் தனுவிற்கு மாப்பிள்ளை பற்றி பேசும் பொழுது அப்படியே ஒன்னும் தெரியாம இருந்துவிட்டு இப்ப கேட்கற?'' என்றதும் ராமிற்கு திக்கென்று ஆனது.

''சரி அப்போ பேச்சு தேவைப்படலை... இப்போ சொல்லுங்க''

''நீ என்னிடம் முன்கூட்டியே சொல்லி இருக்கனும் உன் ப்ரெண்ட் தன்யாவை விரும்பறான் என்று''

''தன்யா தான் முதலில் விரும்பினாள். ராம் என் நட்பை மனதில் வைத்து நோ தான் சொன்னான். எனக்கு தெரிந்து அப்பறம் எனக்கு முழு சம்மதம் என்ற பின்னர் தான் அவன் அவளிடம் லவ் சொன்னான்'' என விவரித்தான்.

''தன்யா என் பொண்ணு.... அவளுக்கு நான் தான் மாப்பிள்ளை பார்க்கணும் தவிர நீ இல்லை''

''நான் அவளுக்கு அண்ணன். எனக்கும் எல்லா உரிமையும் இருக்கு''

''இல்லை என்று நான் மறுத்தா...''

''என் காதலுக்கு தடை இல்லை என் பிரென்ட் காதலுக்கு தடை என்று வந்தா நான் யாரையும் பார்க்க மாட்டேன். எனக்கு என் ராம் சந்தோஷம் முக்கியம் தனு மனசும் முக்கியம்'' என்றான் திமிராக.

''எனக்கு என் மகள் பற்றி எனக்கும் ஆசை கனவு இருக்கும். அதனை பாதிக்க நீ முன் வந்தா அதையும் நான் பார்த்துகிட்டு சும்மா இருக்க மாட்டேன். நான் உனக்கு அப்பன் டா'' என பேச அஸ்வின் முகம் கோவத்தில் சிவப்பதை உணர்ந்து ராம் ''ப்ளீஸ் அஸ்வின் பொறுமையா பேசு டா.. என்னால நீ அங்கிள்கிட்ட கோவத்தை காட்டாதே'' என ராம் பேச ''ராம் எனக்கு வேலை இருக்கு பை'' என்றே கிளம்பினான்.

விஸ்வநாதன் அப்படியே இருக்க, ''சாரி அங்கிள் அஸ்வின் எப்பவும் இப்படி தான் கொஞ்சம் வேகம் கோவம்... ஆனா...'' என்றவன் அவன் முடிவு எப்பொழுதும் சரி என்பதை சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தான். அஸ்வின் இப்பொழுது ராமை அல்லவா சொல்கின்றான் அப்பறம் எப்படி அவன் தேர்வு சரி என்றால் அவனுக்கு அவனே... நல்லவன் என்பது போல ஆகிவிடுமே...!

''நீ எப்படி?''

''எனக்கு அவன் அளவு வேகம் கோவம் இல்லை அங்கிள் ஆனா நீங்க சொல்ல வருவதை கேட்க நான் தயார்'' என்றான்.

விஸ்வநாதன் ஏதோ பேச முயன்று தவிர்க்க எண்ணி யோசிப்பதை அறிந்து ''நீங்க அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கறீங்க எப்படியும் என்னை தலையிட வேண்டாம் என்று தான் சொல்லுவீங்க... நான் தலையிட மாட்டேன். ஆனா அவளுக்கு இன்னும் படிப்பு முடியலை... அவள் மனஅமைதியோடு படிக்க வேண்டும் என்று நீங்க நினைச்சா அவளிடம் என்னை மறக்க சொல்லி இல்லை காதலிக்கறியா என்று கேட்டு அவளை தொந்தரவு செய்யாதீங்க... நானே அவளோடு எப்படியாவது பேசாதே என்று சொல்லிடறேன். அவள் படிப்பு முடியும் வரை மட்டும் என்னை பற்றி கேட்டு அவளை நீங்க பேசிடாதிங்க ப்ளீஸ்.

இப்போ எப்படி இயல்பா இருக்கிறாளோ அப்படியே விடுங்க. அவ கோல்டு மெடல் வாங்குவா. ஏற்கனவே எல்லா மதிப்பெண்ணும் 95 கு மேல அதனால தான் சொல்றேன் நீங்களா ஏதாவது கேட்டு அவளின் மார்க் குறைவா எடுக்க வச்சிடாதீங்க... கண்டிப்பா நான் இனி அவளிடம் பேச மாட்டேன் ப்ரோமிஸ்'' இடையில் மீண்டும் ரோஷன் வந்து சார் நீங்க பார்க்க போறதா இருந்த சைட்.... என்று கூற வந்தவனை ராம் கையை வைத்து நிறுத்த சொல்ல, ''நான் கிளம்பறேன். நீ... நீங்க உங்க வேலையை கவனிங்க...'' எனவிஸ்வநாதன் செல்ல அவரை பார்த்தபடி அப்படியே சிலை போல நின்றான்.

''சார்..சார்... அந்த சைட்...'' என ரோஷன் ஆரம்பிக்க ''ஒரு டென் மினிட்ஸ்ல வர்றேன் ரோஷன்'' என அனுப்பி சேரில் அமர்ந்தவன் கைகளை தலைக்கு கொடுத்து இமைகளை மூடினான்.

அஸ்வினுக்கு தான் சொல்ல இயலா கோவம் இந்த அப்பா ஏன் இப்படி செய்யறார்? என் ராமிற்கு என்ன குறை என மனதில் முரண்டினான். வீட்டில் எப்பொழுதும் போல விஸ்வநாதன் அஸ்வினை பார்க்க அவனோ பார்வையை அவர் பக்கமே திருப்பவே இல்லை.

அவ்வளவு கோவம் அவனுக்கு. அன்றைய இரவில் ராதையிடம் தனு ராம் பற்றி கூறி முடிக்க அடுத்த பூகம்பமாக ராதை மனம் முரண்டியது. தன் மகள் எல்லா உறவும் இருக்கும் வீட்டில் காலடி எடுத்து வைக்கவே அந்த தாய் மனம் எண்ணிட, ராமை வேண்டாம் என சொல்ல வைத்தது.

அடுத்த நாள் விஸ்வநாதன் சொல்லுக்கு இணங்க ராதை தனுவிடம் வாயை திறக்கவே இல்லை ஆனால் அவளிடம் சிடுசிடுவென இருக்க, தனுவிற்கு அப்படி ஒன்றும் தாய் நடவடிக்கை பெரிதாக தோன்றவில்லை. தனு ராமின் வருகைக்காக காத்திருக்க அவனோ மெசேஜில் 'நான் வர மாட்டேன் நீயா காலேஜ் போம்மா...' என அனுப்பினான்.

ஈவினிங் எந்த பேச்சுக்கும் பதில் அனுப்பாமல் இருந்தான். அவன் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தனக்கு மெசேஜ் அனுப்பாமல் இருக்கமாட்டான் என அறிந்து நிஷா வீட்டில் போய் கேட்டுக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டாள்.

மாலையில் அவள் நேராக நிஷா வீட்டுக்கு சென்று ராம் முன் நிற்க, அவனோ அவளை கண்டு ''இங்க எதுக்கு வந்த? முதலில் கிளம்பு தன்யா'' என்றான்.

''எதுக்கு என்னை போக சொல்லறீங்க இன்னிக்கு முழுக்க நீங்க ஒரு மெசேஜ் கூட பண்ணலை போன் செய்தா கட் பண்ணறீங்க? ஏன்''

''ப்ளீஸ் தன்யா போம்மா சொல்றேன்ல கேட்க மாட்டியா? இனி இங்க வராதே'' என்று காரணம் கூறாமல் தவிர்த்து அனுப்ப முயன்றான்.

''மாட்டேன்...''

''எதுக்கு இப்படி அஸ்வின் மாதிரியே அடம் பிடிக்கற?''

''ஆமா உங்களுக்கு அஸ்வின் மட்டும் தான் உலகம் நான் எல்லாம் கண்ணுக்கு தெரியறதே இல்லை'' என்று அண்ணன் பெயரால் சாடினாள்.

''ஏய் சும்மா அஸ்வினை பற்றி ஏதாவது பேசி என்னை கடுப்பு கிளப்பதே... எனக்கு அவன் மட்டும் தான் உலகம் போ...'' என ராம் கத்த, நிஷா ரூமில் இருந்து வெளியே வர, அதே சமயம் ''அப்ப என் மேல காதல் இல்லையா? அவனின் தங்கை என்ற ஒரே காரணம் தான் என்னிடம் ஓகே சொன்னிங்களா?'' என அழுதாள்.

''ஆமா போ'' என்றதும் நிஷா இருவரையும் பார்க்க ராம் நிஷாவை கண்டு, ''தன்யா ப்ளீஸ் போம்மா என்னை பேச வைக்காதே'' என்றதும் நிஷா டேய் நீ அவளை....'' என்று கேள்வி கேட்க,

''அக்கா நீ வேற எதையும் பேசாதே... தனு கிளம்பு என்று சொல்றேன்ல...'' என்று கர்ஜிக்க, தனுவிற்கு நிஷாஅண்ணிக்கு தங்களது காதல் தெரிந்து விட்டது என்ற அதிர்ச்சில் மெல்ல கிளம்பினாள்.

போனில் அவனோ ''நானா மெசேஜ் செய்யற வரை மெசேஜ் செய்யாதே... ஒழுங்கா படி தன்யா'' என அனுப்ப அவளுக்கு எதுவும் புரியவில்லை என்றாலும் ராமின் பேச்சுக்கு கட்டுப்பட்டு ''சரி'' என்ற பதில் அனுப்பினாள்.

-பிரவீணா தங்கராஜ்.
 
Top