கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விழிகளில் ஒரு வானவில்-25

Praveena Thangaraj

Moderator
Staff member
அத்தியாயம்-25

அழுது வடிந்த முகத்தை ராதை பார்த்தும் பார்க்காதது போல எண்ணி வேலைகளை கொடுக்க சுவாதி தான் தனுவை திரும்பி திரும்பி பார்த்து சென்று மாவை எடுத்து கொடுத்தாள்.

விஸ்வநாதன் வந்து அறைக்கு சென்று ராதையிடம் ''இந்த நகை எல்லாம் ஓகே வா ராதை'' என்று கேட்க, சரி பார்த்து ''ஹ்ம்ம் இது போதுங்க'' என்று திரும்ப மும்மூர்த்திகளாக ஆகாஷ் சுவாதி அதன் பின் தனு என்று வந்து சேர்ந்தார்கள்.

''அப்பா யாருப்பா பொண்ணு பார்க்க வர்றப்போறாங்க?'' என்று ஆகாஷ் தங்கைக்காக பேச்சை துவங்கினான்.

''ஏன் இன்னும் இரண்டு மணி நேரத்தில் தெரிந்திட போறது அதுக்குள் என்ன அவசரம்?'' என்று விஸ்வநாதன் தனுவை பார்த்து கேட்க,''இல்லை மாமா அவங்க இப்போ வருவது வேண்டாம். நாம முதலில் தனு படிப்பு முடியறவரை யாரையும் வர சொல்ல வேண்டாம்'' என்று சுவாதி கூறினாள்.

''நல்ல வரன் வரும்பொழுது முடிப்பதுல என்ன தப்பு சுவாதி'' என்று மாமியார் ராதை எடுத்துரைக்க வந்தார்.

''அத்தை நம்மளை விட தனுவிற்கு பிடிக்கணும் இல்லையா?'' என்றாள் சுவாதி.

''அதெல்லாம் பிடிக்கும் தனுவிற்கு அலங்காரம் செய்து முடிங்க'' என்று விஸ்வநாதன் பேச்சை முடித்து ராதையிடம் "கொஞ்சம் போல கேரட் அல்வா செய்துடு ராதை. தனுவுக்கு பிடிக்கும்'' என்றதும் ராதை கிச்சனுக்கு செல்ல விஸ்வநாதன் வெயிலில் சென்று வந்ததால் களைப்பு நீக்க குளிக்க சென்றார்.

ஆகாஷ் சுவாதி தனு மூவரும் என்ன செய்ய என்பது போல குழம்பினார்கள்.
சுவாதி தனுவிற்கு அலங்காரம் செய்ய, தனு அழுதவாறே அலங்காரம் செய்ய நின்றாள். போனில் ராம் செல்லுக்கு கால் செய்ய அதுவோ சுவிட்ச் ஆப் என்று வர வேறு வழியின்றி அமர்ந்தாள்.

தனு விரும்புவதை சுவாதி பவித்ராவிடம் சொல்ல, அவளோ முதலில் இவர்களை போலவே திகைத்து பின்னர் ''மாமா அத்தைக்கு தெரியுமா? சும்மா வருபவர்களை நிறுத்துங்க என்று சொன்னால் யார் பேச்சை கேட்பா? அவள் விரும்புவதை சொல்லி நிறுத்த சொல்லுங்க'' என்றாள்.‌

''நீயே கூட வந்து சொல்லு பவித்ரா. அத்தை மாமா என்னவோ பிடிக்கொடுக்காம பேசுற மாதிரி தெரியுது.'' என்று சுவாதி சொல்ல, பவித்ரா நேராக தனுவிடம் வந்து ''இங்க பாரு தன்யா நீ பையன் யாருனு சொல்லு நான் எப்படியும் நிறுத்தறேன்'' என்றாள் பவித்ரா.

''அண்ணி உங்களுக்கு நிச்சயம் அவரை பிடிக்கும் ஆனா இப்போ வரவங்களை வர வேண்டாம் சொல்லிடுங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து அவங்க தட்டு ஏதாவது மாற்றிட செய்தாள்...?!'' என்று தனு அழுதாள்.

மீண்டும் விஸ்வநாதன்-ராதை இருவரிடமும் பவித்ரா முன் வந்து,''அத்தை... மாமா... இன்னிக்கு நல்ல நாள் இல்லை போல அவங்க இன்னோர் நாளைக்கு வர சொல்லுங்க இப்போ தனு ஏதோ உங்ககிட்ட பேசணுமாம்'' என்று சாமர்த்தியமாக பேசுவதாக வந்தாள்.

''என்ன பேசணும்... அதுவும் இன்னும் ஒரு மணி நேரத்தில் பையன் வீட்டில் வர்ற நேரத்தில்...'' என்று விஸ்வநாதன் தனுவை அரற்றும் விதமாக பார்த்தார்.

பவித்ராவுக்கு உண்மை கூறாமல் நிறுத்த போவதில்லை என்றதை உணர்ந்து, ''மாமா அவ... யாரையோ விரும்பறா...'' என்றதும் ராதை விஸ்வநாதன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு தனுவை முறைத்தனர்.

''ஏன் மாமா நம்ம வீடு என்ன காதலுக்கு எதிரியா? யாரு என்ன என்று தனுவிடம் கேட்கலாமே''

''ஏன் அவள் யாரு என்று சொல்லி இருப்பாளே...'' என்று ராதை‌ இத்தனை நாள் கோபத்தை உடைக்கும் விதமாக கேட்டார்.

''அது யாருனு சொல்ல மாட்டேங்கிறா... நீங்க கொஞ்சம் பொறுமையா கேட்டு பாருங்க. ஆனா அதுக்கு முன்னால இப்போ வீட்டுக்கு பொண்ணு பார்க்க வருபவர்களை ஏதாவது சொல்லி நிறுத்துங்க. தனுவிடம் பேசி நாம அப்பறம் என்ன ஏது என்று முடிவு எடுப்போமே?!'' என்றாள் பதமாக.

''நான் வருபவர்களை நிறுத்த முடியாது பவித்ரா... ஏன்னா இது எனக்கு தெரிஞ்ச இடம் மட்டுமில்லை தனுவுக்கு பார்த்திருக்கற பையன்...'' என்று நிறுத்தினார்.

''மாமா உங்களுக்கு தெரிந்த நண்பர் என்றாலும் தெரிந்த தரகர் சொன்ன இடம் என்றாலும்... நீங்க நினைச்சா நிறுத்தலாம்'' என்று சமாதானம் செய்தாள். பெரிய மகனும் வீட்டின் இரு மருமகளும் மகளோடு சேர்ந்து பேச விஸ்வநாதன் மறுத்தார்.

''அஸ்வின் பார்த்த மாப்பிள்ளை என்றாலும் நிறுத்த முடியுமா பவித்ரா'' என்றார்.

இம்முறை எல்லோரும் கொஞ்சம் அதிர்ந்தார்கள்.

தனு சொல்லவே தேவையில்லை. அங்கயே கதவின் மேல் சாய்ந்து அமர்ந்து முழங்கால் மண்டியிட்டு முகம் புதைத்து அழ செய்தாள்.

''போய் மற்ற வேலைய கவனிங்க'' என்று சொன்னதும் மாடியில் இருந்து எல்லாம் கேட்டுக்கொண்டே இருந்த அஸ்வின் கீழே வந்து ஹாலில் டிவி ஆன் செய்து அமர்ந்தான்.

ஆகாஷ்-சுவாதி இப்போ என்ன செய்ய? என்பது போல பார்க்க, ராதை கேரட் செய்து முடித்து அதற்கு முந்திரியை நெய்யில் வறுக்க செய்தார்.

விஸ்வநாதனோ போனை எடுத்து சித்திக்கை அழைத்து எங்கே வருகின்றார்கள் என்று கேட்க இன்னும் கிளம்பவில்லை என்றும் பத்து நிமிடத்தில் கிளம்புவதாகவும் தகவலும் கொடுக்க 'நல்லது' என்று போனை துண்டித்து ஹாலில் இருந்த புத்தகத்தை எடுத்து புரட்டினார்.

பவித்ரா மெல்ல தயங்கி அஸ்வினிடம், ''அச்சு யாரு வருகின்றார்கள் டா...'' என்றாள்.

''வரும்பொழுது தெரியாது பார்த்துக்கோ'' என்று ரிமோட்டில் பாட்டை மாற்றி வைக்க,''அது இல்லைடா தன்யாவுக்கு விருப்பமா என்று நாம ஒருவார்த்தை கேட்க கூட செய்யலை... அவ யாரையோ விரும்பி இருக்கா'' என்றாள் கிசுகிசுப்பாய் மெதுவாக.

''அது பற்றி பேசணும் என்றால் அவ சொல்லுவா நீ போய் நேத்ரா குட்டியை ரெடி பண்ணு போ'' என்று அதட்டிட சுவாதி பவித்ரா இருவருமே அவரவர் குழந்தைகளுக்கு தேவையான உடையை ஹாலில் எடுத்து வந்து மாற்றினார்கள்

கண்களை அழுத்தமாக துடைத்த தனு அஸ்வினிடம் வந்து,''என்ன யாரும் பொண்ணு பார்க்க வர வேண்டாம் அண்ணா. எனக்கு படிப்பு முடியட்டும். நான் ஒருத்தரை விரும்பறேன்'' என்றதற்கு அஸ்வின் காதில் வாங்கியது போலவே காட்டி கொள்ளாமல் இருக்க தனுவிற்கு கோவம் வந்து, ''என் லைப் முடிவு எடுக்க அப்பா அம்மா இருக்காங்க நீங்க ஏன் இதில் தலையிடறீங்க? எனக்கு மனசு இருக்கு நான் ஒருத்தரை விரும்பறேன். நீங்க எடுக்கற முடிவுக்கு என்னை கட்டுபடுத்தாதீங்க... அப்பா அம்மா உங்க பேச்சை கேட்கறாங்க என்றால் அது அவங்க இஷ்டம். ஆனா எனக்கும் அதே ரூல்ஸ் இல்லை. எனக்கு என்ன தேவை, எது பிடிக்கும் என்று பார்த்து செய்றது அப்பா அம்மா மட்டும் தான். அப்போ கூட அவங்களுக்கு என் கல்யாண விஷயத்தில் என் சம்மதம் இல்லாமல் பார்த்தார்கள் என்றால் அது தப்பு... அப்படியிருக்க நீங்க எனக்கு பிடிக்காம பார்ப்பது ரொம்ப பெரிய தப்பு. உங்க இஷ்டப்படி திருமணம் செய்வது என்றால் உங்க பொண்ணு நேத்ராவுக்கு செய்யுங்க. நான் ஒன்னும் உங்களுக்கு பொண்ணு கிடையாது. உங்க கூட பிறந்தவள் மட்டும் தான்'' என்று நீண்ட நெடிய வாதங்களை எடுத்து வைத்து முடித்தாள் தன்யா.

எல்லாம் கேட்டு முடித்து அஸ்வின் மிக பொறுமையுடன் "போய் ரெடி ஆகு. இன்னும் அரை மணிநேரத்தில் அவங்க வந்துடுவாங்க. எனக்கு நேத்ராவும் நீயும் ஒன்னு தான்'' என்று சொல்லி ஒரு ஆழப்பார்வை பார்த்தான். அதில் தன்யா மிரண்டாள்.

''அஸ்வின் அவ தான் யாரையோ விரும்பறாளே... யாரு என்னனு கேட்டு நீங்க முடிவு எடுக்கலாமே...'' என்று பவித்ரா மெதுவாக சொல்ல, ''எனக்கு என் தங்கைக்கு எது நல்லது என்று எனக்கு தெரியும் பவித்ரா...போ அவ அழுது கண் எல்லாம் ஈரமா இருக்கு... துடைச்சு டச் அப் செய்து விடு நேத்ரா மட்டும் எனக்கு பொண்ணு இல்லை தனுவும் அது போல தான்'' என்றதும் பவித்ராவுக்கே வித்தியாசமாக இருந்தது.

அவளுக்கு தெரிந்த வரை அஸ்வின் பிறரின் மனதை புரிந்து மனம் நோகாமல் நடக்க பாடுபடுபவன். அதுவும் தன்யா அவனுக்கு தங்கை மட்டுமில்லை... முதல் குழந்தை போலவே எண்ணி அவளின் விருப்பு வெறுப்புகளை ஏற்று நடந்து செயல்படுபவன்.

இப்போ இப்படி பேசுவது அங்கிருந்த தனு பவித்ரா ஆகாஷ் சுவாதி எல்லோருக்குமே ஆச்சரியம் மற்றும் வருத்தம் இருந்தது.

பவித்ராவுக்கு அவன் மீது கோவம் கூட இருந்தது. அதே சமயம் தனு இப்படி பேசுவதும் கஷ்டமாக போனது.

தன்யா இதுவரை அழுதவள் நேராக எல்லோர் எதிரிலும் போனை எடுத்து ஸ்ரீராமிற்கு கால் செய்தாள்.

அஸ்வின் தன்யா அருகே வந்து அவளின் போனை பிடுங்கி நம்பரை பார்த்து கூலாக அவளை ஏறிட அவளோ பயத்தில் நாலடி பின்னுக்கு நகர்ந்தாள்.

அப்பொழுதும் அஸ்வின் ''தனு போய் ரெடியாகு... அழுது வடிந்த முகத்தை பொண்ணு பார்க்க வரவங்க பார்த்தா நல்லா இருக்காது'' என்று போனை அவளின் கையில் கொடுத்தான்.

தனுவிற்கு தான் யாரை விரும்புகின்றோம் என்று அஸ்வின் அண்ணாவுக்கு தெரிந்தும் இப்படி இருக்கின்றானே என்று தவித்து அறைக்குள் சென்றாள்.

கூடவே பவித்ரா சுவாதி இருவருமே சென்று அவளை எப்படி சமாதானம் பண்ண என்று புரியாமல் விழித்தார்கள்.

சுவாதி தொடுகையை ஏற்றவள் பவித்ரா தொடுகையை மெல்ல எடுத்து விட பவித்ராவுக்கு கஷ்டமாக இருந்தது.
''எதுக்கு இப்படி கூடவே வந்து நிற்கறீங்க? நான் ஒன்னும் செத்துட மாட்டேன்'' என்று கத்த இருவருமே கலங்கி போனார்கள்.

தன்யா, சுவாதி பவித்ரா மூவரும் தனு அறையில் இருக்க, வெளியே காரின் சப்தம் கேட்டு ஆகாஷ் எட்டி பார்க்க, அங்கே ராம் சித்திக்-நிஷா ரகுஅங்கிள் நால்வரும் வர விஸ்வநாதன்-ராதை தம்பதியர்கள் தம்பதியினராக வரவேற்றனர்.

ஆகாஷுக்கு அப்பொழுது தான் ஏன் அஸ்வின் தனு அவ்வளவு சொல்லியும் மறுத்து பெண் பார்க்க வருபவர்களை வரவேற்க ஆவலுடன் இருக்கின்றான் எனபுரிந்தது. ஏன் என்றால் மாப்பிள்ளை ஸ்ரீராம் என்று ஓரளவு புரியாமல் இல்லையே..!மனதினுள் தன்யா ஸ்ரீராம் விட நீ தேர்ந்தெடுத்த ஒருவன் நிச்சயம் மிகுதி இல்லை என்பது அஸ்வினின் ஆழமான கருத்து ஏன் தனக்குமே இப்பொழுது அப்படி தான் தோன்றுகிறது என்றபடி யோசித்தான்‌

ராமின் பார்வை ஹாலில் சுழல... ''டேய் வருவா... பொறு..." என்று நிஷாந்தினி சொல்லியதும் அஸ்வின் முறுவலிக்க எல்லோரும் பேசும் குரல் கேட்டு, ''அவங்க வந்துட்டாங்க போல...'' என்று சுவாதி சொல்லியதும் பவித்ரா சுவாதி இருவருமே ஒன்றாக வெளியே வந்து பார்க்க அங்கே... ஸ்ரீராம் இருப்பதை உணர்ந்து ஆகாஷின் முடிவையே சுவாதி பவித்ராவும் எண்ண துவங்கினார்கள்.

''ஏன் பவித்ரா ஸ்ரீராம் தான் மாப்பிள்ளை என்று ஏன் சொல்லலை?'' என்றதற்கு ''எனக்கே தெரியாது சுவாதி... இந்த அஸ்வின் என்கிட்ட சொல்லலை... ராமும் சொல்லலை ஆனா தனு யாரையோ விரும்பறா... என்று சொல்லி முடிப்பதற்குள் தனு ஓடி வந்து ராமை கட்டி பிடித்து அவனின் நெஞ்சில் சாய்ந்து அழுதாள்.

சுவாதி ஸ்ரீராம் என்று சொல்லியதும் திரும்பி பார்க்க அங்கே ராம் நிற்பதை கண்டு வெளியில் வந்து அவனை கட்டிக் கொண்டாள்.

''ஏய் தன்யா எல்லோரும் பார்க்குறாங்க... என்னாச்சு உனக்கு?'' என்று ராம் அவளை பிரித்து கேட்டான்.

''என் தங்கைக்கு நான் பார்த்த மாப்பிள்ளை உன்னை பிடிக்கலையாம்டா.. அவள் யாரோ ஒரு பையனை விரும்பறா...'' என்று ராமை பார்க்க அவனோ தன்யாவை தள்ளி நிறுத்தி ''டேய் அஸ்வின் அவகிட்ட நான் தான் என்று சொல்லலையா?'' என்றதும் அஸ்வின் புன்னகைக்க அப்பொழுது தான் தன்யா ராமை விரும்புகிறாள் என்று எஞ்சிய எல்லோருக்கும் புரிந்தது.

தன்யாவுக்கும் அஸ்வின் அண்ணனுக்கு தான் ராமை விரும்புவது தெரிந்தே இருக்கின்றது என தாமதமாய் புரிந்தது.

''என்ன அஸ்வின் ரொம்ப அழ வச்சி இருக்க... போடா...'' என்று அவளின் முகத்தை ஏந்தி, ''சாரி தன்யா உன் மெஸேஜ் பார்த்த பிறகு சொல்லி இருக்கனும். எப்படியும் இன்னிக்கு காலையில் அவன் சொல்லி இருப்பான் இல்லை ஆனட்டி அங்கிள் ஆவது சொல்லி இருப்பாங்க என்று இருந்தேன்'' விடாமல் அழுகையில் கரைந்தவளை பார்த்து ''இப்போ இன்னும் ஏன் அழுவுற தன்யா?'' என்றான்.

''அஸ்வின் அண்ணாவை எதிர்த்து பேசிட்டேன்'' என்றாள் விசும்பலாக.

''அதெல்லாம் பரவாயில்லை. உன் அண்ணாவை நீ பேசாம இருப்பியா.'' என்று காதில் முனங்கியவன் "எல்லோரும் நம்மளையே பார்க்கறாங்க தன்யா '' என்றதும் தன்யா விலகி நிமிர்ந்தவளை சுவாதி தான் ''தனு நீ ஸ்ரீராமை தான் விரும்பினியா?'' என்றதும் விழித்து கொண்டு ராமின் முதுகில் மறைய...'' போதும் இந்த கண்ணாமூஞ்சி ஆட்டம்... வெளியே வா'' என்று நிஷாந்தினி தனுவை இழுத்து அருகே அமர்த்தினாள்.

அதே நேரம் தவசுடர் மற்றும் அவர் கணவர் சுந்தர் இருவரும் வீட்டுக்கு வர அவர்களை ராதை விஸ்வநாதன் இருவரும் வரவேற்றார்கள். ''என்ன அண்ணா சரியான நேரத்துக்கு வந்துவிட்டேனா?'' என்று தவசுடர் கேட்க,''கரெக்ட் டைம் சுடர்... மாப்பிள்ளை நீங்க உங்க தம்பி விட்ல பேசிட்டீங்களா? எதுவும் மனவருத்தம் இல்லையே...'' என்று கேட்டுக் கொண்டார்.

''சே சே இது மாதிரி ஏற்கனவே பேசி முடிச்சுட்டாங்க சுவாதி ஆகாஷ் இரண்டு பேருக்கும் தெரியாது. அதனால தான் நாம கேட்கும் பொழுது விஷயம் சொல்லலை.. என்று சொல்லிட்டேன். அதுவும் இல்லாம விகாஷ் பிறந்த நாளில் அஸ்வின் பிரென்ட் இவரையும் பார்த்து இருப்பாங்க போல அதனால் மேலும் எதுவும் மேற்கொண்டு விசாரிக்கலை..'' என்றார் அவரும்‌.

''நல்லது சுந்தர்'' என்றார் விஸ்வநாதன்.

''அஸ்வின் என்னப்பா நண்பர்கள் இனி மாப்பிள்ளை மச்சானும் உறவு ஆகா போறிங்க இன்னும் நெருக்கமா... மனசு நிறைவா இருக்கு'' என்று சுந்தர் சொல்ல ராம் அஸ்வின் இருவருமே புன்னகைக்க மட்டுமே செய்தனர்.

பவித்ரா இருவரையும் செம கோவத்தில் முறைத்து இருப்பதை பார்த்து அதே புன்னகை மாறாமல் அஸ்வின் ராமின் காதில் ''இன்னிக்கு இவகிட்ட செமயா மாட்டினேன்'' என்றான்.‌

''அஸ்வின் என்னையும் திட்டுவாளா டா'' என்று ஐயமாய் கேட்டான் ஶ்ரீராம்.

''பின்ன?'' என்று மற்றவர் காதில் விழாமல் பேசி கொள்ள, ஆகாஷ் சித்திக் இருவரும் பேசிக் கொண்டார்கள்.

ராதை தவசுடர் கேரட் அல்வா ஸ்வீட்ஸ், மிக்ஸர், பஜ்ஜி என்று எல்லாம் எடுத்து வந்து எல்லோருக்கும் கொடுக்க, தன்யாவை ராம்''போய் முகம் அலம்பு கண்ணீர் கோடு அப்படியே இருக்கு'' என்றதும் உள்ளே சென்றாள்.

அவள் அறைக்கு சுவாதி பவித்ராவையும் இழுத்து கொண்டு சென்றாள்.

''என்ன தனு இப்போ சந்தோசமா? நம்ம வீட்ல யாரும் மனசு நோக செய்ய மாட்டாங்க அப்படி தெரிந்தும் இப்படி பயந்துட்டியே? என்றதும் தனு முகம் மலர "போங்க அண்ணி எனக்கு எவ்ளோ பயம் தெரியுமா?'' என்றாள்.

''ஆமா ஆமா நீ பயந்துவிட்டாலும். அத்தை மாமா கூட அஸ்வின் கூட இப்படி பேசி நான் பார்த்தது இல்லை ஆனா இன்னிக்கு நீ... எவ்ளோ பெரிய டயலாக் அம்மாடி'' என்றாள் சுவாதி.

தனு கவலையோடு பவித்ராவை பார்க்க பவித்ரா அவள் மனம் கஷ்டப்படுகின்றது என்று அறிந்து, ''ஹலோ அது என்ன அஸ்வினை யாரும் எதிர்த்து பேச கூடாதா? அவங்க அவங்க லவ்வுக்கு அவங்க அவங்க பேசி தான் ஆகணும். இதில் தப்பு என்ன? என்று தனுவிற்கு ஆதரவாக பேசினாள்.

கணவரை எதிர்த்து பேசினால் என்றும், பவித்ரா தோளில் கைவைத்தப்போது தள்ளி விட்டதும் பவித்ரா பெரிதாக எடுத்துக்கவில்லை.
தனு முகத்தை ஏந்தி "நீ செய்தது தப்பு எல்லாம் இல்லை சரியா... ராம் உனக்கு செம மேட்ச்...'' என்றாள் பவித்ரா.

''ஏய் தனு இதான் யாருனு சொன்னா உங்களுக்கு பிடிக்கும் அண்ணி என்று நீ பவித்ராவை பார்த்து சொன்ன...'' என்றதும் வெட்கத்தில் தலை கவிழ்ந்தாள்.

''என்ன உள்ள வரலாமா?'' என்று நிஷாந்தினி கேட்க,''நிஷா அக்கா வாங்க'' என்று சுவாதி பவித்ரா இருவருமே அழைத்தனர்.

''தன்யா... என்ன மாப்பிள்ளை ராம் என்று யாரும் சொல்லலை போல ஹ்ம்ம் நீங்க காதலிச்சது கடைசி வரை எங்களுக்கு சொல்லாததற்கு உனக்கு தண்டனை தான்'' என்றாள் நிஷா சிரிப்புடன்.

''ஏய் எப்பதிலருந்து இந்த லவ் ட்ராக்...'' என்று சுவாதி கேட்க,''ஹலோ லேடீஸ் மே ஐ கம் இன்?'' என்று ஸ்ரீராம் தன்மையாக கேட்க எல்லோரும் திரும்பினார்கள்.‌

''எப்பதிலருந்துடா தன்யாவை லவ் பண்ற'' என்று நிஷா ராமிடம் கேட்டார்.

''அக்கா... உனக்கு அது தேவையில்லாதது... அங்க ஹாலில் எல்லோரும் ரிங்க் மாற்ற கூப்பிட்டாங்க வாங்க'' என்றதும் எல்லோரும் வெளியே செல்ல தனு பவித்ரா மட்டும் கடைசில் வர பவித்ராவை பார்த்தவன் ''பவித்ரா அப்பா அம்மாவுக்கு...'' என்றதை காதில் வாங்காமல் "தனு நான் அத்தைக்கு தேவையானதை எடுத்து கொடுக்க போறேன்'' என்று நழுவ ராமிற்கு பவித்ரா செய்கை புரியாமல் இல்லை அவளிடம் சொல்லாமல் இருந்ததற்கு பேசாமல் பழி வாங்குகிறாள். தோழி இது கூட முறுக்கி கொள்ளவில்லையென்றால் தான் அதிசயம்.

ஹாலில் எல்லோரும் கூடி ரிங் அணிவிக்கும் தருணம் சுவாதி ராமின் கைகளை பிடித்து "சார் எப்பதிலேருந்து லவ் பண்ணினிங்கன்னு சொல்லிட்டு போடுங்க" என்றதும் ''ஹலோ நான் யாருக்காகவும் சொல்ல மாட்டேன். டிலே பண்ணினா அத்தை மாமா முக்கியமா அஸ்வின் எப்படியும் ரிங் போட சொல்லிடுவாங்க சோ நான் சொல்ல மாட்டேன். என்றான்.‌

நிஷாவுமே ''ராம் சொல்லு டா எங்களுக்கும் த்ரிலிங்கா உனக்கும் மெம்மரபிளா இருக்கும்'' என்றதற்கு ராம் பவித்ராவை பார்த்து ''பவித்ரா கேட்டாள் சொல்றேன். ஆனா அவ என்கிட்ட எப்பவும் போல பேசணும்'' என்றதற்கு பவித்ரா அவனை முறைத்து ''நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் என்கிட்ட கூட நீ எதையும் சொல்லலை இந்த அச்சு அவனுக்கும் இருக்கு'' என்று முனங்கினாள்.‌

''பவித்ரா ப்ளீஸ் நீ இப்படி இருந்தா நான் என்ன செய்ய? உனக்கு தான் ஏற்கனவே நான் யாரையோ விரும்பறேன் என்று டவுட் வந்து இருக்குமே நீயேன் என்கிட்ட கேட்கலை... அப்படி கேட்டிருந்தா நான் கண்டிப்பா உங்கிட்ட பொய் சொல்லாமல் உண்மை தானே சொல்லிருப்பேன்'' என்றான் ராம்.

''ஆமா சார் லவ் பண்றிங்க என்று லைட்டா புரிந்தது''

''பார்த்தியா நீ தான் மிஸ்ஸஸ் அஸ்வின் ஆச்சே... சரி இப்போ சொல்லு நான் எப்பதிலேருந்து லவ் பண்ணியிருப்பேனு...?" என்று கேட்க எல்லோரும் இவர்களின் உரையாடலில் சுவாரசியமாக கேட்டு இருக்க பவித்ரா யோசித்து ''ஆஹ்... அந்த பிளவர்... எல்லோ பிளவர்... தனு கூட யாரோ ஒரு பிரென்ட்டோட அக்காவுக்கு வாங்கி பூ அலர்ஜி என்று இவள் வாங்கி வந்ததா சொன்னாளே அப்போவா...?'' என்று பவித்ரா கேட்டு முடிக்க ராமும் தன்யாவும் அப்படியே விழிக்க, ராம் தான் சுதாரித்து அஸ்வினை பார்த்து''சொன்னேன்லடா இவ மிஸ்ஸஸ் அஸ்வின் என்று அப்படியே சரியா கெஸ் பண்றா பாரு. ஹ்ம்ம் அப்போ தான் நான் ப்ரபோஸ் பண்ணியது. பட் போதும் எப்போ காதல் உள்ள வந்தது என்று எல்லாம் கிளற வேண்டாம் ப்ளீஸ்'' என்று சிரிக்க ராம் தன்யா கைகளில் மோதிரம் அணிவிக்க எல்லோரின் கை தட்டலும் ஒலி எழுப்ப ஆகாஷ் கலர் துகள் வெடித்து சிதறுவதை ஆன் செய்தான்.

வண்ண துகள்கள் காற்றில் பரவியது.

சித்திக் மட்டும் அஸ்வின் அருகே மெல்ல இனி தான் உங்க நட்பில் பிளவு வர போகுது அதுக்கு தான் இந்த வெடிகள் என்று புன்னகையோடு அஸ்வினை பார்த்து சொல்லியவாறு கைகளை தட்டினான்.‌

-தொடரும்.
 
Top