கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விழிகளில் ஒரு வானவில்-26

Praveena Thangaraj

Moderator
Staff member
அத்தியாயம் -26

வெகுவாக காலம் பறக்க தன்யா படிப்பு முடியும் முன்னே மோதிரம் மாற்றிய நாளில் இருந்து சரியாக ஒன்றை மாதத்தில் திருமண நாள் உறுதியாகி இன்று அந்நாள் வந்தும் சேர்ந்தது. மாப்பிள்ளைக்கு செயின் போட்டு சடங்கில் ஆகாஷ் அஸ்வின் இருவருமே நிற்க அஸ்வின் கையில் செயின் கொடுக்கபட அங்கிருந்த சித்திக்கோ, ''ஆகாஷ் நீங்க தானே பெரிய அண்ணன் முறையில் செயின் அணிவிக்கணும் நீங்களே போடுங்க'' என்றதும் ஆகாஷ் அஸ்வினை பார்க்க, அஸ்வினோ ''பிடி போடுண்ணா'' என்று விட்டு கொடுக்க ஆகாஷ் முதலில் தயங்கி பின்னர் அணிவித்து செயின் ஒன்றை மாட்டினான்.

ராமின் அருகே ஒரு பக்கம் ஆகாஷ் நிற்க மறுபக்கம் அஸ்வின் நிற்க அஸ்வின் பக்கம் சித்திக் போட்டோவுக்கு நிற்கும் போது, ''பார்த்தியா நீ போட வேண்டிய செயின் எப்படி ஆகாஷ் கைக்கு மாற்றினேன் என்று இதே போல தானா எல்லாம் மாறும்'' என்று முடிக்க அஸ்வின் அவனை வினோதமாக பார்த்தான்.

இந்த பக்கம் ஸ்ரீ ராமோ ''டேய் அன்னிக்கு சொன்னேன்ல நீ என் கல்யாணத்துல எப்படியும் பொண்ணு வீட்டுக்காரன் தான் எனக்குன்னு சொந்தம் உறவு யாருமில்லை என்று சொன்னேன்ல'' என்று ராம் சொல்ல, ''இப்ப நான் என் ப்ரென்ட் ராமின் தோழன் அதாவது மாப்பிள்ளை தோழன் அப்படினா நான் உன் கூடவே தான் இருப்பேன் கூடவே இருக்கற நான் உனக்கு சொந்தம் உறவு தானே? அப்படினா நான் சொன்னது தானே நடக்குது'' என்றான் அஸ்வின்.

''டேய்..... உங்கிட்ட பேசி வெல்ல முடியுமா? நீ தான் அஸ்... வின் ஆச்சே எல்லாவற்றிலும் சொன்னதை செய்துடற.. சரி தான் நட்பில் எல்லாம் இருக்குடா. இனி நானும் எனக்கு யாருமில்லை என்று என்னைக்கும் சொல்ல மாட்டேன்'' என சொல்ல புகைப்படம் எடுத்து முடிக்க நடக்க சித்திக்கை பார்த்து ''கேட்டுச்சா நான் அஸ்... வின்... எதையும் நினைச்சதை நடத்தி தான் காட்டி பழக்கம் எனக்கு'' என அஸ்வின் சிரிப்புடன் மாப்பிள்ளை தோழனாக ஸ்ரீராமின் கைகளை மிடுக்காக பிடித்து அவனோடு வந்தான்.

விழாவின் நாயகன் ஸ்ரீ ராம் எப்பொழுதும் போல கம்பீரமாக இருக்க அவனின் மாங்கல்யம் ஏந்த வருபவள் அவனை விட கூடுதல் அழகாக வந்து நின்றாள்.

சுற்றி உறவுகள் வாழ்த்த தன்யா கழுத்தில் தாலி கட்டினான் ஸ்ரீ ராம். ஸ்கூல் யுனிபார்ம்ல பார்த்த தனு இப்பொழுது முற்றிலும் இல்லை மாலை சூடிய மங்கையாக தெரிந்தாள்.

அக்கினியை வலம் வரும் பொழுதும் சித்திக் ஆகாஷினை கைப்பிடிக்க சொல்ல ஆகாஷே "வேண்டாம் அஸ்வின் பார்த்துப்பான்'' என்று முடித்திட நிஷாந்தினி மேடிட்ட வயிற்றோடு அக்கினியை வலம் வருவதற்கு பதிலாக பவித்ராவையே அனுப்பினாள்.

பவித்ராவும் அந்த நேரம் மறுக்காமல் சென்று சுற்றி அமர வைத்த பிறகு நிஷாந்தினியிடம் ''அக்கா நீங்க தானே கூட கை பற்றி வலம் வர செய்யணும் என்னை அனுப்பிட்டீங்க'' என்று பயந்தாள்.

நிஷாந்தினியோ ''கல்யாண பையனின் அக்கா தங்கை யார் வேண்டுமென்றாலும் பிடிச்சு வலம் வரலாம் பவித்ரா. எனக்கு மூச்சு வாங்கியது அதான். அதுவும் இல்லாமல் நீ அவனுக்கு தங்கை தானே...?'' ''என்னது தங்கையா... சே சே இல்லையே''

''உனக்கு ஒன்னு தெரியுமா எப்பவும் அண்ணன் தங்கையாய் இருப்பவர்கள் அந்த உறவு முறை வைத்தே கூப்பிட்டுக்க மாட்டாங்க வா போ சில நேரத்தில் வாடா போடா அப்படி தான். அப்படி பார்த்த நீ தங்கை தான் முக்கியமா அஸ்வினை கட்டிக்கிட்டு இருக்க'' என்று சொல்லி கயல் அம்மா கூட அதே தான் சொன்னாங்க'' என்றார்.

''ஆசை தோசை அதுக்காக எல்லாம் நான் அவனை அண்ணா என்று சொல்ல மாட்டேன். நான் எப்பவும் போல ஸ்ரீராம் தான் சொல்லுவேன். முதல்ல அவன் என் நண்பன்'' என்றாள்.

மேலும் சில பல கேளிக்கை கொண்டாட்டம் என்று நிறைவாக இருந்தன. ஆகாஷ் ஸ்ரீராமினை மாப்பிள்ளை என்று கூப்பிட, ஸ்ரீராமும் ஆகாஷினை மச்சான் என்று அழைக்க உறவுகள் மேலும் பெருகியது. ஆனால் அஸ்வின் மட்டும் அவனை அப்படி கூப்பிட மறுத்தான். ஸ்ரீராம் கூட ''டேய் ஆகாஷ் மாதிரி நீயும் என்னை மாப்பிள்ளை என்று ஏன் டா கூப்பிட மாற்ற?'' என்று ஏக்கமாய் கேட்டான்.

''தோணும் பொழுது கூப்பிடறேன் டா. இப்ப முடியாதுகேட்கும் பொழுது சொல்லிட்டா என்ன கிக் இருக்கும் சொல்லு''

''நீ இருக்கியே...'' என்றவன் அவனும் ஆகாஷினை மச்சான் என்றவன் அஸ்வினை அப்படி அழைக்கவில்லை. அன்றைய நாளின் இரவை ஸ்ரீராமின் வீட்டிலே ராம்-தனு இருவரையும் தனிமையில் விட்டுவிட்டு எல்லோரும் சென்று விட்டார்கள்.

மொட்டு மொட்டு விழித்து வந்தவளை கண்டு புன்னகையுடன் எதிரில் நின்றவன் அங்கிருந்த கட்டில் அமர வைத்து, ''கல்யாணம் ஏதோ பயத்தில் சிக்கிரமே பண்ணியாச்சு. பட் உன் ஸ்டடிஸூக்கு எப்பவும் நான் டிஸ்ட்டர்ப்பா இருக்க மாட்டேன். சோ தூங்கு'' என்றான்.

தனுவிற்கு தான் ''நீ ரொம்ப நல்லவன் டா'' என மனதில் எண்ணியவாறு உறங்கினாள்.

காலையில் ராமின் அணைப்பில் அவன் நெஞ்சத்தில் இருந்த தனுவை கண்டு மெல்ல அவளுக்கு உறக்கம் கலையாமல் எழுந்து அவன் பணியினை செவ்வனே செய்தான்.

மணி எட்டாகியும் இன்னும் எழாமல் இருக்கும் தன்யாவை எப்படி எழுப்ப என யோசித்தவன் காபி பருகியபடி அவளை ரசித்தான்.

தனுவின் போன் அடிக்க வேகமாக எழுந்தான் யார் என்று பார்க்க அதில் 'ஹோம்' என்றே இருக்க எடுத்து ஆன் செய்தான்.

''தனு கிளம்பிட்டியா? ஒன்பதுக்குள் சாப்பிட வாங்க'' என்று ராதை சொல்ல, ''அ... அத்தை நான் ஸ்ரீராம் தன்யா தூங்கிட்டு இருக்கா ஒன்பதுக்குள் வந்துடறோம்'' என்றதும் ''அச்சோ சாரி... சரி... மாப்பிள்ளை'' என்றே திணறி போனை வைத்தார் ராதை.

இதுக்கு மேல தூங்க விட முடியாது என்று அவளை எழுப்ப முயற்சிக்க அவளோ இமை கூட திறக்கவில்லை. ராமே மெல்ல அவளின் கன்னத்தில் இதழ் பதிக்க அவனின் மீசைபட்ட இடம் குறுகுறுக்க தனு இமை திறக்க ராமின் முகம் நெருக்கத்தில் பதறி எழுந்தவளிடம் கூலாக, ''குட் மார்னிங்.... தன்யா ஒன்பதுக்குள் உங்க வீட்டுக்கு போகணும் சீக்கிரம் குளிச்சு சேலை கட்டு. நான் உனக்கு காபி கலந்து எடுத்து வர்றேன்'' என்றான்.

''அது...''

''என்ன சொல்லும்மா'' என்றான் பவ்வியமாக.

''காபி இல்லை பூஸ்ட்'' என்று அவள் திருதிருவென விழிக்க, ராம் புன்னகையை மறைத்துக் கொண்டு ''இன்னிக்கு காபி குடிச்சிக்கோ நாளையில் இருந்து நீ கேட்ட பூஸ்ட் வாங்கிடலாம்'' என்றதும் குளிக்க சென்றாள்.

ராமோ கிச்சனுள் 'கடவுளே இன்னுமா பூஸ்ட் வேண்டும்? ஆனா சம் டைம் எப்படி பெரியவ மாதிரி நடந்துக்கறா? அஸ்வினிடம் அவள் பேசிய வார்த்தையை சுவாதி கூறும் பொழுது தன்யாவா பேசினாள் என்றிருக்க சில நேரம் இப்படி? என குழம்பி காபி எடுத்துக் கொண்டு அவனின் அறைக்கு வந்து பார்த்தாள்.

குளித்து முடித்து நயிட்டி அணிந்து தலையில் டவல் சுற்றியபடி குழப்பத்தில் இருந்தாள் தன்யா.

இவ குழந்தை மாதிரி பீகேவ் பண்றதால அவளிடம் இருந்து எட்டி இருக்கவா? இல்லை குமரியா இருக்கா என்று நெருங்கவா ஒன்றுமே புரியலையே...! என்று அவளை பார்க்க அவள் டிரஸ் மாற்றாமல் அப்படியே யோசிப்பதை கண்டு ''என்னம்மா இன்னும் டிரஸ் மாற்றலையா?'' என்றான்.

''என்னங்க எனக்கு சேலை கட்ட தெரியாது. இப்போ நான் என்ன பண்ண? சுடிதாரே போட்டுக்கவா?'' என்றதற்கு ராம் இதயத்தை பிடித்துக் கொண்டான்.

''தன்யா நீ சுடிதார் போட்டுக்கிட்டு போன அத்தை உன்னை திட்டிடுவாங்க... சேலை அப்போ இதுவரை யார் கட்டி விட்டது'' என்றான் கவலையோடு ''பவித்ரா அண்ணி... சரி இப்போ என்ன செய்ய?'' இருவரும் யோசித்து ''சரி உனக்கு ஆப் ஸாரி கட்ட தெரியுமா?''

''ஹ்ம்ம்''

''தேங்க் காட்... அப்போ இரு'' என கப்போர்ட் ஒப்பன் செய்து அவளுக்கு இவன் வாங்கிய ட்ரெஸ்ஸில் ஆப் சேரி ஒன்று சேலை போல காட்சி அளிக்க எடுத்து ''இப்போ இதை கட்டிக்கோ அங்க போய் பவித்ராகிட்ட சேலை கட்ட கத்துக்கோ ஓகே... இந்தா இப்போ காபி குடிச்சுட்டு டிரஸ் மாற்றிக்கோ'' என வைத்துவிட்டு வெளியேறினான்.

இவ குமரியா யோசிக்க டைம் வேண்டும் போலயே... அதுவரை நீ இப்படியே ராம் என்றான். கொஞ்ச நேரம் கழித்து கிளம்பி வந்தவளை கண்டு மகிழ்ச்சியோடு காரில் அஸ்வின் வீட்டுக்கு பயணம் செய்தார்கள்.

-தொடரும்.
 
Top