கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விழிகளில் ஒரு வானவில்-27

Praveena Thangaraj

Moderator
Staff member
அத்தியாயம்-27

ஒரு மாதங்கள் கடக்க தன்யா எப்பொழுதும் போல கல்லூரி கிளம்பிக் கொண்டு இருந்தாள்.

''ஸ்ரீ ராம் இன்னும் நீ எனக்கு சாதம் ஊட்டி விடலை... காலேஜிக்கு டைம் ஆச்சு'' என கத்த, ''இதோ வந்துட்டேன்.. என்று ராம் சூடான மினி இட்லியில் நெய் ஊற்றி ஸ்பூனில் ஊதியவாறு அவளுக்கு ஊட்டிவிட்டான்.

''ஏன் ராம் உனக்கு ஆபிஸ் டைம் ஆகலையா?''

''என் தன்யாக்கு ஊட்டி விட்டு அப்பறம் தான் ஆபிஸ்...''

''நான் அன்னிக்கு ஏதோ விளையாட்டா டெய்லி ஊட்டி விடுவியா என்று கேட்டேன் ஆனா நீங்க டெய்லி மார்னிங் நைட் ஊட்டி விடறீங்க''

''லஞ்ச்ல நீ காலேஜில் இருப்ப வீட்டில் இருந்தா கண்டிப்பா வந்து ஊட்டி விட்டு இருப்பேன் தன்யா''

''அதான் ஏன்?''

''தெரியலை... ஆனா எப்பவும் இதே போல உன்னை பார்த்துக்கணும். அவ்ளோ தான்'' என ஊட்டி முடித்து கிளம்பினார்கள்.

எப்பொழுதும் போலவே இன்றும் தன்யா காலர் வைத்த சுடிதார் மெட்டி தெரியாத கட் சூ என்றே கிளம்பினாள்.

இதுவும் ராமின் ஏற்பாடு மற்றவர்களின் ஊடுருவும் பார்வையை தவிர்க்க...

எப்பொழுதும் போல கல்லூரி முடிந்ததும் நேராக அம்மா வீட்டிற்கு சென்று கொஞ்ச நேரம் பொழுதை கழித்து அடுத்து அம்மா செய்து கொடுத்த பலகாரம் எடுத்துக் கொண்டு நிஷாந்தினி வீட்டுக்கு சென்று நிஷாந்தியை பார்த்து சாப்பிட கொடுத்து, இரவு வரை அங்கயே படித்தும் எழுதியும் கூடவே நிஷாவை கவனித்துவிட்டு இரவு ஸ்ரீராம் வந்து அவளை காரில் அழைத்து கொண்டு அவர்கள் வீட்டுக்கு சென்று ஸ்ரீராமின் கையால் உணவினை உண்டு முடித்து அன்றைய கதைகளை பேசியபடி இருவருமே உறங்க செய்வார்கள்.

இதுவே தினசரியை கழிந்து கொண்டே சென்றது. ராமிற்கு தன்யா மனைவி மட்டும் இன்றி, கட்டளை இடும் பொழுது தந்தையாகவும், மடியில் தலை சாய்ந்த பொழுது அவள் வருடும் பொழுது தாயாகவும், கூடவே டிவி சேனலுக்கு சண்டை போடும் பொழுது நிஷாவை நினைவுயூட்டும் உடன் பிறப்பாய்... சில நேரத்தில் சேர்ந்தே சமையலில் ஸ்னாக்ஸ் செய்யும் பொழுது தோழியாய்... அவளுக்கு ஊட்டி விடும் பொழுது குழந்தையாய்... தன்னையும் மீறி இரவில் அவளை அணைத்து கொள்ளும் பொழுது காதலியாய் என்று தன்யா அவனின் வாழ்வில் உயிராய் மாறியிருந்தாள்.

ஒரு நாள் தன்யா வீட்டில் எல்லோரும் சொல்லாமல் கொள்ளாமல் ஞாயிறு சென்று தனுவை பார்த்து வரலாம் என கிளம்பினார்கள். அஸ்வின் எப்பொழுதும் போல கதவினை திறக்க ராம் டைனிங் டேபிளில் அமர்ந்து தன்யாவுக்கு சாதம் ஊட்டிவிட்டு கொண்டு இருக்க சங்கடத்துடன் நெளிந்தவள் தன்யா மட்டுமே.

ஸ்ரீராம் புன்னகையோடு மற்றவர்களை வரவேற்றான். தன்யாவிற்கு தலை தீவாளி என்று இருவரையும் முறையாக வரவேற்று சென்றார்கள்.

முதல் நாள் இரவே சென்றதால் அங்கே ஆகாஷ்-சுவாதி , பவித்ரா-அஸ்வின், தன்யா-ஸ்ரீராம் என மூன்று இளஞ்ஜோடிகளும் ராதை-விஸ்வநாதன் தம்பதியரின் கண்களுக்கு நிறைவாக கண்டு களித்தனர்.

ராதை அடுத்த நாளில் மதியம் எல்லா வகை அசைவ உணவினை சமைத்து பரிமாறிட மீனை ராம் வேண்டாம் என மறுத்தான்.

முதலில் ராதை சொல்லி மறுத்ததும் விட்டுவிட, தனு மட்டும் வற்புறுத்த துவங்கினாள்.

அஸ்வின் ஒரு கட்டத்தில் ''ஏய் வேண்டாம் என்றால் விடு அவன் ஒன்னும் குழந்தை இல்லை வேண்டும் என்றால் கேட்டு வாங்கிக்க போறான்'' என்றதும் ராம் புன்னகைக்க தனுவிற்கு கோவமே வந்தது.

' இந்த அண்ணா ஏன் இப்படி செய்யறான். யாராவது மாப்பிள்ளை பையன் அவனா கேட்டு வாங்குவானா நாம தான் பார்த்து பரிமாறனும் என அர்ச்சித்தாள்.

மூன்று நாளும் முடிந்து எப்பொழுதும் போல அதற்கடுத்த நாளினை கடக்க, தனு கல்லூரி அரை நாள் என்று ராம் மதியம் ஹோட்டலில் சாப்பிட திட்டமிட்டு அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.

ஏனோ தனுவிற்கு அன்று மீன் சாப்பிடாமல் இருந்த ராமினை இன்று சாப்பிட வைக்க நினைத்து ஆர்டர் தந்துவிட்டாள். அவனுக்காக முதல் முறையாக அவள் ஆர்டர் கொடுப்பது என்று அவனும் எதையும் சொல்லாமல் விடுத்துவிட்டான்.

உணவினை கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடித்து அவளை போகும் வழியில் இறக்கிவிட்டு அலுவலகம் சென்றான். தன்யா எப்பொழுதும் போல அவளின் அம்மா வீட்டிற்கு சென்று டிவியில் குழந்தை விகாஷோடு 'சின் சான்' பார்த்துக் கொண்டு இருக்க புயலாக அஸ்வின் வந்து டீவியை நிறுத்தி தனுவை திட்டஆரம்பித்தான். '

'உனக்கு அறிவில்லை... புருஷனுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று தெரிஞ்சு வச்சிக்க கூடாது. இந்த லட்சணத்தில் நீ அவனை மூணு வருஷமா காதலிக்கற?!'' என்று திட்டினான்.

''இப்போ எதுக்கு டா அவளை திட்டுற?'' என்று ராதை தனுவிற்கு ஆதரவாக பேச, ''நீங்க அவளுக்கு சப்போர்ட் வராதீங்க ம்மா''

''என்ன நடந்தது என்று முதலில் பொறுமையா சொல்லு டா அப்போ தானே புரியும்''

''ராமிற்கு சீ புட் அலர்ஜி இவ என்ன என்றால் இன்னிக்கு ஹோட்டலில் ஆர்டர் செய்த உணவு எல்லாம் மீன் வகை அவனுக்கு இவள் முதல் முறையா ஆர்டர் செய்தது என்று அந்த மடையனும் மறுக்கமா சாப்பிட்டு இருக்கான்.

சின்ன வயசில் தடிப்பு வந்தது இப்போ வராது என்று கேர்லெஸ்ஸா இருந்து இருக்கான் ஆனா கொஞ்ச நேரத்தில் அவனுக்கு தடிப்பு அதிகமாகி, ரோஷன் பயந்து எனக்கு கால் பண்ணி இருக்கான். எனக்கு உடனடியான வரமுடியுமா போக மெடிசின் மட்டும் சொல்லி இருந்தேன் ரோஷன் வாங்கி கொடுத்து இப்போ நார்மல் ஆகி வீட்டுக்கு போய் இருக்கான்.

ராம் தீபாவளிக்கு வந்த அப்பொழுதே மீன் சாப்பிடலை... ஏன் என்று கேட்டு தெரிஞ்சுக்கிட்டாளா? எல்லாம் அவனை சொல்லணும் அன்னிக்கே இவ உனக்கு மேட்ச்சாடா இன்னும் விளையாட்டு புத்தி என்று படிச்சு படிச்சு சொன்னேன்.'' என தனுவை முறைக்க, இம்முறை யாரும் அஸ்வினின் பேச்சுக்கு குறுக்கே வரவில்லை.

''அஸ்வின் ராம் அவனுக்கு அலர்ஜி என்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தா அவளே சாப்பிட விட்டு இருக்க மாட்டாள்'' என்று பவித்ரா சொல்லி முடிக்க, ''ஏய் எனக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று நானா சொல்லி நீ தெரிஞ்சுக்கிட்டியா? இவளுக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்று எல்லாம் அவனா தெரிஞ்சுக்கலை...'' என்று கூறி முடிக்க, ''சரி இப்போ ராம் எங்க இருக்கான்?'' ''அவன் வீட்டுக்கு போயாச்சு. இந்த லட்சணத்துல அவன் எனக்கு இது தெரியாம பார்த்துக்க சொல்லி இருக்கான். ஆனா ரோஷன் எனக்கு சொல்லிட்டான்'' என்றதும் கண்ணீர் நிற்காமல் தன்யா வெளியே சென்றாள்.

ஆட்டோ ஒன்றை பிடித்து ராமை காண சென்றாள். அங்கு ராமோ அவள் அழுது கொண்டே வருவதை கண்டு ''இந்த அஸ்வின் ஏன் தான் இப்படி செய்தானோ? தன்யா நான் இப்போ தான் டேப்லெட் சாப்பிட்டேன் தூக்கம் வருது நாளைக்கு பேசிக்கலாம்'' என படுக்க அவளும் அவனின் உடலில் சில இடத்தில் காணப்பட்ட சிவப்பு தடிப்பனை கண்டு அழுகையோடு அவன் நெஞ்சிலே சாய்ந்து உறங்கினாள்.

நள்ளிரவில் தனது மேலே தனுவின் பாரத்தை உணர்ந்தவன் அவளை நகர்த்தி படுக்க வைத்துவிட்டு நீரை தேட அது இல்லாமல் போக எழுந்து கிச்சன் சென்று தண்ணிர் அருந்தியவன் கூடவே தண்ணிர் பாட்டில் எடுத்து அறைக்கு நுழைய தனு அமர்ந்து இருந்தாள்.

''என்னாச்சு முழிச்சுட்டா?''

''.......''

''தூக்கம் வரலையா? எதுக்கு இப்படி உட்கார்ந்து இருக்க?'' என்றதற்கு தனு அமைதியாக இருக்க ''நடந்தது நினைச்சுட்டு இருக்கியா? உனக்கு எப்படி இப்படி ஆகும் என்று தெரியும்... சரி விடு இனி தான் தெரிஞ்சுக்கிட்டியே'' என்றதும் அமைதியாக இருந்தவளை கண்டு அவளை அணைத்து ''என்ன தன்யா?'' என்றதும் அவனை கட்டி அணைத்து முகமெங்கும் முத்தமிட்டாள்.

''ஏய் பயந்துட்டியா?'' என்றதும் இடையில் ஹ்ம்ம் என்ற விசும்பலுடன் நிமிர்ந்தாள். ''எனக்கு இப்படி முகமெங்கும் முத்தம் கிடைக்குமென்றால் இப்படி டெய்லி ரிஸ்க் எடுக்கலாம் போலயே'' என்றதும் ''முத்தம் வேணுமென்றால் ரிஸ்க் எடுக்காதிங்க நீங்க கேட்டாலே தருவேன்'' என்று பேசினாள்.

''நான் கேட்டா என்ன வேண்டுமென்றாலும் தருவியா...?!" என இதழை நோக்கி குனிந்தவனுக்கு திகட்டாத இனிமை கிட்டியது. இல்லறம் நல்லறமாக மாற்றி வாழ ஆரம்பித்தான்.

தற்பொழுது தனது செய்கையில் சில நேரம் அவளாகவே மாறிருந்தாள். சாதாரணமாகவே சுடிதார் அணிந்து வந்தவளை கண்டு தன்யா இப்படி போனா நிறைய சங்கடமான கேள்வி வரும்'' என்றதற்கு வந்தால் நானே சொல்லிக்கறேன்'' என வாதிட்டு சென்றாள்.

அஸ்வினையே எதிர்த்து பேசியவள் எப்படியும் சமாளிப்பாள் என ராமும் விட்டுவிட்டான்.

நேத்ரா பிறந்த நாளும் வந்தன. விகாஷ் பிறந்த நாளினை போலவே நேத்ரா பிறந்த நாளிலும் வீட்டில் மிக எளிமையாக அலங்கரித்து இருந்தார்கள்.

''என்ன அஸ்வின் பவித்ரா வீட்டில் நந்தன் குடும்பம் வந்தாச்சு.. தன்யா-ராம் நிஷா சித்திக் வந்தாச்சு. தவசுடர் எல்லாமும் வந்தாச்சு யாருக்காக வையிட்டிங் உன் ஆபிஸ் ப்ரெண்ட்ஸ் பவித்ரா ப்ரெண்ட்ஸ் கூட இருக்காங்க அப்பறம் என்ன கேக் கட் பண்ணலாமே?'' என விஸ்வநாதன் சொல்ல, ''இல்லைப்பா ஒரு கெஸ்ட் வரணும்" என்று காத்திருக்க யாராக இருக்கும் என்று ராமும் குழம்பினான்.

அப்பொழுது கார் சப்தம் கேட்க வந்துட்டாங்க போல என அஸ்வின் பார்க்க ராமும் யாரா இருக்கும் என எட்டி பார்க்க ராமிற்கு முகம் இறுகியது.

அங்கே கோட் சூட்டில் சஞ்சீவ் கையை பிடித்துக் கொண்டு நகுலன் மிருதுளா வந்து கொண்டு இருந்தார்கள். ''சாரி அஸ்வின் லேட்டா ஆகிடுச்சா... ஒரே டிராபிக்... சாரி'' என்று வந்தார்கள். ராமின் தொழில் முறையில் சதீஷ் என்பவனுக்காக நகுலன் முன்னே வந்து தொழிலில் குறுகீடக இருப்பவனே.

''இட்ஸ் ஓகே நகுலன் சரியான நேரம் தான். வாங்க'' என அழைத்துக் கொண்டான்.

ராமின் அருகே நிற்க வைத்து சஞ்சய்யை மட்டும் நேத்ரா அருகே அழைத்து சென்றான். ஏற்கனவே விகாஷ் தன் தங்கை அருகே இருந்தான்.

கொஞ்ச நாளுக்கு முன்னால் தான் சஞ்சய் பிறந்த நாள் போனதால் அவனும் கேக் கட் செய்வதை ஆர்வமாக பார்த்தான். கேக் கட் செய்து முதலில் நேத்ராவுக்கு ஊட்டி விட அடுத்து யாருக்கு என்று அப்பாவுக்கா? அம்மாவுக்கா? என முழிக்க விகாஷ் அவனுக்கு பிறந்த நாள் அன்று குழந்தை என்று நேத்ராவுக்கு ஊட்டிய நினைவில் தற்பொழுது அவனை விட குழந்தை சஞ்சய் என்பதால் அவனுக்கு ஊட்டிவிட சொல்லியதும் நேத்ராவும் அதே போல செய்ய அங்கே புன்னகையே வெடித்தது.

அடுத்து ஒவ்வொருதராக அருகே சென்று அவளின் பட்டு கைகளில் கேக் சாப்பிட்டு பரிசு கொடுத்தார்கள். நேரம் செல்ல செல்ல சாப்பிட்டு முடிக்க, பாதி பேர் கிளம்பினார்கள்.

அஸ்வின் நகுலிடம் பார்த்து பார்த்து பரிமாறி வேறு என்ன தேவை என்பது போல கேட்க ராமிற்கு சற்றே எரிச்சலாக வந்தது.

அதே நேரத்தில் ரோஷன் அருகே வந்து... ''சார்..'' ''ரோஷன் ப்ளீஸ் வெளி இடத்தில சார் கூப்பிடதே... கால் மீ ஸ்ரீராம் என்று எத்தனை முறை சொல்லி இருக்கேன்'' என்றதும் ''சாரி ராம் ஆனா அந்த நகுலன் தானே இவர்...'' என்றதற்கு ஹ்ம்ம் என்றே தலையை அசைத்தான்.

சித்திக் யார் என்று குடைய... அவனுக்கு தேவையான பதில் கிடைத்ததும் காத்திருந்தான்.

நகுலன் கொஞ்ச நேரத்திலே கிளம்பிட சித்திக் மட்டும் "ஏன் ராம் உனக்கு இரண்டாவது முறையும் உன் கோட் மீறி நகுலனுக்கு எப்படி ப்ராஜெக்ட் கிடைச்சு இருக்கும்'' என்று கேட்டான்.

''தெரிலை.. அவன் இதில் அவன் பிரென்ட் சதிஷ்காக மட்டுமே உள்ள வந்து இருக்கான். ஒன் ஆப் தே பட்னர் தட்ஸ் இட்'' என்று முடித்து கொண்டான் ராம்.

யாரும் எதிர்பாராத தருணத்தில் சித்திக் ''அவனுக்கு எப்படி உன் ப்ராஜெக்ட் கோட் தெரியும். ஒரு வேளை அஸ்வின் நண்பன் என்று கோட் அமெளண்ட் சொல்லி இருப்பானோ?'' என்று கேட்க ராம் அஸ்வினை பார்க்க அஸ்வின் ராமினை பார்க்க ராம் ஏதோ நினைத்து கிளம்பலாம்' என வெளியேறினான்.

அஸ்வின் எல்லோரும் சென்றதால்.... அப்படியே இருக்க அருகில் இரு குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர்.

யாரும் எதையும் பேசாமல் நகர்ந்தார்கள். வருண் மங்கை பாட்டி ஈஸ்வரமூர்த்தி என்று கயல் நந்தன் இருப்பதால் விஸ்வநாதன் வேறு எதையும் தற்பொழுது பேச வேண்டாம் என்றிருக்க, எல்லோரும் எப்பொழுதும் போல பேசியப்படி, அஸ்வின் அப்படியே அமர்ந்தான்.

அவனின் முகம் மற்றவர்களுக்கு எதையோ உணர்த்த யாரும் அவனிடம் நெருங்கவில்லை. ராமோ அமைதியாக காரினை ஓட்ட அதை சாதகமாக எண்ணிய சித்திக், ''என்ன ராம் நீ அமைதியா இருப்பதை பார்த்தால் அஸ்வின் தான் சொல்லி இருப்பானோ? அந்த நகுலனுக்கு வரவேற்பை பார்த்தியா? தனி மரியாதை போல இல்லை'' என்று சொல்ல தனுவோ ''அஸ்வின் அண்ணா அப்படி செய்வார் என்று...'' சொல்லும் பொழுதே காரினை நிறுத்தினான்.

அடுத்த நொடி பளார் என்று தன்யா கன்னத்தில் ஒரு அரை விழுந்தது. ''லுக் எப்போ பாரு என் அஸ்வினை திட்ட ஆரம்பிச்ச கொன்றுடுவேன்... என் அஸ்வின் பற்றி எனக்கு தெரியும். அவன் ஒன்னும் சீப்பா நடக்கற ஆளு இல்லை.

மற்றவங்க பேசறது எனக்கு தேவையில்லாது. ஆனா நீ அவன் தங்கை தானே.. உன்னால எப்படி யோசிக்க முடிந்தது'' என்றே நிறுத்த, ''நான் என்னசொல்ல வர்றேன்னு முதலில் தெரிஞ்சுக்குங்க. அஸ்வின் அண்ணா அப்படி செய்வார் என்று நீங்க நினைக்கறீங்களா என்று உங்களை திட்றதுக்கு நான் இருந்தேன் ஆனா நீங்க என்னை அடிச்சு என்னையே பழி சொல்லி திருப்பறிங்க'' என்றதும் ராம் இமையினை மூடி திறந்து ''சாரி தன்யா எனக்கு மற்றவர்கள் மேல கோவம் அதை நீ பேசறதை கூட முழுசா கேட்காம உன்னை அடிச்சுட்டேன்'' என்று சித்திக்கை பார்க்க, நிஷாவோ சித்திக்கை இம்முறை திட்டினாள்.

''உங்களுக்கு அஸ்வின் மேல கோவம் போகலை என்று புரிது ஆனா முன்பு தவறு செய்தது நீங்க அப்படி இருக்கும் பொழுது நானே மன்னிச்சு விட்டுட்டேன். நீங்க அஸ்வின் உங்களிடம் நடந்து கொண்டதை மனதில் இன்னும் வைத்து இருப்பிங்க என்று நினைக்கலை'' நிஷா வீட்டில் இறக்கி விட்டு நிஷாவிடம் ''நிஷா அஸ்வின் விஷயத்தில் யார் குறுக்கே வந்தாலும் எனக்கு அவன் தான் முதலில் முக்கியம் அது புரிஞ்சுக்கோங்க...'' என கிளம்பினான்.

''வீட்டுக்கா போகிறோம்...'' என்றதற்கு இல்லை அஸ்வினை பார்க்க போறேன் நீ வீட்ல இரு...'' என்றான்.

''இல்லை நானும் உங்க கூட வர்றேன்'' என்றதும் காரினை அஸ்வின் வீட்டில் நுழைத்தான்.

எல்லோரும் கிச்சன், ரூம் என்றிருக்க காலிங் பெல் அடித்ததும் அஸ்வின் வேறு வழியின்றி திறக்க, ராம் நிற்பதை கண்டு ''அம்மா இந்த வீட்டு மாப்பிள்ளை வந்து இருக்கார் வாங்க மாப்பிள்ளை...'' என்றான்.

ராமிற்கு செம கோவம் வந்தது. அஸ்வின் அவனை மாப்பிள்ளை என்று அழைக்க எவ்வளவு ஆசையாக தவித்தான் இன்று இது போல் ஒரு சூழ்நிலையில் அல்லவா சொல்ல வேண்டும்? என நினைத்து வருந்தினான்.

''உள்ள வாங்க...மாப்பிள்ளை'' என வேண்டுமென்றே கூப்பிட, ''நேராக அஸ்வின் காலரை பிடித்து "டேய் என்ன டா புது மரியாதை எல்லாம் தர்ற... அவ்ளோ வேண்டாதவனா மாறிட்டேனா... அவன் பேசியதுக்கு நான் என்ன செய்ய அவனை நாலு அரை விட வேண்டியது தானே... உனக்கு என்ன புதுச? ஏன் டா என்னை இப்படி பேசி கொள்ளற...'' என்று உலுக்கினான்.

'நீ அவன் பேசியினதுக்கு மவுனமா போயிட்டியே... அப்போ நான் என்ன செய்ய?'' என்றான் அஸ்வின் திரும்பி நின்று.

''டேய் அவனால மேலும் பிரச்சனை வரக்கூடாது என்று இங்கிருந்து அவனை கூப்பிட்டுட்டு போனேன்... ஆனா நீ.. நான் உன்னை போய் அப்படி நினைச்சேனு எப்படிடா யோசிச்ச...'' என்று ராம் கூறவும் அஸ்வின் அமைதியாக இருந்தான்.

''ஏன் ராம் நகுலனோடு நான் பழக்கறது உனக்கு பிடிக்கலை தானே...?'' என்றான் அஸ்வின்.

இம்முறை ராம் அமைதியாக மாறினான். ராமின் அமைதியில் நகுலின் நட்பு அவனுக்கு பிடிக்கவில்லை என உணர்ந்தவன்.

''நிஷா விஷயமா ஆஸ்திரேலியா போனப்ப... நகுலனின் உறவுகாரங்க தான் அந்த ஹாஸ்பிடல் டீன்... எனக்கு வேலை ஈஸியா முடிய காரணம் ஒரு விதத்தில் நகுலன் தான் ஆனா அது அவனுக்கே தெரியாது... அதனால் தான் அவனை தனி மரியாதையாய் நடத்தினேன்....'' என்று விளக்கினான்.

''சாரி அஸ்வின் எனக்கு நீ மட்டும் தான் ப்ரெண்ட். எனக்கு அம்மா இறந்தப்ப...அப்பா இறந்தப்ப... கூடவே இருந்த நீ... அவன் வரும் நேரம் நீ என்னை விட்டு பிரியற மாதிரி பீல் அதனால் தான்...'' என்று காரணம் உரைத்தான்.

''சரி விடு அவனை என்ன செய்த...?'' என்றதற்கு ''ஒன்னும் செய்யலை... செய்ய முடியலை ஆனா... தன்யாவை...'' என திரும்ப தனுவோ ''அது ஒன்னுமில்லை அண்ணா என்னை திட்ற மாதிரி இன்-டேரக்ட்டா அந்த அண்ணாவை திட்டிட்டார்'' என சொல்லி சிரிக்க அவளின் கன்னத்தில் ராமின் கை தடயம் கண்டு மீண்டும் முறைத்தான்.

''ஏன் டா கல்யாணத்துக்கு முன்னாலே நீ பவித்ராவை அதுவும் பார்த்து ஒரு வராமே ஆனா பொழுது நீ அடிக்கலாம் நான் என் ஒய்பை அடிக்க கூடாதா? என்னடா இது நியாயம்?!'' என்று கேட்க அஸ்வின் சிரித்தும்...

''அப்பாடி நீ சிரிச்சுட்டியா அச்சு'' என பவித்ரா நிம்மதி அடைய, மங்கை பாட்டி எல்லோரையும் சேர்த்து வைத்து திருஷ்டி கழித்தார்கள்.

"ஊரு கண்ணே பட்டுடுச்சு... அதன் சில மன கசப்பு...'' என சொல்லி திருஸ்டி கழித்தார்கள். மேலும் சில நேரம் பேசி செல்ல நினைத்த ராமினை கயலும் வருணும் போக விடாமல் அங்கயே தங்க வைத்து இரவு முழுதும் கேளிக்கையோடு மகிழ்ந்தார்கள்.
 
Top