கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விழிகளில் ஒரு வானவில்-28

Praveena Thangaraj

Moderator
Staff member
அத்தியாயம்- 28

அன்று தன்யா கல்லுரியில் ஒவ்வொரு டிபார்ட்மென்டும் தனி தனியாக ஒரு ஆசிரம பிள்ளைகளின் உடல் சிகிச்சைக்காக பணம் திரட்ட ஒரு நாள் கிளம்பினார்கள். ஏற்கனவே இதை பற்றி அறிந்த மாணவ மாணவியர்கள் தங்களுக்கு தெரிந்த சிலரின் உதவியோடு அதிக பணம் திரட்டினார்கள்.

எப்பொழுதும் இங்கிலிஷ் டிபார்ட்மென்ட் அதிகம் வசூலிக்கும் என பெருமை இருக்க ஜூவாலஜி டிபார்ட்மென்ட் தன்யாவும் எங்கே செல்கின்றாள் என அறியாமல் SR கன்ஸ்ட்ரக்ஷன் செல்ல நேர்ந்தது.

அங்கு ரோஷன் தன்யாவை பார்த்துவிட்டு நேராக ஸ்ரீராமிடம் சொல்ல ஸ்ரீராமோ cctv யில் தன்யாவை கண்டு அந்த ஆறு பொண்ணுங்களையும் மேல வரச்சொல்லுங்க என கீழே இருக்கும் தொலைப்பேசிக்கு சொல்லிட ரோஷன் வெளியேறினான்.

தனு உள்ளே வரும் முன்னே ரோஷனை கண்டு இவர் எங்க இங்க என யோசித்து உள்ளே வரலாமா சார் என மாணவியர்கள் நுழைந்தார்கள்.

அங்கே ராமை சிறிதும் எதிர்பார்க்காமல் இருக்க தனுவிற்கு மயக்கமே வந்தது. கொஞ்சம் சமாளித்து திருதிருவென விழிக்க, அவளோடு வந்த பெண்கள் ஆசிரமம் பெயர் சொல்லி இத்தனை குழந்தைக்கு ஆபரேஷன் செய்ய போறாங்க எங்க காலேஜில் டோனட் கேட்டாங்க மாணவர்கள் எல்லோரும் கலெக்ட் செய்ய வந்தோம்... நீங்க ஏற்கனவே அந்த ஆசிரமம் போவீங்க என்று அங்க இருந்தவங்க சொன்னாங்க..'' என அப்பெண் சொல்ல, ''எவ்ளோ அமௌட் நீங்க கலெக்ட் பண்றதா இருக்கீங்க?'' என்றான்.

''சார் எப்பவும் மணி கலெக்ட் பண்றதுல இங்கிலிஷ் டிபார்ட்மென்ட் 50000 ஆயிரம் கிட்ட சேர்த்திடுவாங்க....''

''உங்களுக்கு 50000 போதுமா?'' என்றான் தன்யாவை பார்த்து அங்கிருந்த எல்லா பெண்களும் ''சார் விளையாடாதீங்க... என்றதும் அவன் கையெழுத்து போட்டு நீட்ட மற்ற பெண்கள் நிஜமாகவே வாயை பிளக்க தன்யா மயங்கி சரிந்தாள்.

ஸ்ரீராம் உடனே ''ஏய் தன்யா...'' என வேகமாக அவளை பிடிக்க, அப்பொழுது தான் மற்ற பெண்களும் விழித்தார்கள்.

''ரோஷன் கால் மீ டாக்டர்...'' என்றவன் அவளை அங்கே சோபாவில் படுக்க வைத்தவன்... ''தன்யா இங்க பாரும்மா...'' என கன்னத்தை தட்டி எழுப்ப வந்த பெண்களில் ஒருத்தி ''ஏய் தன்யாவை டெய்லி டிராப் செய்வாரே...? அவர் தானே இவர்'' என்றதும் பெண்கள் ''அட ஆமால... எங்கயோ பார்த்த மாதிரி இருந்துச்சு.. அப்போ இவர் தன்யா ஹஸ்பண்ட்டா'' என விழிக்க அதற்குள் டாக்டர் வர அவளை பரிசோதித்தார்.

''ஷி இஸ் பிரக்னன்ட்... ராம்..காங்கிராட்ஸ்...'' என்றதும் ராமிற்கு மகிழ்ச்சியின் விளிம்பில் இருந்தான். அடுத்து அங்கிருந்த பெண்களும் வாழ்த்து சொல்லி கிளம்ப ராம் தன்யா மட்டும் இருந்தார்கள்.

''ஏன் என்கிட்ட சொல்லலை தன்யா...'' என்றான் ராம்.

''எனக்கே தெரியாது... இங்க வந்ததிலேருந்து ஒரே கேர்... ஷாக் தான் அதுல மயங்கிட்டேன்... நிஜமா எனக்கு டேஸ் எல்லாம் எண்ணி வைக்கலை...சாரி ஸ்ரீராம்'' என சொல்லியவளை காற்று கூட போகாத வண்ணம் இறுக அணைத்தவன்.

''முதலில் உங்க வீட்ல போய் சொல்லுவோம்.... எனக்கு எவ்ளோ ஹாப்பி தெரியுமா இப்போ நானும் கம்ப்ளீட் பேமிலி மேன் ஆகிட்டேன்... லவ் யூ தன்யா..'' என்று அவள் தலையில் இதழ் பதித்தான்.

நேராக அஸ்வின் வீட்டில் செல்ல அங்கே நீங்க சொல்லுங்க ராம் ப்ளீஸ் எனக்கு எப்படி சொல்றதுனு தெரியலை'' என தயங்கினாள்.

''அடிப்பாவி எனக்கு மட்டும் வெட்கம் இல்லையா?'' என ராம் சொல்ல ஒரு வழியாக வீட்டுக்கு வந்து சேர இருவரும் கண்களில் மாற்றி மாற்றி நீ சொல்லு என்ற பார்வை பார்க்க கடைசியில் ராமே ''பவித்ரா இன்னிக்கு தன்யா மயங்கி விழுந்துட்டா...'' என்றான்.

''என்ன ஆச்சு தனு ஒழுங்கா சாப்பிடலையா?'' என்று பவித்ராவும் ''அப்படி இருக்க வாய்ப்பு இல்லையே... தன்யா தான் ஸ்னாக்ஸ் பிரியர் ஆச்சே'' என்று சுவாதி கேலி செய்ய ''அது அவள் இப்போ தாய்மை அடைஞ்சு இருக்கா...'' என்று ராம் உரைத்தான்.

ராதை தனுவிடம் வந்து அப்படியா என்று பார்வையில் கேட்க அவளும் ஆம் என்பது போல தலையை உலுக்கினாள். ''டேய் நீயும் அஸ்வினும் ஏதாவது சொல்லி வச்சி வேலை செய்திங்களா? என்ன ஒரே நேரத்தில் ரிலீஸ் பண்றிங்க''என்று ராமின் காதில் பவித்ரா மெல்லகேட்டாள்.

''அப்போ நீயுமா?'' என்றான்.

அவனின் கேள்வியில் பவித்ரா அஸ்வினும் முகம் சிவக்க, இரு ஜோடிகளயும் பெரியவர்கள் வாழ்த்தினார்கள்.

பவித்ரா நான்கு மாதம் கருவும், தன்யா 38 நாள் கருவும் வயிற்றில் சுமந்தார்கள். ராதையின் அறிவுறுத்தலின் படி முதல் வேலையாக டாக்டர் பார்த்து வந்தார்கள் அன்று ஸ்கேன் எடுத்து முடித்து அதன் ரிப்போர்ட் மட்டும் நாளை வந்து வாங்க சொல்லியதால் ராமும் தனுவும் டாக்டரிடம் சாதாரணமாக ஆரோக்கிய உணவை மட்டும் சாப்பிட சொல்லியும் பார்த்து இருக்க சொல்லியும் சென்றார்கள்.

அடுத்த நாள் தனு அந்த பக்கம் காலேஜ் முடிந்து வருவதால் அவள் மட்டும் சென்று ஸ்கேன் வாங்க செல்ல அங்கே டாக்டர் அவளுக்கு சொல்லிய செய்தி திகிலை கிளப்பியது.

டாக்டர் சொல்லியதை ஸ்ரீராமிடம் சொல்லவும் தயக்கம் இருக்க யாரிடமும் சொல்லாமல் மறைத்தாள்.

அன்று சித்திக் ஹாஸ்பிடலில் இருந்து வந்து சாப்பிட வரும் பொழுதே அரசியல் கட்சிகள் சிலர் அங்கங்கே வம்பு செய்வதை கண்டு வீட்டிற்கு சென்றான். அங்கே நிஷாந்தினி ஹாலில் இருந்து வெளியே வந்து இருந்தாள்.

''என்னாச்சு நிஷா? எதுக்கு இப்படி வெளிய நிற்க?'' ''இல்லைங்க என்னனு தெரியலை காலையில் இருந்து வயிற்றில் கொஞ்சம் அசைவு அதிகமா இருந்துச்சு இப்போ அசைவே இல்லை.ஹாஸ்பிடல் கிளம்பலாம் என இருந்தேன். நீங்களே வந்துவிட்டிங்க'' என்று பயந்தாள். அவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாததால் வெகுவாய் பயந்தாள்.

''வெளிய ஒரே அரசியல் கட்சி ஏதோ தகராறு போல நாம வெளிய போறது சேப் இல்லை நிஷா''

''சரி சாப்பிட வாங்க... என நிஷா உணவு பரிமாறினாள்.

சாப்பிட்டு கொண்டு இருந்தவனின் கைகளை பலமாக இறுக்கி பிடித்த நிஷா "முடியலை ஏதோ ஸம்திங்க் ராங்... நாம கிளம்பலாம்... ராமுக்கு போன் செய்யுங்க கார் எடுத்துக்கிட்டு வர சொல்லுங்க'' என்று கதறினாள்.

சித்திக் பல முறை முயன்றும் ராமின் எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது என்றே வர ஓலாவிற்கு அழைத்தான். அதிலோ ''சார் வெளிய செம அடிதடி இப்போ எந்த காரும் வராது'' என இரண்டு மூன்று டிரைவர் பதிலளித்திட.. சித்திக்கிற்கு என்ன செய்வதே புரியாமல் தவித்தான்.

நிஷா அந்த நிலைமையிலோ ராம் எடுக்கவில்லை என்றால் அஸ்வினுக்கு போடுங்க என்றதும் சித்திக் முதலில் தயங்கினான்.

அஸ்வின் என்றால் சித்திக்கிற்கு ஆகாது இதில் கொஞ்ச நாளுக்கு முன் வேறு ஸ்ரீராம் அஸ்வின் சண்டை தன்னால் தானே ஆரம்பம் ஆனது. அதனால் நிச்சயம் எடுக்க மாட்டான் என நினைத்து நிஷா சொல்லிய காரணத்தில் போன் செய்ய மறுபக்கம் அஸ்வின் எடுத்தான்.

''சொல்லு நிஷா.. ஐயோ சொல்லு அண்ணி'' என்று திருத்தி அழைத்தான்.

''நான் நான் சித்திக்...'' என்றான் இறுக்கமாய்.

''ஹ்ம் சொல்லுங்க'' என்றான் அஸ்வின் மிக சாதரணமாய்.

''என்னனு தெரியலை நிஷாந்தினி உடல் நிலை சரியில்லை... ஐ திங்க் குழந்தை குடலை சுற்றி இருக்கு என்று நினைக்கறேன் மூவ்மென்ட் இல்லை. ஹாஸ்பிடல் போகலாம் என்றால் இங்க ஏதோ அரசியல் கட்சி தகராறு கேப் எதுவும் வர முடியாது என்று சொல்றாங்க... ராம் போன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கு... அதனால் தான்....'' என்று விவரித்தான்.

''டென் மினிட்ஸ் கிளம்பி இருங்க வந்துடறேன்'' என்று வைத்தவன் சொல்லியது போலவே காரோடு வந்து சேர்ந்தான். வழியில் குறுக்கு சந்தில் எல்லாம் காரினை விடுத்து மருத்துவமனைக்கு செல்ல முயன்றான்.

ஒரு இடத்தில் வழி மறித்து சிலர் பேசிக்கொண்டு இருக்க, அஸ்வின் அவர்களை கண்டு சித்திக்கிடம் வழி விட சொல்ல சித்திக் கீழே இறங்கி சொன்னான். அவர்களோ அவர்களின் கட்சி பிரச்னையில் வழியை விட மறுக்க சித்திக் மிகவும் கெஞ்சி போராடி தோற்றான்.

நிஷா மயக்க நிலைமையை கண்டு அஸ்வின் பொறுமை இழந்து அவனாகவே கீழே இறங்கி, ''என்ன பிரச்சனை உங்க அரசியல் பிரச்சனை அப்பறம் பேசுங்க உள்ள பிரக்னன்ட் லேடி இருக்காங்க'' என்றதற்கு ''அதுக்கு வழி விடணுமா போடா'' என ஒருவன் சொல்ல அஸ்வினுக்கு கோவமே எழுந்தது.

ஒரு அரை விட பொறி கலங்கி நின்றவனை கண்டு காரினை எடுத்து ஏற்றுவதை போல வந்தவன் உடனே அவன் வழிவிட்டு அப்படியே கத்தினான்.

''மவனே கையில் சிக்கின அவளோ தான்'' என்றதற்கு அஸ்வின் ரிவர்ஸ் கீர் கொடுத்து பின்னால் வந்து அவர்கள் செல்லும் ஹாஸ்பிடல் பெயரை சொல்லி ''....... அங்க தான் போறேன் முடிந்தா அங்க வந்து மீதி வீரத்தை காட்டு'' என்று வேகம் எடுத்தான்.

சித்திக் அமைதியாக வந்து ஹாஸ்பிடலில் சேர்த்தான். அந்த அரை அவன் வாங்கிய அதே அரை... என்றதும் நினைத்து பார்த்தவன் வேறு சிந்தனை தோன்றிடாமல் நிஷாந்தினி பற்றியே சிந்தித்தான்.

இது ஒன்றும் ஒன்பதாம் மாதம் இல்லையே....?! பின் எதனால் என யோசித்தவனின் எண்ணத்தை கலைக்கும் விதமாக.... ''இவன் கூட வந்தவன் தான் அண்ணா... எங்கடா அவன்'' என்று கேட்டு முடிக்க அஸ்வின் உள்ளே கையை நன்கு அலம்பி முகம் அலம்பி வெளியி வர அங்கு பிரதாப் மற்றும் அவன் தம்பி என்று அவனின் ஆட்கள் இருக்க, அஸ்வினை கண்டவன் மெல்ல முனங்களாக, ''டேய் இவன் கிட்டயா? பேசாம போயிடு ஏற்கனவே தேர்ட் இயர்ல என்னை அடிச்சவன் இவன். அதுக்கு பழிவாங்க நினைச்சு இப்போ கொஞ்ச நாள் முன்ன என் தம்பியும் அடிவாங்கினான் வேண்டாம் தப்பு என்றால் இவன் திரும்ப அடிப்பான் போயிடலாம்'' என்று திரும்ப அவனின் குரல் சித்திக்கை எட்டிட அஸ்வின் ''இவனுங்களா?'' என்று யோசிக்க, பிரதாப்போ ''ஒன்னுமில்லை அஸ்வின் பசங்க கொஞ்சம் பேருக்கு அடி அதனால வந்தோம்'' என்று நழுவினான்.

அஸ்வின் அவனை முறைத்தான். சப்தமில்லாது மற்றவர்கள் வெளியேறிட சித்திக் அஸ்வினிடம் ''சாரி அஸ்வின் எனக்கு மன்னிப்பு கேட்குற தகுதி இல்லை. ஆனா என் தவறை நீ சுட்டி காட்டும் பொழுது இருந்த என் கோவம் உன்னை பழித்தீர்க்க தான் ஸ்ரீராமுக்கு உனக்கும் பிரிவு வர மாதிரி அப்படி பேசினேன். நிஷா என்னை மன்னிக்கும் பொழுதே அதையும் மறந்து இருக்கனும் என்ன என் ஈகோ சின்ன பையனிடம் அடிவாங்கிய அவமானம். ஆனா இன்னிக்கு புரிஞ்சுக்கிட்டேன்... என் கோவம் எல்லாம் வேண்டாதது. இப்பவும் நான் மன்னிப்பு கேட்காம இருந்தா அது ரொம்ப பெரிய தப்பு.'' என்று வருந்தினான்.

''எனக்கு ஆகாஷ் அடிக்க இருக்கற உரிமை எப்படியோ, அது மாதிரி தான் நீங்களும். நான் அப்படி தான் நினச்சேன் இனி இது பற்றி பேசாதீங்க. எனக்கும் ஸ்ரீராமுக்கு ரொம்ப புரிதலான நட்பு அது எதனாலயும் யாராலயும் கெடாது. கெடவும் விடமாட்டோம். அவனும் நானும் இப்பவும் அதே நண்பர்கள் தான். நீங்க பிரிக்கலை புரியுதா?''என்றான் அஸ்வின்.

''சார் அவங்களுக்கு டெலிவரி ஆகிடுச்சு ஆண் குழந்தை குறை மாசத்துல பிறந்து இருக்கு டாக்டர் சொல்ல சொன்னாங்க. குழந்தையை கொஞ்சநாள் ரொம்ப ஜாக்கிரதையா பார்த்துக்கிட்டா போதும்...'' என நர்ஸ் சொல்லி செல்ல ''காங்கிராட்ஸ்... ஹ்ம்ம்ஆண் குழந்தை பட் ரொம்ப நல்லா வளர்க்கணும் சரியா?" என கரத்தினை நீட்டினான் அஸ்வின்.

சேனை தண்ணிர் கொடுக்கும் பொழுது சித்திக் சுற்றி பார்த்து ராம் அருகே சென்று அஸ்வினை கை பற்றி வந்து சீனி தண்ணீர் நீட்டினான். அஸ்வின் ஒன்றும் புரியாமல் ராமினை பார்க்க அவனோ ''டேய் நீ சீனி தண்ணி வை'' என்று ஆமோதித்தான்.

இது போல பழக்கம் அவனுக்கு இல்லை என்பதால் தயங்கி தயங்கிய அந்த தண்ணீரை தொட்டு அந்த குழந்தையின் நாவில் வைக்க அக்குழந்தையோ அந்த நீரை சுவைத்தது.

அடுத்து விகாஷ் வந்து 'சித்தா நானு' என்றதும் சித்திக் கண்டிப்பா என அவனை தூக்கி தம்பிக்கு நீங்க வைங்க என்றறுசொல்ல விகாஷும் அஸ்வின் செய்தது போலவே சீனி நீரை குழந்தையின் வாயில் வைக்க அக்குழந்தையோ கையினையும் சேர்த்தே சுவைத்தது.

''சித்திக் பெரிப்பா தம்பி என் கையை கடிக்கறான்'' என்று சொல்ல சிரிப்பொலி நிறைந்தது.

தனுவிற்கு பயமே தோன்றியது. சித்திக் அண்ணா டாக்டர் நிஷாந்தினி அண்ணியும் டாக்டர் ஆனாலும் இன்று அவர்கள் கையை மீறி குழந்தை குறை பிரசவத்தில் எட்டாம் மாதத்தில் பிறந்தது.

கடவுள் அருளால் அஸ்வின் அண்ணா மட்டும் சரியான நேரத்திற்கு கொண்டு வந்து இருக்கின்றான். இதே போல எனக்கும் ஏதாவது சூழ்நிலை வந்தால்...? உள்ளே இருக்கும் சிசு வேறு.... தனக்கு எப்படியும் சுகபிரசவம் நிச்சயம் இல்லை என்று டாக்டர் சொல்லி இருக்கின்றார். அதனால் கூடிய நேரத்துக்கு முன்னதாகவே ஹாஸ்பிடல் வந்து அட்மிட் ஆகிட வேண்டும் என வழிந்த வியர்வையை துடைத்தபடி யோசிக்க துவங்கினாள்.
 
Top