கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விழிகளில் ஒரு வானவில்-3

Praveena Thangaraj

Moderator
Staff member
அத்தியாயம் -3

புதிர் போட்டபடி 'எல்லாம் ரிலீப் ஆகிடுச்சு எப்பவும் போல ஜாலியா இருந்தேங்க. அவளால் தான் இப்போ.... இன்னும் தெரியலையா? நான் யாரை விரும்பறேன் என்று தன்யா விஸ்வநாதன். ஆமாங்க அஸ்வின் தங்கை தனுவை தான்.

நான் எப்பவும் மனசுல அவளை தன்யா என்று முழு பெயரையே கூப்பிடுவேன் எனக்கு அவளின் தனுவை விட அது தான் பிடிக்கும்.

நான் இதுவரை அவளிடம் பேசியது இல்லை. ஏன் அவளும் என்னிடம் பேசியது இல்லை. ஆனா அவள் என் மேல அதிகமா காதல் வச்சி இருக்கா. இப்போ என்ன பண்றது? அஸ்வின் முன்னால எப்படி நின்று பேச? அவனுக்கு நான் செய்யற துரோகம் தானே. அதான் அவள் என்னிடம் லவ் சொல்லியும் எனக்கு பிடிக்கலை என்று சொல்லிட்டு இருந்தேன். இங்கயே இருந்தா அஸ்வின் நட்பை இழந்துடுவேனோ என்று பயமா இருக்கு.

முதல் முறை அவளை பவித்ரா வீட்ல கையை பிடிச்சு கூப்பிட்டு வந்த அப்போ எனக்கு அவளின் மிரண்ட பார்வை தான் ரொம்ப நேரம் நெருடுச்சு அதன் பிறகு அதை நான் மறந்துட்டேன். ஆனா அவளை நான் அப்போ பார்த்த அந்த ஒரு நொடி பார்வையில் அவளுக்கு எல்லாம் நானாக தோன்றிட்டேன் போல அதுலயிருந்து என்னை விரும்பி இருக்கணும். எவ்ளோ சொல்லி புரிய வைக்க முயன்றேன் முடியலை.

அஸ்வின் பவித்ரா மேரேஜ் முடிஞ்சு ஒரு த்ரீ மந்த்ஸ் இருக்கும் அப்போ அவனோட வீட்டுக்கு போனேன். எப்பவும் எனக்கு ராதை ஆண்ட்டி காபி தருவாங்க. ஆனா தன்யா இருந்தா ஜூஸ் தான் தருவா... எப்பவும் போல குடிச்சுட்டு டேபிளில் வைத்து விட்டு அஸ்வின் வர நேரமாகுது என்று நானே அவன் ரூமுக்கு போனேன். கதவை தட்ட போனா பவித்ரா குரல்,

''மரியாதையா வழி விடு அச்சு கீழே ராம் வந்துட்டான்''

''ஏய் பச்சரிசி.. எனக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துட்டு போ நான் ஏன் தடுக்க போறேன்''

எனக்கு புரிஞ்சுடுச்சு நியூ மெரீட் கபில்ஸ் ரொமான்ஸ் என்பதால் சரி கீழே போகலாம்னு திரும்பிட்டேன். அச்சு வெல்லம்-பச்சரிசி அஸ்வின்-பவித்ரா செல்ல பேருங்க. யாருகிட்டயும் சொல்லிடாதீங்க.

இப்படி சந்தோஷமா சிரிச்சுகிட்டே கீழே வந்து கிட்சேனை பார்க்க அப்போ தாங்க ஷாக். என்னோட ஜூஸ் டம்பளர் கடைசி சொட்டு ருசிச்சு முடிச்சா தனு. அப்படியே திரும்பி என்னை பார்த்ததும் தலையை குனிஞ்சு அழுகைய அடக்கிக்கிட்டு இருந்தா. எனக்கு அப்போ செம கோவம். ராதை ஆன்ட்டி டிவி பார்க்கறாங்க. அஸ்வின் மட்டும் இதை பார்த்தா என்னாகி இருப்பான்.

உடனே கிளம்பிட்டேன். ராதை ஆன்ட்டி மட்டும் ''என்ன ராம் உடனே கிளம்பிட்ட'' என்று கேட்டாங்க என்ன சொல்ல...

''வேலை ஆன்ட்டி ரகு அங்கிள் கால் பண்ணினார் அதனால அஸ்வினை அப்பறம் போனில் கூப்பிடறேன்'' என்று வெளியேறிட்டேன்.

வீட்டுக்கு வந்ததும் என்னால அதனை தாங்க முடியலை. தனு நினைச்சாளே அஸ்வின் நட்பு தான் முன்னே வந்து நிற்குது. மனசே சரியில்லை. என் அஸ்வினின் நட்பை எப்படி பாழ் பண்ணுவேன். யோசிச்சேன் தன்யா சின்ன பொண்ணு இப்போ தான் காலேஜ் அடியெடுத்து வச்சி இருக்கறா. என் மேல அவளுக்கு அபக்ஷன் தான் அதனை அவளுக்கு புரிய வைத்து விட்டாள் எல்லாம் முடிந்தது.

எப்பவும் வருகின்ற வழியில் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். நல்ல வேளை அஸ்வின் நானும் படிச்ச காலேஜ் இல்லை. அங்க எல்லோருக்கும் எங்களை தெரியும்.

என் தன்யா வந்துட்டு இருந்தா. என்னை பார்த்ததும் அவளின் கால்கள் மெல்ல மெல்ல நடை நின்றது. அவளுக்கு அட்வைஸ் பண்ற நானே அவளை ரசிக்க ஆரம்பிச்சுட்டேன். அப்பவே என் இதயம் என்னிடம் இல்லை அத நான் உணரலை.

''உங்கிட்ட பேசணும் காரில் ஏறு'' முறுக்கிட்டு இருந்தேன். ஏன் எதுக்கு எதுவும் கேட்காம ஏறினாள். அவளுக்கு தெரியும் நான் அவளை திட்ட போறேனு. கொஞ்சம் தள்ளி இருக்கற தெருவா போய் நிறுத்தினேன்.

''என்ன பண்ணிருக்கற தெரியுமா? யாராவது பார்த்திருந்தா என்னவாகி இருக்கும்? ஏன் இப்படி பண்ணின?'' என்றேன்.

''நா... நான்.. உங்க..''

''ஷட் அப் தன்யா. முட்டாள் தனமா உளறாதே'' என்றதும் விசும்பலுடன் அழுதாள். அவ அழுகை எனக்கு தான் வலிச்சது. இருந்தும் அவளை திட்டினேன்.

''இங்க பாரு நீ பண்ணினது பெரிய தப்பு. ஏதோ சின்ன பொண்ணு தெரியாம செய்துட்ட என்று விடறேன். உன் மனசுல இந்த மாதிரி எண்ணத்தை அடியோடு விட்டுடற புரிதா?''

''நா... நான் சின்ன பொண்ணு தான். ஆனா ஆசைப்பட்டது தப்புனு தோணலை'' என்றாள்.

''ஏய்... நான் பொறுமையாய் சொல்றது புரியலை''

''நல்லாவே புரியுது. என் காதலை அழிக்க சொல்றிங்க ஆனா அழிக்க முடியாது''

''அடிச்சேன் வை கன்னம் செவந்து போகும் பெரிய காதல். ஸ்கூல் முடிஞ்சு இப்ப தான் காலேஜ் அடியெடுத்து வச்சி இருக்க அதுக்குள்ள லவ்'' என்று திட்டினேன்.

''ஏன் வரக்கூடாதா?'' வீம்பு பிடிச்சி பேசினா.

''என்ன கோவப்படுத்தாத தனு. உனக்கு வந்து இருக்கறது இன்பேக்சிவேக்ஷன் காதல் இல்லை''

''என்ன சொன்னா இது ட்ரு லவ் என்று நம்புவீங்க'' கொஞ்சம் குரல் உயர்த்தினாள்.

''லுக் விட்டா பேசிக்கிட்டே போற உனக்கு புத்திமதி சொல்ல தான் கூப்பிட்டேன். நீ என்னடா என்றால் கேள்வி மேல கேள்வி எழுப்பற. நான் அஸ்வின்கிட்ட பேசிக்கறேன்'' மிரட்டினேன்.

''ப்ளீஸ் அஸ்வின் அண்ணாகிட்ட சொல்லிடாதீங்க'' என்று அழுகை அதிகரித்தது. இயல்பாகவே அஸ்வினிடம் அச்சம் கொள்பவள் அதனால் அந்த நேரம் அமைதியாக மாறிட,

''குட் இத அப்படியே விடு. போய் படிக்கற வேலையை பாரு. மறுபடியும் முட்டாள் தனமா நடந்த அஸ்வின்கிட்ட பேச வேண்டியதாக மாறும்'' என்றதும் சரியென தலை அசைத்தாள். அவளை நானே காலேஜில் அப்படியே ட்ராப் பண்ணி அவ காலேஜ் அருகே நிறுத்தினேன்.

அழுகையோட தான் போனா... எனக்கு அவளின் அழுகை வலிச்சாலும் இது தான் சரி என்று கிளம்பினேன். எனக்குள்ள ஒரே கேள்வி என் மனசாட்சி கேட்டுச்சு.... நீ தன்யாவை விரும்புறயா ஸ்ரீராம்? என்ற கேள்வி.

மனசாட்சகிட்ட பொய் சொல்ல முடியுமா? அதுக்கு தான் பதில் தெ
ரியுமே..?!

தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
 
Top