கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விழிகளில் ஒரு வானவில் -4

Praveena Thangaraj

Moderator
Staff member
அத்தகயாயம்- 4

எல்லாம் முடிஞ்சுதுனு இருந்தேன். அஸ்வின் வீட்டுக்கு போகும் பொழுது தான் என்னால நார்மலா இருக்க முடியலை அவள் எப்பவும் போல தான் இருந்தா.

அப்போ தான் பவித்ரா கன்சீவ் ஆகியிருக்கற விஷயம் தெரிஞ்சது. எல்லோரும் ரொம்ப ஹாப்பியா பீல் பண்ணினோம் ராதை ஆண்ட்டி எல்லோருக்கும் உடனே கேசரி செய்து பாயசம் பண்ணினாங்க. இருந்த ஸ்வீட் எல்லாம் தனு தான் எல்லோருக்கும் கொடுத்தா.

''இந்தாங்க குழந்தையோட மாமாவுக்கு தான் நிறைய ஸ்வீட்'' என்று என்னிடம் நீட்டினாள். எடுத்து கொண்டு பவித்ரா அஸ்வின் பேச்சில் கலக்க, தனு ''இந்த ஸ்வீட் எல்லாம் எனக்கு ஏன்னா நான் தானே அத்தை அதனால.'' என்று ஸ்வீட் அள்ளி எடுத்தா. எனக்கு அவளின் பேச்சு அப்பொழுது தான் புரிந்தது. அவள் என்னை மாமா என்றும் அவளை அத்தை என்று சொல்கின்றாள். உண்மை அது என்றாலும் அவளின் செய்கை என்னை பார்த்து சொல்வதாக தான் இருந்தது.

நான் முறைச்சதும் நைசா நழுவிட்டாள். உடனே கிளம்பவும் செய்தேன். அஸ்வின் தான் ஸ்வீட் கம்மியா இருக்கு போற வழியில் தனு ட்ராப் செய்துடுடா அவள் ஸ்வீட் வாங்கி வரட்டும்'' என்று அஸ்வின் சொல்லிவிட்டு மும்முரமாக பவித்ராவை பார்வையால் வருடினான்.

எனக்கு மீண்டும் தலைவலி தான். இந்த தனு தெரிஞ்சு பேசறாளா இல்லையா என்று ஒன்னும் புரியலை.

அடையார் ஆனந்த பவன் இறங்கி காஜூ கத்லி வாங்கினேன். தனு எல்லா ஸ்வீட் பார்த்து பார்த்து தேடியதை பார்த்து நானா அவள்கிட்டே கேட்டேன்.

''உனக்கு என்ன ஸ்வீட் வேண்டும்?''

''ஹ்ம் அல்வா'' என்று அவள் ஸ்வீட் கடையில் இருக்கும் சேரில் அமர்ந்திட, எனக்கு மீண்டும் கோவம் தான் ஆனால் அடுத்த நொடி அஸ்வின் ஏற்கனவே சொல்லி இருந்தான். ஒரு முறை பேச்சு வாக்கில் தனுக்கு கேரட் அல்வா பிடிக்கும் என்று. அதனால் கோவம் மட்டுப்பட்டு நின்றது.

டைரி மில்க், அல்வா, காஜூ கத்லி என்று வாங்கி கொண்டு திரும்ப தனு மும்முரமாக ஏதோ பார்மில் பீல் செய்து கொண்டிருந்தாள்.

அருகே சென்று பார்த்தேன் அது கிப்ட் கூப்பன். சரி என்று அருகே அமர்ந்து அவளை பார்க்க அவளோ மெல்ல மெல்ல எழுத்தினை கையால் மறைத்து கொண்டாள். இதில் மறைக்க என்ன இருக்கு நேம் அட்ரஸ் தானே பில் செய்யணும்னு குழம்பி இருந்தேன். முடிக்கும் சமயம் மடிக்க அதை பிடிங்கி பார்த்தேன். பெயரில் தன்யாஸ்ரீராம் என்று எழுதியிருந்தது. அவளை முறைக்க அவளோ வேகமாக அதனை மடித்து கிப்ட் கூப்பன் பாக்சில் போட்டுட்டாள்.

''தனு என்ன...ப...'' என்றதும் தான் கூட்டம் கண்டு அமைதியாக வெளியேறினேன். என் பின்னாலே அவளும் வந்தாள்.

காரில் ஏறி முன்பு போலவே தனியாக யாருமற்ற தெருவில் நிறுத்தினேன். முந்தய கோவதைவிட அதிகமாகவே கேட்டேன்.

'' தன்யா ஏன் அப்படி எழுதின? நான் அவளோ சொல்லியும் நீ இப்படி செய்தா என்ன அர்த்தம்'' என்று கிட்டதட்ட அதட்டினேன்.‌

''எனக்கு உங்களை மறக்க முடியலை'' என்று கேவினாள்.

''அஸ்வின்கிட்ட பேசவேண்டியது தான்'' என்று மிரட்ட ஆரம்பிச்சேன்.

'' சொல்லிக்கோங்க ஆனா நீங்க மனசுல இருந்து அப்பவும் போக மாட்டீங்க'' என்று சட்டுனு வீம்பு பண்ண ஆரம்பிச்சா.

''கொன்னுடுவேன் என்ன பேச்சு இது தனு'' திட்டினேன்

''ப்ளீஸ் நான் இனி பேசலை. ஆனா மறக்க மட்டும் முடியாது. உங்களை நான் போஸ் பண்ணலை பிறகு உங்களுக்கு ஏன் கவலை. நான் லவ் பண்ணுங்க என்று கையை கீறி வற்புறுத்தலை. சூசைட் பண்ணிப்பேன்னு மிரட்டி டார்ச்சர் பண்ணலை. நான் மட்டும் தானே விரும்பறேன். நீங்களும் விரும்புங்க என்று சொல்லலையே. நான் என் மனதில் மட்டுமே ஆசையை வளர்த்துக்கறேன்'' என்று இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

என்னால தடுக்க முடியலை. எனக்கு ஒன்னும் புரியலை. அஸ்வின் மாதிரியே அதே பிடிவாதம். என்னால் எப்படி ஹண்டல் பண்றதுனே தெரியலை. அவள் என்னை வற்புறுத்தலை. என்னிடம் பதிலை பெற அவள் யோசிக்கலை. ஆனா இது இப்படி போனா என் அஸ்வினுக்கு எப்படியும் தெரிஞ்சுடும். இப்போ அவன் பார்வை முழுதும் பவித்ரா தான் அவன் கொஞ்சம் கவனிக்க ஆரம்பிச்சாலும் தனு செய்கை புரியும். அதை கவனிக்கலை என்றாலும் என்னோட நடவடிக்கை அவனுக்கு புரிய செய்திடும் அவனுக்கு அது சுலபம். நான் தான் அனேகமாக காட்டி கொடுப்பேன். என் ஒவ்வொரு செய்கையும் அவனுக்கு அர்த்தம் தெரியும்.

என் மனசுல தன்யா இருக்கா. அதனால தான் இப்படி தள்ளாடுறேன். அவள் மனசுல வருவது அபக்ஷன் என்று சொல்லிட்டேன் ஆனா என்மனசுல இருக்கறது அபக்ஷன் இல்லையே. எனக்கு ஏற்கனவே அஸ்வின் பேமிலி ரொம்ப பிடிக்கும் எனக்கு இப்படி அன்பு பாசம் நேசம் எல்லாம் இருக்கற பேமிலி கூட லைப் லாங் இருக்கணும். ஆனா அஸ்வின் நட்பு? ஏற்கனவே ரம்யா சாதாரணமாக பேசிய கல்யாண விஷயத்திற்கே அஸ்வின் என் மேல கோவப்பட்டு விட்டான். அது மாதிரி இந்த விஷயம் தெரிந்தால் அவன் என்னை வெறுத்துடுவான். சிறு வயது நட்பு எல்லாம் அடியோடு போய் நம்பிக்கை துரோகி என்ற பெயரே மிச்சம்.

அதனால தான் கிளம்பிட்டேன் இங்க நிஷா அக்கா கூட எப்பவும் போல ஒன் வீக் இருந்துவிட்டு தனியா ஹோட்டலில் தங்கணும். இப்பவே சொன்னா கண்டிப்பா அஸ்வின் விடமாட்டான். அதனால தான் ஒன் வீக் என்று சொல்லிட்டு 3மந்த்ஸ் இருக்க போறேன். அதுக்குள்ள தனு கொஞ்சம் யோசிப்பா. அவளுக்கு என் நினைவு கொஞ்சம் மறக்க கூடும்.

ஆஸ்திரேலியா அழகான இடம் தான். அதனால தான் நிஷா இங்கயே தங்கிட்டா போல. இந்தியா வர கூட ஐடியா இல்லை அவளுக்கு. எனக்கு எப்பவும் சென்னை தான். சொர்க்கமே என்றாலும் நமக்கு நம்ம ஊர் தான் பெஸ்ட்.

இன்னும் கொஞ்ச நேரத்தில் நிஷா வந்துடுவா. எப்பவும் அவள் லேட்டா தான் பிக்கப் பண்ண வருவா என்று நடந்தான் ராம்.

''ராம்.... இங்க... இங்க வாடா'' என்ற குரலில் திரும்ப அங்கே ஜீன் டாப் அணிந்து கழுத்து முழுதும் சால்வே அணிந்து கழுத்தில் மெல்லிய செயின் மட்டுமே. கையில் பிளாட்டினம் ரிங் காதில் சிறிய கம்மல் நிஷா நின்றிருந்தாள்.

''ஏன் டா என்ன தீடிர் என்று வந்துட்ட?'' என்று வரவேற்றாள்.

''சும்மா ரிலாக்ஸ்காக? நிஷா மாமா கட்டின தாலி எங்க?'' என்று கேட்டான்.

''டேய் வந்ததும் விசாரணையா? இங்க தாலி எல்லாம் என்னனு சொல்ல எப்ப பாரு யாருக்காவது விலாவாரியா சொல்லிக்கிட்டு இருக்கணும்'' என்று அப்பேச்சை புறம் தள்ளினாள்.

''ஏன் சொல்ல வேண்டியது தானே. மேரேஜ் ஆனதுக்கு''

''ஐ டி கார்டா டா?'' என்று இடைப்புகுந்தாள்.

''அட்லீஸ்ட் ஸ்ட்ரிக்கர் போட்டு கூடவா யூஸ் பண்ண கூடாது'' என்று வெறும் நெற்றியை கண்டு கேட்டான்.‌

''டேய் ஓவரா அட்வைஸ் பண்ணாதே. மாமா காரில் வெயிட் பண்றார். இந்த மாதிரி அவர் எதிரில் கேள்வி கேட்காதே. அவருக்கு இதெல்லாம் பிடிக்காது''

''அப்பா அம்மா இதே கேள்வி கேட்டா இதே பதில் சொல்லுவியா?'' என்று சலித்தான்.

''இது தமிழ் நாடு இல்லை. உங்க மாப்பிள்ளை பட்டிக்காடு இல்லை என்று சொல்லுவேன்'' என்றதும் ராம் அமைதியாக மாறிவிட்டான். ராமிற்கு அஸ்வின் போல சட்டென கோவம் எல்லாம் வராது. கொஞ்சம் நிதானமாக பேசுபவன். செயலிலும் அப்படியே.

''கோவமா டா?''

''இல்லை. வருத்தம் தான் நீ எப்படியிருக்க?''

''பைன் டா .காரில் ஏறு'' என்றதும் உட்கார்ந்தான்.

''ஹாய் ராம் எப்படி இருக்க?'' என்று சித்திக் மாமா கேட்டார்.

''பைன் மாமா நீங்க?'' என்று பதிலுக்கு வினவினான்.

''யா குட் ராம். ஹொவ் இஸ் ஒர்க்''

''பைன் மாமா'' என்று அளந்து பேசினான்.

''ஆஸ்திரேலியால எவ்ளோ நாள் ஸ்டே சொல்லு நான் வேணுமின்றால் கொஞ்சம் ப்ரீயாகி நேரம் எடுத்துப்பேன்'' என்றார் அவர்.

''நம்ம வீட்ல எப்பவும் போல ஒன் வீக் மாமா அதுக்கு பிறகு 3 மந்த்ஸ் ஹோட்டலில் தங்க போறேன்'' என்று போட்டுடைத்தான்.

''ஏன் டா இங்கயே தங்க என்ன?'' என்று நிஷா இடையிட்டாள்.

''அக்கா ப்ளீஸ் ஐ நீட் அலோன்'' என்ற பின்னரே அமைதியாகி நிஷாந்தினியை பார்த்தான் ''சாரி அக்கா... எனக்கு...''

''ஏய் நிஷா அவனுக்கு ஒர்க் டென்ஷன் இருக்கும் சோ கொஞ்ச நாள் தனியா தங்கி ரிலாக்ஸ் பண்ண நினைச்சிருப்பான் எதுக்கு முறைக்கற'' என்றதும் சித்திக் காரினை ஒட்டிட, அதன் பின் நிஷா கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒரு வரி பதிலை தந்து முடித்தான். வீட்டில் இறங்கியதும் லக்கேஜ் எடுத்துக் கொண்டு நுழைந்தான்.

சித்திக் பார்க் செய்ய நிஷா உள்ளே போய் ''ப்ரெஷ் அப் ஆகிட்டு வா டா சாப்பிட எடுத்து வைக்கிறேன்''

குளித்து முடித்து டீ-ஷர்ட் ஷாட்ஸ் அணிந்து வந்து டேபிளில் அமர்ந்தான்.

''என்ன சமைச்ச?'' என்று ஆசையாக வீட்டு சாப்பாடு உண்ண திறந்தான்.

''வெஜ் சான்வெஜ், பிரட் ஆம்லட், ப்ருட் சாலட்...''

''கேக்கும் போதே தலை சுற்றுது நிஷா. சமைக்கறதும் இல்லையா?'' என்று குறைப்பட்டான்.

''டேய்... ஹாஸ்பிடல் கிளம்பிட்டேன் நீ வர்ற என்றதும் அவசரமா செய்தேன்''

''அப்போ ஹாஸ்பிடல் கிளம்பிட்டியா? மாமா?'' என்று அவரை தேடினான்.

''உன்னை ட்ராப் பண்ணிட்டு பார்த்தார் நான் வர இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும் என்றதும் கிளம்பிட்டார்''

''கொஞ்ச நேரம் இருந்து உன்னையும் கூப்பிட்டு கொண்டு போலாமே''

''வேலை அப்படி டா''

''அங்க தான் தனியா இருந்தேன் இங்கயும் இப்படி...?'' என்றே முனுமுனுத்துக் கொண்டே சாப்பிட்டான்.

''டேய் அக்கா உன்னை தனியா விட்டுட்டு வந்து பார்க்கலை என்று கோவமா?''

''கோவம் எல்லாம் இல்லை வருத்தம் தான். சரி நீயாவது ஹாப்பியா இருக்கியா?''

''எனக்கு என்னடா குறை இங்க? வீடு வேலை கணவர் புகழ் என்று லைப் பிஸியா இருக்கு''

''இது மட்டும் லைப் இல்லை நிஷா... பாசமா பேச, தோள் சாயா, அன்பு பகிர என்று ஆள் வேண்டும்''

''அதான் சித்திக் இருக்காரே'' என்ற நிஷா பதிலில் ராமுக்கு வருத்தம் எல்லாம் இல்லை. நிறைவு தான் இருந்தது.

''மதியம் சீக்கரம் வந்துடறேன் டா''

''ஹ்ம்ம்'' என்றதும் வேகமாக மற்றொரு கார் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

கடைசி ரொட்டி எடுத்து வாயில் வைத்தவன். ஓஹ் காட் இத மெல்லவே முடியலை என்று ஒதுக்கி வைத்து அஸ்வினுக்கு கால் செய்தான்.

அது கால் போகவே இல்லை என்றதும் போனை வைத்துவிட்டு வீட்டை சுற்றி பார்வையிட்டான்.

'நாட் பேட் வீட்டை கிளீனா வச்சியிருக்கா' என டிவி ஆன் செய்து பார்த்தான் எதுவும் பிடிக்கவில்லை. மதியம் தானே சமைக்கலாம் என்று யோசித்து கிட்சேனில் எட்டி பார்த்தான். கேரட் கோஸ் உருளை எல்லாம் இருக்க வெஜ் புலாவ் செய்ய எடுத்துவைத்தான். நிஷா சமையலில் சிரிப்பு தான் வந்தது. இந்த மாமா ருசியா சமைக்க சொல்ல மாட்டாரா? மனுஷன் எப்படி தான் சாப்பிடறாரோ? கடவுளே நமக்கு இந்த சாம்பார், புலி குழம்பு, சிக்கன் எல்லாம் வேண்டும். இந்த அஸ்வின் வேற போன் எடுக்க மாட்டேங்கறான்.

பவித்ரா போனும் ரிங் போகலை என்னாச்சு. தனுவுக்கு நான் இங்க வந்தது தெரியுமா? என்ன யோசிப்பா? இதையே சிந்தித்தான்.

ஒரு வழியாக சமையல் செய்து முடித்து ஹாட் பாக்ஸில் எடுத்து வைத்து உண்டு முடித்தான். நேரம் இரண்டை தொட இன்னும் இந்த நிஷா வரலை. இனி வந்து எப்போ சமையல் செய்வா? நல்ல வேலை நானே சமைச்சது பெட்டர்.

அவன் புலம்பல் கேட்டது போல் வந்தாள் நிஷா. ''சாரி சாரி ராம் ஒரு இம்பார்டண்ட் கேஸ் வந்துடுச்சு அதனால உனக்கும் எனக்கும் சேர்த்து பீட்ஸா வாங்கி வந்துட்டேன்''

''ஐயோ நான் சாப்பிட்டேன்'' என்று தப்பித்த பதிலை தந்தான்.

''சாப்பிட்டியா என்ன சாப்பிட்ட?''

''கிட்சேனுள் போய் பாரு''

''டேய் வெஜ் புலாவ் வாசனையா இருக்கு டா. நீயா சமைச்ச? என்று பேசியபடி தட்டில் வைத்து உண்ண துவங்கினாள்.

''எப்படி டா இவ்ளோ டேஸ்டா சமைக்கிற?'' என்று அரக்கி பறக்க விழுங்கினாள்.

''பழகிடுச்சு.. ஆமா மாமா வரலையா?''

''இன்னிக்கு நிறைய பேஷண்ட். அவர் உன்னை ட்ராப் பண்ண வந்ததே அதிசயம்''

''உனக்கு இந்தியா வரவே தோனலயா? கொஞ்ச நாள் வந்து இருக்கலாம்ல'' என்று அக்கா கூடயிருந்தால் நல்லாயிருக்கும் என்று கேட்டான்.

''ஹ்ம்ம் லீவு போட முடியாது. நான் முயற்சி செய்யறேன்''

''எவ்ளோ நாளா?'' என்று சலித்தான்.

''என்னை விடு அஸ்வின்-பவித்ரா எப்படி இருக்காங்க?''

''ஹ்ம்ம் நல்லா இருக்காங்க பவித்ரா கன்சீவ்வா இருக்கா''

''ஓஹ் குட் நியூஸ் டா குழந்தைகள் வீட்ல இருந்தா செம தான். ப்ச்...'' என்று நிஷா அமைதியாகிட, ராமிற்கு அதன் பேச்சு போகும் திசை பிடிக்காமல் போனது. நிஷாவுக்கு குழந்தை செல்வம் இல்லாததால் பேச்சை மாற்றினான்.‌

''எனக்கு போர் அடிக்குது புக் எதாவது படிக்க கொடு நிஷா. புக்ஸ் இருக்கா??''

''ஏன் டா...? அதெல்லாம் மாமா படிப்பார் அவரோட காலெக்ஷன் காட்டுறேன் பாரு'' என்று இன்னும் கொஞ்சம் சாதம் எடுத்து சாப்பிட்டு முடித்தாள்.

ஹாலில் இருக்கும் கப்போர்டில் திறந்து காட்டினாள். ''இது எல்லாம் மாமா காலெக்ஷன் தான்''

''தமிழ் புக் இல்லையா?'' என்று அலசினான்.

''டேய் நீ அநியாயத்துக்கு இப்படி இருக்கியே. இங்க இங்கிலிஷ் நாவல் டாக்டர் சம்பத்தப்பட்ட புக் தான் இருக்கும். கலந்து தான் வச்சி இருப்பார் அதனால தேடி எடுத்துக்கோ''

''மாமாகிட்ட பெர்மிஸன் வாங்கிட்டியா?''

''அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டார் படி'' என்று கிளம்ப முயன்றாள்.

''எங்க கிளம்பிட்ட?''

''உனக்கு பசிக்கும்னு வந்தேன் இல்லை ன்றால் நைட் தான் வருவேன். அதனால திரும்ப போயிட்டு
...'' என்று இழுக்க,

''அதான் சொல்லிட்டேயே கிளம்பு'' என்று இருக்க ''சாரி டா நைட் சீக்கரம் வந்துடறேன்'' என்றாள் நிஷாந்தினி பறந்தாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
.
 
Top