கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விழிகளில் ஒரு வானவில்-5

Praveena Thangaraj

Moderator
Staff member
அத்தியாயம் -5

நிஷா கிளம்ப ராமிற்கு படிக்கும் எண்ணம் போனது மீண்டும் அஸ்வின் போன் செய்ய, இம்முறை எடுத்தான்.

''சொல்லு டா வீட்டுக்கு போயிட்டியா?''

''ஹ்ம்ம் அதெல்லாம் வந்தாச்சு ஏன் போன் எடுக்கலை. பவித்ராவுக்கு போன் செய்தேன் ரிங் போகலை''

''அது ஹாஸ்பிடல் போனேன் டா''

''அங்கயுமா?''

''டேய் மந்திலி செக்கப் அதுக்கு போனேன். அதனால போனை பிளைட் மோடில் போட்டிருந்தோம்''

''பேபி எப்படி இருக்காம்''

''ஹெல்த்தியா இருக்கு. இவ தான் ஒழுங்காவே சாப்பிட மாட்டேங்கறா''

''ஹ்ம்ம்... நல்லா சாப்பிட சொல்லு டா''

''அத இங்க வந்த பிறகு நீயே சொல்லு''

''அஸ்வின் நான் வர இன்னும் 3மந்த்ஸ் ஆகும் டா''

''ஏன் 5டேஸ் தானே சொன்ன?''

''சொன்னேன் ஆனா இந்த முறை கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம் என்று..'' என்றதும் அந்த பக்கம் அமைதியாக மாறியது. ''அஸ்வின் லைன்ல இருக்கியா?''

''சொல்லு கேட்கறேன்''

''என்ன டா குரல் மாறிடுச்சு''

''பின்ன என்ன டா ஏதோ 5 டேஸ் அப்படி என்று சொன்ன இப்போ 3மந்த்ஸ் அங்க இருக்க போறேன்னு சொல்லற ஏன் இந்த முடிவு?'' என்று கடிந்திட ஆரம்பித்தான்.

''சும்மா தான் டா நிஷா கூட கொஞ்ச நாள் இருக்கலாம் என்று'' இழுத்தான்

''நம்பிட்டேன். உனக்கு எப்பவும் இங்க இருக்கறது தானே பிடிக்கும்'' என்று நண்பனை அறிந்தவனாக கேட்டான்.

''ஆமா டா கொஞ்ச நாள் மட்டும் அஸ்வின்''

''ஏதாவது என்கிட்ட மறைக்கறையா?'' என்றதும் ராம் இந்த பக்கம் ஓஹ் காட் இது தான் அஸ்வின் இதுக்கு தான் நான் பயந்ததே,

''இல்லை டா எனக்கு நிஷா கூட இருக்கனும் என்று மனசுக்கு தோனுச்சு'' என்று சமாளித்தான்.

''அப்போ ஆபிஸ் ஒர்க்?'' என்று கேட்டான்.

''அது லேப்டாப் இருக்கு, ரகு அங்கிள் இருக்கார் மேனேஜ் பண்ணிப்பேன். நியூ ப்ராஜெக்ட் எதுவும் பண்ண போறது இல்லை. அதனால இப்ப இருக்கற ஒர்க் மட்டும் தான் கவனிக்கணும்'' என்றான் ராம்.

''எனக்கு ஒன்னும் சரியா தோணலை. அப்பறம் உன் இஷ்டம் அவ பேசணுமாம்'' என்று போன் கை மாறியது.

''பவித்ரா இருக்காளா?'' என்று தோழியை பற்றி கேட்டான்.

''ஹ்ம்ம் இங்க தான் ரூமில். இந்தா'' என்றான் அஸ்வின்.

''டேய் ராம் சரியான முடிவு தான். கொஞ்ச நாள் அக்கா கூட இரு. த்ரீ மந்த்ஸ் அங்க அக்கா அன்பில் மிதந்து இரு'' என்று நண்பனுக்கு அக்கா தேவை என்று உணர்ந்தவளாக பேசினாள்

''பவித்ரா எப்பவும் போல ஒன் வீக் தான் இங்க இருப்பேன் அப்பறம் ஹோட்டலில் தங்க முடிவு பண்ணி இருக்கேன் அக்காகிட்ட சொல்லிட்டேன்''

''ஏன் டா?'' என்று அதிர்ந்தாள்.

''என்னால யாருக்கும் தொந்தரவா இருக்க கூடாது'' என்று பேசினான்.

''அக்கா அப்படி எல்லாம் நினைக்க மாட்டாங்க'' என்று கடிந்தாள்.

''இருந்தாலும் எனக்கு பிடிக்காது. பட் லைப் கொஞ்சம் நாள் இங்க இருந்து பார்க்க நினைச்சேன்''

இம்முறை பவித்ரா அமைதியாக இருந்தாள்.

''சரி ராம் உன் இஷ்டம் ஆனா டெய்லி ஒன்ஸ் அக்கா கூட சேர்ந்து சாப்பிடு அது தான் நல்லது. சரியா?'' என்று இணைக்க ஆரம்பித்தாள்.

''ஹ்ம்ம் ஓகே சொல்றேன். நீ ஒழுங்கா சாப்பிடு'' என்று அறிவுரை வழங்க ஆரம்பித்தான்.

''ஆரம்பிச்சுட்டியா... வர்ற வழி முழுதும் அச்சு தொல்லை கொடுத்தான் இப்போ நீயா'' என்று சலிப்படைந்தாள்.

''சரி சரி வைக்கிறேன்" என்று போனை வைத்திட அங்கு அஸ்வின் பவித்ராவிடம்

''அவன் ஏன் இப்படி பண்றான்?'' என்று எள்ளும் கொள்ளுமாய் வெடித்தான்.

''டேய் அவன் ஆகாஷ் மேரேஜ், நம்ம மேரேஜ் எல்லாம் பார்த்துட்டு சொந்தம் பந்தம் எல்லாம் வந்ததும் அவனுக்கு நிஷாஅக்கா நியாபகம் வந்து இருக்கும் அதனால கூட அங்கயிருக்க நினைச்சிருப்பான்''

''அப்படினா அவன் நிஷா கூடவே இருக்கனும். ஏன் ஹோட்டலில் தங்க நினைக்கறான்'' என்று சரியான பிடியை கேட்டான்.

''இயல்பாவே ராம் யாரிடமும் அதிகமா பேச மாட்டான். சித்திக் மாமா கொஞ்சம் பேசமாட்டார் அதனால கூட இருக்கலாம். இதெல்லாம் ஒரு கேள்வியா டா'' என்யு கணவனை கடிந்தாள்

''எனக்கு என்னவோ ஏதோ ஒன்னு உதைக்குது. பார்ப்போம் நீ சொல்ற மாதிரி அவனுக்கு உறவுகள் எல்லாம் பார்த்ததும் நிஷா நினைவு வந்து போயிருக்கலாம்'' என்று பவித்ராவை அணைக்க முயன்றான்.

பவித்ராவோ ''கீழே அத்தை எழுந்திருப்பாங்க போய் ஹாஸ்பிடலில் போனதும் அங்க சொன்னதும் சொல்லணும் விடு அச்சு..'' என்றதும் முறைத்தபடி அவளை விடுவிக்க அவனின் கன்னத்தில் இதழொற்றி கீழே சென்றாள்.

இங்கு ராமோ அஸ்வின் என் குரலையும் திக்கி பேசும் விதத்திலுமே இப்படி யோசிக்கிறான் நான் மட்டும் நேரில் பேசினேன் நிச்சயம் என் முகத்தை பார்த்தே ஏதோ ஒன்று என்று யூகிச்சு இருப்பான். இனி அவனிடம் பேசும் பொழுது என்னை நானே தயார் படுத்திக்கொள்ளனும்.

புத்தகத்தை எடுத்து பெயரை பார்க்க பெரும்பாலும் மருத்துவத்தை சார்ந்ததே இருந்தது. அதிலும் சில புத்தகத்தில் கடித உறைகள் வேறு இருந்தன. எல்லாம் சித்திக் பெயரிட்டு இருந்தமையால் அவன் அதனை அப்படியே மூடி வைத்து விட்டான். புக் படிக்கும் ஆர்வம் சற்றே குறைய போனில் முகநூலில் நுழைந்தான். கொஞ்ச நேரம் மட்டுமே செலவழிப்பவன் இன்று கூடுதல் நேரம் எடுத்து பார்த்தான். அப்படியே உறங்கி விட்டான்.

நிஷா கதவை திறந்து எட்டி பார்க்க சோபாவில் சாய்ந்து உறங்கிய ராமே இருந்தான்.

வேகமாக உள்ளே வந்தவள் மடமடவென சமையல் செய்ய ஆரம்பித்தாள். சூடாக மல்லி சட்னி செய்து தோசை மாவினை குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து வெளியே வைத்து வர ராம் விழித்தான்.

''நீ எப்போ வந்த?'' என்று கண்ணை கசக்கினான்.

''ஏழு மணிக்கு டா. உன் உயரத்துக்கு சோபா போதுமா டா ஒழுங்கா ரூமில் படுத்து தூங்கிருக்கலாமே?''

''மொபைல் பார்த்துட்டே அப்படியே தூங்கிட்டேன். நீ மட்டும் வந்துட்ட மாமா எங்க?'' என்று மாமானை தேடினான்.

''அவருக்கு டியூட்டி முடியலை எப்ப வருவார் என்றும் தெரியலை. நான் எப்பவும் நைன்க்கு வந்துடுவேன் நீ வந்ததால இப்போ செவென்க்கு வந்துட்டேன்'' என விளக்கினாள் நிஷா.

''ரொம்ப நாள் கழிச்சு ரொம்ப நேரம் தூங்கிட்டேன்'' என்று உடலை முறுக்கினான்.

''சரி நீ முகம் அலம்பிட்டு வா தோசை வார்த்து தர்றேன்'' என்றதும் சரி என சென்றான்.

தோசை சட்டினி சாப்பிட்டு முடிக்க, ''நீ சமைச்சா அம்மா சமையல் மாதிரியே இருக்கு. பின்ன ஏன் நீ சமைக்கறதே இல்லை. எதுக்கு இந்த பிரட் சாண்ட்வெஜ் பீட்ஸா எல்லாம்...?'' என்று வருத்தமாய் கேட்டான்.

''போடா அவர் எப்போ வருகின்றாரே தெரியலை எனக்கு மட்டும் என்று சமைக்கும் பொழுது எப்படி சமைப்பேன்? இருக்கறது போதும் என்று விட்டுடுவேன்'' பெண்களின் குணம் அப்படி தானே. தனக்கு என்று எதுவும் செய்ய தோன்றாது.

''நியாயம் தான் அப்படி தான் தோணும் ஆனால் நீ ஒழுங்கா சாப்பிட்டா தானே ஆரோக்கியமா இருக்க முடியும்'' என்று கூறினான்.

''என் ஆரோக்கியத்துக்கு என்ன குறை''

''போன முறையை விட நீ இன்னும் மெலிஞ்சுட்ட நிஷா. எனக்கு உன்னை பார்த்தா கவலையா இருக்கு''

''அதெல்லாம் இல்லைடா...

ராம் அஸ்வின் கல்யாணம் செய்தாச்சு நீ எப்போடா கல்யாணம் செய்ய போற. பொண்ணு பார்க்கவா?'' என்று பேச்சை மாற்றினாள்.

''எங்க? இந்த ஊரிலயா?'' என்று சலித்தான்.

''ஆமா டா. இங்க கூட தமிழ் குடும்பம் நிறைய இருக்கு'' என்று பெருமை பீற்றினாள் நிஷா.

''அய்யோ அக்கா எனக்கு தமிழ் குடும்பம் வேண்டாம் தமிழ் நாட்டிலே இருக்கற தமிழ் பேமிலி வேண்டும். இங்க எல்லாம் தயவு செய்து பார்த்திடாதே'' என்று பெரிய கும்பிடு போட்டான்

''என்னடா நீயும் அஸ்வின் மாதிரி லவ் மேரேஜா?'' என்று ஓட்டினாள்.

''நிஷா... நான் உன் தம்பி அப்படி எல்லாம் பேசாதே.

எனக்கு இந்த பீட்ஸா பர்கர் எல்லாம் சாப்பிட்டு வாழ முடியாது நான் என்னோட ஊருக்கே போனும் அதான் எனக்கு பிடிக்கும்'' என்று புன்னகைத்து மழுப்பி எப்படியோ உறக்கம் வருகின்றது என நழுவிவிட்டான்.

அதிகாலையில் எழுந்தவன் குளித்து முடித்து வெளியே வர சோபாவில் சித்திக் பேப்பர் படித்துக்கொண்டு இருக்க அருகே நிஷா அமர்ந்திருந்தாள்

''இன்னிக்கு சாம்பார் ரசம் உருளை பொரியல் செய்துவிட்டு கிளம்பறேன் சித்திக். ராமுக்கு அப்படி சாப்பிடறது தான் பிடிக்கும்'' என்று தம்பதியாய் பேசினார்கள்.

''ஹ்ம்ம் பண்ணு நிஷா. எனக்கு அப்படியே டிபன்பாக்ஸ்ல எடுத்துட்டு வா''

''நிஜமா... அப்போ லேட்டா வந்தா பரவாயில்லையா?'' என சிறு குழந்தை போல கேட்க ''ஓகே மா'' என்றான் சித்திக்.

உடனே நிஷா அவனின் தோளில் சாய்ந்து ''லவ் யூ சித்திக்'' என்று சொல்ல ராமிற்கு மீண்டும் மனம் நிறைந்தது. அவனை பார்த்து நிஷா எழுந்து "வாடா காபி எடுத்துட்டு வர்றேன்'' என்றாள்.

''உட்கார் ராம்'' என்று சித்திக் வரவேற்றான்

''நீங்க எப்போ மாமா வந்திங்க'' என்று சம்பிரதாயத்திற்கு கேட்டான்.

''இப்ப தான் மார்னிங்'' என்றார்.

''சென்னைக்கு வரலாமே மாமா'' என்று ஆசையாய் கேட்டான்.

''வேலை இருக்கு வர்றோம்'' என்று நாளிதழை புரட்டிய படி தோரணையாக அமர்ந்தார்.

''உன் ஆபிஸ் எப்படி போகுது?''

''நல்லா ரன் ஆகுது மாமா'' என்று பதில் தந்தான்.

''அஸ்வின் உன்னோட பாட்னர்ரா?'' என்றுகேட்டு மூக்கு கண்ணாடியை சரிசெய்தான்.

''இல்லை மாமா கேட்டு பார்த்தேன் அவன் அதுக்கு பிடிவாதமா நோ சொல்லிட்டான். நட்புக்குள் விரிசல் வருமாம்'' என்று புன்னகைத்தான்.

''உனக்கு அனுவல் டர்ன் ஓவர் எவ்ளோ''

''அ... அது...''

''இந்தா டா காபி'' என்றதும் வாங்கியவன் அப்படியே சுவைக்க பேச்சு நின்றது.

ராமோ மனதில் சே இந்த மாமாகிட்ட ஏன் என்னால இயல்பாக பேச முடியலை. அஸ்வின்கிட்ட பவித்ரா தம்பி வருண் எவ்ளோ உரிமையா பேசறான். என்னால அப்படி இருக்க முடியலை.
அஸ்வின் ஏஜ்ல தானே இந்த சித்திக் மாமா நிஷாவை கல்யாணம் செய்தார். நான் வருண் மாதிரி ஸ்கூல் படிச்சேன் இருந்தும் வருண் மாதிரி என்னால உரிமையா ஏன் பேச முடியலை.

''சின்ன வயசுல எப்படி கம்பெனி ரன் பண்ற?'' என்று ஆச்சரியமாக கேட்டார்.

''அப்பாவோட பிரென்ட் ரகு அங்கிள் இவ்ளோ நாளா சப்போர்ட்டா இருந்தார் மாமா... மாமா அக்காவோட ஷேர் மணி கூட அவர் தான் கரெக்டடா அனுப்ப சொல்லிடுவார்.'' என்று அப்பா நண்பர் ரகு புண்ணியத்தில் நடத்துவதை உரைத்தான்

''என்ன ஷேர் டா'' என்றாள் நிஷா. சித்திக் இப்பொழுது ஏன் அவனின் அலுவலக விஷயம் பேசினோம் என்று முழித்தான்.

''அது அனுவல் ஷேர் உன் நேம்க்கு மந்திலி மந்திலி பணம் அனுப்பறது... மாமா சொல்லலையா?'' என்றான்.

''சொ...சொல்லிருந்தார்.... சொல்லிருந்தார்'' என நிஷா சித்திக்கை பார்க்க அதில் ஏன் மறைதீர்கள் என்ற கேள்வி இருந்தது.

முதல் முறையாக ராமிற்கு சித்திக் மேல் ஒரு சின்ன மைனஸ் அவன் கண்ணில் பட்டது.

கொஞ்ச நேரத்தில் சித்திக் கிளம்பிட பின்னர் நிஷாவும் கிளம்பிவிட்டாள்.

வழக்கம் போல ராம் ஏதேனும் புக் வாசிக்க எடுத்தான். அவன் அதிர்ஷ்டம் அங்கே ஆங்கில நாவல் இருந்தது வாசிக்க துவங்கினான்.

இடையில் நீர் குடிக்க எழுந்தான். புத்தகத்தின் நடுவில் இருந்த ஒரு லெட்டர் கீழே விழுந்தது. எடுத்து பார்த்தபடி நீரை குடித்தான். அது ஏதோ புரியாத மொழியில் இருக்க எடுத்தவன் கீழே மட்டும் ஐ லவ் சித்திக் என்றிருக்க அப்போ அக்கா மாமாவுக்கு கொடுத்த லெட்டர் போல என அதனை மீண்டும் அதே புத்தகத்தில் வைத்துவிட்டான். ஓரளவு அது சிறுகதை போன்ற புத்தகம் என்பதால் அவனுக்கு அதன் பின் அந்த புத்தகத்தை படிக்க விருப்பமின்றி எடுத்த இடத்திலே வைத்துவிட்டான்.

இரவு ஏழு மணிக்கு நிஷா வந்து உணவை தயாரித்தாள். ஏன் ராம் ஷேர் அனுவல் எவ்ளோ போடுவ?''

''மாமா சொல்லிருந்தார் என்று சொன்ன''

''நீ மணி அனுப்புவ என்று தெரியும் டா அமௌட் எதுவும் தெரியாது''

''அது வருஷம் வருஷம் மாறும் அக்கா ஆனா ரகு அங்கிள் ஐம்பது சதவீதம் பாதி பணம் எப்பவும் அனுப்ப சொல்லிடுவார் அனுப்பிடுவேன்'' என்று ருசித்து சாப்பிட, நிஷாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

ராம் பணம் அனுப்புவதே இன்று தான் சித்திக் ஒப்புக் கொண்டான் ஏன் இவ்ளோ நாள் மறைத்த என்றதற்கு நான் எங்க மறைச்சேன் நீ கேட்கலை அதனால நான் சொல்லலை. உன் தம்பி உனக்கு சொல்லி இருப்பான் என்று நான் விட்டுட்டேன் என்றான். அது உண்மை என்பதால் சித்திக்கிடம் வேறு ஒன்றும் கேட்கவில்லை. சரி போனால் போகட்டும் என்று நிஷா விட்டுவிட்டாள்.

''நிஷா ஏதாவது புது லாங்குவேஜ் கத்துக்கிட்டியா?''

''என்ன டா கிண்டலா? எனக்கு வேலை செய்யவே நேரமில்லை. இதுல புது மொழியா?''

''பிரஞ்சு இல்லை ஸ்பானிஷ் மாதிரி...''

''இல்லை டா எனக்கு தெரிஞ்சது தமிழ் இங்கிலிஷ் தான் அப்பறம் கொஞ்சம் போல இந்தி''

''ஓஹ்'' என்று ராம் சொல்லிவிட்டு யோசிக்க துவங்கினான். இது என்ன கிணறு வெட்ட பூதம் போல இன்னொரு பிரச்சனையா? என்றே யோசிக்க துவங்கினான்.

சாப்பிட்டு முடித்து கை அலம்பி அறைக்கு புகுந்தான். அஸ்வினுக்கு போன் செய்தான்.

''என்ன டா சாப்பிட்டாச்சா?'' என்று அஸ்வின் நலம் விசாரித்தான்.

''ஹ்ம் அஸ்வின் பவித்ரா இல்லையா?'' என்று கேட்டான்.

''அவ வாக்கிங் போய் இருக்கா. அம்மா சுவாதி கூட... என்னடா''

''நத்திங் ஹ்ம்ம் அஸ்வின் நமக்கு தெரிஞ்சவங்க யாராவது பிரஞ்சு இல்லை ஸ்பானிஷ் மொழி தெரிஞ்சவங்க இருக்காங்களா?'' என்று கேட்டான்.

''ஏன் டா'' என்று கேட்டான் அஸ்வின்.

''இல்லை ஒரு லெட்டர் எனக்கு டவுட் அது என்ன மொழி என்றும் அதில் என்ன எழுதி இருக்காங்க என்றும் தெரியணும்''

''எனக்கு தெரிஞ்சு....ஹ்ம்ம்... ஆங் தனு பிரஞ்சு மொழி படிச்சிருக்காடா'' என்று தனுவை இழைத்தான்.

போச்சு சுற்றி வளைச்சு நான் அங்க தான் வருகின்றேனா? கடவுளே இது என்ன விளையாட்டு. என்று ராம் பேச்சிழந்து போனான்.

''ஹலோ ஹலோ... ராம்... ராம்... லைன்ல இருக்கியா?'' என்று அஸ்வின் அதற்குள் இரண்டு மூன்று முறை கத்திவிட்டான்.

''ஹ்ம் இருக்கேன் டா'' என்று வினவினான்.

''என்ன டா லெட்டரை போட்டோ எடுத்து அனுப்பு நான் தனுவிடம் காட்டறேன்''

''டேய்... அ..து... லவ் லெட்டர் மாதிரி இருக்கு....'' என திணறினான்

''ஓஹ் நீ அனுப்பு நான் அவளிடம் என்ன லாங்குவேஜ் என்று மட்டும் கேட்டு சொல்றேன். உனக்கு அதுக்கு அர்த்தம் எல்லாம் தெரியணும் என்றால் அவகிட்ட தான் கேட்கணும்... எனி இம்பார்ட்டண்ட் லெட்டர்''

''ஹ்ம் ஆமா அப்படியும் இருக்கலாம். எனக்கு சரியா சொல்ல தெரியலை அதுல இருக்கற மெசேஜ் வைத்து தான் முக்கியமா இல்லையா என்று தெரியும்''

''ஹ்ம் சரி நீ அனுப்பு... நான் கேட்டு சொல்றேன். அவள் பிரெஞ்சு என்றால் அதுக்கு பிறகு மற்றத்தை பார்ப்போம் ''

''எஸ்... ஓகே டா பவித்ரா வந்தா கேட்டேன்னு சொல்லு பை''

''பை டா'' என்ன இந்த பையபுள்ள லெட்டர் அது இது என்று எல்லாம் பேசுது. சரி அனுப்பட்டும் அப்பறம் கேட்போம்.' என அஸ்வின் லெட்டரை மறந்தான்.

ராமோ 'ஆகா அக்கா இப்போ இருக்கா எப்படி நான் அந்த லெட்டரை போட்டோ எடுக்க பிறகு சென்ட் பண்ணுவேன். ஓகே மெசேஜ்ல மார்னிங் அனுப்புவதாக சொல்லிவிட்டு யோசிக்க துவங்கினான்.

தனு காதலிப்பதை அறிந்து அஸ்வினுக்கு பயந்தும் இங்கே வந்து சேர்ந்தான். இங்கே நிஷாவுக்கு ஏதோ ஆபத்து போல அல்லவா தோன்றுகிறது. கடவுள் நிஷா பிரச்னையை எனக்கு தெரிவிக்க தான் தனு மூலமாக என்னை விதி இங்கு கொண்டு வந்து விட்டதா?!

இது
தான் கெட்டதிலும் நல்லது என்று அஸ்வின் கூறுவான். ஆம் பவித்ராவிடம் ரகு தவறாக நடக்க முயன்றது பேசியது எல்லாம் அஸ்வினை காண வைப்பதற்கு என்று கூறுவானே அப்படியா? ஆனால் முடிவு சுபமாக அல்லவே இருந்தது. இங்கு நிஷாவுக்கு எப்படியோ?

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
 
Top