கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விழிகளில் ஒரு வானவில் -6

Praveena Thangaraj

Moderator
Staff member
அத்தியாயம்-6

காலையில் தோசை எடுத்து வாயில் வைக்கும் பொழுது ராமிற்கு போன் கால் வந்தது. அவன் வந்து ஒரு வாரம் கழித்து தங்க ஏற்பாடாக புக் செய்த ஹோட்டலிலிருந்து. எடுத்து பேசிய பிறகே தான் இன்று அங்கே தங்குவதாக சொல்லிய நாள் என்றறிந்து தனது உடைமையை எடுத்து வைத்தான்.

மனதில் எப்படி இங்க மீண்டும் வந்து லெட்டர் எடுக்க இன்னிக்கு பார்த்து சித்திக் மாமா வீட்ல இருக்கார். எப்படியும் நாளைக்கு நைட் வீட்டுக்கு வந்து தான் லெட்டர் தேடி எடுக்கணும். டெய்லி நைட் டின்னர் சாப்பிட ஓகே சொன்னது இதுக்கா?. இன்னிக்கு லீவு என்று சித்திக் மாமா சொல்லியதால் என்னால இன்னிக்கு எடுக்க முடியாது என்ற வருத்தமுடன் கிளம்பிவிட்டான்.

நேற்றைய ஷேர் அமௌன்ட் பற்றி நிஷா கேட்டதிலிருந்து இனி ராம் கூட நிஷா அதிகம் பேச விட கூடாது என்று இன்று சித்திக் விடுமுறை சொல்லி தங்கிவிட்டார்.

''ராம்... மாமா லீவு நானும் லீவ் சொல்லிட்டேன் எங்கயாவது போகலாமா?'' என்று நிஷா ஆசையாக கேட்டாள்.

''இல்லை அக்கா இன்னொரு நாள்...'' என்றான் பிறகு நிஷா முகம் வருத்தம் அடைவதை கண்டு ''சரி போகலாம்'' என்று கிளம்பினார்கள்.

முன்பே சுற்றி பார்த்ததாலும் இம்முறை ராமிற்கு அந்த லெட்டர் பற்றிய உறுத்தல் இருந்த காரணத்தால் அவ்வளவு ரசிக்க முடியவில்லை. சித்திக் கூட ஏதோ அதே போல தயங்குவது போல இருந்தது.

இங்கே சென்னையில் அஸ்வினின் அண்ணி சுவாதிக்கு பிரசவவலி வந்து ஹாஸ்பிடல் அனுமதித்து காத்திருந்தார்கள். இது ஒன்பதாம் மாதத்தின் துவக்கம் அதற்குள் வலி என்றதும் அஸ்வின் அண்ணன் ஆகாஷ் பயந்தே போய்விட்டான். வளைக்காப்பு கூட செய்யவில்லை. அதற்கு இன்னும் நான்கு நாள் இருக்கையில் என்று ஆகாஷ் குழம்பினான்.

சுவாதிக்கு குழந்தை கழுத்து சுற்றி இருக்க போராடியே ஆபரேஷன் செய்து அந்த சிறு உயிரை உலகுக்கு கொண்டு வந்தார்கள் மருத்துவர்கள்.

ஆகாஷ்-சுவாதிக்கு அழகிய ஆண் சிசு பிறந்தது. பவித்ரா பயந்துவிடுவாளோ என்று வீட்டிலே இருக்க, அவளுக்கு துணையாக தனு இருந்தாள். அஸ்வினுக்கு அலுவலகத்துக்கு சென்றதால் அவனுக்கு போனில் விவரம் சொல்லப்பட மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். அண்ணன் ஆகாஷிற்கு வாழ்த்துக்கள் சொல்ல தவறவில்லை.

ஆகாஷ் தாய் ராதை சுவாதி அன்னை தவசுடர் இருவரும் குழந்தையும் சுவாதியையும் கவனிக்க சுவாதி தந்தை மற்றும் ஆகாஷ் மருந்து பணம் என்று கவனிக்க இருந்தார்கள்.

அஸ்வின் நேராக ஹாஸ்பிடல் வர அதே நேரம் பவித்ரா, தனு இருவருமே ஆட்டோவில் குழந்தையை பார்க்க வந்துவிட்டார்கள்.

ராதை தனுவை பார்க்க, ''அம்மா அண்ணி தான் குழந்தையை பார்க்கணும் என்று சொல்லியும் கேட்காம வந்துட்டாங்க'' என்று கூறினாள்.

''அத்தை அப்ப தான் பயப்படுவான்னு விட்டுட்டு வந்திங்க. இப்ப குழந்தை பிறந்த பிறகு வரலாம் இல்லை அதனால தான்'' என்றதும்

''அஸ்வின் வந்து காரில் உன்னை அழைத்து வர சொல்ல நினைச்சேன். நீ என்ன டா என்றால் ஆட்டோவில் வந்துட்ட'' என்று மாமியாராக அதட்டினார்.

''பரவாயில்லை அத்தை.. குட்டி பையன் எப்படி இருக்கான்'' என்று அறைக்கு வர பிஞ்சு கால்களை கொண்டு உதைத்தபடி கண்களை உருட்டி தன்னை யார் யார் வந்து பார்க்கின்றார்கள் என்று புரியாமல் பார்த்தது அந்த சிறு உயிர்.

அஸ்வின் முதலில் ராமிற்கு தான் கால் செய்தான். வாட்சப்பில் வாய்ஸ் கால் செய்து சொல்லி மகிழ்ச்சியை பகிர்ந்தான். ராமிற்கு மனம் லேசாக பறந்தது.

பவித்ரா வீட்டிலும் எல்லோருக்கும் தெரியப்படுத்தி இருக்க, சந்தோஷங்கள் பரவின.

ராமிற்கு ஹோட்டல் அறைக்கு வந்து படுத்தவன் கொஞ்சம் நிம்மதியுடன் தான் உறங்கினான்.

அடுத்த நாள் காலையில் ஹோட்டலில் அறைக்கே உணவுகள் வந்துவிட்டன. சாப்பிட்டவுடன் மெல்ல லேப்டாப் எடுத்து அலுவலக பணியையும் மேற்பார்வையிட்டு முடித்தான். வீடியோ காலில் ரகு அங்கிள் நேரிடையாக பேசி பணிக்கு புதிதாக ரோஷன் என்பவர் வருவதாகவும் அவருக்கு பின் நிர்வாகம் செய்ய போகும் மனிதர் என்றும் கூறிட ரகு அங்கிள் அதன் பின்னரும் எதுவும் சொல்லாமல் இருக்க,

''என்ன அங்கிள் கொஞ்சம் திருதிருவென முழிக்கறிங்க?'' என்றான்.

''ராம் அந்த பையன் ரோஷன் வேற யாருமில்லை'' என்று அறிமுகப்படுத்த நினைத்தார்.

''உங்க பையன் அங்கிள் எனக்கு தெரியும். அப்பறம் அவர் உங்க பையன் என்றதால் அவரை நான் செலக்ட் பண்ணலை. மூன்று பேரில் ஒருத்தறா அவர் செலக்ட் ஆனார். அப்பறம் உங்க பையன் என்றதும் உங்களிடம் கணக்கை ஈஸியா அவருக்கு சொல்லி கொடுப்பிங்க. பிற்காலத்தில் ஆபிஸ் டவுட் என்றாலும் உங்ககிட்ட எனக்கு கேட்க ஈஸியா இருக்கும் அதனால தான்'' என்று கூறினான்.

''அவன் போன வாரமே ஜாயின் பண்ணியதும் உன்னிடம் சொல்லணுமென்று இருந்தேன்'' என்றா மகிழ்ந்தார்.

''பிரச்சனை இல்லை அங்கிள். ஐ டிரஸ்ட் யூ அங்கிள்'' என்றான் ராம்.

''அப்பறம் என்ன தீடீரென்று நியூ ப்ராஜெக்ட் வேண்டாமென்று சொல்லிட்ட, நீ த்ரீ மந்த்ஸ் வரும் வரை ரோஷன் தனியா சமாளிப்பானா?'' என்று பயந்தார்.

''அங்கிள் சமாளிப்பார். நீங்க எப்படியும் இன்னும் ஒன் மந்த் கூட தானே இருப்பிங்க அதுக்குள்ள கற்று கொள்வர்'' என்று நம்பினான்.

''நன்றிப்பா... அப்பறம் அவனுக்கு இங்க நிச்சயம் செய்ய போறேன். என் தங்கை மகள் தான். கொஞ்ச காலம் பேச்சு வார்த்தை இல்லை. இப்போ சம்பந்தம் பேசலாம் என்றிருக்கேன். நீ தான் கூட இல்லை'' என்று வருந்தினார்.

''அங்கிள் திருமண நாளுக்குள்ள வருவேன். அப்படியில்லை என்றால் என் சார்பா அஸ்வின் வருவான். நீங்க கவலைப்படாதீங்க''

''சரிப்பா நிஷா எல்லோரும் கேட்டதா சொல்லு''

''சரிங்க அங்கிள் வைக்கிறேன்'' என்று முடித்து விட மத்திய உணவு வந்ததும் சாப்பிட்டிட்டு முடித்தான். இரவு ஏழுக்கு நிஷா வீட்டுக்கு வந்துடுவா. அதனால தான் கிளம்பி அங்க போவது தான் சரி.

இன்னிக்கு எப்படியாவது லெட்டர் எடுக்கணும் என்று கிளம்பினான்.

நிஷா சமையலில் மூழ்க, ராம் நான் மாமா புக் ஏதாவது படிக்க எடுத்துக்கறேன் என்று ஆராய்ந்தான். அன்றைய லெட்டர் எந்த புத்தகம் என்று அவனுக்கு தெரியாமல் குழம்பி தேடினான்.

ஒரு மணி நேரம் தேடியும் கிடைக்காமல் போக வெறுத்துவிட்டான். நிஷா சமையல் முடித்து சுத்தம் செய்யும் அரவம் கேட்க, வெறுத்து போய் நிமிர அன்று வந்த நாளில் பார்த்த சித்திக் பெயரிட்ட கடித உறை நினைவு வர அது அந்த பெரிய புத்தகம் ஆயிற்றே என்று எடுக்க அவனின் நியாபகம் பொய்க்காமல் அது கிடைத்தது. அப்பாடி என்று கவரை பிரிக்க அவன் எதிர்பார்த்தது போல அதே போல வேறொரு லெட்டர் அதே புரியாத மொழி. வேகமாக அக்கா வரும் முன் போனில் போட்டோ எடுத்துக் கொண்டான்.

''என்னடா வர வர புத்தக புழுவாக மாறிட்ட''

''ஹோட்டலில் தனியா பொழுது போகலை''

''அதுக்கு தான் இங்க இரு என்றேன்''

''காமடி பண்ணாதே நிஷா. இங்க மட்டும் நீ மாமா எல்லோரும் கூடவா இருக்கிங்க''

''சரி சாப்பிட வா சூடு ஆறிட போகுது''

''உனக்கு அம்மா கை பக்குவம்'' என்றான்.

''அதெல்லாம் தானா வரும் டா''

சாப்பிட்டு முடித்து கிளம்ப சித்திக் வந்து சேர்ந்தான். நிஷா தான் அவனிடம் சொன்னால் நீங்க கொஞ்சம் முன்ன வந்து இருக்கலாம் இப்ப தான் போனான். சித்திக்கிற்கு அவன் போன பின் வந்ததே நல்லதென தோன்றியது.

ராமிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வேறு வழியும் இல்லை என்றதும் அஸ்வினுக்கு சொல்லிவிட்டு தனுவின் நம்பருக்கு அனுப்பினான்.

ஓஹ் காட் தன்யா இந்த லெட்டர் படிச்சுட்டு என்ன நினைப்பா? முதலில் இது பிரஞ்சு தானா? ஸ்பானிஷ் ஆ இருந்தா? எதுவா இருந்தாலும் இன்னிக்கு தெரிஞ்சுடும்.

முதலில் ராமிடம் இருந்து வரும் மெசேஜ் என்றதும் ஆர்வமாக படித்தாள். அதுவும் அவளுக்கு மட்டுமே தெரிகின்ற பிரஞ்சு மொழி என்பதால் ஹாலில் இருந்தே படித்தாள். முதலில் மகிழ்ச்சியாக ராம் அனுப்பியது அதுவும் காதல் ரசம் சொட்ட பின்னர் யோசிக்க செய்தாள். ராம் இப்படி பேசி வழிபவன் அல்ல என்று அதன் பின்னர் திகைப்பு இது ஒரு பெண் ஆணுக்கு எழுதிய கடிதம் என்றதும் முகத்தில் அரை வாங்கிய உணர்வுடன் இருக்க, அஸ்வின் வந்து அமர்ந்தான்.

''தனு ராம் ஒரு மெசேஜ் அனுப்புவான் அது என்ன மொழி என்று தெரியலையாம் பிரெஞ்சா? ஸ்பானிஷா?'' என்று கேட்டான். அப்பறம் அதுக்கு மீனிங் கேட்டான். மெசேஜ் வந்தா அதை பார்த்து என்னிடம் சொல்லிடு'' என்றதும்

''அது பிரஞ்சு மொழி தான் அண்ணா''

''ஓஹ்... படிச்சியா அர்த்தம்'' என்று கேட்ட பிறகே 'சே அது லவ் லெட்டர் மாதிரி என்று சொன்னானே' என்று குழம்பி ''அவனுக்கு அர்த்தம் எல்லாம் தெரியாது நீ அதுக்கு அர்த்தம் டைப் பண்ணி சென்ட் பண்ணிடறியா? இல்லை நானே...?''

''நானே அனுப்பறேன் அண்ணா'' என்று‌அறைக்கு சென்றாள்.

அந்த லெட்டரில் இருந்த எழுத்துக்கு தமிழில் விளக்கம் அனுப்பி ராமுக்கு அனுப்பினாள்.

மேலோட்டமாக படித்தவன் தன்யா தனக்கு எழுதிய காதல் கடிதம் என்று நினைத்து வாய்ஸ் கால் செய்து திட்ட துவங்கினான். அந்தப் பக்கம் ஒரே விசும்பல் மட்டும் உணர்ந்து, அமைதியாக மாறி ''தன்யா..'' என்று அழைத்தான்

''என்ன முதலில் பேச விடுங்க. நீங்க அனுப்பின லெட்டரில் இருந்த மொழிக்கு தான் நான் விளக்கம் அனுப்பி இருக்கேன். நானா எல்லாம் எதுவும் எழுதலை'' என்று சொன்னதும் தனது தவறு புரிய ''சாரி தன்யா...'' என்றதும் போன் துண்டிக்கும் ஓசை கேட்டது.

ஒரு முறைக்கு பல முறை படித்து பார்த்தான் அதில் எழுதிய எழுத்து அவனுக்கு தெள்ளந்தெளிவாக புரிந்தது. யாரோ ஒரு பெண் சித்திக் பெயருக்கு எழுதியது. நல்ல வேலை சித்திக் பெயரை மறைத்து அனுப்பியது நல்லதா போச்சு என்று ராம் சந்தோஷப்பட்டான்.

இங்கு தனுவோ நிஜமாகவே ஸ்ரீராமுக்கு யாரோ ஒரு பெண் எழுதி இருப்பாளா? என்று அதிர்ந்தாள். மனம் இருக்காது என்று வாதிட்டது.

ராமோ தன்யாவிடம் பேசியதில் அவள் நினைவு வாட்ட, அஸ்வின் திருமணத்திற்கு எடுத்த போன் புகைப்படம் எல்லாம் பார்த்தான் அதில் தனுவை மட்டும் கிராப் செய்து அவளின் முகத்தை பார்த்து ஆறுதலாக அடைந்தான்.

-தொடரும்.

-பிரவீணா தங்கராஜ்.
 
Top