கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விழிகளில் ஒரு வானவில்-7

Praveena Thangaraj

Moderator
Staff member
அத்தியாயம்-7

இன்று ஞாயிறு என்பதால் வீட்டிலிருக்க, காலையிலே தனுவிடம் அஸ்வின் கேட்டுவிட்டான்.

''தனு ராம் ஏதோ அனுப்பியதுக்கு பதில்?'' என்று கேட்டதும்

''அனுப்பிட்டேன் அண்ணா'' என்றாள் அவள்.
‌‌ மாடியில் சென்று ராமிற்கு வீடியோ கால் செய்தான்.

''என்ன டா பிரஞ்சு லெட்டர் அர்த்தம் புரிஞ்சுதா?'' என்று பொதுப்படையாக கேட்டான்.

''ஹ்ம்...''

''என்ன லவ் லெட்டர் தானா?''

''ஆமா...'' என்று முகத்தை அங்கும் இங்கும் சுவரை வெறித்தான்.

''ஸம்திங்க் ராங்... ராம்''

''நத்திங் அஸ்வின்'' என்றான் உடனே,

''உன் முகமே சரியில்லை என்று சொல்லுது. சரி யாருக்கு யார் எழுதியது''

''அ.. அது ஒரு பொண்ணு எழுதியிருக்கா?''

''யாருக்கு?'' என்றதும் சித்திக் என்று கூற மனம் முரண்டு பிடித்தது. அதற்குள் அஸ்வின் ''உனக்கா டா ?'' என்றதும் அப்படியே ஆம் என்பது போல தலையை அசைத்தான்.

''எப்பதிலேருந்து? என்றான் அஸ்வின். பொய் பேச முடியாமல் ராம் தான் திணறினான். அஸ்வினிடம் பொய் என்றதற்கே அவனுக்கு பேச்சு வரவில்லை. அதன் பிறகு எப்படி கோர்வையாக... வேறு பேச தோன்றும்.

''வந்த நாளில் இருந்தா? இல்லை அடிக்கடி போய் வரும் பழக்கமா?'' என்றதும் ராமிற்கு கோவம் மட்டுமே, ஏன் இந்த அஸ்வின் என் மேல நம்பிக்கை இல்லாமல் பேசுகின்றான். அவனுக்கு தெரியாமல் காதலிப்பேனா? என்று தோன்ற உள்மனமோ 'டேய் ராம் நீ அவனுக்கு தெரியாம தான் தனுவை விரும்பற அதனால தான் உன் முகம் சரியில்லை. அஸ்வினுக்கு உன் முகம் சொல்லி கொடுத்துடும். என்ன அவனுக்கு யார் அந்த பெண் என்ற விஷயம் தான் குழப்பும்' என்றதும் தெளிந்தான்.

''ஸ்டாப் ஸ்டாப் அஸ்வின் அது ஜஸ்ட் ஏதோ லெட்டர் அதுக்கு இப்படி உற்றென்று டென்ஷன் ஆகற''

''டேய் நீ இருக்கறது சென்னை இல்லை ஆஸ்திரேலியா அதான் பயமே''

''அஸ்வின் உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா டா'' என்று கவலையாக கேட்டான்.

''இருந்துச்சு ஆனா சமீபகாலமா நீ எதையோ மறைக்கற மாதிரியிருக்கு அது என்னயென்று தான் தெரியலை. இங்க இருந்தா எப்படியும் கண்டு பிடிச்சிருப்பேன்''

ராமிற்கு மீண்டும் திகைப்பு மற்றும் கோபமே. அஸ்வினுக்கு நன்றாக தெரியும் ராமிற்கு சென்னை என்றாலே தாய் மாதிரி வேறு எங்கும் பெண் பார்த்து திருமணம் செய்ய மாட்டான். பிறகு ஏன் இப்படி கேட்டு உயிரை வாங்கறான் என்ற கடுப்பு.

''ஆமா டா லிவிங் டு கேதர்ல இருக்கேன் போதுமா?'' என்றான் கடுப்புடன் ராம்.

''பொய் பேச தெரியலை என்றால் விட்டுடு எதுக்கு ட்ரை பண்ற?'' என்றான் அஸ்வின்.

இப்பொழுது ராமிற்கு சிரிப்பு தான் வந்தது. தன்னை பற்றி எவ்வளவு துல்லியமாக கணித்து இருக்கின்றான் இந்த அஸ்வின்.

''ராம் இப்படி சிரி டா. அதான் நல்லாயிருக்கு. அதை விட்டு ஏதோ எப்பவும் தேடுற மாதிரி யோசிக்கற'' என்றான் அஸ்வின்.

லைப்ப தான் தேடுறேன் ஆனா என் லைப் இல்லை நிஷா லைப் என்று ராம் மனதில் சொல்லிக் கொண்டான்.

''சரி பவித்ரா எங்க?''

''கீழேயிருக்கா''

''இப்போ நல்லா சாப்பிடறாளா?''

''ஹ்ம் நல்லா நான் வெஜ் கட்டு கட்டறா...''

''உன் கண்னே பட்டுடும்''

''போ டா... அவள் எவ்ளோ சாப்பிடறாளோ அவ்வளவும் திரும்ப வாமிட் பண்ணிடறா... அப்பறம் எங்க கண்ணு வைக்கறது''

''வாட்..''

''அம்மாகிட்ட கேட்டதுக்கு அப்படி தான் இருக்கும்னு ஜூஸ் போட்டு தந்துடறாங்க''

''ஓஹ் ஓகே நீ சாப்பிட்டியா?''

''இல்லை கீழே போகணும் உன்கிட்ட பேசிட்டு தான்'' என்றதும்

''சரி பை நீ சாப்பிடு''

''ஓகே டா'' என்றே அணைத்து விட்டு படியில் இறங்கினான்.

பவித்ரா தனு மட்டுமே சாப்பிட்டு கொண்டு இருக்க மற்றவர்கள் சாப்பிட்டு போய் இருந்தார்கள்.

''சாப்பிட வர இவ்வளவு நேரமா?''

''ராம் கூட பேசிட்டு இருந்தேன்''

''என்னவாம் ஏதோ லெட்டர் அது இது என்று நேற்று பேசின...'' என பவித்ரா இடையில் கையை வைத்து அதிகார தோரணையில் கேட்க, அஸ்வின் சேரில் அமர்ந்து தட்டில் குழம்பு ஊற்றியபடி,

''ஹம் ராமுக்கு பிரெஞ்சுக்காரி ஒருத்தி லவ் லெட்டர் கொடுத்திருக்கா... ரெண்டு பெரும் லிவிங் டு கேதர்ல இருக்காங்களாம்'' என்று சிரித்தின்.

பவித்ரா உடனே ''அஸ்வின் என்ன உளற பக்கத்துல தனு இருக்கா ஞாபகம் இருக்கட்டும்'' என்று மெல்லிய குரலில் எச்சரித்தாள்.


அஸ்வினோ சாரி என்று உதட்டசைத்து பதிலலித்தான்.

தனு அதன் பின் சாப்பிட முடியாது எழுந்து விட்டாள். அறைக்கு கதவை அடைத்த, அடுத்த கணம் எதுக்கு அழுகின்றோம் என புரியாது வாயினை பொத்தி அழுதாள்.கொஞ்ச நேரம் யோசிக்க செய்தாள். அன்றைய நாட்கள் முழுதும் உணவினை கூட வயிறு வலி என்று தவிர்த்து கண்ணீரை அருவியாய் பொழிந்தாள்.

தனுவிற்கு ராமின் மீது அபரிதமான நம்பிக்கை உள்ளது. ஆனாலும் இது என்ன புது குழப்பம் ஒரு வேளை அவனை தான் மறுக்க இப்படி எதுவும் செய்கிறானோ? என தோன்றியது.

ஸ்ரீராம் இதுவரை அஸ்வின் அண்ணாவுக்கு தெரியாமல் எதையும் செய்ததில்லை அதே போல அஸ்வின் அண்ணாவும் ஸ்ரீராமிற்கு தெரியாமல் எதையும் செய்ததில்லை. கொஞ்ச நாளில் தனு அறிந்தவை இது. ஆக இதுவும் அப்படிப்பட்ட ஒன்றா? அதனால் தான் அஸ்வின் அண்ணாவிடம் ராம் கூறியிருப்பாரா? என்ற கலக்கம் உண்டானது.

நேற்றைய கடிதம் படித்து அர்த்தம் உணர்ந்து திகைத்ததற்கே இன்னும் அவள் தெளிவடையவில்லை அதற்குள் என்ன இது இடி போல செய்தி... சின்ன சிறிய அந்த உள்ளம் யாரிடமும் சொல்லி அழுவது என்றே கண்ணீரில் கரைந்தாள்.

அதன்பின் இந்த இரண்டு மாதம் ராமிற்கு உலகம் எப்படி சுழன்றது என தெரியாமல் கிடந்தான். அப்படி அவனுக்கு அதிர்ச்சியை தந்தது இந்த இரு மாதங்கள். யாரின் உதவியோடும் இல்லாமல் சித்திக் பற்றியும் அவனுக்கு வந்த லெட்டர் பற்றியும் முழு விவரம் அறிய... மற்றவர்களின் உதவி நாடி இருந்தால் என்றோ கூட அவனுக்கு உண்மை கிட்டியிருக்குமோ என்னவா?

தனக்கு கிடைத்த தகவல். தானே கண்டு பிடித்த விஷயம் என்பதால் நம்பால் இருக்கவும் முடியவில்லை. போதற்கு கிடைத்த புகைப்படங்கள் வேறு. அவனால் நிலை கொள்ள முடியவில்லை.

இதற்கு மேலும் நிஷா வாழ்க்கையில் முடிவு எடுக்காமல் இருக்க மனம் இல்லை. ஆனால் எப்படி கையாளுவது? நேராக சித்திக்கிடமே பேசுவது சரி என தோன்றியது. போன் செய்தான்.

''ராம் நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன் ஒரு...''

''உங்கிட்ட பேசணும். தனியா...நேர்ல'' என்ற ராமின் ஒருமை பேச்சில் சித்திக் அப்படியே அமைதியாகி போனான்.

எப்பொழுதும் ராம் சித்திக்கை மாமா என்று பணிவோடு கூப்பிட்டு இருப்பான் இன்று 'உங்கிட்ட' என்று விளிப்பதும் குரலும் சினத்தோடு வருவதை சித்திக் அறிந்து,

''என்ன விஷயம் எனக்கு வேலை இருக்கு. போனில் சொல்லு''

''நேர்ல பேசணும் நிஷாவுக்கு தெரியாம'' என்றதும்

''சரி ஈவினிங் நாலு மணிக்கு நீ தங்கி இருக்கற ஹோட்டலில் கீழே இருக்கற காபி ஷாப்க்கு வர்றேன்'' என்று வைத்துவிட்டான். எதுக்கு என்ன பிரச்சனை இந்த ராம் இதுக்கு முன்ன இப்படி என்கிட்ட பேசியதே இல்லையே... என்ன வா இருக்கும் என்று குழம்பி ஒரு வழியாக மற்ற வேலையினில் கவனம் செலுத்தினான்.

ஸ்ரீராமிற்கு தான் நேரம் போக போக பயம் அதிகரித்தது. தான் ஏதாவது கேட்க போய் அது நிஷாவுக்கு கெடுதலாக முடிந்திடுமா என்று அஞ்சினான். ஆனால் அறிந்த செய்தி அப்படி ஒன்றும் பொய் இல்லை. அதனால் நிஷாவுக்காக தான் பேசும் வார்த்தையிலும் நடந்து கொள்ளும் விதத்திலும் கவனத்தோடு இருக்க வேண்டும் என்று ஆயிரம் கட்டளை தனக்கு தானே இட்டுக்கொண்டான்.

மாலை நான்கு மணி ஆனது. ராம் எதுவும் கேட்காமல் அமைதியாக இருந்தான். சித்திக் அவனாகவே என்ன சொல்ல போகிறான் என்று கேட்க நினைத்தான். ஆனால் அமைதியாகவே போக சித்திக்கே,

''ராம் எனக்கு அங்க பேஷண்ட் நிறைய பேர் வெயிட் பண்றாங்க. என்ன பேசணுமோ சீக்கிரம் சொல்லு.''

ராமிற்கு பேச்சே எழவில்லை அமைதியாக இருந்தான்.

''பச் நான் கிளம்பறேன்'' என்று சித்திக் கிளம்ப டேபிளில் சித்திக் பார்க்க அந்த புகைப்படத்தை வைத்தான். சித்திக் அதனை பார்த்து பேயறைந்தது போல மாறி திருதிருவென விழித்தான். ராம் அப்படியே குனிந்து யோசிப்பதை கண்டு கொஞ்சம் திடம் வந்தவனாக சித்திக் பேச முயன்றான்.

''உங்க அக்கா நிஷா பார்த்தாளா?'' என்றதற்கு தலையை மறுப்பாக அசைத்தான்.

''இது என் கூட ஒர்க் பண்ற டாக்டர் கூட எடுத்த போட்டோஸ்... உனக்கு எப்படி..?'' என்றதும் அந்த பிரெஞ்சு லெட்டர் இரன்டு எடுத்து மேஜையில் வைத்தான்.

''அது ஜஸ்ட் லெட்டர்'' என்றான் சித்திக்.

''அதுக்குள்ள என்ன எழுதியிருக்கு என்று எனக்கு அர்த்தம் தெரியும்'' என்றான் திமிராய்.

''ராம் அது ஒரு பொண்ணு எனக்கு கொடுத்த லவ் லெட்டர். எனக்கு கல்யாணம் ஆகலை என்று... அவளோ தான் எனக்கு இதுல சம்மந்தம் இல்லை''

''இதுல சில லெட்டர் நீங்க அனுப்பியதும் இருக்கு.. அப்பறம் உங்க பேங்க் பேலன்ஸ்ல இருந்து அடிக்கடி ஷாப்பிங் போனதுக்கு பில் நகை வாங்கியதுக்கு பில் எல்லாம் இருக்கு... நகை எதுவும் நிஷாவுக்கு என்று சொல்லாதீங்க. உங்களை பற்றி முழுசா நானே தெரிஞ்சுகொண்ட விஷயம்.'' என்று விரைப்பாய் நின்றான்.

இம்முறை சித்திக் அமைதியாக ராமை கவனித்தான்.

''சோ என்ன பண்ண போற உங்க அக்காகிட்ட சொல்ல போறியா'' என்று எகத்தாளம் கொண்டான்

''உங்களால் எப்படி நிஷாவுக்கு துரோகம் செய்ய முடியுது'' என்றான் இயலாமையாய்.

''இங்க பாரு நான் செய்தது துரோகம் இல்லை. இந்த நாட்டில் நடக்கற சாதாரண விஷயம்'' என்று நியாயம் கற்பித்தான்.

''நீங்க ஒன்னும் இங்கயே பிறந்து வளரலை. நிஷாவுக்கு தெரிஞ்சுது....'' என்று சினத்தோடு சித்திக்கை கோபமாய்‌ முறைத்தான்.

சித்திக் கூலாக, ''சொல்லு நீயே சொல்லு... அப்படியே முடிஞ்சா டிவோர்ஸ் கொடுத்துட்டு உங்க அக்காவை கையோட சென்னைக்கு கூட்டிட்டு போயிடு. இங்க என் லைப் ஸ்மூத்தா இருக்கும்'' என்று சொல்ல ராமிற்கு அவனின் சட்டையினை பிடித்து உலுக்க தோன்றியது கண் மண் தெரியாமல் அடிக்க கூட, இருந்தும் சித்திக் பேச்சு தொடர்ந்தது.

''நான் ஹாப்பியா இருப்பேன் ஆனா உன் அக்கா நிஷா தான் நான் இல்லாமல் தவிப்பா. உனக்கு தான் நம்ம தமிழ் நாட்டு பொண்ணுங்க வாழ்கை முறை தெரியுமே. அதோட அவள் லைப் கண்ணீர் தனிமை இப்படி தான் போகும் அது பரவாயில்லையா? இல்லை இப்ப இருக்கற மாதிரி அவளுக்கு எதுவும் தெரியாம அவள் சந்தோஷமா இருக்கற நிஷா லைப் வேண்டுமா நீயே முடிவு சொல்லு'' என்றான்.

''என்ன மிரட்டரியா?'' என்று ராம் கேட்டான்.

''சே சே ரியல் லைப் நிதர்சனத்தை சொன்னேன். எனக்கு ஒன்னும் கவலை இல்லை. உங்க அக்காவுக்கு தான் கஷ்டம். குழந்தை கூட இல்லை அதனால டிவோர்ஸ் ஈஸி'' என்றான்.

''நீ எல்லாம் மனுஷன் தானா? நிஷாவுக்கு போய் எப்படி...? சே'' என்று திட்டினான்.

''இப்ப கூட பிரச்சனை இல்லை நீ அமைதியா போயிட்ட உங்க அக்கா ஹாப்பி லைப் தான் வாழுற.. நீ குழப்பாத வரை'' என்றதும் ராம் அப்படியே உறைந்தான்.

''ஓகே ராம் நீயா முடிவு எடு. எனக்கு வேலை இருக்கு. உன்னை மாதிரி ரிலாக்ஸ் பண்ண என்னால முடியாது பை'' என்று கிளம்பினான். ராமிற்கு தலையே சுற்றியது.

என்ன செய்ய? என்ன செய்ய? இதே கேள்வி நான்கு நாட்களாக குடைந்தது. போனையும் எடுத்து யாரிடமும் பேசாமல் தவிர்த்தான்.

இவன் வருகை இல்லாமல் போக நிஷாவே அவனை தேடி ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தாள்.

நிஷா கதவை தட்ட சாவி துவரம் வழியே அவளை கண்டவன் வேகமாக சித்திக் மற்றும் அவன் ஒரு பெண்ணோடு இருக்கும் புகைப்படம் மற்றும் லெட்டர் எடுத்து அவசரமாக அவனின் பெட்டியில் திணித்து மூடினான். பின்னர் கதவு திறந்தான்.

''என்ன டா இவ்ளோ நேரம் என்ன பண்ணின?'' என்று கேட்டு நுழைந்தாள்.

''து.. தூங்கிட்டேன் அக்கா''

''ஏன் டல்லா இருக்க''

''தூங்கி எழுந்ததால அப்படி இருக்கும்''

''சரி நீ ஏன் நாலு நாளா வீட்டுக்கு வரலை போனையும் சுவிட்ச் ஆப் பண்ணி வச்சியிருக்க''

''அது கொ.. கொஞ்சம் பிவேர்'' என்றதும் நிஷா அவனின் உடலை தொட்டு பார்த்தாள்.

''இப்போ சரி ஆகிடுச்சு'' என்றான்.

''என்ன டா நீ லாம்ப் போஸ்ட் மாதிரி வளர்ந்திருக்க ஆனா குழந்தை மாதிரி பேசற... பேசாம என் கூடவே தங்கி இருக்கலாம்ல'' என்று அக்கறை காட்டினாள்.‌

''உன் ஹஸ்பண்ட் வரலையா?'' என்றான்‌

''என்ன டா சித்திக் மாமா என்று சொல்வ? இப்ப உன்‌ ஹஸ்பெண்டா? அதுசரி. அவருக்கு ஹாஸ்பிடலில் ஒரு எமர்ஜென்சி கேஸ்.'' என்று அறையை சுற்றி பார்த்தவள் ''இடம் ரொம்ப அழகா இருக்கு டா'' என்றாள்.

''மனிதர்களின் சந்தோஷம் இடத்தை வைத்தோ, பணத்தை வைத்தோ முடிவாவது இல்லை நிஷா. நிம்மதி வச்சி தான் இருக்கு'' என்றதும்

''தத்துவமா பேசற.... சரி எப்போ வீட்டுக்கு வருவ?'' என்றாள்.

''வர்றேன்'' என்றான்‌ சலித்துக் கொண்டு.

''சரி இன்னிக்கு நைட் டின்னர் ரெடி பண்றேன். எனக்கு ஹாஸ்பிடல் போகணும் நேரம் ஆச்சு'' என்று கிளம்பினாள்.


ராமிற்கு நிம்மதியே இல்லை. அஸ்வினிடம் பேசலாமா? வேண்டாமா தவித்தான்.‌

நான் இருக்கற
நிலைமையில் ஏதாவது அவனிடம் உளறிடுவேன். அப்படியில்லை என்றால் வீடியோ காலில் முகம் காட்டி கொடுத்திடும் என்று கையாளாகாத தனத்தில் அப்படியே விட்டுவிட்டான்.

-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்
.
 
Top