கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விழிகளில் ஒரு வானவில் -8

Praveena Thangaraj

Moderator
Staff member
அத்தியாயம் -8

ராம் இரவு எப்பொழுதும் போல நிஷா வீட்டுக்கு சென்று சாப்பிட வந்தான்.

மனம் எங்கும் வலியோடு எதுவும் கூற முடியாமல் தவித்தான். சித்திக் வேண்டுமென்றே நிஷாவோடு காதலோடு பேசி நடித்தான்.

மீண்டும் ஒரு வாரம் போனது மட்டுமே மிச்சம். அஸ்வின் அன்று போனில் பேசினான்.

''எங்க டா போன? ஒரு வாரமா ட்ரை பண்றேன் போன் சுவிட்ச் ஆப் என்று வருது'' என்றான் அஸ்வின்.

''மொபைல் கீழே விழுந்து கொஞ்சம் ஸ்டக் ஆகிடுச்சு அதனால கான்டக்ட் பண்ண முடியலை''

''சரி லேப்டாப்ல ஸ்கைப்ல வர வேண்டியது தானே.. ஜிமெயில் இருக்கு பேஸ்புக் இருக்கு மெசேஜர் இருக்கு...'' என்று அடுக்கினான்

''டேய் கொஞ்சம் உடம்பு சரியில்லை டா. பிவேர் என்னால எழுந்துக்க முடியலை'' என்றதும் அஸ்வினுக்கு கோவம் துளிர்த்தது.

''அங்க நிஷா என்ன பண்ணிட்டு இருக்கா? உன்னை கூட கவனிக்காம ஹாஸ்பிடலில் இருக்கற பேஷண்ட் பார்த்து என்ன கிழிக்க போறா?'' என்று கோபப்பட்டான்

''டேய் நிஷாவுக்கும் தெரியாது அவளே பார்த்துவி ட்டு என்னை திட்ட தான் செய்தா'' என்றதும் தான் அஸ்வின் கொஞ்சம் அமைதியானான்.

''ராம் நீ பண்றது எனக்கு பிடிக்கலை. ஒன்னு நிஷா கூட இரு இல்லையா இங்க சென்னை கிளம்பி வா'' என்றான் உரிமையாக.

''வர்றேன் டா இன்னும் ஒரு முயற்சி பண்ணி பார்த்துட்டு..." என்று வார்த்தை விட்டான்.

''என்ன முயற்சி?'' என்று அஸ்வின் பிடித்து கொண்டான்.

''அது ஒன்னுமில்லை இங்க நிஷாவுக்கு.... பேபிகாக ட்ரீட்மென்ட்...'' என சமாளித்தான்.

''ஹ்ம்ம் ஓகே ஓகே'' என அஸ்வின் அமைதியானான். நிஷாவிற்கு பேபி என்றதும் துருவவில்லை.

அதன் பின் ரகு அங்கிள் போன் செய்து ஆபிஸ் விஷயமும் பேசி முடித்து வைத்தான்.

மீண்டும் ஒரு நான்கு நாள் மட்டுமே போக, நிஷா வீட்டுக்கு வந்து சாப்பிட்டு கொண்டிருந்தான்.

''என்ன ஸ்ரீராம் என்கிட்ட பேசி முடிவு எடுக்க முடியலை என்று மேக்னாகிட்ட பேசினியாமே. என்ன சொன்னா? அவளுக்கு தமிழ் சொல்லி கொடுத்ததே நான் தான். அவளுக்கு ஏற்கனவே நானும் நிஷாவும் ஒரே வீட்ல இருக்கறது தெரியும். நிஷா வேற தாலி எல்லாம் போடுறது இல்லையே அதனால அதுவும் எனக்கு சாதக போச்சு. மேக்னா அதை பெரிசா எடுத்துக்கலை'' என சிரிக்க ராமிற்கு அவனை ஓங்கி நாலு சாத்து சாத்த வேண்டும் போல கொலை வெறியே உண்டானது.

ஆனால் நிஷா கிட்சேனுள் இருந்து வரும் பொழுது உடனே சித்திக் காதலோடு நிஷாவை பார்த்து பேசியபடி மறுபடியும் கிட்சேனுள் செல்வதை கண்டு ஒன்றும் செல்லாமல் தவித்தான்.

அப்பொழுதே முடிவு செய்து விட்டு கிளம்பினான். இனி தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்ற பட்சத்தில் இங்கே இருக்க அவனுக்கு எரிச்சலும் இயலாமையும் மட்டுமே வந்தது. அடுத்த இரு தினத்திலே சென்னை வந்து சேர்ந்தான்.

நேராக தனது வீட்டிற்கு சென்றான். களைப்பு தீர குளித்து முடித்து உறங்கினான். எழுந்தவன் நேராக அனிச்சையாக அஸ்வின் வீட்டை நோக்கி காரில் சென்றான்.

இவன் வருவதை பார்த்துவிட்டு முதல் ஆளாக துள்ளிய தனு மெல்ல அவளின் செய்கை அவளே உணர்ந்து தானாக மறைந்து கொண்டாள். அஸ்வின் மேலிருந்தே ராமின் காரினை கவனித்து வேகமாக கீழே இறங்கினான்.

''பவி ராம் வந்துட்டான் நான் கீழே போறேன் நீ ரெடியாகிட்டு வா'' என பாத்ரூம் கதவருகே சொல்லிவிட்டு இறங்கினான்.

இறங்கும் பொழுதே ''அம்மா.. சே அம்மா சுவாதி வீட்டுக்கு போய் இருக்காங்களே...'' என்று ''தனு ராம் வந்து இருக்கான் டீ போடு'' என்றதும் சரி என தலையை ஆட்டினாள் நாயகி.

வாசலிலே ரமை கண்டு ''என்ன டா இது? துரும்பா இளைச்சுட்ட நிஷா எப்படி இருக்கா?'' அஸ்வின் எப்பொழுதும் ராமின் அக்காவை அவனை போலவே நிஷா என அழைப்பான. ராமாவது சில நேரம் 'அக்கா' என்று கூறுவான் அஸ்வின் எப்பொழுதும் நிஷா என கூப்பிடுவான்.

''அவளுக்கு என்ன சுற்றி நடக்கறதை கூட கவனிக்காம பிஸியா இருக்கா'' என்றான் மார்க்கமாக

''டாக்டர் என்றால் சும்மாவா டா. சித்திக் மாமா எப்படி இருக்கார்'' என்று அஸ்வின் கேட்க கோபம் பிறந்தது.

''ஹ்ம்ம் பைன்'' என சொல்லி 'அவனுக்கென்ன ஜாலியா கிளி மாதிரி எங்க அக்கா இருக்கும் பொழுது குரங்கு மாதிரி ஒருத்தி கூட சுற்றிக் கொண்டு இருக்கான்' என்றான் மனதில்.

''காபி எடுத்துக்கோ டா'' என்றதும் எடுத்தான். நிமிர்ந்தும் தான் அது பவித்ரா இல்லை தனு என கவனித்தான். தனுவை கவனித்த பிறகு அஸ்வின் பேச்சு எதுவும் அவன் காதில் விழுந்தது போல இல்லை.

'தனுவா இது? ஆளே மாறியிருக்கா... என முதல் முறையாக அவனாகவே அவளை பார்த்தான்.

முன்பு இருந்த குழந்தை தனம் காட்டிலும் பார்வையில் முதிர்ச்சி, பெரியவள் போன்ற தோற்றம். இதுக்கு முன் அவளை மிடி யூனிபார்ம் என்று பார்த்து இருந்தவன், சுடிதாரில் கல்லூரி பெண்ணுக்கே உரிய தோற்றம் கொண்டிருந்தவளை பருகினான்.

அஸ்வின் ஆகாஷ் கல்யாணத்தில் சேலை அணிந்தாலும் அதில் இல்லாத ஒரு பக்குவ தோற்றம் கண்டான். இவ குழந்தை மாதிரி இருந்தா இப்போ என்ன? இது தான் வயது பருவம் வந்தாலே ஒரு மிடுக்கான பெரியவள் தோற்றம் வந்திடுமோ...' என நினைத்திருக்க மற்ற அனைத்து சிந்தனையும் மறந்திருந்தான்.

''டேய் இங்க ஒருத்தன் கேள்வி கேட்டுகிட்டே இருக்கேன் அமைதியா அப்படி என்ன யோசிக்கற?''

''அது ஆபிஸ் நினைவு'' என இழுத்தான்.

''அது சரி இவ்ளோ நேரம் அதை தானே கேட்கறேன். ஆபிஸ் போனியா ரகு அங்கிள் மீட் பண்ணியா? புது ப்ராஜெக்ட் நிறைய வந்தும் வேண்டாம என்று சொல்லிடியாம்? ரோஷன் கூட கவலைப்பட்டான் என்று ரம்யா சொன்னா?''

''இப்ப தான் டா தூங்கி எழுந்து இங்க வர்றேன். இனி தான் போய் பார்க்கணும்''

''இன்னும் நீ துக்க கலக்கத்தில் தான் இருக்க'' என்றதும்

''ஏய் ஸ்ரீராம் எப்ப டா வந்த சென்னைக்கு... ஏன் டா இப்படி இளைச்சுட்ட....'' என்று படிகளில் வேகமாக ஓடி வந்தவளை கண்டு,

''ஏய் பவித்ரா மெதுவா ம்மா'' என்று ராமும் ''ஏய் பச்சரிசி மெதுவாடி'' என்று அஸ்வினும் ஒரே நேரத்தில் மொழிந்தர்கள்.

''அப்பப்ப ப்ரெண்ட்ஸ் என்றால் ஒரே மாதிரி தான் பேசுவீங்களா?'' என்ற பவித்ராவிடம்,

''புருஷனும் பொண்டாட்டியும் கூட ஒரே கேள்வி கேட்கறிங்க... ஏன் டா இப்படி இளைச்சுட்ட... என்று'' ராம் சொன்னதும் அஸ்வின் சிரிக்க,

''அதை விடு முதலில் சாப்பிட்டியா?'' என பவித்ரா விசாரிக்க, இல்லை என்று தலை அசைத்தான்.

''முதல்ல சாப்பிட உட்கார்'' என்று தட்டினை வைத்து சாப்பாடு பரிமாறினாள்

''காபி குடிச்சேன் பவித்ரா''

''டேய் எனக்கு தெரியும் பரவாயில்லை சாப்பிடு" என்று பரிமாறினாள்.

அஸ்வினுக்கு ஆச்சரியமாக இருந்தது. தான் அவனின் உயிர் தோழன் எனினும் தனக்கு அது தோன்றவில்லையே இந்த பவித்ரா மட்டும் எப்படி தான் யோசிச்சாளோ? தாய்மை என்றாலே வந்திடுமோ? என வியந்தான்.

''பவித்ரா எங்க அம்மா கூட இப்படி தான் ஸ்கூல்ல இருந்து வரும் பொழுதே என் முகத்தை பார்த்து சாப்பிட சொல்லிடுவாங்க'' என உணவினை உண்டான். அதற்கு புன்னகை மட்டுமே சிந்தி ''ஆம்லெட்?'' என கேள்வி எழுப்பினாள்.

''ஓகே பேப்பர் நிறைய...'' என்றான் ராம். அஸ்வினுக்கு மிகவும் நிறைவாக இருந்தது. ஸ்ரீராம் எப்படி உரிமையாக கேட்டு சாப்பிட வேண்டும் என நினைத்தான் ஆனாலும் தன்னிடம் அப்படி அவன் நடக்கவில்லை. பவித்ரா நட்பில் அவன் அந்த உரிமையை கையாளுகின்றான். அவனுக்கு அதுவும் சந்தோஷமே.

''குட்டி பையன் எங்க?'' என்று அஸ்வின் அண்ணன் மகனை கேட்டான்.

''சுவாதி வீட்ல தான் இருக்கான். வர்ற சண்டே பெயர் சூட்டு விழா...'' என்று கூறினான் அஸ்வின்.

''ஓஹ் நான் அப்போ எப்படி பார்க்கறது?''

''சண்டே இன்னும் 3 நாள் தானே நேர்ல பாரு'' என்றான் அஸ்வின்.

''ராம் ரம்யா மேரேஜ் வர போகுது தெரியுமா?'' என்றாள் பவித்ரா.

''ரோஷன் சொன்னான். ரகு அங்கிளும் சொன்னார். இன்னும் கூட ரகு அங்கிளுக்கு நான் ரம்யா ரோஷன் எல்லோரும் கொஞ்சம் நெருக்கம் என்று தெரியாது''

''நிஷா அக்கா சித்திக் மாமா எப்படி இருக்காங்க. அக்கா இங்க வர சொன்னியா?'' மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டு இருந்தவன் தீடீரென்று அமைதியானான்.

''ஹ்ம்''

''அது என்ன பிரெஞ்சு லெட்டர்? அப்பறம் அஸ்வின் வேற ஒன்னும் சொன்னானே? உண்மையாவா டா?'' என பவித்ரா கேட்டதும், தட்டில் சாதத்தினை பிசைந்தவன் கீழ் கண்ணில் தனு இருக்கும் அறையை பார்த்தான். அஸ்வின் சோபாவில் இருப்பதால் ராமின் முகம் தெரியாவில்லை. பவித்ரா மும்முரமாக அவனுக்கு பரிமாறி கொண்டிருந்தால் அவளும் கவனிக்கவில்லை.

தனு மட்டும் அவனையே பார்த்துக் கொண்டிருப்பதாக தோன்ற அவளின் மனதில் தன்னை அடியோடு அழிக்க வேண்டும் என்ற உந்துதலில் ''அஸ்வின் சொன்னா உண்மை தானே'' என சாப்பிட்டு கை கழுவினான்.

தனு வேகமாக மாடிக்கு சென்றாள்.

''என்னாச்சு தனு?'' என்றாள் பவித்ரா.

''துணி எடுக்க போறேன் அண்ணி'' என்றாள்.

ராமிற்கு அவள் தான் பேசியதை கேட்டு பொறுத்துக் கொள்ள முடியாமல் செல்கின்றாள் என அறிந்துக் கொண்டான். இந்த வழி தான் சரி இப்படி பேசினா தான் என் அஸ்வின் நட்பு எனக்கு எப்பவும் கிடைக்கும் அதனால் 'தனு சாரிம்மா' என்றான் மனதினுள்.

----

ஆகாஷ்-சுவாதி குழந்தைக்கு வெகு விமர்சையாக ஹோட்டலில் ஹால் புக் செய்து பெயர் சூட்டு விழா நடைப்பெற்றது. வளைக்காப்பு முன்பே குழந்தை பிறந்த காரணத்தால் இந்த விழாவுக்கு கூட்டம் அதிகமாக வந்தார்கள்.

'விகாஷ்' என்ற பெயரினை தாங்கிய தெர்மாக்கோலில் வண்ண எழுத்துக்களில் வரவேற்ற அந்த ஹாலில் பவித்ரா குடும்பம் மொத்தம் வந்திருந்தார்கள்.

வருண் எப்பொழுதும் போல தனது அஸ்வின் மாமா கைவளைவில் இருந்துக் கொண்டான். வருணை காணும் பொழுது எல்லாம் அந்த இடத்தில் ராம் தான் தெரிந்தான். ஆனால் அஸ்வின் இடத்தில் துளியும் சித்திக் வரவில்லை.

ராமிற்கு மனம் வலித்தது. சே அஸ்வின் எங்க? இந்த சித்திக் எங்க? என் அஸ்வின் பவித்ராதாசன் ஆனா அந்த சித்திக் அப்படியில்லை என்றதும் சித்திக் மேல் கோவம் எழுந்தது.

வருணுக்கு என்று வாங்கி வந்த கிப்ட் எல்லாம் கொடுத்தான். வருண் பிரித்து பார்த்தான் அதில் புத்தம் புதிய மாடல் கேமரா இருந்தன.

''அண்ணா இது எனக்கா? அப்பா திட்ட போறார் எனக்கு வேண்டாம்'' என திருப்பி தர,

''அதெல்லாம் சொல்ல மாட்டாங்க. நீ இதை ப்ளஸ் டூ முடிஞ்ச பிறகு யூஸ் பண்ணு. நந்தன் அப்பாகிட்ட நானே சொல்றேன்'' என்றதும் முகம் சரியானது.

''டேய் எனக்கு ஒன்னும் வாங்கி வரலை. ஆனா இவனுக்கு மட்டும் கிப்ட் ஆ?'' என பவித்ரா கேட்டாள்.

''உனக்கு தான் அஸ்வின் இருக்கானே அப்பறம் எதுக்கு கிப்ட்'' என்று ராம் உரைத்தான்.

''உங்கிட்ட கேட்டேன் பாரு போ டா'' என கயல் இருக்கும் பக்கம் சென்றாள்.

விஸ்வநாதன்-ராதை எல்லோரையும் வரவேற்று மகிழ்ந்தார்கள்.

தன்யா ஆகாஷ்-சுவாதியின் மகன் விகாஷின் அருகே அமர்ந்து அவனுக்கு ராட்டினம் போன்ற ஒரு விளையாட்டு பொருளை சுற்றி காட்ட அவளின் குழந்தை தன முகம் ராமிற்கு அப்படியே இதயத்தினுள் பதிந்தது.

வாரங்கள் போக நிஷாவே ராமிற்கு கால் செய்தாள்.

''நிஷா ஏதாவது பிரச்சனையா? என பயந்தான்.

''ஏன் டா உன்னை பற்றி விசாரிக்க போன் பண்ணினேன் நீ என்ன டா ஏதாவது பிரச்சனையா என்று கேட்கற'' என்றதும்

''ஒன்னுமில்லை..'' என்றான்.

''ராம் நீ போனதும் எனக்கு ஒரு மாதிரியிருக்கு டா நீ இங்கயே இருந்திருக்கலாம்'' என்று நிஷா கவலையில் உரைத்தாள்.

''கொஞ்ச நாளுக்கே என்னால முடியலை'' என்று சித்திக் செயலை எண்ணி கூற, நிஷாவோ "டேய் நான் இப்பவெல்லாம் நீ சொல்ற மாதிரி நைட் மட்டுமாவது சமைக்கறேன் டா. மாமாவுக்கும் ரொம்ப பிடிக்குதாம்''

''ஹ்ம்'' என்றான் சுரத்தையே இல்லாமல்,

''ஸ்ரீராம் நீ ஒரு குழந்தை போட்டோ அனுப்பியிருக்கியே யார் டா அது?'' என்றாள் ஆசையாக

''அஸ்வின் அண்ணன் ஆகாஷோட குழந்தை விகாஷ்''

''செம அழகு டா'' என்றாள் குழந்தை முகத்தை.

''ஹ்ம்ம் எல்லோரும் வந்து இருந்தாங்க. இந்த முறை நான் உன்னை கூப்பிட்டு வருவேன்னு பவித்ரா நினைச்சாலாம்'' என்று விரிவுரையாற்றினான்.

''பவித்ராவுக்கு பேபி பிறந்த பிறகு கண்டிப்பா வர்றேன் டா'' என வாக்களித்தாள்.

''இப்படி தான் ஒவ்வொரு முறையும் சொல்ற ஆனா... '' என்று சலித்திட,

''ராம் ராம் ஒரு எமர்ஜென்சி கேஸ் டா அப்பறம் பேசறேன் பை'' என அவளின் பணியினை தொடர சென்றாள்.

ராமிற்கு சித்திக் அக்காவை எதுவும் செய்யலை. ஆனால் இரட்டை வேஷம் போடுறான்.

ராமிற்கு அலுவலக வேலை நிறைய காத்திருந்தது. ரோஷன் ரகு அங்கிள் இருப்பதால் கொஞ்சம் தெம்பு வந்தது. புதிதாக சில ப்ராஜெக்ட் எடுத்தான்.

நடுநடுவே அஸ்வின் வீட்டுக்கு செல்லும் பொழுது தனுவை பார்த்து தன் மனம் சலனப்படுவதை உணர்ந்து ராம் அஸ்வின் வீட்டுக்கு செல்வதை தவிர்த்தான்

ராம் வருவது இல்லை என்றதும் அஸ்வின் அவனை தேடி சென்று பேசி வருவான். அவன் வரும் பொழுது பெரும்பாலும் மொபைலில் எதையோ சுவாரசியமாகவோ அல்லது தவிப்பாக பார்ப்பதை அஸ்வின் கவனிக்க தவறவில்லை. போனில் அப்படியென்ன என்று தோண்டி துருவவும் அவனுக்கு இஷ்டம் இல்லை. அதே போல சில நேரம் சோபாவில் ராம் விட்டதை வெறித்து பார்த்திருப்பதை கண்டு ஒரு நாள் கேட்டு விட்டான்.

''ராம் நீ முன்ன மாதிரி இல்லை என்னாச்சு உனக்கு?'' என்றான் அஸ்வின்.

''ஒன்னுமில்லயே ஆபிஸ் டென்ஷன் தான் டா?'' என்றான் சமாளித்திடும் முடிவோடு.

3 மாதம் கழித்து வந்தமையால் சில புது ப்ராஜெக்ட் கை நழுவி போனதால் இருக்கலாம் என அஸ்வினும் நினைத்தான்.

அன்று ஒரு முறை விகாஷ் ஹாலில் விளையாடிக் கொண்டிருந்தான். தற்பொழுது கைகளையும் கால்களையும் உதைத்து இருக்க ஆகாஷை பார்த்து விகாஷ் சிரித்தான்.

''பவித்ரா... பவித்ரா... என மேலிருந்து அஸ்வின் கத்த,

''என்ன அஸ்வின்?'' என்றாள் கீழே இருந்து

''ஏய் என் போனை காணோம் வந்து எடுத்து கொடு'' என்றான்.

''லேண்ட் லைன்ல இருந்து கால் பண்றேன் இரு'' என அறிவு கொழுந்தாக பதிலளிக்க, கடுப்பானான் அஸ்வின்.

இந்த பவித்ரா மேல வருவாயென்று பார்த்தால் இப்படி சொதப்பறாளே... என்று மீண்டும் அஸ்வின் யோசித்து

''பவித்ரா என் ஆபிஸ் ஐடி கார்டு எங்க? என்றான்.

'இவர் எங்கயாவது வச்சிட்டு என்னை தேட சொல்லி உயிரை வாங்கறார்' என முனுமுனுத்து கொண்டே காய்கறியை வெட்டி முடித்து திரும்பினாள்.

''பவித்ரா... உன்னை தான் கூப்பிட்டேன். வந்து எடுத்து தா'' என்றான்.

அஸ்வின் தந்தை விஸ்வநாதனுக்கு சிரிப்பாக இருந்தது. ராதையிடம் தான் அப்படி நடந்த நினைவலைகளுக்குள் மூழ்க ராதை பவித்ராவிடம் இருந்து காய்கறிகளை வாங்கி,

''அவனுக்கு ஐடி கார்டு எடுத்து கொடுத்துவிட்டு அப்பறம் வா'' என அனுப்பினார்கள்.

''இன்னும் பிரேக் பாஸ்ட் ரெடி பண்ணலை அத்தை'' என்றதற்கு

''நான் பார்த்துப்பேன் நீ அவனை கவனி'' என்றதும் பவித்ரா மெதுவாக மாடி ஏறினாள்.

கதவை திறந்து உள்ளே நுழைந்தவளை பின்னாலிருந்து அணைத்தவன். கழுத்தில் உதட்டை வைத்து ஊர்வலம் செல்ல,

''அச்சு உனக்கு அறிவே இல்லை நகரு" என ஐடி கார்டு தேடினாள்.

''என்ன தேடற..?'' என்றான்.

''நீ தானே ஐடி கார்டு..? அச்சு விளையாடறியா?''

''பச்சரிசி உனக்கு எத்தனை முறை சொல்லியிருக்கேன். காலையில் எழுந்திருக்கும் பொழுது நீ என் கைவளைவில் இருக்கணுமென்று.''

''நீ தூங்கிட்டு இருந்த அதனால கீழே போய் வேலையிருந்தா பார்க்கலாம் போனேன்''

''நான் குளிக்கும் பொழுது காபி எடுத்து கொண்டு வந்து டேபிளில் வச்சிட்டு போயிட்ட... எனக்கு உன்னை காலையில் இருந்து பார்க்கலை தெரியுமா?'' என்று காதல் மனைவியை தேடிய கதையை விவரித்தான்.

''அதுக்கு அதகாணோம் இதகாணோம் என்று என் பெயரை ஏலம் விடுவியா? கீழே எல்லோருக்கும் தெரியும் நீ உன் திங்க்ஸ் எதையும் ரொம்ப கேர் பண்ணி வச்சியிருப்ப என்று. இப்போ காணோம் என்று கேட்டால் யாராவது நம்புவாங்களா?'' என அதட்டினாள்.

''ஏய் நிஜமாவே என் மொபைல் தலைகாணிக்கு அடியில் இருந்துச்சு. பாரு மொபைல் வைக்கிற ஸ்டாண்டுல நீ பூவச்சிருக்கற கிளிப் இருக்கு''

''நீ தானே கண்டயிடத்துல...? ஆ அதை விடு எதுக்கு இப்போ கூப்பிடறிங்க. அத்தை தனியா சமைக்கறாங்க. சுவாதி குழந்தை வச்சியிருக்கா. விடு ஐடி கார்டு கண்டுபிடிச்சு கொடுத்துட்டு கிளம்பறேன்''

''அதான் என் பேக்ல இருக்கே''

''அஸ்வின் அப்போ சும்மா கூப்பிட்டியா?''

''மக்கு இப்ப தான் புரிஞ்சுதா?'' என தலையில் இடிக்க, ''நான் தான் காலையில் இருந்தே உன்னை பா
ர்க்க முடியலை என்று தவிக்கிறேன் நீ என்னடா என்றால்... என நெருங்க பவித்ரா அவனை தள்ளி விட்டு கதவை திறந்து வெவ்வவெ என கீழே இறங்கினாள்.

''உன்னை அப்பறம் கவனிச்சுக்கறேன்'' என்றே அலுவலகம் கிளம்ப ஆயுத்தமானான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
.
 
Top