கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விழிகளில் ஒரு வானவில் -9

Praveena Thangaraj

Moderator
Staff member
அத்தியாயம்-9

ராமிற்கு புது அலுவலக வேலை காரணமாக கொஞ்சம் நிம்மதி அடைந்தாலும் இரவில் எப்பொழுதும் போல ஒன்றன் பின் ஒன்றான நிகழ்வுகள் வந்து அவனை இம்சித்தது. நிஷா நினைவு வந்தால் அவனுக்கு சித்திக் மேல் கோவமும், தன் மீதே இயலாமையின் கோவமும், நிஷா எண்ணி வருத்தமும் அடைந்தான். தனுவை எண்ணி சில நேரம் புன்முறுவல் செய்தாலும் அஸ்வின் நினைவு வந்ததும் அது துரோகமாக தோன்ற அவனுக்கு எப்பொழுதும் விடியா இரவு தான்.

அலுவலகத்தில் சில நேரம் ரகு ராமை கண்டு அஸ்வினிடம் சொல்லவே செய்தார். 'ராம் முன்பு போல இல்லை தம்பி. கொஞ்சம் என்னனு பாருங்க.' என்றதும் அஸ்வின் கணிப்பு சரியாக போக, கேட்டால் மட்டும் இல்லை என வம்படியாக சாதித்தான்.

அஸ்வின் ஒருநாள் நானா தெரிஞ்சுப்பேன் என்பான்.

பவித்ராவுக்கு ஏழாம் மாதம் துவங்கி விட பவித்ரா வீட்டில் அவளை வளையல் அணிந்து தங்கள் வீட்டுக்கு வர அழைத்து செல்ல முடிவு எடுத்தார்கள்.

பவித்ராவை பிரிந்திருக்க முடியாது என்று அஸ்வின் பிடிவாதமாக கூற, விஸ்வநாதன் ராதை வேறு அவனுக்கு புரியும் விதமாக சொல்லி பார்த்தார்கள். அஸ்வின் தான் ஒன்றை நினைத்தால் அதிலே இருக்கும் ஆளாயிற்றே...
பவித்ராவே அவனுக்கு புரியும் விதமாக சொல்லி முடித்தாள்.

''டேய் அச்சு வெல்லம் கயல் அம்மாவுக்கு ஆசையிருக்கும் எனக்கும் ஆசையிருக்கு'' என்று மெதுவாய் எடுத்துரைக்க,

''என்னை விட்டுயிருக்க உனக்கு ஆசையா?'' என முறைத்தான்

''முட்டாள் மாதிரி பேசாத அச்சு. கயல் அம்மாவுக்கும் நந்தன் அப்பாவுக்கும் என்கூட இந்த நேரத்தில் இருக்கனும் கவனிச்சுக்கணும் என்று ஆசை இருக்காதா? உனக்காக மட்டும் யோசிக்க முடியாதுடா'' என்று கர்ப்பிணியவள் மொழிந்தாள்.

''ஆனா நான் உனக்காக மட்டும் தான் யோசிப்பேன் பவித்ரா'' என்றான் பிடிவாதமாக.

''அப்போ எனக்காக கொஞ்ச நாள்... நான் கரெக்ட்டா ஒன் மந்த் முடிஞ்சதும் இங்க வந்துடுவேன். உன் அருகே தான் இருப்பேன்'' என்றதும் கொஞ்ச யோசித்தவன் பின்னரே சரியென தலை அசைத்தான்.

கைகள் நிறைய வண்ண வளையல்கள், கன்னம் இரண்டும் சந்தனமும் முகமெங்கும் பூரித்து புன்னகையோடு பவித்ராவை கண்டதும் அவளை அஸ்வினுக்கு விடவே மனமில்லை. எல்லோரிடமும் சொல்லிவிட்டு கிளம்பிய பின்னும் அஸ்வின் பேசாமல் இருக்க பவித்ராவும் அவனிடம் பேச தோன்றாமல் அப்படியே கண்களில் மட்டுமே விடை பெற்றார்கள்.

ராமிற்கு பவித்ராவை பார்க்கும் பொழுது நிஷா வாழ்வில் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என தோன்றியது. ஸ்ரீராமோடு அவன் வீட்டுக்கே வந்து சேர்ந்தான் அஸ்வின்.

ராம் வீட்டுக்கு வந்த பின் ஜூஸை டம்ளரில் ஊற்றி கொடுத்தபின் அதனை வாங்கி ராமையே பார்த்து கொண்டிருந்தான்.

''என்னடா என்னையே பார்த்துகிட்டு இருக்க. நான் என்ன உன் கண்ணுக்கு பவித்ரா மாதிரியா தெரியறேன்?''

''இல்லை.. ஆனா என் ஸ்ரீராம் மாதிரியும் தெரியலை.'' என்று கூறினான்.

''என்ன?'' என்றான் ராம்.

''ராம் என்கிட்ட எதையும் மறைச்சு வைக்க மாட்டான். அப்படியே மறைச்சலும் அவனுக்கு அதனால குற்ற உணர்வு வருகின்ற விஷயமா இருக்காது. ஆனா நீ அப்படி இல்லை இப்போ என்கிட்ட எதையோ மறைக்கற, எனக்கு அது தெரிய கூடாது என்றும் தவிக்கிற.'' அஸ்வினை பவித்ரா வைத்து கலாய்க்க முயல அஸ்வின் பேச்சில் அவனை பார்க்க முடியாமல் கண்களை அங்கும் இங்கும் அலைபாய்ந்து விட்டு திரும்பிக் கொண்டான். அஸ்வினிடம் மறைக்க முடியுமா?

''ராம் இங்க என் கண்ணை பார்த்து சொல்லு நீ என்கிட்ட எதையும் மறைக்கலை'' என்று முகத்தை திருப்பினான்.

''அஸ்வின் ஏன்டா எப்ப பாரு இப்படி கேட்கற?''

''இனி எப்பயும் கேட்கலை. நீ எதனால இப்படி இருக்க என்று சொல்லிடு'' என்றதும் ராமிற்கு இவன் இன்று விட மாட்டான் என்று நினைத்து கையில் இருந்த ஜூஸை டேபிளில் வைத்து விட்டு கொஞ்ச நேரம் அப்படியே இருந்தான்.

தனு பற்றி பேசிட இயலாது. தன்னால் நிச்சயம் முடியாது. ஆனால் நிஷா பற்றி சித்திக் நடக்கும் விதம் பற்றி நண்பனிடம் சொல்லி ஆறுதலாக தோள் சாயலாம். தன்னில் பாரம் கொஞ்சமேனும் இறங்கி விட வாய்ப்பு உண்டு என்று எழுந்து அறைக்கு சென்று கவர் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து நின்றான்.

டேபிளில் அந்த கவரை வைத்துவிட்டு அங்கிருந்த சேரில் அமர்ந்தான். அஸ்வினும் எதுவும் பேசாமல் அதனை எடுத்து பார்த்தான். சித்திக் யாரோ ஒரு பெண்ணோடு காபி ஷாப் மற்றும் பீச் போன்ற இடங்களில் எடுத்த புகைப்படங்கள். அதில் பிரஞ்சு மொழி கடிதம் வேறு...

''அப்போ இந்த பிரஞ்சு லவ் லெட்டர் அந்த சித்திக்கு வந்தது'' என அஸ்வின் கேட்க, மவுனமாக ஆம் என தலையை அசைத்தான் ராம்.

''நிஷாவுக்கு தெரியுமா?'' என்றான் கூர்போடும் விழிகளால்... ''இல்லை'' என்று சொன்னான் ராம்.

''சித்திக்கிட்ட கேட்டியா?'' என்றான் அடுத்து.

''கேட்டேன்'' என விரக்தியாக பதில் ஒன்றை வெளியிட்டான்.

'என்ன சொன்னார்?'' என்றதும் அவன் சென்ற நாளில் கிட்டிய லெட்டர் முதல் சித்திக்கிடம் பேசிய வரையும் பின்னர் மேக்னாவிடமும் பேசிய நிகழ்வையும் அதையும் சித்திக் கேலி செய்து இருந்ததையும் சொன்னான்.

''எல்லாம் தெரிஞ்சும் என்னால எதையும் சரிப்படுத்த முடியலை என்ற இயலாமை தான்டா என்னை ரொம்ப கஷ்டப்படுத்தது. அவனையும் ஒன்னும் பண்ண முடியலை. நிஷாவுக்கு எதையும் புரியவைக்க தெரியலை அஸ்வின்'' என வருத்தப்பட்டவனை எப்படி ஆறுதல் சொல்ல என்று வருந்தினான் அஸ்வின்.

''நான் வேற உன்னை... சாரி ஸ்ரீராம்'' என்றான் அஸ்வின்.

அஸ்வின் எல்லா புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டு ஒரு பெருமூச்சு விட்டான்.

''ஓகே இது என்கிட்ட இருக்கட்டும். இதை பார்த்து பார்த்து நீ பீல் பண்ணிட்டுயிருப்ப. ஏதாவது யோசிப்போம்'' என சொல்லிவிட்டு வேகமாக கிளம்பினான்.

ராமிற்கு மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்தாலும் தனு விஷயம் வேறு அவனை உறுத்தியது. ஆனால் அஸ்வினோ அது நிஷாவுக்காக ராம் கவலையில் இருப்பதாய் தோன்ற வேறு எதுவும் கேட்கவில்லை.

வீட்டுக்கு வந்தவனுக்கு அஸ்வின் முகம் கவலையில் தான் இருந்தது. ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு பவித்ரா பிரிவின் நிலை என அமைதியாக இருந்துவிட்டார்கள்.

இரவு எல்லாம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவனாக, காலையில் பவித்ராவுக்கு போன் செய்தான்.

''பவித்ரா... என்னோட பாஸ் புக் எங்கயிருக்கு?''

''டேய் பொண்டாட்டி ஊருக்கு வந்தாச்சா எப்படியிருக்க என்று கேட்காம? பாஸபுக் கேட்கற. இதுல நீ இங்க அனுப்பவே அப்படி யோசித்த. ''

''ஏய் நீ தான் நைட் மெசேஜ் அனுப்பிட்டீயே டி'' என்றான்.

''ஹ்ம்ம் பட் போனில் கேட்கலை. ரொம்ப பீல் பண்றியா? சுவாதி சொல்றா உன் முகமே டல் ஆகிடுச்சு என்று''

''ஹ்ம்ம்.... சரி என் பாஸ்போர்ட் எங்க? ரெனீவல் பண்ணனுமா என்று பார்க்கணும்'' என தனக்கானதில் பிடியாய் கேட்டான்.

''பீரோ கப்போர்டல தான் இருக்கு ஒரு க்ரீன் பைலில் இருக்கு... சரி சாப்பிட்டியா?''

''இல்லை இனிமே தான். ஆபிஸ் கிளம்பிட்டேன். சீக்கிரம் போகணும். நான் அப்பறம் பேசட்டுமா?'' என்றதும் சரி என சொல்லி விட்டு பவித்ரா போனை வைத்தாள்.

இவன் எப்படியும் போனை கீழே வைக்காம பேசுவானு நினைச்சேன் இப்படி சட்டுனு வை என்ற மாதிரி ஆகிடுச்சே... நிஜமாவே வேலையா? என யோசிக்க மங்கை பாட்டி வர பவித்ரா மற்றதை மறந்தாள்.

அஸ்வின் அடுத்த மறுநாளே ஆஸ்திரேலியா செல்ல டிக்கெட் புக் செய்தான். ஆனால் ராமிடம் சொல்லவில்லை. ஏன் யாரிடமும் சொல்லவில்லை.

வீட்டில் உள்ளவர்களிடம் ஆபிஸ் விஷயமாக பெங்களூர் செல்வதாகவும் வர எவ்ளோ நாள் ஆகும் என்று தெரியலை என சொல்லிவிட்டான். அதையே பவித்ராவிடமும் சொன்னான். அதொடு ராமிற்கு புது ப்ராஜெக்ட் விஷயமாக வேலை அதிகம் என்றும் அதனால் அவனை மினிமம் நான்கு நாட்களுக்கு போன் செய்யாதே என்றும் வலியுறுத்தினான்.

ராமிடமோ பவித்ராவை பார்க்க தஞ்சை செல்வதாகவும் சொல்லி இருந்தான். போன் பண்ணி பவித்ராவை டிஸ்டர்ப் பண்ணதாடா ஏற்கனவே நான் வேற அவளிடம் பேச முடியாம தவிப்பேன் என்றான் கேலியாக...

இதோ ஏர்போர்ட் கிளம்பிவிட்டான். விமானம் வரும் வரை வெளியே காத்திருந்தபொழுது அருகே நகுலன் இருந்தார். அவரும் முன்பு ஒரு முறை இதே போல டெல்லி பயணத்தில் விமானத்தில் ஏற்பட்ட நட்பு. அப்பொழுதே போன் எண்களை பரிமாறிய நண்பர்கள் அதனால் பேச்சு சுவாரசியம் ஆனது. அவரிடம் ஆஸ்திரேலியா பயணம் பற்றி பேசுகையில் சித்திக் பணிபுரியும் ஹாஸ்பிடல் தனக்கு தெரியும் என்றும் அதன் MD கூட நன்கு தெரியும் என சொல்லி இருந்தார்.

அஸ்வினுக்கு ஏதோ கடவுள் உதவி செய்வதாக தோன்றியது. நகுலின் நட்பில் ஆஸ்திரேலியா போன பிறகு கால் செய்வதாக கூறியிருந்தான். நகுலன் டெல்லி செல்வதால் அவன் வேறு விமானத்திற்கும் அஸ்வின் வேறு விமானத்திலும் பயணம் செய்தனர்.

கொஞ்ச நேரத்தில் விமானம் கிளம்பியது. அஸ்வின் மனம் அங்கு சென்று என்ன செய்து எப்படி புரியவைப்பது
என்றே மனதில் ஒரு முறைக்கு பல முறை தெளிவு செய்துக் கொண்டான்.

- தொடரும்
-praveena thangaraj
 
Top