கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

01. உன்னை பிரியேனடி

சஹா

Moderator
Staff member

“வேண்டாம் வேண்டாம் வேண்டா……….ம்” என்று கத்தி கொண்டிருந்தாள் துர்கா.


“அடிங்க,, அப்படியே வாயில ஒன்னு போட்டா தெரியும்…” என்றபடி அங்கு வந்தார் அமிர்தம்.

“பொண்ணா லட்சணமா சாயந்தரம் வரவங்கள சிரிச்ச முகமா வாங்கனு சொல்ற வழிய பாரு” என்று பொரிந்து விட்டு போனார் அவர்.

‘சற்று நேரத்திற்கு முன் தன்னை கொஞ்சிய அம்மாவா இது?’ என்று விழி விரித்தாள் அந்த பேதை..

சற்று நேரத்திற்கு முன்...

கல்லூரியின் இறுதி நாளை நண்பர்களுடன் கழித்து விட்டு வீட்டிற்கு வந்தவளை இன்முகமாக வரவேற்றார் அமிர்தம்.

“வாம்மா, பரிட்சைலாம் எப்படி எழுதிருக்க?” என்றார் .

“ம்ம்ம் நல்ல எழுதிருக்கேன் மா, நீ வேணா பாரேன் நா யுனிவெர்சிட்டி லெவெல்ல ஃபர்ஸ்ட் மாணவியா வருவேன்” என்றாள் பெருமையாக.

“ரொம்ப சந்தோசம்டா கண்ணு நீ படிச்சி எங்களுக்கு பெருமை சேர்த்தது மாறி போற இடத்துலயும் எங்களுக்கு நல்ல பேர் வாங்கி கொடுப்பேன்னு நாங்க நம்புறோம்” என்று தூண்டில் போட்டார் பெரியவர்.


“அம்மா, இப்போ எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு நா கேட்டேனா? ஏன்மா, இப்டி படிச்சி முடிச்ச உடனே கல்யாணம் தான் பண்ணிக்கனுமா? நா வேலைக்கு போறேன்.. ஒரு ரெண்டு வருஷம்…ப்ளீஸ் மா??” என்று அவள் கெஞ்சி கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்தார் ஆறுமுகம், துர்காவின் தந்தை.

“சொன்னேனே!! கேட்டீங்களா? பொட்ட புள்ளைய அதிகமா படிக்க வைக்க வேண்டாம்னு இப்போ பாருங்க என்ன பேச்சு பேசுதுன்னு?” என்று உள்ளே நுழைந்த உடன் தன் அர்ச்சனையை பொழிந்தார்.

ஒன்றும் புரியாமல், திருதிருவென முழிக்கும் தந்தையை கண்டவளுக்கு சிரிப்பு பொங்கி விட்டது.

“எப்படி பா இப்டி செய்றதலாம் செஞ்சிட்டு ஒண்ணுமே தெரியாத பச்சை கொழந்த போல மூஞ்சிய வைக்றீங்க?” என்றாள்.

அவளின் தலையை வருடி கொடுத்தவர்,

“சரி இப்போ அது முக்கியமில்லை… நா வரும் போது அம்மாவும் பொண்ணும் அவ்ளோ சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தீங்களே… அது என்ன? இப்போ எதுக்கு உன் அம்மா என்ன திட்டுறா?” என்றதும் அவள் முகமே தொங்கி விட்டது.

“இப்போ உடனே எனக்கு கல்யாணத்துக்கு என்னப்பா அவசரம்?” என்றாள் அதே வாடிய முகத்துடன்.

“இப்போ உடனே உனக்கு யார்மா கல்யாணம் வைக்கறதா சொன்னா?” என்ற வார்த்தையில் அவளுக்கு,

‘ஒரு வேலை அம்மா எப்போதும் போல் தான் கூறி இருப்பார்களோ!! நாம் தான் உணர்ச்சி வசப்பட்டு ஓவர் இமேஜினெட் பண்ணிட்டோமோ?’ என்று யோசித்து கொண்டிருக்கும் போதே தாயின் வார்த்தை தன் எண்ணம் தவறில்லை என்று உணர்த்தியது.

 
Top