கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

03. உன்னை பிரியேனடி

சஹா

Moderator
Staff member
ஒரு வாரம் கழித்து,


துர்காவின் வீட்டில் நுழைந்த அவள் தோழி தேவியை கண்ட ஆறுமுகம்,


“வாம்மா பரிச்சைலாம் நல்லபடியா எழுதியாச்சா?” என்று விசாரிக்க,



“ம்ம்ம் நல்ல எழுதி இருக்கேன்ப்பா, கல்யாண வேலைலாம் எப்படி போயிட்டு இருக்கு எங்க இந்த கல்யாண பொண்ண காணோம்?” என்றாள்.



“வாம்மா, தேவி அவளுக்கென்ன எப்பவும் போல உம்முன்னு ரூம்ல உக்காந்து இருக்கா நீ போய் பாரு… மதியம் உனக்கும் சேர்த்து சாப்பாடு பண்றேன். சாப்ட்டுட்டு போ… நிச்சயத்தப்போ கூட சீக்கிரமே போயிட்டல…” என்றபடி அமிர்தம் வந்தார்.



(சாரிங்க, மூணு நாளுக்கு முன்னாடி தான் நிச்சயம் பண்ணாங்க… தும்ஸ் என்னையும் சேர்த்து அர்ச்சனை பண்ணதால நான் கோமாவுக்கு போயிட்டேன்… அதான் சொல்ல மறந்துட்டேன்… என்ன துர்கா நம்மள மொரைக்கிறா… ஓஹ் நம்மள இல்ல அதோ அங்க வர தேவிய… சரி வாங்க என்ன பேசுறாங்கனு கேப்போம்?)


“வாடி இவளே…” என்று ராகம் பாடினாள் துர்கா.


“வந்துட்டேன்டி மவளே…” என்று பதிலுக்கு ராகம் பாடினாள் தேவி.


“ ன்னக்கி சீக்கிரமே போய்ட்ட, எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா?” என்றவளிடம்


‘அப்படியா?’ என்று ஏதோ அதிசயம் கேட்பது போல் கேட்டாள் தேவி.


“என்னடி இப்டி பாக்குற?” என்றாள் துர்கா.


“இல்ல சாதாரணமா எல்லா பொண்ணுங்களும் இந்த மாறி நேரத்துல மாபிள்ளைய தானே மிஸ் பண்ணுவாங்க நீ அப்டியே உல்ட்டாவா இருக்க!!” என்றாள் மனதில் ஒரு குறிக்கோளுடன்.


“ஏய் நீயுமாடி? நா எவ்ளோ தூரம் சொன்னேன் அன்னக்கி… இப்போ மறுபடியும் கிண்டல் பண்ற?” என்றாள் இயலாமையோடு.

(இங்க என்ன புது கதை ஓடுது நமக்கு தெரியாம?)



“அடியே உன்ன என்ன தான்டி பண்றது? இப்போ உனக்கென்ன சொல்லு?” என்றாள்.



“நா தான் அன்னக்கே சொன்னேன்லடி!! என்னமோ தெரியல இந்த கல்யாணத்துல விருப்பமா இல்லையானே தெரியலடி என்றாள்.

(அச்சச்சோ... இதான் கதையா? அப்போ துவி நிலைமை)



“ மறுபடியும் சொல்றேன் காதல் கல்யாணம் தப்பில்லை தான். அதே சமயம் இப்டி கல்யாணம் பண்ணிக்கிட்டும் காதலிக்கலாம் தான்… அத ஏன் புரிஞ்சிக்க மாட்டுக்கற?” என்றாள் தேவி சற்று அழுத்தமாகவே.


“அதுக்கு இல்லைடி… எனகென்ன தோணுதுனா?...” என்று இழுத்தவளிடம்,


“உனக்கு ஒன்னும் தோண வேண்டாம்னு தான் நான் சொல்றேன் மறுபடியும் இழுக்கற…

இப்போ என்ன உனக்கு? எங்க அந்த மாப்பிள்ளை போட்டோ? "என்றவளுக்கு கபோர்டில் இருந்து



“ இந்தா…” எடுத்து நீட்டினாள் துர்கா.


“ம்ம்ம், இத பாக்க வேண்டியது நீ தானே பாத்தியா இல்லையா?” என்கவும்


“புதுசா பாக்க என்ன இருக்கு எல்லாம் பாத்த மூஞ்சி தானே” என்று வாய்க்குள் முனக அதை கேட்ட தேவி முறைக்க தலை குனிந்து கொண்டாள் துர்கா.



“ம்ம்ம் அப்போ நீ பாக்கல?” என்று அழுத்தி கூறி கொண்டாள்.


எதையோ அவளுக்கு உணர்த்தி விடும் நோக்கோடு.


அவளிடம் எந்த பதிலும் இல்லாமல் போக

“என்னமா, மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறி நிக்குதா?” என்றாள் கோவத்தோடு.


“ப்ச்… என்னடி திட்டுற?” என்று பாவமாய் அவள் கூற


“ஆமாடி நீ பண்ற அலப்பறைக்கு உன்ன திட்டாம கொஞ்ச வா சொல்ற?”


“போடி, காதலிச்சு கல்யாணம் பண்ணனும் நினைக்கிறேன்… எனக்குன்னு ஆசை இருக்குறது தப்பா?” என்று எதிர் கேள்வி கேட்டாலும்


‘இந்த சமயத்தில் தன் எண்ணம் மடத்தனம்’ என்று குட்டியது மூளை.


“சரி நா கேக்றதுக்கு பதில் சொல்லு நீ போட்டோவ பாத்தியா, இல்லையா?” மீண்டும் அழுத்தி கேட்க



“ம்ம்ம்? இல்ல ஆனா?”


“என்ன ஆனா ஆவன்னானுட்டு… இதோ பாரு துர்கா இந்த கதைலயும் சினிமாலயும் காட்டுற மாறி ஹீரோவ பாத்ததும், மழை பொழியணும், பூ தூவணும், எங்கயோ பல்ப் எரியனும்னு நினைக்குறதுலாம் ஓவர் சொல்லிட்டேன்” என்றாள் கடுப்பாக.


“அதுக்கு இல்லைடி… நா இப்டிலாம் நடக்கனும்னு சொல்லல, இருந்தாலும் துவி என்னோட சொந்தம்னு இருக்கதால தானோ என்னமோ எனக்கு உள்ளுக்குள்ள ஒரு பீலிங்சும் வர மாட்டேன்குதுன்னு சொல்றேன்”


(என்னா… என்னா பீலிங்கு?)


“அதான் நீயே சொல்றியே… சொந்தம்ங்கிறதால உனக்கு அவர கணவன்ங்கற ஸ்தாணத்துல வச்சி பாக்க முடியல… ஆனா இந்த நிலையே தொடரும்னு சொல்ல முடியாதே… அவரோட அப்பா சின்ன வயசுல தவறுனப்பறம் இந்த ஊர விட்டே போயிட்டாரு… மூணு வருசத்துக்கு முன்னாடி உன்ன பாத்தப்போ அவர்க்கு பல்ப் எரிஞ்சது போல உனக்கும் உடனே பல்ப் எரியனும்னு சொல்லலயே… மூணு வருஷம் உன் படிப்பு முடியட்டும்னு வெயிட் பண்ணி இருக்கார். முடிஞ்ச அன்னக்கே அப்பாம்மாட்ட பேசிட்டார்” என்று கூறியவள்


‘அய்யோ… உலறிட்டோமே’ என்று நாக்கை கடித்து கொண்டாள்.
 
Top