கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

04.உன்னை பிரியேனடி

சஹா

Moderator
Staff member
‘அய்யோ… உலறிட்டோமே’ என்று நாக்கை கடித்து கொண்டாள் தேவி.


“ஏய்… இப்போ என்ன சொன்ன? அப்போ நீ சொல்றது உண்மையா? துவிக்கு என்ன புடிக்குமா?” என்றாள் விழி விரித்து.


‘சரி, முழுசா நினைஞ்சாச்சி இனிமே எதுக்கு முக்காடு?’ என்று எண்ணி கொண்டவள்,

“ஆமாடி அவர் உன்ன ரொம்ம்பவே விரும்புறார்…” என்று அந்த 'ம்' ல் அழுத்தம் கொடுக்க ஓடி வந்து தேவியின் கன்னங்களில் தன் முத்திரையை பதித்தாள் துர்கா.

“ஆஆஆஆஆஆஆஆஆஆ” வென அலறினாள் தேவி.

(என்னங்க முத்தம் கொடுக்கரதுக்கலாம் ஏன் அலறனும்னு கேக்ரிங்களா? அது முத்தம் இல்லைங்க நம்ம துர்கா எப்போலாம் happy ஆகுறாளோ அப்போலாம் அவ பக்கத்துல இருக்குறவங்க கன்னத்தை கடிச்சிருவா… இப்போ நாம இங்க இருந்தே துவிக்கிட்ட கேப்போம்…
‘துவி உனக்கு பெட்டர்மாஸ் லைட்டே தான் வேணுமா?’)

“நாயே… பல தடவ சொல்லிட்டேன் இப்டி கடிக்காதன்னு… ஏன் தான் உனக்கு இப்டி ஒரு ஹாபிட் வந்துச்சோ? இனிமே துவி அண்ணா பாவம் தான் போ…” என்றாள் வலித்த கன்னத்தை தடவிய வாறே.

வாழ்வின் முதல் முறையாக முகம் சிவந்தாள் துர்கா.

(அச்சச்சோ இந்த கொடுமைய யார் பார்க்கறது… ஹேய் தும்ஸ் கட்ட இனிமே நீ உன் மாமா முன்னாடி மட்டும் வெக்க படு செல்லம்… என்னால அந்த கருமாந்த்ர காட்சியை பாக்க முடியலை)

சத்தம் கேட்டு ஓடி வந்த அமிர்தம்
“என்னமா என்ன ஆச்சு?” என்று பதறி போனார்.

“அது வந்துமா…” என்று தேவி கன்னத்தை தடவியவாறே தொடங்க

அவள் கையை அழுத்திய துர்கா,

“அம்மா நீ இவள இங்க லஞ்ச் சாப்ட சொன்னேல்ல… ஆனா இவளுக்கு எதோ முக்கியமான வேலை இருக்காம்… போறேன் சொல்றா… அதுலாம் முடியாதுன்னு நா செல்லமா கன்னத்தை தட்டினேன்… அதுக்கு சத்தம் போடுறா?” என்று தன் ஆருயிர் தோழியை மாட்டிவிட

அவளோ வேகமாக ‘இல்லை’ என்பது போல் தலை அசைக்க அதற்கும் துர்கா,

“பாத்தியாமா உன் கிட்டயே இல்லை போகணும்னு சொல்றா” என்று அடுத்த பிட்டை போட

“அதுலாம் முடியாது நீ இருந்து சாப்பிட்டு தான் போகணும்… நா இவங்க அப்பாவ விட்டு மேகலாவையும் கூட்டி வர சொல்லிட்டேன்… இருந்து பொழுது போனப்றம் வீட்டுக்கு போனா போதும்” என்று கறாராக கூறி விட்டார்.

“அய்யோ அம்மா, எதுக்கு அம்மாவலாம் வர சொல்லிட்டு நா மட்டும் இருந்து சாப்டுட்டு போறேன்” என்றாள் அவசரமாக.

“அம்மா டைம்க்கு மருந்து சாப்டணும்மா, இங்க இருந்தா கொஞ்சம் கஷ்டம் அங்கனா விமல் கொடுத்துருவான்” என்று வெளியிலும்

உள்ளுக்குள் ‘அம்மா வருவார்களோ? என்னவோ?
நான் கிளம்பும் போது கூப்ட்டதுக்கே… விசேஷ வீடு என்னை போல நோயாளிலாம் வர கூடாதுமா… என்றாரே இப்போ, அப்பாட்ட என்ன சொல்ல போறாங்களோ?’ என்ற தவிப்பு அவளுக்கு.

“மருந்து இங்க இருந்தே சாப்டலாம், நான் டைம்க்கு கரக்டா கொடுக்கறேன். போதுமா…” என்று மேலோட்டமாக கூறினாலும் அவருக்கும் சரியான காரணம் புரியாமல் இல்லை.

“இதோ பாரு தேவிமா, உடம்பு சரி இல்லையேனு அவங்கள தள்ளி வைக்கிற அளவுக்கு நாங்க மோசமானவங்க இல்ல. நீ எங்கள புரிஞ்சிகிட்டது இவ்ளோ தானா? அதோட மேகலா ஒண்ணும் ரொம்ப முடியாதவ இல்லையே… ஏதோ கொஞ்ச நாளா உடம்பு முடியாம இருக்கா… இதுக்கு போய் அம்மாவும் பொண்ணும் பையனும் இப்படி பீல் பண்றீங்களே… நீ வேணா பாரு மேகலா இங்க வந்து எல்லார் கூடயும் பேசிட்டு இருந்தாலே…
போன சந்தோசம் திரும்பி வந்துடும்டா. உடம்பு சரி இல்லாதவங்கனு தள்ளி தள்ளி வச்சா கூடுமே தவிர அது குணமாகாது” என்று கூற ஓடி சென்று அவரை கட்டி கொண்டாள் தேவி.

“தேங்க்ஸ்மா, எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு… இப்போ நீங்க பேசுறத கேக்கும் போது மனசுக்கு ரொம்ப தெளிவா இருக்குமா” என்றாள்.

அவளின் கண்ணீரை துடைத்து விட்டார் அமிர்தம்.

“நீயும் எனக்கு மக தான்ங்கறதை மறந்துட்டியா தேவி?” என்று அவர் கேட்க,

‘இல்லை’ என்பது போல வேகமாக தலை ஆட்டினாள்.

‘சீன் ரொம்ப அழுகாச்சியா போகுதே சரி இல்லையே’
(இப்படி நினச்சது யாருன்னு நா சொல்ல தேவையே இல்ல… இருந்தாலும் சொல்றேன் நம்ம துர்கா தான்)

“அம்மா நீ க்ரேட் போ…” என்றாள்.
புரியாமல் நோக்கிய இருவரையும் ஓர கண்ணில் கண்டு கொண்டு மெல்லிய புன்னகை சிந்தியவள்.

“பின்ன எத்தனையோ அறுவை ப்ரஃபசர் ( professor) பாடம் நடத்துனாலும் அசராம குறிப்பெடுக்குறவ நம்ம தேவி … அவளையே உன் அறுவையால அழ வச்சுட்டியே… அப்போ நீ க்ரேட் தானே?” என்று வராத கண்ணீரை துடைக்க

மற்ற இருவரும் அவளை ‘மொத்து மொத்து’ என்று மொத்தினர்.

சிறிது நேரத்தில் மேகலாவும் வந்து விட அமிர்தத்தின் கூற்று படி

முதலில் ஒதுங்கி ஒதுங்கி சென்றாலும் இழுத்து வைத்து அவர் வாங்கிய வேலைகளில் அவரும் அனைவரிடமும் இயல்பாக பழகினார்.

அங்கே மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம்.

நாட்கள் செல்ல திருமண நாளும் வந்து தன் ஆசை காதலியை மனைவியாக பதவி பிரமாணம் செய்து கொண்டான் துவி.
 
Top