சூரியன் மெல்ல மெல்ல தன் கதிர்களை பரபிக் கொண்டிருக்கும் காலை வேலையில் மும்பை விமான நிலையம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. புது பயணிகளின் வருகையையும் மேலும் வெளியூருக்கு பயணிகளை ஏற்றி விடுவதில் மும்மூரமாக செயல்பட்டுக்கொண்டிருந்தது.அதை விடுத்து பயணிகள் வெளியே வரும் இடத்தில் இன்னும் தள்ளு முள்ளு கூட்டத்தோடு பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்திருந்தனர்.எல்லோரும் வாயிலையே பார்த்தப்படி நிற்க ...
அப்பொழுது அங்கு வேகமாக கோடி மதிப்புள்ள ஒரு கார் வந்து வேகமாக நிற்க, அதற்கு பக்கத்தில் இன்னும் சில கார்களும் அடுத்தடுத்து வந்து நின்றன.
முதலில் வந்திறங்கிய காரிலிருந்து வந்திறங்கிய அவர் விலையுயர்ந்த உடை அணிந்து முகம் முழுக்க புன்னகையோடு வந்திறங்கிய பார்த்திபனை அத்தனை கேமராக்களும் படம் எடுக்க...
அவரை சுற்றி இருந்த பத்திரிக்கையாளர்கள்" சார் .... சார்.... ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு போங்க" என்று கேட்க...
அவரோ புன்னகை மாறாமல் "முதல்ல என் மகன் வரட்டும் அதற்கு பிறகு நான் பேசுறேன் "என்று முன்னேறி நடந்து சென்றார் பார்த்திபன்.
அவரை பின் தொடர்ந்து பலர் சென்றனர்.வாயிலருகே காத்திருந்தவரின் கண்களோ மகனை தேடியது.நேரில் கண்டு மூன்று வருடங்களாகி விட்டது.தினமும் போனில் பார்த்து பேசினாலும் மகனை நேரில் கட்டி அணைத்து பேசும் போது கிடைக்கும் இன்பம் கிடைத்து விடுமா என்ன? என்று யோசித்தவரின் கண்களுக்கு முன்னே இரண்டு காப்பாளருக்கு நடுவே வந்து நின்றான்.அவரது செல்ல மகன் கதிர்நிலவன். இருபத்தி ஏழு வயது ஆறடிக்கு மேல் உயரம் பரந்த நெற்றி ,கண்களில் ஒரு குறுகுறுப்பு .மீசை தாடி இல்லாமல் பளபளக்கும் முகம்.கவர்ந்திழுக்கும் சிறு புன்னகை ஒல்லியான தேகம் கைகளில் ஒரு முறுக்கு நிமிர்ந்த நடை என முன்னால் வந்து நின்று "அப்பா ...." என்றழைக்க ...
"வாடா கதிர் " என்று மனமகிழ்வோடு அணைத்துக் கொண்டார் பார்த்திபன்.அதை அங்கிருந்த அனைவரும் காண கேமராக்கள் அதை படம் பிடித்தன.
பார்த்திபன் இந்தியாவின் முக்கியமான விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்கார தொழிலதிபர்களில் அவரும் ஒருவர்.இந்தியாவில் மட்டுமல்லாது வெளி நாடுகளிலும் தனது தொழிலை செய்துக் கொண்டிருக்கிறார்.அவருடைய ஒரே மகன் தான் கதிர்நிலவன். இவ்வளவு நாட்களாக வெளிநாட்டில் படித்துக் கொண்டே தனது அப்பாவின் தொழிலை கவனித்து இருந்தவன் இன்றைக்கு தான் இந்தியாவிற்கு வந்துள்ளான்.இதுவரை வெளி உலகத்துக்கு தெரியாமல் இருந்த கதிர்நிலவனை அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாது தனது ஒட்டுமொத்த கம்பெனியின் தலைமை பொறுப்பில் கதிர்நிலவன் அமரப்போவதை அறிவித்திருந்ததை ஒட்டியே பத்திரிக்கையாளர்களின் வருகையின் காரணமே....
கூடியிருந்த கூட்டத்தைக் கண்டு கதிர் தனது அப்பாவிடம் "அப்பா என்னது இது? எதுக்கு இப்போ தேவையில்லாம பிரெஸ் மீட்டீங் வைச்சு இருக்கீங்க "என்று அவரின் காதருகே கேட்க...
அவரோ எல்லாம் காரணத்தோடு தான் என்று அவனை பார்த்து அமைதி என்று சைகை காட்ட அவனோ அமைதியானான்.கேமராக்கள் அவனை படம் பிடிக்க பத்திரிக்கையாளர்கள் அவனை பார்த்து வாழ்த்துக்கள் சொல்லி கதிரிடம் கேள்விகளை கேட்க ஆரம்பித்தனர்.
"சார் நீங்க உடனே கம்பெனியோட எம்.டி பதவியை தலைமை பதவி வகிக்க போறீங்களா? ஏன் இத்தனை நாளா உங்க பிஸ்னஸை கவனிக்காம இருந்தீங்க? படிப்புல மட்டும் கவனமா இருந்தீங்களா?" என்று அடுத்தடுத்த கேள்விகளை கேட்க...
அவனோ எல்லோரையும் பார்த்து ஒரு சிறு புன்னகை சிந்தியவன்" எனக்கு இன்னும் சில அனுபவங்கள் தேவைப் படுது அதுவும் இல்லாமல் எங்க அப்பா தான் எப்பவுமே எம்.டி யாக இருப்பாங்க நான் அவருக்கு கீழே அடுத்த போஸ்ட்டிங்ல தான் இருப்பேன்,ஏன்னா என்ன தான் படிச்சுட்டு வந்தாலும் எங்க அப்பாவுடைய அனுபவத்தை தெரிஞ்சுக்க என் அப்பா என் கூடவே இருக்கனும்னு நினைக்கிறேன்" என்று சொல்லியவன் "எல்லோருக்கும் ரொம்ப நன்றி "என்று சொல்ல... அவனுடைய பதில் கேட்டு அனைவரும் வேறு கேள்வி கேட்காமல் இருந்தனர்.
அங்கிருந்து கதிரும் அவனுடைய அப்பாவும் மற்றவர்களும் கிளம்பினர்.கார் வீட்டை நோக்கி சென்றது.
வழியில் பார்த்திபன் அவனிடம் "கதிர் எப்பவுமே உன்னுடைய பொறுப்புல இருந்து தப்பிக்க பார்க்காதே" என்றவரிடம் "இல்லை அப்பா நான் உண்மையை தான் சொல்றேன், எனக்கு அனுபவம் வேண்டும் அதுவரைக்கும் நீங்க என்கூட தான் இருக்க வேண்டும், அப்புறம் உங்களுக்கு இன்னும் வயசாகலை நீங்க இன்னும் யங்கா தான்இருக்கீங்க" என்று சொன்னவனை பார்த்து சிரித்தவர் "என்னை ஏதாவது பேசியே என்னை சம்மதிக்க வைச்சிடு" என்றார்.
"ஆனால் இன்னைக்கு உன் அம்மாகிட்ட இருந்து எப்படி? தப்பிக்க போறேன்னு நானும் பார்க்கிறேன்"
"ஏன்ப்பா அம்மா என்ன கண்டிஷன் வைச்சு இருக்காங்க? "என்று கேட்க...
" எனக்கு தெரியாது" என்று சொல்லவும் கார் வீட்டின் வாயிலை வந்து அடைந்தது.
அது ஒரு மிகப்பெரிய கார்டனுக்கு நடுவில் அமைந்திருந்த மிகப்பெரிய பங்களா வீடு.அதை சுற்றி பார்க்கவே அரை நாட்களுக்கு மேலாவது ஆகும்.வீட்டின் உள்ளே பல அறைகளை கொண்டதாக இருந்தது.வீட்டில் ஏராளமான ஆட்கள் வேலை செய்தனர்.அவர்களுக்கு வீட்டிற்கு வெளியே இருந்த சிறு சிறு வீடுகளில் இருந்தனர்.
காரிலிருந்து இறங்கி உள்ளே செல்ல வாயிலின் அருகே அம்மா கீதவாணி நிற்க அதற்கு அருகில் கதிரின் சித்தி, சித்தப்பா, தம்பி ,தங்கை நின்றுக் கொண்டிருந்தனர்.கீதவாணி ஆரத்தி எடுத்து முடிக்க அவரை கட்டி அணைத்தவன் சித்தி சித்தப்பாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவன் அம்மாவை பார்க்க அவரோ முகத்தை திருப்பிக் கொண்டு இருந்தார்.
"அம்மா என்னாச்சு உங்களுக்கு? "என்று கேட்க அவரிடம் பதிலில்லை.அதை பார்த்து அப்பாவிடம் சைகையால் என்ன வென்று கேட்க அவரோ கதிரைப் பார்த்து தெரியாது என்று சைகை காட்ட மற்றவர்களிடமும் கேட்க அனைவரும் தெரியாது என்று கையை விரித்து விட்டு அவனை பார்த்து சிரிக்க கதிரோ புரியாமல் தவித்தான்.
கீதவாணியே பேசினார் "என்னடா அம்மா பேசாமல் இருக்காங்களே என்னன்னு என்கிட்ட கேட்கமால் மத்தவங்க கிட்ட கேட்ட என்ன தெரியும்? "
என்று கதிரிடம் கேட்க...
கதிர் தனது அம்மாவின் அருகில் அமர்ந்தவன் "அம்மா என்னாச்சு சொல்லுங்க" என்று கேட்க அவரே தொடர்ந்தார்.
"கதிர் நீ போய் மூன்று வருஷமாச்சு அம்மாவை வந்து பார்க்கணும்னு உனக்கு தோணலை,நான் தான் வந்து உன்னை பார்த்தேன்,உங்க அப்பாக்கு அதுக்கு கூட நேரமில்லை சொல்லிட்டாங்க,இனிமேல் நீ இங்க தான் இருப்பேன்னு எனக்கு முதல்ல உறுதியாகச் சொல்லு "என்றார்.
"ம்ம்ம் ..... சரி அம்மா இனிமேல் நான் வெளி நாட்டுக்கு போக மாட்டேன்,இனிமேல் இங்க தான் இருப்பேன்,ஆனால் சில முக்கியமான நேரத்துல போகணும்னா போய்ட்டு வந்திடுவேன் "என்று அவன் சொல்லவும் கீதவாணி கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது.
'தன்னுடைய மகன் தான் சொன்னதை உடனே கேட்டு விட்டான் இனிமேல் தன்னை விட்டு பிரிய மாட்டான்' என்று எண்ணியே அவனை கட்டிக் கொண்டார்.
"ம்ம்ம் இப்ப கோபம் போச்சா? என்று கேட்க...
'இல்லை' என்று தலையசைக்க "வேற என்னம்மா வேணும்? "
"கல்யாணம் எப்ப பண்ணலாம்னு இருக்கே?"
"இல்லை அம்மா எனக்கு அதுல இப்போதைக்கு விருப்பம் இல்லை "
"என்னடா சொல்றே இங்க பாரு அம்மா உனக்கு ஒரு பொண்ணு பார்த்துக்கிறேன் நீ வந்து ஒரு தடவை பாரு "என்றதற்கு "அம்மா எனக்கு இதுல விருப்பம் இல்லைன்னா விட்டுவிடுகளேன் ப்ளீஸ் எனக்கு ரொம்ப பசிக்குது சாப்பாடு எடுத்து வைங்களேன்" என்று தனது அறையை நோக்கி சென்று விட்டான்.
பார்த்திபனை பார்த்து கீதவாணி "என்னங்க இவன் இப்படி பிடி கொடுக்காம பேசுறான்" என்று கேட்க அவரோ" நான் சொல்றதையே கேட்க மாட்டேங்குறான்,கொஞ்சம் வெயிட் பண்ணு பார்க்கலாம்" என்று சொல்ல மற்றவர்களும் அதையே சொல்லி விட்டு சென்றனர்.
மேலே சென்ற கதிர்நிலவனின் எண்ணங்களோ வேறாக இருந்தது.'எந்த பெண்ணின் மீதும் அவனுக்கு இதுவரை காதல் என்ற எண்ணம் தோன்றாத பொழுது ஒரு பெண்ணை நேரில் கண்டதும் எப்படி பிடிக்கும்? 'என்ற எண்ணமே மனதில் தோன்றியே தனது வேலைகளை முடித்து தனது அறையிலிருந்து வெளியே வர அவனது நண்பன் ஆனந்த் அங்கே அவனுக்காக காத்திருக்க கதிரை கண்டதும் இருவரும் கட்டிக் கொண்டு "டேய் மச்சான் என்னடா? இனிமேல் இந்தியாவுல செட்டிலாமே? "
"ஆமாம் "என்றான் கதிர்.
"நான் நம்ப மாட்டேன் நீயாவது இங்க இருக்கிறதாவது"
"இல்லை ஆனந்த் நான் இங்க தான் இருக்க போறேன்" "அப்படியா! என்னால நம்ப முடியலை,நீ ஒரு இடத்துல இருக்கிற ஆளே கிடையாதே எங்கேயாவது சுத்திட்டே இருப்பே,இப்ப என்னடான்னா வீட்டுக்கு நல்ல பிள்ளையா இருக்கேன்னு சொல்லுற நானும் நம்புறேன் "என்று அவனை பார்த்து சிரிக்க கதிர் அவனை பார்த்து கண்ணடித்தான்.
ஆனந்த்க்கு விளங்கி விட்டது நிச்சயம் இவன் ஏதோ திட்டத்தோடு தான் பேசுகிறான் என்று புரிய டேபிளில் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்க ...
"அம்மா உங்க கையால செய்த சாப்பாடு சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆச்சு தெரியுமா?" என்று கதிர் சொல்ல...
"இப்பொழுது உனக்கு என்ன வேணும்னு இப்படி பேசுறே? "
"ஒன்னுல்லை சும்மா தான் கேட்டேன்,சரி ஆனந்த் நம்ம மும்பைல சுற்றி பார்க்க இடம் இருக்கா? "என்று கேட்க ...
உடனே கீதவாணி "என்னடா நீ மும்பைல கேட்கிற இந்தியாவிலே சுத்தி பார்க்க எவ்வளவு இடம் இருக்குன்னு தெரியுமா?" என்று கேட்க "அப்படியா! "என்று அதிசயமாக கேட்க "என்ன உனக்கு ஒன்னுமே தெரியாத மாதிரி கேட்கிறே" என்று கீதவாணி சட்டென்று புரிந்து கொண்டு கேட்க...
கதிர் சிரித்தபடியே "அம்மா நீங்க தானே சொன்னீங்க சுற்றி பார்க்க நிறைய இடம் இருக்குன்னு சொன்னீங்க அதான் ஒரு ஆறு மாசம் நான் இங்கே இந்தியா முழுதும் ஒரு சுற்றி பார்க்கலாம்னு நினைக்கிறேன்" என்றான் கதிர்.
ஆனந்த் அவனுடைய திட்டத்தை எண்ணி சிரிக்க கீதவாணி அதிர்ச்சியோடு "என்ன சொல்ற கதிர் இப்ப தானே இங்கிருந்து போக மாட்டேன்னு சொன்னே? இப்போ என்னடான்னா சுத்தி பார்க்க போறேன்னு சொல்ற? என்று கோபத்தோடு கேட்க ..
"ஆமாம் அம்மா நான் என்ன சொன்னேன் இனிமேல் இங்க தான் இருப்பேன்னா வெளிநாட்டுக்கு போகலை இங்கேயே இந்தியாவுல இருப்பேன்னு சொன்னேன்,அம்மா இன்னும் ஒரு வாரம் கழிச்சு தான் போலாம்னு இருக்கேன் அதுக்கு பிறகு நான் இங்கேயே இருக்கேன் ப்ளீஸ் சரின்னு சொல்லுங்க" என்று கேட்க அவரோ "ஆறுமாசம்னா ரொம்ப நிறைய நாளா தெரியுது"
"இல்லைம்மா நான் முடிஞ்ச வரைக்கும் சீக்கிரமா வந்துடுவேன்" என்று சொல்ல...
அதற்கு கீதவாணி" சரி நான் ஒத்துக்கிறேன்,ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் அது என்னதுன்னா நீ சுற்றி பார்த்துட்டு வந்த பிறகு கல்யாணம் பண்ண ஒத்துக் கொள்ள வேண்டும்" என்று சொல்ல கதிரும் அதற்கு சம்மதம் என்று சொன்னான். அடுத்தடுத்து என்ன நடக்க போகிறது என்று அனைவரும் அறியாமல் இருந்தனர்.
(தொடரும்)