காலையில் சாப்பிட்ட பொங்கலும் மதியவிருந்தும் கண்ணைசுழட்டியடிக்க நன்றாக தூங்கிவிட்டேன். இரவு கிருஷ்ணஜெயந்தி ஊர்வலம் இருப்பதாகவும் ஏற்பாடுகளை கவனிக்கவேண்டியதாகவும் அப்பாகிளம்பிவிட்டார். இந்த பத்தாண்டுகளில் அவர் மாறவேயில்லை. நான், வேணியை ”இழுத்துக்கொண்டுஓடிய” இரவு வாடகைகார், ஆட்டோசகிதம் எங்களை வெறிகொண்டு தேடிய அந்த வேங்கைமுகம் இப்போதும் அப்படியேதான் உள்ளது. இப்போது கொஞ்சம் கிழட்டு வேங்கைமுகம்.
சிறுபையனாக இருக்கும்போது கிருஷ்ணஜெயந்தி ஊர்வலம் மிக இனிதான ஒன்று. மாட்டுவண்டியில் மிகஅலங்கரிக்கப்பட்ட மேடை அமைப்பில் சிறுசாமி சிலை. சுற்றிலும்சாமந்தி, அரளி அப்புறம் துளசியிலான மாலைகள். இளம்பச்சை தென்னை ஓலையில் தோரணங்கள். முன்புறம் மாடு கட்டுமிடத்தில் `ப `வடிவகட்டையை இருபுறமும் ஆட்கள் இழுத்துச் செல்வார்கள். நானும் கும்பலில் உட்புகுந்து ஆர்ப்பாட்டமாய் கத்திக்கொண்டே வண்டி இழுப்பேன். உண்மையில் நான் குள்ளமான சிறுபையன் ஆதலால் கால் எட்டாது. அந்த கட்டையை தூக்குவதாய் பாவ்லா செய்து தொங்கிக்கொண்டேபோவேன். வழியில் ஒவ்வொரு வீட்டு முன்பும் வண்டி நிறுத்தப்படும். தீபாராதனைதட்டு முடிந்து நமக்கு அவல்..வெல்லம், சில வீடுகளில் லட்டு கூடகிடைக்கும்.
அதுபோன்ற ஓர்நாளில் தட்டில்விழுந்த கடலைபர்பி என் கவனத்தை கவர்ந்தது. எட்டிப்பார்த்தால் அது வேணி எனும் கிருஷ்ணவேணி. என்னைவிடசற்றுஉயரம். நான் வேகமாக கடலைபர்பியை எடுப்பதைப்பார்த்து வாயை ஒருகையால் மூடியபடி சிரித்துக்கொண்டே ஓடி விட்டாள். அதன்பின் வருடம் போகப்போக எங்களின் நேசமும் வளர்ந்தது.
உயரமான பாக்குமரத்தில் புளியங்கொட்டை இன்னபிற எண்ணெய் வகைகளின் கலவையால் மொழுகப்பட்ட வழுக்குமரம் ஏறுவது இந்த விழாவின் உச்சம். சில நேரங்களில் முதல் நாள் ஏறமுடியாமல் தொடரும் நாட்களிலும் இது தொடர்வதுண்டு. ஓர்சமயம் என் வீராவேசத்தை நிரூபிக்க நினைத்து கலந்து கொண்டேன். பாதிதூரம் வரை நம்பிக்கையாய் ஏறியவன் முகத்தில் தெறித்த நீர்துளிகளாலும்… சற்றே குனிந்து பார்த்ததால் உண்டான பயத்தாலும் தொபுகடீரென விழுந்து சரியான வலி..உள்காயம். பதறி ஓடிவந்த வேணி “ பாத்து ஏறக்கூடாதா….. கடவுளே” என்று முதல் தடவையாக பேசி பரிதவித்தபோது என்னுள் ஏற்பட்ட மாற்றங்களை அளவிட முடியாது.
எங்கள் ஊர்வலம் எங்கள் தெருவின் முக்கில் திரும்பும்போது அதற்கு எதிர்புறமாய் வருவது ராஜேந்திரன் குரூப்பின் ஊர்வலம். அவர்கள் காலனியின் தென்புறத்திலிருந்து புறப்பட்டு முடியக்கூடிய இடத்தில் ஓரிடம் மட்டும் இரு ஊர்வலமும் சந்தித்துக்கொள்ளும். அந்த முக்குச்சந்தின் திண்ணை வீடுதான் வேணியுடையது. அங்கே சில நேரம் நிற்கவேண்டியே ராஜேந்திரனிடம் சொல்லிவைப்பேன். அவனும் இரண்டு ஊர்வலங்களும் எதிர்படும்படி தாமதப்படுத்துவான்.
தீனிகளை பகிர்ந்துகொள்வோம். அந்த குரூப்பில் பலர் என் பள்ளித்தோழர்களானதால் எனக்கு நிறையவே தீனி கிடைக்கும். வயது மாறும் சூழலில் என் ஆர்வமெல்லாம் மாறிப்போனது. அப்பா ஏதோ கட்சியில் சேர்ந்து கலர்கலராய் சாமி படங்களும் புத்தகங்களுமாய் திரிந்தார். நான் கருப்புசட்டையணிந்து அப்பாவின் காதுகேட்காதபடி கிண்டலடித்து திரிந்தேன்.
*
“யாரவ.. ன்னு தெரியுமாடா….”
“வேணி…ன்னு….. ராமுமாமாவோட பொண்ணு…”
“அடிசெருப்பால…. த்தா எவன்டா மாமன்….. பேச்சுவழக்கில பேசினா மாமனா….. அவன் சாதியென்னா உன்சாதியென்னா….?.... தறுதல…”
“அதெல்லாம் எங்களுக்கு தெரியாது…. அவளதா நான்..”
பளீரென்று விழுந்த பெல்ட்அடி …. ப்பா … இன்று நினைத்தாலும் சுர்ரென்று உரைக்கிறது.
அதன்பின் ஓர்நன்னாளில் தேவையான பணத்தை ஆட்டை போட்டுக்கொண்டு நானும் வேணியும் ஊரைவிட்டு ஓடிவந்து….
அதன்பின் பத்தாண்டுகளில் பல மாற்றங்கள். அம்மா தவறியபின் அப்பா வேறுவழியின்றி இறங்கி வந்தார். என் பையனை கொஞ்சுபவர் இன்னமும் என் மனைவியிடம் சரியாக பேசுவது கிடையாது. எனினும் என் தர்மபத்தினி எதையும் கண்டுகொள்ளாமல் எப்போதும்போல் என்னை திட்டிக்கொண்டும் சீரியல்பார்த்து அழுதுகொண்டும் காலத்தைகழிக்கிறாள்.
*
ஊர்வலம் கிளம்ப ஆயத்தமாயிற்று. அப்பா தமது வயதான குரூப்புடன் ஆடிஓடி ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.
சாமிபடம் பதிலாக ஒரு பையனுக்கு கிருஷ்ணன் வேடமிட்டு உட்கார வைத்திருந்தனர். அழகாய்தான் இருந்தது. கலர்பேப்பர் தோரணங்களும் சீரியல்பல்ப் வெளிச்சங்களும் மின்னின.
பெண்கள் கூட்டமில்லை. வழுக்குமரம் ஏறுவது கிடையாதாம். புதிதாக இரண்டு போலீஸ்காரர்கள் காவல்வேறு வித்தியாசமாய் தெரிந்தது.
ஊர்வலம் கிளம்பி வரஆரம்பிக்க… நான் என்நண்பனின் வீட்டு மொட்டைமாடியிலிருந்து ரசிக்க ஆரம்பித்தேன். முக்குசந்து அருகில் ஊர்வலம் வர திடீரென்று எல்லோரும் பதட்டமாய் இருப்பதாய் தோன்றியது. எதிர்புறமாய் காலனி குரூப்பின் ஊர்வலம். பழைய ஞாபகத்தில் காதல்கதை ஏதேனும் நடக்குமாவென எட்டிப்பார்த்தேன். எதிர் ஊர்வலத்தில் இதேபோல் ஒருபையனுக்கு வேடமிட்டிருந்தார்கள். பறையிசையின் கலக்கலான ஆட்டம் அருமையாக இருந்தது. அந்த கிருஷ்ணன்….எங்கள் குரூப் கிருஷ்ணனுக்கு சலாமிட்டான். இவனும் ஏதோ சைகை செய்தான். நண்பர்கள்போல.
ஆனால்….ஊர்வலத்தின் முன்நின்ற இரு கோஷ்டிகளும் திடீரென அவரவர் பிறப்புகளைபற்றி ஆராய்ந்தார்கள். அதை வேகமாக சொல்லவும் செய்தார்கள். பெண்கள் வராத காரணம் புரிந்தது. எங்கள் கோஷ்டி மரக்கட்டைகளை குறுக்கிட்டு வழியை மறித்தது. இன்னமும் இரு ஊர்வலம் போகக்கூடிய தெருவில் இவர்கள் வழி மறித்துக்கொள்வது வேடிக்கையாயிருந்தது. பறந்துவந்து தாக்கிய கல்மழை இவை வேடிக்கையல்ல என்று நிரூபித்தது. போருக்கு அணிவகுப்பது போல் இரு அணியினரும் தமது வேட்டி லுங்கிகளை மடித்து கட்டிக் கொண்டனர். நடுவில் மாட்டிக்கொண்ட போலீஸ்காரர்கள் திருதிருவென்று விழித்து இருதரப்பினரிடையு ம் கெஞ்சிக்கொண்டிருந்தனர். ஆனாலும் அடங்காத கூட்டம் தமது வீரதீர விளையாட்டுகளை ஆரம்பித்தனர். கவிழ்ந்த வண்டிகளிலிருந்து தப்பி ஓடிய கிருஷ்ணர்கள் இருவரும் பக்கத்து சந்தில் புகுந்து ஒரு தம்மை பகிர்ந்துகொண்டு “சரியானதலவலிடாமாப்ள” எனஅங்கலாய்த்தனர்.
எனக்கு வன்முறையில் நாட்டமில்லாததால் யாரும் என்னை பார்க்காதபடி அங்கங்கே ஒளிந்து குனிந்து ஒருவழியாய் வீடுவந்து இறுகப்போர்த்தி படுத்துக்கொண்டேன்.
மறுநாள் சரியான காய்ச்சல்… நேற்றைய கலவரத்தில் ஆறுபேர்க்கு படுகாயமாம். கோவில்களை சீல் வைத்துவிட்டார்களாம். இன்னமும் போலீஸ் சுற்றிவருவதாக அப்பா யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்.
“ஏரிக்கரையில இருக்கற நம்ம பெரியசாமி கோயிலு… கருவடைஞ்சிகாயுது… ஒரு சுண்ணாம்பு அடிப்போம்.. கடா வெட்டுவோம்னு இல்லாம…. போவுது பாருபுத்தி… பொங்கலுக்கும் புளியோதரைக்கும்… தூத்தெறி..” என்றாள்பாட்டி.

Last edited by a moderator: