கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

11.உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே

Shaliha ali

Moderator
Staff member
11.உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே




பைக்கில் இருவரும் பேசிக் கொண்டே சென்றனர்.கதிருக்கு எல்லையில்லா ஆனந்தம். மலருடன் பைக்கில் செல்ல வேண்டும் என்ற நெடுநாள் விருப்பம் இன்று நடந்ததில் அவன் மகிழ்ச்சியோடு இருந்தான்.காபி ஷாப்பில் இருவரும் இறங்க உள்ளே செல்வதற்கு முதலில் கதிர் செல்ல மலரோ வாசலிலேயே நின்று விட்டாள்.திரும்பி பார்த்த கதிர் அவள் அங்கேயே நிற்பதை கண்டவன் "கலை வாங்க உள்ளே போகலாம்" என்றான்.




"கதிர் இந்த கடைக்கு வேண்டாம் வேற எங்கேயாவது போகலாமா?"

" ஏன் என்னாச்சு கலை? இங்கே நல்லா இருக்கும் நான் ஏற்கனவே இங்கே வந்து இருக்கிறேன் "


"அதுக்கு இல்லை இங்கே வேண்டாமே வேற எங்கேயாவது போகலாம் ப்ளீஸ் கதிர்"என்று அவள் சொல்ல... அப்பொழுது தான் அவளுடைய முகத்தை கவனித்தான்.மலருடைய முகமே சரியில்லை.ஏதோ ஒரு வித பதற்றம் கோபம் எல்லாமுமாக நின்றிருந்தவள் முகத்தை திருப்பி கொண்டு "சீக்கிரமா போகலாம்" என்று சொன்னதும் கதிரும் காரணம் கேட்காமல் பைக்கை திருப்பி கொண்டு செல்கையில் ஒருவன் வந்து நின்று வழிமறைத்தான்.



"ஹலோ மலர் என்ன பார்த்துட்டு பார்க்காத மாதிரி போற? என்னை யாருன்னு தெரியாத மாதிரி வேகமாக இங்கிருந்து கிளம்ப பார்க்குற?" என்று மலரை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் கண்களாலேயே அவளை முழுவதும் விழுங்கி விடுபவன் போல் அவளை பார்த்து சிரித்தான்.


மலரோ எதுவும் பேசாமல் அமைதியாக வேறொரு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.கதிர் அவன் பார்த்த பார்வையில் தோன்றிய கோபத்தை அடக்கியவாறே "யாரு நீங்க? எதுக்கு மலர்கிட்ட தேவையில்லாம பேசுறீங்க?" என்று கேட்கவும் "நான் யாருன்னு என்கிட்ட கேட்கிற மலர்கிட்ட கேளு அவ சொல்லுவாள்" என்று அவன் சொன்னான்.


"இங்கே பாருங்க நான் உங்ககிட்ட கேட்டால் நீங்க பதில் சொல்லுங்க" என்று கதிர் கோபத்தோடு கேட்க...


"என்ன மலரு நீ? சார் உன்னை உரிமையா பைக்குல கூடிட்டு வர்றாரு அவருகிட்ட என்னை பற்றி சொல்லலையா? சரி பரவாயில்லை நானே என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன் என்று கதிர் புறம் திரும்பியவன் ஹாய் நான் தீபக். மலருக்கு நான் என்னன்னா? ம்ம்ம்.... இதோ நீங்க இருக்கிற இடத்துல நான் தான் இருந்திருக்க வேண்டும்" என்று அவளை பார்த்து பெருமூச்சு விட்டப்படி சொன்னான்.


கதிர் புரியாமல் "என்ன?"என்று கேட்க...மலர் "கதிர் நீங்க வண்டியை எடுங்க தேவையில்லாதவங்க கிட்ட பேசாதீங்க" என்று அங்கிருந்து கிளம்ப முயற்சித்தாள் மலர்.


"ஓ ... உங்க பேரு கதிர் அது தானே இங்கே பாருங்க கதிர் நீங்க இப்போ எப்படி உரிமையா மலரை வெளியே கூடிட்டு வந்து இருக்கீங்க அந்த மாதிரி நானும் மலரும் இருந்தோம்,அந்தளவுக்கு நானும் மலரும் அவ்வளவு நெருக்கம்" என்று மலரை பார்த்தவன் அவள் அருகில் இன்னும் நெருங்கி வந்து உரசிய படி நிற்க... "டேய் தள்ளிப்போ" என்று கோபத்தில் கத்தியவள் "கதிர் வாங்க போகலாம்" என்றதும்


"ஏய் என்ன? மரியாதை இல்லாமல் பேசுற? உன்னை பத்தி உண்மை தெரிஞ்சிடும்னு இங்கிருந்து தப்பிக்க பார்க்கிறீயா?" என்று நக்கலாக பார்த்து கேட்டான் தீபக்.


"டேய் தேவையில்லாதவங்ககிட்ட நான் காரணம் சொல்லனும் அவசியமில்லை"


"ஏய் நான் தேவையில்லாதவனா? நீ அடுத்த ஆளை புடிச்சது எனக்கு தெரியாக் கூடாதுன்னு ஓடப் பார்க்கிறீயா?" என்று சொல்லவும் கண்களில் கோபம் கொப்பளிக்க... "ஆமாம் நான் வேற ஆளைத் தான் பார்த்துட்டேன் உனக்கு என்ன பிரச்சினை? உன் வேலையை பார்த்துட்டு போ" என்று கத்தினாள் மலர்.



கதிர் என்ன நடக்கிறது என்று புரியாமலும் என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றான். "நான் ஒத்துக்கோ சொன்னப்போ மட்டும் ஏதோ நல்லவ மாதிரி பேசுன இப்போ தெரியுது நீ எவ்வளவு கேவலமானவன்னு" என்று சொல்லவும் அங்கே ஒருத்தி வந்தாள்.


"தீபக் என்ன பிரச்சினை?" என்று கேட்க...

"வா மைடியர் நான் அன்றைக்கே சொன்னேன்ல ஒருத்தியை பத்தி அவ தான் இதோ என்கிட்ட பிரச்சினை பண்றாள்" என்றான் தீபக்.


அவன் சொன்னதும் வந்தவள் மலரை மேலிருந்து கீழ் வரை பார்த்தவள் "தீபக் எதுக்கு இந்த கேவலமானவகிட்ட பேசுறீங்க? இந்த மாதிரி ஆளுங்ககிட்ட நாம நின்னு பேசுனா அது நமக்கு தான் அசிங்கம் அதுவும் இல்லாமல் நிறைய பேரோட பழக்கம் வைச்சு இருக்கிறவ கிட்ட என்ன பேச்சு? வாங்க போகலாம்" என்றாள் அவள்.



மலரை இரண்டு பேர் சேர்ந்து அசிங்கப்படுத்துவதை கண்டு கோபம் கொண்ட கதிர்."ஹலோ ஒழுங்கா பேசுங்க இல்லை அவ்வளவு தான் மரியாதை இருக்காது" என்று அந்த பெண்ணிடம் கையை நீட்டியவாறு பேச அதைக்கண்டு தீபக் கோபமாக "ஏய் யாருடா நீ என் பொண்டாட்டியை பார்த்து கை நீட்டி பேசுற" என்று கேட்க....


"ஓ உன் பொண்டாட்டியை பற்றி பேசுனா கோபப்படுறல்ல அதே மாதிரிதான் என் மலரை பற்றி தப்பா பேசுனா எனக்கும் கோபம் வரும்"என்றான்.


பேசியவன் மலரின் அருகே நெருக்கமாக நின்று அவளுடைய கையை தன்னுடைய கைகளில் சேர்த்து இறுகப்பற்றியவாறே ..... நிற்க .... அவர்கள் இருவரும் அவளை பேசிய வார்த்தைகளை கேட்டு கண்கள் முழுதும் கண்ணீர்கோர்த்து நிற்கும் பொழுது
அவனுடைய கை அணைப்பை உணர்ந்து கதிருடைய முகத்தை பார்க்க அவனோ தீபக்கை எரிக்கும் பார்வையை பார்த்துக் கொண்டு அவளுடைய கைகளை இன்னும் இறுகிய வாறே நின்றான் கதிர்.




அப்பொழுது தீபக் "ஓ... அப்போ இப்போதைக்கு உன் பொண்டாட்டி மாதிரியா?" என்று கேட்க கையை முறுக்கியவன் "மலர் என்னோட பொண்டாட்டி இல்ல ஆனால் அதுக்கும் மேல உயர்ந்த இடத்துல இருக்கிறா அதெல்லாம் உன்னை மாதிரி ஆளுங்ககிட்ட சொன்னா புரியாது" என்று அவனுடைய கன்னத்தில்
அறை விட்டவன் தீபக்கிடம் "நீ என்றைக்குமே என்னுடைய இடத்துக்கு வர நினைக்கவும் கூடாது நினைக்கவும் விட மாட்டேன்" என்றவன் "என் மலரை பற்றி இனிமேல் யாராவது எதாவது பேசுனீங்க அவ்வளவு தான் நீ ஒரு பொண்ணா இருக்கிறதால உன்னை சும்மா விடுறேன்" என்று அங்கே நின்றவளிடம் சொல்லி விட்டு "வா கலை போகலாம்"என்று பைக்கில் அவளை அமர வைத்து வேகமாக சென்றான் கதிர்.

கதிர் அடித்த வலியினால் கன்னத்தில் கை வைத்தபடி
அவர்கள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த தீபக் மனதினுள் 'மலர் என்னை அசிங்கப்படுத்திட்டேல்ல. உன்னை விட மாட்டேன் எப்படியாவது உன்னை அடையாமல் விடமாட்டேன்டி நான் அன்னைக்கு மட்டும் அந்த எம்.டி சொன்ன பேச்சை மட்டும் கேட்காமல் இருந்திருந்தால் அன்றைக்கே உன்னை அடைந்திருப்பேன் நீயும் என் காலடியில் இருந்திருப்பாய் ' என்று கருவியவன் 'இரு உன்னோட திமிரை அடக்கி திரும்ப நீயே என்னை தேடி வர்ற மாதிரி செய்றேன்' என்று மனதினுள் கருவினான் தீபக்.



பைக் வேகமாக சென்றது இருவரிடமும் பலத்த அமைதி.'கதிர் என்னவென்று கேட்பானோ?' என்று யோசித்தாள் மலர்.


ஆனால் கதிர் என்ன பிரச்சினை என்று கேட்காமல் "கலை வீட்டுக்கு போகலாமா?" என்று கேட்க ... அவளிடம் அமைதி.'கதிரின் கேள்வியில் புரிந்து கொண்டாள் மலர் எவ்வளவு மரியாதையாக நடந்துக் கொள்கிறான்.என்ன?என்று ஒரு வார்த்தை கூட கேளாமல் தன்மையாக அவன் தன்னிடம் நடந்துக் கொள்வதை எண்ணிக் கொண்டு யோசனையோடு இருக்க 'கதிர் திரும்பவும் கேட்டான்."கலை வீட்டுக்கு போகலாமா?" என்று கேட்க... "கதிர் எனக்கு மனசே சரியில்லை .அதனால எதாவது அமைதியான இடத்துக்கு கூடிட்டு போறீங்களா?" என்று கேட்க...அவன் "ம்ம்ம்ம் ....."என்றான்.



நகரின் முக்கிய வீதியில் இருந்து தள்ளி இருந்த அந்த பூங்காவிற்குள் சென்றனர்.அங்கே ஒருசிலரே அமர்ந்திருக்க ஒரு சிமெண்ட் பெஞ்சில் மலர் அமர கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்தான் கதிர். அவளிடம் பலத்த அமைதி.அவனுக்கும் முகம் இன்னும் இறுக்கமாகவே இருந்தது.அவர்கள் இருவரும் மலரை பேசிய வார்த்தைகளின் தாக்கம் அவனுடைய முகத்தில் இருந்தது. நிலவிய அமைதிய கலைக்க முதலில் மலரே பேச ஆரம்பித்தாள்.




"கதிர் ... கதிர்.." என்றழைக்க... அவன்

"என்ன கலை சொல்லு?" என்றான்.

"கதிர் அவங்களுக்கும் எனக்கும் இடையில் என்ன பிரச்சினை? என்று நீங்க கேட்கவே இல்லை என்று கேட்க...

"கலை உன்கிட்ட என்ன நடந்துச்சு என்று கேட்டு நான் திரும்ப வேதனை படுத்த விரும்பவில்லை அதான் உன்கிட்ட எதுவும் கேட்க விரும்பலை "அவன் சொன்னதை கேட்டு லேசாக சிரித்தவள்" பரவாயில்லை கதிர் நீங்களாவது என்னை காயப்படுத்தக் கூடாது என்று நினைத்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம் கதிர் இந்த நேரத்துல வேற யாராவது இருந்திருந்தால் கண்டிப்பா என்னை தப்பா புரிஞ்சுகிட்டு கேள்வி மேல் கேள்வி கேட்டு இருப்பாங்க,ஆனா நீங்க என்னை ஒரு வார்த்தை கேட்கலை ரொம்ப நன்றி" என்று நிறுத்த...


கதிர் மலரிடம் "எதுக்கு கலை நன்றி நட்புக்குள் அதெல்லாம் வேண்டாம்"என்று சொல்ல...

"ஆனால் கதிர் எனக்காக நீங்க பேசியதால் நானே உங்ககிட்ட நடந்த விஷயங்களை சொல்றேன்" என்றாள்.

"இல்லை வேண்டாம் கலை இனேனொரு நாள்..."என்று கூற "இல்லை கதிர் நான் இன்னைக்கே சொல்றேன் எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயத்தை தான் உங்ககிட்ட சொல்றேன்" என்று அவளே தொடர்ந்தாள்.....


ஒரு வருடத்திற்கு முன்பு.....



"காலேஜ் முடிச்சுட்டு ஒரு கம்பெனியில சேர்ந்தேன் நல்ல வேலை வேலை செய்துக் கொண்டே மேற்படிப்பு படிக்கணும் நினைந்திருந்தேன் அப்போ அந்த கம்பெனியில மூலமா அறிமுகமானவன் தான் தீபக், நான் வேலைக்கு சேர்ந்த புதியலிருந்தே என்கிட்ட நல்ல பிரெண்டா பழகுனான் நானும் அப்படி நினைச்சு தான் பழகிட்டு இருந்தேன்.அப்பொழுது அந்த கம்பெனிக்கு புதிதாக ஒரு எம்.டி வந்தான் அவன் வந்த பிறகு ரொம்ப கண்டிஷன் பண்ண ஆரம்பித்தான்.எனக்கு எக்ஸ்ரா வொர்க் கொடுத்து உட்கார வைத்தான் ஆனால் எனக்கு மட்டும் தான் வொர்க் கொடுக்கிறான்னு கொஞ்சம் லேட்டா தான் புரிந்தது அப்படி இருக்கும் போது ஒருநாள் என்கிட்ட வந்து உன்னை ரெண்டாம் தரமா கல்யாணம் பண்ணிக்கிறேன் எனக்கும் என்னுடைய மனைவிக்கும் இப்போ தான் விவகாரத்து ஆச்சு நான் உன்னை விரும்புகிறேன் அதனால நான் உன்னை திரும்ப கல்யாணம் செய்துக்க விரும்புகிறேன்" என்றான்.



"எனக்கு அவனையும் பிடிக்கலை அவன் சொன்ன காரணமும் பிடிக்கலை எப்படி ஒரு பொண்ணோடு வாழ்ந்து அவளுடைய வாழ்க்கையும் நம்பிக்கையும் அழித்து விட்டு இன்னொரு பெண்ணைக்கும் அதையே செய்ய நினைக்கிறான் என்னால ஒத்துக்க முடியாது சொன்னேன் காரணம் கேட்டான், பிடிக்கலைன்னு ஒரே காரணத்தை தான் சொன்னேன்.என்கிட்ட பணமும் அந்தஸ்தும் இருக்கு என்னையை திருமணம் செய்து கொள் "என்றான்.


"நான் முடியாதுன்னு சொல்லிட்டேன் அதற்கு அவன் என்னை பிடிக்கலைன்னு சொன்ன உன்னை...... என்னை தவிர வேற யாரையும் திருமணம் செய்ய விட மாட்டேன் "என்று கோபத்தில் கத்தினான்.

"நான் எதையும் பெரிதாக எடுத்துக்கலை என்ன செய்து விடப்போகிறான்? என்று நானும் இருந்தேன்,இப்படியே போய்க் கொண்டிருக்கையில் தீபக் அவங்க குடும்பத்தோடு வந்து எங்க வீட்ல என்னை பொண்ணு கேட்டு என்னை கல்யாணம் செய்துக் கொள்ள விருப்பம்"என்றும் சொன்னான்.



"எனக்கு இதில் விருப்பம் இல்லை வீட்ல எல்லோருக்கும் ரொம்ப விருப்பமாக இருந்தது அம்மாவிற்கு தான் இதுல முழு சம்மதமே எனக்கு ஒரு கல்யாணம் நடத்தி வைச்சா அம்மாக்கு அடுத்து எனக்கு என்று ஒருத்தர் இருப்பாங்க என்று நினைத்து தீபக்கையே எனக்கு கணவனா முடிவு செய்தாங்க.கல்யாணம் நடப்பதற்கான எல்லா வேலைகளும் வேகமாக நடந்தது,ஆனால் தீபக் நான் தனியா இருக்கிற நேரத்துல வந்து என்கிட்ட எல்லை மீறி நடந்துக்க முயற்சி பண்ணான் ஆனால் நான் திருமணம் முடிந்த பிறகு தான் என்னை சந்திக்கவே செய்யனும்னு நான் அவனை அவாய்ட் பண்ணேன் இது எதுவும் எங்க அம்மாக்கும் வீட்டுக்கும் தெரியாது.



இப்படியே நாளும் செல்ல திருமண நாளும் வந்தது. அன்றைக்கு காலைல அத்தனை சொந்ததிற்கு முன்னாடி கல்யாண நடக்கிற கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒருத்தர் வந்து தீபக்குடைய அப்பாகிட்ட வந்து ஒரு கவரை கொடுத்தாரு அதை பிரிச்சு பார்த்து என்னை ஒரு பார்வை பார்த்தவர் எங்க அம்மாகிட்ட வந்து இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொன்னார்.அதைக் கேட்டு அதிர்ச்சியான என் அம்மாவும் சித்தப்பாவும் காரணம் கேட்டாங்க,அதுக்கு நான் நடத்த சரியில்லாதவன்னு சொன்னாங்க அதை கேட்டு அப்படியே இடிந்து போய் என் அம்மா நிற்க நான் எப்படி சொல்றீங்க என்ன ஆதாரம் இருக்குன்னு நான் கேட்டேன் அதற்கு அவர் கையில் வைத்திருந்த கவரை பிரித்து அதில் இருந்த சில போட்டோகளை காட்ட அதில் நானும் அந்த எம்.டியும் சேர்ந்து நின்றிருந்த போட்டோக்கள் இருந்தன.



அதைபார்த்து எப்படி சந்தேகப்படலாம் என்று நான் கேட்க...அவரோ பெண் பிள்ளை பதில் பேசாமல் வாயை மூடி நில் என்றார்.எனக்கு ஒன்னுமே புரியலை தீபக்கும் அங்கே தானே இருந்தான் அவன்கிட்ட போய் என்னை பற்றி இவ்வளவு தப்பா சொல்றாங்க நீ சொல்லு தீபக் நான் அப்படி பட்டவ இல்லைன்னு சொல்லு என்று நான் சொல்ல அவனோ நீ உண்மை தான் சொல்றேன்னு நான் எப்படி நம்புறது என்னை பார்த்து கேட்டான்.


என்னை திருமணம் செய்துக் கொள்ள போகிறவனே என் மேல் நம்பிக்கை இல்லாமல் சொல்லும் போது நான் என்ன பேச முடியும் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாக பேச ஆரம்பித்தார்கள் கேட்க என் காதுகளால் தான் தாங்க முடியலை என் அம்மா சிலையாகி போக நானோ பேச வார்த்தைகள் இன்றி போனேன்.அப்பொழுது அங்கே வந்த எம்.டி என்னை பெரிய மனது கொண்டு திருமணம் செய்துக் கொள்வதாக கூறினான் எல்லோரும் அதையே ஆமோதிக்க தப்பே செய்யாத நான் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்து அவனை திருமணம் செய்துக் கொள்ள மாட்டேன்"என்றேன்.



சுற்றி இருந்த அனைவரும் என்னை சமாதானம் செய்து அவனுடன் என்னை கல்யாணம் செய்துக் கொள்ளவே விரும்பினர்.நான் என்ன செய்தேன்? என் மீது தப்பு இருக்கிறதா? இல்லையா? என்று ஒருவார்த்தை கேட்க யாருமில்லை.வந்தவன் நல்லவனா? கெட்டவனா? இதை தெரிந்துக் கொள்ளக் கூட யாரும் நினைக்கவும் இல்லை எனக்கு திருமணத்தை முடித்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று எனக்கு ஒரு மனது இருப்பதை கூட யாரும் நினைக்கவில்லை .


என்னைப் பற்றி யோசிக்காத யாரைப் பற்றியும் யோசிக்காமல் நான் எடுத்த முடிவிலே உறுதியாய் இருக்க என்னை சுற்றி இருந்த அனைவரும் என்னை இன்னும் தப்பாக பேசினார்கள்.நான் என் அம்மாவோடு அங்கிருந்து வந்து விட்டேன் என் அம்மா ஆசையோடு நடத்த இருந்த திருமணமும் நின்றது என் சித்திக்கு அது இன்னும் வசதியாகிப் போனது.என் அம்மாவை இன்னும் வேதனைப் படுத்த ஆரம்பித்தார் என் அம்மாவிற்கு என் மேல் இருந்த நம்பிக்கையால் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.எங்கே எனக்காக வாழுபவர் என்னையும் இழந்து விட்டால் என்ன செய்ய? என்று அமைதியாக இருந்து விட்டார்.அவருக்காக தான் நான் எந்த துன்பமும் இல்லாமல் இருப்பது போல் சிரித்துக் கொண்டு இருக்கிறேன் என்று முடித்தவள் கண்களில் நீர் தழும்ப கூறியவள் பிறகு தான் ஒரு நாள் அந்த எம்.டியும் தீபக்கும் பேசுவதை கேட்டு அதே ஆபிஸில் வேலை செய்த என் தோழி மூலமாக தெரிந்தது இந்த வேலைகளுக்கு தீபக்கும் உடந்தை என்று.நடந்தது எதுவும் எனக்கு தெரியாது என்று நினைத்து சில நாட்கள் கழித்து வந்து என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினான்.நான் அனைத்தையும் கேட்டு அவனை திட்டி அடித்து விட்டேன் அதற்கு பிறகு இன்று தான் அவனைக் கண்டேன் கதிர்" என்றாள்.

மலர் சொன்ன அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான் கதிர்.



"கதிர் நான் சொல்றதை நீங்களாவது நம்புறீங்க தானே?" என்று தன் மனதில் உள்ள கேள்விக்கு விடை தெரிய வேண்டும் என்ற ஆவலில் குழந்தையைப் போல் அழுதுக் கொண்டே கேட்க... அவனும் அவளைப் பார்த்து "ம்ம்ம்"என்று தலையை அசைத்து கண்களால் பதில் சொன்னான்.


அவன் சொன்ன பதிலை கேட்டு வெற்றுச் சிரிப்பு சிரித்தவள் "கதிர் இந்த சமுதாயத்துல ஆண்கள் தவறு செய்தால் கொஞ்ச நாள்ல மறந்து விடுவாங்க ஆனா ஒரு பொண்ணு தப்பு செய்தாலும் செய்யா விட்டாலும் காலம் முழுக்க மறக்காமல் அதை வைத்தே இன்னும் வேதனை படுத்துறாங்க "என்று சத்தமாக முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பிக்க அவளை மெதுவாக கதிர் தன் தோளில் சாய்க்க வேதனையில் கிடைத்த ஆறுதலில் அவள் இன்னும் அதிகமாக அழுதாள்.மலருடைய தோள்களில் கதிர் மெதுவாக தட்டிக் கொடுக்க "நான் எந்த தப்புமே செய்யலை தெரியுமா? கதிர் ஆனா இப்போ வரைக்கும் எல்லோரும் நான் தான் குற்றம் செய்த மாதிரியே பார்க்குறாங்க" என்றாள் கேவலுடன்.




வாழ்க்கை கற்றுக் கொடுக்கும்

இந்த விலைமதிப்பு மிக்க

பாடத்தின் இறுதியில் நாம் தேடி

அலைவது நிம்மதியையே .....

விரும்புவது தனிமையையே ...!

அப்படி அவள் இத்தனை நாட்களாக

விரும்பி இருந்த தனிமையை

போக்க வந்தவனாகவும் நிம்மதி

என்ற காற்றை அவள் சுவாசிக்க

அவன் காரணமாக இருந்து

அவளுள் ஒருவனாக வாழ்ந்து

அவளுடைய வாழ்க்கையில்

வசந்தம் எனும் பூங்காற்றை வீசச்

செய்து அவளுடைய வாழ்வில்

இன்பங்களை நிறைப்பானா?

இல்லை திரும்பவும் அவள்

தனிமையே வாழ்வின் மிகப்பெரிய

துணை என்று இருப்பாளா?

இல்லை இரண்டிற்கும் நடுவில்

எது அவளுக்கு துணையாக

வேண்டும் என்று அவளே முடிவு

செய்ய வேண்டுமா? என்று காலம்

தான் பதில் சொல்ல வேண்டும்.



(தொடரும்)
 
Top