12.உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே.
கோவிலில் காத்திருந்தார் காமாட்சி. மனம் முழுவதும் பாரமாகவே இருந்தது.அன்று நடந்த நிகழ்வுகளை மனம் அசை போட தன் மகளின் நிலை எண்ணி மிகவும் வேதனையடைந்தார்.மலரின் அப்பா இருந்திருந்தால் அவருக்கும் உற்ற துணையாக இருந்திருக்கும்.ஆனால் இன்று மனதில் உள்ள பாரங்களை கூட மற்றவர்களிடம் சொல்லாத நிலையில் மனதில் போட்டு குழப்பிக் கொண்டிருந்தார் காமாட்சி.இப்படியே யோசித்துக் கொண்டிருக்கையில் நேரம் செல்ல மலர் வராததால் வீட்டுக்கு போகலாம் என்று முடிவெடுத்தார்.வினோவை பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்களும் சென்று இருப்பார்கள் என்று நினைத்தபடி வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தார்.
'போகும் வழியினில் மலர் வீட்டிற்கு சென்றிருப்பாளோ!' என்ற யோசனையில் சென்றார்.வீட்டின் உள்ளே நுழைகையில் சங்கர் வாசலில் நிற்க காமாட்சியைப் பார்த்து ''வாங்க அண்ணி" என்றழைக்க...
"என்ன சங்கர் எல்லாம் நல்ல படியா முடிந்ததா? "என்று கேட்க...
"ஆமாம் அண்ணி எல்லாம் நல்ல படியா முடிந்தது வாங்க உள்ளே போய் பேசலாம்" என்றழைக்க... இருவரும் உள்ளே சென்றனர்.
அங்கே நின்றிருந்த சுந்தரி "இன்னும் உங்களை காணோம்னு நினைச்சேன். வந்துட்டீங்க" என்றாள்.
"சுந்தரி மாப்பிள்ளைக்கு வினோவ பிடிச்சிருந்ததா? "என்று கேட்க...
"அதெப்படி பிடிக்காமல் போகும்,என் பொண்ணு தான் அழகு தேவதையாச்சே! அதெல்லாம் பிடிச்சிருந்தது, எங்கே மலரு?" என்று கேட்க...
"அது .... அவ கோவிலுக்கு வரலை இன்னைக்கு ஸ்கூல்ல வேலை இருக்குன்னு சொன்னாள்,அதான் வர லேட்டாகுது போல" என்று சொல்ல...
"என்ன சொல்ல? பொம்பளை பிள்ளைகளுக்கு காலக்காலத்துல செய்ய வேண்டியதை செய்யனும் இல்லைன்னா இஷ்டத்துக்கு இருக்கும்,அன்னைக்கே அந்த ஆளை முடிச்சிருந்த இன்னைக்கு அவளும் குடும்பத்தோடு இருந்திருப்பா, அதை விட்டுட்டு இப்போ இப்படி சுத்துன நல்லாவா இருக்கு"என்றதும் அவள் பேசிய வார்த்தைகளை கேட்க பிடிக்கமால் அதன் வலியை சுமந்தவாறே அமைதியாக உள்ளே சென்றார் காமாட்சி.
அழுது முடித்தவள் கதிரின் தோளில் சாய்ந்து இருந்ததை உணர்ந்தவள் சற்றென சுதாகரித்து விலகி கண்களை துடைத்தபடியே "சாரி கதிர் ஏதோ ஒரு வருத்தத்துல ..."என்று சொல்ல...
"பரவாயில்லை கலை" என்று அவன் கூற...
"கதிர் ரொம்ப நேரமாயிடுச்சு நான் வீட்டுக்கு கிளம்புறேன் "
"கலை நானே உங்களை வீட்ல டிராப் பண்ணுறேன்?"
" வேண்டாம் கதிர் ஏற்கனவே நான் உங்களை நான் ரொம்ப சிரமப்படுத்திட்டேன் நான் கிளம்புறேன்" என்று அவனுடைய பதிலை கூட எதிர்பாராமல் அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள்.
அவளுடைய செய்கை அவனுக்கு வித்தியாசமாக இருந்தது.
அவ்வளவு நேரம் அவனுடன் நன்றாக பேசியவள் திடீரென அவள் வேகமாக சென்றது தான் அவனுக்கு யோசனையாக இருந்தது.
அங்கிருந்து ஒரு ஆட்டோவில் ஏறி வீட்டிற்கு சென்றாள் மலர்.போகும்வழி முழுவதும் 'தான் எப்படி கதிரிடம் அனைத்து உண்மைகளையும் சொன்னோம்' என்ற யோனையோடு அவள் சென்றாள்.வீட்டிற்கு சென்ற பிறகு அம்மாவை காண அவர் அவளுக்காக காத்திருந்தார்.
"மலர் கோவிலுக்கு வரச் சொன்னேன் நீ ஏன்
வரலை?"
"அம்மா வேலை முடிய லேட்டாயிடுச்சு அதான் வர முடியலை"
"ஒரு போன் போட்டாவது சொல்லி இருக்கலாமே"
"அம்மா ... அது வந்து..."என்று அவள் யோசிக்க....
மலரின் முகத்தை கவனித்த காமாட்சி "ஏன் மலர் முகமே சரியில்லை?அழுதியா கண்ணெல்லாம் சிவந்து இருக்கு" என்று கேட்க...
"இ....ல்லை ம்மா நான் அழுகலை நான் ஏன் அழப்போறேன்? அதுசரி என்னை பற்றி கேட்கிறீங்க, ஆனால் உங்க முகமே சரியில்லை என்ன நடந்தது?" என்று கேட்க...
"ஒன்றுமே நடக்கலை மலர் நான் உங்கிட்ட கேள்வி கேட்டால் நீ என்னையே திரும்ப கேட்கிற"
"இல்லை அம்மா உங்க முகமே சரியில்லை" என்று திரும்ப கேட்க...
"நீ வரலைல அந்த யோசனையில் தான் இருந்தேன் வேற ஒன்றும் இல்லை சீக்கிரம் போய் கைகால் கழுவிட்டு வா சாப்பிடலாம்" என்று சொல்லி விட்டு சென்றார் காமாட்சி.
மலரோ மனதினுள் 'இன்று நடந்ததை சொன்னால் அம்மா வருத்தப்படுவார்' என்று நடந்ததை அவள் மறைக்க காமாட்சி வினோவை மாப்பிள்ளை பார்க்க வந்ததையும் சுந்தரி பேசியதையும் அவர் தன் மகளிடம் மறைத்தார்.இருவரும் ஒருவரை எண்ணி மற்றொருவர் வருந்தி அமைதியாக இருந்தனர்.
போனை எடுத்துப் பார்க்க பத்து மிஸ்டு கால் என்று இருக்க எடுத்துப் பார்க்க தேவியோட பெயர் தெரிய அவள் சொன்னது அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது மலருக்கு 'ஒரு மணி நேரம் கழித்து போன் செய்வேன் என்றாலே ஐயோ ரொம்ப நேரத்திற்கு மேல் ஆகி விட்டதே' என்று எண்ணி அவளுக்கு போன் செய்தாள் மலர்.
தேவியுடைய போன் அடித்த உடனே எடுத்த தேவி ....மலரை பேச விடாமல் அவளே பேசினாள்."ஏய் அறிவு இருக்கா? உனக்கு எத்தனை தடவை கால் பண்ணுறது.எடுத்து ஒரு வார்த்தை பேச மாட்டே போன் பேசினால் என்ன குறைஞ்ச போய்டுவா. உங்க வீட்டுக்கு போன் பண்ணி யாரையும் டென்ஷன் பண்ண வேண்டாம்னு பார்த்தால் .... நான் தான் டென்ஷன் ஆகிட்டே இருந்தேன் தெரியுமா? எங்கே போன? "
"நீ போன் எடுக்கலைன்னு வாட்ச்மேன்க்கு போன் போட்டு உன்னை கேட்டால் .... நீ அப்பவே போய்ட்டேன்னு சொன்னாங்க. சரி வினோவுக்கு கால் பண்ணி கேட்டால் நீ வரலைன்னு சொன்னாள்.அவ எங்க வீட்டுக்கு தான் வந்திட்டு இருப்பாள் அவகிட்ட பொய் சொன்னேன்,இப்போ எங்கே இருக்க?" என்று மூச்சு விடாமல் பேச...
"நான் வீட்ல தான் இருக்கேன் தேவி சாரிடி போனை எடுக்க முடியலை"
"அப்படி எங்கே போய் மாட்டிக்கிட்ட?" என்று கேட்க...
"அது... இன்னைக்கு என்ன நடந்திச்சுன்னு தெரியுமா?" என்று நடந்த அனைத்தையும் கூறினாள் மலர்.
"ஏய் என்ன சொல்ற? கதிர் கிட்ட எப்படி எல்லா உண்மையையும் சொன்னே.அது தான் எனக்கு தெரியலைடி,அந்த தீபக்கும் அவன் மனைவியும் பேசுனதை கேட்டு என்னால தாங்க முடியலை "என்று சொல்ல... "அவன் பேசுனதை எல்லாம் பெரிதாக எடுத்துக்காதே அம்மாகிட்ட எதுவும் சொல்லலையே" என்று கேட்க...
தஇல்லை தேவி அம்மா ரொம்ப வருத்தப்படுவாங்க அதான் எதுவும் சொல்லலை"
"சரி மலரு நடந்தது எதுவும் நல்லதுக்கு நினைத்துக் கொள் தேவையில்லாமல் குழப்பிட்டு இருக்காதே! மற்ற விஷயங்களை நாளைக்கு நேரில் பேசலாம்"என்று போனை வைத்தாள் தேவி.
பல வித யோசனைகளோடு அன்றைய இரவு கழிந்தது.மறுநாள் ..... தேவியோடு மலர் பள்ளிக்கு சென்றாள்.போகும் வழியினில் "தேவி... தேவி..."என்று அவளூடைய முதுகில் சொறிய "என்ன சொல்லு? பக்கத்துல தானே இருக்கேன் எதுக்கு ஏலம் விடுற?"
"ஏய்...இல்ல நான் எப்படி கதிர்கிட்ட பேசுனேன்னு தெரியலைடி"
"ஆமா எனக்கும் தான் தெரியலை நீ தான் யாரையும் நம்ப மாட்டியே"
"ம்ம்ம்.... அது தான் எனக்கும் புரியலை,அதுவும் அவன் தோள்ல வேற சாய்ந்து இருந்தேன்"
"கதை அப்படி போகுதா?" என்று தேவி சொல்ல
"எப்படியும் போகலை,நீ ஒழுங்கா ரோட்டைப் பார்த்து வண்டியை ஓட்டு"
"சரி சரி...நான் எதாவது சொன்னா மட்டும் உடனே எதாவது சொல்லுறது "என்று வண்டியை ஓட்டினாள் தேவி.
மலர் மனதினுள் 'அப்படி தான் இருக்குமோ? 'என்று உதட்டை சுழித்து யோசிக்க கண்ணாடி வழியே பார்த்த தேவி "என்னமா வித்தியாசமா யோசிக்கிற "
"ஏய் ஒழுங்கா வண்டியை ஓட்டு"
"ம்ம்ம் அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்"
பள்ளிக்கு சென்ற சிறிது நேரத்தில் ..... "தேவி ... தேவி.... கதிர் என்னை தப்பா நினைச்சு இருப்பாரோ?"
"அப்படி எல்லாம் இருக்காது"
"அப்படிங்கிற... ம்ம்ம் பார்ப்போம்"இன்னும் கொஞ்சம் நேரம் செல்ல...
"தேவி.. தேவி.."
"என்னாடீ? "
"இதனால என் மேல ரொம்ப உரிமை எடுத்துப்பானோ?" என்று அவளிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க...
"எம்மா தாயே என்னை விட்டுவிடு என்னை கேள்வி கேட்டே கொல்லாதே" என்று அங்கிருந்து வேகமாக செல்ல...
"ஏய் இங்கிருந்து போகாதே,அப்புறம் இனிமேல் நீ பிரெண்ட்டு இல்ல"
"ஏய் உன் பிரெண்ட்சிப்பே வேண்டாம் என் சிப்பு மூழ்குனாலும் பரவாயில்லை ஆளை விடு" தேவி சென்று விட்டாள்.
வந்ததிலிருந்து கதிருடைய கண்ணுக்கு அகப்படாமல் சுற்றினாள் மலர்.ஆனால் அவன் இன்னும் வரவே இல்லை என்பதை அறிந்து தன்னை தானே நொந்துக் கொண்டவள் தேவியிடம் இதை சொல்ல வேண்டும் என்றெண்ணி அவளை தேடி சென்றாள் மலர்.
"தேவி... தேவி ....எங்கே இருக்க?" என்று தேடிச் சென்றவள் அவளை கண்டுபிடித்ததும் "தேவி தேவி... உனக்கு விஷயம் தெரியுமா?"
"ஏய் நம்ம பிரெண்சிப்பு மூழ்கி போய்டுச்சு,இனிமேல் நீ யாரோ? நான் யாரோ? என்கிட்ட பேசாதே!" என்று சொல்ல...
"என்ன செல்லம்? நம்ம பிரெண்சிப்பு என்ன பேப்பர்ல செய்ததா தண்ணில மூழ்க நாம ரெண்டுபேரும் கஷ்டப்பட்டு செஞ்சுதுடி,அதனால மூழ்காது "என்று மலர் சொல்ல...
"எப்படி எல்லாமோ செய்த டைட்டானிக் கப்பலே மூழ்கிடுச்சு?நீ என்னன்னா நம்ம கப்பல் மூழ்காதுன்னு சொல்ற.அதெல்லாம் மூழ்கிடுச்சு போ "என்று விரட்ட.. அவளுடைய கழுத்து வளைவில் தன் கைகளை போட்டு இறுக்கியவள் "செல்லம் அது காதல் கப்பல் அதனால மூழ்கிடுச்சு இது நட்புக் கப்பல் மூழ்காது மூழ்கவும் விட மாட்டேன் தேவி, அதெல்லாம் விடு முதல்ல என் சந்தேகத்தை தீர்த்து வை தேவி ஸ்கூலுக்கு வராத கதிரை நான் ஏன்டீ தேடனும்?பதில் சொல்லு "என்று கேட்க...
" ஐயோ கதிர் சார் எங்கே போனீங்க இவ என் உயிரை வாங்குறாளே,எப்பா ராசா வருவீங்க? சீக்கிரமா வாங்க "என்று சொல்ல அவன் அங்கு தானே வந்து கொண்டிருக்கிறான்.மலரோ யோசனையின் சிரிப்போடு அவனை நினைத்தாள்.
(தொடரும்)