Annapurani Dhandapani
Active member
காதல் மொழி - 12
ஐஸ்க்ரீம் பார்லர்காரன் மூலமாக ஒரு பெரிய கடத்தல் நெட்வொர்கையே தடுத்து நிறுத்தினார்கள். விராட் தன்னால் திறமையாக செயல்பட முடியும் என்பதை நிரூபித்தான். அவனுடைய டிபார்ட்மென்டில் அவனுக்கு மிகவும் நல்ல பெயர் கிடைத்தது. இன்ஸ்பெக்டராக பதவி உயர்வும் வந்தது.
செய்தித்தாள்களில் அவனைப் பற்றிய செய்தி முதல் பக்கத்தில் வந்தது. கௌரி மனம் மகிழ்ந்தாள். தீன்தயாள் மகனைக் கட்டிக் கொண்டு தன் மகிழ்ச்சியை காட்டினார். செல்வி கொழுந்தனுக்கு ஸ்வீட் செய்து கொடுத்துத் தன் வாழ்த்துக்களை தெரிவித்தாள். சூரஜ், தீபிகா, செல்வியின் பெற்றோர், செல்வியின் சித்தப்பா, சித்தி, ஆனந்தன் அனைவரும் போன் செய்து வாழ்த்து தெரிவித்தனர். யமுனாவும் பிங்கியும் கூட வாழ்த்து தெரிவித்தனர்.
ஆனால் விராட் முக்கியமான ஒருவரின் வாழ்த்துக்களை மிகவும் எதிர்பார்த்தான். பதவி உயர்வை ஏற்றுக் கொண்டு ட்யூட்டியில் சேர்ந்தான். தன் வேலையை செய்து கொண்டே நொடிக்கொருதரம் கைபேசியைப் பார்த்தான். திடீரென்று தன் வாட்ஸ்அப் ஸ்டேஸை பார்த்தான். அது ப்ளாங்காக இருந்தது. ஒரு வேளை ப்ரமோஷன் ஆனது தெரியாதோ? அதான் போன் வரலையோ? என்று நினைத்து ஸ்டேஸை மாற்றினான். ஆனால் அவன் எதிர்பார்த்த போன்கால் வரவில்லை. தினமும் போன் பண்ணுவா! இன்னிக்கு என்னாச்சு? அன்று அவன் மிகவும் மனம் சோர்ந்து போனான். அவனுக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது போலிருந்தது.
வேலை முடித்து வீடு வந்தான். செல்வி ஏதோ கேட்டாள். பதிலே சொல்லாமல் மாடிக்குப் போனான்.
இன்னிக்கு இவருக்கு என்ன ஆச்சு என்று நினைத்தபடியே செல்வி தேநீர் கலந்தாள். ஆனால் அவன் தேநீர் குடிக்க கீழே வரவில்லை!
சீருடையைக் கூட கழற்றாமல் அப்படியே கட்டிலில் விழுந்தான். மின்விளக்கு மின்விசிறி எதையும் போட்டுக் கொள்ளத் தோன்றாமல் படுத்திருந்தான். கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்தது.
ஆண்கள் அழலாமா? ஏன் ஆண்களுக்கு உணர்ச்சியில்லையா? அதுவும் ஒரு போலீஸ்காரன் அழலாமா? ஏன் போலீஸ்காரன் மட்டும் மனிதன் இல்லையா? இது ஒரு சின்ன விஷயம்! இதுக்குப் போய் மனம் தளரலாமா? வெறும் வெட்டி விஷயங்களைத்தானே பேசிக் கொள்கிறோம்! இன்னும் ஒருவர் மனதை ஒருவர் அறியக் கூட இல்லையே! அப்புறம் ஏன் வருத்தம்?
ஏதேதோ கேள்வி வந்து அவனை அலைக்கழித்தது. ஆனால் அவனால் தன் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அழுது கொண்டே இருந்தான். திடீரென்று ஏதோ தோன்றியவனாய் தானே போன் செய்தான். நாட் ரீச்செபிள் என்று குரல் வந்தது.
ஒரு பெண்ணுக்காக இவ்வளவு ஏங்குகிறோமா? என்று நினைத்தான். ஆனால் திரும்பவும் அழுகையே வந்தது. பொம்பள மாதிரி அழறியே! விராட் உனக்கு வெக்கமாயில்ல? தன்னைத் தானே திட்டிக் கொண்டான். ஆனால் இந்த குரங்கு மனம் அவளையே சுற்றிச் சுற்றி வந்தது. அவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. அவள் இல்லாத வாழ்க்கை எனக்கு நரகமாகத்தான் இருக்கும்.
"விராட்! விராட்! கதவத் தெறங்க!" செல்வி கதவைத் தட்டினாள்.
"பாபி! ப்ளீஸ் லீவ் மீ அலோன்!" கதவைத் திறக்காமலேயே பதில் சொன்னான்.
"நீங்க முதல்ல கதவத் தெறங்க!"
"பாபி! உங்களுக்கு என்ன வேணும்! என்ன ஏன் டிஸ்டர்ப் பண்றீங்க! போங்க! போய் உங்க வேலயப் பாருங்க!" கத்தினான். கையில் என்ன கிடைத்ததோ, விட்டெறிந்தான். அது மூடியிருந்த கதவில் பட்டு கீழே விழுந்தது.
"விராட்! ப்ளீஸ்! ஒரே ஒர நிமிஷம்! கதவ தெறங்க! நான் சொல்றத கேட்டுட்டு கதவ மூடிக்குங்க! தயவு செய்து கதவத் தெறங்க!"
வர வர இவங்க அதிகாரம் தூள் பறக்குது! கதவத் தெறந்து நாக்க பிடிங்கிக்கற மாதிரி நாலு வார்த்தை கேட்டாதான் அடங்குவாங்க! என்ன நெனச்சிட்டு இருக்காங்க இவங்க? கட்டுக்கடங்காத கோபத்துடன் கதவைத் திறந்தான்.
செல்வி காட்லெஸ் போனை கையில் கதவுக்கு நேராக நீட்டிக் கொண்டு அவன் கதவைத் திறந்ததும்,
"ஆனந்தி லைன்ல இருக்கா! பேசுங்க!" என்று கூறினாள்.
"ஓஹோ! மேடம் என் மொபைலுக்கு பண்ண மாட்டாங்களாமா?"
"அவ எங்க தாத்தா பாட்டி இருக்கற கிராமத்துக்கு தஞ்சாவூர் போயிருக்கா! நெட்வொர்க் ப்ராப்ளம்! காலைலேர்ந்து பவர் கட்! செல்லில சார்ஜும் இல்ல! உங்ககிட்ட பேசலைன்னு காலைலேர்ந்து தவிச்சுக்கிட்டு இருக்கா! பேசுங்க!" தந்தி பாஷை மாதிரி விரைவாக கூற வேண்டியது எல்லாம் சுருக்கமாக சொல்லி போனை அவன் முன் நீட்டினாள்.
அவசரமாக போனை வாங்கி காதுக்குக் கொடுத்தபடியே அறைக்குள் போய் கதவைச் சாத்திக் கொண்டான்.
சிரித்துக் கொண்டே செல்வி கீழே வந்தாள். வீட்டுக் கூடத்தில் அமர்ந்திருந்த தீன்தயாளிடமும் கெளரியிடமும்,
"அத்த! என் தங்கை ஆனந்தி நம்ம விராட்டை மனப்பூர்வமா விரும்பறா! அவள உங்க சின்ன மருமகளா ஏத்துப்பீங்களா?" கேட்டுவிட்டு மாமனாரிடம் சைகை செய்து காண்பித்தாள்.
"இதென்ன கேள்விம்மா! என் மகனோட விருப்பம் அதுதான்னா, எனக்கும் அதுதான் விருப்பம்." மாமனாரும் இதையே சைகையாக செய்தார்.
"ரொம்ப தேங்க்ஸ் அத்த!"
"இதுக்கு எதுக்குமா தேங்க்ஸ் சொல்ற! விராட்டுக்கு பிடிச்ச பொண்ணைத்தான் அவனுக்கு கட்டி வெப்பேன். இப்ப கூடுதலா ஒரு சந்தோஷம்! அவ உன் தங்கை! ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா!" மாமனார் அவள் தலையை பாசத்தோடு தொட்டு ஆசீர்வாதம் செய்தார்.
"சரி! வாங்க! சூரஜ் கிட்ட ஸ்கைப்ல பேசி விஷயத்த சொல்லலாம்." இருவரையும் அழைத்தாள்.
"இரு இரு! அந்த போலீஸ்காரன் வரட்டும்! அவன் கூட கொஞ்சம் வம்பு பண்ணிட்டு அப்றம் பேசலாம்!" மாமனார் சைகை செய்ய மாமியார் விளக்கினார்.
"ஹையோ.. பாவம்.. வேணாம் அத்த.."
"இரு இரு.. செல்வி! நீ பேசவே பேசாத! உன் கிட்ட கோவத்த காமிச்சான்ல! அவனுக்கு தெரியணும்! மத்தவங்களுக்கும் கோவம் வரும்னு காட்டணும்!"
கௌரி செல்வியின் காதில் சொல்லிவிட்டு தள்ளி உட்கார்ந்து கொண்டாள். முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள். செல்வி அங்கிருந்த மற்றொரு சோபாவில் அமர்ந்தாள். மாமனார் எழுந்து போய் தன்னுடைய சாய்வு நாற்காலியில் அமர்ந்தார்.
இங்கே விராட்டின் அறையில்:
விராட் ஆனந்தியிடம் பேசினான்.
"ஹலோ! ஆனந்தி!" பேசியபடியே மின்விளக்கையும் மின்விசிறியையும் போட்டான்.
"ஹலோ! விராட்ஜி! கங்க்ராஜுலேஷன்ஸ்!"
"ஆனந்தி! என்னங்க ஆச்சு.."
"ஸாரிங்க! தாத்தா பாட்டிய பாக்க வந்தேன்! இங்க லேண்ட் லைன்தான்! எந்த நெட்வொர்க்கும் எடுக்கல. அதான் உங்க மொபைலுக்கு கால் பண்ண முடியல! மெஸேஜும் பண்ண முடில. அதுனாலதான் ஈவ்னிங் நீங்க ட்யூட்டிலேர்ந்து வர வரைக்கும் வெய்ட் பண்ணினேன். அதுக்கப்புறம் நிறைய வாட்டி போன் பண்ணினேன். நீங்க ஏங்க கீழ வர இவ்ளோ லேட் பண்ணிணீங்க!"
"நிறைய வாட்டியா?"
"ம்."
"ஐ ஆம் ஸாரி! நான் உங்கள தப்பா நெனச்சுட்டேன்!"
"உங்கள ரொம்ப மிஸ் பண்றேன்! விராட்!"
"நானும் தான் ஆனந்தி!"
"விராட்!"
"சொல்லுங்க!"
"நீங்க இவ்ளோ நேரம் அழுதுகிட்டுதானே இருந்தீங்க!?"
".." அவன் பதில் சொல்லவில்லை.
"எனக்குத் தெரியும்! என் போனுக்காக நீங்க எவ்ளோ எதிர்பாத்து காத்துகிட்டு இருந்திருப்பீங்கன்னு! உங்க கிட்ட பேச முடியலையேன்னு என்னாலயும் சாப்பிட முடியல!"
"நீங்க இன்னும் சாப்பிடலையா.. ஐயோ என்னங்க நீங்க.."
அவள் விசும்பும் சத்தம் கேட்டது.
"ஆனந்தி! நீங்.. நீ என்கிட்ட வந்துடு ஆனந்தி! என் மனசு பூராவும் நீதான் இருக்க ஆனந்தி! நீ மட்டும்தான் இருக்க! இன்னிக்கு முழுக்க உன் நினைவுதான்! என்னால ஒழுங்கா வேலையே செய்ய முடில! நீ இல்லன்னா என் வாழ்க்கை சூன்யம்தான்!"
"விராட்! என் மனசிலயும் நீங்கதான் இருக்கீங்க! உங்க மனசில நான் இருக்கேனான்னு தெரியாம நான் ரொம்ப தவிச்சேன். இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு!"
"எனக்கு உன்ன உடனே பாக்கணும் போல இருக்கு, ஆனந்தி!"
"எனக்கும் அப்டிதான் இருக்கு! நீங்க உங்க பேரண்ட்ஸ கூட்டிட்டு வந்து எங்க வீட்ல பொண்ணு கேளுங்க விராட்! நீங்க இல்லாத வாழ்க்கை எனக்கும் சூன்யம்தான்!"
"ஆனந்தி! இந்த மாதிரி இனிமே பட்னி இருக்காத! உன் உடம்புக்குதானே கெடுதி!"
"சரி இனிமே பட்னி இருக்க மாட்டேன்! நீங்க எப்ப வரீங்க விராட்!"
"கூடிய சீக்ரம்! சரி ரொம்ப நேரமாய்டுச்சு! போய் சாப்பிடு!"
"ம்."
"ஏன் இப்டி உடம்ப கெடுத்துக்கற?"
"நீங்க மட்டும் அழலாமா? அழுது உடம்ப கெடுத்துக்கலாமா?"
"சரி நானும் அழல! எப்ப உங்க ஊருக்கு போவ?"
"நளைக்கு ஈவ்னிங் ட்ரெயின்!"
"ஓ! ட்ரெயின் ஏறினதும் ஒரு வேள நெட்வொர்க் இருந்தா கால் பண்ணு! இல்லன்னா மெஸேஜ் வேணாம் மிஸ்டு கால் குடு! போதும்! நானே கால் பண்றேன்! பண்ணுவியா? "
"கண்டிப்பா பண்றேன்! பண்ணலன்னா அழாதீங்க! நீங்க அழுதா என்னால தாங்க முடியாது!"
"அழ மாட்டேன்! இனிமே அழவே மாட்டேன்! எனக்குதான் ஆனந்தம் தர என்னோட ஆனந்தி, நீ இருக்கியே!"
"ம்!"
"சரி வெச்சுடவா!"
"அதுக்குள்ளயா! இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமே!" கொஞ்சிக் கேட்டாள்!
"நிச்சயமா பேசறேன்! நாளைக்கு! இன்னிக்கு வேணாம்! சரியா?" அவனும் கொஞ்சினான்.
"ஏன்? இன்னிக்கு என்ன?"
"நீ இன்னும் சாப்பிடலியே! நீ பட்னியா இருந்தா எனக்கு எப்டி எனர்ஜி வரும்!" காதலுடன் கூறினான்.
"ஹை! இவ்ளோ நேரமா என்ன நல்லா திட்டிகிட்டு இருந்தாராம்! என் மேல இருக்கற கோவத்த அக்கா மேல வேற காட்டினாரு! இப்ப இவருக்கு நான் சாப்பிடலியேன்னு வருத்தமாம்! என்ன இன்ஸ்பெக்டர்! புது கதை சொல்றீங்க?" துடுக்காய் பேசினாள்!
"மேடம்! போய் சாப்பிடுங்க மேடம்! இல்லன்னா உங்கள உங்க கிராமத்துக்கே வந்து அரெஸ்ட் பண்ணி தூக்கிட்டு வந்து என்னோட ரூம்ல அடைச்சு வெச்சுக்குவேன்! யார் வந்து கேட்டாலும் வெளிய விடவே மாட்டேன்! பீ கேர்ஃபுல்!" சிரித்துக் கொண்டே போலீஸ் மிடுக்குடன் பேசினான்.
"அடைச்சு வெச்சு? என்னா பண்ணுவீங்களாம்?" அதே துடுக்கு!
"அடைச்ச்ச்ச்சு வெச்ச்ச்ச்சு.. ஹும்.. இல்ல இப்ப சொல்ல மாட்டேன்! அடைச்சு வெச்சப்புறம் செஞ்சு காட்றேன்! அப்ப தெரியும்! இந்த விராட் யாருன்னு!" மனம் நிறைய நிரம்பி வழியும் காதலுடன் பேசினான்.
"ஹையா! சீக்ரம் வாங்க விராட்!" அதே அளவு காதலுடன் சொல்லிவிட்டு சிரித்தாள்.
"சீக்ரமா வரேன் ஆனந்தி! நீ போய் சாப்டு! எப்ப வருவோம்னு போன் பண்றேன்!"
"பை!"
"ம்.. பை ஆனந்தி!
இருவரும் வைக்கவே மனசில்லாமல் போனை வைத்தனர். விராட்டுக்கு இவ்வளவு நேரம் இருந்த மனக்கலக்கம் எல்லாம் அடியோடு காணாமல் போய்விட்டது, ஓடிச் சென்று குளித்து உடைமாற்றி காட்லெஸ் போனை எடுத்துக் கொண்டு விசிலடித்தபடியே கீழே வந்தான்.
கீழே அம்மா, அப்பா, அண்ணி மூவரும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.
"அம்மா! உங்ககிட்ட ஒரு முக்யமான விஷயம் சொல்லணும்!"
".."
"பாபி!"
".."
"அப்பா!" தொட்டு அழைத்தான். அவர் முகத்தை திருப்பிக் கொண்டார்.
"ஏன் யாரும் ஒண்ணும் பேச மாட்டேங்கறீங்க!"
"விராட்! உங்களுக்கு என்ன வேணும்! ப்ளீஸ் லீவ் மீ அலோன்!" செல்வி சொல்லிவிட்டு திரும்பிக் கொண்டாள். அந்தப்பக்கம் திரும்பி சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.
"ஓஹோ! நான் கோபப்பட்டேன்னு நீங்க சொல்லிக்காட்றீங்களா?"
"உனக்கு என்ன வேணும்! நீ போய் உன் வேலயப் பாரேன்! எங்கள ஏன் தொந்தரவு செய்ற!" கெளரி சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள். பாவம்! விராட்! ஐயியோ! சிரிச்சுடுவேன் போலிருக்கே! என்று நினைத்துக் கொண்டாள்.
"அம்மா! ஸாரிம்மா! பாபி! ஸாரி! ப்ளீஸ்! என்ன பாருங்களேன்!"
தீன்தயாள் மகனைப் பார்த்து தன் கையில் இருப்பதை அவன் மேல் எரிவதைப் போல சைகை செய்தார். முகத்தை திருப்பி சிரித்துக் கொண்டார்.
"ஸாரி! ஸாரி! தெரியாம கோபப்பட்டுட்டேன்!"
".."
"ஸாரி பாபி! ஸாரிம்மா! ஸாரிப்பா!" மீண்டும் மீண்டும் மூவரிடமும் மன்னிப்பு கேட்டான்.
"என்ன செல்வி! இவன மன்னிச்சுடலாமா?" கௌரி கேட்டாள்.
"போனா போகுது அத்த! சின்ன பையன்! மன்னிச்சுடுங்க!" மெதுவாய் சிரித்தாள்.
நான் சின்ன பையனா! நினைத்துக் கொண்டான். அழுதியே! அழுதா சின்ன பையன்தான். சின்ன பையன்தான் அழுவான்! நினைத்து சிரித்துக் கொண்டான்.
"ஹூம்! போடா! மன்னிச்சுட்டோம்! த பாரு! செல்வி சொன்னதுக்காக மன்னிச்சோம்! இல்லன்னா.." சிரித்தாள்.
"இல்லன்னா.. என்னா பண்ணுவீங்களாம்?" சிரித்துக் கொண்டே கேட்டான்.
"ம்.. இப்டி காதத் திருகுவோம்!" கௌரி விராட்டின் காதைத் திருகினாள்.
"ஆ! அம்மா! வலிக்கிதுமா! விடுங்கம்மா! தெரியாம கேட்டுட்டேன்!" சமாதானத்துக்கு வந்தான்.
"ம்! அந்த பயம் இருக்கட்டும்! போ!" காதை விட்டாள்.
"அம்மா! பசிக்கிதும்மா! வேலைக்கு போய்ட்டு வந்த மகனுக்கு சாப்பாடு போடாம எல்லாரும் இப்டி கோபப்படுறீங்களே!" அங்கலாய்த்தான்.
"வாங்க! விராட் சாப்பிடலாம்!" செல்வி சாப்பாடு எடுத்து வைத்தாள். நால்வரும் வட்டமாக அமர்ந்து சாப்பிடத் தொடங்கினர்.
"அம்மா! எனக்கு பாபியோட தங்கை ஆனந்திய ரொம்ப பிடிச்சிருக்கு! எனக்கு அவள கல்யாணம் பண்ணி வெய்ங்க!"
அப்பாவிடம் சைகையில் சொன்னான்.
இப்டி நேரடியா கேட்டுட்டானே! தைரியமானவன்தான் என்று செல்வி நினைத்துக் கொண்டாள்.
"சரிடா! சாப்டுட்டு சூரஜ் கிட்ட சொல்லிடறேன்! நல்ல நாள் பாத்து போய் பொண்ணு கேக்கலாம்!" என்றாள் கௌரி.
அப்பாவும் இதையே செய்து காட்டினார்.
"தேங்க்ஸ்மா! தேங்க்ஸ்பா!"
செல்வியைப் பார்த்து புன்னகை செய்தான். செல்வி பதிலுக்குப் புன்னகை செய்தாள். விராட் தவிர மூவரும் சாப்பிட்டு எழுந்தனர். தீன்தயாளும் கௌரியும் விராட்டிடம் சாப்பிட்டுவிட்டு வந்து சூரஜிடம் பேசும் போது அழைக்குமாறு கூறிவிட்டு தன்னுடைய அறைக்குப் போய்விட்டனர். கைகழுவிவிட்டு வந்த செல்வி விராட்டுக்காக அருகிலேயே அமர்ந்திருந்தாள்.
"ஏன் விராட் அழுதீங்க!?"
"நானா! அழுதேனா? இல்லியே!" என்று பதிலளித்தவன், இவங்க எப்டி கண்டுபிடிச்சாங்க? என்று நினைத்துக்கொண்டான்.
"எனக்குத் தெரியும்! நீங்க அழுதீங்க! சொல்லுங்க! எதுக்கு அப்டி அழுதீங்க?"
"பாபி! அது.. வந்து.."
"ஆனந்தி கிட்டேந்து போன் வரலன்னு இப்டியா குழந்தை மாதிரி அழுவாங்க!"
".."
"சரி விடுங்க! ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்க! இனிமே அழாதீங்க! எல்லா விஷயத்தையும் வேற வேற ஆங்கிள்ல யோசிங்க! நீங்க மட்டும் அவ போன் வரலன்னு நினைச்சு கவலப்படறத நிறுத்திட்டு ஏன் பண்ணலன்னு யோசிச்சி இருந்தீங்கன்னா இப்டி அழுதிருக்க மாட்டீங்க!"
"ஸாரி பாபி!"
"சரி சாப்பிடுங்க!"
"ஆனா உங்கள அவ்ளோ திட்டினேன்! உங்களுக்கு என் மேல கோபமே வரலியா பாபி?"
"எதுக்கு கோபம் வரணும்! நீங்க வருத்தத்தில இருக்கீங்க! அதனால வர கோபம்! யாரா இருந்தாலும் இப்டிதான் நடந்துப்பாங்க!"
"நீங்க எப்டி அண்ணி இப்டி எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்கறீங்க?"
"ஸிம்பிள் விராட்! பிரச்சனை என்ன? அதுக்கு சொல்யூஷன் என்ன? இப்டி யோசிச்சா எல்லாமே ஈஸி! அது மட்டும் இல்ல! எதுவும் என்ன பாதிக்காத மாதிரி பாத்துக்கறேன்! பிரச்சனைக்கு வெளியேர்ந்து பாக்க கத்துகிட்டேன்! அவ்ளோதான்!"
"நீங்க அழவே மாட்டீங்களா? இல்ல அழுததே இல்லையா?"
"சின்ன வயசில அறியாத வயசில நிறைய.. ஆனா வளர்ந்தப்றம் .. ரொம்ப அழல.. ஒரே ஒரு முறை அழுதிருக்கேன்! உங்க அண்ணன் யூஎஸ் கிளம்பறப்ப.. என்னால கனட்ரோல் பண்ண முடியாம அழுதேன்! அவர விட்டுட்டு எப்டி இருப்பேன்னு நெனச்சி.. அப்பதான் ஒண்ணு புரிஞ்சுது! நானும் அவரும் பக்கத்து பக்கத்துல இருந்தாதான் காதலா? இல்லையே! அவர் எங்க இருந்தாலும் என் மனசு அவர் கிட்டதான் இருக்கும்! அவர் மனசு என் கிட்டதான் இருக்கும்! அப்றம் ஏன் அழணும்னு புரிஞ்சுது! அதுலேந்து அழல!"
அவனுக்கு அவளுடைய நிலைமை புரிந்தது.
"யூ ஆர் க்ரேட் பாபி!"
"ஏன்? நீங்க கூட தான் க்ரேட்! தைரியமா ஆனந்திய கல்யாணம் பண்ணி வைங்கம்மான்னு கேட்டீங்களே! நீங்க தான் க்ரேட்!"
".."
"ஆனந்தி போன் பண்ணி விஷ் பண்ணலன்னு தவிச்சீங்க! ஆனா அவ போன் பண்ணி விஷ் பண்ணும் போது, உங்களுக்கு அது பெரிசா இருந்திருக்காது! அவ கங்க்ராட்ஸ் சொல்லும் போது நீங்க தேங்க்ஸ் சொல்லியிருக்க மாட்டீங்க! ஆனந்தி நீ முதல்ல சாப்பிடுன்னு தான் சொல்லியிருப்பீங்க! கரெக்ட்டா?"
"ம்.!"
"பத்து நிமிஷம் பேசியிருப்பீங்களா? பத்து நிமிஷத்தில ஏழு நிமிஷம் சாப்பிடு சாப்பிடுன்னுதான் சொல்லியிருப்பீங்க! அவ அழாதீங்கன்னு சொல்லியிருப்பா!"
ஆமாம் என்று நினைத்தான். ஆனால் சொல்லவில்லை.
"இதோ! அவ சாப்டாளா இல்லையான்னு தெரியாம நீங்க சாப்பிடாம இங்க அளைஞ்சுகிட்டு இருக்கீங்களே! இதுதான் உங்க மனச அப்டியே காட்டுது! உங்க மனசில ஆனந்திக்காக இவ்ளோ லவ் இருக்கு! நீங்க பெரிய போலீஸ்காரர்! உங்களப் பாத்தா சிட்டில இருக்கற ரௌடியெல்லாம் பயப்படுவாங்க! ஆனா உங்க மனசு எவ்ளோ இளகின மனசுன்னு இப்ப தெரிஞ்சிடுச்சே! அப்ப நீங்க தானே க்ரேட்!"
"பாபி! தேங்க்ஸ் பாபி!"
"எதுக்கு?"
"எல்லாத்துக்கும்! நீங்க மட்டும் இல்லன்னா.."
"ஒரு ஹிந்திக்காரி உங்களுக்கு பாபியா வந்திருப்பா! நீங்களும் ஒரு ஹிந்திக்காரிய லவ் பண்ணியிருப்பீங்க! இப்டி தமிழ்நாட்டு கிராமத்திலேந்து போன் வரலியேன்னு வருத்தப்பட்டிருக்க மாட்டீங்க!"
"பாபி!" என்று செல்லமாய் சிணுங்கினான்.
"அட! இன்ஸ்பெக்டர் ஸாருக்கு வெக்கமெல்லாம் கூட வருமா?"
செல்வி சிரித்தாள்.
"சரி! சீக்ரம் சாப்பிடுங்க! உங்க அண்ணன் கிட்ட இந்த நல்ல விஷயத்த பத்தி பேசலாம்! தீபிகாவுக்கும் சொல்லணுமே!"
".."
"ஆனந்தி இந்நேரம் சாப்பிட்ருப்பா! ஏன்னா, எங்க தாத்தாவுக்கு சாப்ட்டப்புறம் புக் படிச்சு காட்டணும்! அதனால அவ சாப்பிட்டுட்டு புக் படிச்சு காட்ட போயிருப்பா! நீங்க நிம்மதியா சாப்பிடுங்க! " சிரித்தபடி சொன்னாள். அதன் பிறகே அவன் ஒழுங்காய் சாப்பிட்டான்.
சூரஜிடமும் தீபிகாவிடமும் விஷயத்தைச் சொன்னதும் இருவரும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். ஒரு நல்ல நாள் பார்த்து அனைவரும் திருச்சி சென்று பெண் கேட்கலாம் என்று முடிவு செய்து கொண்டனர்.
தீபிகா செமஸ்டர் லீவுக்கு வந்து போன பிறகு மறுபடியும் மும்பை வரவில்லை. அவளுக்கு இப்போது தேர்வுகள் நெருங்குவதால் லீவு எடுக்கமுடியாது. அதனால், விராட், அப்பா, அம்மா, செல்வி நால்வரும் திருச்சி சென்று வரலாம் என்றும் முடிவு செய்தனர்.
விராட்டுக்கு முக்கியமான கேஸுக்காக கோர்ட்டில் வேலை இருப்பதால் பத்து நாட்கள் கழித்துதான் விடுப்பு எடுக்க முடியும் என்று சொல்லிவிட்டான். அதனால் பத்து பதினைந்து நாட்கள் கழித்து வரும் ஒரு நல்ல நாளன்று திருச்சி செல்ல ஏற்பாடு செய்தனர்.
கிரிதரனும் மங்கையும் மிகுந்த சந்தோஷப்பட்டனர். கீர்த்திவாசனும் பூங்குழலியும் மகளை நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்கப் போகும் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆனந்தியைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவள் இந்த உலகத்திலேயே இல்லை. கனவில் மிதந்து கொண்டிருந்தாள்.
ஆனந்தன் தங்கையிடம் பேசினான்.
"அன்னிக்கு நீ விராட் நம்பர வாங்கும் போதே எனக்கு டௌட்டுடி!"
"ம்! தப்பாடா?" மெல்லிய குரலில் கேட்டாள்.
"தப்புன்னு சொன்னா விட்ருவியா?"
"ம்ஹூம்!" அவசரமாக மறுத்தாள்.
"பின்ன? கேக்கறா பார் கேள்விய?"
".."
"ஏய்!"
".."
"சரி சரி கோபப்படல! ஆனா உன்ன குத்தம் சொல்ல முடியாது! விராட் வேற சூரஜ் மாமா மாதிரியே செம ஸ்மார்ட்! இப்ப போலீஸ் இன்பெக்டர் வேற ஆயிட்டார். அந்த கம்பீரம் வேற! எனக்கே அவர திரும்ப திரும்ப பாக்கணும் போலதான் இருக்கு! பாவம்! நீ சின்ன பொண்ணு! நீ என்ன பண்ணுவ! லவ் வரதான் செய்யும்! பொழச்சுப் போ! கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா இரு!"
"தேங்க்ஸ்டா!"
"சரி! அவங்கல்லாம் என்னிக்கு வராங்கன்னு சொல்லு! லீவ் போடணும்ல!"
"அவங்க சொன்னதும் சொல்றேன்டா!"
"ம்ஹூம்! இனிமே நோ வாடா! போடா! ஒழுங்கு மரியாதையா கூப்பிடு!"
"இல்லன்னா என்னடா பண்ணுவ?"
"ம்! எனக்கு தெரிஞ்ச போலீஸ்காரர் ஒருத்தர் சென்னைல இருக்கார்! அவர்கிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணினேன்னு வை! நீ அவ்ளோதான்! உன்ன உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்டிருவார்!"
"அவர் எஸ் ஐ தான்! எனக்கு தெரிஞ்ச போலீஸ்காரர் மும்பைல இன்ஸ்பெக்டரா இருக்கார். அவர்கிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணினேன்னு வை, என்ன உங்ககிட்டேந்து காப்பாத்திருவார்!"
"அடிப்பாவி! சரி! உன்ன இனிமே வாடா போடான்னு கூப்பிடலன்னு சொல்றியாடி!"
"ஹை! நீ மட்டும் வாடி போடின்னு சொல்லுவியாம்! நான் மட்டும் வாடா போடான்னு சொல்லக் கூடாதா! போடா!"
"சரி! சரி! கோவிச்சுக்காத! அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என்னென்ன ஹெல்ப் வேணுமோ பண்ணு! டேட் தெரிஞ்சதும் சொல்லு. கிளம்பி வரேன்! கனவு கண்டுகிட்டே சாப்பிடாம இருக்காத! ஒழுங்கா சாப்பிடு! வெச்சுடவா!"
"சரி! நீயும் நேரத்துக்கு ஒழுங்கா சாப்பிடு! நான் அவங்க டேட் சொன்னதும் உனக்கு இன்ஃபார்ம் பண்றேன்! பை!"
"பை!"
இருவரும் வாயளந்துவிட்டு சிரித்துக் கொண்டே போனைக் கட் செய்தனர்.
விராட் போன் செய்யும் போது கேட்டான்.
"உங்க அண்ணன் என்ன சொல்றார்?"
"கனவு கண்டுட்டே சாப்டாம இருக்காத! ஒழுங்கா சாப்பிடுன்னு சொன்னாரு!"
"மச்சான் நல்லதுதான் சொல்லிருக்கார்! அவர் சொன்னதக் கேக்கணும்! புரியுதா?"
"ம்!"
"சரி! எனக்கு முக்கியமான ஒரு கேஸ் அட்டெண்ட் பண்றதுக்காக கோர்ட்ல வேலை இருக்கு! டென் டேஸ் கழிச்சிதான் வர முடியும். டேட் பாத்துட்டு அம்மா போன் பண்ணுவாங்க!"
"சரிங்க!"
"ஒரு நிமிஷம் இரு! பாபி லைன்ல வராங்க!"
"ஆனந்தி!"
"அக்கா!"
"கங்க்ராட்ஸ்!"
"தேங்க்ஸ்க்கா!"
"ம்! ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆனந்தி! விராட் உனக்கு பெர்ஃபெக்ட் மேட்ச்!"
"தேங்க்ஸ்க்கா!"
"சரி! நல்லா சாப்ட்டு நல்லா தூங்கு! அப்பதான் நாங்க வரும் போது ஜம்முன்னு அழகா இருப்ப! சரியா! அப்பப்ப சித்திக்கும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணு!"
"சரிக்கா!"
"நாள் பாத்து அத்த போன் பண்ணுவாங்க! வெச்சுடவா!"
"ஓகே! பை!"
"பை!"
ஆனால் வைக்காமல் விராட்டிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டாள்.
விராட் சிறிது நேரம் மொக்கை போட்டுவிட்டு போனை கட் செய்தான்.
ஆனந்தனும் விராட்டுக்கு போன் செய்து பேசி தன் வாழ்த்துக்களை தெரிவித்தான்.
விராட் - ஆனந்தியின் சந்திப்பு, அடுத்த அத்தியாயத்தில்!
விராட் என்ற வீரனவன்
அழகு நங்கை ஆனந்தியின்
விழிகளிலே காதல்மொழி
விண்ணளவு உயர்த்தினானே!
புதிய காதல் உள்ளங்களில்
மொட்டாகத் துளிர்த்ததுவே!
மலர்ந்து மணம் வீசிடவே
மயங்கியுமே மகிழ்ந்ததுவே!
பதவியிலே உயர்வு பெற்று
மனம் மகிழ்ந்து நின்றவனும்
தன்னவளும் தனை வாழ்த்தும்
தருணமதை நாடி நின்றான்!
வசந்தத்தைச் சுமந்து வந்த
வாழ்த்துமொழி இனித்ததுவே!
வாழ்வினிலே இணைவதற்கும்
இதயங்கள் விழைந்தனவே!
திருமணச் செய்தியொன்று
கவிதையாகத் தூது செல்லப்
பெண்ணவளும் தன்னவனின்
முகம் காணக் காத்து நின்றாள்!
இதயங்கள் இணையட்டும்!
இன்பமொழி பேசட்டும்!
இனியெந்தத் தடையுமில்லை!
காதலுக்கு மொழியெதற்கு?
- C. புவனா
- காதலின் மொழி என்ன?